Latest topics
» வணக்கம் என் பெயர் நாகராசன்.இராby rajan_1972 Fri Apr 10, 2020 7:20 pm
» சிறந்த பொழுதுபோக்கு இணையதளம்!
by pba Sat Jul 02, 2016 8:11 pm
» ஏற்றுமதி உரிமம் பெறும் விண்ணப்பம்
by tamilnews Tue Mar 24, 2015 8:00 pm
» மொபைல், டிடிஎச் ரீசார்ஜ் செய்யப் போறீங்களா? இந்த சலுகைகளைப் பாருங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:41 am
» மொபைல் ரீசார்ஜ் செய்து ஷாப்பிங் கூப்பன் இலவசமாக பெறுங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:38 am
» மெமரி கார்டு வாங்கப் போறீங்களா? 74% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:36 am
» அமேசானில் பெண்களுக்கான ஆடைகள் 70% வரை தள்ளுபடி !
by dsytamil Wed Jan 14, 2015 1:34 am
» அமேசானில் ஆண்களுக்கான ஆடைகள் 60% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:31 am
» லெனோவா டேப்ளட் 43% சலுகை விலையில் ரூ. 5949 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:28 am
» ப்ளிப்கார்ட் தளத்தில் சிறுவர்களுக்கான ஆடைகள் 70% வரை + 30% கூடுதல் தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:14 am
» அமேசான் தளத்தில் 50% தள்ளுபடி விலையில் மொபைல்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:13 am
» ரூ. 7499 மதிப்புள்ள மைக்ரோமேக்ஸ் ஏ1 ஆன்ட்ராய்டு மொபைல் இப்போது ரூ. 5499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:11 am
» ரூ. 19999 மதிப்புள்ள நோக்கியா லூமியா 625 மொபைல் ரூ. 7499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:10 am
» ப்ராண்டட் காலணிகளுக்கு 70% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:08 am
» ஆன்லைன் ஷாப்பிங்கில் ப்ரிண்டர்களுக்கு 33% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:06 am
» ஆன்லைனில் பொருள் வாங்கப் போறீங்களா? 70% வரை பணத்தை சேமியுங்கள்!
by dsytamil Tue Jan 13, 2015 12:30 am
» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...!
by sathikdm Sun Oct 19, 2014 4:45 pm
» சிறுதொழில் செய்பவர்கள் இணையதளம் தொடங்க வேண்டியதின் அவசியம்!
by pba Sat Sep 27, 2014 12:58 am
» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:47 pm
» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:42 pm
» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
by santhoshpart Wed Aug 27, 2014 4:22 pm
» “சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா!”
by santhoshpart Wed Aug 13, 2014 3:54 pm
» Daily Rs.500/- and Above
by K.MARIAPPAN Wed Jul 30, 2014 12:01 pm
» http://www.neobux.com/?r=narasimmant
by Navaneethakrishnan Wed Jul 02, 2014 3:41 pm
» வணக்கம் என் பெயர் வேணு
by A.Venu Fri Jun 27, 2014 10:10 am
» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?
by sathikdm Wed Jun 18, 2014 3:24 pm
» தமிழ் மொழி மூல கல்வி இணையதளம்
by afdhaal Wed May 28, 2014 9:22 pm
» வருக. வருக. வணக்கம்.
by மகி Mon May 12, 2014 3:55 pm
» அறிமுகம் -விநாயகா செந்தில்.
by மகி Mon May 12, 2014 3:53 pm
» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....!
by vinayagasenthil Sat May 10, 2014 9:04 pm
ராகுல் சென்ற ரயில் மீது கல்வீச்சு!
Page 1 of 1
ராகுல் சென்ற ரயில் மீது கல்வீச்சு!
காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி சென்ற சதாப்தி ரயில் மீது விஷமிகள் கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதில் ராகுல் உள்பட யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
ஹரியாணா மாநிலம் பானிபட் அருகே செவ்வாய்க்கிழமை இரவு 9.50 மணி அளவில் ரயில் சென்று கொண்டிருந்த போது ராகுல் பயணித்த பெட்டி உள்பட 5 பெட்டிகளின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த கல்வீச்சில் ரயில் பெட்டிகளின் ஜன்னல்கள் மட்டும் சேதம் அடைந்ததாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வறட்சி ஏற்பட்டுள்ளதால் அமைச்சர்கள் சிக்கன நடவடிக்கையைக் கடைப்பிடிக்க வேண்டுமென கட்சித் தலைவர் சோனியா காந்தி அழைப்பு விடுத்தார். காங்கிரஸ் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் அனைவரும் தங்களது சம்பளத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை வறட்சி நிவாரணத்துக்கு அளிக்க வேண்டும் என்றும் கட்டளையிட்டிருந்தார்.
இந்நிலையில் மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்த அமைச்சர்கள் எஸ்.எம். கிருஷ்ணா, சசி தரூர் ஆகியோர் அரசு பங்களாக்களில் தங்க வேண்டும் என உத்தரவிட்டார். அத்துடன் தாமும் விமானத்தில் சாதாரண வகுப்பில் பயணம் மேற்கொண்டார். இதையடுத்து மத்திய அமைச்சர்கள் சாதாரண வகுப்பில் பயணம் செய்வது அதிகரித்துள்ளது.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலரும், எம்.பியுமான ராகுல் காந்தி, சதாப்தி ரயிலில் தில்லியிலிருந்து லூதியானாவுக்குப் பயணம் மேற்கொண்டார். மும்பைக்கு சாதாரண வகுப்பில் சோனியா விமான பயணம் மேற்கொண்ட அடுத்த நாளே ராகுல், ரயில் பயணம் மேற்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
ரயில் நிலையத்தில் அவருக்கு மலர் கொத்து அளிக்கப்பட்டதையும் அவர் ஏற்கவில்லை. இவையனைத்தும் உயர் வகுப்புப் பயணிகளுக்கு அளிக்கப்படுவது என்று கூறி அதை நிராகரித்தார். அத்துடன் பயணத்தின்போது மற்ற பயணிகளுக்கு அளிக்கப்படுவதைப் போன்ற பிளாஸ்டிக் டம்ப்ளரில் தண்ணீர் குடித்தார். தங்களுடன் ராகுல் காந்தி ரயிலில் பயணம் செய்வது கண்டு பயணிகள் மிகுந்த உற்சாகம் அடைந்தனர்.
ராகுல் காந்தி ரயிலில் பயணம் செய்வதன் மூலம் மக்களின் கஷ்டத்தை, குறிப்பாக ரயில் பயணிகளின் சிரமத்தை அவர் நேரடியாக பார்த்து அறிய முடியும் என்று ஒரு பயணி குறிப்பிட்டார்.
ராகுல் காந்தி எங்களுடன் ரயிலில் பயணம் செய்வது மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாக ஒரு பெண் பயணி குறிப்பிட்டார்.
ராகுல் காந்திக்கு பயணத்தின்போது பரோட்டா, தயிர் வடை, பழங்கள் அளித்ததாக ரயில்வே ஊழியர்கள் தெரிவித்தனர். இவை அனைத்தும் ராகுலுக்காக சிறப்பாக தயாரிக்கப்பட்டவை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
லூதியானாவில் நான்கு நாள் நடைபெறும் இளைஞர் காங்கிரஸ் மாநாட்டை தொடங்கி வைப்பதற்காக ரயிலில் பயணம் மேற்கொண்டார் ராகுல்.
இதே ரயிலில் மாலையிலேயே அவர் தில்லி திரும்ப திட்டமிட்டுள்ளார்.
நன்றி: தினமணி.

மகி- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009
Similar topics
» மாநிலங்களவை எம்.பிக்கள் 100 பேர் கோடீஸ்வரர்கள்; ராகுல் பஜாஜ் முதலிடம்!
» நெல்லையில் குழப்பம் - இடம் மாறிச் சென்ற பத்தாம் வகுப்பு விடைத்தாள்!
» உலகின் அதிவேக ரயில்!
» தமிழக கிராமங்களில் தங்கும் ராகுல்!
» ராகுல் காந்தி கூட்டம்- 35 வயதுக்கு மேற்பட்டோர் பங்கேற்க தடை!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum