Latest topics
» வணக்கம் என் பெயர் நாகராசன்.இராby rajan_1972 Fri Apr 10, 2020 7:20 pm
» சிறந்த பொழுதுபோக்கு இணையதளம்!
by pba Sat Jul 02, 2016 8:11 pm
» ஏற்றுமதி உரிமம் பெறும் விண்ணப்பம்
by tamilnews Tue Mar 24, 2015 8:00 pm
» மொபைல், டிடிஎச் ரீசார்ஜ் செய்யப் போறீங்களா? இந்த சலுகைகளைப் பாருங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:41 am
» மொபைல் ரீசார்ஜ் செய்து ஷாப்பிங் கூப்பன் இலவசமாக பெறுங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:38 am
» மெமரி கார்டு வாங்கப் போறீங்களா? 74% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:36 am
» அமேசானில் பெண்களுக்கான ஆடைகள் 70% வரை தள்ளுபடி !
by dsytamil Wed Jan 14, 2015 1:34 am
» அமேசானில் ஆண்களுக்கான ஆடைகள் 60% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:31 am
» லெனோவா டேப்ளட் 43% சலுகை விலையில் ரூ. 5949 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:28 am
» ப்ளிப்கார்ட் தளத்தில் சிறுவர்களுக்கான ஆடைகள் 70% வரை + 30% கூடுதல் தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:14 am
» அமேசான் தளத்தில் 50% தள்ளுபடி விலையில் மொபைல்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:13 am
» ரூ. 7499 மதிப்புள்ள மைக்ரோமேக்ஸ் ஏ1 ஆன்ட்ராய்டு மொபைல் இப்போது ரூ. 5499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:11 am
» ரூ. 19999 மதிப்புள்ள நோக்கியா லூமியா 625 மொபைல் ரூ. 7499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:10 am
» ப்ராண்டட் காலணிகளுக்கு 70% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:08 am
» ஆன்லைன் ஷாப்பிங்கில் ப்ரிண்டர்களுக்கு 33% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:06 am
» ஆன்லைனில் பொருள் வாங்கப் போறீங்களா? 70% வரை பணத்தை சேமியுங்கள்!
by dsytamil Tue Jan 13, 2015 12:30 am
» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...!
by sathikdm Sun Oct 19, 2014 4:45 pm
» சிறுதொழில் செய்பவர்கள் இணையதளம் தொடங்க வேண்டியதின் அவசியம்!
by pba Sat Sep 27, 2014 12:58 am
» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:47 pm
» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:42 pm
» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
by santhoshpart Wed Aug 27, 2014 4:22 pm
» “சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா!”
by santhoshpart Wed Aug 13, 2014 3:54 pm
» Daily Rs.500/- and Above
by K.MARIAPPAN Wed Jul 30, 2014 12:01 pm
» http://www.neobux.com/?r=narasimmant
by Navaneethakrishnan Wed Jul 02, 2014 3:41 pm
» வணக்கம் என் பெயர் வேணு
by A.Venu Fri Jun 27, 2014 10:10 am
» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?
by sathikdm Wed Jun 18, 2014 3:24 pm
» தமிழ் மொழி மூல கல்வி இணையதளம்
by afdhaal Wed May 28, 2014 9:22 pm
» வருக. வருக. வணக்கம்.
by மகி Mon May 12, 2014 3:55 pm
» அறிமுகம் -விநாயகா செந்தில்.
by மகி Mon May 12, 2014 3:53 pm
» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....!
by vinayagasenthil Sat May 10, 2014 9:04 pm
மாநிலங்களவை: தமிழகத்தில் ஆறு இடங்களுக்கு ஜூன் 27 தேர்தல்!
Page 1 of 1

தமிழகத்தில் காலியாகவுள்ள ஆறு மாநிலங்களவை இடங்களுக்கு வரும் 27-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதற்கான முறையான அறிவிக்கை ஜூன் 10-ம் தேதி வெளியிடப்படும் என்றும் அது குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பான அறிவிப்பை தேர்தல் ஆணையத்தின் இயக்குநர் திதேந்தர் ஓஜா செவ்வாய்க்கிழமை மாலை வெளியிட்டார். அந்த அறிவிப்பின்படி, தேர்தலுக்கான வேட்புமனுக்களைத் தாக்கல் செய்ய கடைசி தேதி ஜூன் 17 ஆகும். தேர்தலில் போட்டியிருக்குமானால் ஜூன் 27-ல் வாக்குப் பதிவு நடைபெறும். அன்று மாலையே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான 20 இடங்களில், ஆறு எம்.பி.க்களுக்கான பதவிக் காலம் அடுத்த மாதம் (ஜூலை) 24-ஆம் தேதியுடன் முடிவடைகின்றன. பி.எஸ்.ஞானதேசிகன் (காங்கிரஸ்), கே.கனிமொழி, திருச்சி என். சிவா (திமுக), வா.மைத்ரேயன், ஏ. இளவரசன் (அதிமுக), டி.ராஜா (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி) ஆகிய ஆறு பேரின் பதவிக் காலமும் அடுத்த மாதம் நிறைவடைகிறது.
அரசியல் கட்சிகளிடையே பரபரப்பு: ஒரு எம்.பி. பதவியைப் பெற 34 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை. அதன்படி, ஆளும் அதிமுகவுக்கு பேரவையில் 151 எம்.எல்.ஏ.க்கள் (பேரவைத் தலைவருடன் சேர்த்து) உள்ளனர். இந்த எண்ணிக்கை அடிப்படையில் 136 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் அதிமுகவுக்கு மாநிலங்களவையின் நான்கு இடங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள 15 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு அல்லது வாக்கு யாருக்கு என்பதே இப்போதுள்ள மிகப்பெரிய கேள்வி.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வேட்பாளர் ஒருவர் நிறுத்தப்பட்டால் அவருக்கு ஆதரவு அளிப்போம் என்று மார்க்சிஸ்ட் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இடதுசாரிக் கட்சிகளுக்கு பேரவையில் 18 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். அதிமுகவின் ஆதரவுடன், மனித நேய மக்கள் கட்சி (2 எம்.எல்.ஏ.க்கள்), அகில இந்திய பார்வர்டு பிளாக் (ஒரு எம்.எல்.ஏ.) ஆகிய கட்சிகளின் (35 எம்.எல்.ஏ.க்கள்) ஆதரவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரும் பட்சத்தில் அந்தக் கட்சிக்கு ஒரு எம்.பி. பதவி உறுதியாகி விடும்.
ஆனால், ஐந்தாவது இடத்தையும் அதிமுக பெற விரும்பினால் அந்தக் கட்சிக்கு ஆதரவாகச் செயல்படும் கட்சிகளுடன் (மனித நேய மக்கள், அகில இந்திய பார்வர்டு பிளாக்) இடதுசாரிகளின் ஆதரவையும் பெறுவது கட்டாயமாகி விடும்.
திமுக நிலைப்பாடு: சட்டப் பேரவையில் திமுகவுக்கு 23 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். ஒரு எம்.பி. பதவிக்கு, அந்தக் கட்சிக்கு மேலும் 11 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை. இந்த ஆதரவை தேமுதிக அளித்தால் திமுகவுக்கு ஒரு எம்.பி. பதவி நிச்சயம். ஆனால், தேமுதிக ஆதரவு அளிக்காமல் இருந்தால் திமுக கடும் நெருக்கடியைச் சந்திக்க நேரிடும்.
காங்கிரஸ் கட்சி (5 எம்.எல்.ஏ.க்கள்), பாட்டாளி மக்கள் கட்சி (3 எம்.எல்.ஏ.க்கள்), பேரவையில் ஆளும் கட்சியை அவ்வப்போது விமர்சித்துப் பேசி வரும் புதிய தமிழகம் (2 எம்.எல்.ஏ.க்கள்) ஆகியன திமுகவை ஆதரவளிக்க முன்வந்தாலும் 10 எம்.எல்.ஏ.க்களின் வாக்குகள் மட்டுமே கிடைக்கும். எம்.பி. பதவியைப் பெறத் தேவையான மேலும் ஒரு எம்.எல்.ஏ.வின் ஆதரவை திமுக எங்கியிருந்து பெறும் என்பது "மில்லியன் டாலர்' கேள்வி.
துருப்புச் சீட்டுகள்: முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்துப் பேசிய பிறகு, தேமுதிகவில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களாக ஆறு பேர் இருக்கின்றனர். மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிக போட்டியிடும் முடிவை எடுத்தால், அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ஆறு பேரின் ஆதரவு நிச்சயம் அதிமுகவுக்குத் தான் இருக்கும் என்று கூறப்படுகிறது.
அதேசமயம், தேர்தலை புறக்கணிக்கும் முடிவை, தேமுதிக எடுத்தால் அந்தக் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் வாக்களிக்க முடியாது.
அப்போது அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் வாக்களிப்பது குறித்து கேள்வி எழும். அதிருப்தி எம்.எல்.ஏ.க்களால் தான் தேமுதிகவின் மாநிலங்களவைக் கனவு தகரும் நிலை ஏற்பட்டாலும் அது வியப்பில்லை என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். மொத்தத்தில் தேமுதிகவின் நிலைப்பாடு என்ன என்பதைப் பொருத்தே மாநிலங்களவைத் தேர்தலில் திராவிடக் கட்சிகளின் கணக்குகள் அமையும்.
தேர்தல் அட்டவணை:
வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள்: ஜூன் 17
வேட்புமனுக்கள் பரிசீலனை: ஜூன் 18
மனுக்களைத் திரும்பப் பெற
கடைசி தேதி: ஜூன் 20
தேவைப்பட்டால் வாக்கெடுப்பு: ஜூன் 27
வாக்கு எண்ணிக்கை: ஜூன் 27 (மாலை 5 மணி)
பேரவையில் கட்சிகளின் பலம்:
அதிமுக (பேரவைத் தலைவருடன்) 151.
தேமுதிக 29.
திமுக 23.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 10.
இந்திய கம்யூனிஸ்ட் 8.
காங்கிரஸ் 5.
பாமக 3.
மனித நேய மக்கள் கட்சி 2.
புதிய தமிழகம் 2.
பார்வர்டு பிளாக் 1.
நன்றி: தினமணி.

pba- உறுப்பினர்
- பதிவுகள் : 23
புள்ளிகள் : 57
Reputation : 0
சேர்ந்தது : 09/05/2013
வசிப்பிடம் : Tamil Nadu
Similar topics
» மாநிலங்களவை எம்.பிக்கள் 100 பேர் கோடீஸ்வரர்கள்; ராகுல் பஜாஜ் முதலிடம்!
» ஜூன் 21: இன்று 'உலக இசை தினம்'
» ஜூன் 24 முதல் ஆப்பிள் ஐபோன்-4G!
» இன்று உலக வலைப்பதிவர் நாள் ஜூன் 14
» தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு!
» ஜூன் 21: இன்று 'உலக இசை தினம்'
» ஜூன் 24 முதல் ஆப்பிள் ஐபோன்-4G!
» இன்று உலக வலைப்பதிவர் நாள் ஜூன் 14
» தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum