தமிழ் | Tamil | Forum
தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

கூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.

புகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.

Join the forum, it's quick and easy

தமிழ் | Tamil | Forum
தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

கூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.

புகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.
தமிழ் | Tamil | Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வணக்கம் என் பெயர் நாகராசன்.இரா
by rajan_1972 Fri Apr 10, 2020 7:20 pm

» சிறந்த பொழுதுபோக்கு இணையதளம்!
by pba Sat Jul 02, 2016 8:11 pm

» ஏற்றுமதி உரிமம் பெறும் விண்ணப்பம்
by tamilnews Tue Mar 24, 2015 8:00 pm

» மொபைல், டிடிஎச் ரீசார்ஜ் செய்யப் போறீங்களா? இந்த சலுகைகளைப் பாருங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:41 am

» மொபைல் ரீசார்ஜ் செய்து ஷாப்பிங் கூப்பன் இலவசமாக பெறுங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:38 am

» மெமரி கார்டு வாங்கப் போறீங்களா? 74% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:36 am

» அமேசானில் பெண்களுக்கான ஆடைகள் 70% வரை தள்ளுபடி !
by dsytamil Wed Jan 14, 2015 1:34 am

» அமேசானில் ஆண்களுக்கான ஆடைகள் 60% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:31 am

» லெனோவா டேப்ளட் 43% சலுகை விலையில் ரூ. 5949 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:28 am

» ப்ளிப்கார்ட் தளத்தில் சிறுவர்களுக்கான ஆடைகள் 70% வரை + 30% கூடுதல் தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:14 am

» அமேசான் தளத்தில் 50% தள்ளுபடி விலையில் மொபைல்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:13 am

» ரூ. 7499 மதிப்புள்ள மைக்ரோமேக்ஸ் ஏ1 ஆன்ட்ராய்டு மொபைல் இப்போது ரூ. 5499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:11 am

» ரூ. 19999 மதிப்புள்ள நோக்கியா லூமியா 625 மொபைல் ரூ. 7499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:10 am

» ப்ராண்டட் காலணிகளுக்கு 70% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:08 am

» ஆன்லைன் ஷாப்பிங்கில் ப்ரிண்டர்களுக்கு 33% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:06 am

» ஆன்லைனில் பொருள் வாங்கப் போறீங்களா? 70% வரை பணத்தை சேமியுங்கள்!
by dsytamil Tue Jan 13, 2015 12:30 am

» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...!
by sathikdm Sun Oct 19, 2014 4:45 pm

» சிறுதொழில் செய்பவர்கள் இணையதளம் தொடங்க வேண்டியதின் அவசியம்!
by pba Sat Sep 27, 2014 12:58 am

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:47 pm

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:42 pm

» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
by santhoshpart Wed Aug 27, 2014 4:22 pm

» “சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா!”
by santhoshpart Wed Aug 13, 2014 3:54 pm

» Daily Rs.500/- and Above
by K.MARIAPPAN Wed Jul 30, 2014 12:01 pm

» http://www.neobux.com/?r=narasimmant
by Navaneethakrishnan Wed Jul 02, 2014 3:41 pm

» வணக்கம் என் பெயர் வேணு
by A.Venu Fri Jun 27, 2014 10:10 am

» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?
by sathikdm Wed Jun 18, 2014 3:24 pm

» தமிழ் மொழி மூல கல்வி இணையதளம்
by afdhaal Wed May 28, 2014 9:22 pm

» வருக. வருக. வணக்கம்.
by மகி Mon May 12, 2014 3:55 pm

» அறிமுகம் -விநாயகா செந்தில்.
by மகி Mon May 12, 2014 3:53 pm

» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....!
by vinayagasenthil Sat May 10, 2014 9:04 pm

பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

சிவபரத்துவ நிச்சயம்

4 posters

Page 7 of 13 Previous  1, 2, 3 ... 6, 7, 8 ... 11, 12, 13  Next

Go down

சிவபரத்துவ நிச்சயம் - Page 7 Empty Re: சிவபரத்துவ நிச்சயம்

Post by நந்தி Mon Apr 04, 2011 2:00 am

[You must be registered and logged in to see this image.]
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சிவபரத்துவ நிச்சயம் - Page 7 Empty Re: சிவபரத்துவ நிச்சயம்

Post by மகி Mon Apr 04, 2011 8:28 am

பகிர்வுக்கு நன்றி ஐயா.

தொடருங்கள்.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

சிவபரத்துவ நிச்சயம் - Page 7 Empty Re: சிவபரத்துவ நிச்சயம்

Post by நந்தி Thu Apr 07, 2011 1:05 am

நன்றி நண்பரே!
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சிவபரத்துவ நிச்சயம் - Page 7 Empty Re: சிவபரத்துவ நிச்சயம்

Post by நந்தி Thu Apr 07, 2011 1:21 am

திருப்பதி முருகன் கோயிலென்பது.


வேங்கட ராம னென்போன் வேங்கட மலையாய் நின்றோன்
வேங்கட சுப்ப னென்போன் வேங்கட மலைமே னின்றோன்
வேங்கட மலையாய் நின்று வேலனைச் சிரமேற் றாங்க
வேங்கட ராமன் செய்த விழுந்தவஞ் செப்பற் பாற்றே

.

ஸ்ரீ சைலம்

(அ-ரை) சுப்பன் - சுப்பிரமணியர்; விழுத்தவம் - சிறந்ததவம்.

'சிலாதர முனிவருடைய திருக்குமாரராகிய நந்திபகவான் தன்னைச் சிவபெருமான் வாகனமாக்கிக் கொண்டது போல ஆஸனமாகவும் கொண்டெழுந் தருளியிருத்தற்குச் சிந்தித்துத் தவங்கிடந்து ஸ்ரீசைலம் என்னும் மல்லிகார்ஜுன பர்வதமாகத் திருவுருக்கொண்டு ஸ்ரீசிவபெருமானைத் தமது முடிமீது தாங்கும்பேறெய்தினர். அவரைத் திரிபுரதகனகாலத்தி லுபாசித்து அவருருப் பெற்றுச் சிவபெருமானைத் தாங்கினோ மாகையால் அவருக்கும் நமக்கும் ஸம்பந்தமுடைமை காரணமாக அவர் பருப்பதமாய் நின்று சிவபெருமானைத் தாங்குவது போல நாமுமவரைப் பருப்பதவடிவாய் நின்று தாங்கவேண்டுமென்று விஷ்ணுவானவர் சிந்தித்துத் தவஞ் செய்கையில், சிவசூ நுவாகிய குமாரக் கடவுள் தோன்றி அவருக்கு வேங்கடமென்னும் மலையுருவந் தந்து அம்மலையினுச்சியிற் றாமெழுந்தருளித் தம்மைத்தாங்கும்படியான பெரும்பாக்கியத்தை அவருக்குப் பிரஸாதித்தனர் என்று திருவேங்கடமான்மியத்திற் சொல்லப்பட்டிருக்கிறது' என்ற சிவாதிக்கிய ரத்நாவளி இரண்டாம் பாகம் இச்செய்யுட்குப் பிரமாணம்.
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சிவபரத்துவ நிச்சயம் - Page 7 Empty Re: சிவபரத்துவ நிச்சயம்

Post by நந்தி Sun Apr 10, 2011 1:41 pm

[You must be registered and logged in to see this image.]
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சிவபரத்துவ நிச்சயம் - Page 7 Empty Re: சிவபரத்துவ நிச்சயம்

Post by sriniyamasri Sun Apr 17, 2011 9:07 pm

அருமை

சிவபரத்துவ நிச்சயம் - Page 7 227966
sriniyamasri
sriniyamasri
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 405
புள்ளிகள் : 437
Reputation : 26
சேர்ந்தது : 16/04/2011
வசிப்பிடம் : searching

Back to top Go down

சிவபரத்துவ நிச்சயம் - Page 7 Empty Re: சிவபரத்துவ நிச்சயம்

Post by மகி Tue Apr 19, 2011 12:38 pm

பகிர்வுக்கு நன்றி ஐயா.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

சிவபரத்துவ நிச்சயம் - Page 7 Empty Re: சிவபரத்துவ நிச்சயம்

Post by sriniyamasri Wed Apr 20, 2011 10:10 pm

Rolling Eyes
sriniyamasri
sriniyamasri
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 405
புள்ளிகள் : 437
Reputation : 26
சேர்ந்தது : 16/04/2011
வசிப்பிடம் : searching

Back to top Go down

சிவபரத்துவ நிச்சயம் - Page 7 Empty Re: சிவபரத்துவ நிச்சயம்

Post by மகி Wed Apr 20, 2011 10:50 pm

sriniyamasri wrote: Rolling Eyes

ஸ்ரீ ஐயாவுக்கு என்னாயிற்று?
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

சிவபரத்துவ நிச்சயம் - Page 7 Empty Re: சிவபரத்துவ நிச்சயம்

Post by நந்தி Mon May 09, 2011 5:47 pm

சிதம்பர நடராஜருடைய நடன வைபவத்தைக் கண்டு அவசமாகித் தலைகால் தெரியாமல் வீழ்ந்து கிடக்கின்றார் தில்லைக்கோவிந்த ரென்பது.

சித்தசன் றன்னைச் செற்றோன் சிதம்பரந் தன்னிற் செய்த
வித்தக நிருத்தங் கண்டு மெய்ம்மறந் தவச மாகிப்
பத்துறழ் பன்னி ரண்டு பகலவ னடியில் வீழ்ந்த
சித்திர கூட மாயன் செப்பருங் கிடக்கை பாராய்.


(அ-ரை) சித்தசன்றன்னைச் செற்றோன் - சிவபிரான்; வித்தக நிருத்தம் - ஞான நடனம்; மெய்ம்மறந்து - தன்னை மறந்து; அவசம் - பரவசம்; பத்துறழ் பன்னிரண்டு - நூற்றிருபது; பகல் - நாட்கள்; கிடக்கை - வீழ்ச்சி.

'செல்லரிய பரவசமாய்த் திருமுன்னே வீழ்ந்திறைஞ்சித் - தொல்லைதனி லறிவிழந்து துணைவிழிகள் புனல்பெருகப் - பல்லுயிர்க்கு முயிராகும் பரமசிவ பூரணத்தி - னெல்லைதனிற் புக்கழுந்தி யெழுந்தில னீரிரு திங்கள்' என்ற கந்தபுராணம் இச்செய்யுட்குப் பிரமாணம். (கஉரு)
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சிவபரத்துவ நிச்சயம் - Page 7 Empty Re: சிவபரத்துவ நிச்சயம்

Post by நந்தி Mon May 09, 2011 5:49 pm

இப்போதிருக்குத் தில்லைக்கோவிந்தரின் கோயில் அவருடையதன்றென்பது.

தில்லைக்கோ விந்தன் முன்னர்த் தில்லையின் முன்றில் வீழ்ந்தான்
தில்லைக்கோ விந்தன் பின்னர்த் தெருநடுக் கிடந்தா னிப்பாற்
றில்லைக்கோ விந்தன் சென்றான் றிருப்பதி யென்னே மாயந்
தில்லைக்கோ விந்த னின்றெந் திருநடன் றளியுட் சேர்வே.


(அ-ரை) மாயம் - ஏமாற்றம்; நடந்தளியுள்சேர்வு - நடராஜருடைய கோயிலுக்குள் வந்திருத்தல்.

'வரங்கிடந்தான் றில்லையம்பல முன்றிலம்மாயவனே' என்ற திருக்கோவையாரும். 'ஸ்ரீ சிதம்பரத்திலுள்ள வைதிக சைவர்களால் நடுத்தெருவிற் கிடத்தப்பட்ட நாராயண விக்கிரகத்தை' , 'நடுத்தெரு நாராயணன் எனுஞ் சொல்லும் அது காரணமாக வுண்டாயிற்று' என்ற சைவசமய சரபமும், 'அந்த விழவெல்லாந் தீரும்படி திருப்பதிக்கெழுந்தருளி ஸ்ரீ கோவிந்தராஜனை மூலபேரஸஹிதமாக திருப்ரதிஷ்டையும் பண்ணிவைத்து' என்ற தென்கலைக் குருபரம்பரையும், 'சென்றனன் றில்லைச் சித்திரகூடஞ் செறிந்தனன் செறிவதன் முன்னே - யன்றதிற் றிருக்கண் வளர்ந்தருண் மாயனனந்தனே முதலவரோடு - மொன்றுமாங்கினறி மறைந்தனன் மறைந்தாங் கோங்கு வேங்கடமென மறைக - ளென்று நின்றேதந் திருப்பதி தனிலே யெழுந்தனன் யாவருமிறைஞ்ச' என்ற எம்பெருமானார் வைபவமும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள். (கஉசா)
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சிவபரத்துவ நிச்சயம் - Page 7 Empty Re: சிவபரத்துவ நிச்சயம்

Post by நந்தி Mon May 09, 2011 5:50 pm

அவனன்றி யோரணுவு மரையா தென்பது.

சங்கின னாதி வானோர் தாம்விடு படைக டம்மை
யங்கொரு துரும்பா லாற்ற லழிவுசெ யியக்கன் றன்னைச்
சங்கர னென்று தேர்ந்து தாழ்ந்தன ரென்னி னன்னோன்
மங்கலி லாண்மை தன்னை வரைசெய வல்லார் யாரே.


(அ-ரை) சங்கினன் - விஷ்ணு; படைகள் தம்மை - சக்கர முதலிய ஆயுதங்களை; இயக்கன்றன்னை - யக்ஷவடிவனை; தேர்ந்து - உமாதேவியார் சொன்னதால் தெரிந்து; தாழ்ந்தனர் - செருக்கு நீங்கினர்; அன்னோன் - அச்சங்கரனுடைய; வரை செய - அளவிட; விடு, செய் இறந்த காலவினைத் தொகைகள்.

'கிமிதம் யக்ஷமிதி' என்று தொடங்கி 'பஹ¤சோபமாநாமுமாம் ஹைமவதீம் தாம்ஹோவாச கிமே தத் யக்ஷ மிதி ஸாப்ரஹ்மேதி ஹோவாச' என்றது வரையிலுள்ள கேநோபநிஷத்து இச்செய்யுட்குப் பிரமாணம். இவ்வுபநிஷத்தில் மென்மை கூறப்பட்டவர் கூட்டத்தில் விஷ்ணுப் பிரஸ்தாபமில்லையென்பர் ஒரு சாரார். யக்ஷவடிவமாய் வந்தவர் சிவபிரான். அது உமாதேவியாராலேயே தெளிவிக்கப்பட்டது. படலே அக்கூட்டத்துள் விஷ்ணு அடங்கவில்லையெனல் யாங்ஙனம்? அது உய்த்துணரவைக்கப்பட்டது. ஆகலினன்றோ 'அரியும் - அற்றப்படாத படைவீசி யார்ப்ப அவைகூர்மழுங்கியனவே' என்றது காஞ்சிப்புராணம். (கஉஎ)
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சிவபரத்துவ நிச்சயம் - Page 7 Empty Re: சிவபரத்துவ நிச்சயம்

Post by நந்தி Mon May 09, 2011 6:55 pm

[You must be registered and logged in to see this image.]
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சிவபரத்துவ நிச்சயம் - Page 7 Empty Re: சிவபரத்துவ நிச்சயம்

Post by நந்தி Mon May 09, 2011 6:56 pm

விஷ்ணு யாகம், சிவபிரான் யாகதேவன் என்பது.

சங்கர பரனை நீக்கிச் சக்கர பரனை வைத்துப்
பொங்கிய தக்கன் வேள்வி புரிந்தன னாங்கம் மாலை
வெங்கயி றதனால் யாத்தவ் வேள்வியை யழித்தான் வீரன்
சங்கர னியாக தேவன் சக்கிரி யாகந் தானே.


(அ-ரை) சங்கரபரன் - சிவபிரான்; சக்கரபரன் - விஷ்ணு; பொங்கிய - செருக்குற்ற; ஆங்கு - அவ்வியாகசாலையில்; வெம் கயிறதனால் நாகபாசத்தால்; யாத்து - கட்டியுருட்டி; வீரன் - வீரபத்திர மூர்த்தி; சக்கிரி - விஷ்ணு.

'யோ தக்ஷ யஜ்ஞேஸ¤ர ஸங்காந் விஜித்ய விஷ்ணும் பபந்தோரக பாசேந வீர: தஸ்மை ருத்ராய நமோ அஸ்து' என்ற சரபோபநிஷத்தும் 'மேதபதிம் ருத்ரம்' , 'ஆவோராஜாந மத்வரஸ்ய ருத்ரம் - - அவஸேக்ருணுத்வம்', 'த்ரிஸ்ஸப்தயத்குஹ்யா நித்வே - - நிஹிதா' , 'ருத்ரம் யஜ்ஞாநாமஸாத திஷ்டமபஸாம்' என்ற ருக்வேதமும், 'ருத்ரோ யாகதேவ:' என்ற பாசுபத ப்ரஹ்மோபநிஷத்தும், 'யஜ்ஞோவை விஷ்ணு:' என்ற சுருதியும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள். (கஉஅ)
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சிவபரத்துவ நிச்சயம் - Page 7 Empty Re: சிவபரத்துவ நிச்சயம்

Post by நந்தி Mon May 09, 2011 6:58 pm

சிவபிரானிருக்குஞ் சுடுகாடு இதுவென்பது.

முன்னவ னழிக்கும் போது முகுந்தனைப் பிறரை நெற்றி
துன்னெரி விழியா னீற்றித் தூவிட மயான மாகு
மன்னதி லவனே யேக னாகிவீற் றிருப்பா னப்போ
தின்னொரு தேவ னாங்கே யிருப்பதற் குளனோ செப்பாய்.


(அ-ரை) முன்னவன் - சிவபிரான்; அழிக்கும்போது - சங்கரிக்கும் போது; துன் எரி விழ் - இருக்கிற கண்ணின் தீ; நீற்றி - சுட்டுச்சாம்பராக்கி; தூவு இடம் - சிதறுகிற தனியிடமே; அன்னதில் - அந்தமயானத்தில். 'பெருங்கடன்மூடி' என்ற தேவாரம் இச்செய்யுட்குப் பிரமாணம். (கஉகூ)
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சிவபரத்துவ நிச்சயம் - Page 7 Empty Re: சிவபரத்துவ நிச்சயம்

Post by நந்தி Mon May 09, 2011 6:59 pm

சிவபிரான் மன்மதனை யெரித்தாரென்பது.

வனிதைய ரின்பம் வேட்டு மாயவன் பிரம னாதி
யனைவரு மவர்தம் மாணைக் கடங்கிடச் செய்யும் வேளைத்
தனதொரு நுதற்கட் டீயாற் றகித்தவன் மலர்த்தா டன்னை
யனுதின நினைவார் தாமே யாழ்குறார் காம கோயில்.


(அ-ரை) வேட்டு - விரும்பி; அவர்தம் - அவ்வனிதையரின்; வேளை - மன்மதனை; ஆழ்குறார் - வீழ்ந்தழுந்தமாட்டார்.

'யோ - - பஸ்மீசகாரம் மந்மதம் - - தஸ்மை ருத்ராய நமோ அஸ்து' என்ற சரபோபநிஷத்து இச்செய்யுட்குப் பிரமாணம். (கங0)
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சிவபரத்துவ நிச்சயம் - Page 7 Empty Re: சிவபரத்துவ நிச்சயம்

Post by நந்தி Mon May 09, 2011 7:01 pm

[You must be registered and logged in to see this image.]
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சிவபரத்துவ நிச்சயம் - Page 7 Empty Re: சிவபரத்துவ நிச்சயம்

Post by நந்தி Mon May 09, 2011 7:02 pm

சிவபிரான் ஆலாலத்தை யுண்டாரென்பது.

கமலனும் புகைய மாலுங் கருகிடக் கடலில் வந்த
சமனிகர் விடத்தை யீசன் றன்மிடற் றடக்கி நூலை
விமலமென் பூமேன் மாதர் மிடற்றினிற் காத்தா னென்னி
னெமதிடர் களைய வல்லா னேவனவ் வீச னன்றி.


(அ-ரை) கமலன் - பிரமன்; வந்த விடத்தை என்க; விடத்தை - ஆலஹாலமென்னும் விஷத்தை; சமன் - எமன்; நூலை - தாலியை; விமலம் மெல் பூமெல் மாதர் - இலக்குமியும் சரஸ்வதியும்.

'பபேதோ ஹாலாஹலம் தஹந்தம்| தஸ்மை ருத்ராய நமோ அஸ்து' என்ற சரபோபநிஷத்து இச்செய்யுட்குப் பிரமாணம். (கஙக)
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சிவபரத்துவ நிச்சயம் - Page 7 Empty Re: சிவபரத்துவ நிச்சயம்

Post by நந்தி Mon May 09, 2011 7:04 pm

[You must be registered and logged in to see this image.]
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சிவபரத்துவ நிச்சயம் - Page 7 Empty Re: சிவபரத்துவ நிச்சயம்

Post by நந்தி Mon May 09, 2011 7:06 pm

[You must be registered and logged in to see this image.]
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சிவபரத்துவ நிச்சயம் - Page 7 Empty Re: சிவபரத்துவ நிச்சயம்

Post by நந்தி Mon May 09, 2011 7:07 pm

சிவபிரான் திரிபுர தகனஞ் செய்தா ரென்பது.

பசுபதி நாமே யென்று பண்ணவர் செருக்குக் கொண்டார்
பசுபதி யதனைத் தந்தாற் பாற்றுவ னெயில்க ளென்றான்
பசுபதி சுயநீ யென்றப் பரமனைப் பணிந்தா ரன்னோர்
பசுபதி விரைந்து சென்று பாற்றினா னெயில்கண் மூன்றும்.


(அ-ரை) பண்ணவர் - தேவர்; பாற்றுவன் - அழிப்பேன்; எயில்கள் - முப்புரங்களை; சுயம் - இயல்பாகவே; அன்னோர் - அத்தேவர்கள்.

'யோ லீலயைவத்ரிபுரம் ததாஹவிஷ்ணும் ஸல்யம் ஸோமாக்நிம்சபாணம் - தஸ்மை ருத்ராய நமோ அஸ்து' , ' ஸ்வயம் தஸ்மாத் பசுபதிர் பபூவ' என்ற சரபோபநிஷத்தும், 'ஸோ ப்ரவீத்வரம்வ்ருணாஅஹமேவபசூநா மதிபதிரஸாநி' என்ற எஜர்வேதமும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள். (கஙஉ)
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சிவபரத்துவ நிச்சயம் - Page 7 Empty Re: சிவபரத்துவ நிச்சயம்

Post by நந்தி Mon May 09, 2011 7:08 pm

[You must be registered and logged in to see this image.]
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சிவபரத்துவ நிச்சயம் - Page 7 Empty Re: சிவபரத்துவ நிச்சயம்

Post by நந்தி Mon May 09, 2011 7:10 pm

திரிபுர தகனசமயத்தில் சிவபிரான் கையில் விஷ்ணு அம்பானாரென்பது.

திரிபுர மெரித்த ஞான்று சீதர னம்பாய் வாசம்
விரிமல ருறைவோன் பாகாய் வேறுளார் வெவ்வே றாகி
யெரிநிற மேனி யீச னேவலிற் கிடந்த செய்தி
தெரிவத முடையோர் தேர்வர் சிவபிரான் றனது மேன்மை.


(அ-ரை) ஞான்று - காலத்தில்; வாசம் விரிமலர் உறைவோன் - பிரமன்; பாகு - சாரதி; வேறு உளார் - மற்றைத்தேவர்கள்; வெவ்வேறு - அத்தேரின் பல்வேறு உறுப்புக்கள்; தெரி - தெரிந்து கொள்ளவல்ல.

பாரதம் கர்ணம் 26 ஆவது அத்தியாயம் இச்செய்யுட்குப் பிரமாணம். (கஙங)
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சிவபரத்துவ நிச்சயம் - Page 7 Empty Re: சிவபரத்துவ நிச்சயம்

Post by நந்தி Mon May 09, 2011 7:11 pm

விஷ்ணு ரிஷபமாகிச் சிவபிரானைச் சுமந்தாரென்பது.

அம்புரு வடைந்து மென்னே யடியனேன் றருக்கி நின்றேன்
வெம்பவ மகல வேண்டும் விமலனே யருளென் றன்று
சம்புவை யிரதத் தோடுந் தனிவிடை யாகி மாலோன்
கும்பிடு திறத்தா லேற்றான் குரவையிட் டார்த்தார் தேவர்.


(அ-ரை) தருக்கிநின்றேன் - அகங்கரித்தேன்; பவம் - பாவம்; அன்று - அத்திரிபுரதகனகாலத்தில்; இரதத்தோடும் - தேரோடும்; விடை - ரிஷபம்; குரவையிட்டு - கூத்தாடி; ஆர்த்தார் - ஆர்ப்பரித்தார்.

'மாயனு முப்புரங் கொன்ற வஞ்ஞான் - றேறாயெமைத் தேரொடு தாங்கினன்' என்ற காஞ்சிப்புராணம் இச்செய்யுட்குப் பிரமாணம். (கஙச)
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சிவபரத்துவ நிச்சயம் - Page 7 Empty Re: சிவபரத்துவ நிச்சயம்

Post by நந்தி Mon May 09, 2011 7:12 pm

விஷ்ணுவின் நரசிம்மாவதாரத்தைச் சிவபிரான் கொன்றா ரென்பது.

மானுட மடங்க றன்னை வலிதபக் கொன்று தோலை
மேனியி லணிந்தான் வீரர் வீரனாஞ் சரப மூர்த்தி
யானெனு மகங்கா ரத்தை யெனதெனு மமகா ரத்தை
மானவ னறுக்க வேண்டின் வழுத்துக வவன்மென் றாளே.




(அ-ரை) மானுட மடங்கல்தன்னை - நரசிங்கத்தை; வலிதப - ஆற்றல் கெடும்படி; மானவன் - மனிதன்; அவன் - அச்சரபமூர்த்தியின்.

'யோகோரம் வேஷமாஸ்தாய சரபாக்யம் மஹேச்வர: | ந்ருஸிம்ஹம் லோக ஹந்தாரம் ஸம்ஜகாந மஹாபலNeutral ஹரிம் ஹரந்தம் பாதாய்யா மநுயாந்தி ஸ¤ரேச்வராNeutral மாவதீ: புருஷம் விஷ்ணும் விக்ரமஸ்வ மஹாநிசி|| க்ருபயா பகவார்விஷ்ணும் விததார நகை: கரை: கர்மாம்பரோ மஹோவீரோ வீரபத்ரோ பபூவஹ| ஸஎகோ ருத்ரோ த்யேய:' என்ற சரபோபநிஷத்து இச்செய்யுட்குப் பிரமாணம். (கஙரு)

******
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சிவபரத்துவ நிச்சயம் - Page 7 Empty Re: சிவபரத்துவ நிச்சயம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 7 of 13 Previous  1, 2, 3 ... 6, 7, 8 ... 11, 12, 13  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum