Latest topics
» வணக்கம் என் பெயர் நாகராசன்.இராby rajan_1972 Fri Apr 10, 2020 7:20 pm
» சிறந்த பொழுதுபோக்கு இணையதளம்!
by pba Sat Jul 02, 2016 8:11 pm
» ஏற்றுமதி உரிமம் பெறும் விண்ணப்பம்
by tamilnews Tue Mar 24, 2015 8:00 pm
» மொபைல், டிடிஎச் ரீசார்ஜ் செய்யப் போறீங்களா? இந்த சலுகைகளைப் பாருங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:41 am
» மொபைல் ரீசார்ஜ் செய்து ஷாப்பிங் கூப்பன் இலவசமாக பெறுங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:38 am
» மெமரி கார்டு வாங்கப் போறீங்களா? 74% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:36 am
» அமேசானில் பெண்களுக்கான ஆடைகள் 70% வரை தள்ளுபடி !
by dsytamil Wed Jan 14, 2015 1:34 am
» அமேசானில் ஆண்களுக்கான ஆடைகள் 60% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:31 am
» லெனோவா டேப்ளட் 43% சலுகை விலையில் ரூ. 5949 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:28 am
» ப்ளிப்கார்ட் தளத்தில் சிறுவர்களுக்கான ஆடைகள் 70% வரை + 30% கூடுதல் தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:14 am
» அமேசான் தளத்தில் 50% தள்ளுபடி விலையில் மொபைல்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:13 am
» ரூ. 7499 மதிப்புள்ள மைக்ரோமேக்ஸ் ஏ1 ஆன்ட்ராய்டு மொபைல் இப்போது ரூ. 5499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:11 am
» ரூ. 19999 மதிப்புள்ள நோக்கியா லூமியா 625 மொபைல் ரூ. 7499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:10 am
» ப்ராண்டட் காலணிகளுக்கு 70% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:08 am
» ஆன்லைன் ஷாப்பிங்கில் ப்ரிண்டர்களுக்கு 33% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:06 am
» ஆன்லைனில் பொருள் வாங்கப் போறீங்களா? 70% வரை பணத்தை சேமியுங்கள்!
by dsytamil Tue Jan 13, 2015 12:30 am
» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...!
by sathikdm Sun Oct 19, 2014 4:45 pm
» சிறுதொழில் செய்பவர்கள் இணையதளம் தொடங்க வேண்டியதின் அவசியம்!
by pba Sat Sep 27, 2014 12:58 am
» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:47 pm
» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:42 pm
» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
by santhoshpart Wed Aug 27, 2014 4:22 pm
» “சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா!”
by santhoshpart Wed Aug 13, 2014 3:54 pm
» Daily Rs.500/- and Above
by K.MARIAPPAN Wed Jul 30, 2014 12:01 pm
» http://www.neobux.com/?r=narasimmant
by Navaneethakrishnan Wed Jul 02, 2014 3:41 pm
» வணக்கம் என் பெயர் வேணு
by A.Venu Fri Jun 27, 2014 10:10 am
» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?
by sathikdm Wed Jun 18, 2014 3:24 pm
» தமிழ் மொழி மூல கல்வி இணையதளம்
by afdhaal Wed May 28, 2014 9:22 pm
» வருக. வருக. வணக்கம்.
by மகி Mon May 12, 2014 3:55 pm
» அறிமுகம் -விநாயகா செந்தில்.
by மகி Mon May 12, 2014 3:53 pm
» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....!
by vinayagasenthil Sat May 10, 2014 9:04 pm
சுதந்திர தின துளிகள்....அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்...
Page 1 of 1

அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்...
சுதந்திர தின துளிகள்
* இந்தியாவின் முதல் கிளர்ச்சி வேலூர் கோட்டையில் 1802 ஆம் ஆண்டு நடந்தது
* தமிழ் மண்ணில் வெள்ளையர்களை எதிர்த்தவர்களில் வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதரர்கள் மற்றும் வேலு நாச்சியார் குறிப்பிடத்தக்கவர்கள்
* லக்ஷ்மி பாய் என்ற இயற்ப்பெயரைக் கொண்ட ஜான்சி ராணி(ஜான்சி இவர் கணவர் ஆண்ட பகுதி) வெள்ளையரை எதிர்த்து போராடிய போது இவர் வயது 18
* வெள்ளையரை எதிர்த்து ஆயுதம் ஏந்திய அணியின் தலைவராக திகழ்த்தவர் பாலகங்காதர திலகர். இவரே "சுதந்திரம் என் பிறப்புரிமை" என்று முழங்கியவர்
* வெள்ளையருக்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்தவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். இவர் அமைத்த ராணுவப் படையின் பெண்கள் பிரிவுத் தலைவராக இருந்தவர் தமிழகத்தை சேர்ந்த கேப்டன் லக்ஷ்மி. இவர் ஒரு டாக்டர்.
* "என் அரசியல் குரு" என்று மகாத்மா காந்தியால் போற்றப்பட்டவர் கோபால கிருஷ்ண கோகலே
* ஜாலியன் வாலாபாக் படுகொலையில் 1200 பேர் உயிர் இழக்க காரணமாய் இருந்த வெள்ளை அரக்கன் ஜெனரல் டயரை 21 ஆண்டுகள் கழித்து துப்பாக்கியால் சுட்டுக் கொன்றான் இந்திய மாவீரன் உத்தம் சிங். 1940 இல் அந்நிய மண்ணில் தூக்கிலிடப்பட்டு அடக்கம் செய்யப்பட அவரின் உடல் 1974 இல் தோண்டப்பட்டு அஸ்தி இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்டது
* வெளிநாட்டில் படித்து கோட் சூட்டில் இருந்த காந்தியை சாமானியர்களின் உடைக்கு மாற்றியது தமிழ் நாடு(ஆண்டு 1921)
* "போலீசார் தடியால் மட்டும் தான் அடித்தார்கள், துப்பாக்கியால் சுட்டிருந்தால் குண்டுகளை மகிழ்ச்சியுடன் என் நெஞ்சில் வாங்கி இருப்பேன்" என்று நேருவுக்கு கடிதம் எழுதிவர் தான் அவர் தாய் சொரூபராணி. ஆம் சுதந்திர போராட்டத்தில் அவர் குடும்பமே சிறை சென்றது. சிறையில் இருந்த போது தன் மகள் இந்திராவிற்கு உலக வரலாறுகளை கடிதமாக எழுதினார் நேரு
* நேதாஜி ஆயுதம் ஏந்தியதால் அதிருப்தி அடைந்த காந்தி, காங்கிரஸ் தலைவர் தேர்தலில் அவரை எதிர்த்து பட்டாபி சீதாராமையாவை நிறுத்தினர். ஆனால், பெரும்பாலான ஓட்டுக்கள் பெற்று வெற்றிப்பெற்றார் நேதாஜி. "பட்டாபியின் தோல்வி என் தோல்வி" என்றார் காந்தி
* 1944 இல் காந்தியும் அவர் மனைவி கஸ்தூரிபாயும் சிறையில் இருந்தனர். அப்போது தான் காந்தியின் மடியில் தலை வைத்த படி தன் உயிர் நீத்தார் கஸ்தூரிபாய்
* 37 வயதில் 5 குழந்தைகளுக்கு தந்தையான நிலையில் மனைவியை இழந்த ராஜாஜி அவர்கள் கடைசி வரை மறுமணம் செய்யாமலும் நாட்டுக்காக போராடி பல முறை சிறையும் சென்றார். இவரின் மகள் லக்ஷ்மியை தான் காந்தியின் மகன் தேவதாஸ் மணந்தார். இது கலப்புத் திருமணம், தானே நூற்ற நூல் மாலையை மணமக்களுக்கு வழங்கிய காந்திஜி, பரிசாக வந்த விலை உயர்ந்த பொருட்களை திருப்பிக் கொடுத்துவிடும்படி மணமக்களுக்கு கட்டளையிட்டார்
* காமராஜர் சிறையில் இருந்த போது விருதுநகர் நகரசபை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்
* மாறுவேடத்தில் சென்று மக்களிடம் சுதந்திர உணர்வை தூண்டியவர் ஜெயப்பிரகாஷ் நாராயணன்
* பீமாராவ் ராம்ஜி என்ற இயற்ப்பெயரை கொண்டவர் தனக்கு உதவியை ஆசிரியர் பெயரையே தன் பெயரை சூடிக்கொண்டார். அவர் தான் அம்பேத்கர். இவர் சுந்திர தொழிலாளர் கட்சியை தொடங்கினார்.
* பாரதியாருக்கு பதினாலரை வயதில் திருமணம் நடந்தது. அப்போது அவர் மனைவி செல்லம்மாளுக்கு வயது ஏழு. சுதந்திர போராட்டத்தில் கடலூர் சிறையில் 34 நாட்கள் அடைக்கப்பட்டார்
* சுதேச சமஸ்தானங்களை இந்தியாவுடன் இணைத்து "இந்தியாவின் இரும்பு மனிதர்" என்று அழைக்கப்பட்டவர் வல்லபாய் படேல்
* லால் பகதூர் சாஸ்திரி பெயரில் வரும் "சாஸ்திரி" என்பது 1926 இல் அவர் படித்து வாங்கிய பட்டம்
* 1942 இல் காந்தி நடத்திய "வெள்ளையனே வெளியேறு" போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்றவர் வாஜ்பாய்
* பத்திரிக்கையில் பணியாற்றியபோது காந்தியை பேட்டி கண்டவர், முன்னாள் குடியரசுத் தலைவரான கே.ஆர். நாராயணன்
* காந்தியை "மகாத்மா" என்று முதலில் அழைத்தவர் நமது தேசிய கீதத்தை தந்த ரவீந்தரநாத் தாகூர்
* சுதந்திர போராட்டத்தில் சிறையில் கடும் கொடுமைகளை அனுபவித்த தமிழர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் வ.உ.சி., சுப்ரமணிய சிவா
* வ.உ.சி. கைதான போது நெல்லை மண்ணில் ஏற்பட்ட கலவரத்தில் 4 பேரை சுட்டுக் கொன்ற வெள்ளை துணை கலெக்டர் ஆஷ், கலெக்டர் ஆனபோது அவரை சுட்டுப் பழிதீர்த்து - தானும் சுட்டு தற்கொலை செய்துக் கொண்டார் 25 வயதே நிரம்பிய வீரன் வாஞ்சிநாதன். அவரை மணந்த போது மனைவி பொன்னம்மாள் பருவம் அடையவில்லை. பருவம் அடைந்ததும் வாஞ்சி உயிருடன் இல்லை
* சுதந்திரதிற்க்காக போராடி-கதராடை அணிந்து- கதர் துணிகளை தெருத் தெருவாக விற்ற பெரியார் கருத்து வேறுபாட்டால் காங்கிரசை விட்டு வெளியேறினார். கருப்பு சட்டைக்கு மாறினார்
* 1610 இல் சென்னையை அடுத்த பழவேற்காட்டை டச்சுக்காரர்கள் விலைக்கு வாங்கினர். 1751'இல் ஆற்காட்டை, ராபர்ட் கிளைவ் கைப்பற்றினார். செயின்ட் ஜார்ஜ் கோட்டை, வெள்ளையரின் தலைமை இடமாக மாறியது. 1802 இல் தமிழ்நாட்டில் முழுமையாக வெள்ளையர் ஆட்சி ஏற்ப்பட்டது. அதனால் நம் முன்னோர்கள் அனுபவித்த இன்னல்கள் சொல்லி மாளாதவை
* தமிழ்நாட்டின் முதல் மாவீரன் அழகு முத்துக்கோன். கொங்கு சீமையின் முதல் வீரர் தீரன் சின்னமலை.
* தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தேர்தலில் சத்தியமூர்த்தியின் சீடரான காமராஜர் 3 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றார். ஆனால், அந்த 3 ஓட்டுக்கள் பின்னாளில் தமிழ்நாட்டின் தலையெழுத்தையே மாற்றியது.
* வெள்ளையருக்கு எதிரான கிளர்ச்சி, 1885 இல் "இந்திய தேச காங்கிரஸ் இயக்கம்" உருவான பின்னர் தான் மக்கள் இயக்கமாக மாறியது. இதன் முதல் தலைவர் W.C.பானர்ஜி. பொது செயலாளராக இருந்தவர் A.O.Hume, இவர் வெள்ளையரானாலும், இந்தியர்கள் மீது அதிக பரிவு கொண்டவர்
* "வந்தே மாதிரம்" பாடல் 1906 டிசம்பர் மாதம் கல்கத்தாவில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் தான் முதல் முறையாக பாடப்பட்டது. இதை எழுதியவர் வங்க எழுத்தாளர் பங்கிம் சந்திர சட்டர்ஜி. மாநாட்டு மேடையில் பாடியவர் ரவீந்தரநாத் தாகூர்
* தாய் நாட்டுக்காக உயரி கொடுத்த தியாக சீலர்களின் பட்டியலில் கொடிகாத்த குமரன், பகத் சிங், மதன்லால் டிங்கரா முக்கிய இடம் பெறுவர்
* போராட்ட காலத்தில் பல தலைவர்கள் வெள்ளையர்களால் நாடு கடத்தப்பட்டனர். அவர்களில் ஒருவர் திலகர்
* "வெள்ளையனே வெளியேறு" போராட்டத்தின் பொது காந்தி முதல் காமராஜர் வரையிலான தலைவர்கள் கைதானதால் தமிழ்நாட்டிலும் வன்முறை வெடித்தது. திருவாடனையில் பஸ்கள் எரிக்கப்பட்டன. சப்-ஜெயில் உடைக்கப்பட்டது. கோவையில் ராணுவ முகாம் எரிக்கப்பட்டது. 200 டாங்கிகள் அழிக்கப்பட்டன
* பூலித்தேவன், முத்து ராமலிங்கத் தேவர், செண்பகராமன் ஆகியோரும் சுதந்திர வேட்கையில் தீவிரமாக இருந்தவர்கள்
* திருச்செந்தூரை அடுத்த குலசேகரபட்டணத்தில் போலீசாரை கட்டிப்போட்டு துப்பாக்கிகள் பறிக்கப்பட்டன. உடன்குடி பகுதியில் "சுதந்திர பிரதேசம்" என்று பிரகடனம் செய்தனர். அதற்கு உட்பட்ட கிராமங்களில் ஒரு வாரத்திற்கு போலீசோ, ராணுவமோ நெருங்க முடியவில்லை
* வெள்ளையர்களால் சிறையில் அடைக்கப்பட்டு, உடல் நலிந்தவர்கள் சத்தியமூர்த்தி, ம. பொ. சி.
* 200 ஆண்டுகால வெள்ளை ஏகாதிபத்தியத்திற்கு 1947 ஆகஸ்ட் 15 இல் முற்றுப்புள்ளி விழுந்தது. அன்று விடியலுக்கு முன்னரே சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக நேரு பதவி ஏற்றார். டெல்லி செங்கோட்டையில் மூவர்ணக்கொடி பறக்கவிட்டார்.
http://4.bp.blogspot.com/_eOr2ZPu_AtA/TGc_XOlqg7I/AAAAAAAAASQ/2qo8iMSMiME/s1600/images+%281%29.jpg
http://2.bp.blogspot.com/_fPE7weYAh38/SoPNKzFlrTI/AAAAAAAABbk/vkg05I9RjVE/s1600-h/107656.gif

B.G.துர்கா தேவி- பண்பாளர்
- பதிவுகள் : 436
புள்ளிகள் : 940
Reputation : 23
சேர்ந்தது : 22/04/2011
Similar topics
» அனைவருக்கும் இனிய காலை வணக்கம்... அன்புடன் Thanagopal
» விநாயகர் சதுர்த்தியின் மகிமை - அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல் வாழ்த்துக்கள் அன்புடன் துர்கா
» சுதந்திர மனிதன்
» சுதந்திர தினம் - 2011
» சுதந்திர தினம்; கவிதை, சிந்தனை, உறுதி.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum