தமிழ் | Tamil | Forum
தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

கூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.

புகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.

Join the forum, it's quick and easy

தமிழ் | Tamil | Forum
தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

கூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.

புகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.
தமிழ் | Tamil | Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வணக்கம் என் பெயர் நாகராசன்.இரா
by rajan_1972 Fri Apr 10, 2020 7:20 pm

» சிறந்த பொழுதுபோக்கு இணையதளம்!
by pba Sat Jul 02, 2016 8:11 pm

» ஏற்றுமதி உரிமம் பெறும் விண்ணப்பம்
by tamilnews Tue Mar 24, 2015 8:00 pm

» மொபைல், டிடிஎச் ரீசார்ஜ் செய்யப் போறீங்களா? இந்த சலுகைகளைப் பாருங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:41 am

» மொபைல் ரீசார்ஜ் செய்து ஷாப்பிங் கூப்பன் இலவசமாக பெறுங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:38 am

» மெமரி கார்டு வாங்கப் போறீங்களா? 74% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:36 am

» அமேசானில் பெண்களுக்கான ஆடைகள் 70% வரை தள்ளுபடி !
by dsytamil Wed Jan 14, 2015 1:34 am

» அமேசானில் ஆண்களுக்கான ஆடைகள் 60% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:31 am

» லெனோவா டேப்ளட் 43% சலுகை விலையில் ரூ. 5949 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:28 am

» ப்ளிப்கார்ட் தளத்தில் சிறுவர்களுக்கான ஆடைகள் 70% வரை + 30% கூடுதல் தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:14 am

» அமேசான் தளத்தில் 50% தள்ளுபடி விலையில் மொபைல்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:13 am

» ரூ. 7499 மதிப்புள்ள மைக்ரோமேக்ஸ் ஏ1 ஆன்ட்ராய்டு மொபைல் இப்போது ரூ. 5499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:11 am

» ரூ. 19999 மதிப்புள்ள நோக்கியா லூமியா 625 மொபைல் ரூ. 7499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:10 am

» ப்ராண்டட் காலணிகளுக்கு 70% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:08 am

» ஆன்லைன் ஷாப்பிங்கில் ப்ரிண்டர்களுக்கு 33% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:06 am

» ஆன்லைனில் பொருள் வாங்கப் போறீங்களா? 70% வரை பணத்தை சேமியுங்கள்!
by dsytamil Tue Jan 13, 2015 12:30 am

» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...!
by sathikdm Sun Oct 19, 2014 4:45 pm

» சிறுதொழில் செய்பவர்கள் இணையதளம் தொடங்க வேண்டியதின் அவசியம்!
by pba Sat Sep 27, 2014 12:58 am

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:47 pm

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:42 pm

» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
by santhoshpart Wed Aug 27, 2014 4:22 pm

» “சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா!”
by santhoshpart Wed Aug 13, 2014 3:54 pm

» Daily Rs.500/- and Above
by K.MARIAPPAN Wed Jul 30, 2014 12:01 pm

» http://www.neobux.com/?r=narasimmant
by Navaneethakrishnan Wed Jul 02, 2014 3:41 pm

» வணக்கம் என் பெயர் வேணு
by A.Venu Fri Jun 27, 2014 10:10 am

» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?
by sathikdm Wed Jun 18, 2014 3:24 pm

» தமிழ் மொழி மூல கல்வி இணையதளம்
by afdhaal Wed May 28, 2014 9:22 pm

» வருக. வருக. வணக்கம்.
by மகி Mon May 12, 2014 3:55 pm

» அறிமுகம் -விநாயகா செந்தில்.
by மகி Mon May 12, 2014 3:53 pm

» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....!
by vinayagasenthil Sat May 10, 2014 9:04 pm

பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

வார ராசி பலன் - 18 ஜூலை 2011 முதல் 25 ஜூலை 2011 வரை!

Go down

வார ராசி பலன் - 18 ஜூலை 2011 முதல் 25 ஜூலை 2011 வரை! Empty வார ராசி பலன் - 18 ஜூலை 2011 முதல் 25 ஜூலை 2011 வரை!

Post by மகி Mon Jul 18, 2011 8:57 pm

மேஷம்:

சிறுவயதிலேயே பலவித அனுபவங்களால் பக்குவப்பட்ட நீங்கள், பகைவரையும் நேசிப்பவர்கள். புதன் 4-ல் நிற்பதால் புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். நட்பு வட்டம் விரியும். சூரியன் 4-ல் அமர்ந்ததால் அரசு காரியங்கள் விரைந்து முடியும். வீட்டை விரிவுப்படுத்திக் கட்டுவீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். சகோதரர் ஓடி வந்து உதவுவார். டி. வி. , ஃப்ரிட்ஜ் போன்ற சாதனங்கள் வாங்குவீர்கள்-. உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். அரசியல்வாதிகளே! உங்களின் கோரிக்கையை மேலிடத்தில் ஏற்பர். கன்னிப்பெண்களே! கசந்த காதல் இனிக்கும். புது வேலைக் கிடைக்கும். சர்ப்ப கிரகங்களின் சஞ்சாரம் சரியில்லாததால் வீண் செலவு, வாகன விபத்து, இனந்தெரியாத கவலைகள் வந்து நீங்கும். வியாபாரத்தில் புது யுக்திகளால் தேங்கிக் கிடந்த சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். உத்‌தியோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமைக் கூடும். சக ஊழியர்களுடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். கலைத்துறையினர்களே! சம்பள பாக்கி கைக்கு வரும். மூளை பலத்தால் முன்னேறும் வாரமிது. அதி‌ர்ஷ்ட தேதிகள் : 18, 19, 21 அதி‌ர்ஷ்ட எண்கள் : 5, 8 அதி‌ர்ஷ்ட நிறங்கள் : ப்ரவுன், ஊதா அதி‌ர்ஷ்ட திசை : தென்மேற்கு.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

வார ராசி பலன் - 18 ஜூலை 2011 முதல் 25 ஜூலை 2011 வரை! Empty Re: வார ராசி பலன் - 18 ஜூலை 2011 முதல் 25 ஜூலை 2011 வரை!

Post by மகி Mon Jul 18, 2011 8:58 pm

ரிஷபம்:

தன்கையே தனக்கு உதவி என்று வாழும் நீங்கள், நெஞ்சுறுதியுடன் பிரச்சனைகளை சந்திப்பவர்கள். இராஜ கிரகங்களான குருவும், சுக்ரனும் உங்கள் ராசிக்கு முன்னும், பின்னும் நிற்பதால் உங்கள் போக்கில் கொஞ்சம் மாற்றம் செய்வீர்கள். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். ஓரளவு பணம் வரும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். சூரியன் 3-ல் அமர்ந்ததால் கோபதாபம் குறையும். தடைப்பட்ட அரசு வேலைகள் உடனே முடியும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். பழைய சொந்த பந்தங்கள் தேடி வரும். மனைவிவழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். 24-ந் தேதி வரை செவ்வாய் ராசிக்குள் நிற்பதால் சில நேரங்களில் தலைச்சுற்றல், தடுமாற்றம் வரும். உடன்பிறந்தவர்களால் சங்கடங்கள் வரும். ராசிக்கு 12-ல் குரு மறைந்திருப்பதால் மறைமுக எதிர்ப்பு, வேலைச்சுமை வந்து செல்லும். ராசிக்குள் கேதுவும், 7-ல் ராகுவும் நிற்பதால் வீண் சந்தேகம், அலைச்சல், செறிமானக் கோளாறு வந்துச் செல்லும். கன்னிப் பெண்களே! முடிவெடுப்பதில் அவசரம் வேண்டாம். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் அதிரடியான அறிவிப்புகள் மூலம் போட்டிகளை சமாளித்து லாபம் ஈட்டுவீர்கள். உத்‌தியோகத்தில் சில சூட்சுமங்களைக் கற்றுக் கொள்வீர்கள். கலைத்துறையினர்களே! புதுமையாக சில படைப்புகளை வெளியிட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறும் வாரமிது. அதி‌ர்ஷ்ட தேதிகள் : 20, 21, 22 அதி‌ர்ஷ்ட எண்கள் : 3, 7 அதி‌ர்ஷ்ட நிறங்கள் : ஆலிவ்பச்சை, மஞ்சள் அதி‌ர்ஷ்ட திசை : வடகிழக்கு.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

வார ராசி பலன் - 18 ஜூலை 2011 முதல் 25 ஜூலை 2011 வரை! Empty Re: வார ராசி பலன் - 18 ஜூலை 2011 முதல் 25 ஜூலை 2011 வரை!

Post by மகி Mon Jul 18, 2011 8:59 pm

மிதுனம்:

நகைச்சுவையாகவும், நாசூக்காகவும் பேசும் நீங்கள், நாலும் தெரிந்தவர்கள். சூரியன் ராசியை விட்டு விலகியதால் எதார்த்தமான முடிவுகள் எடுப்பீர்கள். மனஇறுக்கம் நீங்கும். குடும்பத்தில் அமைதி பிறக்கும். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் உண்டாகும். ராசிநாதன் புதன் வலுவடைந்திருப்பதால் முயற்சிகள் பலிதமாகும். பூர்வீக சொத்து கைக்கு வரும். உறவினர்களால் அனுகூலம் உண்டு. கோவில் கும்பாபிஷேகத்திற்கு நன்கொடை வழங்குவீர்கள். பூர்வ புண்யாதிபதி சுக்ரன் வலுவாக இருப்பதால் வாகனத்தை மாற்றுவீர்கள். குழந்தை பாக்யம் கிடைக்கும். தாய்வழி உறவினர்களுடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கும். வீட்டில் கூடுதலாக ஒரு தளம் கட்டுவீர்கள். செவ்வாய் 12-ல் நிற்பதால் திடீர் பயணங்கள் அதிகரிக்கும். சகோதரங்களுடன் சண்டை வரும். வழக்கில் தீர்ப்பு தள்ளிப் போகும். அரசியல்வாதிகளே! கட்சி மேலிடத்தில் இருந்து வந்த பூசல்கள் மறையும். கன்னிப் பெண்களே! வருங்காலம் குறித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். பழைய பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். உத்யாகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். கலைத்துறையினர்களே! உதாசினப் படுத்திய நிறுவனமே உங்களை அழைத்துப் பேசும். கடந்த கால அனுபவங்களால் தெளிவுப் பெறும் வாரமிது. அதி‌ர்ஷ்ட தேதிகள் : 21, 22, 24 அதி‌ர்ஷ்ட எண்கள் : 2, 4 அதி‌ர்ஷ்ட நிறங்கள் : மெரூண், கிரே அதி‌ர்ஷ்ட திசை : வடக்கு.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

வார ராசி பலன் - 18 ஜூலை 2011 முதல் 25 ஜூலை 2011 வரை! Empty Re: வார ராசி பலன் - 18 ஜூலை 2011 முதல் 25 ஜூலை 2011 வரை!

Post by மகி Mon Jul 18, 2011 9:00 pm

கடகம்:

லாபமோ, நஷ்டமோ தோழமைக்காக கடைசி வரை தோள் கொடுப்பவர்கள் நீங்கள் தான். உங்கள் ராசிக்குள்ளேயே புதன் நிற்பதால் சமயோஜித புத்தியால் சாதிப்பீர்கள். வீட்டை கட்டி முடிக்க எதிர்பார்த்த வங்கிக் கடன் உதவி கிடைக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். பிள்ளைகளின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொண்டு வலிய வந்துப் பேசுவார்கள். நண்பர்கள் உதவுவார்கள். சூரியன் ராசிக்குள் நுழைந்திருப்பதால் கண் எரிச்சல், அடி வயிற்றில் வலி, முன்கோபம் வந்து நீங்கும். குரு 10-ல் நிற்பதால் அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதி மொழியும் தர வேண்டாம். கைமாற்றாக கேட்டிருந்த பணமும் கிடைக்கும். சொத்துப் பிரச்னைகள் தீரும். அரசியல்வாதிகளே! தலைமையின் ஆணையை மீறி தனி ஆவர்த்தனம் வேண்டாம். 18, 19 மற்றும் 20-ந் தேதி காலை 11 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிர்பார்த்தவை தாமதமாக முடியும். கன்னிப்பெண்களே! சிலரின் ஆசை வார்த்தைகளை நம்பி காதல் வயப்படாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களிடம் கனிவாகப் பேசி வேலை வாங்குவது நல்லது. உத்‌தியோகத்தில் சக ஊழியர்களால் உங்கள் பெயர் கெடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். கலைத்துறையினர்களே! கிசுகிசுத் தொந்தரவுகள், வதந்திகளெல்லாம் வந்தாலும் அஞ்சமாட்டீர்கள். இங்கிதமான பேச்சால் வெற்றி பெறும் வாரமிது. அதி‌ர்ஷ்ட தேதிகள் : 23, 24, 25 அதி‌ர்ஷ்ட எண்கள் : 1, 9 அதி‌ர்ஷ்ட நிறங்கள் : ரோஸ், சில்வர்கிரே அதி‌ர்ஷ்ட திசை : கிழக்கு.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

வார ராசி பலன் - 18 ஜூலை 2011 முதல் 25 ஜூலை 2011 வரை! Empty Re: வார ராசி பலன் - 18 ஜூலை 2011 முதல் 25 ஜூலை 2011 வரை!

Post by மகி Mon Jul 18, 2011 9:01 pm

சிம்மம்:

இடம், பொருள், ஏவல் அறிந்து எதையும் செய்யும் நீங்கள், யாருக்காகவும் கொள்கைகளை விட்டுக் கொடுக்க மாட்டீர்கள். ராகுவாலும், கேதுவாலும் வேலைச்சுமையும், அலைச்சலும் இருந்தாலும் குருபகவான் வலுவாக இருப்பதால் கஷ்ட நஷ்டங்கள் குறையும். தன்னம்பிக்கையால் சாதிப்பீர்கள். வேலைக் கிடைக்கும். அடகில் இருந்த நகையை மீட்பீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். மகனுக்கு அயல்நாட்டில் உயர்கல்வி, வேலை வாய்ப்பு அமையும். மகள் உங்களைப் புரிந்துக் கொள்வாள். திடீர் பயணங்கள் உண்டு. சுக்ரன் லாப வீட்டில் நிற்பதால் பணம் வரும். வீட்டை அழகுப்படுத்துவீர்கள். சகோதரிக்கு தள்ளிப் போன திருமணம் முடியும். வழக்கு சாதகமாகும். சொந்த-பந்தங்களின் அன்புத் தொல்லை குறையும். சூரியன் 12-ல் மறைந்திருப்பதால் யாருக்காவும் ஜாமீன் கையெழுத்திடாதீர்கள். அரசு காரியங்கள் இழுபறியாகும். 20-ந் தேதி காலை 11 மணி முதல் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் சந்திராஷ்டமம் நடைபெறுவதால் அலைச்சல் அதிகரிக்கும். கன்னிப் பெண்களே! உங்களின் புது முயற்சிகளை பெற்றோர் ஆதரிப்பார். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்‌தியோகத்தில் செல்வாக்குக் கூடும். கலைத்துறையினர்களே! எதிர்பார்த்த புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். எதையும் சாதித்துக் காட்டும் வாரமிது. அதி‌ர்ஷ்ட தேதிகள் : 18, 19, 24 அதி‌ர்ஷ்ட எண்கள் : 4, 6 அதி‌ர்ஷ்ட நிறங்கள் : சிவப்பு, வெள்ளை அதி‌ர்ஷ்ட திசை : வடமேற்கு.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

வார ராசி பலன் - 18 ஜூலை 2011 முதல் 25 ஜூலை 2011 வரை! Empty Re: வார ராசி பலன் - 18 ஜூலை 2011 முதல் 25 ஜூலை 2011 வரை!

Post by மகி Mon Jul 18, 2011 9:02 pm

கன்னி:

கலைகளில் ஆர்வம் உள்ள நீங்கள், எதிலும் புதுமையையே விரும்புவீர்கள். உங்கள் ராசிநாதன் புதன் லாப வீட்டில் நிற்பதால் உங்களின் நிர்வாகத் திறன் அதிகரிக்கும். டென்ஷன் குறையும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். குடும்பத்தில் நிம்மதி உண்டு. பிள்ளைகளிடம் குவிந்துக் கிடக்கும் திறமைகளை இனம் கண்டறிந்து வளர்ப்பீர்கள். நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் உதவுவார்கள். பூர்வீக சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். வழக்குகளில் சுமுகத் தீர்வு கிடைக்கும். எதிர்பார்த்த அயல்நாட்டுப் பயணம் தேடி வரும். செவ்வாய் 9-ம் வீட்டில் நிற்பதால் சேமிப்புகள் கரையும். தந்தைக்கு இரத்த அழுத்தம், முதுகு வலி வந்துப் போகும். உடன்பிறந்தவர்களால் இருந்த பிரச்னைகள் நீங்கும். குரு 8-ல் மறைந்திருப்பதால் வேலைச்சுமை, வீண் வதந்திகள், பணப்பற்றாக்குறை வந்து செல்லும். கன்னிப் பெண்களே! தடைப்பட்ட உயர்கல்வியை தொடர்வீர்கள். 23, 24 ஆகிய தேதிகளில் சந்திராஷ்டமம் நடப்பதால் பொறுமையுடன் செயல்படப்பாருங்ள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். புது முதலீடுகள் செய்வது பற்றி யோசிப்பீர்கள். உத்‌தியோகத்தில் உயரதிகாரி சில சமயங்களில் உங்களை கடிந்துப் பேசினாலும் அன்பாக நடந்து கொள்வார். கலைத்துறையினர்களே! மூத்த கலைஞர்களின் வழிகாட்டல் மூலம் வெற்றியடைவீர்கள். பழைய பிரச்சனைகளிலிருந்து விடுபடும் வாரமிது. அதி‌ர்ஷ்ட தேதிகள் : 18, 20, 22 அதி‌ர்ஷ்ட எண்கள் : 3, 9 அதி‌ர்ஷ்ட நிறங்கள் : மயில் நீலம், பழுப்பு அதி‌ர்ஷ்ட திசை : மேற்கு.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

வார ராசி பலன் - 18 ஜூலை 2011 முதல் 25 ஜூலை 2011 வரை! Empty Re: வார ராசி பலன் - 18 ஜூலை 2011 முதல் 25 ஜூலை 2011 வரை!

Post by மகி Mon Jul 18, 2011 9:02 pm

துலாம்:

சமூக நலனில் அதிக அக்கறை கொண்ட நீங்கள் அவ்வப்போது அநியாயத்திற்கு எதிராக குரல் கொடுப்பவர்கள். உங்களின் பாக்யாதிபதி புதன் கேந்திர பலன் பெற்று வலுவாக நிற்பதால் சவாலான காரியங்களையும் செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். உறவினர்கள் உதவுவார்கள். நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். சூரியன் 10-ல் அமர்ந்ததால் இழுபறி நிலை மாறும். எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வீடு வாங்குவது, கட்டுவதற்கு எதிர்பார்த்த வங்கிக் கடன் உதவி கிடைக்கும். 8-ல் செவ்வாயும் கேதுவும் நிற்பதால் சிறுசிறு நெருப்பு காயங்கள், சகோதர வகையில் பிரச்னைகள் வந்து நீங்கும். இரத்த அழுத்தம் அதிகரிக்கும். மனைவியுடன் கருத்து மோதல்கள் வரும். விரையச் சனி தொடர்வதால் இழப்பு, ஏமாற்றம், கடன் தொந்தரவுகள் வந்து நீங்கும். ராகு 2-ல் நிற்பதால் அநாவசியப் பேச்சை தவிர்ப்பது நல்லது. அரசியல்வாதிகளே! கட்சியில் மேல்மட்டத்தில் மதிக்கப்படுவீர்கள். கன்னிப் பெண்களே! பெற்றோர் உங்களின் உணர்வுகளை புரிந்து கொள்வார்கள். வியாபாரத்தில் ஏற்றுமதி மூலம் ரெட்டிப்பு லாபம் உண்டு. வாடிக்கையாளர்களின் வருகை அதிகரிக்கும். உத்‌தியோகத்தில் உயர்வு உண்டு. சக ஊழியர்களுடன் இருந்த பனிப்போர் நீங்கும். கலைத்துறையினர்களே! உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். தன்னம்பிக்கையால் சாதிக்கும் வாரமிது. அதி‌ர்ஷ்ட தேதிகள் : 21, 23, 24 அதி‌ர்ஷ்ட எண்கள் : 5, 7 அதி‌ர்ஷ்ட நிறங்கள் : க்ரீம் வெள்ளை, பிங்க் அதி‌ர்ஷ்ட திசை : தென்கிழக்கு.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

வார ராசி பலன் - 18 ஜூலை 2011 முதல் 25 ஜூலை 2011 வரை! Empty Re: வார ராசி பலன் - 18 ஜூலை 2011 முதல் 25 ஜூலை 2011 வரை!

Post by மகி Mon Jul 18, 2011 9:03 pm

விருச்சிகம்:

மனிதநேயம் அதிகமுடைய நீங்கள் மன்னிக்கும் குணமுள்ளவர்கள். சுக்ரன் 8-ல் நிற்பதால் புதிய எண்ணங்கள் மனதில் உதயமாகும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் தொடர்பு கிடைக்கும். பெரிய பொறுப்புகள், பதவிகள் தேடி வரும். குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர் பிள்ளைகளுக்கு எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் இடம் கிடைக்கும். புதன் வலுவாக இருப்பதால் புரோக்கரேஜ், கமிஷன் மூலம் பணம் வரும். பூர்வீகச் சொத்தை புதுபிப்பீர்கள். நண்பர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். ராசிநாதன் செவ்வாய் ராசியைப் பார்த்துக் கொண்டே இருப்பதால் வீடு, மனை வாங்குவது விற்பது விரைந்து முடியும். சகோதரரின் மனசு மாறும். ஆனால் கேதுவுடன் செவ்வாய் நிற்பதால் வீண் பழி, தாழ்வுமனப்பான்மை, வேலைச்சுமை வந்து செல்லும். சூரியன் 9-ல் அமர்ந்ததால் தந்தைக்கு நெஞ்சு வலி, செறிமானக் கோளாறு வந்து விலகும். அரசு காரியங்கள் இழுபறியாகும். குருபகவான் 6-ல் மறைந்திருப்பதால் வீண் சந்தேகம், மறைமுக விமர்சனங்கள் வரக்கூடும். கன்னிப் பெண்களே! பெற்றோரின் ஆதரவுக் கிட்டும். பிரபலங்களின் உதவியால் வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். வேலையாட்களிடம் கொஞ்சம் கண்டிப்பாக இருங்கள். உத்‌தியோகத்தில் உங்களை குறை சொல்லிக் கொண்டிருந்த உயரதிகாரி வலிய வந்து பேசுவார். வெளிச்சத்திற்கு வரும் வாரமிது. அதி‌ர்ஷ்ட தேதிகள் : 20, 21, 24 அதி‌ர்ஷ்ட எண்கள் : 6, 8 அதி‌ர்ஷ்ட நிறங்கள் : சில்வர்கிரே, மஞ்சள் அதி‌ர்ஷ்ட திசை : தெற்கு.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

வார ராசி பலன் - 18 ஜூலை 2011 முதல் 25 ஜூலை 2011 வரை! Empty Re: வார ராசி பலன் - 18 ஜூலை 2011 முதல் 25 ஜூலை 2011 வரை!

Post by மகி Mon Jul 18, 2011 9:04 pm

தனுசு:

எல்லாம் தெரிந்திருந்தாலும் அடக்கமாக இருக்கும் நீங்கள், சண்டை சச்சரவு என வந்துவிட்டால் பதுங்கமாட்டீர்கள். உங்கள் ராசியைப் பார்த்துக் கொண்டிருக்கும் சூரியன் 8-ல் மறைந்ததால் முன்கோபம் விலகும். உங்களின் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். அரசியலில் செல்வாக்குக் கூடும். மனைவியுடன் இருந்த மோதல்கள் நீங்கும். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். கண்டும் காணாமல் சென்று கொண்டிருந்த உறவினர்கள் வலிய வந்துப் பேசுவார்கள். இளைய சகோதரருடன் இருந்த மனவருத்தம் நீங்கும். பாதியில் முடங்கிக் கிடந்த வீடு கட்டும் பணி முழுமையடையும். சுக்ரன் 7-ல் நிற்பதால் அழகு, ஆரோக்யம் கூடும். எதிரிகளால் ஆதாயம் உண்டு. விலை உயர்ந்த ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். 6-ல் செவ்வாய் வலுவாக அமர்ந்திருப்பதால் வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். ஆனால் பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். தாய்வழி சொத்துகள் கைக்கு வரும். அரசியல்வாதிகளே! பெரிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். கன்னிப் பெண்களே! திருமணத் தடை நீங்கும். வியாபாரத்தில் கூடுதலாக முதலீடு செய்வீர்கள். பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்‌தியோகத்தில் ஒளிவுமறைவின்றி நேரடியாகப் பேசுவதால் மேலதிகாரி உங்களின் துணிச்சலைப் பாராட்டுவார். கலைத்துறையினர்களே! உங்களின் படைப்புகளை அரசு கௌரவிக்கும். வெற்றிகள் தொடரும் வாரமிது. அதி‌ர்ஷ்ட தேதிகள் : 18, 19, 20 அதி‌ர்ஷ்ட எண்கள் : 2, 8 அதி‌ர்ஷ்ட நிறங்கள் : அடர்நீலம், ஆரஞ்சு அதி‌ர்ஷ்ட திசை : வடக்கு.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

வார ராசி பலன் - 18 ஜூலை 2011 முதல் 25 ஜூலை 2011 வரை! Empty Re: வார ராசி பலன் - 18 ஜூலை 2011 முதல் 25 ஜூலை 2011 வரை!

Post by மகி Mon Jul 18, 2011 9:05 pm

மகரம்:

தாராளமாக தர்மம் செய்யும் நீங்கள், பழைய கலைப் பொருட்களை பாதுகாப்பவர்கள். புதன் உங்கள் ராசியைப் பார்த்துக் கொண்டிருப்பதால் அடிமனசில் இருந்த போராட்டம் நீங்கும். உறவினர்களின் ஆதரவுக் கிட்டும். புதிய நண்பர்களின் அறிமுகத்தால் உற்சாகமடைவீர்கள். 6-ல் சுக்ரன் மறைந்திருப்பதால் கணவன்-மனைவிக்குள் ஈகோ பிரச்னைகள் வந்து நீங்கும். வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். 5-ல் செவ்வாய் நிற்பதால் பிள்ளைகள் கோபப்படுவார்கள். கர்ப்பிணிப் பெண்கள் நீண்ட தூரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. வீடு வாங்குவது, விற்பதில் அவசரம் வேண்டாம். ராசிநாதன் சனிபகவான் வலுவாக அமர்ந்திருப்பதால் பிரச்னைகளை எதிர்கொள்ளும் ஆற்றல் பிறக்கும். ஹிந்தி, தெலுங்கு பேசுபவர்களால் ஆதாயம் உண்டு. சூரியன் 7-ல் நுழைந்திருப்பதால் மனைவிக்கு சிறுசிறு அறுவை சிகிச்சைகள் வரக்கூடும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். கன்னிப் பெண்களே! பெற்றோரின் ஆலோசனைக்கு செவி சாயுங்கள். வியாபாரத்தில் ஆழம் தெரியாமல் காலை விடாதீர்கள். உத்‌தியோகத்தில் முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். கலைத்துறையினர்களே! பெரிய வாய்ப்புக்காக காத்திருக்காமால் கிடைக்கின்ற வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளப் பாருங்கள். விட்டுக் கொடுக்க வேண்டிய வாரமிது. அதி‌ர்ஷ்ட தேதிகள் : 20, 21, 22 அதி‌ர்ஷ்ட எண்கள் : 4, 6 அதி‌ர்ஷ்ட நிறங்கள் : இளம்சிவப்பு, வெளிர்நீலம் அதி‌ர்ஷ்ட திசை : தென்மேற்கு.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

வார ராசி பலன் - 18 ஜூலை 2011 முதல் 25 ஜூலை 2011 வரை! Empty Re: வார ராசி பலன் - 18 ஜூலை 2011 முதல் 25 ஜூலை 2011 வரை!

Post by மகி Mon Jul 18, 2011 9:06 pm

கும்பம்:

எதார்த்தமாகப் பேசும் நீங்கள், அவ்வப்போது கற்பனையில் மூழ்குவதுண்டு. சூரியன் 5-ம் வீட்டை விட்டு விலகி 6-ல் அமர்ந்திருப்பதால் இழுபறி நிலை மாறும். மறைமுக எதிரிகளை கண்டறிந்து ஒதுக்குவீர்கள். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். நாடாளுபவர்களால் ஆதாயமடைவீர்கள். குடும்பத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி தங்கும். பூர்வீக சொத்துப் பிரச்னை தீரும். வீட்டை விரிவுப்படுத்திக் கட்டுவீர்கள். புதன் 6-ல் மறைந்திருப்பதால் நண்பர்கள், உறவினர்களுடன் உரிமையில் வரம்பு மீறிப் பேச வேண்டாம். 4-ல் செவ்வாய் நிற்பதால் வேலைச்சுமை, அசிடிட்டி தொந்தரவு, தூக்கமின்மை வந்து செல்லும். சொத்துப் பிரச்னைக்கு சுமுக தீர்வு காண்பது நல்லது. அஷ்டமத்துச் சனி தொடர்வதால் அநாவசியமாக அடுத்தவர்கள் விவகாரங்களில் தலையிட வேண்டாம். அரசியல்வாதிகளே! கட்சியின் மூத்த உறுப்பினர்களைச் சந்தித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். கன்னிப் பெண்களே! பரபரப்புடன் காணப்படுவீர்கள். வியாபாரம் சுமாராக இருக்கும். வேலையாட்களின் தொந்தரவுகளை விட்டுப் பிடிப்பது நல்லது. உத்‌தியோகத்தில் சின்ன சின்ன இடர்பாடுகளை சமாளிக்க வேண்டியிருக்கும். சிக்கனம் தேவைப்படும் வாரமிது. அதி‌ர்ஷ்ட தேதிகள் : 21, 22, 26 அதி‌ர்ஷ்ட எண்கள் : 4, 5 அதி‌ர்ஷ்ட நிறங்கள் : பிஸ்தாபச்சை, கிரே அதி‌ர்ஷ்ட திசை : தெற்கு.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

வார ராசி பலன் - 18 ஜூலை 2011 முதல் 25 ஜூலை 2011 வரை! Empty Re: வார ராசி பலன் - 18 ஜூலை 2011 முதல் 25 ஜூலை 2011 வரை!

Post by மகி Mon Jul 18, 2011 9:07 pm

மீனம்:

முடிவுகளைப் பற்றி கவலைப்படாத நீங்கள், நியாயத்திற்காக மோதிப்பார்ப்பவர்கள். செவ்வாய் வலுவாக அமர்ந்திருப்பதால் எதிர்பாராத வெற்றி கிட்டும். பெரிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். சகோதர வகையில் நன்மை உண்டு. வங்கியில் அடமானமாக வைத்திருந்த வீட்டுப் பத்திரத்தை மீட்பீர்கள். பழைய வாகனத்தை மாற்றி புதுசு வாங்குவீர்கள். உங்கள் ரசனைக்கேற்ப புது வீடு வாங்குவீர்கள். ராசிநாதன் குருபகவான் வலுவாக அமர்ந்திருப்பதால் திடீர் யோகம் உண்டாகும். சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதைக் கிடைக்கும். உறவினர்கள் உங்களைப் பற்றி பெருமையாக பேசுவார்கள். கோவில் விழாக்களை முன்னின்று நடத்துவீர்கள். 17-ந் தேதி முதல் சூரியன் 5-ல் நுழைவதால் பிள்ளைகளால் பிரச்னை, நிம்மதியின்மை, டென்ஷன் வந்துப் போகும். கர்ப்பிணிப் பெண்கள் கவனமுடன் செயல்படப்பாருங்கள். 5-ல் புதன் நிற்பதால் மனைவிவழியில் செலவுகள், அலைச்சல் வந்து நீங்கும். அரசியல்வாதிகளே! வாக்குறுதிகளை நிறைவேற்றப் போராட வேண்டி வரும். கன்னிப் பெண்களே! புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். கவிதை, கட்டுரைகளில் ஆர்வம் பிறக்கும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். வேலையாட்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். உத்‌தியோகத்தில் அதிகாரிகள் தொடர்ந்து உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். கலைத்துறையினர்களே! புகழடைவீர்கள். தடுமாற்றம், தயக்கம் நீங்கி தைரியம் கூடும் வாரமிது. அதி‌ர்ஷ்ட தேதிகள் : 23, 24, 26 அதி‌ர்ஷ்ட எண்கள் : 1, 8 அதி‌ர்ஷ்ட நிறங்கள் : மெரூண், மஞ்சள் அதி‌ர்ஷ்ட திசை : மேற்கு.

நன்றி: வெப்துனியா.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

வார ராசி பலன் - 18 ஜூலை 2011 முதல் 25 ஜூலை 2011 வரை! Empty Re: வார ராசி பலன் - 18 ஜூலை 2011 முதல் 25 ஜூலை 2011 வரை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum