தமிழ் | Tamil | Forum
தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

கூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.

புகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.

Join the forum, it's quick and easy

தமிழ் | Tamil | Forum
தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

கூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.

புகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.
தமிழ் | Tamil | Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வணக்கம் என் பெயர் நாகராசன்.இரா
by rajan_1972 Fri Apr 10, 2020 7:20 pm

» சிறந்த பொழுதுபோக்கு இணையதளம்!
by pba Sat Jul 02, 2016 8:11 pm

» ஏற்றுமதி உரிமம் பெறும் விண்ணப்பம்
by tamilnews Tue Mar 24, 2015 8:00 pm

» மொபைல், டிடிஎச் ரீசார்ஜ் செய்யப் போறீங்களா? இந்த சலுகைகளைப் பாருங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:41 am

» மொபைல் ரீசார்ஜ் செய்து ஷாப்பிங் கூப்பன் இலவசமாக பெறுங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:38 am

» மெமரி கார்டு வாங்கப் போறீங்களா? 74% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:36 am

» அமேசானில் பெண்களுக்கான ஆடைகள் 70% வரை தள்ளுபடி !
by dsytamil Wed Jan 14, 2015 1:34 am

» அமேசானில் ஆண்களுக்கான ஆடைகள் 60% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:31 am

» லெனோவா டேப்ளட் 43% சலுகை விலையில் ரூ. 5949 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:28 am

» ப்ளிப்கார்ட் தளத்தில் சிறுவர்களுக்கான ஆடைகள் 70% வரை + 30% கூடுதல் தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:14 am

» அமேசான் தளத்தில் 50% தள்ளுபடி விலையில் மொபைல்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:13 am

» ரூ. 7499 மதிப்புள்ள மைக்ரோமேக்ஸ் ஏ1 ஆன்ட்ராய்டு மொபைல் இப்போது ரூ. 5499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:11 am

» ரூ. 19999 மதிப்புள்ள நோக்கியா லூமியா 625 மொபைல் ரூ. 7499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:10 am

» ப்ராண்டட் காலணிகளுக்கு 70% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:08 am

» ஆன்லைன் ஷாப்பிங்கில் ப்ரிண்டர்களுக்கு 33% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:06 am

» ஆன்லைனில் பொருள் வாங்கப் போறீங்களா? 70% வரை பணத்தை சேமியுங்கள்!
by dsytamil Tue Jan 13, 2015 12:30 am

» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...!
by sathikdm Sun Oct 19, 2014 4:45 pm

» சிறுதொழில் செய்பவர்கள் இணையதளம் தொடங்க வேண்டியதின் அவசியம்!
by pba Sat Sep 27, 2014 12:58 am

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:47 pm

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:42 pm

» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
by santhoshpart Wed Aug 27, 2014 4:22 pm

» “சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா!”
by santhoshpart Wed Aug 13, 2014 3:54 pm

» Daily Rs.500/- and Above
by K.MARIAPPAN Wed Jul 30, 2014 12:01 pm

» http://www.neobux.com/?r=narasimmant
by Navaneethakrishnan Wed Jul 02, 2014 3:41 pm

» வணக்கம் என் பெயர் வேணு
by A.Venu Fri Jun 27, 2014 10:10 am

» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?
by sathikdm Wed Jun 18, 2014 3:24 pm

» தமிழ் மொழி மூல கல்வி இணையதளம்
by afdhaal Wed May 28, 2014 9:22 pm

» வருக. வருக. வணக்கம்.
by மகி Mon May 12, 2014 3:55 pm

» அறிமுகம் -விநாயகா செந்தில்.
by மகி Mon May 12, 2014 3:53 pm

» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....!
by vinayagasenthil Sat May 10, 2014 9:04 pm

பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

சங்கரநயினார் கோவில்

3 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

சங்கரநயினார் கோவில் - Page 3 Empty Re: சங்கரநயினார் கோவில்

Post by நந்தி Thu Jul 01, 2010 12:05 am

அப் பத்திரிகையில் விஷ்ணுவைத் தாழ்த்தி ஒரு கதை பேசியிருக்கிறா ரவர். அக்கதை எப் புராணத்திலுள்ளது? அதை அவர் தெரிவிக்கவில்லை. அக்கதையின் தரத்தை விசாரிப்பது வைணவரின் வேலை. ஆகலின் இங்கு விடப்பட்டது. மேலும் இப்படி மனம்போனபடி கதைகளையே சொல்லிப் போவதுதானா சிவவிஷ்ணு அபேதஞ் சாதிப்பதற்கு மார்க்கம்? முதல் நூலை அடியாகக் கொண்டு உத்தேசம், லட்சணம், பரீஷை என்ற முறையில் தெய்வ நிச்சயம் பண்ணுவதே நியாயம். அந்த நியாயவழிச் செல்வது சிவஞான போதம் என்ற நூல்.
அடுத்து காமகோடி பீட முனிவரின் பிரசங்கமொன்றைக் கவனிக்கலாம். அது 24-11-1957 தினமணியில் வந்திருக்கிறது. ' ' எனபதற்கிடையிலுள்ள வாக்குகள் அப்பிரசங்கத்திலுள்ளவை. 'ராமேஸ்வரன்' என்ற பதத்தின் பொருள் யாது? எனத் தேவர்கள் விஷ்ணுவிடங் கேட்டார்கள். ராமனுக்கு ஈஸ்வரன் என அவ் விஷ்ணு பொருள் கூறித் 'தனக்கும் சிவன் ஈஸ்வரன் தான்' என்று விடை தந்தான். இது தத்புருஷஸமாஸம் பற்றிக் கொள்ளப்பட்ட பொருளாம். அடுத்து அத்தேவர்கள் அவ்வினாவைக் சிவனிடங் கேட்டார்கள். ராமனை ஈசுரனாக உடையவன் என அச்சிவன் பொருள் கூறித் 'தான் ராமனை ஈஸ்வரனாக உடையவன்' என்று விடை தந்தான். இது பஹ¤வ்ரீஹி ஸமாஸம் பற்றிக் கொள்ளப்பட்ட பொருளாம். இவ்விரண்டு விடைகளிலும் தேவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லை. அவர்கள் 'மத்யஸ்தரான பிரம்மாவைப் போய் கேட்போமென்று அவரிடம் போனார்கள்'. ராமன் என்கிற ஈசுவன் என அப்பிரமன் பொருள் கூறி 'ராமன் தான் ஈஸ்வரன்' என விடை தந்து விட்டான். இது கர்மதாராயஸமாஸம் பற்றிக் கொள்ளப்பட்ட பொருளாம். இப்படி ஒரு கதை கண்டார் அம்முனிவர். ராமந்தான் ஈசுரன் அதாவது ராமனும் ஈசுரனும் ஒன்று என்ற அம்மத்தியஸ்தனது தீர்ப்பை அவருஞ் சம்மதித்தாரெனத் தெரிகிறது. இராமேசுர வரலாற்றைக் கூறுவது சேது புராணம். அத்தலம் சிவதலம் என்பதை மனிதருட் குழந்தையும் அறியும். பிரமன் தேவனாயிருந்தும் அப்புராணத்தையுங் கற்றிலன், அத்தலத்தில் எழுந்தருளியிருக்கிற சிவலிங்கப்பெருமானையுந் தரிசித்திலன் போலும். அதனால் அக்குழறுபடைத் தீர்ப்பை அவன் கூறினான்.
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சங்கரநயினார் கோவில் - Page 3 Empty Re: சங்கரநயினார் கோவில்

Post by நந்தி Thu Jul 01, 2010 12:05 am

அவன் அப்பரத்துவ நிச்சய விசாரணையில் மத்தியஸ்தனாயிருந்து தீர்ப்புக் கூறத் தகுதியுள்ளவன் தானா? அதனை அம்முனிவர் வாய்மொழி கொண்டுங் காணலாம். சிவன், விஷ்ணும் பிரமன் என்பார் மும்மூர்த்திகள். அவருள் ஒவ்வொருவரிடமும் ஸ்வருபம், காரியம் என இரண்டு விஷயங்களுள. 'ஸ்வரூபங்களைக் கொண்டு பார்த்தால் பகவான் கருப்பு வர்ணமுடையவர். (கருப்பு தமஸ¤க்கு அடையாளம்). தூக்கத்தில் இருப்பவர். அதுவும் தமஸ¤க்கு அடையாளம். ஈச்வரன் வெளுப்பு நிற முடையவர். அவர் அணியும் திருநீறு முதலிய எல்லாம் வெளுப்பு. அதாவது ஸத்வம். 'மஞ்சள், சிவப்பு கலந்தது ரஜோகுணம்'. அக்குணம் பிரமனுக்குரியது. ஆகவே ஸ்வரூபத்தில் சிவன் சாத்துவிகன், விஷ்ணு தாமசன், பிரமன் ராஜசன் என்பது தெரிகிறது. இனி விஷ்ணு ஜகத் ரக்ஷணத்தை செய்கிறார்..... ஈச்வரன் சம்ஹாரத்தைச் செய்து பிரளயமாகிற இருட்டை உண்டு பண்ணுகிறார்'. 'பிரம்மா ஜகத் சிருஷ்டியாதிகளை செய்கிறார்.' ரக்ஷணம் சாத்விக காரியம். ஸ்வரூபம், காரியம் என்ற இரண்டனுள் ஸ்வரூபம் இயற்கைத் தருமம், காரியம். செயற்கைத் தருமம். ஸ்வரூபத்தால் சாத்துவிகனான சிவன் காரியத்தால் தாமசமாகிய சம்ஹாரத்தையும், ஸ்வரூபத்தால் தாமசனான விஷ்ணு காரியத்தால் சாத்துவிகமாகிய ரக்ஷணத்தையும், ஸ்வரூபத்தால் ராஜசனான பிரமன் காரியத்தாலும் ராஜஸமாகிய சிருஷ்டியையும் செய்கின்றாரென அக்காமகோடி முனிவர் சொன்னார். ஸ்வரூபம், காரியம் 'இரண்டிலும் ரஜோ குணத்தவரான பிரம்மாவை யாரும் ஆதரிக்கவில்லை. இதனால் மும்மூர்த்திகளில் பிரம்மாவுக்கென ஒரு பக்த கோஷ்டியோ கோவிலோ இல்லை' என்பதும் அவர் சொன்னதெ. அங்ஙனமாக ஸ்வரூபத்தால் சத்துவகுண மூர்த்தியாகிய சிவனை விட்டு ஸ்வரூபத்தால் தாமசகுண மூர்த்தியாகிய விஷ்ணுவைப் பரம்பொருளென்றோ அல்லது ராமனும் ஈசுரனும் ஒன்றென்றோ ஸ்வரூபத்தால் ராஜஸகுண மூர்த்தியாகிய பிரமன் தீர்ப்புக் கூறினால் அது சாத்துவிகர்களுக்கு ஏற்புடையத்தாமா? ராஜசத்துக்குச் சாத்துவிகத்தை மதிப்பிட முடியாது. சாத்துவிகம் மேற்பட்டது. அதற்குக் கீழ்ப்பட்டது ராஜசம். அதனினும் இழிந்தது தாமசம். அம்முனிவரும் அத் தீர்ப்பை ஆமோதித்தார். அவரை அங்ஙனம் ஆமோதிக்க வைத்தது அவரது மாயாவாத மதம்.
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சங்கரநயினார் கோவில் - Page 3 Empty Re: சங்கரநயினார் கோவில்

Post by மகி Thu Jul 01, 2010 12:47 am

பகிர்வுக்கு மிக்க நன்றி.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

சங்கரநயினார் கோவில் - Page 3 Empty Re: சங்கரநயினார் கோவில்

Post by நந்தி Sat Jul 03, 2010 10:13 pm

நன்றி நண்பரே!

தாமச காரியமாகிய சம்ஹாரத்தைப் பிறர்க்கு உபகாரமாகும்படி அளவறிந்து செய்யவேண்டும். ஸ்வரூபத்தால் சாத்விகனாயுள்ளவனாற்றான் அது முடியும். அதனாற்றான் சிவன் அச்சம்ஹாரத்தைத் தன்காரியமாக வைத்துக் கொண்டான். ஸ்வரூபத்தால் தாமசனாயுள்ளவனிடம் சாத்துவிகமாகிய ரக்ஷண காரியங் கொடுக்கப்பட்டால் அத்தாமசகுணம் அக்காரியத்தல் அடக்கப்பட்டு விடும். அக்காரியத்தை அவன் தன் மேலதிகாரிக்குப் பயந்து செய்வான். அதனால் ஸ்வரூபத்தால் கீழ்க்குணமுடைய விஷ்ணுவிடம் காரியத்தால் மேலாய ரக்ஷணங் கொடுக்கப்பட்டது. பிரமன் ஸ்வரூபத்தாலும், காரியத்தாலும் ராஜசன். ஆகவே பரத்துவ நிச்சயத்துக்கு ஸ்வரூபம் போல் காரியம் ஒரு சிறந்த ஏதுவாக மாட்டா தென்க.

பிரமனுக்கு ஒரு கோவிலுமில்லை யென்றார் அம்முனிவர். அவரது மாயாவாத மதத்துப் பரம்பொருள் தான் நிர்விசேஷ சைதன்ய வஸ்து என அவராற் பாராட்டப்படுகிற பிரமம். அப்பிரமத்துக்கு எங்காவது ஒரு கோவிலதானு மிருக்கிறதா? இல்லை. இது பரப்பிரமக் கோவில், இது பரம் பொருட் கோவில், இது பரமாத்மாக் கோவில் என ஒரு கோவில் எந்த வூரிலுங் கிடையாது.

மும்மூர்த்திகளில் பிரமன் ஒருவனாதல் போல் உருத்திரன் இன்னொருவன். அவ்வுருத்திரனையே சிவன் ஈசுரன் முதலிய சொற்களால் வழங்கி வருகிறார் அம்முனிவர். அவ்வுருத்திரனுக்கு எங்காவது கோவிலுண்டா? இல்லவே யில்லை. அம்முனிவரும் அவ்வுண்மையை அறிந்திருக்க வேண்டும். ஆயினும் அவர் பேச்சு வேறாயிருக்கிறது. எல்லாச் சிவாலயங்களும் அவ்வுருத்திரன் கோவில்களேயெனச் சாமானியர் எண்ணுமாறு அவர் பேசுகிறார். சைவ சமயத்தில் பரம்பொருளெனக் கொண்டு வழிப்படப்படும் சிவபெருமான் பிரமவிஷ்ணுருத்திரராகிய மும்மூர்த்திகளையுங் கடந்தவன். 'மூவரும் முப்பத்துமூவரும் மற்றொழிந்த தேவருங் காணாச் சிவபெருமான்' என்றது திருவாசகம். அந்தச் சிவபெருமானே எல்லாச் சிவாலயங்களிலும் சிவலிங்கத் திருமேனி தாங்கி மூலவராக எழுந்தருளியிருக்கிறான். அவன் முக்குண வசத்தராகிய மும்மூர்த்திகளில் ஒருவனாய உருத்திரனல்லன், மாயாவாத மதப் பிரமமுல்லன்.


Last edited by நந்தி on Mon Jul 05, 2010 12:13 am; edited 2 times in total
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சங்கரநயினார் கோவில் - Page 3 Empty Re: சங்கரநயினார் கோவில்

Post by நந்தி Sun Jul 04, 2010 11:40 pm

விஷ்ணுவின் கருணையினால் மோக்ஷம் ஏற்படுகிறது. சிவனுடைய கருணையினால் ஸம்ஹாரம் ஏற்படுகிறது. இருவரும் ஒரே பரம் பொருளின் ஸ்வரூபம் தான்' என்றார் அம்முனிவர். மோக்ஷத்தை ஸத்வஸ்வரூபனான சிவன் கொடுக்கமாட்டான், தமஸ¤ ஸ்வரூபமான விஷ்ணுவே கொடுப்பான் என்பது அமரத்துவத்தை அமிர்தந் தராது, ஆலாலமே தரும் என்பது போலிருக்கிறது.

'ஒரே பரம்பொருளின் ஸ்வரூபந்தான்' என்றாரே அம்முனிவர். அப்பரம்பொருளுக்கு ஏகோவா, அல்லா, விஷ்ணு, சிவன் என அவ்வம்மதச் சார்பான சிறப்புப் பெயர் ஏதேனுமுண்டா? அல்லது பரம்பொருள் என்பது தானே அதன் சிறப்புப் பெயரா? அதனை அவர் தெரிவித்திலர். அப்பெயரையும், மாயாவாதம் என்ற தம்மதப்பெயரையும் பகிரங்கமாகத் தெரிவிக்கக்கூடிய மனோபாவம் தம்மிடம் இருக்குமானால் அவர் சைவாலயங்களிற் புகுந்து தமக்குச் சம்பந்தமில்லாத காரியங்களை அங்குச் செய்ய இடம் பெறுவாரா?

இங்குச் சிருங்கேரி முனிவர் பேச்சொன்றும், காமகோடி முனிவர் பேச்சொன்றும் ஆராயப்பட்டன. ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்பார்த்தல் என்ற நியாயத்தில் அவ்வாராய்ச்சி நிகழ்ந்தது. மும்மூர்த்திகளுட்பட்ட உருத்திரனையும் விஷ்ணுவையும் ஒரே பரம்பொருளின் ஸ்வரூபந்தான் எனக் கூறி வருகிற மாயா வாதமதக் கொள்கையைச் சைவருள்ளுஞ் சிலர் பற்றிக் கொண்டு சங்கரநயினார் கோவிலிலுள்ள சங்கரநாராயணவுருச்சிவவிஷ்ணுக்களின் அபேதத்தைக் காட்டுகிறதென மயங்கி வருகின்றனர். இது சமயக் குழப்பம், குழப்பந் தவிர வேறில்லை.

மாயா வாதத்தில் பிரமந்தவிர நாமம், ரூபம், அவற்றின் பொருள் எல்லாம் மித்தையே, வியாவகாரிக பிராதி பாஸிகங்களே, பொய்யே. தேவதைகளும் அப்படித்தான். ஆகலின் எந்தத் தெய்வத்தையும் எந்தத் தெய்வமெனவும் பேசலாம். எந்தத் தெய்வத்தையும் எந்தத் தெய்வத்தோடும் இணைக்கலாம். ஏன்? பாரமார்த்திகத்தில் அவையெல்லாம் மனிதராதியோர் உள்பட இல்லாதன தானே? அம் மதந்தான் சமய சமரசம் பேசத் தகுதியுடையது. சமய சமரசம் வேறு, சமய விபசாரம் வேறு என்பது அதன் கொள்கை போலும். அச் சமரசமாவது சோபானக் கிரமத்தை விட்ட சமரசம்.
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சங்கரநயினார் கோவில் - Page 3 Empty Re: சங்கரநயினார் கோவில்

Post by நந்தி Mon Jul 05, 2010 12:10 am

முடிப்புரை

இதுகாறுஞ் சிலவே கூறப்பட்டன. எடுத்துக்கொண்ட விஷயத்தை இவையே விளக்கிவிடும். முன் ஆங்கில் ஆட்சியி லிருந்தது பாரத தேசம். அப்போதும் படித்தவர் இங்கிருந்தனர். அடிமை வாழ்வின் அவமானம் அப் படிப்பால் உறுத்தப்படவில்லை. அவரும் சுகமாக உண்டனர், உடுத்தனர், உறங்கினர், இறுதியில் பேரும் மறையுமாறு செத்தொழிந்தனர். சமீப காலத்தில் புறப்பட்டனர் சில பெருமக்கள். சுதந்திரத்தின் அவசியத்தால் அவர் உந்தப்பட்டனர். ரோஷம் தலைக் கொண்டது. அவரின் இடைவிடா உழைப்பாலுந் தியாகத்தாலும் தேச சுதந்திரம் கிடைத்தது. தேசத்தவரின் மானம் மீட்கப்பட்டது.

தேச சுதந்திரத்துக்கு முந்திய காலத்திலும் மற்றச் சமயத்தவர் தம் சமய சுதந்திரத்தை யிழந்ததாகத் தெரியவில்லை. சைவ சமயத்தவர் மாத்திரம் அவர்போலிருந்தனரொனச் சொல்ல முடியாது. அவர் விபூதி யணிந்தனர், உருத்திராக்கந் தரித்தனர், அச்சாகிக் கையகப்பட்ட மதப் புத்தகங்கள் எச்சமயத்தனவாயினும் அவற்றைப் படித்தனர், கோவிலுக்குப் போயினர், கும்பிட்டனர், உண்டியலில் பணம் போட்டனர், விழாவைத் தரிசித்தனர், விரதோபவாசங்களை யனுட்டித்தனர், எல்லாஞ் செய்தனர். ஆனால் தம் சமயத்தின் பெயர் இது. அச்சமயக் கடவுள் இது. அச் சமயப் பிரமாண நூல் இது. அச்சமயத்தைப்பிரகாசிப்பித்த ஆசாரியன்மார் இவர், அச்சமயத்தின் அடிப்படைக் கொள்கைகள் இவை என்றறியும் வியவஸ்தை மாத்திரம் அவருட் பெரும்பாலோரைவிட்டு மறைந்தது. அவரைச் சைவசமயத்தவரென எப்படிச் சொல்வது? தேசம் சுதந்தர மடையாத போது அன்னவர் மிகுந்துள்ள பிற்காலத்தில் அவரது பரிபாலனத்தில் தப்பினதாகத் தெரியவில்லை. தப்பியிருந்தால் அக்கோவில் சங்கரநாராயண சுவாமி தேவஸ்தானமென்ற பெயர் மாற்றத்தை நிச்சயமாகப் பெற்றிராது.
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சங்கரநயினார் கோவில் - Page 3 Empty Re: சங்கரநயினார் கோவில்

Post by மகி Tue Jul 06, 2010 9:48 pm

பகிர்வுக்கு மிக்க நன்றி.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

சங்கரநயினார் கோவில் - Page 3 Empty Re: சங்கரநயினார் கோவில்

Post by நந்தி Wed Jul 07, 2010 12:07 am

நன்றி நண்பரே!
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சங்கரநயினார் கோவில் - Page 3 Empty Re: சங்கரநயினார் கோவில்

Post by நந்தி Wed Jul 07, 2010 12:09 am

ஆங்கிலேயர் விலகினர். இத்தேசம் விடுதி பெற்றது. அவ்விலக்கந்தானா விடுதி? ஆமெனின் அ·தாகுக. இப்போது எல்லாருமே இந்நாட்டு மன்னராய் விட்டனர். சைவ சமயத்தவரும் இந்நாட்டு மன்னர் தான். அவருக்கு இச்சுதந்திரம் ஏன்? உண்ணவா? உடுக்கவா? உறங்கவா? அடிமை வாழ்விலும் அவர் நலக்க உண்டனர், சிறக்க உடுத்தனர், அழுந்த உறங்கினர். ஆகலின் சுதந்திரம் அதற்கன்று என்பதை அவர் அறிய வேண்டும். உடம்பை உறவெனக் கொண்ட உயிர் வாழ்க்கை, உடம்பை மிகையெனக் கொண்ட உயிர்வாழ்க்கை என உயிர் வாழ்க்கை இரண்டு வகைப்படும். அவற்றுள் முதலாமது மனிதவர்க்கம் மிருகவர்க்கம் முதலிய அனைத்து வர்க்கங்களுக்கும் பொது. இரண்டாமது மனித வர்க்கத்துக்குமட்டே யுரியது. அதுவே மனிதனாவானுக்கு வாழ்க்கை லட்சியமாகும். அதற்காக வாழும் மனிதனே தேவனாவான். அவ்வாழ்க்கை சைவ சமயமொன்றனே சித்திக்கும்.
'மற்றுந் தொடர்ப்பா டெவன்கொல் பிறப்பறுக்க
லுற்றார்க் குடம்பு மிகை'
என்றார் வள்ளுவர்.
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சங்கரநயினார் கோவில் - Page 3 Empty Re: சங்கரநயினார் கோவில்

Post by நந்தி Wed Jul 07, 2010 12:10 am

அவர் வகுத்த லட்சியத்தை யடையுமாறு வாழவே சைவ சமயத்தினர் சுதந்திரம் பெற்றனர். அவர் தம் சைவ சமயத்தில் பிற சமயங்கள் கலக்க இடங் கொடுக்கலாமா? கலவடமே கேடுகளுக்கெல்லாங் காரணம். சங்கரநயினார்க்குச் சங்கரநாராயணரெனப் பெயர் மாற்றம் வந்தது அக்கலவடத்தாலே யாம். அவரது சமயக் கோவில்கள் சிலவற்றின் கர்ப்பக் கிருகத்துள் மாயாவாத சமயகுரு பிரவேசித்து மூல மூர்த்திகளுக்கு அபிஷேகம், பூஜை முதலியன செய்துவருவதும் அக்கலவடத்தாலேயாம். பின்வரும் சைவ சந்நிதிகளுக்குப் பெருந்தொல்லை தருமேயென்ற முன்யோசனையின்றிச் சைவசமயத்துக்கும் புறம்பான மாயாவாத மதச் சார்பாய சங்கர மடங்கள் கட்ட அனுமதிக்கப்பட்டு வருகின்றன.

'Abdullahites Are planning A Mosque On Shankaracharya Hill' என்ற தலைப்பில் June 14, 1965 Organiser என்ற பத்திரிகையில் ஒரு செய்தி வந்துள்ளது. 'Abdullahites in Kashmir are conspiring for communal trouble in the Valley. For this purpose they are hatching a clandestine plan to construct a mosque in front of the famaous thousand-year old Shankaracharya Temple on top of Gopadari hill - also known as Sankaracharaya Hill - in Srinagar, according to strong indications available from circles close to Sheikh Mohammed Abdulla...Abdullahites have already started saying that Shankaracharaya Hill is a Muslim property as the place of temple was a Muslim seat....' என்பது அச்செய்தி. Abdullahites என்ற விடத்தில் சிருங்கேரி, காமகோடி சங்கராச்சாரியர் வகையறா என்றதையும், a mosque என்ற விடத்தில் அச் சங்கர மடங்கள் என்றதையும், in front of the famous thousand-year old Shankaracharya Temple என்ற விடத்தில் சிவாகமோக்தமான சைவாலயங்களின் மலையில் என்றதையும், Sankaracharya Hill is a Muslim property as the place of temple was a Muslim seat என்ற விடத்தில் சைவாலயங்களெல்லாம் மாயாவாத மதக் கோவில்கள் என்றதையும் வைத்து வாசித்தால் சிவாக மோக்த சைவாலயங்களெல்லாம் சிவாகம விரோதமான மாயாவாத மதக் கோவில்களாக எதிர்காலத்தில் விரைந்து மாறிவிடக்கூடும் என்பது தெரியலாம். அதற்கு அக் கலவடப்பேச்சே மூலம். சைவ சமயிகள் அச்செய்தி முழுவதையும் வாசிப்பாராக.

இவற்றை யெல்லாம் பார்த்துக் கொண்டிருக்குங் கண்வலி சைவசமுதாயத்துக்கு எப்படித்தான் வந்ததோ?

'ஒரு மொழிக்குள் மற்றொரு மொழி ஊடுருவுவது அதை
நசுக்குவ தாகும்; மொழி வளர்ச்சியை தடைப்படுத்தும்
அபாயம் ஏற்படும்' (21...4...1963 தினமணி) என்றார் பிரதமர் நேரு. மொழிவிஷயத்தில் அவ்வூடுருவல் ஓரளவாவது நலஞ் செய்யலாம். ஆனால் சமய விஷயத்தில் அப்படியன்று. ஒரு சமயம் ஊடுருவ இடங் கொடுத்த் இன்னொரு சமயம் முழுக்க நசுங்கிப் போவது நிச்சயம். அக்கேட்டைச் சைவபரிபாலகர் சிந்திக்க. சிந்திப்பாராயின் சங்கரநாராயணசுவாமி தேவஸ்தானம் மீண்டும் சங்கரலிங்கசுவாமிகோவில் தேவஸ்தான மெனப் பெயர் மாறாமற் போய்விடுமா?
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சங்கரநயினார் கோவில் - Page 3 Empty Re: சங்கரநயினார் கோவில்

Post by மகி Wed Jul 07, 2010 12:14 am

பகிர்வுக்கு மிக்க நன்றி.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

சங்கரநயினார் கோவில் - Page 3 Empty Re: சங்கரநயினார் கோவில்

Post by நந்தி Wed Aug 11, 2010 1:40 am

நன்றி நண்பரே!
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சங்கரநயினார் கோவில் - Page 3 Empty Re: சங்கரநயினார் கோவில்

Post by நந்தி Wed Aug 11, 2010 1:42 am

இவற்றை யெல்லாம் பார்த்துக் கொண்டிருக்குங் கண்வலி சைவசமுதாயத்துக்கு எப்படித்தான் வந்ததோ?

'ஒரு மொழிக்குள் மற்றொரு மொழி ஊடுருவுவது அதை
நசுக்குவ தாகும்; மொழி வளர்ச்சியை தடைப்படுத்தும்
அபாயம் ஏற்படும்'
(21...4...1963 தினமணி) என்றார் பிரதமர் நேரு. மொழிவிஷயத்தில் அவ்வூடுருவல் ஓரளவாவது நலஞ் செய்யலாம். ஆனால் சமய விஷயத்தில் அப்படியன்று. ஒரு சமயம் ஊடுருவ இடங் கொடுத்த் இன்னொரு சமயம் முழுக்க நசுங்கிப் போவது நிச்சயம். அக்கேட்டைச் சைவபரிபாலகர் சிந்திக்க. சிந்திப்பாராயின் சங்கரநாராயணசுவாமி தேவஸ்தானம் மீண்டும் சங்கரலிங்கசுவாமிகோவில் தேவஸ்தான மெனப் பெயர் மாறாமற் போய்விடுமா?

வாய்ப்பாட்டு, கருவியிசை, நாட்டியம், விகடம், வில்லடி முதலியன சைவாலய விழாக்களில் கூட்டந் திரட்டுகின்றன. அவை கண்ணுக்குக் காதுக்குமே இன்பமாம். மக்கள் அவற்றை ரஸிக்கின்றனர். அவர்களையும் பக்தகோடிகளென்பது என்னையோ? அவ்வாய்ப்பாட்டு முதலியவற்றால் சைவசமய ஞானம் சிறிதளவாவது கிடைக்கிறதா? இல்லை. அவற்றை அனுமதிப்பதேன்? மக்கள் உலகவின்பச் சேற்றிற் புரள்வது தான் கண்ட பலனாயிருந்து வருகிறது. கோவில்கள் களியாட்டரங்கங்கள் ஆக்கப்படுகின்றன. பணமும் விரயமாகிறது. மக்கள் விரும்புகின்ற காரணத்தால் அவையும் விழாக்களின் அங்கமாகக் கொள்ளப்பட்டன என்னலாம் பரிபாலகர். அது மக்களை மதியாமை, அவர்நலனைக் கருதாமை யாகும்.
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சங்கரநயினார் கோவில் - Page 3 Empty Re: சங்கரநயினார் கோவில்

Post by நந்தி Wed Aug 11, 2010 1:47 am

'மக்களைச் சரியான வழியில் அழைத்துச் செல்வதுதான் தலைவருக்கு அழகேயொழிய மக்கள் இழுத்தபக்கம் எல்லாம் செல்வது அழகாகாது' (15..2...1963 தினமணி) என்றார் ஒரு விமர்சகர்.

'மக்களுக்குப் பிடிக்காது. அவர்களுக்குப் பிடிக்காததைச் செய்தால் செல்வாக்குப் போய்விடும் என்ற அச்சத்தால். நியாயமான, அவசியமான பணிகளைச் செய்ய தலைவர்கள் தயங்கக் கூடாது. ஜனநாயகம் தழைக்க இந்த நெஞ்சுறுதி அவசியம் என்று மந்திரி ஸ்ரீ தேசாய் சொன்னார். நியாயத்தைச் செய்ய தலைவர்களே அஞ்சுவார்களானால் ஜனநாயகத்துக்கு கேடுகாலம்வந்துவிடும்'( 16...4...1963 தினமணி) என்றார் அம்மந்திரி.

'ஒரு காரியம் சரியா, சரியில்லையா என்று பார்க்க வேண்டுமே யொழிய சிலர் புகார் செய்வார்களே என்பதற்காக சரியான பாதையைக் கைவிடுவது உசிதமல்ல' (22...4...1963 தினமணி) என்றது ஆசிரியப் பகுதி. ஜனநாயகம் என்ற விடத்தில் அச்சமய நிலய பரிபாலகர் என்றதையும் வைத்துப் பார்க்க. அப்படிப் பார்த்தால் சைவ சமயம் தன் தனித்தன்மையை யிழந்து, உருக்குலைந்து மக்களுக்கு உதவாமல் இப்போது உள்ள நிலையில் இருந்து வருவதற்குத் தாம் எந்த மட்டில் காரணம் என்பதை அப் பரிபாலகர் உணரக்கூடும். விழாக் காலங்களில் சைவசமயஞானம் வரண்ட ஆரவாரங்களைப் புகுத்தி மக்களை அச்சமயத்துக்கு வெளியில் தள்ளி வைத்தால் அச்சமயத்துக்குக் கேடு காலம் வரத் தடையில்லை. கேடு காலமாவது அச்சமயத்தின் பயனை மக்கள் அடையாமற் போகுங் காலம். அவர்களை அங்ஙனம் அப் பரிபாலகர் புறம் போக்கினால் சங்கரநயினார் கோவிலுக்குச் சங்கரநாராயணசுவாமி தேவஸ்தானம் என்ற பெயர் இன்னும் இருந்துகொண்டுதானிருக்கும். அதற்குக் காரணம் அப்பரிபாலகரா? மக்களா?
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சங்கரநயினார் கோவில் - Page 3 Empty Re: சங்கரநயினார் கோவில்

Post by நந்தி Wed Aug 11, 2010 1:48 am

மேடைப் பேச்சுக்கள் மிகுந்துள்ள காலம் இது. சைவசமயப் பிரசாரகரும் அதிகரிக்கலாயினர். அதற்கு ஊக்கமளித்து வருபவர் அப்பரிபாலகர். அது நல்லதே. ஆனால் அப்பிரசாரங்கள் சைவ சாத்திர வரம்புட்பட்டனவா? அவற்றால் பொதுமக்களுக்கு அச்சமய நலன் ஏதேனும் விளைகிறதா? அவற்றை அப்பரிபாலகர் அவ்வப்போது நாடிசோதனை செய்யும் மருத்துவன் போலிருந்து கவனித்துவர வேண்டாமா எமது சமயம் இது, எமது வணக்கத்துக்குரிய தெய்வம் இது, எமது சமயவரம்பாயுள்ள பிரமாண சாத்திரங்கள் இவை, எம் சமய சந்தான பாஷ்ய ஆசாரிய மூர்த்திகள் இவர்கள், எமக்குரிய ஆசார அனுஷ்டானாதிகள் இவை என்பனவாதியவற்றை மக்கள் உணர்ந்திருக்கிற அளவைக் கொண்டுதான் அப்பரிபாலகர்கள் அப்பிரசாரகர்களை நியமிப்பதன் தரம் கணிக்கப்படும். மக்களைச் சைவத்துறையில் உண்மை காணும்படி செய்வதே அதிமுக்கியம். அவர்களிடம் சைவசமய வுணர்வை ஊட்டுக் நோக்கமின்றிப் பிரசாரகர்களை நியமிப்பது அவர்களின் உலக வாழ்க்கைக்கே உதவும். இவர் வறியவர். இவர் இனத்தவர், இவர் உறவினர், இவர் சிபார்சுக் கடிதம் வாங்கி வந்தவர் என்பதற்காகச் சைவ சமய வரம்பழிந்த பிரசாரகர்களையும் அந்நிய சமயப் பிரசாரகர்களையும் அப்பரிபாலகர்கள் நியமித்தால் அப்பரிபாலகர்களுக்கே சைவ சமயம் இது. பிற சமயங்கள் இவை எனக் காண்கிற ஆற்றல் இல்லைப் போலுமென உலகஞ் சந்தேகிக்க இடமுண்டாகும். சமய வளர்ச்சியில் அவர் உதாசீன மனமுடையவரென எண்ணவும் படுவர். அப்பிரசாரகர்கள்பால் இரக்கங்காட்டுகிற பரிபாலகர்கள் தம் சொந்தப் பணத்தைக் கொடுத்து அவர்களைப் பராமரிக்கலாம். அவ்விரக்கத்துக்குக் கோவிற்பணமா இரை? சைவ சமயாபிவிருத்திக்கே அது செலவு செய்யற்பாலது. பரிபாலகர்கள் பாதுகாப்பதற்குமட்டில் கோவிற் சொத்துக்களைத் தம் சொந்தச் சொத்துப் போற் கருத வேண்டும். செலவிடும் வகையில் அது சைவதருமச்சொத்தாகலின் அ·தத் தருமத்திற்கே செலவாதல் வேண்டும். பயிரையுங் களையையும் பகுத்தறியக் கூடியவரே களையைப் பறித்தெறிந்து பயிரைப் போற்றி வளர்த்துப் பயன் காண்பர். அவரே உழவரா யிருக்கத் தகுதி பெற்றவர். அவர்போல் பரிபாலகரும் பிரசாரகரும் சைவ சமயம் இது. பிற சமயங்கள் இவையென விவேகித்துணர வல்லராதல் அவசியம். அங்ஙனமாயின் மக்களுக்குச் சமயக்கண் விரைவில் திறக்கப்படும். அவர்களும் அப்பரிபாலகருக்கு உறுதுணை யாவார்கள். அதனால் சங்கரநாராயண சுவாமி தேவஸ்தானம் என்ற புதுப்பெயர் போய்ச் சங்கரநயினார் கோவில் தேவஸ்தானம் என்றப் பழம் பெயர் விரைந்து இடம் பெறும்.
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சங்கரநயினார் கோவில் - Page 3 Empty Re: சங்கரநயினார் கோவில்

Post by நந்தி Sat Aug 21, 2010 5:17 pm

சில வருடங்களுக்குமுன் னிருந்தோர் அப் புதுப்பெயரை அக் கோவிலுக் கிட்டனர். அவர் எவரேனுமாக. அவர் அவ்வூர் மக்களுக்கு முன்னறிவிப்புக் கொடுத்து அப்பெயர் மாற்றஞ் செய்தனரா? அ·தன்றி மறைமுகமாகச் செய்தனரா? அதுவும் எ·தேனுமாக தல புராணத்தையேனும் அவர் படித்திருந்தாரெனச் சொல்லமுடியவில்லை. எப்படியோ நடந்தது நடந்து விட்டது. இப்போது அவர் பின்னுள்ளார் இருந்து வருகின்றனர். அவருங் கெதானு கெதிக (ஒருவர் பின் ஒருவர் என்ற ) முறையில் இருந்து போகத்தான் வந்திருக்கின்றனரா? பாரத தேசம் சுதந்திரம் பெறப் பாடுபட்ட பெருமக்கள் பல்லாயிரவ ராவர். அவருட் சைவ சமயத்தினருஞ் சேர்ந்திலரெனச் சொல்லமுடியாது. அவரும் சுதந்திர வீரரே, சமர்த்தரே, தியாக புருடரே. அவர் சங்கரநாராயணசுவாமி தேவஸ்தானம் என்ற இடைநுழை பெயரை மாற்றிச் சங்கரநயினார் கோவில் தேவஸ்தானம் அல்லது சங்கரலிங்கசுவாமி தேவஸ்தானம் என்ற பெயரை அக்கோவிலுக்கு முன்போல் வழங்குமாறு செய்ய ஏன் ஒருப்பட் டெழக்கூடாது? இச்சுதந்திர நேசத்தில் எல்லாச் சமயங்களும் சுதந்திரமாயிருந்து தம்மை யாசரிக்கு மக்களுக்கு நலஞ் செய்து வருகின்றன. சைவ சமயமாத்திரம் மாயாவாத முதலிய புறச்சமயங்களால் உருக்குலைந்து கிடக்கின்றது. அதைக் காணுங் கண்ணும், கண்டு கலங்கும் நெஞ்சமும் சைவப் பொது மக்களுக்கு இன்னுமா இல்லை? உரிமையைப் பறிகொடுப்பதுமா பரந்த நோக்கம்? சைவசமயாபிவிருத்தியில் அவர் அசிரத்தை காட்டுவாராயின் தேச சுதந்திரப் போராட்டத்தில் அவர் கொண்ட பங்கு சம்சயத்திற்கே யிடனாம். தேரிழுப்பவர் பலர். சிலர் வடத்தைத் தொட்டுக் கொண்டே சில தூரம் போய்த் தாமுந் தேரிழுத்ததாகச் சொல்லிக் கொள்வர். அவர் போலவே அப்போராட்டத்தில் அச்சைவரும் நடந்து கொண்டனரென எண்ண வேண்டிவரும்.
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சங்கரநயினார் கோவில் - Page 3 Empty Re: சங்கரநயினார் கோவில்

Post by நந்தி Sat Aug 21, 2010 5:19 pm

சீனர் ஆக்கிரமிப்பு விஷயத்திலும் அவர் காட்டிவரும் ரோஷம் அவ்வளவுதான்போலும் என அவர் ஏன் கருதப்பட மாட்டார்? அவர் தரத்துக்கு அ·தாகுமா? சங்கரநயினார் கோவிலி லுள்ள ஸ்ரீ சங்கரலிங்கசுவாமி தேவஸ்தானத்திற்குச் சங்கரநாராயண சுவாமி தேவஸ்தானம் என்பது சிறிதும் உரிமையற்ற பெயர், ஆதலின் விரைந்து நீக்கப்படவே தக்கது. சங்கரநயினார்கோவில் தேவஸ்தானம் அல்லது சங்கரலிங்கசுவாமி தேவஸ்தானம் என்பதே முற்றிலும் உரிமையான, பழமையான, சாஸ்திரோக்தமான, சர்க்கார் ஆதாரபூர்வமான, நியாயமான பெயரென்பது அசைக்க முடியாத உண்மை. சங்கரநயினார்கோவில் நகரப் பெருமக்கள் இதில் தனிப்பட்ட சிரத்தைகாட்டி ஆவண உடனே செய்யுங் கடப்பா டுடையவர்கள் என்பதை நான் அவர்களிடம் பணிவுட தெரியப்படுத்திக் கொள்கிறேன்.

"பெண்டைக் கொடுத்தாலும் பேருலகில் நிந்தையிலை
தொன்றுதொட்டு வந்தசைவந் தோற்கில்நிந்தை - பெண்டைவிற்றும்
பெற்றான் சிவகதியைப் பேரரிச் சந்திரனும்
உற்றான் பழியிந் திரன்." (அபியுக்தர்)



சங்கரநயினார்கோவில் என்னும் இந்நூல் முற்றிற்று

ஸ்ரீமத் சிவஞான சுவாமிகள் திருவடி வாழ்க.
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சங்கரநயினார் கோவில் - Page 3 Empty Re: சங்கரநயினார் கோவில்

Post by மகி Mon Aug 23, 2010 7:31 am

பகிர்வுக்கு மிக்க நன்றி.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

சங்கரநயினார் கோவில் - Page 3 Empty Re: சங்கரநயினார் கோவில்

Post by நந்தி Tue Mar 12, 2013 3:02 pm

நன்றி நண்பரே!
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சங்கரநயினார் கோவில் - Page 3 Empty Re: சங்கரநயினார் கோவில்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum