தமிழ் | Tamil | Forum
தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

கூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.

புகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.
Latest topics
» வணக்கம் என் பெயர் நாகராசன்.இரா
by rajan_1972 Yesterday at 7:20 pm

» சிறந்த பொழுதுபோக்கு இணையதளம்!
by pba Sat Jul 02, 2016 8:11 pm

» ஏற்றுமதி உரிமம் பெறும் விண்ணப்பம்
by tamilnews Tue Mar 24, 2015 8:00 pm

» மொபைல், டிடிஎச் ரீசார்ஜ் செய்யப் போறீங்களா? இந்த சலுகைகளைப் பாருங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:41 am

» மொபைல் ரீசார்ஜ் செய்து ஷாப்பிங் கூப்பன் இலவசமாக பெறுங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:38 am

» மெமரி கார்டு வாங்கப் போறீங்களா? 74% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:36 am

» அமேசானில் பெண்களுக்கான ஆடைகள் 70% வரை தள்ளுபடி !
by dsytamil Wed Jan 14, 2015 1:34 am

» அமேசானில் ஆண்களுக்கான ஆடைகள் 60% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:31 am

» லெனோவா டேப்ளட் 43% சலுகை விலையில் ரூ. 5949 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:28 am

» ப்ளிப்கார்ட் தளத்தில் சிறுவர்களுக்கான ஆடைகள் 70% வரை + 30% கூடுதல் தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:14 am

» அமேசான் தளத்தில் 50% தள்ளுபடி விலையில் மொபைல்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:13 am

» ரூ. 7499 மதிப்புள்ள மைக்ரோமேக்ஸ் ஏ1 ஆன்ட்ராய்டு மொபைல் இப்போது ரூ. 5499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:11 am

» ரூ. 19999 மதிப்புள்ள நோக்கியா லூமியா 625 மொபைல் ரூ. 7499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:10 am

» ப்ராண்டட் காலணிகளுக்கு 70% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:08 am

» ஆன்லைன் ஷாப்பிங்கில் ப்ரிண்டர்களுக்கு 33% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:06 am

» ஆன்லைனில் பொருள் வாங்கப் போறீங்களா? 70% வரை பணத்தை சேமியுங்கள்!
by dsytamil Tue Jan 13, 2015 12:30 am

» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...!
by sathikdm Sun Oct 19, 2014 4:45 pm

» சிறுதொழில் செய்பவர்கள் இணையதளம் தொடங்க வேண்டியதின் அவசியம்!
by pba Sat Sep 27, 2014 12:58 am

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:47 pm

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:42 pm

» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
by santhoshpart Wed Aug 27, 2014 4:22 pm

» “சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா!”
by santhoshpart Wed Aug 13, 2014 3:54 pm

» Daily Rs.500/- and Above
by K.MARIAPPAN Wed Jul 30, 2014 12:01 pm

» http://www.neobux.com/?r=narasimmant
by Navaneethakrishnan Wed Jul 02, 2014 3:41 pm

» வணக்கம் என் பெயர் வேணு
by A.Venu Fri Jun 27, 2014 10:10 am

» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?
by sathikdm Wed Jun 18, 2014 3:24 pm

» தமிழ் மொழி மூல கல்வி இணையதளம்
by afdhaal Wed May 28, 2014 9:22 pm

» வருக. வருக. வணக்கம்.
by மகி Mon May 12, 2014 3:55 pm

» அறிமுகம் -விநாயகா செந்தில்.
by மகி Mon May 12, 2014 3:53 pm

» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....!
by vinayagasenthil Sat May 10, 2014 9:04 pm

பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

கணினித் தகவல்கள்!

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

கணினித் தகவல்கள்! - Page 4 Empty Re: கணினித் தகவல்கள்!

Post by மகி on Tue Nov 03, 2009 3:32 pm

பயர்பாக்ஸை வேகப்படுத்த:

யார் தான் தங்கள் பிரவுசர் வேகமாக இயங்கி நாம் பார்க்க விரும்பும் தகவல்களை விரைவாகவும், நல்ல முறையிலும், சிறப்பாகவும் டவுண்லோட் செய்திட வேண்டும் என எதிர்பார்க்க மாட்டார்கள். மற்ற பண்புகள் இல்லாவிட்டாலும் வேகமாக இயங்க வேண்டும் என நாம் அனைவருமே எதிர்பார்க்கலாம். இதனை SpeedyFox என்ற புரோகிராம் நமக்குத் தருகிறது. இது முதலில் பயர்பாக்ஸ் தொகுப்பை வேகமாக நம் சிஸ்டத்தில் இயக்கக் கொண்டு வருகிறது. பிரவுசிங் ஹிஸ்டரி மற்றும் குக்கிகளை வழக்கத்தைக் காட்டிலும் விரைவாகச் செயல்படுத்துகிறது. இதனை [You must be registered and logged in to see this link.] என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம்.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

கணினித் தகவல்கள்! - Page 4 Empty Re: கணினித் தகவல்கள்!

Post by மகி on Tue Nov 03, 2009 3:33 pm

சிஸ்டத்திற்குள் சிஸ்டம்:

ஒரே கம்ப்யூட்டரில் இரண்டு சிஸ்டங்கள் இருந்தால், பூட் செய்கையில் எந்த சிஸ்டத்தில் நுழைய என்று ஒரு கேள்வி கேட்கப்பட்டு, நம் ஆப்ஷனைக் கேட்கும் ஒரு விண்டோ தரப்படும். ஐ ரிபூட் (iReboot) என்ற புரோகிராம் விண்டோஸ் தொடங்கிய பின்னரும் அதனுள்ளாக இன்னொரு ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்குவதற்கான ஆப்ஷனைத் தருகிறது. அப்படி ஆப்ஷன் தரும் சிஸ்டம் ஒன்றுக்கு மேற்பட்ட எண்ணிக்கையிலும் உள்ளது. விண்டோஸ் இயங்கிய பின் இது சிஸ்டம் ட்ரேயில் அமர்ந்து கொள்கிறது. அதனைக் கிளிக் செய்தால் நமக்கு ஆப்பரேட்டிங் சிஸ்டம் தேர்வு செய்திட ஆப்ஷன்ஸ் தருகிறது. இதிலிருந்து ஒன்றைத் தேர்ந்தெடுத்தால், தேர்ந் தெடுத்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் கம்ப்யூட்டர் நுழைந்து கொள்கிறது. இதைப் போன்ற ஒரு வசதி, விண்டோஸ் 7 உட்பட, எந்த விண்டோஸ் சிஸ்டத்திலும் தரப்படவில்லை. இதனைப் பெற [You must be registered and logged in to see this link.] என்ற முகவரியில் உள்ள தளம் செல்லவும்.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

கணினித் தகவல்கள்! - Page 4 Empty Re: கணினித் தகவல்கள்!

Post by மகி on Tue Nov 03, 2009 3:34 pm

விண்டோஸ் நேரம்:

கம்ப்யூட்டரை எவ்வளவு நேரம் நீங்கள் பயன்படுத்தி இருக்கிறீர்கள் என்று அறிய வேண்டுமா? அல்லது வேறு எவரேனும் செயல்பட்ட காலத்தைத் தெரிந்து கொள்ள வேண்டுமா? விண்டோஸ் ஆக்டிவிட்டி மானிட்டர் (Windows Activity Monitor) என்ற புரோகிராம் நமக்கு இந்த வழியில் உதவுகிறது. ஒவ்வொரு விண்டோவும் எவ்வளவு நேரம் இயங்கியுள்ளது என்ற தகவலை நமக்குத் தருகிறது. ஒன்றுக்கு மேற்பட்ட விண்டோ என்றால் பயன்படுத்திய நேரத்தினை வரைபடமாகவும் தருகிறது. விண்டோக்களை நாம் இணைத்தும் காணலாம். "Work", "School", "Fun" எனப் பிரிவுகளாகவும் இணைத்துக் காணலாம். குழந்தைகள் நம் கம்ப்யூட்டரைப் பயன்படுத்துவதாக இருந்தால், இத்தகைய கண்காணிப்புகள் அவர்கள் கம்ப்யூட்டரிலும் இன்டர்நெட்டிலும் என்ன செய்கிறார்கள் என்பதைக் காட்டும். இந்த புரோகிராமினை [You must be registered and logged in to see this link.] என்ற முகவரியில் நீங்கள் பெறலாம்.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

கணினித் தகவல்கள்! - Page 4 Empty Re: கணினித் தகவல்கள்!

Post by மகி on Tue Nov 03, 2009 3:34 pm

ஈஸி பைல் லாக்கர் (Easy File Locker):

எத்தனையோ வாசகர்கள் அவர்களின் கடிதங்களில் பைல்களை எப்படி மற்றவர்கள் அணுகாமல் பாதுகாப்பது என்று கேள்விகளை அனுப்பி வருகின்றனர். நாமும் அவர்களுக்குப் பலமுறை பல வழிகளைச் சொல்லி வந்திருக்கிறோம். இந்த புரோகிராம் சரியாகத் தன் பெயருக்கேற்றபடியான வேலைகளைச் செய்கிறது. இந்த புரோகிராம் பைல்களை லாக் செய்வது மட்டுமின்றி, மற்றவர் கண்களிலிருந்து மறைக்கவும் செய்கிறது. இதன் சிறப்பம்சம் என்னவென்றால், இதனை எந்த பாஸ்வேர்டும் இன்றி இது செயல்படுத்துகிறது. அந்தக் கால விண்டோஸ் 95 தொகுப்பில் செயல்படுவது போல இது செயல்படுகிறது. கருப்பு பின்னணியில் வெள்ளை பட்டன்களுடனும், பைல்களை ட்ராக் அண்ட் ட்ராப் வழியில் கொண்டு வரும் வசதிகளுடனும் செயல்படுகிறது. இதனைப் பெற [You must be registered and logged in to see this link.] என்ற முகவரிக்குச் செல்லவும்.

நன்றி: தினமலர்.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

கணினித் தகவல்கள்! - Page 4 Empty Re: கணினித் தகவல்கள்!

Post by மகி on Tue Nov 24, 2009 3:23 am

டாகிள் கீ:

டாகிள் கீ என்று தனியாக ஒரு கீ இல்லை. கீ போர்டில் சில தனிப்பட்ட இயக்கங்களுக்கு என்று பல கீகள் தரப்பட்டுள்ளன. எடுத்துக் காட்டாக பெரிய எழுத்தில் அடிக்க கேப்ஸ் லாக், டெக்ஸ்ட் செருக இன்ஸெர்ட், ஸ்குரோல் லாக், நம்லாக் (Caps Lock, Insert, Scorll Lock, Num Lock) போன்றவற்றைச் சொல்லலாம். இவற்றைப் பயன்பாட்டுக்குக் கொண்டு வரவும் அந்த பயன்பாட்டை நிறுத்தவும் ஒரே கீ பயன்படுத்தப்படுகிறது. எடுத்துக் காட்டாக பெரிய எழுத்து வேண்டும் என்றால் Caps Lock கீயை அழுத்துகிறோம். பின்னர் வேண்டாம் என்றால் அதனையே மீண்டும் அழுத்துகிறோம். மேலே சொன்ன அனைத்து கீகளையும் இவ்வாறே செயல்படுத்துகிறோம். இவ்வாறு செயல்படுத்தப்படும் கீகளையே டாகிள் கீ (Toggle Key) என அழைக்கிறோம்.

நன்றி: தினமலர்.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

கணினித் தகவல்கள்! - Page 4 Empty Re: கணினித் தகவல்கள்!

Post by மகி on Sat Dec 05, 2009 2:12 pm

டாகுமெண்ட் ஒன்றை நண்பருக்கு இமெயிலில் அனுப்புகையில் அதனுடன் பாண்ட் ஒன்றையும் அனுப்ப முடிவு செய்கிறீர்கள். பெரும்பாலும் தமிழில் அமைக்கப்பட்ட டாகுமெண்ட்களுடன் இது போல பாண்ட் அனுப்பப்படுவதனைப் பார்க்கலாம். இந்த பாண்ட்டை எப்படி இமெயிலில் இணைத்து அனுப்புவது? எந்த எழுத்துவகையையும் பாண்ட்ஸ் போல்டரி லிருந்து நேரடியாக இமெயில் அட்டாச்டு பைலாக அனுப்ப முடியாது. எனவே அதனை வேறு ஒரு டிரைவ் அல்லது போல்டருக்குக் காப்பி செய்து பின்னரே அட்டாச் செய்து அனுப்ப முடியும்.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

கணினித் தகவல்கள்! - Page 4 Empty Re: கணினித் தகவல்கள்!

Post by மகி on Sat Dec 05, 2009 2:13 pm

நோட்பேடில் டெக்ஸ்ட் அமைக்கையில் அன்றைய தேதி மற்றும் கிழமையை அமைத்திடும் ஷார்ட் கட் கீ F5 கீயாகும்.

நன்றி: தினமலர்.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

கணினித் தகவல்கள்! - Page 4 Empty Re: கணினித் தகவல்கள்!

Post by மகி on Mon Dec 07, 2009 2:38 am

ஏதேனும் புரோகிராம் அல்லது பைலுக்கான ஷார்ட் கட் ஒன்றை ஸ்டார்ட் மெனுவில் இடம் பெறுமாறு செய்திடலாம். இதற்கு டெஸ்க் டாப்பில் உள்ள அந்த ஷார்ட் கட் ஐகானை மவுஸால் இழுத்து வந்து ஸ்டார்ட் பட்டனில் விட்டுவிடவும். இனி ஸ்டார்ட் பட்டனில் கிளிக் செய்து பார்த்து அந்த ஷார்ட் கட் மெனுவில் உள்ளதை உறுதி செய்திடவும். இதனை எப்படி நீக்கலாம். அதுவும் மிகவும் எளிதே. ஸ்டார்ட் பட்டன் அழுத்தி, எந்த புரோகிராமினை அந்த பட்டியலில் இருந்து மட்டும் நீக்க வேண்டுமோ, அதன் மீது கர்சரை வைத்து ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் Remove from this list என்று இருக்கும் பிரிவில் கிளிக் செய்துவிட்டால் அது நீக்கப்படும்.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

கணினித் தகவல்கள்! - Page 4 Empty Re: கணினித் தகவல்கள்!

Post by மகி on Mon Dec 07, 2009 2:38 am

எம்.எஸ். அவுட்லுக்கில் இமெயில் அல்லது அப்பாய்ண்ட்மென்ட் ஒன்றை மூடுவதற்கு Ctrl + F4 பயன்படுத்திப் பாருங்கள். செயல்படாது. ஏனென்றால் அவுட்லுக் மட்டும் திறந்திருக் கும் ஒன்றை மூடுவதற்கு Alt + F4 கீகளைப் பயன்படுத்தும். இதனைப் பயன்படுத்தி திறந் திருக்கும் பைலை மூடிவிட்டீர்களா! இப்போது மீண்டும் Alt + F4 பயன்படுத்துங்கள். புரோகிராம் மூடப்படும். எனவே அவுட்லுக் புரோகிராமினை மூட வேண்டும் என்றால் அதில் திறந்திருக்கும் ஒவ்வொன்றையும் முதலில் Alt + F4 பயன்படுத்தி மூடிவிட்டு இறுதியாகவும் அதனைப் பயன்படுத்தினாலே புரோகிராம் மூடப்படும்.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

கணினித் தகவல்கள்! - Page 4 Empty Re: கணினித் தகவல்கள்!

Post by மகி on Mon Dec 07, 2009 2:39 am

வார நாட்கள் மட்டும் வரிசையாக:

எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் டேட்டாவினை அமைத்துக் கொண்டிருக்கிறீர்கள். ஏதேனும் காலம் ஒன்றில் அடுத்தடுத்த படுக்கை வரிசைகள் உள்ள செல்களில் திங்கள், செவ்வாய், புதன் என வரிசையாக அமைக்க வேண்டும் என்றால், அனைத்தையும் டைப் செய்திட வேண்டியதில்லை. இரண்டு அடுத்தடுத்த செல்களில் "Monday" "Tuesday," என டைப் செய்து, அந்த செல்களைப் பின் தேர்ந்தெடுத்து, ஆட்டோ பில் ஹேண்டிலைப் பயன்படுத்தினால், வாரத்தின் மற்ற நாட்கள் வரிசையாக அமைக்கப்படும்.
ஆனால் உங்களுக்கோ வாரத்தில் உள்ள வேலை நாட்கள் மட்டுமே வேண்டும். சனி, ஞாயிறு ("Saturday" and "Sunday,") தேவையில்லை. அப்படியானால் என்ன செய்திடலாம். எக்ஸெல் இதற்கு வழி வைத்திருக்கிறது. முன்பு கூறியபடி இரண்டு செல்களில் திங்கள், செவ்வாய் டைப் செய்திடவும். அடுத்து ஆட்டோ பில் ஹேண்டிலை மவுஸின் இடதுபட்டனை அழுத்தி இழுக்காமல், வலது பட்டனை அழுத்தி இழுக்கவும். வரிசையாக இழுக்கப்பட்டு வெள்ளிக் கிழமையுடன் நிற்கும். இதில் ரைட் பட்டனிலிருந்து கையை எடுத்துவிட்டால், சிறிய மெனு ஒன்று கிடைக்கும். அந்த மெனுவில்"Fill Days" and "Fill Weekdays." என்ற ஆப்ஷன்ஸ் இருக்கும். Fill Days தேர்ந்தெடுத்தால் வாரத்தின் அனைத்து நாட்களும் அடுத்தடுத்து நிரப்பப்படும். Fill Weekdays தேர்ந்தெடுத்தால் வாரத்தின் வேலை நாட்கள் மட்டும் அடுத்தடுத்து நிரப்பப்படும்.

நன்றி: தினமலர்.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

கணினித் தகவல்கள்! - Page 4 Empty Re: கணினித் தகவல்கள்!

Post by மகி on Tue Dec 15, 2009 6:58 am

கம்ப்யூட்டர் பயன்பாட்டில் ஒரே செயலுக்கு இரு வேறு கீ தொகுப்புகளைப் பயன்படுத்தலாம். இவற்றில் நமக்கு அடிக்கடி தேவைப்படும் ஜோடி கீகளையும் அவற்றிற்கான செயல்பாடுகளையும் இங்கு பார்க்கலாம்.
செய்ததை நீக்க (Undo) – Ctrl +Z,

தேர்ந்தெடுத்ததை நீக்க (Cut) – Ctrl +X

நகலெடுக்க (Copy) – Ctrl +C

எடுத்ததை ஒட்ட Ctrl +V

இந்தச் செயல்களை வேறு சில கீகளை அழுத்தியும் மேற் கொள்ளலாம். அவை:

Ctrl +Z = Alt +Backspace

Ctrl +X = Shift +Del

Ctrl +C = Ctrl +Ins

Ctrl +V = Shift +Ins

அடிக்கோடிட வேர்ட் தொகுப்பில் உருவாக்கும் டாகுமெண்ட்களில் பல சொற்களில் அன்டர்லைன் செய்கையில் சொற்களுக்கு இடையே கோடில்லாமல் சொற்களுக்கு மட்டும் கோடிட Ctrl + Shift + W என்ற கீகளை அழுத்தவும்.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

கணினித் தகவல்கள்! - Page 4 Empty Re: கணினித் தகவல்கள்!

Post by மகி on Tue Dec 15, 2009 7:03 am

எக்ஸெல் ட்ரான்ஸ்போஸ் பேஸ்டிங்:

எக்ஸெல் தொகுப்பில் டேட்டாவினை காப்பி செய்து பேஸ்ட் செய்வதற்குப் பல வழிகள் உள்ளன. இவற்றை நாம் அறிந்து கொண்டால் நல்ல பயனுள்ள வகையில் இவற்றைப் பயன்படுத்தலாம். பேஸ்டிங் செய்வதற்கான பல வழிகளை முதலில் எங்கிருந்து பெறுவது என்ற கேள்வி எழலாம். இதனை எடிட் (Edit) மெனு சென்று கிளிக் செய்து கிடைக்கும் பட்டியலில் இருந்து பேஸ்ட் ஸ்பெஷல் (Paste Special) என்ற பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். இதில் பேஸ்ட் செய்வதற்கான பல வழிகள் காட்டப்படும். இவற்றில் மிகவும் பயனுடையதாக ட்ரான்ஸ்போஸ் (Transpose) வசதியைக் கூறலாம். ட்ரான்ஸ்போஸ் என்பது நெட்டு வரிசை செல்களைப் படுக்கை வரிசைகளாகவும் படுக்கை வரிசை செல்களை நெட்டு வரிசையிலும் ஒட்டும். எடுத்துக்காட்டாக B1 முதல் B5 வரை உள்ள செல்களை முதலில் காப்பி செய்கிறீர்கள். பின் உங்கள் கர்சரை ஆ10 ல் வைத்து, எடிட், பேஸ்ட் ஸ்பெஷல் மற்றும் அதன் பின் ட்ரான்ஸ்போஸ் (Edit,Paste Special & Transpose) என்பதைத் தேர்ந்தெடுத்தால், அந்த செல்கள் B10, C10, D10, E10 மற்றும் ஊ10 ஆகியவற்றில் பேஸ்ட் செய்யப்படும். இதே போல படுக்கை வாக்கில் உள்ள செல்களைக் காப்பி செய்து ட்ரான்ஸ்போஸ் செய்தால், செல்கள் நெட்டு வரிசையில் பேஸ்ட் செய்யப்படும்.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

கணினித் தகவல்கள்! - Page 4 Empty Re: கணினித் தகவல்கள்!

Post by மகி on Tue Dec 15, 2009 7:05 am

பைல் ப்ராப்பர்ட்டீஸ் தகவல் அறிய:

பைல் ஒன்றின் அனைத்து தகவல்களும் உங்களுக்குத் தேவை. என்ன வகை பைல்? அதனை எந்த புரோகிராம் திறக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது? அது கம்ப்யூட்டரில் எங்கே உள்ளது? அதன் அளவு? எங்கே எப்போது உருவாக்கப்பட்டது? இறுதியாக திருத்தியது என்று? போன்ற தகவல்கள் பைல் ப்ராபர்ட்டீஸ் கட்டத்தில் தெரியும். பொதுவாக இதனைப் பெற, பைலைத் தேர்ந்தெடுத்து ரைட் கிளிக் செய்து, பின் கிடைக்கும் மெனுவில் ப்ராப்பர்ட்டீஸ் கிளிக் செய்து பெறுவோம். இந்த வேலையையும் மிச்சப்படுத்தும் வழி உள்ளது. தேர்ந்தெடுத்த பின்னர், ஆல்ட் + என்டர் கீகளைத் தட்டவும். அல்லது ஆல்ட் கீயை அழுத்திக் கொண்டு, பைல் பெயர் மீது இருமுறை கிளிக் செய்திடலாம்.

நன்றி: தினமலர்.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

கணினித் தகவல்கள்! - Page 4 Empty Re: கணினித் தகவல்கள்!

Post by மகி on Tue Dec 15, 2009 7:11 am

கண்ட்ரோல் பேனல் உங்கள் கைகளில்:

நீங்கள் அடிக்கடி கண்ட்ரோல் பேனல் திறந்து பயன்படுத்துபவரா? ஒவ்வொரு முறையும் ஸ்டார்ட் கிளிக் செய்து பல பிரிவுகளைத் தேர்ந்தெடுத்துப் பின் கண்ட்ரோல் பேனல் செல்கிறீர்களா? நீங்கள் விண்டோஸ் 7 பயன்படுத்துபவராக இருந்தால் இந்த மவுஸ் அலைச்சல் தேவையில்லை. கண்ட்ரோல் பேனலைத் திறக்கும் வழியை உங்கள் டாஸ்க்பாரில் வைத்துக் கொள்ளலாம். ஸ்டார்ட் கிளிக் செய்து சர்ச் பாக்ஸில் Control Panel என டைப் செய்திடவும். கண்ட்ரோல் பேனல் ஐகான் காட்டப்படும்போது அப்படியே அதனை இழுத்து வந்து, உங்கள் டாஸ்க் பாரில் விடவும். அடுத்த முறை கண்ட்ரோல் பேனல் செல்ல எண்ணுகையில் இதனைக் கிளிக் செய்தால் போதும். எப்போதாவது இந்த ஐகான் எதற்கு டாஸ்க் பாரில் என்று எண்ணினால் இதன் மீது ரைட் கிளிக் செய்து Unpin this program from Taskbar என்பதில் கிளிக் செய்தால் போதும்.

நன்றி: தினமலர்.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

கணினித் தகவல்கள்! - Page 4 Empty Re: கணினித் தகவல்கள்!

Post by மகி on Mon Dec 21, 2009 9:45 pm

எம்.எஸ். ஆபிஸில் சொற்களை எண்ண:

எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பு 2003 பயன்படுத்துகிறீர்களா! அதன் வேர்ட் தொகுப்பில் ஏதேனும் ஒரு டெக்ஸ்ட்டை உருவாக்குகையில் அதில் உள்ள சொற்களின் எண்ணிக்கையைச் சரியாகத் தெரிய வேண்டி Word Count என்னும் வசதியைப் பயன்படுத்தலாம். எந்த ஒரு டூல் பாரில் ரைட் கிளிக் செய்தாலும் அதில் Word Count என்ற வசதி கிடைக்கும். ஒரு முறை கூட்டிப் பார்த்து விடை கிடைத்த பின்னர் மீண்டும் கூட்டிப் பார்க்க வேண்டும் என விரும்பினால் Recount என்ற பட்டன் கிடைக்கும்.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

கணினித் தகவல்கள்! - Page 4 Empty Re: கணினித் தகவல்கள்!

Post by மகி on Mon Dec 21, 2009 9:45 pm

டேபிளில் வரிசையாக எண்களை அமைக்க:

வேர்ட் தொகுப்பில் டேபிள் ஒன்றை உருவாக்கி இருக்கிறீர்கள். அதில் உள்ள செல்களில் வரிசையாக எண்களை அமைக்க வேண்டும். என்ன செய்யலாம்? வரிசையாக 1,2,3, என டைப் செய்து கொண்டு போவீர்கள், இல்லையா? தேவையே இல்லை. எந்த நெட்டு வரிசையில் எண்கள் அமைய வேண்டுமோ அதனைத் தேர்ந்தெடுத்து பின் புல்லட் அருகே உள்ள Numbering என்ற ஐகானை அழுத்தவும். வரிசையாக எண்கள் அமைக்கப்படும். ஆனால் செல்களில் உள்ள டெக்ஸ்ட் அமைத்து அதில் என்டர் தட்டி வரிசையாக டெக்ஸ்ட் அமைத்திருந்தால் எண்கள் சற்று தாறுமாறாக வரலாம்.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

கணினித் தகவல்கள்! - Page 4 Empty Re: கணினித் தகவல்கள்!

Post by மகி on Mon Dec 21, 2009 9:47 pm

ஒரே இடத்தில் அனைத்து டிக்ஷனரிகளும்:

ஆங்கிலச் சொல் ஒன்றின் பொருள் வேண்டுமா? இணையத்தில் பல டிக்ஷனரிகள் உள்ளன. இவற்றின் தளங்கள் சென்று தேடலாம். ஆனால் அதற்குப் பதிலாக, ஒரே முயற்சியில் அனைத்து டிக்ஷனரிகளும் தரும் பொருள் வேண்டும் என்றால், கூகுள் செல்லலாம். கூகுள் சர்ச் பாக்ஸில் define:WORD என்ற பார்மட்டில் அந்த சொல்லை டைப் செய்திடவும். இதில் WORD என்ற இடத்தில் நீங்கள் பொருள் தேடும் சொல்லை டைப் செய்திட வேண்டும். உடன் கூகுள் ஆன்லைனில் உள்ள அனைத்து டிக்ஷனரிகளிலும் இந்த சொல்லுக்குப் பொருள் தேடி வரிசையாகத் தரும்.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

கணினித் தகவல்கள்! - Page 4 Empty Re: கணினித் தகவல்கள்!

Post by மகி on Mon Dec 21, 2009 9:49 pm

தேவையற்ற கோடுகளைத் தவிர்க்க:

வேர்ட் தொகுப்பில் தாமாகவே இயங்கும் பார்மட் சம்பந்தமான பல செயல்பாடுகள் உள்ளன. இதில் நாம் அடிக்கடி சந்திப்பது படுக்கைக் கோடு அமைவது தான். அதாவது ஹைபன் அல்லது அடிக்கோடு அல்லது சிறிய வளைவு கோடு அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டால் உடனே வேர்ட் அதனை அந்த அளவிற்கான படுக்கைக் கோடாக மாற்றிவிடும். இது நமக்கு வசதி என்றாலும் இதனை நீக்குவது எளிதல்ல. ஏனென்றால் இது வேர்ட் ஏற்படுத்திய பார்டர் லைனாகும். தற்போது பயன்படுத்தப்படும் வேர்ட் தொகுப்புகளில் இதற்கு ஒரு வழி தரப்பட்டுள்ளது. கர்சரை எந்த கோட்டினை அழிக்க வேண்டுமோ அந்த கோட்டின் தொடக்கத்திற்குக் கொண்டு செல்லவும். பின் Format மெனு சென்று Borders and Shading என்ற பிரிவைத் தேர்ந்தெடுத்து அதில் உள்ள None பிரிவைக் கிளிக் செய்திடவும். இந்த பிரச்சனை தொடர்ந்து வராமல் இருக்க வேண்டும் என்றால் Tools மெனுவிற்குச் செல்லுங்கள். அதில் Auto Correct Options என்ற பிரிவைத் தேர்ந்தெடுங்கள். பின் அதில் AutoFormat As You Type என்ற டேபிற்குச் செல்லுங்கள். Apply as you type என்ற இடத்தைத் தேடிக் கண்டு பிடியுங்கள். அதில் Border Lines என்ற இடத்திற்கு எதிரே உள்ள டிக் அடையாளத்தை எடுத்து விட்டு அனைத்திற்கும் ஓகே டிக் செய்து மூடுங்கள்.

நன்றி: தினமலர்.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

கணினித் தகவல்கள்! - Page 4 Empty Re: கணினித் தகவல்கள்!

Post by மகி on Mon Jan 11, 2010 8:07 pm

டெஸ்க் டாப்பில் ஷார்ட் கட்:

ஏறத்தாழ அனைத்து புரோகிராம்களுக்கும் ஷார்ட் கட் உண்டு. இவை ஸ்டார்ட் மெனுவில் பார்க்கலாம். இல்லாதவற்றிற்கு நாமாக ஷார்ட் கட் அமைத்திடுகையில் அது டெஸ்க்டாப்பிலேயே அமைக்கப்படும். ஷார்ட் கட் இல்லாத புரோகிராமிற்கு அமைக்க விரும்பினால், ஸ்டார்ட் (Start) கிளிக் செய்து ஆல் புரோகிராம்ஸ் (All Programs) தேர்ந்தெடுத்துப் பின் அந்த குறிப்பிட்ட புரோகிராமின் மீது கர்சரை வைத்து ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் சென்ட் டூ (Send To) என்று இருப்பதில் கிளிக் செய்திடவும். அதன் பின் கிடைக்கும் பிரிவுகளில் டெஸ்க் டாப் (Desktop) என்பதைத் தேர்ந்தெடுத்தால், டெஸ்க் டாப் மீது ஷார்ட் கட் அமைக்கப்படும்.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

கணினித் தகவல்கள்! - Page 4 Empty Re: கணினித் தகவல்கள்!

Post by மகி on Mon Jan 11, 2010 8:09 pm

கடைசி பக்கத்திலிருந்து பிரிண்ட்:

அதிக பக்கங்களில் இருக்கும் வேர்ட் டாகுமெண்ட் ஒன்றைப் பிரிண்ட் எடுத்து முடிக்கையில், தாள்கள் எல்லாம் வரிசையாக பக்கம் 1,2,3 என இல்லாமல் 40,39 என இருப்பதைக் காணலாம். இதனை மீண்டும் ஒவ்வொரு தாளையும் சரி செய்திட இன்னும் அதிக நேரம் ஆகும். இதனை எப்படி மாற்றலாம்? அச்சிட்டபின் நமக்கு வேலை இல்லாமல் செய்திடலாம்?

* கடைசி பக்கத்தை முதலில் பிரிண்ட் செய்து பின் அப்படியே இறுதியிலிருந்து முதல் பக்கம் வரை டாகுமெண்ட் ஒன்றை அச்செடுக்கும்படி செய்திடலாம். இவ்வாறு அச்சிட்டுப் பெற கீழே கொடுத்துள்ளபடி செட் செய்திடவும்.

* Tools கிளிக் செய்து Options தேர்ந்தெடுக்கவும். நிறைய டேப்களுடன் Options டயலாக் பாக்ஸ் கிடைக்கும். அதில் Print என்னும் டேப்பில் கிளிக் செய்திடவும். இதில் "Printing options" என்ற பகுதியில் உள்ள "Reverse print order" என்பதில் கிளிக் செய்திடவும். பின் ஓகே கிளிக் செய்து டயலாக் பாக்ஸை மூடி வெளியேறவும்.

நன்றி: தினமலர்.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

கணினித் தகவல்கள்! - Page 4 Empty Re: கணினித் தகவல்கள்!

Post by மகி on Mon May 10, 2010 10:05 pm

ட்ராக் அண்ட் ட்ராப் (Drag and Drop):

பைல் அல்லது புரோகிராமிற்கான ஐகானில் கர்சரை வைத்து அழுத்தியவாறே இழுத்து இன்னொரு போல்டர் அல்லது இடத்தில் விடும் செயல்பாட்டினை இவ்வாறு அழைக்கிறோம்.


Last edited by மகி on Mon May 10, 2010 10:10 pm; edited 1 time in total

_________________
[You must be registered and logged in to see this link.]
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

கணினித் தகவல்கள்! - Page 4 Empty Re: கணினித் தகவல்கள்!

Post by மகி on Mon May 10, 2010 10:07 pm

குயிக் லாஞ்ச் (Quick Launch):

டாஸ்க் பாரில் பொதுவாக இடது புறம் உள்ள ஏரியா. அடிக்கடி பயன்படுத்தும் புரோகிராம்களின் ஐகான்களை இங்கு வைத்து சிங்கிள் கிளிக் மூலம் அவற்றை இயக்கலாம்.

_________________
[You must be registered and logged in to see this link.]
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

கணினித் தகவல்கள்! - Page 4 Empty Re: கணினித் தகவல்கள்!

Post by மகி on Mon May 10, 2010 10:09 pm

ப்ளாக் (Flog):

'fake' மற்றும் 'blog' என்ற இரு சொற்களின் இணைந்த சொல். இதன் ஆசிரியர் என்று சொல்பவர் இதனை எழுதி இருக்கமாட்டார். அவருக்காக வேறு யாரேனும் எழுதிப் பதிந்து வைப்பார்கள்.

_________________
[You must be registered and logged in to see this link.]
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

கணினித் தகவல்கள்! - Page 4 Empty Re: கணினித் தகவல்கள்!

Post by மகி on Mon May 10, 2010 10:11 pm

கிளையண்ட் (Client):

கம்ப்யூட்டர் நெட்வொர்க்கில் இணைக்கப்பட்டு சர்வராக இயங்காமல் பயன்படுத்தப்படும் எந்த கம்ப்யூட்டரும் கிளையண்ட் என அழைக்கப்படும்.

_________________
[You must be registered and logged in to see this link.]
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

கணினித் தகவல்கள்! - Page 4 Empty Re: கணினித் தகவல்கள்!

Post by aarul on Tue May 11, 2010 1:16 am

கணினித் தகவல்கள்! - Page 4 227966
aarul
aarul
தள ஆலோசகர்
தள ஆலோசகர்

பதிவுகள் : 421
புள்ளிகள் : 793
Reputation : 12
சேர்ந்தது : 20/12/2009
வசிப்பிடம் : mani electronics,erode, tamilnadu,india

Back to top Go down

கணினித் தகவல்கள்! - Page 4 Empty Re: கணினித் தகவல்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum