தமிழ் | Tamil | Forum
தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

கூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.

புகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.
Latest topics
» வணக்கம் என் பெயர் நாகராசன்.இரா
by rajan_1972 Yesterday at 7:20 pm

» சிறந்த பொழுதுபோக்கு இணையதளம்!
by pba Sat Jul 02, 2016 8:11 pm

» ஏற்றுமதி உரிமம் பெறும் விண்ணப்பம்
by tamilnews Tue Mar 24, 2015 8:00 pm

» மொபைல், டிடிஎச் ரீசார்ஜ் செய்யப் போறீங்களா? இந்த சலுகைகளைப் பாருங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:41 am

» மொபைல் ரீசார்ஜ் செய்து ஷாப்பிங் கூப்பன் இலவசமாக பெறுங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:38 am

» மெமரி கார்டு வாங்கப் போறீங்களா? 74% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:36 am

» அமேசானில் பெண்களுக்கான ஆடைகள் 70% வரை தள்ளுபடி !
by dsytamil Wed Jan 14, 2015 1:34 am

» அமேசானில் ஆண்களுக்கான ஆடைகள் 60% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:31 am

» லெனோவா டேப்ளட் 43% சலுகை விலையில் ரூ. 5949 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:28 am

» ப்ளிப்கார்ட் தளத்தில் சிறுவர்களுக்கான ஆடைகள் 70% வரை + 30% கூடுதல் தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:14 am

» அமேசான் தளத்தில் 50% தள்ளுபடி விலையில் மொபைல்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:13 am

» ரூ. 7499 மதிப்புள்ள மைக்ரோமேக்ஸ் ஏ1 ஆன்ட்ராய்டு மொபைல் இப்போது ரூ. 5499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:11 am

» ரூ. 19999 மதிப்புள்ள நோக்கியா லூமியா 625 மொபைல் ரூ. 7499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:10 am

» ப்ராண்டட் காலணிகளுக்கு 70% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:08 am

» ஆன்லைன் ஷாப்பிங்கில் ப்ரிண்டர்களுக்கு 33% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:06 am

» ஆன்லைனில் பொருள் வாங்கப் போறீங்களா? 70% வரை பணத்தை சேமியுங்கள்!
by dsytamil Tue Jan 13, 2015 12:30 am

» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...!
by sathikdm Sun Oct 19, 2014 4:45 pm

» சிறுதொழில் செய்பவர்கள் இணையதளம் தொடங்க வேண்டியதின் அவசியம்!
by pba Sat Sep 27, 2014 12:58 am

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:47 pm

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:42 pm

» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
by santhoshpart Wed Aug 27, 2014 4:22 pm

» “சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா!”
by santhoshpart Wed Aug 13, 2014 3:54 pm

» Daily Rs.500/- and Above
by K.MARIAPPAN Wed Jul 30, 2014 12:01 pm

» http://www.neobux.com/?r=narasimmant
by Navaneethakrishnan Wed Jul 02, 2014 3:41 pm

» வணக்கம் என் பெயர் வேணு
by A.Venu Fri Jun 27, 2014 10:10 am

» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?
by sathikdm Wed Jun 18, 2014 3:24 pm

» தமிழ் மொழி மூல கல்வி இணையதளம்
by afdhaal Wed May 28, 2014 9:22 pm

» வருக. வருக. வணக்கம்.
by மகி Mon May 12, 2014 3:55 pm

» அறிமுகம் -விநாயகா செந்தில்.
by மகி Mon May 12, 2014 3:53 pm

» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....!
by vinayagasenthil Sat May 10, 2014 9:04 pm

பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

கணினித் தகவல்கள்!

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Go down

கணினித் தகவல்கள்! Empty கணினித் தகவல்கள்!

Post by மகி on Tue Oct 06, 2009 3:04 am

ஒரு கோப்பினை அழிக்கிறீர்கள். அது நிச்சயமாக அழிக்கப்பட வேண்டும்; ரீ சைக்கிள் பின்னுக்குச் செல்ல வேண்டாம் என முடிவு செய்தால் அந்த பைலைத் தேர்ந்தெடுத்து டெலீட் பட்டனை அழுத்துகையில் ஷிப்ட் கீயை அழுத்தியபடி அழுத்தவும். கோப்பு ரீசைக்கிள் பின்னுக்குச் செல்லாது.

பங்சன் கீகளில் எப் 12 கீ சில அரிய செயல்பாடுகளைத் தருகிறது.
எப் 12 – தனியாக : ஒரு பைலை வேறு ஒரு பெயரில் அல்லது வடிவில் சேவ் செய்திட
ஷிப்ட் + எப் 12: பைலை சேவ் செய்திட
கண்ட்ரோல் + எப்12: பைல் ஒன்றைத் திறந்திட
கண்ட்ரோல் + ஷிப்ட் + எப் 12 : பைல் பிரிண்ட்
கண்ட்ரோல் + ஆல்ட் + எப் 12 : கிராபிக்ஸ் புராபர்ட்டீஸ் அறிய.

நன்றி: தினமலர்.


Last edited by மகி on Tue Nov 03, 2009 12:54 am; edited 1 time in total
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

கணினித் தகவல்கள்! Empty Re: கணினித் தகவல்கள்!

Post by மகி on Tue Oct 06, 2009 3:07 am

ஐ.எஸ்.ஓ. இமேஜ் என்பது ஒரு சிடி அல்லது டிவிடியில் பேக் செய்யப்பட்ட பைல்கள் அனைத்தின் இமேஜ் ஆகும். சிடியில் எழுதப் பயன்படும் சாப்ட்வேர் அனைத்தும் இந்த இமேஜ் பைலை எடுத்து நேரடியாக இன்னொரு சிடியில் எழுதப் பயன்படுத்திக் கொள்ளும். எனவே குறிப்ப்பிட்ட பைல் தொகுதியினை நிறைய சிடிக்களில் எழுத வேண்டுமானால் ஐ.எஸ்.ஓ. இமேஜ் வேண்டுமா என உங்கள் சிடி பர்னிங் சாப்ட்வேர் கேட்கும்போது யெஸ் கொடுத்து அந்த பைலை உருவாக்கி அடையாளம் காணும் வகையில் பெயர் கொடுத்துப் பின் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

கணினித் தகவல்கள்! Empty Re: கணினித் தகவல்கள்!

Post by மகி on Tue Oct 06, 2009 3:11 am

GPRS General Packet Radio Service:

உங்களுடைய மொபைல் போனில் இன்டர்நெட் பெறும் ஒரு வழி. உங்கள் மொபைல் போனை மோடமாகப் பயன்படுத்தி இந்த தொழில் நுட்பம் வழியாக பெர்சனல் கம்ப்யூட்டரில் இன்டர்நெட் இணைப்பு பெற்று பயன்படுத்தலாம். 115 kbps வேகத்தில் இது தகவல் பரிமாற்றத்தினைத் தர வேண்டும். ஆனால் இந்தியாவில் இந்த அளவிற்கு வேகம் கிடைப்பது அரிதாக உள்ளது.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

கணினித் தகவல்கள்! Empty Re: கணினித் தகவல்கள்!

Post by மகி on Tue Oct 06, 2009 3:14 am

EDGE Enhanced Data rate for GSM Evolution:

உங்கள் மொபைல் போனில் இன்டர்நெட் இணைப்பை கூடுதல் வேகத்தில் தரக்கூடிய தொழில் நுட்பம். 384 kbps வேகத்தில் இது தகவல் பரிமாற்றத்தினைத் தர வேண்டும். வழக்கமான ஜி.பி.ஆர்.எஸ். வகை பரிமாற்றத்தினைக் காட்டிலும் இது மூன்று பங்கு கூடுதல் வேகம் கொண்டது. அதிக பேண்ட்வித் அலைவரிசை தேவைப்படும் மல்ட்டி மீடியா விஷயங்களை எளிதில் இறக்கித் தரக்கூடிய தொழில் நுட்பம். இந்தியாவில் அனைத்து ஏரியாக்களிலும் இது கிடைப்பதில்லை.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

கணினித் தகவல்கள்! Empty Re: கணினித் தகவல்கள்!

Post by மகி on Tue Oct 06, 2009 3:18 am

BANDS:

மொபைல் போன் இணைப்பு கொடுக்கும் நிறுவனங்கள் தங்களுடைய நெட்வொர்க்கைச் செயல்படுத்தும் அலைவரிசையினை இது குறிக்கிறது. ஏர்டெல், ஹட்ச், பி.எஸ்.என்.எல். போன்ற நிறுவனங்கள் ஒவ்வொன்றும் குறிப்பிட்ட அலைவரிசையில் இயங்க அரசிடம் அனுமதி பெறுகின்றன. மொபைல் போன் எத்தனை அலைவரிசைகளில் பரவும் தகவல்களைப் பெற முடியும் என்ற அடிப்படையில் அதனை டூயல் பேண்ட், ட்ரை பேண்ட், குவாட் பேண்ட் என அழைக்கிறோம். ஒரு டூயல் பேண்ட் போன் ஜி.எஸ்.எம். 900 மற்றும் ஜி.எஸ்.எம். 1800 ஆகிய அலைவரிசைகளில் இயங்கும். இந்தியாவில் இதுவே பரவலாக உள்ளது. இத்துடன் ஜி.எஸ்.எம்.1900 உடன் இயங்கினால் அது ட்ரை பேண்ட் ஆகும். ஜி.எஸ்.எம். 1900 அலைவரிசை ஐரோப்பாவில் இயங்குகிறது. குவாட் பேண்ட் என்பது இவற்றுடன் ஜி.எஸ்.எம். 850 இணைந்தால் அது குவாட் பேண்ட் ஆகும்.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

கணினித் தகவல்கள்! Empty Re: கணினித் தகவல்கள்!

Post by மகி on Tue Oct 06, 2009 3:22 am

HSPA High Speed Packet Access:

இது 3ஜி தொழில்நுட்பத்திற்கு அடுத்தபடியாக மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பமாகும். எனவே இதனை 3.5 ஜி எனவும் அழைக்கின்றனர். இதன் மூலம் டவுண்லோடிங் செய்திடு கையில் 14.4 mbps வேகமும் அப்லோடிங் செய்திடுகையில் 5.76 mbps வேகமும் இருக்கும். இப்போதைக்கு இந்த வகை நெட்வொர்க் இந்தியாவில் இல்லை.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

கணினித் தகவல்கள்! Empty Re: கணினித் தகவல்கள்!

Post by மகி on Tue Oct 06, 2009 3:30 am

Bluetooth:

ஒரு டிஜிட்டல் சாதனத்திலிருந்து இன்னொன்றுக்கு வயர் வழி இணைப்பு ஏதும் இன்றி தகவல்களை அனுப்பும் தொழில்நுட்பம். இன்ப்ராரெட் தொழில்நுட்பம் இதுபோல் தான் என்றாலும் புளூ டூத் இயங்க இரண்டு சாதனங்களும் நேர்கோட்டில் இருக்க வேண்டியதில்லை. 10 மீட்டர் சுற்றில் எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம். புளுடூத் தொழில்நுட்பத்தைப் பொறுத்தவரை சாதனத்தைப் பொருத்து அது அனுப்பும் தகவல் பைல்களின் தன்மையும் மாறும். இதில் ஒரு எச்சரிக்கை. பயன்படுத்தாத போது புளுடூத் வசதியினை ஆப் செய்துவிட வேண்டும். இல்லையேல் இதே வசதி உள்ள இன்னொரு மொபைல் அல்லது வேறு சாதனம் மூலம் உங்கள் மொபைலுக்கு தேவையில்லாத தகவல் வரலாம். மேலும் புளுடூத் வசதி அநியாயத்திற்கு பேட்டரியைக் காலி செய்திடும்.

நன்றி: தினமலர்.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

கணினித் தகவல்கள்! Empty Re: கணினித் தகவல்கள்!

Post by மகி on Tue Oct 06, 2009 8:48 pm

எக்ஸெல் துல்லியம்:

நாம் ஒரு எண்ணை எழுதுகையில் எப்படி எழுதுகிறோமோ, அதே அளவில் அப்படியே நம் நினைவில் கொள்கிறோம். எடுத்துக் காட்டாக, 2.76 என எழுதினால் இந்த எண் இரண்டு தசம ஸ்தானத்துடன் (டெசிமல் பிளேஸ்)மட்டுமே கொள்கிறோம். ஆனால் எக்ஸெல் நீங்கள் எத்தனை ஸ்தானங்களை எழுதினாலும் அது மொத்தமாக 15 தசம ஸ்தானங்களை உருவாக்கிக் கொள்ளும். அதாவது 2.76 என்பதற்குப் பின்னால் மேலும் 13 சைபர்களைச் சேர்த்துக் கொள்ளும். இதனால் தான் சில வேளைகளில் நமக்கு மிகத் துல்லியமாக பல தசமஸ்தானங்களில் விடை கிடைக்கிறது.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

கணினித் தகவல்கள்! Empty Re: கணினித் தகவல்கள்!

Post by மகி on Tue Oct 06, 2009 8:50 pm

வேர்ட் பார்மட்டிங் நீக்கல்:

வேர்ட் டெக்ஸ்ட்டில் சில குறிப்பிட்ட சொற்களை மற்ற சொற்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்ட போல்டு, அடிக்கோடு, சாய்வு மற்றும் சில பார்மட்களில் அமைத்திருப்போம். இவற்றை மொத்தமாக நீக்க வேண்டுமென்றால், இதனைத் தேர்வு செய்து மெனு பார் சென்று ஒவ்வொரு ஐகானாகக் கிளிக் செய்வோம். இதற்குப் பதிலாக இரண்டு ஷார்ட் கட் கீகளைப் பயன் படுத்தலாம். பார்மட்டிங் நீக்கி எளிமையான டெக்ஸ்ட் மட்டுமே தேவைப்படும் சொற்களைத் தேர்வு செய்து கொள்ளுங்கள். பின் கண்ட்ரோல் + ஷிப்ட்+இஸட் (Ctrl+Shft+Z) அழுத்துங்கள். மொத்தமாக பார்மட்டிங் அனைத்தும் நீக்கப்படும். வேர்ட் ResetChar என்ற கட்டளையை இந்த இடத்தில் அமல்படுத்துகிறது. இதனை கண்ட்ரோல் + ஸ்பேஸ் பார் அழுத்தியும் மேற்கொள்ளலாம். இதே போல ஏதேனும் பாரா பார்மட்டிங் செய்திருந்தால், அந்த பார்மட்டினை நீக்க பாராவினை செலக்ட் செய்து கண்ட்ரோல் + க்யூ (Ctrl+Q) அழுத்துங்கள். டெக்ஸ்ட் ஒன்றுக்கு சாதாரண நார்மல் ஸ்டைல் இருந்தால் போதும் என்று எண்ணினால், உடனே அதனைத் தேர்ந்தெடுத்து கண்ட்ரோல்+ஷிப்ட்+என் (Ctrl+Shft+ N) அழுத்தவும்.


Last edited by மகி on Tue Nov 03, 2009 3:27 pm; edited 1 time in total
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

கணினித் தகவல்கள்! Empty Re: கணினித் தகவல்கள்!

Post by மகி on Tue Oct 06, 2009 8:51 pm

வேர்டில் டூல்பார் ஐகானில் படம், டெக்ஸ்ட் மாற்ற:

வேர்டில் மெனு பார் பல டூல்பார்களுடன் காட்சி அளிக்கிறது. இதனை நம் விருப்பப்படி அமைத்திடும் வகையில் வளைந்து கொடுக்கும் தன்மையினை வேர்ட் அளித்திருக்கிறது. எடுத்துக்காட்டாக, டூல்பாரில் உள்ள படத்தை மாற்றி அமைக்கலாம். அதில் உள்ள சொற்கள் வேண்டாம் என்றால் எடுத்துவிடலாம்.


இதனை எப்படி மேற்கொள்ளலாம் என்று பார்க்கலாம்.

1.வேர்ட் தொகுப்பை இயக்கியபின், ஸ்கிரீனில் தெரியும் டூல்பாரில், மாற்ற விரும்பும் டூல்பாரில் அல்லது டூல் ஜகானில் ரைட்கிளிக் செய்திடவும். வேர்ட் உடனே ஒரு கான்டெக்ஸ்ட் மெனு (Context Menu) ஒன்றை அளிக்கும்.

2.இந்த மெனுவில் கீழாக உள்ள Customize என்ற பட்டனில் கிளிக் செய்திடவும். உடன் வேர்ட் கஸ்டமைஸ் டயலாக் பாக்ஸைக் காட்டும். இதில் Toolbars என்ற டேப் செலக்ட் செய்யப்பட்டிருக்கும்.

3. இனி மீண்டும் வேர்ட் மெனு பார் சென்று மாற்ற விரும்பிய டூல்பார் பட்டனில் ரைட் கிளிக் செய்திடவும். இவை எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

4. இப்போது வேறு வகையான காண்டெக்ஸ்ட் மெனு கிடைக்கும். இதில் Change Button Image என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். உடன் வேர்ட் நீங்கள் தேர்ந்தெடுக்க பல கிராபிக் இமேஜ்களைக் காட்டும்.

5. எந்த கிராபிக் இமேஜைத் தற்போதுள்ள படத்திற்குப் பதிலாகப் பயன்படுத்த விரும்புகிறீர்களோ, அதனைத் தேர்ந்தெடுக் கவும்.

6.இனி அதில் உள்ள டெக்ஸ்ட் உங்களுக்கு வேண்டாம் என்றால் தொடர்ந்து கீழே தரப்பட்டுள்ள வழிகளைப் பின்பற்றவும். இல்லை என்றால் 9ல் தரப்பட்டுள்ள செயலுக்குச் செல்லவும்.

7.மீண்டும் மாற்ற விரும்பும் டூல்பார் பட்டனில் ரைட் கிளிக் செய்திடவும். Context Menu கிடைக்கும்.

8. Context Menu வில் Default Style என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இனி டூல்பார் பட்டனில் இமேஜ் மட்டும் இருக்கும்.

9.Customize டயலாக் பாக்ஸிலிருந்து வெளியேற குளோஸ் பட்டனை அழுத்தவும். இனி நீங்கள் மேற்கொண்ட மாற்றங்கள் அனைத்தும் செயல்படுத்தப்பட்டிருப்பதனைக் காணலாம்.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

கணினித் தகவல்கள்! Empty Re: கணினித் தகவல்கள்!

Post by மகி on Tue Oct 06, 2009 8:56 pm

அனைத்து பைல்களையும் குளோஸ் செய்திட:

எக்ஸெல் தொகுப்பில் ஒன்றுக்கு மேற்பட்ட பைல்களைத் திறந்து பயன்படுத்திய பின்னர், எக்ஸெல் விட்டு வெளியேறாமல் அனைத்து பைல்களையும் குளோஸ் செய்திட விரும்பினால், ஷிப்ட் கீ அழுத்தியவாறு பைல் மெனு கிளிக் செய்திடவும். இவ்வாறு கிளிக் செய்திடுகையில் சாதாரணமாக ஒரு பைலைக் கிளிக் செய்திட கிடைக்கும் குளோஸ் கட்டளை குளோஸ் ஆல் எனத் தெரிவதனைக் காணலாம். அதே போல சேவ் கட்டளை சேவ் ஆல் என்று கிடைப்பதைக் காணலாம். அனைத்தையும் மொத்தமாக சேவ் செய்துவிட்டு மொத்தமாக மூடிவிடலாம்.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

கணினித் தகவல்கள்! Empty Re: கணினித் தகவல்கள்!

Post by மகி on Tue Oct 06, 2009 8:57 pm

எக்ஸெல் – மற்றவர்கள் மாற்றாமல் இருக்க:

எக்ஸெல் தொகுப்பில், நீங்கள் தயாரிக்கும் ஒர்க் புக்கினை நீங்கள் மட்டுமே பயன்படுத்தி மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என ஒரு கட்டத்தில் எண்ணலாம்; கம்ப்யூட்டரைப் பயன்படுத்தும் மற்ற யூசர்கள் அதில் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடாது என்று எண்ணினால், அதனை அவ்வாறே செட் செய்திடலாம்.

Tools மெனுவில் Share Workbook என்பதனைத் தேர்ந்தெடுத்தால் எக்ஸெல் ஷேர் ஒர்க்புக் டயலாக் பாக்ஸைக் காட்டும். அதில் Allow Changes என்ற வரிக்கு முன் உள்ள பாக்ஸில் இருக்கும் டிக் அடையாளத்தை எடுத்துவிடவும். பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

கணினித் தகவல்கள்! Empty Re: கணினித் தகவல்கள்!

Post by மகி on Tue Oct 06, 2009 9:03 pm

வேர்ட்–பார்மட் மட்டும் பேஸ்ட்:

குறிப்பிட்ட சில சொற்களை டாகுமெண்ட் முழுவதும் நீங்கள் விரும்பும் பார்மட்டில் மாற்ற விரும்புகிறீர்கள். எடுத்துக் காட்டாக, டாகுமெண்ட் ஒன்றில் நிறுவனங்கள் பெயர் தொடர்ந்து வருகின்றன. இவை அனைத்தையும் குறிப்பிட்ட பாண்ட் வகையில் அடிக்கோடுடன் அமைக்க விரும்புகிறீர்கள். இதனை ஒரு நிறுவனத்தின் பெயரில் மாற்றி அமைக்கவும். பின்னர் இதனை அப்படியே காப்பி செய்தால் இதே நிறுவனத்தின் பெயர் அப்படியே பார்மட்டிங் சேர்ந்து காப்பி ஆகி அடுத்த இடத்தில் உள்ள நிறுவனத்தின் பெயருக்குப் பதிலாக பேஸ்ட் செய்திடுகையில் உட்கார்ந்துவிடும். அதற்குப் பதிலாக நாம் விரும்புவது பார்மட்டிங் மட்டும் அந்த புதிய இடத்தில் உள்ள நிறுவனப் பெயருக்கு அப்ளை ஆக வேண்டும். இப்படியே அனைத்து நிறுவனங்களின் பெயருக்கு அப்ளை ஆக வேண்டும். இதற்கான ஷார்ட் கட் கீகளைப் பார்க்கலாம்.

1. முதலில் என்ன வகையில் பார்மட்டிங் செய்திட வேண்டுமோ அதனை மேற்கொள்ளவும். முதல் நிறுவனத்தின் பெயரைத் தேர்ந்தெடுத்து அதில் பார்மட்டிங் வேலைகளை மேற்கொள்ளவும். எடுத்துக் காட்டாக இவற்றை இன்னொரு பாண்ட்டில், போல்ட் மற்றும் சாய்வாக அமைக்கலாம்.

2. அமைத்த பின்னர் அதனைத் தேர்ந்தெடுத்து பின் கண்ட்ரோல் + ஷிப்ட்+சி (Ctrl+Shift+C) அழுத்தவும். இப்போது பார்மட்டிங் சமாச்சாரங்கள் மட்டும் காப்பி செய்யப்படும்.

3. பின் இந்த பார்மட்டிங், எந்த சொற்களில் வேறு இடத்தில் அமைய வேண்டுமோ, அந்த சொற்களைத் தேர்ந்தெடுக்கவும். தேர்ந்தெடுத்த பின்னர் கண்ட்ரோல் + ஷிப்ட்+வி (Ctrl+Shft+V) அழுத்தவும். அந்த சொற்கள் மாற்றப்படாமல் பார்மட்டிங் மட்டும் அதில் ஏற்றப்படும். இப்படியே டாகுமெண்ட் முழுவதும் மாற்ற வேண்டிய அனைத்து சொற்களையும் தேர்ந்தெடுத்து கண்ட்ரோல்+ஷிப்ட்+வி அழுத்தி பார்மட்டிங் மாற்றலாம்.

வேர்ட் – பாராவினை நகர்த்தி அமைக்க:

பெரிய டாகுமெண்ட் ஒன்றைத் தயார் செய்கிறீர்கள். அதன் பின் சில பாராவை அதன் இடத்திலிருந்து நகர்த்தி இன்னொரு இடத்திற்குக் கொண்டு செல்ல எண்ணுகிறீர்கள். இதற்கு பாராவை செலக்ட் செய்து இழுக்க வேண்டாம்; காப்பி அல்லது கட் செய்து பேஸ்ட் செய்திட வேண்டாம். எந்த பாராவினை மாற்ற வேண்டுமோ அதில் ஊடாகக் கர்சரைக் கொண்டு நிறுத்தி ஷிப்ட் மற்றும் ஆல்ட் கீகளை அழுத்திக் கொண்டு நீங்கள் விரும்பும் திசை நோக்கிய ஆரோ கீகளை அழுத்தவும். பாரா அப்படியே நகர்ந்து சென்று நிற்கும். எந்த சூழ்நிலையிலும் பழைய படி இருக்க வேண்டும் என எண்ணினாலும் அப்படியே கொண்டு வரலாம். அல்லது கண்ட்ரோல் + இஸட் பயன்படுத்தலாம்.


வேர்டில் தேதியும் கிழமையும்:

வேர்ட் டாகுமெண்ட்டில் தேதியும் கிழமையும் அமைக்கவும், அவை தாமாக அவ்வப்போது அப்டேட் செய்திடவும் இத்தொகுப்பில் வழி உள்ளது. இதற்கு தேதியையும் கிழமையினையும் டைப் செய்திடத் தேவையில்லை. டாகுமெண்ட்டைத் திறந்து எங்கு தேதி மற்றும் கிழமை அமைய வேண்டுமோ, அங்கு கர்சரை நிறுத்தவும். பின்னர் மெனு பார் சென்று இன்ஸெர்ட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் "Date and Time" என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது "Date and Time" டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இதில் தேதியும் கிழமையும் எந்த பார்மட்டில் அமைக்கப்பட வேண்டும் என்பதனைத் தேர்ந்தெடுக்கலாம். இதில் 16 வகைகள் தரப்பட்டிருக்கும். சில பார்மட்டுகளில் நேரமும் அமைக்கப்படும் வகையில் தரப்பட்டிருக்கும். இதில் நீங்கள் விரும்பும் பார்மட்டினைத் தேர்ந்தெடுக்கலாம். நீங்கள் பார்க்கும் போது என்ன தேதி, கிழமை மற்றும் நேரம் உங்கள் கம்ப்யூட்டர் படி உள்ளதோ, அவை பார்மட் தேர்வில் காட்டப்படும்.
இதில் இன்னொரு அருமையான வசதியும் உள்ளது. நீங்கள் உங்கள் டாகுமெண்ட்டில் அமைக்கப்படும் தேதி தானாக அப்டேட் செய்யப்பட வேண்டும் என எண்ணினால் கீழாக "Update automatically" என்று இருக்கும். இதில் டிக் அடையாளத்தினை அமைத்து பின் ஓகே கிளிக் செய்து வெளியேறலாம். பின் அந்த டாகுமெண்ட்டில் தேதியும் கிழமையும், நீங்கள் தேர்ந்தெடுத்திருந்தால் நேரமும் அமையும்.

நன்றி: தினமலர்.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

கணினித் தகவல்கள்! Empty Re: கணினித் தகவல்கள்!

Post by மகி on Tue Oct 06, 2009 9:23 pm

டூயல் பூட்:

கம்ப்யூட்டர் ஒன்றை இரு வேறு ஆப்பரேட்டிங் சிஸ்டங்கள் வழியாக பூட் செய்யும் திறனை இது குறிப்பிடுகிறது. லினக்ஸ் பயன்பாடு பெருகிவரும் இந்நாளில் பலரும் விண்டோஸ் மற்றும் லினக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தைத் தங்கள் கம்ப்யூட்டர்களில் பதிந்து இயக்குவதனைக் காணலாம்.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

கணினித் தகவல்கள்! Empty Re: கணினித் தகவல்கள்!

Post by மகி on Tue Oct 06, 2009 9:24 pm

மவுஸ் பாய்ண்ட்டர்:

இதுதான் நீங்கள் மவுஸை நகர்த்துகையில் அங்கும் இங்கும் அலையும் பாய்ண்ட்டர். வழக்கமாக மேல் நோக்கி சிறிது சாய்வானதாக இருக்கும். இதனை மாற்றுவதற்கும் வசதிகள் உள்ளன. உரிக்கும் வாழைப்பழம், சிரிக்கும் முகம் என இந்த பாய்ண்ட்டரை மாற்றலாம். ஆனால் இவை அனிமேஷன் வகை என்பதால் ராம் மெமரி தேவையில்லாமல் காலியாகும். மேலும் அம்புக்குறியில் உள்ள தெளிவு, சுட்டிக் காட்டும் தன்மை இவற்றில் இருக்காது.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

கணினித் தகவல்கள்! Empty Re: கணினித் தகவல்கள்!

Post by மகி on Tue Oct 06, 2009 9:26 pm

ஒரு சிடி அல்லது டிவிடியை அதன் ட்ரேயில் வைத்து ட்ரேயைத் தள்ளியவுடன் உங்கள் கம்ப்யூட்டரில் ஆட்டோ ரன் செட் செய்தபடி அது இயங்கத் தொடங்குகிறது. ஆனால் உங்களுக்கு அந்த சிடி இயங்குவது பிடிக்கவில்லை. ட்ரேயைத் தள்ளியவுடன் அதனைப் படிக்க கம்ப்யூட்டர் முயற்சிக்கிறது அல்லவா? உடனே ஷிப்ட் கீயை அழுத்துங்கள். சிடி இயங்காது. நின்றுவிடும். ஆனால் விண்டோஸ் எக்ஸ்புளோரர் சென்று அதன் டைரக்டரியில் உள்ள பைல்களை நீங்கள் கையாளலாம்.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

கணினித் தகவல்கள்! Empty Re: கணினித் தகவல்கள்!

Post by மகி on Tue Oct 06, 2009 9:33 pm

வெப் பேஸ்டு இமெயில் என்பது ஒரு வெப் சர்வரில் உங்களுக்காக நீங்கள் அமைத்துக் கொண்ட இமெயில் வசதி ஆகும். இந்த இமெயில் கணக்கில் வரும் இமெயில்களை ஒரு வெப் பிரவுசர் துணையுடன் அந்த வெப் தளத்தில் நுழைந்து காண வேண்டும். அங்கிருந்தபடி தான் அவற்றைக் கையாள முடியும். கூகுள், விண்டோஸ் லைவ், யாஹூ ஆகியன இந்த வகையைச் சேர்ந்தவையே.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

கணினித் தகவல்கள்! Empty Re: கணினித் தகவல்கள்!

Post by மகி on Tue Oct 06, 2009 9:34 pm

WMA:

இது Windows Media Audio என்பதன் சுருக்கம். சுருக்கப்பட்ட டிஜிட்டல் மியூசிக் பார்மட். இதனை மைக்ரோசாப்ட் உருவாக்கி தன்னுடைய விண்டோஸ் மீடியா பிளேயரில் பயன்படுத்துகிறது. பாதுகாப்பாக மியூசிக் ட்ரேக்கைப் பயன்படுத்த இது உதவுகிறது. இருந்தாலும் எம்பி3 பார்மட் பயன்படும் அளவிற்கு இது பிரபலமாக வில்லை. இதே போல வீடியோவிற்கும் மைக்ரோசாப்ட் WMV என்ற ஒரு பார்மட்டை உருவாக்கித் தந்துள்ளது.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

கணினித் தகவல்கள்! Empty Re: கணினித் தகவல்கள்!

Post by மகி on Tue Oct 06, 2009 9:36 pm

கேஷ் மெமரி:

அடிக்கடி பயன்படுத்தும் டேட்டாவினைத் தற்காலிகமாகச் சேமித்து வைக்கும் மெமரி வகையினை இது குறிக்கிறது. இதனால் கம்ப்யூட்டர் விரைவாக இயங்க முடிகிறது. இதனை Cache என ஆங்கிலத்தில் எழுத வேண்டும்.

நன்றி: தினமலர்.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

கணினித் தகவல்கள்! Empty Re: கணினித் தகவல்கள்!

Post by அன்பு on Wed Oct 07, 2009 11:07 pm

தகவலுக்கு நன்றி !
அன்பு
அன்பு
உறுப்பினர்
உறுப்பினர்

பதிவுகள் : 39
புள்ளிகள் : 57
Reputation : 0
சேர்ந்தது : 07/10/2009

Back to top Go down

கணினித் தகவல்கள்! Empty Re: கணினித் தகவல்கள்!

Post by மகி on Wed Oct 14, 2009 6:51 am

Dialogue Box (டயலாக் பாக்ஸ்):

கம்ப்யூட்டர் பயன்பாட்டின் போது நம்மிடம் இருந்து தகவல்களைப் பெற்று இயங்க விண்டோஸ் இயக்கத்தில் எழுந்து வரும் ஒரு தகவல் கேட்பு கட்டம். தேவைப்படும் தகவல்களைத் தர இதில் தயாராக படிவம் போல வடிவமைக்கப் பட்டிருக்கும்.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

கணினித் தகவல்கள்! Empty Re: கணினித் தகவல்கள்!

Post by மகி on Wed Oct 14, 2009 6:52 am

Registry (ரெஜிஸ்ட்ரி):

விண்டோஸ் இயக்கத்துடன் இணைந்து அமைக்கப்பட்டுள்ள ஒரு பைல். கம்ப்யூட்டரில் உள்ள அனைத்து ஹார்ட்வேர் மற்றும் சாப்ட்வேர் குறித்த தகவல்களை உள்ளடக்கிய பைல். இதில் நாமாக மாற்றங்கள் ஏற்படுத்தும் முன் இதன் பேக் அப் காப்பி ஒன்றை எடுத்துக் கொள்வது நல்லது. புரோகிராம்களின் அடிப்படைச் செயல்பாட்டில் மாற்றங்களை மேற்கொள்ள இந்த பைலில் உள்ள வரிகளில் தான் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும்.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

கணினித் தகவல்கள்! Empty Re: கணினித் தகவல்கள்!

Post by மகி on Wed Oct 14, 2009 6:54 am

SPAM (ஸ்பேம்):

ஸ்பேம் என்பது தேவையற்ற நமக்கென எழுதப்படாத ஆனால் நம் முகவரிக்கு அனுப்பப் படும் ஒரு தீங்கு விளைவிக்கும் மெயில் கடிதமாகும். இமெயில் வசதியில் ஒட்டிக் கொண்டுள்ள மிகப் பெரிய தீங்கு இதுதான். ஒருவரின் இமெயில் இன்பாக்ஸில் இவை சென்று அதன் இடத்தைப் பிடித்துக் கொள்வதுடன் கம்ப்யூட்டருக்கும் தீங்கு விளைவிக்காமல் இருக்க நாம் பயர்வால் (Firewall) பயன்படுத்துகிறோம். அல்லது ஆன்ட்டி வைரஸ் புரோகிராம் பயன்படுத்துகிறோம். இவற்றின் வழியாகத்தான் அனைத்து இமெயில்களும் கடந்து செல்ல வேண்டும். இவை இரண்டும் அனைத்து இமெயில்களையும் சோதனை செய்கின்றன. இமெயிலுடன் இணைக்கப்பட்டு வரும் அட்டாச்மென்ட் என்னும் பைல்களையும் சோதனை செய்கின்றன. சந்தேகப்படும் வகையில் ஏதேனும் மெயில் அல்லது அட்டாச்மெண்ட் இருந்தால் உடனே அதனை குவாரண் டைன் என்னும் பாதுகாப்பான இடத்தில் வைத்து அது யாருக்காக அனுப்பப் பட்டுள்ளதோ அவருக்கு தகவல் தெரிவிக்கின்றன.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

கணினித் தகவல்கள்! Empty Re: கணினித் தகவல்கள்!

Post by மகி on Wed Oct 14, 2009 6:56 am

ISP Internet Service Provider:

இன்டர்நெட் இணைப்பு தந்து இன்டர்நெட் தளங்களைப் பார்வையிட வசதி தரும் ஒரு நிறுவனம். இந்த இணைப்பு நேரடியாக கம்பி இணைப்பாகவோ அல்லது தொலைபேசி வழியாகவோ அல்லது வயர்லெஸ் மோடம் வழியாகவோ இருக்கலாம்.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

கணினித் தகவல்கள்! Empty Re: கணினித் தகவல்கள்!

Post by மகி on Wed Oct 14, 2009 6:57 am

JPEG:

படங்களுக்கான பைல் வடிவம். இந்த பைல் பார்மட்டில் படங்கள் சுருக்கப்பட்டு பின் பார்க்கையில் விரிக்கப்படுகின்றன. இதனால் இந்த வகை பைல்களின் அளவு மற்ற பட பைல்களின் அளவினைக் காட்டிலும் குறைவாக இருக்கும். இதன் மூலம் பட பைல்களைப் பரிமாறிக் கொள்வது எளிது.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

கணினித் தகவல்கள்! Empty Re: கணினித் தகவல்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum