தமிழ் | Tamil | Forum
தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

கூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.

புகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.

Join the forum, it's quick and easy

தமிழ் | Tamil | Forum
தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

கூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.

புகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.
தமிழ் | Tamil | Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வணக்கம் என் பெயர் நாகராசன்.இரா
by rajan_1972 Fri Apr 10, 2020 7:20 pm

» சிறந்த பொழுதுபோக்கு இணையதளம்!
by pba Sat Jul 02, 2016 8:11 pm

» ஏற்றுமதி உரிமம் பெறும் விண்ணப்பம்
by tamilnews Tue Mar 24, 2015 8:00 pm

» மொபைல், டிடிஎச் ரீசார்ஜ் செய்யப் போறீங்களா? இந்த சலுகைகளைப் பாருங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:41 am

» மொபைல் ரீசார்ஜ் செய்து ஷாப்பிங் கூப்பன் இலவசமாக பெறுங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:38 am

» மெமரி கார்டு வாங்கப் போறீங்களா? 74% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:36 am

» அமேசானில் பெண்களுக்கான ஆடைகள் 70% வரை தள்ளுபடி !
by dsytamil Wed Jan 14, 2015 1:34 am

» அமேசானில் ஆண்களுக்கான ஆடைகள் 60% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:31 am

» லெனோவா டேப்ளட் 43% சலுகை விலையில் ரூ. 5949 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:28 am

» ப்ளிப்கார்ட் தளத்தில் சிறுவர்களுக்கான ஆடைகள் 70% வரை + 30% கூடுதல் தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:14 am

» அமேசான் தளத்தில் 50% தள்ளுபடி விலையில் மொபைல்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:13 am

» ரூ. 7499 மதிப்புள்ள மைக்ரோமேக்ஸ் ஏ1 ஆன்ட்ராய்டு மொபைல் இப்போது ரூ. 5499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:11 am

» ரூ. 19999 மதிப்புள்ள நோக்கியா லூமியா 625 மொபைல் ரூ. 7499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:10 am

» ப்ராண்டட் காலணிகளுக்கு 70% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:08 am

» ஆன்லைன் ஷாப்பிங்கில் ப்ரிண்டர்களுக்கு 33% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:06 am

» ஆன்லைனில் பொருள் வாங்கப் போறீங்களா? 70% வரை பணத்தை சேமியுங்கள்!
by dsytamil Tue Jan 13, 2015 12:30 am

» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...!
by sathikdm Sun Oct 19, 2014 4:45 pm

» சிறுதொழில் செய்பவர்கள் இணையதளம் தொடங்க வேண்டியதின் அவசியம்!
by pba Sat Sep 27, 2014 12:58 am

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:47 pm

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:42 pm

» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
by santhoshpart Wed Aug 27, 2014 4:22 pm

» “சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா!”
by santhoshpart Wed Aug 13, 2014 3:54 pm

» Daily Rs.500/- and Above
by K.MARIAPPAN Wed Jul 30, 2014 12:01 pm

» http://www.neobux.com/?r=narasimmant
by Navaneethakrishnan Wed Jul 02, 2014 3:41 pm

» வணக்கம் என் பெயர் வேணு
by A.Venu Fri Jun 27, 2014 10:10 am

» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?
by sathikdm Wed Jun 18, 2014 3:24 pm

» தமிழ் மொழி மூல கல்வி இணையதளம்
by afdhaal Wed May 28, 2014 9:22 pm

» வருக. வருக. வணக்கம்.
by மகி Mon May 12, 2014 3:55 pm

» அறிமுகம் -விநாயகா செந்தில்.
by மகி Mon May 12, 2014 3:53 pm

» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....!
by vinayagasenthil Sat May 10, 2014 9:04 pm

பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

சிவபரத்துவ நிச்சயம்

4 posters

Page 3 of 13 Previous  1, 2, 3, 4 ... 11, 12, 13  Next

Go down

சிவபரத்துவ நிச்சயம் - Page 3 Empty Re: சிவபரத்துவ நிச்சயம்

Post by நந்தி Sat Jul 24, 2010 1:36 am

உருத்திரனே பரதசாத்திரத்தாலும் பரமென வந்திக்கப்பட்டானென்பது.

தாமரைத் தவிசற் காகுந் தாமரை மலரின் சின்னந்
தாமரைக் கண்ணற் காகுஞ் சங்கெனுங் கருவிச் சின்னந்
தாமரைக் கையன் சின்னந் தலைமிசைக் கரங்கள் கூப்ப
லாமெனிற் பரத நூலு மரன்பரத் தைய முண்டோ.


(அ-ரை) தாமரைத் தவிசன் - பிரமன்; தாமரைக் கண்ணன் - விஷ்ணு; தாம் மரைக் கையன் - உருத்திரன்; பரத நூலும் ஆகும் ஆகும் ஆ(கு)ம் எனில் என்க.

'வஜ்ரண்யா முத்ரயா சக்ரம் பத்மிந்யாதர் சயேத்விதம் சங்கிந்யா கேசவம் ருத்ரம் சிரஸ்யஞ்ஜலிமுத்ரயா' என்ற பரத சாஸ்திரம் இச்செய்யுட்குப் பிரமாணம். (ஙஉ)
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சிவபரத்துவ நிச்சயம் - Page 3 Empty Re: சிவபரத்துவ நிச்சயம்

Post by நந்தி Sat Jul 24, 2010 1:39 am

உருத்திரனை நாராயணன் மீறமாட்டா னென்பது

அக்கினி தன்னைக் கண்டா லப்புருக் குலைந்து போகு
முக்கிர நெருப்பைத் தன்னு ளுருத்திர னடக்கி நிற்பான்
சக்கர பாணி நொய்ய சலந்தனில் மிதப்ப னென்னி
னக்கன தாணை மீற நாரணன் வல்லான் கொல்லோ
.

(அ-ரை) அப்பு - ஜலம்; உருக்குலைந்து போகும் - சுவறும்; நக்கனது - சிவபிரானுடைய.

'ஆபஸ் தேஜஹி ப்ரலீயந்தே' என்ற சுபாலோப நிஷத்து இச்செய்யுட்குப் பிரமாணம். (ஙங)

தியானம் தியாதா தியேயர் இவரென்பது

சீதரன் றியான மாவன் சிவபிரான் றியேய னாவ
னோதவிர் தியாதா வாவ னுருத்திர னென்று சீவர்
தீதகன் றுய்யு மாறு சிவபிரான் மலர்மென் றானை
யாதரம் பெருக வேத்தி யதருவ சிகையோய்ந் தன்றே.


(அ-ரை) ஓது சொல்லப்பட்ட; அவிர் - சிறப்புடைய; அகன்று - நீக்கி; ஆதரம் - அன்பு; ஓய்ந்தன்று - 'ஸமாப்தாதர்வசிகா' வென்று தன்னைத் தானே முடித்துக் கொண்டு முடிந்தது.

'த்யாநம் விஷ்ணு: - - த்யாதா ருத்ர: - - த்யாயீ தேசாநம்' என்ற அதர்வசிகோபநிஷத்து இச்செய்யுட்குப் பிரமாணம். (ஙச)
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சிவபரத்துவ நிச்சயம் - Page 3 Empty Re: சிவபரத்துவ நிச்சயம்

Post by நந்தி Sat Jul 24, 2010 1:48 am

இருதய குகையில் வசிப்பவர் சிவபிரானே யென்பது.

தகைபெறு பரம வான்மாச் சந்தத முயிர்க ளுள்ளக்
குகைதொறு மிருப்பன் கெளரி கொழுநனே யன்னோ னாவ
னகைமல ருறைவோன் மூன்றா நாதன்மா லாதி மற்றை
வகைபடு தேவரெல்லா மற்றவன் விபூதி யாவர்.


(அ-ரை) சாந்தம் - எப்போதும்; விபூதி - அதிஷ்டானங்கள்.

'மத்ய ஆத்ம நிதிஷ்டதி | ஈசாந:' என்ற கடோபநிஷத்தும், 'ப்ராணேஷ¤ ஹ்ருத் யந்தர் ஜ்யோதி: புருஷ:' என்ற ப்ருஹதாரண்யகோபநிஷத்தும், 'ப்ரமாத்மாவயவஸ் தித: | ஸ ப்ரஹ்மா ஸசிவ: ஸேந்த்ர:' என்ற நாராயணோபநிஷத்தும், 'உமாஸஹாயம் - - ஸப்ரஹ்ம ஸசிவ: -ஸ- விஷ்ணு:' என்ற கைவல்யோபநிஷத்தும், 'பரமாத்மாவ்யவஸ் தித: ஸ ப்ரஹ்மா ஸ ஈசாந: ஸேநத்ர:' என்ற மஹோபநிஷத்தும், 'த்வம் ப்ரஹ்மா த்வம் விஷ்ணு: த்வம் ருத்ர:' என்ற கணபதியுபநிஷத்தும், 'யோஸெள தேவோ பகவாந் ஸர்வைச்வர்ய ஸம்பந்ந: ஸர்வவ்யாபீ ஸர்வ பூதாநாம் ஹ்ருதயே ஸாந்நி விஷ்டோ மாயாவி மாயயா க்ரீடதி ஸ ப்ரஹ்மா ஸ விஷ்ணு: ஸ ருத்ர: ஸ இந்த்ர: ஸ ஸர்வே தேவா:' என்ற சாண்டில்யோப நிஷத்தும், 'த்ருதீயம் பாபாதம் ஜாநீயாத் ஸ ப்ரஹ்மா ஸ சிவ: ஸ ஹரி:' என்ற நரஸிம்ஹ பூர்வ தாபிநியுபநிஷத்தும், அவிசேஷேண ஸர்வம் துய: பச்யதி சிதந்வயாத்| ஸ ஏவ ஸாக்ஷ¡த் விஜ்ஞாநீ ஸ சிவ: ஸ ஹரிரர் விதி : என்ற வராஹோப நிஷத்தும், 'த்வம் ப்ரஹ்மா த்வம் ச வை விஷ்ணு: த்வம் ருத்ரஸ் த்வம் ருத்ரஸ் த்வம் விஷ்ணு:' என்ற பிராணக்கினிஹோத்ரோபநிஷத்தும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள். (ஙரு)
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சிவபரத்துவ நிச்சயம் - Page 3 Empty Re: சிவபரத்துவ நிச்சயம்

Post by நந்தி Sat Jul 24, 2010 1:59 am

சிவபிரானே சர்வகாரண காரணனென்பது.

காரணந் தனக்கொன் றில்லாக் காரண முலகுக் காரென்
றாரணம் வினவிச் சத்தே யாத்துமா பிரம மென்றக்
காரணந் தனையுங் கூறுங் கபாலியே யதுவா மென்ற
வாரண விசேடத் தச்சா மானிய மமையு மன்றே.


(அ-ரை) ஆரணம் - வேதம்; சத்து ஆத்துமா பிரமம் என்று அக்காரணந்தனையும் என்றதை சத்தென்றும் ஆத்துமாவென்றும் பிரமமென்றும் எனத் தனித்தனி கூட்டி அக்காரணந்தனை என நிறுத்துக. அது ஆம் - அக்காரணம் ஆகும்; விசேடத்து - விசேஷவாக்கியங்களுக் கேற்பவே; அச்சாமானியம் - அந்தச் சாமானிய வாக்கியங்கள்; அவை சத்து காரண மென்றலும் ஆத்துமா காரணமென்றலும் பிரமம் காரணமென்றலும் ஆக். அமையும் - பொருள் கொள்ளப்பட்டு அடங்கும்.

'ப்ரஹ்ம விஷ்ணு ருத்ரேந்த்ர:-- நகாரணம்', 'காரணம் - - சம்பு:' என்ற அதர்வசிகோபநிஷத்தும், 'விஷ்ணுச் சதுர்வக்த்ர: சம்புச்ச காரணா திபா:' என்ற பைங்களோபநிஷத்தை வியாபித்த 'ஸசாரணம் காரணா திபாதிப என்ற சுவேதாசுவதரோபநிஷத்தும், 'உமார்த தேகம் வாதம் ஸர்வகாரண காரணம்' என்ற யோகதத்வோபநிஷத்தும், 'சம்போர் மஹா தேவம் - - ஸர்வகாரணகாரணம்' என்ற பஞ்சப்ரஹ்மோபநிஷத்தும், 'ய: காரணாநி நிகிலாநி' ,'கிம் காரணம் ப்ரஹ்ம' என்ற சுவேதா சுவதரோப நிஷத்தும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள். ஜாபால்யுநிஷத் முதலியவற்றிலும் அத்தகைய வினாப்பார்க்கலாம். (ஙசா)
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சிவபரத்துவ நிச்சயம் - Page 3 Empty Re: சிவபரத்துவ நிச்சயம்

Post by நந்தி Sun Jul 25, 2010 12:16 am

பாஞ்சராத்திரத் திரிமூர்த்திகள் வேறு வேதத்திரிமூர்த்திகள் வேறு என்பதும் சிவபிரான் வேதத்திரிமூர்த்திகளுக்கு மேற்பட்டவர் என்பதும்.

சங்கரு டணபி ரத்தி யுமவனி ருத்தர் தாமே
யிங்கொரு மூவர் மாலோ னிவர்க்கிறை யென்னு மானூல்
பங்கய னரன்மா லென்னும் பரர்களுக் கதீதன் கெளரி
பங்கின னெனுநால் வேத பாகிய மாமந் நூலே.


(அ-ரை) இவர்க்கு - இம்மூவருக்கும்; இறை - அதீதன்; மால்நூல் - பாஞ்சராத்தி புகமம்; பரர் - தேவர்; அதீதன் - கடந்தவன்; எனும் - என்கிற; வேத பாகியம் - வேதத்துக்குப்புறம்; அந்நூல் - அப்பாஞ்சராத்திராகமம்; பிரம ருத்ர இந்திர ரென்பவர் நாலாயிரப்பிரபந்தமூவர்.

'ரோஹிணீ தநயோ விச்வ அகாராக்ஷர ஸம்பவ: - - ப்ரத்யும்ந உகாராக்ஷர ஸம்பவ: - - அநிருத்தோஸெள மகாராக்ஷ¡ ஸம்பவNeutral அர்த்த மாத்ராத்மக: க்ருஷ்ணோ யஸ்மிந் விச்வம் ப்ரதிஷ்டிதம்' என்ற கோபாலோத் தாதாபிநியுநிஷத்தும், 'ப்ரஹ்ம விஷ்ணு ருத்ராதீதம் - - சிவம்' என்ற பஸ்மஜாபாலோபநிஷத்தும், 'சிவம் - - ப்ரஹ்ம விஷ்ணு ருத்ராதீ நாமேக: என்ற மண்டலப்ரம்மணோபநிஷத்தும், 'நமே ப்ரஹ்ம நமே விஷ்ணுர் நமே ருத்ரோ--','ப்ரஹ்ம விஷ்ண் வீச', ' ந ப்ரஹ்மா ந ஹரி: சிவ:' என்ற தேஜோ பிந்தூப நிஷத்தும், 'ப்ரஹ்மா நாராயண: | சிவச்ச நாராயண: சக்ரச்ச நாராயண:' , 'த்வமேவ ப்ரஹ்மேசாந புரந்தர -- ' என்ற த்ரிபாத் விபூதி மஹாநாராயணோபநிஷத்தும், 'ப்ரஹ்மேந்த்ர ருத்ராதி' , என்ற தேஜோ பிந்துபநிஷத்தும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள். (ஙஎ)
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சிவபரத்துவ நிச்சயம் - Page 3 Empty Re: சிவபரத்துவ நிச்சயம்

Post by நந்தி Sun Jul 25, 2010 12:24 am

சங்காரக் கடவுளே சிருட்டி திதிகளுக்குங் கர்த்தாவென்பது.

அழிதொழி லுஞற்றுந் தேவ னலதெவ னாதி தேவன்
பழிதவி ரவனே மாலைப் பதுமனை மீளத் தந்து
பொழிலினை யாள வல்ல புருடனா மாத லாலே
தொழிலவை மூன்று மந்தச் சுதந்தரன் றானே செய்வான்.


(அ-ரை) அழிதொழில் உஞற்றுந்தேவன் - சங்காரக்கடவுள்; ஆதி தேவன் - முதற்கடவுள்; பழிதவிர் - பொல்லாங்கு தவிர்ந்த; அவனே -அச்சங்காரக்கடவுளே; பதுமனை - பிரமனை; தந்து -சிருட்டித்து; பொழிலினை - உலகத்தை; தொழிலவை மூன்றும் - ஸ்ருஷ்டிஸ்திதி சங்காரங்களாகிய அம்முத்தொழில்களையுமே; அந்தச் சுதந்தரன்றானே - அந்தச் சங்காரக்கடவுளாகிய சிவபிரானே.

'யோவிஸ் புலிங்கேந லலாடஜேந ஸர்வம் ஜகத் பஸ்மஸாத்ஸம் கரோதி புநச்ச ஸ்ருஷ்ட்வா புநரப்ய ரக்ஷதேவம் ஸ்வதந்த்ரம் ப்ரகடீகரோதி', 'மஹேசோ பகவா நாதி தேவ:' ,' சங்கரோ பகவா நாத்யோ ராக்ஷ ஸகலா: ப்ரஜா:, 'பரமேச்வரோ ஸெள யஸ்யாங்கஜோ ஹம் ஹரிரிந்த்ர முக்யா', 'ஹரிம் ஹரந்தம் பாதாப்யாம்' என்ற சரபோப நிஷத்தும்,' 'ஹரிம் ஹரந்த மநுயந்தி தேவா விச்வஸ்யேசாநம் வ்ருஷபம் மதீநாம்' என்ற நாராயனோப நிஷத்தும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள். (ஙஅ)
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சிவபரத்துவ நிச்சயம் - Page 3 Empty Re: சிவபரத்துவ நிச்சயம்

Post by நந்தி Sun Jul 25, 2010 12:31 am

திரிமூர்த்திகளும் உயிர்களே யென்பது

மூவரு முயிர்க ளென்று முதல்வனுக் குடல்க ளென்றும்
யாவரு மறியச் சொல்லு மெழின்மறை சிலவ ரந்த
மூவரு மபேத மென்று மூன்றதி கார மென்று
மூவமி சங்க ளென்று முரணுரைத் தழிவ ரந்தோ.


(அ-ரை) சிலவர் - சிலமனிதர்; முரண் - விபரீதம்.

'ஜீவ இதி ப்ரஹ்ம விஷ்ண் வீசா நேந்த்ராதீநாம் நாமரூபத்வாராஸ் தூலோஹ மிதி மித்யாஸ வஸாஜ்ஜீவ:' என்ற நிராலம்போபநிஷத்தும் 'தஸ்யப்ரோக்தா அக்ரயாஸ் தநவோ ப்ரஹ்மா ருத்ரோ விஷ்ணுரிதி' 'ப்ரஹ்மா ருத்ரோ விஷ்ணு - - ப்ரஸ்யாம்ருதஸ்ய சரீரஸ்ய' என்ற மைத்ராயண்யுபநிஷத்தும், 'அரியுரு வியல்பான்' என்ற தேவாரமும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள். (ஙகூ)
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சிவபரத்துவ நிச்சயம் - Page 3 Empty Re: சிவபரத்துவ நிச்சயம்

Post by நந்தி Sun Jul 25, 2010 12:36 am

சிவபிரானே பிரம மென்பது

பிரமவு பநிட மெல்லாம் பிரமனை யரியை நீக்கிப்
பிரமமென் றரனைப் போற்றும் பேரருட் குமர வேள்சுப்
பிரமணி யப்பேர் கொண்டான் பிராமிநல் லுமைக்குப் பேராம்
பிரமமென் றரனை யன்றிப் பேசிடே லாத லாலே.


(அ-ரை) பேசிடேல் - பிறதெய்வங்களைச் சொல்லாதே.

'நிர்விகல்பமநந்தம் - பரமம்சிவம்' என்ற பிரமபிந்தூபநிஷத்தும்' 'துரீய மக்ஷரம் - - ஈச்வாச்ச' என்ற பிரமோபநிஷத்தும், 'தீபாகாரம் மஹாதேவம் - - ஜபேத்' என்ற பிரமவித்யோப நிஷத்தும், 'சிவ: பசு பதி: ஸாக்ஷ£ ஸர்வஸ்ய ஸர்வதா' என்ற பாசுபதப்ரஹ்மோபநிஷத்தும், 'துரீய மக்ஷரம் சிந்மயம்' என்ற பரப்ரஹ்மோப நிஷத்தும், 'தஸ்மை நமோ மஹா தேவாய மஹா ருத்ராய ப்ரோவாச தஸ்மை பகவாந்மகேச:' ,'துரீயம் ப்ரஹ்ம ஸம்ஜிதம்' என்ற பஞ்சப்ரஹ்மோபநிஷத்தும், 'ப்ராஹ்மீ மாஹேச்வரீச் சைவ' என்ற நிகண்டும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள். (ச0)
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சிவபரத்துவ நிச்சயம் - Page 3 Empty Re: சிவபரத்துவ நிச்சயம்

Post by நந்தி Sun Jul 25, 2010 12:53 am

இதுவுமது.

உட்டெளி வுடையோ னொப்பி லுருத்திரா ராத னைக்கு
விட்டுணு பாகா யோட்ட விரையுமோங் காரத் தேரில்
மட்டறு மன்பா லூர்ந்து மக்கலப் பிரம லோகங்
கிட்டுக வெனலின் வேதங் கிளரதிற் பிரமம் யாரே.


(அ-ரை) உள் தெளிவு - உள்ளத்தில் அறிவு விளக்கம்; பாகு - சாரதி; விரையும் - வேகமாய்ச் செல்லுகிற; மட்டு அறும் - அளவு கடந்த ; ஊர்ந்து - ஏறிச்சென்று; கிட்டுக - அடைவாயாக; கிளர் அதில் - ஒளியுள்ள அந்தச் சுருதியிற் சொல்லப்பட்ட.

'ஓங்கார ரதமாருஹ்ப விஷ்ணும் க்ருத்வாத ஸாரதிம்| ப்ரஹ்ம லோக பதாந் வேஷீ ருத்ராராதந தத்பர:' என்ற அம்ருதநாதோபநிஷத்து இச்செய்யுட்குப் பிரமாணம். (சக)
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சிவபரத்துவ நிச்சயம் - Page 3 Empty Re: சிவபரத்துவ நிச்சயம்

Post by நந்தி Sun Jul 25, 2010 1:06 am

இதுவுமது

பொங்கா வணிந்த பெம்மான் புண்ணிய முகங்க ளைந்தி
னிங்கித மனுக்க டம்மை யேவருஞ் செபித்து வாழ
மங்கல பிரம மென்று மறையெடுத் துரைக்கு மென்னிற்
பங்குமை யம்மைக் கீந்த பரமனிற் பிரம முண்டோ.


(அ-ரை) பொங்கு அரவு அணிந்த பெம்மான் - சிவபிரான்; இங்கித மனுக்கள் தம்மை - இனிய மந்திரங்களை; எடுத்து - விவரித்து.

'ஸத்யோ ஜாதாதி பஞ்ச ப்ரஹ்ம மந்த்ரை:' என்ற காலாக் நிருத்ரோப நிஷத்தும் ஜாபால்யுபநிஷத்தும், 'ஸத்யோ ஜாதம் ப்ரபத்யாமி ஸத்யோ ஜாதாயவை நமோ நம: - - வாமதேவாய நமோ ஜ்யேஷ்டாய நம: - - அகோரேப்யோத நமஸ்தே - - தத்புருஷாய - - ப்ரசோதயாத் || ஈசாந - - ஸதாசிவோம்' என்ற நாராயணோபநிஷத்தும், 'பஞ்சப்ரஹ்ம மந்த்ரை:' என்ற பஸ்மஜாபாலோபநிஷத்தும், 'தத்புருஷேசாநாகோரஸத்யோ ஜாதவாம தேவேப்யோ நம:' என்ற சுகரஹஸ்யோபநிஷத்தும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள். (சஉ)
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சிவபரத்துவ நிச்சயம் - Page 3 Empty Re: சிவபரத்துவ நிச்சயம்

Post by நந்தி Sun Jul 25, 2010 1:13 am

மோக்ஷயாத்திரை செய்யுஞ் சர்வான்மாக்களுக்கும் லக்ஷ்யம் சிவபிரானே யென்பது.

பிரணவ மென்னும் வில்லைப் பிடித்துய ரான்மாத் தன்னைச்
சரமென வைத்து வாங்கிச் சங்கர னடிக ளான
வரமுறு மிலக்கிற் பாய்ச்ச வல்லவன் றானே முத்தி
புரமதை யடைவா னென்று பொதுமறை சொல்லு மன்றே.


(அ-ரை) சரம் - அம்பு; வாங்கி - வளைத்து; வரம் - மேன்மை; இலக்கில் - லக்ஷ¢பத்தில்; பாய்ச்ச - போய்த் தங்கும்படி செலுத்த; முத்தி புரமதை - மோக்ஷ லோகத்தை.

'ப்ரணவோ தநுச் சரோஹ் யாத்மா ப்ரஹ்மதல் லக்ஷ்ய முச்யதே' என்ற முண்டகோபநிஷத்தும். தியாநபிந்தூநிஷத்தும், 'தநுஸ்தாரம் சரோஹ்யாத்மா ப்ரஹ்மதல் லக்ஷ்ய முச்யதே', 'சிவ லக்ஷ்யம் ந ஸம்சய:' என்ற ருத்ரஹ்ருதயோபநிஷத்தும், 'அந்தர் லக்ஷ்யம் - - உமாஸஹாயம் நீலகண்டம் ப்ரசாந்த மந்தர் லக்ஷ்யம்' , 'ஸர்வேசம் - - சிவம் - - ஏகலக்ஷ்யம்' என்ற மண்டலப்ராஹ்மணோபநிஷத்தும், 'பஹ¤நி புண்யாநி க்ருதாநியேந தேநைவ லக்ஷ்ய: பரமேச்வர:' என்ற சரபோபநிஷத்தும், 'துரீயாதீதம் பரம் ப்ரஹ்ம ப்ரஹ்ம ரந்த்ரேது லக்ஷ்யேத்' என்ற திரிசிசிப்ராஹ்மணோபநிஷத்தும், 'எத்தவத்தோர்க்கு மிலக்காய் நின்ற எம்பெருமான்' , 'மல்லை ஞாலத்து வாழுமுயர்க்கெலா - மெல்லையான பிரானார்' என்ற தேவாரமும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள். (சங)
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சிவபரத்துவ நிச்சயம் - Page 3 Empty Re: சிவபரத்துவ நிச்சயம்

Post by நந்தி Sun Jul 25, 2010 1:28 am

சிவபிரானே ஏகழம் அத்விதீயழமானவரென்பது.

உயர்வுட னொப்ப தின்றி யுள்ளதே யேக மாகு
முயிரினொ டுடன்வே றொன்றா யுறுவதத் துவித மாகு
முயரிய பிரமப் பேர்க்கு முருத்திரப் பெயர்க்குந் தானே
நயமுற வவற்றைக் கூட்டு நான்மறை யடைக ளாக்கி.

(அ-ரை) நயம் உற - ஏவகாரம் பொருந்த.

'போகுமாமழை' என்ற சிந்தாமணிச் செய்யுளில் வரும் 'ஏகம்' என்ற பதத்திற்குத் 'தனக்கு நிகரில்லாத' என்ற நச்சினார்க்கினியருரையும், 'இவ்வத்துவிதம் - - கலப்பும் உடனாதலும் வேறாதலுமாகிய மூன்றுந் தன் கட்டோன்ற நிற்றல்பற்றி அம்மூன்றற்கும் பொதுவாகக் கூறப்படும்' என்ற சிவஞான மஹாபாஷ்யமும், 'ஏகமேவாத்விதீயம் ப்ரஹ்ம' என்ற பைங்க ளோபநிஷத்தும், சகாஹஸ்யோபநிஷத்தும், திரிபாத்விபூதிமஹாநாராயணோப நிஷத்தும், 'ஏக ஏவ ருத்ரோ நத்விதீயாயதஸ்து' என்ற சுவேதா சுவத்ரோபநிஷத்தும், 'ஏகோ நாராயணோ நத்விதீயோஸ்தி' என்ற திரிபாத் விபூதி மஹா நாராயணோப நிஷத்தும், 'ஏகமத்வைதம்' என்ற பஸ்ம ஜாபாலோப நிஷத்தும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள். (சச)
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சிவபரத்துவ நிச்சயம் - Page 3 Empty Re: சிவபரத்துவ நிச்சயம்

Post by நந்தி Sun Jul 25, 2010 2:58 pm

நாராயணனைப் பிரமமென்பதற்குக் காரண மீதுவென்பது.

செருவல மாலோன் றன்னுட் சிவனைவைத் தேத்த லானும்
பொருவறு மனைவி யாயப் பூரணற் குறுத லானும்
பெருகிடு பகுதி உண்டம் பிரானென நடரத்த லானுந்
திருமறை பிரம மென்று சிலவிடத் துபச ரிக்கும்.


(அ-ரை) தன்னுள் - தன் இருதயத்தில்; பகுதியண்டம் - பிரகிருதி புவனம் வரை; பிரானென - தலைவனாயிருந்து; நடாத்தலானும் - ஆளுதலானும்.

'நாராயண: ஸ்தித: - - பத்மகோசப்ரதீகாசம் ஹ்ருதயம் சாப்யதோ முகம் - தஸ்ய மத்யே மஹா நக்கிர் விச்வார்ச்சிர் விச்வதோமுக: - - தஸ்ய: சிகாயாமத்யே பரமாத்மா வ்யவஸ்தித:' என்ற நாராயணோபநிஷத்தும், 'நாராயணப்பிரகரணத்திற் கூறப்பட்ட விருதயம் பிறரைச் சார்தற்கியை பின்மையின் அ·து அவனுடையதென்றல் பொருந்துமென்க' என்ற சதுர்வேத தாற்பரிய சங்கிரமும், 'அரியலாற் றேவி யில்லை யையனை யாறனார்க்கே' என்ற தேவாரமும், 'பிரகிருதிமாயைகாறும் வியாபித்து நிற்கும் பிரதிட்டாகலைக்கு மாயோன் அதிதெய்வம்' என்ற சிவஞான மஹாபாஷ்யமும், 'நாராயண பரம் ப்ரஹ்ம' என்ற நாராயணோப நிஷத்தும், 'நாராயணம் பரம் ப்ரஹ்ம' என்ற திரிபாத்விபூதிமஹாநாராயணோபநிஷத்தும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள். (சரு)
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சிவபரத்துவ நிச்சயம் - Page 3 Empty Re: சிவபரத்துவ நிச்சயம்

Post by நந்தி Sun Jul 25, 2010 3:00 pm

பல பொருள்களைப் பிரமமென்பதற்குக் காரணமிதுவென்பது.

நாரண னளின னாத ஞாயிறு கரணம் பூத
மாருயி ருடல்காலன்ன மறிவிவை பிரம மென்றே
யாரண முரைக்கும் வெவ்வே றவையெலாஞ் சோபா னங்க
டாரணி சைவஞ் சார்ந்து சங்கர னருளிற் கூட.


(அ-ரை) நளினன் - பிரமன்; நாதம் - சப்தம்; ஞாயிறு - ஆதித்தன்; கால் - பிராணன்; அறிவு - ஞானம்; ஆரணம் - வேதம்; சோபானங்கள் - படிக் கிரமங்கள்; தாரணி - உலகத்தோர்; அருளிற் கூட - அருளுக்குப் பாத்திரமாகும்படி.

'நாராயணம் பரம் ப்ரஹ்ம' என்ற நாராயணோபநிஷத்தும், 'பசுவாந் ப்ரஹ்மா ஸர்வலோக பிதாமஹ:' என்ற மஹோபநிஷத்தும், 'அக்ஷ¡ம் பரமோ நாத: சப்தப்ரஹ்மேதி கத்யதே' என்ற யோகசிகோபநிஷத்தும், 'ஆதித்ய - - த்வமேவ ப்ரத்யக்ஷம் ப்ரஹ்மாஸி' என்ற ஸ¤ர்யோப நிஷத்தும், 'அயமாத்மா ப்ரஹ்ம', 'அந்நம் ப்ரஹ்ம' என்ற பிருஹதாரண்யகோபநிஷத்தும், 'நமஸ்தே வாயோ த்வமேவ ப்ரத்யக்ஷம் ப்ரஹ்மாஸி' , 'அந்நம் ப்ரஹ்ம' 'ப்ராணோ ப்ரஹ்ம' , ' விஜ்ஞாநம் ப்ரஹ்ம' என்ற தைத்திரீயோப நிஷத்தும், 'ஓம் ப்ரஜ்ஞாநம் ப்ரஹ்ம' என்ற சுகரஹஸ்யோபநிஷத்தும், 'ஓமித்யேகாக்ஷரம் ப்ரஹ்ம' என்ற அம்ருதநாதோபநிஷத்தும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள். (சசா)
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சிவபரத்துவ நிச்சயம் - Page 3 Empty Re: சிவபரத்துவ நிச்சயம்

Post by நந்தி Sun Jul 25, 2010 3:01 pm

பிரமமுதலிய பெயர்கள் சிவபிரானுக்கே உண்மை வாசகமாமென்பது.

போற்றுரை மிகுதி யானும் பொருளதி னிறைத லானுந்
தூற்றுரை யிலாமை யானுந் துகளிலொப் புரைக ளெல்லாந்
தேற்றம துரைத்த லானுஞ் சிவபிராற் களவில் வேதஞ்
சாற்றிய பிரம மாதி தனிப்பெய ரனைத்து மெய்யே.


(அ-ரை) போற்றுரை - புகழ்மொழி; பொருள் - உண்மை; தூற்றுரை - நிந்தை; துகள் இல் - குற்றமில்லாத; ஒப்புரைகள் - தெய்வங்களை வரிசைப்படுத்தி ஒத்திட்டுப் புகழும் வாக்கியங்கள்; 'பராத் பரதரோ ப்ரஹ்மா--' என்பது போலும். தேற்றம் - உயர்வு; நிச்சயம்.

'காரெழில் புரையுமேனிக் கண்ணனை யென்னைப் பின்னை - யாரையும் புகழும் வேத மான்றனைத் துதித்ததேபோ - லோருரை விளம்பிற்றுண்டோ வுரைத்தது முகமனென்றே - பேருலகறிய முன்னும் பின்னரும் விலக்கிற் றன்றே, என்ற கந்தபுராணம் இச்செய்யுட்குப் பிரமாணம். (சஎ)
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சிவபரத்துவ நிச்சயம் - Page 3 Empty Re: சிவபரத்துவ நிச்சயம்

Post by நந்தி Sun Jul 25, 2010 3:02 pm

[You must be registered and logged in to see this image.]
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சிவபரத்துவ நிச்சயம் - Page 3 Empty Re: சிவபரத்துவ நிச்சயம்

Post by நந்தி Sun Jul 25, 2010 3:03 pm

பிரணவ மந்திரம் சிவசம்பந்தமுடையதென்பது

பிரணவ முமையாந் தாய்க்குப் பெரும்பெய ராகிச் சாரு
மரவணி யமல னீன்ற வைங்கர னவன்பின் வந்த
சரவண னிவர்க்குச் சாருந் தண்ணருண் முகங்க ளாகிச் சிரவண மறையு ம·தைச் செப்பிடுஞ் சைவ மென்றே.


(அ-ரை) பெரும்பெயர் - உயர்ந்த பெயர்; சாரும் - பொருந்தும்; ஐங்கரன் - விநாயகர்; சரவணன் - சுப்பிரமணியர்; தண் - குளிர்ந்த; சிரவண மறை - கேட்கத்தகுந்த வேதம்; அ·தை - அப்பிரணவத்தை.

'உமாம் ஹைமவதீம்' என்ற கேநோபநிஷத்தும், 'ஓமெனப்படுங் குடிலையே யொப்பிலா முருகன் மாமுகத்துளொன்றாம் ' என்ற கந்தபுராணமும், 'ஓங்கார ஸ்வரூபிணம் மஹாதேவம்' என்ற பஸ்மஜாபாலோப நிஷத்தும், 'சிவோமே அஸ்து ஸதாசிவோம் என்ற நாராயணோப நிஷத்தும், 'ஸ¤ப்ரஹ்மண்யோம் ஸ¤ப்ரஹ்மண்யோம் ஸ¤ப்ரஹ்மண்யோம்' என்ற தைத்திரீய ஆரண்யகமும், 'ஓம் ப்ரணவா நந தேவாய நம:' என்ற விநாயக மந்திரமும், 'த்யாயே தோங்கார மீச்வரம்' , 'ஓமித்யேகாக்ஷரம் ப்ரஹமத்யேயம் ஸர்வமுமுக்ஷ¤பி' என்ற தியாகபிந்தூபநிஷத்தும், 'உமாக்யா ப்ரணவாத்மிகா' என்ற சம்பவ காண்டமும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள். (சஅ)
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சிவபரத்துவ நிச்சயம் - Page 3 Empty Re: சிவபரத்துவ நிச்சயம்

Post by நந்தி Sun Jul 25, 2010 3:04 pm

ஹரி: ஓம் என்பது உமையொரு பாகனைச் சுட்டுமென்பது.

தூயவ ரரியோ மென்று தொடங்குவர் வேதந் தன்னை
யேயிதை யறியாய் கொல்லோ வென்றிடி னியம்பக் கேணீ
தாயரி பதத்துக் கர்த்தந் தந்தையா மோமுக் கர்த்தம்
வேயுறு தோளி பங்கன் மேலதா மாத லாலே.


(அ-ரை) ஏ- நகையாடும் இடைச்சொல்; வேயுறுதோளிபங்கன் - அம்மையப்பன்; அது வேயுறுதோளிபங்கன் மேல் ஆம் என்க; அது - அந்த ஹரி; ஓம் என்பது.

'அவரரியோமென்றாதி யறைகுவ துணர்வீரென்றா - ரிவர·தம்மையப்ப ரியற்றிரு நாமமென்றார்' என்ற குமரகுருபர சுவாமிகள் சரிதம் இச்செய்யுட்குப் பிரமாணம். (சகூ)
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சிவபரத்துவ நிச்சயம் - Page 3 Empty Re: சிவபரத்துவ நிச்சயம்

Post by நந்தி Sun Jul 25, 2010 3:52 pm

காயத்திரி மந்திரத்தால் வந்திக்கப்படுந் தெய்வம் சிவபிரானே யென்பது.

உவமனில் பருக்கச் சொல்லை யுரூடியாய் வைத்து வேதஞ்
சிவபிரான் றானே காயத் திரிப்பொரு ளென்று செப்புங்
குவலய்ந் தன்னில் வேதக் கொலை ஞரவ் வுரூடிப் பேரை
யவமுறும் யோக மாக்கி யரிமுதற் பிறர்மேல் வைப்பார்.


(அ-ரை) பருக்கச் சொல்லை - 'பர்க:' என்ற பதத்தை; உரூடி - இடுகுறி, காரண இடுகுறியுமாம்; குவலயந்தன்னில் - உலகில்; வேதக்கொலைஞர் - வேதத்துக்கு விபரீதார்த்தஞ் செய்து வேதபுருஷனை மனம் நோவச் செய்பவர்; அவம் உறும் - பலவற்றினும் போய்ப்பற்றி விபசரிக்கிற; யோகம் - காரணப்பெயர்.

'தத்ஸவிதுர்வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி| தியோயோந: ப்ரசோதயாத்' என்ற நாராயணோபநிஷத்தும், 'பர்கோக்யோ - - பர்ந இதி ருத்ரோ ப்ரஹ்ம வாதிநோத' என்று மைத்ராயண்யுபநிஷத்தும், 'பர: சிவ: - - பர்க உச்யதே' என்று திரிபுராதாபிநியுபநிஷத்தும் அம்மந்திரத்துக்கு உரை கூறியதும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள். (ரு0)
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சிவபரத்துவ நிச்சயம் - Page 3 Empty Re: சிவபரத்துவ நிச்சயம்

Post by நந்தி Sun Jul 25, 2010 3:57 pm

ஆதித்ய ஹ்ருதயத்திலிருப்பவர் சிவபிரானே என்பது.

பொன்னிற வுருவத் தெய்வம் பொருந்தின தெல்லி லென்று
மன்னதொ ருருவத் தெய்வ மற்புதச் சிவனே யென்றுஞ்
சொன்னது வேத மென்னிற் சூரிய வுலகந் தன்னுண்
மன்னிய வாதித் தன்பால் வதிபவன் சிவனே யன்றோ.


(அ-ரை) எல்லில் - சூரியனிடத்தில்; அன்ன - அப்படிப்பட்ட; அற்புதம் - அதிசயகுணங்கள்; மன்னிய - பொருந்திய; ஆதித்தன் என்பது சூரிய மண்டலத்தின் அதிதேவதைக்குப் பெயர்; வதிபவன் - இருப்பவன்.

'யஏஷோந்தராதித்யே ஹிரண்மய: புருஷ:' என்ற சாந்தோக்யோப நிஷத்தும் நாராயணோப நிஷத்தும் மைத்ராயண்யுபநிஷத்தும், 'ஸ¤ர்யோந்தராதித்யே ஹிரண்மய: புருஷ:' என்ற நரஸிம்ஹ பூர்வதாபிநியுபநிஷத்தும், 'ஹிரண்யவர்ணாய ஹிரண்யரூபாய - - அம்பிகாபதய - - பசுபதயே நமோ நம:' என்ற நாராயணோபநிஷத்தும், ' ஹிரண்யவர்ணம் ஹிரண்யரூபம் - - விரூபாக்ஷம்' என்ற ப்ருஹதாரண்யகோபநிஷத்தும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள். (ருக)
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சிவபரத்துவ நிச்சயம் - Page 3 Empty Re: சிவபரத்துவ நிச்சயம்

Post by நந்தி Sun Jul 25, 2010 3:58 pm

சிவபிரானே பசுவானென்பது

ஈசுரன் சிவன்சர் வஞ்ஞ னுக்கிர னிகல்செய் காம
நாசனென் பெயர்க டாமு நல்லிருக் குரையுங் காண்போர்
தேசமர் பகவ நாமஞ் சிவபிரான் றனக்கே யுண்மை
வாசகம் வேறு தேவர்க் குபசார வசன மென்பர்.

(அ-ரை) இருக்குரை - ருக்வேத வாக்கியம்; தேசுஅமர் - ஒளி பொருந்திய.

'ஐச்வர்யஸ்ய ஸம்கரஸ்ய வீர்யஸ்ய யசஸ்சியNeutral ஜ்ஞாந வைராக்ய யோச் சேவ ஷண்ணாம் பக இதீரணா' என்ற விஷ்ணுபுராணமும், 'ஐசுவரியம் வீரியம் புகழ் திருஞானம் வைராக்கியம் என்னு மாறும் பகமெனப்படுதலின், இவை சிவபிரானுக்கே யுண்மையின் அவரே பசுனெனப்படுவர். அற்றேல், இவை யாறுஞ் சிவபிரானுக்கு உள்ளனவென்பதற்குப் பிரமாணமென்னையெனின்; - அவருக்கு ஐசுவரிய முண்மைக்கு ஈசுரபதச் சுருதியும், வீரிய முண்மைக்கு உக்கிரபதச் சுருதியும், புகழுண்மைக்குச் சிவபதச் சுருதியும், திருவுண்மைக்கு இருக்குவேதமும், ஞானமுண்மைக்குச் சர்வஞ்ஞ சுருதியும், வைராக்கிய முண்மைக்குக் காமரிபுபதச் சுருதியும் பிரமாணமாமென்க' என்ற சதுர்வேத தாற்பரிய சங்கிரகமும், 'தவச்ரியே மருதோ மர்ஜயந்த ருத்ரயத்தே ஜநிமசாருசித்ரம்', 'ச்ரேஷ்டோ ஜாதஸ்ய ருத்ர ச்ரியா சிதவஸ்த மஸ்தவஸாம் வஜ்ர பாஹோ' என்ற ருக் வேதமும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள். (ருஉ)
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சிவபரத்துவ நிச்சயம் - Page 3 Empty Re: சிவபரத்துவ நிச்சயம்

Post by நந்தி Sun Jul 25, 2010 4:02 pm

இதுவுமது.

பதவுரை தொடங்க லுண்டாற் பகவனே யீச னென்று
விதமுறு வேதந் தன்னில் விளங்கிடும் பகேச நாமம்
பதமய வுமைக்குப் பேராம் பகவதி யாத லாலே
நிதநித மினிக்கு முக்க ணிமலனே பகவன் காணே.


(அ-ரை) பதவுரை - நிகண்டு; விதம் உறு - நான்கு வசைகளையுடைய; நிதநிதம் - எப்போதும்.

'பகவனே யீசன் மாயோன் - -' என்ற நிகண்டும், 'பகேசம்' என்ற சுவேதாசுவதரோபநிஷத்தும், 'பக: சக்திர் பகவாந் காம ஈச உமாதா தாராவிஹ ஸெளபகாநாம்' என்ற திரிபுரோப நிஷத்தும், ' அக்ஷர: ஸோமா' என்ற ருத்ரஹ்ருதயோபநிஷத்தும், ' எப்போது மினியபிரான்' என்ற பெரிய புராணமும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள். (ருங)
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சிவபரத்துவ நிச்சயம் - Page 3 Empty Re: சிவபரத்துவ நிச்சயம்

Post by நந்தி Sun Jul 25, 2010 4:03 pm

சிவபிரான் சந்நிதானத்தில் யாருஞ் சாமியாதலில்லை யென்பது.

அம்புலி தேச னாவ னாதவ னொளியைப் பெற்றுச்
சம்புவி னருளைப் பெற்றுச் சாமிமா லாவ னந்த
வம்புலி தேச னாத லாதவன் முன்ன மில்லை
சம்புமு னந்த மாலோன் சாமிதா னாத லின்றே.


(அ-ரை) தேசன் - ஒளியுடையவன்; ஆதவன் - சூரியன்; சம்புவின் - சிவபிரானுடைய; மால் - விஷ்ணு; நாராயணனைச் சொன்னது இங்கு உபலக்கணம். (ருச)

******
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சிவபரத்துவ நிச்சயம் - Page 3 Empty Re: சிவபரத்துவ நிச்சயம்

Post by நந்தி Sun Jul 25, 2010 4:04 pm

ஜகத் விஷ்ணுமய மென்பதும் சிவபிரான் ஜகத்கர்த்தா வென்பதும்.

மாலொரு விசுவ மாவன் மற்றதைத் தாண்டு சீரான்
மேல்பிற ரில்லா வீசன் விச்சுவ வதிக னாவன்
மாலொரு பகுதி மாயை மகத்தென விருப்பன் பொல்லா
மால்செயு மதையாள் சீரான் மகேச்சுர னாவன் சம்பு.


(அ-ரை) மால்-விஷ்ணு; சீரால் - தன்மையால்; பகுதி, மாயை, மகத் - பிருகிருதி; பொல்லாமால் - பொல்லாத மயக்கத்தை; அதை - அந்தப் பிரகிருதியை.

'விச்வம் நாராயணம்--', 'விச்வாதிகோ ருத்ரோ மஹர்ஷி:', 'விச்வம் நாராயணம் ஹரிம்', 'தஸ்யப்ரகிருதி லீநஸ்ய ய: பர மஹேச்வர:' என்ற நாராயணோப நிஷத்தும், 'விச்வாதிகோருத்ரோ மஹர்ஷி:' 'மாயாந்து ப்ரக்ருதிம் வித்யாந் மாயிநந்து மஹேச்வரம்', 'புருஷம் மஹாந்தம்' என்ற சுவேதாசுவதரோபநிஷத்தும், 'மஹாந்தம் - - சிவம்', 'புருஷம் மஹாந்தம்' என்ற நாரதபரிவ்ராஜகோபநிஷத்தும், 'விச்வம் நாராயணம் ஹரிம்,' 'மஹாந்தம் - - சிவம்' என்ற மஹோபநிஷத்தும், 'விச்வாதிகோருத்ரோ மஹர்ஷி:' என்ற பஸ்ம ஜாபாலோபநிஷத்தும், 'விச்வாதிகோருத்ரோ மஹர்ஷி:' என்ற பஸ்ம ஜாபாலோபநிஷத்தும், 'மஹேச்வர இதி| யஸ்மாந் மஹத ஈச:' 'மஹத ஈசதே தஸ்மாதுச்யதே மஹேச்வர இதி' , என்ற சாண்டில்யோபநிஷத்தும் 'ஸ்வ மாயாவைபவாந்ஸர்வாந்' என்ற பஞ்சப்ரஹ்மோபநிஷத்தும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள். (ருரு)
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சிவபரத்துவ நிச்சயம் - Page 3 Empty Re: சிவபரத்துவ நிச்சயம்

Post by நந்தி Mon Jul 26, 2010 1:18 am

சிவபிரானே அமிர்தவாசகத்துக்குரிய தெய்வமென்பது.

அமிருத நாமன் பொன்னி னழகிய வண்ண னாவ
னிமிருத மடியார் வாழ வாளுவ னீசா னன்றா
னமிருத னாமச் செப்பா மருஞ்சத ருத்தி ரீய
மமிருத னரனே யென்ப தம்மறை மொழியாற் றேற்றம்.


(அ-ரை) நாமன் - பெயரையுடையவன்; அமிருதன் நாமச் செப்பு - அமிருதனுடைய பெயர்கள் வைக்கப்பட்ட சிமிழ்.

'அம்ருதோ ஹிரண்மய:' என்ற தைத்திரீயோபநிஷத்தும், 'உதாம் ருதத்வஸ்யேசாந:' என்ற சுவேதசுவதரோபநிஷத்தும், 'தேநாம்ருதத் வஸ்யேசாநம்' என்ற கெளஷீதகிப்ராஹ்மணோபநிஷத்தும், 'சதருத்ரியே ணேத்யேதாநயேவஹவா அம்ருதஸ்ய நாமாநி' என்ற ஜாபாலோபநிஷத்தும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள். (ருசா)
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சிவபரத்துவ நிச்சயம் - Page 3 Empty Re: சிவபரத்துவ நிச்சயம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 13 Previous  1, 2, 3, 4 ... 11, 12, 13  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum