தமிழ் | Tamil | Forum
தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

கூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.

புகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.

Join the forum, it's quick and easy

தமிழ் | Tamil | Forum
தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

கூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.

புகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.
தமிழ் | Tamil | Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வணக்கம் என் பெயர் நாகராசன்.இரா
by rajan_1972 Fri Apr 10, 2020 7:20 pm

» சிறந்த பொழுதுபோக்கு இணையதளம்!
by pba Sat Jul 02, 2016 8:11 pm

» ஏற்றுமதி உரிமம் பெறும் விண்ணப்பம்
by tamilnews Tue Mar 24, 2015 8:00 pm

» மொபைல், டிடிஎச் ரீசார்ஜ் செய்யப் போறீங்களா? இந்த சலுகைகளைப் பாருங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:41 am

» மொபைல் ரீசார்ஜ் செய்து ஷாப்பிங் கூப்பன் இலவசமாக பெறுங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:38 am

» மெமரி கார்டு வாங்கப் போறீங்களா? 74% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:36 am

» அமேசானில் பெண்களுக்கான ஆடைகள் 70% வரை தள்ளுபடி !
by dsytamil Wed Jan 14, 2015 1:34 am

» அமேசானில் ஆண்களுக்கான ஆடைகள் 60% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:31 am

» லெனோவா டேப்ளட் 43% சலுகை விலையில் ரூ. 5949 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:28 am

» ப்ளிப்கார்ட் தளத்தில் சிறுவர்களுக்கான ஆடைகள் 70% வரை + 30% கூடுதல் தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:14 am

» அமேசான் தளத்தில் 50% தள்ளுபடி விலையில் மொபைல்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:13 am

» ரூ. 7499 மதிப்புள்ள மைக்ரோமேக்ஸ் ஏ1 ஆன்ட்ராய்டு மொபைல் இப்போது ரூ. 5499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:11 am

» ரூ. 19999 மதிப்புள்ள நோக்கியா லூமியா 625 மொபைல் ரூ. 7499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:10 am

» ப்ராண்டட் காலணிகளுக்கு 70% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:08 am

» ஆன்லைன் ஷாப்பிங்கில் ப்ரிண்டர்களுக்கு 33% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:06 am

» ஆன்லைனில் பொருள் வாங்கப் போறீங்களா? 70% வரை பணத்தை சேமியுங்கள்!
by dsytamil Tue Jan 13, 2015 12:30 am

» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...!
by sathikdm Sun Oct 19, 2014 4:45 pm

» சிறுதொழில் செய்பவர்கள் இணையதளம் தொடங்க வேண்டியதின் அவசியம்!
by pba Sat Sep 27, 2014 12:58 am

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:47 pm

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:42 pm

» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
by santhoshpart Wed Aug 27, 2014 4:22 pm

» “சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா!”
by santhoshpart Wed Aug 13, 2014 3:54 pm

» Daily Rs.500/- and Above
by K.MARIAPPAN Wed Jul 30, 2014 12:01 pm

» http://www.neobux.com/?r=narasimmant
by Navaneethakrishnan Wed Jul 02, 2014 3:41 pm

» வணக்கம் என் பெயர் வேணு
by A.Venu Fri Jun 27, 2014 10:10 am

» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?
by sathikdm Wed Jun 18, 2014 3:24 pm

» தமிழ் மொழி மூல கல்வி இணையதளம்
by afdhaal Wed May 28, 2014 9:22 pm

» வருக. வருக. வணக்கம்.
by மகி Mon May 12, 2014 3:55 pm

» அறிமுகம் -விநாயகா செந்தில்.
by மகி Mon May 12, 2014 3:53 pm

» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....!
by vinayagasenthil Sat May 10, 2014 9:04 pm

பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

சிவபரத்துவ நிச்சயம்

4 posters

Page 2 of 13 Previous  1, 2, 3, ... 11, 12, 13  Next

Go down

சிவபரத்துவ நிச்சயம் - Page 2 Empty Re: சிவபரத்துவ நிச்சயம்

Post by நந்தி Sun Jun 20, 2010 1:28 am

வணங்குகிறவர் திரிமூர்த்திகளும் வணங்கப் படுகிறவர் சிவபிரானுமாவாரென்பது.

சேவிய னாவ னென்று முபாசியன் றியேய னென்றுந்
தேவிக மறைக ளெல்லாஞ் சிவபிரான் றன்னைப் போற்றிச்
சேவக ராவ ரென்று முபாசகர் தியாதா மாரிங்
காவரே யென்றுங் கூறி யகற்றிடு மூவர் தம்மை.


(அ-ரை) சேவியன் - சேவிக்கப்படுகிறவன்; உபாசியன் - உபாசிக்கப்படுகிறவன்; தியேயன் - தியானிக்கப்படுகிறவன்; தேவிக - தெய்வீக; சேவகர் - சேவிக்கிறவர்; உபாசகர் - உபாசிக்கிறவர்; தியாதாமார் - தியானிக்கிறவர்; அகற்றிடும் - ஒதுக்கும்; மூவர் தம்மை - பிரம விஷ்ணு ருத்ரரை.

'ப்ரஹ்ம விஷ்ணவாதிபி: ஸேவ்யம் - - ஈசாநம்' என்ற பஞ்சப்ரஹ்மோப நிஷத்தும், 'சிவம் - ஸர்வேச்வரம் ஸர்வ தேவை ருபாஸ்யம்' என்ற மஹோபநிஷத்தும், 'ஸதாசிவம் ப்ரஹ்மாதி வந்திதம்' என்ற நரஸிம்ஹ பூர்வதாபி நியுபநிஷத்தும், 'ஸர்வ தேவைருபாஸ்யம்', 'ஸர்வஸ்ய சரணம்' என்ற சவேதா சுவதரோபநிஷத்தும், 'ப்ரஹ்ம விஷ்ணு புரந்தராத் யமாவா ஸேவிதம்', 'மாமே லோபா ஸிதவ்யம்', 'ஏகாமா சாஸ்யம் - - சிவம்' என்ற பஸ்ம ஜாபா லோபநிஷத்தும், 'சிவ ஏகோத்யேய:', 'த்யாயீதே சாநம்' என்ற அதர்வ சிகோப நிஷத்தும், 'ஏகோ ருத்ரோ த்யேய:', ' சிவ ஏவ ஸ்தாத்யேய:' என்ற சரபோபநிஷத்தும், 'நாராயண பரோத்யாதா' என்ற நாராயணோப நிஷத்தும், 'த்யாதா ருத்ர:' என்ற அதர்வ சிகோபநிஷத்தும், 'ராம ஏவ பரம் தப:' என்ற ராம ரஹஸ்யோபநிஷத்தும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள். (க0)

******
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சிவபரத்துவ நிச்சயம் - Page 2 Empty Re: சிவபரத்துவ நிச்சயம்

Post by நந்தி Sun Jun 20, 2010 1:42 am

சைவசமயத்து முழுமுதற் கடவுள் நாலாவது வஸ்துவாகிய சிவபிரானே யென்பது.

சுந்தர சதுர்த்த னென்றுந் துகளறு துரிய னென்றுஞ்
சிந்தனை மறைக ணான்குஞ் செய்சிவ பிரானே மாயா
மந்திர மாமிப் பாரில் வழங்கிடு மதங்கட் கெல்லா
முந்திய சைவ மார்க்க முழுமுதற் கடவுள் தாணே.


(அ-ரை) துகள் அது - குற்றமற்ற; மறைகள் நான்குஞ் சிந்தனை செய் சிவபிரானே என்க. செய் என்பதன் வினைமுதல் மறைகள் நான்கும் என்பது. சிந்தனை செய் - சிந்திக்கிற; மாயா மந்திரம் ஆம் - மாயா காரிய வீடாகிய; இப்பாரில் - இவ்வுலகில்; வழங்கிடு - காணப்படுகிற.

'மூவரு முப்பத்து மூவரு மற்றொழிந்த தேவருங் காணாச் சிவபெருமான்' என்ற திருவாசகம் இச்செய்யுட்குப் பிரமாணம்.

இதுவரை வந்தது நாலு தெய்வப் பிரஸ்தாபம். இனி வருவது ஐந்து தெய்வப் பிரஸ்தாபம். சதுர்த்த தெய்வம் இவ்வரிசையிற் சேராது. (கக)
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சிவபரத்துவ நிச்சயம் - Page 2 Empty Re: சிவபரத்துவ நிச்சயம்

Post by நந்தி Sun Jun 20, 2010 1:42 am

பிரமனாதி ஐந்து மூர்த்திகளுட் சதாசிவனே பஞ்சகிருத்தியங்களையுஞ் செய்வரென்பது.

ஆக்குவ னயன்மா லாக்கி யளிப்பனா லாக்கிக் காத்துப்
போக்குவ னரன்மா கேசப் புங்கவ னாக்கிக் காத்துப்
போக்கியே மறைப்ப னெண்ணில் புகழ்ச்சதா சிவன்றான் செய்வ
னாக்குத லளித்தல் போக்கல் மறைத்தனல் லருள்க ளம்மா.


(அ-ரை) மாகேசப் புங்கவன் - மகேச்சுரன்; எண் இல் - அளவில்லாத.

'பஞ்சக்ருத்ய நியந்தாரம்' என்ற பஞ்சப்ரஹ்மோபநிஷத்தும், 'ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹார திரோதா நுக்ரஹாதி ஸர்வசக்தி--' என்ற ஸ¤தோப நிஷத்தும், 'பஞ்சக்ருத்ய ஸம்பந்ந: - - பசுபதி' என்ற ஜாபால்யுப நிஷத்தும், 'அயன் முதலிய மூவர்க்கும் முறையே படைப்பு முதலிய மூன்றனுள் ஒரோவொன்று சிறப்புத்தொழிலும், ஏனைய பொதுத்தொழிலுமா மெனவும்; மகேசன் சதாசிவன் இருவர்க்கும் முறையே மறைப்பும் அருளுஞ் சிறப்புத் தொழிலும் ஏனைய பொதுத்தொழிலுமாம்' என்ற சிவஞானமகாபாஷ்யமும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள். (கஉ)
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சிவபரத்துவ நிச்சயம் - Page 2 Empty Re: சிவபரத்துவ நிச்சயம்

Post by நந்தி Sun Jun 20, 2010 1:43 am

உடம்பிற் பிரதான உறுப்பாகிய சிரசிற்குரிய தெய்வம் சதாசிவனே யென்பது.

அடிமுதல் முழங்கால் காறு மயனுள னதன்மேன் மாய
னிடைவரை யுள்ளான் றானு விருதயம் வரையி லாவன்
வடுவறு புருவத் தெல்லை மகேச்சுரன் வதிவான் மேலாந்
தடமுடி தனினன் குற்றான் சதாசிவ பரமன் றானே.


(அ-ரை) இடை- இடுப்பு; தாணு - உருத்திரன்; வடு அறு - குற்றமற்ற; வதிவான் - இருப்பான்; தடமுடிதனில் - விசாலமான சிரசில்.

'பாதாதி ஜாநுர் பர்யந்தம் - - சதுர்புஜாகாரம் சதுர்வக்த்ரம் ஹிரண்மயம் - - ஆஜாநோ: பாயுபர்யந்தம் - - காராயணம் தேவம் - - ஆபாயோர் ஹ்ருதயாந்தம் - - ருத்ரம் - - ஆஹ்ருதயாத் ப்ருவோர் மத்யம் - - ஈச்வரம் - - ஆப்ரூமத்யாத்து மூர்த்தாந்தம் - - ஸதாசிவம்' என்ற யோகதத்வோபநிஷத்து இச்செய்யுட்குப் பிரமாணம். (கங)

******
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சிவபரத்துவ நிச்சயம் - Page 2 Empty Re: சிவபரத்துவ நிச்சயம்

Post by மகி Mon Jun 21, 2010 1:17 pm

பகிர்வுக்கு மிக்க நன்றி.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

சிவபரத்துவ நிச்சயம் - Page 2 Empty Re: சிவபரத்துவ நிச்சயம்

Post by நந்தி Fri Jul 23, 2010 11:36 pm

நன்றி நண்பரே!
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சிவபரத்துவ நிச்சயம் - Page 2 Empty Re: சிவபரத்துவ நிச்சயம்

Post by நந்தி Fri Jul 23, 2010 11:41 pm

மற்றப் பூதங்களை யெல்லாம் வியாபித்துள்ள ஆகாச தெய்வம் சதாசிவனே யென்பது.

மண்ணதி லயன்மா னீரில் வன்னியி லரன்கா லீசன்
றண்ணளி வடிவ மான சதாசிவன் விண்ணி லுள்ளா
ரெண்ணிடு பூத மைந்து மேறலான் முறையா யாங்கே
நண்ணிடு மதிபர் தாமு நாசமி லதிக ரங்ஙன்.


(அ-ரை) வன்னியில் - தீயில்; அரன் - உருத்திரன்; கால் - காற்றில்; அயனும் மாலும் அரனும் ஈசனும் சதாசிவனும் என உம்மை விரித்து உள்ளார் என்பதற்குப் பன்மை வினைமுதல் காண்க; ஏறலான் - வியாபித்தலான்; ஆங்கே - அப்பூதங்களில்; நண்ணிடும் - இருக்கிற; அதிபர் - கடவுளர்; அதிகர் - வியாபகர்; அங்ஙன் - அப்பூதங்களின் வியாபக முறையில்.

'ஆகாசாத் வாயு; வாயோ ரக்கிNeutral அக்நேராபNeutral அத்ப்ய: ப்ருதிலீ|| என்ற தைத்திரீயோபநிஷத்தும், பைங்களோபநிஷத்தும், 'ஆகாசாத் வாயுர் வாயோரக்கி ரக்நே ராபோத்ப்ய: ப்ருதிவீ ' என்ற ஸ¤பாலோபநிஷத்தும், 'ஆகாசாத் வாயு: | வாயோ ரக்நி: அக்நேராப: அத்ப்ய: ப்ருதிலீ| எதேஷாம் பஞ்சபூதாநாம் பதய: பஞ்ச ஸதாசிவேச் வர ருத்ர விஷ்ணு ப்ரஹ்மாணச்சேதி' என்ற யோகசூடாமணியுநிஷத்தும், 'ப்ருதிலீ - - சதுர்புஜாகாரம் சதுர் வக்த்ரம் ஹிரண்மயம் - - ஆப: - - நாராயணம் தேவம் - - வஹ்நி - - ருத்ரம் - - வாயு: - - ஈச்வரம் - - வ்யோம - - ஸதாசிவம்' என்ற யோகதத்வோபநிஷத்தும், 'ப்ரஹ்மாணம் ப்ருதிவீ பாகே விஷ்ணும் தோயாம்சகே ததா| அக்ந்யம் சேச மஹேசாந மீச்வரம் சாநிலாம் சகே| ஆகாசாம்சே மஹா ப்ராஜ்ஞ தாரயேத்து ஸதாசிவம்' என்ற ஸ்ரீ ஜாபாலதர்சனோபநிஷத்தும், 'தரண்யெள ப்ரஹ்மா தத்ராதி தேவதா - - ஜலம் விஷ்ணு ஸ்தஸ்யாதி தேவதா - - வஹ்நிருத்ரஸ்தஸ்யாதி தேவதா வாயோர் பிம்பம்து - - ஈச்வரோஸ்யாதி தேவதா ஆகாசமண்டலம் - - தேவதாஸ்ய ஸதாசிவ:' என்ற யோகசிகோபநிஷத்தும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள். (கச)
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சிவபரத்துவ நிச்சயம் - Page 2 Empty Re: சிவபரத்துவ நிச்சயம்

Post by நந்தி Fri Jul 23, 2010 11:52 pm

[You must be registered and logged in to see this image.]
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சிவபரத்துவ நிச்சயம் - Page 2 Empty Re: சிவபரத்துவ நிச்சயம்

Post by நந்தி Sat Jul 24, 2010 12:04 am

ஆறாதாரங்களுள் உச்சமான ஆஞ்ஞைத் தெய்வம் சதாசிவனென்பது.

விதிபதி சுவாதிட் டானம் விட்டுணு மணிபூ ரத்த
னுதிகதி ரொளியாஞ் சீவர்க் குருத்திர னனாக தத்தன்
வதிபதி விசுத்தி தன்னின் மகேச்சுர னாஞ்ஞை யென்னும்
பதியதி லுறைவோ னன்னோர் பணிசதா சிவனே யாவன்.


(அ-ரை) விதி - பிரமனுக்கு; பதி - இடம்; சீவர்க்கு உதி கதிர் ஒளி ஆம் - உயிர்களுக்கு அந்தகாரத்தை நீக்குவதிற் காலைக் கதிரவன் போலுள்ள; விசுத்திதன்னில் வதிபதி என்க; வதிபதி - இருக்கிற தலைவன்; அன்னோர் - முன் நால்வரும்; எனவே மகேச்சுரனை முன்மூவரும், உருத்திரனை முன் இருவரும், விஷ்ணுவைப் பிரமனொருவனும் பணிவரென்பது சூசனை, ஆறாதாரங்களை யோககுண்டலியுபநிஷத்து 'மூலாதாரம் ஸ்வாதிஷ்டாநம் - - மணிபூரம் - - அநாஹதம் விசுத்தம் ச ஆஜ்ஞா சக்ரம்' என்றும், ஹம்ஸோபநிஷத்து 'ஸ்வாதிஷ்டாநம் - - மணிபூரகம் - - அநாஹதம் விசுத்தெள - - ஆஞ்ஞாம் -- ப்ரஹ்மாந்த்ரம் - - ' என்றும் கணக்கிடும். இங்கு மூலாதாரமும் பிரமாந்திரமுந்தள்ளி அம்மூர்த்திகளின் தாரதம்மியங்காட்ட மற்றவைமட்டில் எடுத்துக்கொள்ளப்பட்டன. (கசா)
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சிவபரத்துவ நிச்சயம் - Page 2 Empty Re: சிவபரத்துவ நிச்சயம்

Post by நந்தி Sat Jul 24, 2010 12:05 am

மூன்று மூர்த்திக் கணக்கு வரும்போது அவர்களுக்கதீதனாகிய நாலாவது மூர்த்தியாஞ் சிவபிரானே ஐந்து மூர்த்திக் கணக்கு வரும்போது அவர்களுக்கதீதனாகிய ஆறாவது மூர்த்தியாயும் விளங்குவனென்பது.

அயனென வரியே யென்ன வானென மகேச னென்னச்
சயசதா சிவனே யென்னச் சாற்றுமவ் வைவர் மேலாய்
மயலறு போதா நந்த மயசிவ னென்னு மாறாஞ்
சுயவொளி யிறைவ னாகித் துலங்கலுந் துரியற் குண்டால்.
(அ-ரை) துலங்கல் - விளங்குதல்.


'ப்ரஹ்மாணம் - - விஷ்ணும் - - மஹேசாந மீச்வரம் - - ஸதாசிவம் | அதவாதவ வக்ஷ்யாமி தாரணாம் முநிபுங்கவ | புருஷே ஸர்வ சாஸ்தாரம் போதா நந்தமயம் சிவம்' என்ற ஸ்ரீ ஜாபாலதர்சநோபநிஷத்து இச்செய்யுட்குப் பிரமாணம். (கஎ)
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சிவபரத்துவ நிச்சயம் - Page 2 Empty Re: சிவபரத்துவ நிச்சயம்

Post by நந்தி Sat Jul 24, 2010 12:22 am

திரிமூர்த்திகளுட் சேர்ந்த உருத்திரன் சைவசமயக் கடவுளல்ல ரென்பது.

முத்தொழி லியற்றுந் தேவர் மூவருண் மூன்றாந் தேவே
சத்திய சைவ மார்க்கத் தனிமுத லென்பர் தேரா
ரத்தொழி லிறைவ ரெல்லா மஞ்சலி சிரமேற் கொண்டு
வித்தக சதுர்த்த னாறே வினைகளை யென்றுஞ் செய்வார்.


(அ-ரை) முத்தொழில் இயற்றுந்தேவர் - பிரமவிஷ்ணுருத்ரர்; மூன்றாந் தேவு - உருத்திரன்; சைவமார்க்கத்தனிமுதல் - சைவசமயக்கடவுள்; தேரார் - அறியாதவர்; அத்தொழிலிறைவரெல்லாம் - அம்மூவரும்; அஞ்சலிசிரமேற் கொண்டு - வணங்கி; வித்தக - ஞானமய; ஆறே - திருவுள்ளப்படி; வினைகளை - முத்தொழில்களையும்.

'நம்மவ ரவரே, மூவரென்றே யெம்பிரானொடும் எண்ணி விண்ணாண்டு மண்மேல், தேவரென்றே யிறுமாந்தென்ன பாவந்திரிதவரே' என்ற திருவாசகம் இச்செய்யுட்குப் பிரமாணம். (கஅ)
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சிவபரத்துவ நிச்சயம் - Page 2 Empty Re: சிவபரத்துவ நிச்சயம்

Post by நந்தி Sat Jul 24, 2010 12:38 am

திரிமூர்த்திகளுஞ் சிவபிரானிடமே ஒடுங்கித் தோன்றுவரென்பது.

அயனரி தன்னி லாவ னயன்றனி லரிதா னாவ
னயனரி யரனி லாவ ரரனரி யயரி லாவ
னியலிவை கற்ப பேத மீசுர மூர்த்தி தானே
யயனரி யரரைத் தன்பா லாக்கிமுன் னழிப்பான் பின்னர்.


(அ-ரை) ஆவன் - வெளிப்படுவான், ஒடுங்குவான்; இயல் இவை - இப்படி நிகழுகிற இவ்விரண்டும்; கற்பபேதம் - அவாந்தர கற்பங்களி லுண்டாகும் மாறுபாடுகள்; தன்பால் - தன்னிடத்திலிருந்து, தன்னிடத்தில்; ஆக்கி - வெளிப்படுத்தி; முன் - பிரதம சிருட்டியில்; அழிப்பான் - ஒடுக்குவான்; பின்னர் - சர்வ சங்காரத்தில்.

'ஏகோஹவை நாராயண ஆஸீந் நப்ரஹ்மா நேசாந:' என்ற மஹோப நிஷத்தும், 'நாராயணாத் ப்ரஹ்மா ஜாயதே நாராயணாத் ருத்ரோ ஜாயதே', 'ருத்ரோ மஹர்ஷிNeutral ஹிரண்ய கர்பம் பச்யதி ஜாயமாநம்' என்ற நாராயணோப நிஷத்தும், 'லலாடாத் கரோதஜோ ருத்ரோஜாயதே' என்ற ஸ¤பாலோப நிஷத்தும், மமாபிவிஷ்ணோர் ஜநகம்' என்ற சரபோநிஷத்தும், நாராயணாத்திரண கர்போஜாயதே' என்ற திரிபத்விபூதிமஹநாராயணோப நிஷத்தும், 'ப்ரஹ்மயோநிம்' என்ற கைவல்யோப நிஷத்தும், 'ஈசம் புருஷம் ப்ரஹ்மயோநிம்: என்ற முண்டகோப நிஷத்தும், 'ருத்ரோ மஹர்ஷிNeutral ஹிரண்யகர்பம் ஜநயாம ஸபூர்வம்', ' ருத்ரோ மஹர்ஷிNeutral ஹிரண்யகர்பம் பச்யதி ஜாயமாநம்', ப்ரஹ்மயோநிம் யோப்ரஹ்மாணம் விததாதிபூர்வம்' என்ற சுவேதாசுவத் ரோப நிஷத்தும், ஸர்வேச்வரம் - - சிவாச்யுதாம் போருஹ கர்ப பூருஹம்' என்ற நாரதபரிவ்ராஜகோபநிஷத்தும், 'சிவம் - - ஹரி ஹர ஹிரண்ய கர்ப ஸ்ருஷ்டாரம்' என்ற பஸ்மஜாபாஸோபநிஷத்தும். 'த்ரயஸ்தை காரணாத்மநோ| ஜாதாஸ் ஸாக்ஷ¡ந் மஹேச்வராதித்யுபக்ரம் யஸ் பஷ்ட முக்தம் தபஸாதோஷ யித்வாது பிதாம் பரமேச்வரம்| ப்ரஹ்ம நாராயணெள பூர்வம் ருத்ரம் கல்பாந்தரே ஸ்ருஜத்| கல்பாந்தரே புநர்ப்ரஹ்மா ருத்ர விஷ்ணு ஜக்நமய: விஷ்ணுச்சபகவாந் தத்வத் ப்ரஹ்மாணமஸ்ருஜத் ப்ரபு: | நாராயணம் புநர் ப்ரஹ்மா ப்ரஹ்மாணம் ச புநர்வ: | ஏவம் கல்பேஷ¤ கல்பேஷ¤ ப்ரஹ்ம விஷ்ணு மஹேச்வராNeutral பரஸ் பரஸ் மாஜ்ஜாயந்தே பரஸ்பரஜயைஷிணNeutral தத்தத் கல்பாந்த மதிக்ருத்ய மஹர்ஷிபி: | ப்ரபவ: கத்த்யதே தேஷாம் பரஸ்பர ஸமுத்பவா இதி' என்ற வாயு ஸம்ஹிதையும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள். (ககூ)
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சிவபரத்துவ நிச்சயம் - Page 2 Empty Re: சிவபரத்துவ நிச்சயம்

Post by நந்தி Sat Jul 24, 2010 12:48 am

திரிமூர்த்திகளையும் சிவபிரான் எளிதிற் சங்கரிப்பவ ரென்பது.

பார்தனை யாக்குந் தேவைப் பாற்கட லிறையைச் சூலஞ்
சேர்கர முதலை யீற்றிற் சிவபிரான் சங்க ரித்த
லார்கலி நீரை முற்று மாங்குறு வடவை யங்கி
யோர்கண மதனிற் சீறி யுண்பதற் கொப்பா மன்றே.


(அ-ரை) ஆர்கலி - கடல்; வடவை அங்கி - வடவாமுகாக்கினி.

'ப்ரஹ்மா விஷ்ணுச்ச ருத்ரச்ச ஸர்வேவாபூத ஜாதயNeutral நாசமேவாநுதா வந்திஸலிலா நீவபாடபம்' என்ற மஹோபநிஷத்து இச்செய்யுட்குப் பிரமாணம். (உ0)

நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சிவபரத்துவ நிச்சயம் - Page 2 Empty Re: சிவபரத்துவ நிச்சயம்

Post by நந்தி Sat Jul 24, 2010 12:50 am

மூன்று மூர்த்தியாகிய உருத்திரர் சிவபிரானை நோக்கித் தவஞ்செய்து அவரிடமிருந்து சிவநாம ரூபாதிகளைப் பெற்றாரென்பது.

மேதகு மூன்றா மூர்த்தி விருப்புடன் சதுர்த்தன் றன்னைப்
பாதம திறைஞ்சி நோற்றுப் பரித்திடப் பெற்றா னன்னா
னோதரு முருவும் பேரு முயர்மறை யதனா லந்தப்
பேதரை யபேத மாக்கிப் பேசலு மாங்காங் குண்டால்.


(அ-ரை) மேதகு - மேன்மையான; பரித்திட - தாங்க; பேதரை - மூன்றாமூர்த்தியையுஞ் சதுர்த்த மூர்த்தியையும்; அபேதம் ஆக்கி - ஒருவராக்கி மூன்றா மூர்த்தியே பரமென்று; ஆங்காங்கு - ஒவ்வோரிடத்தில்; பின் சில செய்யுட்களில் மும்மூர்த்திப் பிரஸ்தாபமே வருகிறது; ஆங்கும் உருத்திரனுக்கே பரத்துவம் உளதாதல் காண்க.

'தச் சக்த்யாதிஷ்டிதச்சச்வத்தச்சிஹ்நை ரபி சிஹ் நிதNeutral தந்நாம நாமாதத்ரூபஸ் தத்கார்ய கரணக்ஷமNeutral தத்துல்ய வ்யவஹாரச்சததாஜ்ஞா பரிபாலக:' என்ற வாயு ஸம்ஹிதை இச்செய்யுட்குப் பிரமாணம். (உக)
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சிவபரத்துவ நிச்சயம் - Page 2 Empty Re: சிவபரத்துவ நிச்சயம்

Post by நந்தி Sat Jul 24, 2010 12:51 am

உருத்திரரே சர்வத்துக்குங் காரண சொரூபரென்பது.

கண்ணுத லுருவ மாகிக் காரண மனைத்து மோங்குங்
கண்ணர விந்த மாவோன் காரிய மனைத்து மாவான்
மண்ணுறு கிரியை யெல்லா மலரவ னுருவா மென்னி
னெண்ணுவ ரானைச் சர்வ காரண னென்று மேலோர்.


(அ-ரை) கண் அரவிந்தமாவோன் - விஷ்ணு; மண் - உலகத்தில்.

'கார்யம் விஷ்ணு: க்ரியா ப்ரஹ்மா காரணம்து மகேச்வர:' என்ற ருத்ரஹ்ருதயோபநிஷத்தும், 'ஸர்வேசம் - - சிவம் - - ஸர்வகாரணம்' என்ற மண்டலப்ராஹ்மணோபநிஷத்தும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள். (உ உ)
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சிவபரத்துவ நிச்சயம் - Page 2 Empty Re: சிவபரத்துவ நிச்சயம்

Post by நந்தி Sat Jul 24, 2010 12:55 am

மோக்ஷ நாடிக்குத் தெய்வம் உருத்திரனே யென்பது.

நாடரு நாடி மூன்று ணாரண னிடையின் றெய்வம்
பீடுறு கமல வாசன் பிங்கலைத் தெய்வ மாவன்
வீடெனு மின்பைச் சீவர் மேவிட முதுகென் பூடே
யோடிடு சுழுனைத் தேவா யுறைபவன் சிவனே யாவான்.


(அ-ரை) நாடு அரு - ஆராய்தற்கரிய; பீடு - பெருமை; கமலவாசன் - பிரமன்; வீடெனும் இன்பை - முத்தியை; மேலிட - அடைய; என்பூடே - எலும்புக்கு நடுவில்.

'இடாவாமே ஸ்திதா பாகே தக்ஷ¢ணே பிங்களா ஸ்திதா|| ஸ¤ஷ¤ம்நா மத்ய தேசே' என்ற யோகசூடாமணியுபநிஷத்தும், 'ஸ¤ஷ¤ம்நாது பரே லீநா விரஜா ப்ரஹ்ம ரூபிணி| இடாதிஷ்டதி வாமேந பிங்களா தக்ஷ¢ணே நச' என்ற க்ஷ¤ரிகோபநிஷத்தும், 'ஸ¤ஷ¤ம்நாயா: சிவோ தேவ இடாயா தேவதா ஹரி: பிங்களா விரஞ்சி:' என்ற ஸ்ரீ ஜாபாலதர்சனோபநிஷத்தும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள். (உங)
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சிவபரத்துவ நிச்சயம் - Page 2 Empty Re: சிவபரத்துவ நிச்சயம்

Post by நந்தி Sat Jul 24, 2010 1:07 am

உருத்திரனே பிராமண தெய்வமென்பது.

பிறையணி பரமன் றானே பிராமண தெய்வ மாவா
னிறைதிரு வுடைய வேந்தாய் நிலவுவன் சங்க மேந்தி
துறைவல வணிகன் வேதன் சூத்திரன் மகவா னென்னிற்
பிறையணி பரனை யன்றிப் பிராமணர் வணங்க லாமோ.


(அ-ரை) பிறையணி பரமன் - சிவபிரான்; திரு - செல்வம்; வேந்து க்ஷத்திரியன்; சங்கம் ஏந்தி - விஷ்ணு; துறை - வியாபார வித்தை; வணிகன் - வைசியன்; வேதன் - பிரமன்; மகவான் - இந்திரன்.

'த்வம் தேவேஷ¤ ப்ராஹ்மணோ அஸி அஹம் மநுஷ்யேஷ¤ ப்ராஹ்ம ணோவை ப்ராஹ்மணமுபதாவத் யுபத்வா தாவாமி' என்ற ஸாமவேத சதபத ப்ராஹ்மணமும், 'விப்ரா விப்ரஸ்ய' என்ற சுவேதாசுவதரோபநிஷத்தும், 'ப்ரஹ்மணோதிபதி: - - சிவோம்' என்ற நாராயணோபநிஷத்தும், விப்ராணாம் தைவதம் சம்பு; க்ஷத்ரியாணாம்து மாதவNeutral வைச்யா நாந்து பவேத் ப்ரஹ்மா சூத்ராணாம் தேவேந்த்ர:' என்ற மனுஸ்மிருதியும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள். (உரு)
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சிவபரத்துவ நிச்சயம் - Page 2 Empty Re: சிவபரத்துவ நிச்சயம்

Post by நந்தி Sat Jul 24, 2010 1:09 am

[You must be registered and logged in to see this image.]
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சிவபரத்துவ நிச்சயம் - Page 2 Empty Re: சிவபரத்துவ நிச்சயம்

Post by நந்தி Sat Jul 24, 2010 1:11 am

உருத்திரனே சர்வலோக பிதாவென்பது.

ஒருதிரு மருவு மார்பற் குறுகுறி யோனி யாகு
முருமிகு பீசந் தானே யுருத்திரன் குறியா மன்னோ
ரிருவரு மருவிப் பாரை யீனுவ ரென்னி னந்தப்
பெருவிடை யுயர்ப்போ னன்றிப் பிதாவெவ னுலகுக் கெல்லாம்.


(அ-ரை) ஒரு திரு மருவு மார்பற்கு - விஷ்ணுவுக்கு; உறு - பொருந்திய; யோனி - பகம்; உரு - அழகு; பீசம் - லிங்கம்; மருவி - புணர்ந்து; ஈனுவர் - பெறுவர்; பெருவிடையுயர்ப்போன் - சிவபிரான்.

'ருத்ராத் ப்ரவர்ததே பீஜம் பிஜயோ நிர் ஜநார்தந:' என்ற ருத்ர ஹ்ருதயோபநிஷத்தும், 'பிதரம் மஹேரம்' என்ற சரபோப நிஷத்தும், 'இதம் பித்ரே - - ருத்ரஸ்ய வர்தநம்' என்ற ருக் மந்திரமும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள். (உசா)
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சிவபரத்துவ நிச்சயம் - Page 2 Empty Re: சிவபரத்துவ நிச்சயம்

Post by நந்தி Sat Jul 24, 2010 1:13 am

உருத்திரனே எல்லா வுலகிற்கும் ஆதிழல மென்பது.

உலகெனு மரத்தி னுச்சி யுலகினை யளந்தோ னாவ
னுலமெனு மரத்தின் மைய முந்தியிற் பிறந்தோ னாவ
னுலகெனு மரத்தின் வேர்க ளுருத்திர னாவ னென்னி
னுலகினை வாழ வைப்போ னுருத்திர னன்றி வேறார்.


(அ-ரை) உலகினை அளந்தோன் - விஷ்ணு; மையம் - அடிமரம்; உந்தியிற் பிறந்தோன் - பிரமன்.

'அஸ்ய த்ரைலோக்ய வ்ருக்ஷஸ்ய பூமெளவிடபசாகிநNeutral அக்ரம் மத்யம் ததா மூலம் விஷ்ணு ப்ரஹ்ம மஹேச்வரா:' என்ற ருத்ரஹ்ருதயோப நிஷத்து இச்செய்யுட்குப் பிரமாணம். (உஎ)
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சிவபரத்துவ நிச்சயம் - Page 2 Empty Re: சிவபரத்துவ நிச்சயம்

Post by நந்தி Sat Jul 24, 2010 1:14 am

உருத்திரனே தர்ம சொருபி யென்பது

போதின னுருவ மாகிப் பொருந்துநான் மறையின் ஞானஞ்
சீதர னுருவ மாகித் திரிவித வுலகந் தங்குந்
தீதக றரும மீசன் றிவ்விய வுருவா மந்தப்
போதமு முலகுங் கொண்டு புரிவதத் தருமங் கண்டாய்.


(அ-ரை) போதினன் - பிரமன்; சீதரன் - விஷ்ணு; திரிவித - மூன்றுவகை; போதம் - ஞானம்; கொண்டு - சாதனமாகக்கொண்டு; புரிவது - செய்யத் தக்கது; அத்தருமம் - அச் சிவசொரூப தருமம்.

'தர்மோ ருத்ரோ ஜகத் விஷ்ணு: ஸர்வஜ்ஞாநம் பிதாமஹ:' என்ற ருத்ர ஹ்ருதயோபநிஷத்து இச் செய்யுட்குப் பிரமாணம். (உஅ)
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சிவபரத்துவ நிச்சயம் - Page 2 Empty Re: சிவபரத்துவ நிச்சயம்

Post by நந்தி Sat Jul 24, 2010 1:19 am

[You must be registered and logged in to see this image.]
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சிவபரத்துவ நிச்சயம் - Page 2 Empty Re: சிவபரத்துவ நிச்சயம்

Post by நந்தி Sat Jul 24, 2010 1:24 am

உருத்திரனே பரமாத்மா வென்பது.

சங்கரன் பரம வான்மாச் சார்ங்கம தேந்தி யான்மாப்
பங்கய னந்த ரான்மா வெனமறை பகர்வ தோரா
ரிங்கொரு பரமான் மாவா யின்னொரு தேவை யேத்திச்
சங்கரன் றனக்குத் தோடஞ் சாற்றிலெந் நரகி வாழ்வார்.


(அ-ரை) சார்ங்கம தேந்தி - விஷ்ணு; பங்கயன் - பிரமன்; பகர்வது - சொல்வதை; ஓரார் - உணராதவர்; இன்னொரு தேவை - வேறெதேனும் ஒரு தெய்வத்தை; தோடம் - நிந்தை; சாற்றி - கூறி; வெம் - கொடிய; ஆழ்வார் - அழுந்துவார்.

'ஆத்மாநம் பரமாத்மாந மந்தராத்மாந மேவச| ஜ்ஞாத்வாத்ரிவித மாத்மா நம் பரமாத்மாந மாச்ரயேத் | அந்தராத்மா பவேத் ப்ரஹ்மா பரமாத்மா மஹேச்வரNeutral ஸர்வேஷா மேவ பூதாநாம் விஷ்ணு ராத்மா ஸநாதந:' - - என்ற ருத்ரஹ்ருதயோப நிஷத்தும், 'யாஸ்ய ப்ரதமாரேகா - - ஸ்வாத்மா - - ப்ரஜாபதிர் தேவோ தேவதேதி | யாஸ் யாத்விதீயாரேகா - - அந்தராத்மா - - விஷ்ணுர் தேவோ தேவதேதி | யாஸ்ய த்ரிதீயா ரேகா - - பரமாத்மா மஹா தேவோ தேவதேதி - -' என்ற ஜாபால்யுபநிஷத்தும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள். ஆத்ம நிலையும் அந்தராத்ம நிலையும் பிரம விஷ்ணுக்களுக்கிடையில் மாறிக் கொள்வதையும் பரமாத்ம நிலைமாத்திரம் சிவபிரானை விட்டு விலகாமையையும் அவ்வுப நிஷத்துக்களிற் காண்க. (உகூ)
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சிவபரத்துவ நிச்சயம் - Page 2 Empty Re: சிவபரத்துவ நிச்சயம்

Post by நந்தி Sat Jul 24, 2010 1:27 am

உருத்திரனே ஒப்புயர்வந்த பரம்பொருளென்பது

அப்பணி வேணித் தேவுக் கரியினைப் பிரமன் றன்னை
யொப்புட னுயர்ச்சி சொல்லே லும்பரிற் பிரமன் மேலோன்
திப்பிய விதியின் மேலோன் றிருமகள் கணவ னம்மாற்
கொப்புட னுயர்ச்சி யில்லா வுருத்திரன் மேலோன் றானே.


(அ-ரை) அப்பணி வேணித் தேவுக்கு - சிவபிரானுக்கு; உம்பரின் - தேவர்களைவிட; திப்பிய - திவ்விய; விதியின் - பிரமனைவிட.

'பராத் பரதரம் ப்ரஹ்மா தத்பராத் பரதோ ஹரிNeutral தத்பராத் பரதோ ஹீச: தஸ்மாத் துல்யோதிகோ நஹி' என்ற சரபோநிஷத்தும், 'தமீச் வராணாம் பரமம் மஹேச்வரம் - - நதத் ஸமச் சாப்யதிகச்ச த்ருச்யதே' என்ற சுவேதாசுவதரோபநிஷத்தும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள். (ங0)
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சிவபரத்துவ நிச்சயம் - Page 2 Empty Re: சிவபரத்துவ நிச்சயம்

Post by நந்தி Sat Jul 24, 2010 1:32 am

உருத்திரனே மற்றிருவரையுஞ் சங்கரிப்பா னென்பது.

மருத்திக ழலரோன் றன்னை வாலிய சோற தாக்கித்
திருத்திக ழுரவோன் றன்னைத் திப்பிய ரசமே யாக்கி
மிருந்துவை யூற வைத்த மெல்லிய காய்தா னாக்கி
யுருத்திர னுண்பா னெல்லா வுலகையு மொடுக்கு ஞான்றே.


(அ-ரை) மருத்திகழலரோன்றன்னை - பிரமனை; வாலிய - வெண்மையான; திருத்திகழுரவோன்றன்னை - விஷ்ணுவை; மிருத்துவை - எமனை; ஊறவைத்த மெல்லியகாய் - ஊறுகாய்; ஒடுக்கு ஞான்று - சங்கரிக்குங் காலத்தில்.

'யஸ்ய ப்ரஹ்ம ச க்ஷத்ரஞ் சோபேபவத வோதந: ம்ருத்யுர் யஸ்யோப ஸேசநம்' என்ற கடோப நிஷத்தும், 'த்ரயம்பகே நாநுஷ்டுபேந| ம்ருத்யுஞ்ஜயும் தர்சயதி' என்ற திரிபுராதாபிநியுடநிஷத்தும், 'ப்ரஹ்மாந் நந்து ரஸோ ஹரிஸ்து பசவாந் போக்தா மஹேச:' என்ற ஸித்தாந்த ஸாராவளியும். 'அந்நம் ப்ரஹ்மாரஸோ விஷ்ணுர் போக்தாச் சைவ மஹேச்வா:' என்ற மந்திரமும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள். ரசங் கலந்த சோற்றுக்கு ஊறுகாய் தொட்டுக்கொள்ளும் வழக்கம் செங்கற்பட்டு ஜில்லாவில் இப்போதும் உண்டு. (நக)
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சிவபரத்துவ நிச்சயம் - Page 2 Empty Re: சிவபரத்துவ நிச்சயம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 13 Previous  1, 2, 3, ... 11, 12, 13  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum