தமிழ் | Tamil | Forum
தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

கூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.

புகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.

Join the forum, it's quick and easy

தமிழ் | Tamil | Forum
தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

கூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.

புகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.
தமிழ் | Tamil | Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வணக்கம் என் பெயர் நாகராசன்.இரா
by rajan_1972 Fri Apr 10, 2020 7:20 pm

» சிறந்த பொழுதுபோக்கு இணையதளம்!
by pba Sat Jul 02, 2016 8:11 pm

» ஏற்றுமதி உரிமம் பெறும் விண்ணப்பம்
by tamilnews Tue Mar 24, 2015 8:00 pm

» மொபைல், டிடிஎச் ரீசார்ஜ் செய்யப் போறீங்களா? இந்த சலுகைகளைப் பாருங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:41 am

» மொபைல் ரீசார்ஜ் செய்து ஷாப்பிங் கூப்பன் இலவசமாக பெறுங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:38 am

» மெமரி கார்டு வாங்கப் போறீங்களா? 74% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:36 am

» அமேசானில் பெண்களுக்கான ஆடைகள் 70% வரை தள்ளுபடி !
by dsytamil Wed Jan 14, 2015 1:34 am

» அமேசானில் ஆண்களுக்கான ஆடைகள் 60% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:31 am

» லெனோவா டேப்ளட் 43% சலுகை விலையில் ரூ. 5949 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:28 am

» ப்ளிப்கார்ட் தளத்தில் சிறுவர்களுக்கான ஆடைகள் 70% வரை + 30% கூடுதல் தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:14 am

» அமேசான் தளத்தில் 50% தள்ளுபடி விலையில் மொபைல்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:13 am

» ரூ. 7499 மதிப்புள்ள மைக்ரோமேக்ஸ் ஏ1 ஆன்ட்ராய்டு மொபைல் இப்போது ரூ. 5499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:11 am

» ரூ. 19999 மதிப்புள்ள நோக்கியா லூமியா 625 மொபைல் ரூ. 7499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:10 am

» ப்ராண்டட் காலணிகளுக்கு 70% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:08 am

» ஆன்லைன் ஷாப்பிங்கில் ப்ரிண்டர்களுக்கு 33% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:06 am

» ஆன்லைனில் பொருள் வாங்கப் போறீங்களா? 70% வரை பணத்தை சேமியுங்கள்!
by dsytamil Tue Jan 13, 2015 12:30 am

» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...!
by sathikdm Sun Oct 19, 2014 4:45 pm

» சிறுதொழில் செய்பவர்கள் இணையதளம் தொடங்க வேண்டியதின் அவசியம்!
by pba Sat Sep 27, 2014 12:58 am

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:47 pm

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:42 pm

» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
by santhoshpart Wed Aug 27, 2014 4:22 pm

» “சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா!”
by santhoshpart Wed Aug 13, 2014 3:54 pm

» Daily Rs.500/- and Above
by K.MARIAPPAN Wed Jul 30, 2014 12:01 pm

» http://www.neobux.com/?r=narasimmant
by Navaneethakrishnan Wed Jul 02, 2014 3:41 pm

» வணக்கம் என் பெயர் வேணு
by A.Venu Fri Jun 27, 2014 10:10 am

» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?
by sathikdm Wed Jun 18, 2014 3:24 pm

» தமிழ் மொழி மூல கல்வி இணையதளம்
by afdhaal Wed May 28, 2014 9:22 pm

» வருக. வருக. வணக்கம்.
by மகி Mon May 12, 2014 3:55 pm

» அறிமுகம் -விநாயகா செந்தில்.
by மகி Mon May 12, 2014 3:53 pm

» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....!
by vinayagasenthil Sat May 10, 2014 9:04 pm

பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

வார ராசி பலன் - 04 ஜூலை 2011 முதல் 11 ஜூலை 2011 வரை!

Go down

வார ராசி பலன் - 04 ஜூலை 2011 முதல் 11 ஜூலை 2011 வரை! Empty வார ராசி பலன் - 04 ஜூலை 2011 முதல் 11 ஜூலை 2011 வரை!

Post by மகி Tue Jul 05, 2011 11:08 pm

மேஷம்:

கொடுத்து சிவந்த கைகளை உடைய நீங்கள், மனிதநேயம் அதிகமுள்ளவர்கள். சுக்ரன் சாதகமான வீடுகளில் செல்வதால் உங்கள் அணுகுமுறையை மாற்றிக் கொள்வீர்கள். பணவரவு அதிகரிக்கும். வி. ஐ. பிகள் தொடர்பு கிடைக்கும். சொத்துப் பிரச்சனைகள் தீரும். வீடு கட்ட லோன் கிடைக்கும். குடும்பத்தாரின் ஆதரவுப் பெருகும். குழந்தை பாக்யம் கிடைக்கும். உள் மனசில் உறங்கிக் கிடந்த சோகம் நீங்கும். பிள்ளைகள் உதவிகரமாக இருப்பார்கள். பழுதான வாகனத்தை மாற்றுவீர்கள்-. சனி வலுவாக இருப்பதால் கௌரவப் பதவிகள் தேடி வரும். எதிர்பார்த்த வகையில் உதவிகள் கிடைக்கும்-. கன்னிப் பெண்களே! தடைப்பட்ட உயர்கல்வியை தொடர்வீர்கள். அரசியல்வாதிகளே! கட்சி ரகசியங்களை மூத்த தலைவர் உங்களிடம் பகிர்ந்துக் கொள்வார். ஜென்ம குருவாக இருப்பதால் வீண் பழி, செலவு, அலைச்சல் வந்துப் போகும். கறாராகப் பேசி வர வேண்டிய பணத்தை வசூலிப்பீர்கள். 8-ல் ராகு நிற்பதால் எதிர்பாராத பயணங்கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். உத்‌தியோகத்தில் உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். கலைத்துறையினர்களே! உதாசினப் படுத்திய நிறுவனமே உங்களை அழைத்துப் பேசும். தொலை நோக்குச் சிந்தனையால் சாதிக்கும் வாரமிது. அதி‌ர்ஷ்ட தேதிகள் : 4, 6, 8 அதி‌ர்ஷ்ட எண்கள் : 6, 9 அதி‌ர்ஷ்ட நிறங்கள் : இளம்சிவப்பு, ப்ரவுன் அதி‌ர்ஷ்ட திசை : வடமேற்கு.


Last edited by மகி on Tue Jul 05, 2011 11:20 pm; edited 1 time in total
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

வார ராசி பலன் - 04 ஜூலை 2011 முதல் 11 ஜூலை 2011 வரை! Empty Re: வார ராசி பலன் - 04 ஜூலை 2011 முதல் 11 ஜூலை 2011 வரை!

Post by மகி Tue Jul 05, 2011 11:09 pm

ரிஷபம்:

நாலா விஷயங்களையும் கூட்டிக் கழித்து யோசிக்கும் நீங்கள், நல்லவர்களின் அருகில் நிற்பீர்கள். ராசிநாதன் சுக்ரன் சாதகமாக இருப்பதால் எதிர்ப்புகள் அடங்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வீடு, வாகன வசதிப் பெருகும். 7-ல் ராகு நிற்பதால் கணவன்-மனைவிக்குள் ஈகோ பிரச்னைகள் வரும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். 5-ல் சனி நிற்பதால் பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த கவலைகள் வந்து நீங்கும். கன்னிப் பெண்களே! புதிய முயற்சிகள் பலிதமாகும். தாயாரின் உடல் நலம் சீராகும். வேற்று மதத்தினர், மொழியினரால் உதவிகள் கிடைக்கும். குரு 12-ல் மறைந்திருப்பதால் மனஉளைச்சல், தாழ்வுமனப்பான்மை வந்துப் போகும். ராசிக்குள் செவ்வாயும், கேதுவும் நிற்பதால் ஒருவித படபடப்பு, இரத்த அழுத்தம், வீண் அலைச்சல் வந்து விலகும். அரசியல்வாதிகளே! எதிர்பார்த்த வேலைகள் தாமதமாக முடியும். வியாபாரம் சுமாராக இருக்கும். வேலையாட்களின் ஒத்துழைப்பு குறையும். உத்‌தியோகத்தில் மேலதிகாரியுடன் கருத்து மோதல்கள் வரும். சக ஊழியர்களின் அன்பை பெறுவீர்கள். கலைத்துறையினர்களே! புது வாய்ப்புகள் தேடி வரும். கடினமாக உழைத்து முன்னேறும் வாரமிது. அதி‌ர்ஷ்ட தேதிகள் : 5, 7, 9 அதி‌ர்ஷ்ட எண்கள் : 2, 7 அதி‌ர்ஷ்ட நிறங்கள் : ஆலிவ்பச்சை, கிரே அதி‌ர்ஷ்ட திசை : தென்கிழக்கு.


Last edited by மகி on Tue Jul 05, 2011 11:21 pm; edited 1 time in total
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

வார ராசி பலன் - 04 ஜூலை 2011 முதல் 11 ஜூலை 2011 வரை! Empty Re: வார ராசி பலன் - 04 ஜூலை 2011 முதல் 11 ஜூலை 2011 வரை!

Post by மகி Tue Jul 05, 2011 11:10 pm

மிதுனம்:

யாருக்காகவும் குறிக்கோளை மாற்றிக் கொள்ளாத நீங்கள், எல்லோரும் வேண்டுமென நினைப்பீர்கள். ராசிநாதன் புதன் சாதகமாக இருப்பதால் இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். எதிர்பார்த்த பணம் வரும். கௌரவப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். பிள்ளைகள் உங்கள் பேச்சுக்கு மதிப்பளிப்பார்கள். பூர்வீக இடத்தை விற்று புது வீடு வாங்குவீர்கள். உறவினர்கள், நண்பர்கள் உங்கள் உதவியை நாடுவார்கள். கன்னிப் பெண்களே! நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பெற்றோரின் ஆதரவுக் கிட்டும். ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். ராசிக்குள் சூரியன் நிற்பதால் முன்கோபம், காரியத் தாமதம், கண் வலி வந்து நீங்கும். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வந்துப் போகும். அரசியல்வாதிகளே! வீண் வறட்டுக் கவுரவத்திற்காக சேமிப்புகளை கரைக்காதீர்கள். இளைய சகோதர வகையில் அலைச்சல், செலவுகள் வந்துப் போகும். வியாபாரத்தில் புது தொடர்புகள் கிடைக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்‌தியோகத்தில் மேலதிகாரியின் பாராட்டை பெறுவீர்கள். சக ஊழியர்கள் மதிப்பார்கள். கலைத்துறையினர்களே! பரபரப்புடன் செயல்படுவீர்கள். சொன்ன சொல்லைக் காப்பாற்றும் வாரமிது. அதி‌ர்ஷ்ட தேதிகள் : 4, 5, 6 அதி‌ர்ஷ்ட எண்கள் : 1, 4 அதி‌ர்ஷ்ட நிறங்கள் : பிங்க், மயில்நீலம் அதி‌ர்ஷ்ட திசை : கிழக்கு.


Last edited by மகி on Tue Jul 05, 2011 11:21 pm; edited 1 time in total
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

வார ராசி பலன் - 04 ஜூலை 2011 முதல் 11 ஜூலை 2011 வரை! Empty Re: வார ராசி பலன் - 04 ஜூலை 2011 முதல் 11 ஜூலை 2011 வரை!

Post by மகி Tue Jul 05, 2011 11:11 pm

கடகம்:

படைப்புத் திறன் அதிகம் கொண்ட நீங்கள், பகையாளிக்கும் உதவும் பரந்த மனசுக்காரர்கள். பாதகாதிபதி சுக்ரன் 12-ல் மறைந்திருப்பதால் புகழ், கௌரவம் உயரும். கேட்ட இடத்தில் பண உதவி கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். மகன் உங்களை புரிந்துக் கொள்வார். உடல் நலம் சீராகும். மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். உல்லாசப் பயணங்கள் சென்று வருவீர்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வேற்று மதத்தினர், மொழியினர் உதவுவார்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். பழைய உறவினர்கள், நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். பழைய கடனைத் தீர்க்க புது வழி யோசிப்பீர்கள். கன்னிப் பெண்களே! புதியவர்கள் நண்பர்களாவார்கள். சகோதரர்களால் பயனடைவீர்கள். நிலம், வீடு வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். சூரியன் சாதகமாக இல்லாததால் வீண் செலவு, தூக்கமின்மை, மனஉளைச்சல் வந்து நீங்கும். அரசியல்வாதிகளே! ஆதாரமில்லாமல் எதிர்கட்சிக்காரர்களை விமர்சித்து பேசாதீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்தை விட லாபம் அதிகரிக்கும். உத்‌தியோகத்தில் பிறரின் குறைகளை சுட்டிக் காட்ட வேண்டாம். அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். கலைத்துறையினர்களே! உங்களின் படைப்புகள் எல்லோராலும் பாராட்டப்படும். திடீர்த் திருப்பங்கள் நிறைந்த வாரமிது. அதி‌ர்ஷ்ட தேதிகள் : 5, 9, 10 அதி‌ர்ஷ்ட எண்கள் : 2, 6 அதி‌ர்ஷ்ட நிறங்கள் : சில்வர்கிரே, ரோஸ் அதி‌ர்ஷ்ட திசை : வடகிழக்கு.


Last edited by மகி on Tue Jul 05, 2011 11:22 pm; edited 1 time in total
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

வார ராசி பலன் - 04 ஜூலை 2011 முதல் 11 ஜூலை 2011 வரை! Empty Re: வார ராசி பலன் - 04 ஜூலை 2011 முதல் 11 ஜூலை 2011 வரை!

Post by மகி Tue Jul 05, 2011 11:11 pm

சிம்மம்:

உறங்காச் சூரியன் போல் ஓயாமல் சிந்திக்கும் நீங்கள், அன்பால் ஆக்கிரமிப்பவர்கள். செவ்வாய் வலுவாக இருப்பதால் தன்னம்பிக்கை பிறக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் நல்லது நடக்கும். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் உண்டாகும். சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். சகோதரிக்கு திருமணம் முடியும். தாய்வழி உறவினர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். பாதச்சனி தொடர்வதால் அநாவசியமாக மற்றவர்கள் விஷயத்தில் தலையிட வேண்டாம். உறவினர்கள், நண்பர்கள் வீட்டு சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். கன்னிப் பெண்களே! புது வேலை கிடைக்கும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். அரசாங்க அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். அரசியல்வாதிகளே! உங்களின் கோரிக்கையை மேலிடத்தில் ஏற்பார். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்‌தியோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். கலைத்துறையினர்களே! வேற்றுமொழி வாய்ப்புகளால் புகழடைவீர்கள். அதிரடி வளர்ச்சி காணும் வாரமிது. அதி‌ர்ஷ்ட தேதிகள் : 7, 8, 10 அதி‌ர்ஷ்ட எண்கள் : 4, 5 அதி‌ர்ஷ்ட நிறங்கள் : வெள்ளை, ஆரஞ்சு அதி‌ர்ஷ்ட திசை : மேற்கு.


Last edited by மகி on Tue Jul 05, 2011 11:22 pm; edited 1 time in total
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

வார ராசி பலன் - 04 ஜூலை 2011 முதல் 11 ஜூலை 2011 வரை! Empty Re: வார ராசி பலன் - 04 ஜூலை 2011 முதல் 11 ஜூலை 2011 வரை!

Post by மகி Tue Jul 05, 2011 11:12 pm

கன்னி:

கடந்து வந்த பாதையை ஒரு போதும் மறவாத நீங்கள், மன உறுதியும், விடாமுயற்சியும் கொண்டவர்கள். சூரியன் வலுவாக இருப்பதால் புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். மேல்மட்ட அரசியல்வாதிகளின் நட்பு கிடைக்கும். வீடு கட்ட ப்ளான் அப்ரூவல் ஆகும். வங்கிக் கடனுதவியும் கிடைக்கும். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். பிள்ளைகளின் கூடாப் பழக்கம் விலகும். பழைய உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். ஜென்மச் சனியால் இரத்த அழுத்தம், முதுகு வலி, வாகன விபத்து வந்து நீங்கும். கன்னிப் பெண்களே! உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். தந்தையின் உடல் நலம் சீராகும். வழக்கில் திருப்பம் ஏற்படும். அரசியல்வாதிகளே! தலைமைக்கு நெருக்கமாவீர்கள். பூர்வீக சொத்தை மாற்றியமைப்பீர்கள். பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். 8-ல் குரு மறைந்திருப்பதால் டென்ஷன், வாக்குவாதம், அலைச்சல் வந்துப் போகும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்களை ஈர்க்க புது வழி கண்டுபிடிப்பீர்கள். உத்‌தியோகத்தில் அதிகாரிகளை எதிர்த்துப் பேச வேண்டாம். சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். கலைத்துறையினர்களே! திறமைகள் வெளிப்படும். தன் பலம், பலவீனத்தை உணரும் வாரமிது. அதி‌ர்ஷ்ட தேதிகள் : 4, 9, 10 அதி‌ர்ஷ்ட எண்கள் : 3, 7 அதி‌ர்ஷ்ட நிறங்கள் : சில்வர்கிரே, நீலம் அதி‌ர்ஷ்ட திசை : தென்மேற்கு.


Last edited by மகி on Tue Jul 05, 2011 11:23 pm; edited 1 time in total
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

வார ராசி பலன் - 04 ஜூலை 2011 முதல் 11 ஜூலை 2011 வரை! Empty Re: வார ராசி பலன் - 04 ஜூலை 2011 முதல் 11 ஜூலை 2011 வரை!

Post by மகி Tue Jul 05, 2011 11:13 pm

துலாம்:

போராட்ட சிந்தனை கொண்ட நீங்கள் உரிமைக்குரல் எழுப்புவதில் வல்லவர்கள். குருபகவான் வலுவாக அமர்ந்திருப்பதால் எதிலும் வெற்றி கிட்டும். பணவரவு உண்டு. கல்வியாளர்கள், அறிஞர்களின் தொடர்பு கிடைக்கும்-. மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும்-. கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். விலை உயர்ந்த தங்க ஆபரணம் வாங்குவீர்கள்-. பிள்ளைகள் உங்கள் மனங்கோணாமல் நடந்து கொள்வார். வீட்டை விரிவுப்படுத்தி கட்டுவீர்கள். ராகுவும், கேதுவும் சரியில்லாததால் ஏமாற்றம், வீண் விரையம், பேச்சால் பிரச்னை வந்து நீங்கும். தந்தையின் உடல் நலத்தில் கவனம் தேவை. உடன்பிறந்தவர்களுடன் வீண் விவாதம் வந்துப் போகும். கன்னிப் பெண்களே! கல்யாண முயற்சிகள் பலிதமாகும். ஏழரைச்சனி தொடர்வதால் மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். சொத்து வாங்குவது, விற்பதில் நிதானம் அவசியம். வழக்கில் அலட்சியம் வேண்டாம். அரசு காரியங்கள் தடைப்பட்டு முடியும். புது முதலீடு செய்து வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். உத்‌தியோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். கலைத்துறையினர்களே! மதிப்பு, மரியாதைக் கூடும். போராடி இலக்கை எட்டும் வாரமிது. அதி‌ர்ஷ்ட தேதிகள் : 5, 6, 8 அதி‌ர்ஷ்ட எண்கள் : 7, 8 அதி‌ர்ஷ்ட நிறங்கள் : ஊதா, ப்ரவுன் அதி‌ர்ஷ்ட திசை : வடக்கு.


Last edited by மகி on Tue Jul 05, 2011 11:24 pm; edited 1 time in total
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

வார ராசி பலன் - 04 ஜூலை 2011 முதல் 11 ஜூலை 2011 வரை! Empty Re: வார ராசி பலன் - 04 ஜூலை 2011 முதல் 11 ஜூலை 2011 வரை!

Post by மகி Tue Jul 05, 2011 11:14 pm

விருச்சிகம்:

வாதம் விவாதத்தை விரும்பாத நீங்கள், எதையும் கலைக் கண்ணோடு பார்ப்பீர்கள். புதன் சாதகமாக இருப்பதால் புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். புது சொத்து வாங்குவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகளால் உறவினர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். அநாவசியச் செலவுகளை தவிர்க்கப்பாருங்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். ராகு, கேது சரியில்லாததால் ஒருவித படபடப்பு, இனந்தெரியாத கவலை, காரியத்தடை வரக்கூடும். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். நண்பர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். ஹிந்தி, தெலுங்கு பேசுபவர்களால் ஆதாயம் உண்டு. 6-ல் குரு மறைந்திருப்பதால் வீண் டென்ஷன், செலவு, கடன்பிரச்னைகள் வரக்கூடும். சகோதர வகையில் நன்மை உண்டு. கன்னிப் பெண்களே! கெட்ட நண்பர்களை ஒதுக்குவீர்கள். அரசியல்வாதிகளே! மேலிடத்தை பகைத்துக் கொள்ளாதீர்கள். வழக்கில் வழக்கறிஞரை மாற்றுவீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்‌தியோகத்தில் சக ஊழியர்களால் ஒதுக்கப்பட்டாலும் அதிகாரிகளால் மதிக்கப்படுவீர்கள். கலைத்துறையினர்களே! உங்களை சிலர் விமர்சித்துப் பேசிக் கொண்டுதான் இருப்பார்கள். அதையும் தாண்டி முன்னேறுவீர்கள். தன் பலவீனத்தைத் திருத்திக் கொள்ள வேண்டிய வாரமிது. அதி‌ர்ஷ்ட தேதிகள் : 4, 5, 6 அதி‌ர்ஷ்ட எண்கள் : 1, 6 அதி‌ர்ஷ்ட நிறங்கள் : பிஸ்தாபச்சை, மெரூண் அதி‌ர்ஷ்ட திசை : தெற்கு.


Last edited by மகி on Tue Jul 05, 2011 11:24 pm; edited 1 time in total
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

வார ராசி பலன் - 04 ஜூலை 2011 முதல் 11 ஜூலை 2011 வரை! Empty Re: வார ராசி பலன் - 04 ஜூலை 2011 முதல் 11 ஜூலை 2011 வரை!

Post by மகி Tue Jul 05, 2011 11:15 pm

தனுசு:

நடப்பதெல்லாம் நன்மைக்கே என்றிருக்கும் நீங்கள், மற்றவர்கள் மதிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். செவ்வாய் வலுவாக இருப்பதால் உங்களின் நிர்வாகத் திறமை அதிகரிக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். பணவரவுக்கு குறைவிருக்காது. குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகள் உங்கள் அருமையைப் புரிந்துக் கொள்வார்கள். புது வீடு, மனை வாங்குவீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். பழுதான மின்னணு சாதனங்களை மாற்றுவீர்கள். உறவினர்கள், நண்பர்களுடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். சனி வலுவாக இருப்பதால் கௌரவப் பதவிகள் தேடி வரும். கன்னிப் பெண்களே! பெற்றோருக்கு சில ஆலோசனை வழங்குவீர்கள். 7-ல் சூரியன் நிற்பதால் முன்கோபம், மனைவியுடன் கருத்து மோதல்கள் வரக்கூடும். 4-ந் தேதி சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் அவசரப்பட வேண்டாம். அரசியல்வாதிகளே! தலைமையைப் பற்றி விமர்சனம் செய்ய வேண்டாம். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்‌தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். கலைத்துறையினர்களே! உங்களின் படைப்புகளை அரசு கௌரவிக்கும். மனோ பலத்தால் நினைத்ததை முடிக்கும் வாரமிது. அதி‌ர்ஷ்ட தேதிகள் : 5, 6, 7 அதி‌ர்ஷ்ட எண்கள் : 3, 8 அதி‌ர்ஷ்ட நிறங்கள் : பிங்க், சில்வர்கிரே அதி‌ர்ஷ்ட திசை : வடகிழக்கு.


Last edited by மகி on Tue Jul 05, 2011 11:25 pm; edited 1 time in total
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

வார ராசி பலன் - 04 ஜூலை 2011 முதல் 11 ஜூலை 2011 வரை! Empty Re: வார ராசி பலன் - 04 ஜூலை 2011 முதல் 11 ஜூலை 2011 வரை!

Post by மகி Tue Jul 05, 2011 11:16 pm

மகரம்:

தொலை நோக்குப் பார்வை கொண்ட நீங்கள், அண்டி வந்தவர்களை ஆதரிக்கத் தவறமாட்டீர்கள். புதன் சாதகமாக இருப்பதால் மனக்குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். தடைபட்ட காரியங்கள் முடிவுக்கு வரும். இங்கிதமாகப் பேசி எல்லோரையும் கவர்வீர்கள். கடனாக கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். குடும்பத்தில் ஓரளவு நிம்மதி உண்டு. பூர்வீக சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். சுக்ரன் 6-ல் மறைந்திருப்பதால் கணவன்-மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. தொண்டை புகைச்சல், சளித்தொந்தரவு, வாகனப் பழுது வந்து நீங்கும். சொந்த-பந்தங்களின் அன்புத் தொல்லைகள் நீங்கும். கன்னிப் பெண்களே! எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். அரசியல்வாதிகளே! பொது விழாக்களுக்கு தலைமைத் தாங்குவீர்கள்-. குரு 4-ல் நிற்பதால் வேலைச்சுமை, தாயாருக்கு கை, கால் வலி வந்து நீங்கும். 5, 6 ஆகிய தேதிகளில் சந்திராஷ்டமம் இருப்பதால் உணர்ச்சிவசப்படாமல் இருப்பது நல்லது. வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்‌தியோகத்தில் உங்கள் கடின உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். கலைத்துறையினர்களே! உங்களின் படைப்புகளை போராடி வெளியிட வேண்டி வரும். தன்னடக்கத்தால் தடைகளை தாண்டும் வாரமிது. அதி‌ர்ஷ்ட தேதிகள் : 4, 9, 10 அதி‌ர்ஷ்ட எண்கள் : 2, 9 அதி‌ர்ஷ்ட நிறங்கள் : க்ரீம் வெள்ளை, சிவப்பு அதி‌ர்ஷ்ட திசை : தென்மேற்கு.


Last edited by மகி on Tue Jul 05, 2011 11:26 pm; edited 1 time in total
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

வார ராசி பலன் - 04 ஜூலை 2011 முதல் 11 ஜூலை 2011 வரை! Empty Re: வார ராசி பலன் - 04 ஜூலை 2011 முதல் 11 ஜூலை 2011 வரை!

Post by மகி Tue Jul 05, 2011 11:18 pm

கும்பம்:

எதிலும் மாற்றத்தை விரும்பும் நீங்கள், ஆதாரமில்லாமல் எதையும் நம்ப மாட்டீர்கள். ராகு வலுவாக இருப்பதால் பிரச்சனைகளை கண்டு அஞ்சமாட்டீர்கள். இழுபறியாக இருந்த வேலைகள் உடனே முடியும். ஷேர் மூலம் பணம் வரும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். புது வாகனம் வாங்குவீர்கள். சூரியன் 5-ல் நிற்பதால் பிள்ளைகளால் அலைச்சல் ஏற்படும். கர்ப்பிணிப் பெண்கள் பயணங்களை தவிர்ப்பது நல்லது. சிலர் வீடு மாற வேண்டிய நிர்பந்தம் உண்டாகும். 6-ல் புதன் மறைந்திருப்பதால் நண்பர்களுடன் கருத்து மோதல்கள் வரும். உறவினர்கள் சிலர் பணம் கேட்டு தொந்தரவு தருவார்கள். கன்னிப் பெண்களே! புது முயற்சிகளை பெற்றோர் ஆதரிப்பார். அஷ்டமத்துச்சனி நடப்பதால் சிலரின் ஏமாற்றங்களை நினைத்து வருந்துவீர்கள். 7, 8 ஆகிய தேதிகளில் சந்திராஷ்டமம் இருப்பதால் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்‌தியோகத்தில் இழந்த சலுகைகளை மீண்டும் பெறுவீர்கள். கலைத்துறையினர்களே! எதிர்பார்த்த புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். சூழ்ச்சிகளை முறியடித்து வெற்றி பெறும் வாரமிது. அதி‌ர்ஷ்ட தேதிகள் : 5, 6, 10 அதி‌ர்ஷ்ட எண்கள் : 7, 9 அதி‌ர்ஷ்ட நிறங்கள் : ஆரஞ்சு, பச்சை அதி‌ர்ஷ்ட திசை : தெற்கு.


Last edited by மகி on Tue Jul 05, 2011 11:26 pm; edited 1 time in total
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

வார ராசி பலன் - 04 ஜூலை 2011 முதல் 11 ஜூலை 2011 வரை! Empty Re: வார ராசி பலன் - 04 ஜூலை 2011 முதல் 11 ஜூலை 2011 வரை!

Post by மகி Tue Jul 05, 2011 11:19 pm

மீனம்:

வருங்காலத்தை கருத்தில் கொண்டு வாழும் நீங்கள், சாதிக்கப் பிறந்தவர்கள். செவ்வாயும், கேதுவும் பலம் பெற்றிருப்பதால் சவாலில் வெற்றி பெறுவீர்கள். பெரிய பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். தாய்வழி சொத்துகள் கைக்கு வரும். பணவரவு திருப்தி தரும். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். தூரத்து சொந்தங்கள் தேடி வந்து பேசுவார்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். உடன்பிறந்தவர்களால் பயனடைவீர்கள். புது டிசைனில் நகை வாங்குவீர்கள். வீட்டை கட்டி முடிக்க எதிர்பார்த்த வங்கிக் கடன் கிடைக்கும். கன்னிப் பெண்களே! தள்ளிப் போய்கொண்டிருந்த திருமணம் இனி கூடி வரும். பெற்றோரின் ஆலோசனைக்கு செவி சாய்ப்பீர்கள். 7-ல் சனி நிற்பதால் மனைவியுடன் ஈகோ பிரச்னை வந்து நீங்கும். கோவில் கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்துவீர்கள். 9, 10 ஆகிய தேதிகளில் சந்திராஷ்டமம் இருப்பதால் யோசித்து முடிவெடுக்கப்பாருங்கள். வியாபாரத்தில் அதிரடி லாபம் உண்டு. புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்‌தியோகத்தில் உங்களின் புதிய முயற்சிகளை அதிகாரி பாராட்டுவார். கலைத்துறையினர்களே! மூத்த கலைஞர்களின் வழிகாட்டல் மூலம் வெற்றியடைவீர்கள். எதிர்பாராத திடீர் நன்மைகள் சூழும் வாரமிது. அதி‌ர்ஷ்ட தேதிகள் : 4, 6, 8 அதி‌ர்ஷ்ட எண்கள் : 3, 5 அதி‌ர்ஷ்ட நிறங்கள் : மஞ்சள், மெரூண் அதி‌ர்ஷ்ட திசை : வடமேற்கு.

நன்றி: வெப்துனியா.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

வார ராசி பலன் - 04 ஜூலை 2011 முதல் 11 ஜூலை 2011 வரை! Empty Re: வார ராசி பலன் - 04 ஜூலை 2011 முதல் 11 ஜூலை 2011 வரை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum