தமிழ் | Tamil | Forum
தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

கூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.

புகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.
Latest topics
» வணக்கம் என் பெயர் நாகராசன்.இரா
by rajan_1972 Yesterday at 7:20 pm

» சிறந்த பொழுதுபோக்கு இணையதளம்!
by pba Sat Jul 02, 2016 8:11 pm

» ஏற்றுமதி உரிமம் பெறும் விண்ணப்பம்
by tamilnews Tue Mar 24, 2015 8:00 pm

» மொபைல், டிடிஎச் ரீசார்ஜ் செய்யப் போறீங்களா? இந்த சலுகைகளைப் பாருங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:41 am

» மொபைல் ரீசார்ஜ் செய்து ஷாப்பிங் கூப்பன் இலவசமாக பெறுங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:38 am

» மெமரி கார்டு வாங்கப் போறீங்களா? 74% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:36 am

» அமேசானில் பெண்களுக்கான ஆடைகள் 70% வரை தள்ளுபடி !
by dsytamil Wed Jan 14, 2015 1:34 am

» அமேசானில் ஆண்களுக்கான ஆடைகள் 60% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:31 am

» லெனோவா டேப்ளட் 43% சலுகை விலையில் ரூ. 5949 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:28 am

» ப்ளிப்கார்ட் தளத்தில் சிறுவர்களுக்கான ஆடைகள் 70% வரை + 30% கூடுதல் தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:14 am

» அமேசான் தளத்தில் 50% தள்ளுபடி விலையில் மொபைல்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:13 am

» ரூ. 7499 மதிப்புள்ள மைக்ரோமேக்ஸ் ஏ1 ஆன்ட்ராய்டு மொபைல் இப்போது ரூ. 5499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:11 am

» ரூ. 19999 மதிப்புள்ள நோக்கியா லூமியா 625 மொபைல் ரூ. 7499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:10 am

» ப்ராண்டட் காலணிகளுக்கு 70% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:08 am

» ஆன்லைன் ஷாப்பிங்கில் ப்ரிண்டர்களுக்கு 33% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:06 am

» ஆன்லைனில் பொருள் வாங்கப் போறீங்களா? 70% வரை பணத்தை சேமியுங்கள்!
by dsytamil Tue Jan 13, 2015 12:30 am

» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...!
by sathikdm Sun Oct 19, 2014 4:45 pm

» சிறுதொழில் செய்பவர்கள் இணையதளம் தொடங்க வேண்டியதின் அவசியம்!
by pba Sat Sep 27, 2014 12:58 am

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:47 pm

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:42 pm

» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
by santhoshpart Wed Aug 27, 2014 4:22 pm

» “சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா!”
by santhoshpart Wed Aug 13, 2014 3:54 pm

» Daily Rs.500/- and Above
by K.MARIAPPAN Wed Jul 30, 2014 12:01 pm

» http://www.neobux.com/?r=narasimmant
by Navaneethakrishnan Wed Jul 02, 2014 3:41 pm

» வணக்கம் என் பெயர் வேணு
by A.Venu Fri Jun 27, 2014 10:10 am

» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?
by sathikdm Wed Jun 18, 2014 3:24 pm

» தமிழ் மொழி மூல கல்வி இணையதளம்
by afdhaal Wed May 28, 2014 9:22 pm

» வருக. வருக. வணக்கம்.
by மகி Mon May 12, 2014 3:55 pm

» அறிமுகம் -விநாயகா செந்தில்.
by மகி Mon May 12, 2014 3:53 pm

» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....!
by vinayagasenthil Sat May 10, 2014 9:04 pm

பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

கணினித் தகவல்கள்!

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

கணினித் தகவல்கள்! - Page 3 Empty Re: கணினித் தகவல்கள்!

Post by மகி on Fri Oct 16, 2009 6:32 am

ஸ்டார்ட் மெனு (எக்ஸ்பி):

உங்கள் கம்ப்யூட்டரில் நிறைய புரோகிராம்களை இன்ஸ்டால் செய்திருந்தால் ஸ்டார்ட் அழுத்திக் கிடைக்கும் ஆல் புரோகிராம்ஸ் பட்டியல் மிகப் பெரியதாக இருக்கும். ஒரு குறிப்பிட்ட வரிசைக் கிரமத்தில் இருக்காது. இதனைப் பல வகைகளாகப் பிரித்து அடுக்கும் வசதியினை எக்ஸ்பி சிஸ்டம் தருகிறது. இதனைப் பயன்படுத்த ஸ்டார்ட் பட்டனில் லெப்ட் கிளிக் செய்து பின் ஆல் புரோகிராம்ஸ் மீது ரைட் கிளிக் செய்து மெனுவினைப் பெறவும்.

இதில் Open அல்லது Open All Users என்பதைத் திறக்கவும். இங்கு போல்டர்களில் இந்த புரோகிராம்கள் காட்டப்படும். இவற்றைப் புதிய துணை போல்டர்களை உருவாக்கி புரோகிராம்களை வகைப்படுத்தி வைக்கலாம். இதில் ஏதேனும் தவறு ஏற்பட்டால் Edit மெனு சென்று அதில் Undo என்ற பட்டனில் கிளிக் செய்திடவும்.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

கணினித் தகவல்கள்! - Page 3 Empty Re: கணினித் தகவல்கள்!

Post by மகி on Fri Oct 16, 2009 6:33 am

டபுள் கிளிக் (எக்ஸ்பி):

ஒரு போல்டரில் டபுள் கிளிக் செய்கையில் என்ன ஏற்பட வேண்டும் என்பதனை ஆல்ட் அழுத்தி மாற்றலாம். ஆல்ட் கீ அழுத்தியவாறே புரோகிராம் மீது அழுத்தினால் அந்த புரோகிராம் சார்ந்த ப்ராப்பர்ட்டீஸ் விண்டோ கிடைக்கும். இந்த விண்டோவில் அந்த போல்டருக்கான ஐகானை மாற்றலாம்; வியூவினை மாற்றலாம். கண்ட்ரோல் அல்லது ஷிப்ட் கீயுடன் அழுத்துகையில் போல்டர் ஒரு புது விண்டோவில் திறக்கப்படும். ஷிப்ட் கீயுடன் அழுத்துகையில் போல்டர் வியூ எக்ஸ்ப்ளோரர் பாரில் இடது பக்கம் கிடைக்கும்.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

கணினித் தகவல்கள்! - Page 3 Empty Re: கணினித் தகவல்கள்!

Post by மகி on Fri Oct 16, 2009 6:34 am

குயிக் டாகுமென்ட்ஸ் (எக்ஸ்பி):

விண்டோஸ் விஸ்டாவில் ஸ்டார்ட் மெனுவில் டாகுமென்ட்ஸ் என்ற பட்டன் இருப்பதைப் பார்க்கலாம். எக்ஸ்பியில் இது இல்லை. ஆனால் மிக எளிதாக இது போன்ற ஒரு பட்டனை எக்ஸ்பி சிஸ்டத்திலும் சேர்க்கலாம். டாஸ்க்பாரில் ரைட் கிளிக் செய்து ப்ராபர்ட்டீஸ் தேர்ந்தெடுக்கவும். கிடைக்கும் விண்டோவில் ஸ்டார்ட் டேப்பில் கிளிக் செய்திடவும். பின்னர் Customize என்பதில் கிளிக் செய்திடவும். இதில் உள்ள Advanced டேப்பில் என்டர் அழுத்தி ஸ்டார்ட் மெனு காட்டும் பிரிவுகளில் My Documents என்று இருப்பதனைக் கண்டறியவும். இதில் வரிசையாக உள்ளவற்றில் ஸ்குரோல் பார் மூலம் கீழே சென்றால் Display as Menu என்று ஒரு வரி இருப்பதனைக் காணலாம். இதில் கர்சரால் கிளிக் செய்து அங்குள்ள கட்டத்தில் மார்க் ஏற்படுத்தவும். பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி மை டாகுமென்ட்ஸ் பட்டன் கிடைக்கும்.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

கணினித் தகவல்கள்! - Page 3 Empty Re: கணினித் தகவல்கள்!

Post by மகி on Fri Oct 16, 2009 6:35 am

வேகமாக ஷட் டவுண் செய்திட (எக்ஸ்பி):

கம்ப்யூட்டரில் வேலையை முடித்துவிட்டு வேகமாகச் செல்ல முயற்சிப்போம். ஆனால் கம்ப்யூட்டர் தான் ஷட் டவுண் ஆக நேரம் எடுத்துக் கொண்டு நம் பொறுமையைச் சோதிக்கும். இதனைச் சற்று வேகமாக ஷட் டவுண் செய்திட ஒரு வழி உண்டு. இதற்கு மவுஸ் பயன்படுத்தாமல் கீ போர்டினைப் பயன்படுத்தலாம். ஸ்டார்ட் பட்டனை ஒரு முறை அழுத்தவும். ஸ்டார்ட் மெனு கிடைக்கும். உடனே ‘U’ கீயை அழுத்தவும். இப்போது ஷட் டவுண் மெனு திரையில் காட்டப்படும். இப்போது மீண்டும் ‘U’ கீயை அழுத்தினால் கம்ப்யூட்டர் உடனே ஷட் டவுண் ஆகும்; ‘S’ கீயை அழுத்தினால் ரீஸ்டார்ட் ஆகும்; ‘H’ கீயை அழுத்தினால் ஸ்டேண்ட் பை நிலைக்குச் செல்லும்; ‘ஏ’ கீயைஅழுத்தினால் ஹைபர்னேட் என்னும் நிலைக்குச் செல்லும். இறுதியாகத் தரப்பட்டுள்ள ஹைபர்னேட் நிலைக்குச் செல்ல அதற்கென ஏற்கனவே கம்ப்யூட்டரை செட் செய்திருக்க வேண்டும்.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

கணினித் தகவல்கள்! - Page 3 Empty Re: கணினித் தகவல்கள்!

Post by மகி on Fri Oct 16, 2009 6:37 am

ஆட்டோமேடிக் ஸ்குரோலிங்:

மிகப் பெரிய நீளமான டாகுமெண்ட்டைப் படிக்கையில் தானாகவே இந்த டாகுமெண்ட்டை ஸ்குரோல் செய்திடலாம். மவுஸ் கொண்டோ, என்டர் கீ தட்டியோ, ஸ்குரோல் பாரில் மவுஸ் கொண்டு அழுத்தியோ செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. மவுஸை டாகுமென்ட் உள்ளே சென்று வீலைக் கிளிக் செய்திடவும். மவுஸின் கர்சர் நடுவில் புள்ளியும் அதனைச் சுற்றி இரண்டு அல்லது நான்கு அம்புக் குறிகள் கொண்ட கர்சராக மாறும். இரண்டு அம்புக் குறிகள் என்றால் டாகுமெண்ட் தானாக மேலும் கீழும் செல்லும். நான்கு அம்புக் குறிகள் என்றால் நான்கு பக்கங்களிலும் செல்லும். இப்போது மவுஸை அசைத்தால் அந்த அடையாளம் நகரத் தொடங்கும். அந்நிலையில் எங்கு கிளிக் செய்தோமோ அங்கு இதே போன்ற டூப்ளிகேட் கர்சர் ஒன்று இருக்கும். இப்போது டாகுமெண்ட் பக்கம் தானாக நீங்கள் அசைத்த திசையில் நகரத் தொடங்கும். மவுஸை அசைத்து அது ஸ்குரோல் ஆகும் வேகத்தினைக் கட்டுப்படுத்தலாம்.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

கணினித் தகவல்கள்! - Page 3 Empty Re: கணினித் தகவல்கள்!

Post by மகி on Fri Oct 16, 2009 6:37 am

போல்டருக்கு ஷார்ட் கட்:

கம்ப்யூட்டர் பயன்படுத்தும் அனைவருமே புரோகிராம்களுக்கு ஷார்ட் கட்கள் அமைத்துப் பயன்படுத்துகிறோம். ஒரு சிலரே போல்டருக்கும் ஷார்ட் கட் அமைக்கலாம் என்பதனைத் தெரிந்து அவற்றிற்கும் ஷார்ட் கட்கள் அமைத்துப் பயன்படுத்தி வருகின்றனர். எப்படி அமைப்பது என்று பார்க்கலாம். டெஸ்க்டாப் பில் காலியாக உள்ள இடத்தில் ரைட் கிளிக் செய்து நியூ என்பதில் கிளிக் செய்து கிடைக் கும் மெனுவில் ஷார்ட் கட் என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது தோன்றும் சிறிய பாக்ஸில் போல்டர் உள்ள இடத்தின் பாத் அமைக்கவும். அடுத்து நெக்ஸ்ட் என்பதில் கிளிக் செய்து இதற்கு ஒரு பெயர் கொடுக்கவும். அதன்பின் பினிஷ் என்ற இடத்தில் கிளிக் செய்தால் ஷார்ட் கட் உருவாக்கப்பட்டு டெஸ்க்டாப்பில் இடம் பெறும். இதில் கிளிக் செய்தால் நேராக போல்டருக்குச் செல்லலாம்.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

கணினித் தகவல்கள்! - Page 3 Empty Re: கணினித் தகவல்கள்!

Post by மகி on Fri Oct 16, 2009 6:38 am

எக்ஸ்பிக்கு சைட் பார்:

விண்டோஸ் விஸ்டாவில் இருப்பதைப் போல சைட்பார் ஒன்றினை எக்ஸ்பி திரையில் அமைக்க விரும்பினால் அதற்கு வழி உள்ளது. இதற்கு கூகுள் டூல் பார் ஒன்றை டவுண்லோட் செய்திட வேண்டும். [You must be registered and logged in to see this link.] என்ற முகவரியில் உள்ள தளம் சென்று அதனை டவுண்லோட் செய்திடவும். இந்த பைலை டவுண்லோட் செய்தவுடன் கூகுள் டெஸ்க் டாப் டாஸ்க்பாரில் தானாகவே காட்டப்படும். இதனை சைட் பாராகப் பயன்படுத்த அதன் அருகே உள்ள கருப்பு அம்புக் குறியில் கிளிக் செய்து அதன் பின் சைட்பார் என்பதில் கிளிக் செய்திடவும். இந்த சைட்பாரில் இன்னும் பலவித பயன்பாட்டு புரோகிராம்களை இணைக்கலாம். கால்குலேட்டர், கடிகாரம், நியூஸ் பீட் போன்ற பல புரோகிராம்கள் கிடைக்கும். அத்துடன் இந்த கூகுள் டெஸ்க்டாப் மூலம் பைல் மற்றும் போல்டர்கள், இமெயில் செய்திகள் ஆகியவற்றை எக்ஸ்பியில் தேடிப் பெறுவதைக் காட்டிலும் வேகமாகத் தேடிப் பெறலாம்.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

கணினித் தகவல்கள்! - Page 3 Empty Re: கணினித் தகவல்கள்!

Post by மகி on Fri Oct 16, 2009 6:39 am

பிரைவேட் போல்டர்:

யூசர் அக்கவுண்ட் உருவாக்கிக் கம்ப்யூட்டரைப் பயன்படுத்தினாலும் மற்றவர்களின் பைல்களை நீங்களும் உங்கள் பைல்களை அவர்களும் பெற்றுக் காணும் வாய்ப்பு உள்ளது. போல்டர்களை பிரைவேட் என மாற்றிக் கொண்டால் இந்த வாய்ப்பு தடைபடும். எந்த போல்டரை இவ்வாறு மாற்ற வேண்டும் என முடிவு செய்கிறீர்களோ அந்த போல்டரின் மீது ரைட் கிளிக் செய்திட வேண்டும். கிடைக்கும் மெனுவில் ப்ராப்பர்ட்டீஸ் தேர்ந்தெடுக்கவும். பின் வரும் விண்டோவில் செக்யூரிட்டி டேப்பில் கிளிக் செய்திடவும். இங்கு ADD என்னும் பட்டனைத் தட்டுவதன் மூலம் இந்த போல்டரை யார் எல்லாம் பார்க்கலாம் என்று அவர்களின் யூசர் நேம் மட்டும் தேர்ந் தெடுக்கலாம். இந்த அனுமதியிலும் பல வகை உள்ளன.

இதனை செட் செய்திட என்று Allow / Deny என இரு பாக்ஸ் கிடைக்கும். இவற்றை டிக் செய்வதன் மூலம் வெவ்வேறு வகையில் இவர்களை இந்த போல்டரைப் பார்க்க அனுமதிக்கலாம். உங்களிடம் விண்டோஸ் ஹோம் எடிஷன் இருந்தால் கம்ப்யூட்டரைப் பூட் செய்து சேப் மோட் சென்று அங்குதான் இந்த மாற்றத்தை ஏற்படுத்த முடியும். எக்ஸ்பி புரபஷனல் எனில் நேராகவே இந்த மாற்றத்தை ஏற்படுத்தலாம்.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

கணினித் தகவல்கள்! - Page 3 Empty Re: கணினித் தகவல்கள்!

Post by மகி on Fri Oct 16, 2009 6:41 am

பைல் எக்ஸ்டென்ஷன் பெயர் தெரிய:

விண்டோஸ் எக்ஸ்பி மற்றும் விஸ்டா இரண்டிலும் பைல் ஒன்றின் எக்ஸ்டென்ஷன் பெயர் தெரியாமல் இருக்கும் வகையில் டிபால்ட்டாக அமைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் நமக்குச் சில வேளைகளில் பைல்களின் பெயர்கள் அதன் துணைப் பெயருடன் தேவையாய் இருக்கும்.

ஒரே பெயரில் பேஜ் மேக்கர், வேர்ட், பெயிண்ட் புரோகிராம்களில் பைல்களை உருவாக்கி இருப்போம். இவற்றில் நமக்குத் தேவையானதைப் பெற நமக்கு துணைப் பெயர் தெரியவேண்டியதிருக்கும். இந்த பெயரைக் காட்டும்படி சிஸ்டத்தினை செட் செய்திடலாம். இதற்கு விண்டோஸ் எக்ஸ்புளோரரைத் திறந்து Tools மெனுவினைத் திறக்கவும்.

விஸ்டாவில் ஆல்ட் கீயினை அழுத்தவும். பின் போல்டர் ஆப்ஷன்ஸ் என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இதில் வியூ டேப்பில் கிளிக் செய்து அதில் ‘Hide extensions for known file types’ என்று உள்ள வரியின் முன் உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிடவும். பின் ஓகே கிளிக் செய்து வெளியேறினால் அடுத்து பைல்களின் பெயர்கள் காட்டப்படுகையில் அவற்றின் துணைப் பெயர்களோடு அவை காட்டப்படும்.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

கணினித் தகவல்கள்! - Page 3 Empty Re: கணினித் தகவல்கள்!

Post by மகி on Fri Oct 16, 2009 6:48 am

டவுண்லோட் (Download):

கம்ப்யூட்டர் ஒன்றிலிருந்து நேரடியாக இன்னொரு கம்ப்யூட்டருக்குப் பைலை மாற்றுவதனை டவுண்லோட் எனக் குறிப்பிடுகிறோம். இருப்பினும் இன்டர்நெட் நெட்வொர்க்கில் இணைந்துள்ள கம்ப்யூட்டரி லிருந்து ஒரு பைல் இறக்கிப் பதியப்படு வதனையே இது பெரும்பாலும் குறிக்கிறது.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

கணினித் தகவல்கள்! - Page 3 Empty Re: கணினித் தகவல்கள்!

Post by மகி on Fri Oct 16, 2009 6:54 am

அட்டாச்மென்ட் (Attachment):

இமெயில் மெசேஜ் உடன் இணைத்து அனுப்பப்படும் ஒரு பைல். இந்த பைல் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். படங்கள், பாடல்கள், எம்.எஸ். ஆபீஸ் பைல்கள், சுருக்கப்பட்ட ஸிப் பைல்கள் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஒரு சில இமெயில் கிளையண்ட் புரோகிராம்கள் அவற்றின் வழியே அனுப்பப்படும் அட்டாச்மெண்ட் பைல்களுக்கு அதிக பட்ச அளவை வைத்துள்ளன. மேலும் மிகப் பெரிய அளவிலான பைல்களை இணைத்து அனுப்பு கையில் அவற்றை அனுப்பும் நேரமும் டவுண்லோட் செய்திடும் நேரமும் அதிகமாகும்.

நன்றி: தினமலர்.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

கணினித் தகவல்கள்! - Page 3 Empty Re: கணினித் தகவல்கள்!

Post by மகி on Mon Oct 19, 2009 11:35 pm

கம்ப்யூட்டரில் பலவகை அப்ளிகேஷன் புரோகிராம்களில் செயல்படுகையில் நாம் மேற்கொண்டு முடித்த செயல்பாட்டினை மீண்டும் மேற்கொள்ள Undo என்னும் வசதி தரப்பட்டுள்ளது. அதாவது எதனையாவது அழித்துவிட்டால், மீண்டும் அதனைக் கொண்டு வரலாம். அண்மையில் ஏற்படுத்திய மாற்றங்களை இந்த வசதி மூலம் ஒவ்வொரு மாற்றமாக மீண்டும் கொண்டு வரலாம். பிரவுசரிலும் அண்மைக் காலத்தில் இந்த வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. நீங்கள் மூடிய டேப்பினை மீண்டும் திறக்கலாம். இதற்கு கண்ட்ரோல்+ ஷிப்ட்+டி (Ctrl+Shft+T) அழுத்த வேண்டும். அதே போல மூடிய விண்டோவையும் கொண்டு வரலாம். அதற்கு அழுத்த வேண்டிய கீகள் கண்ட்ரோல் + ஷிப்ட் + என் (Ctrl+Shft+N).
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

கணினித் தகவல்கள்! - Page 3 Empty Re: கணினித் தகவல்கள்!

Post by மகி on Mon Oct 19, 2009 11:35 pm

ஆப்பரா பிரவுசரை பயன்படுத்துகிறீர்களா? அதில் நீங்கள் பார்க்கும் இணைய தளத்திற்கு மானிட்டர் ஸ்கிரீனில் அதிக பட்ச இடம் வேண்டுமா? அதில் உள்ள Tab Bar, Status Bar, Menu Bar போன்ற அனைத்தையும் மறைக்க வேண்டுமா? வியூ அழுத்துங்கள். கிடைக்கும் மெனுவில் Full Screen என்பதை அழுத்துங்கள். உங்களுக்கு முழுத்திரையும் கிடைக்கும். இணையதளம் சிறப்பாகக் காட்சி அளிக்கும். இதே விளைவினை எப்11 கீ அழுத்தியும் பெறலாம். மீண்டும் பழையபடி அனைத்து பார்களையும் பெற எஸ்கேப் அல்லது எப்11 கீயினையே அழுத்தவும்.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

கணினித் தகவல்கள்! - Page 3 Empty Re: கணினித் தகவல்கள்!

Post by மகி on Mon Oct 19, 2009 11:35 pm

[You must be registered and logged in to see this link.] என்று ஒரு சர்ச் இஞ்சின் உள்ளது. இதற்கென்று ஓர் தனித்துவம் உள்ளது. இதனைப் பயன்படுத்துபவர்கள் ஏதேனும் ஒரு பள்ளி அல்லது தர்மஸ்தாபனத்தின் பெயர் அளித்தால், இந்த தேடலில் கிடைக்கும் வருமானத்தில் பாதி அந்த தர்ம ஸ்தாபனத்திற்கு அல்லது பள்ளிக்கு அன்பளிப்பாக அனுப்பப்படும். பெயர் அளிக்காத பட்சத்தில் அந்த நிதி இந்த தள நிர்வாகிகள் அடையாளம் காணும் நிலையத்திற்கு வழங்கப்படும். இந்த தளத்தை யாஹூ இயக்குகிறது.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

கணினித் தகவல்கள்! - Page 3 Empty Re: கணினித் தகவல்கள்!

Post by மகி on Mon Oct 19, 2009 11:36 pm

டெஸ்க் டாப் உடனே பெற: விண்டோஸ் கீ + டி (Windows+D) மற்றும் விண்டோஸ் + எம் (Windows+M) என்ற இரண்டு ஷார்ட் கட் கீ தொகுப்புகளும், கம்ப்யூட்டரில் திறந்திருக்கும் அனைத்து புரோகிராம்களையும் மொத்தமாக டாஸ்க் பாரில் மினிமைஸ் செய்து டெஸ்க் டாப்பினைத் தரும். மீண்டும் அழுத்தினால் பழைய படி புரோகிராம்கள் இருந்த நிலைக்குச் செல்லும்.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

கணினித் தகவல்கள்! - Page 3 Empty Re: கணினித் தகவல்கள்!

Post by மகி on Mon Oct 19, 2009 11:36 pm

இணைய தளப் பக்கத்தில் ஏதாவது ஒரு குறிப்பிட்ட தகவலைப் பெற, ஒன்றிரண்டு சொற்கள் எங்கிருக்கின்றன எனத் தேடுகிறீர்களா? சிறிய தளமாக இருந்தால் பிரச்சினையில்லை. பெரிய தளமாக இருந்து உங்களுக்கு நேரமும் இருந்தால் சரி. ஆனால் விரைவாகப் பணியாற்ற விரும்புபவர்களுக்கு இது ஒரு தொல்லையாக இருக்கும். இவர்கள் இதற்கெனக் கவலைப்பட வேண்டியது இல்லை. தேட வேண்டிய சொல்லை சர்ச் பாக்ஸை வரவழைத்து அதில் கொடுத்துத் தேடலாம். சர்ச் பாக்ஸ் பெற Ctrl+F அழுத்த வேண்டும். அல்லது Edit மெனு பெற்று அதில் Find என்பதைக் கிளிக் செய்திடலாம். இதனால் தேடுதல் நேரம் மிச்சமாகும்.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

கணினித் தகவல்கள்! - Page 3 Empty Re: கணினித் தகவல்கள்!

Post by மகி on Mon Oct 19, 2009 11:37 pm

வேர்டில் உடனடியாக ஒரு டாகுமெண்ட்டில் ஸ்பெல்லிங் சோதனை மேற்கொள்ள எப்7 அழுத்தவும்.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

கணினித் தகவல்கள்! - Page 3 Empty Re: கணினித் தகவல்கள்!

Post by மகி on Mon Oct 19, 2009 11:37 pm

எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பில் நீங்கள் எந்த டெக்ஸ்ட், படம், கிராபிக்ஸ் என எதனை காப்பி அல்லது கட் செய்தாலும் அது கிளிப் போர்டு வியூவரில் தான் சென்று அமரும். எனவே எந்த ஒரு நிலையிலும் நீங்கள் இறுதியாகக் காப்பி செய்தது என்ன என்று தெரிந்து கொள்ள கிளிப் போர்டு வியூவரைக் காணலாம். இதனை எங்கிருந்து பெறுவது? எந்த தொகுப்பிலும் டெக்ஸ்ட் ஒன்றை தேர்ந்தெடுத்து கண்ட்ரோல் + சி அழுத்துகிறீர்கள் அல்லவா? அப்போது இருமுறை சி அழுத்துங்கள். உடனே கிளிப் போர்டு விரிவடையும். அதில் என்ன டெக்ஸ்ட் உள்ளது என்று தெரியவரும்.

நன்றி: தினமலர்.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

கணினித் தகவல்கள்! - Page 3 Empty Re: கணினித் தகவல்கள்!

Post by மகி on Mon Nov 02, 2009 4:35 am

பிரைவேட் பிரவுசிங்:

குரோம் பிரவுசர் அறிமுகப்படுத்தப்பட்ட போது அதில் பிரைவேட் பிரவுசிங் என்ற வசதி கொண்டுவரப்பட்டது. நாம் பிரவுசிங் செய்திடும் தளங்களைப் பற்றிய குறிப்புகள், பிரவுசரி ஏற்படுத்தப்படமாட்டாது. பிரவுசிங் செய்த தளங்களின் பெயர்கள் ஹிஸ்டரி என்று சொல்லப்படும் பட்டியலில் ஏறாது. அதே போல் குக்கிள் எதுவும் இந்த வகை பிரவுசிங்கில் பதியப்பட மாட்டாது. இது பப்ளிக் இன்டர்நெட் மையங்களில் பிரவுஸ் செய்கையில் மிகவும் உதவியாக இருக்கிறது. நாம் பிரவுஸ் செய்த தளங்களை மற்றவர்கள் கண்டறிய முடியாது. இப்போது பயர்பாக்ஸ் பிரவுசரிலும் இந்த வசதி தரப்பட்டுள்ளது. பிரைவேட் பிரவுசிங் மேற்கொள்ள Tools சென்று கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் Start Private Browsing என்பதில் கிளிக் செய்திடவும். உடனே ஓர் எச்சரிக்கை செய்தி கிடைக்கும். இந்த செஷனில் நீங்கள் பிரவுஸ் செய்வது குறித்த எந்த தகவலையும் பயர்பாக்ஸ் பதிந்து கொள்ளாது. ஆனால் உங்களுக்கு இணைய இணைப்பு தரும் சர்வரில் அவை பதிவாகும். மேலும் அதன் மூலம் யாரும் அதனை அறிந்து கொள்ளலாம் என்பதே. இந்த பிரைவேட் பிரவுசிங் வழியை நிறுத்த வேண்டும் என்றால் அதே வழியில் Tools கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் Start Private Browsing என்பதில் கிளிக் செய்திடவும்.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

கணினித் தகவல்கள்! - Page 3 Empty Re: கணினித் தகவல்கள்!

Post by மகி on Mon Nov 02, 2009 4:37 am

Save மற்றும் Save As என்ன வேறுபாடு?

எம். எஸ். ஆபீஸ் தொகுப்பில் உள்ள பல்வேறு பயன்பாட்டு சாப்ட்வேர் தொகுப்புகளில் பைல் மெனுவில் நாம் காணும் இரு வேறு பயன்பாடுகள் Save மற்றும் Save As ஆகும். இரண்டுமே ஒரு பைலை கம்ப்யூட்டரின் ஹார்ட் டிஸ்க் அல்லது பிளாப்பி டிஸ்க்கில் நாம் தயாரித்துக் கொண்டிருக்கும் பைலை பதிவு செய்கின்றன? அப்படியானால் இரண்டு பயன்பாட்டிற்கும் வேறுபாடு இல்லையா? ஒரே பயன்பாட்டிற்கு ஏன் இரண்டு வெவ்வேறு கட்டளைகள் என நீங்கள் எண்ணலாம்? இரண்டு கட்டளைகளும் பைலைப் பதிந்தாலும் இரண்டின் செயல்பாட்டில் சற்று வேறுபாடு இருக்கத்தான் செய்கிறது. நீங்கள் Save கட்டளை பயன்படுத்தும்போது அப்போது பயன்பாட்டில் உருவாக்கப்படும் பைல் அதே பெயரில் சேமிக்கப்படுகிறது. அந்த பைலுக்கு அதற்கு முன் பெயர் கொடுக்கவில்லை என்றால் பெயர் கொடுக்குமாறு கம்ப்யூட்டர் கேட்கும். பெயர் கொடுத்தவுடன் அது பதிவு செய்யப்படும். மீண்டும் அதே பைலில் பணியாற்றுகையில் Save கட்டளை கொடுத்தால் அதே பெயரில் சேவ் ஆகும். புதிய பெயர் கொடு என்றெல்லாம் கம்ப்யூட்டர் உங்களைக் கேட்காது. ஆனால் Save As கட்டளை கொடுக்கையில் அந்த பைலை ஒரு புதிய பைல் போன்று மற்றொரு பெயர் கொடுத்து சேவ் செய்திடலாம். அதாவது ஒரு டாகுமெண்ட்டில் எடிட் செய்து கொண்டிருக்கிறீர்கள். அப்போது ஒரு மாற்றத்தை ஏற்படுத்துகிறீர்கள். ஆனால் அந்த மாற்றத்துடன் உள்ள ஆவணத்தை வேறு ஒரு பெயரில் வைத்துக் கொள்ள விரும்புகிறீர்கள் என்றால் அப்போது Save As என்ற கட்டளை கொடுத்து சேமிக்கலாம். இவ்வாறு சேமித்த பின் விண்டோஸ் எக்ஸ்ப்ளோரர் சென்று பைல் டைரக்டரியைப் பார்த்தால் உங்கள் பைல் முந்தைய பெயரிலும் புதிய பெயரிலுமாக இரண்டு இருக்கும்.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

கணினித் தகவல்கள்! - Page 3 Empty Re: கணினித் தகவல்கள்!

Post by மகி on Mon Nov 02, 2009 4:39 am

ரன் விண்டோவில் இன்டர்நெட்:

இன்டர்நெட் தளம் ஒன்றை ரன் விண்டோவிலிருந்து வாங்கலாம். அதிசயமாயிருக்கா? இன்டர்நெட் எக்ஸ்புளோரரை இயக்காமல் ஸ்டார்ட் அழுத்தி வரும் ரன் பெட்டியில் தளப் பெயரை டைப் செய்து என்டர் தட்டவும். உங்கள் பிரவுசர் திறக்கப்பட்டு அதில் அந்த முகவரி காட்டப்பட்டு முகவரிக்கான தளம் தேடப்பட்டு கிடைக்கும். எடுத்துக்காட்டாக [You must be registered and logged in to see this link.] என்ற தளம் வேண்டுமாயின் ரன் பெட்டியில் அப்படியே டைப் செய்திடவும். பின் என்டர் தட்ட இணைய தளம் உங்களுக்குக் கிடைக்கும்.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

கணினித் தகவல்கள்! - Page 3 Empty Re: கணினித் தகவல்கள்!

Post by மகி on Mon Nov 02, 2009 4:43 am

பேக் அப் பைல்களை காலி செய்யலாமே!

சில இமேஜிங் சாப்ட்வேர், மீடியா கிரியேஷன் சாப்ட்வேர் மற்றும் சில சாப்ட்வேர் தொகுப்புகளில் பணியாற்றுகையில் உங்கள் பைல்களின் பேக்கப் பைல்கள் உருவாகி கம்ப்யூட்டரில் ஹார்ட் டிஸ்க்கில் இடம் பிடிக்கும். இந்த வகை பேக்கப் பைல்கள் அதன் ஒரிஜினல் பைலின் இறுதியாகத் திருத்தப்பட்ட படிவத்திற்கு முந்தையதாக இருக்கும். இவை ஒன்றும் அவ்வளவாக இடத்தைப் பிடிக்காது என்றாலும் எடுக்க மறந்த நம் வீட்டுச் சுவர் ஒட்டடை போல டிஸ்க்கில் இடத்தை மெதுவாகப் பிடித்துக் கொண்டே வந்து காலப் போக்கில் ஒரு கிகா பைட்டையே பிடித்துவிடலாம். எனவே இவற்றை அவ்வப்போது காலி செய்துவிட வேண்டும். அதற்கான வழியைப் பார்ப்போம்.
இந்த வகை பைல்களின் பைல் பெயர் எக்ஸ்டென்ஷன் பெரும்பாலும் .bac, .bak, .bck, .bk!, .bk$. என்ற வகையில் இருக்கும். எனவே இந்த பைல்களை நீக்கிட இந்த எக்ஸ்டென்ஷன் பெயர் கொண்டு எளிதாகத் தேடி நீக்கிவிடலாம். தேவையெனில் பாதுகாப்பாக அண்மையில் தயாரித்த பைல்களின் பேக்கப் பைல்களை மட்டும் வைத்துக் கொள்ளலாம். எக்ஸ்டென்ஷன் கொண்டு தேடிக் கிடைக்கும் பைல்களில் தேதி கொண்ட (Date Modified) டேபில் ஒரு கிளிக் செய்திடவும். இப்போது தேதி வாரியாக இவை அடுக்கப்படும். பின் ஒரு வார கால அளவில் தயாரித்த பைல்களின் பேக்கப் பைல்களை வைத்துக் கொண்டு மற்றவற்றை மொத்தமாக ஷிப்ட் கீ அழுத்தி தேர்ந்தெடுத்து அழித்து விடலாம். ஏற்கனவே கூறியபடி இவற்றை அழிப்பதால் பல கிகாபைட் அளவு இடம் கிடைக்காது என்றாலும் எதற்காக தேவையற்ற பைல்களை நம் கம்ப்யூட்டரில் வைத்து இடம் பிடிக்க விட வேண்டும்.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

கணினித் தகவல்கள்! - Page 3 Empty Re: கணினித் தகவல்கள்!

Post by மகி on Mon Nov 02, 2009 4:43 am

சப் போல்டர்கள்:

போல்டருக்குள்ளாக போல்டர் களை உருவாக்க வேண்டுமா? ஒரு போல்டருக்குள் செல்லவும். பின் ஆல்ட் கீ அழுத்திக் கொண்டு, கவனமாக எப், டபிள்யூ, எப் என வரிசையாக அழுத்தவும். புதிய போல்டர் ஒன்று உருவாக்கப்படும். இன்னும் சப் போல்டர்கள் தேவையா? மீண்டும் இதே போல கீகளை அழுத் தவும். போல்டர்கள் உருவான பின் எக்ஸ்புளோரர் மூலமாக அவற்றை அணுகி, பெயர்களை மாற்றலாம்.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

கணினித் தகவல்கள்! - Page 3 Empty Re: கணினித் தகவல்கள்!

Post by மகி on Mon Nov 02, 2009 4:44 am

எமோட்டிகான்:

நம் உணர்ச்சிகளைக் காட்டும் சிறிய படங்கள். மின்னஞ் சல் கடிதங்கள், இன்ஸ்டண்ட் மெசஞ்சர் செய்திகள், சேட் ரூம்கள் எனப்படும் அரட்டை அறைகள் போன்றவற்றில், நம் செய்திகளைத் தெரிவித்த பின், அதன் சார்பாக நம் உணர்வுகளுக்கேற்ப இந்த சிறிய படங்களைத் தேர்ந்தெடுத் து இணைக்கலாம்.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

கணினித் தகவல்கள்! - Page 3 Empty Re: கணினித் தகவல்கள்!

Post by மகி on Mon Nov 02, 2009 4:46 am

வண்ணமயமான டைட்டில் பார்:

உங்கள் விண்டோவின் டைட்டில் பார் (மினிமம், மேக்ஸிமம் மற்றும் குளோஸ் பட்டன்கள் உள்ள மிக மேலாக உள்ள பார்) வழக்கமாக மாறா நிலையில் நீல நிறத்தில் இருக்கும். இதனை வண்ணமயமாக மாற்ற வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்களா! டெஸ்க் டாப்பில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் ப்ராப்பர்ட்டீஸ் (Properties) என்ற பிரிவில் கிளிக் செய்தி டவும். (விஸ்டாவில் இது பெர்சனலைஸ் (Personalize) என்று அழைக்கப்படுகிறது). உடன் டிஸ்பிளே செட்டிங்ஸ் காட்டப்படும். இந்த விண்டோவில் அப்பியரன்ஸ் டேப் தேர்ந்தெடுக்கவும். (விஸ்டாவில் விண்டோஸ் கலர் அண்ட் அப்பியரன்ஸ் என்று இருக்கும்).பின் அட்வான்ஸ்டு என்ற பட்டனில் கிளிக் செய்திடவும். பின் கீழாக ஆப்ஷன்ஸ் பாக்ஸ் திறக்கும் வகையில் உள்ள ஐட்டம் (Item) என்ற பாக்ஸில் கிளிக் செய்தால் கிடைக்கும் பட்டியலில் ஆக்டிவ் டைட்டில் பார் (Title Bar) என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது இதற்கு வலது பக்கமாக இரண்டு கூடுதலாக ட்ராப் டவுண் பாக்ஸ் இருக்கும். அதில் கலர் (Color) மற்றும் கலர்2 (Color2) எனத் தரப்பட்டிருக்கும். இதில் முதலாவது பெட்டியில் தேர்ந்தெடுக்கப்படும் கலர்தான் உங்கள் டைட்டில் பாரின் கலர். இரண்டா வதாக உள்ள பெட்டியில் தேர்ந்தெடுக் கப்படும் கலருக்குள் தான் முதல் கலர் மறையும். இதனை உங்கள் விருப்பப்படி அமைக்கலாம். எப்படி அமையும் என்பதனை முன்கூட்டியே அதே திரையில் காணலாம். இதன் உதவியுடன் வண்ணங் களை அமைத்து ஓகே கிளிக் செய்து வெளியேறலாம்.

நன்றி: தினமலர்.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

கணினித் தகவல்கள்! - Page 3 Empty Re: கணினித் தகவல்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum