Latest topics
» வணக்கம் என் பெயர் நாகராசன்.இராby rajan_1972 Fri Apr 10, 2020 7:20 pm
» சிறந்த பொழுதுபோக்கு இணையதளம்!
by pba Sat Jul 02, 2016 8:11 pm
» ஏற்றுமதி உரிமம் பெறும் விண்ணப்பம்
by tamilnews Tue Mar 24, 2015 8:00 pm
» மொபைல், டிடிஎச் ரீசார்ஜ் செய்யப் போறீங்களா? இந்த சலுகைகளைப் பாருங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:41 am
» மொபைல் ரீசார்ஜ் செய்து ஷாப்பிங் கூப்பன் இலவசமாக பெறுங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:38 am
» மெமரி கார்டு வாங்கப் போறீங்களா? 74% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:36 am
» அமேசானில் பெண்களுக்கான ஆடைகள் 70% வரை தள்ளுபடி !
by dsytamil Wed Jan 14, 2015 1:34 am
» அமேசானில் ஆண்களுக்கான ஆடைகள் 60% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:31 am
» லெனோவா டேப்ளட் 43% சலுகை விலையில் ரூ. 5949 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:28 am
» ப்ளிப்கார்ட் தளத்தில் சிறுவர்களுக்கான ஆடைகள் 70% வரை + 30% கூடுதல் தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:14 am
» அமேசான் தளத்தில் 50% தள்ளுபடி விலையில் மொபைல்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:13 am
» ரூ. 7499 மதிப்புள்ள மைக்ரோமேக்ஸ் ஏ1 ஆன்ட்ராய்டு மொபைல் இப்போது ரூ. 5499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:11 am
» ரூ. 19999 மதிப்புள்ள நோக்கியா லூமியா 625 மொபைல் ரூ. 7499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:10 am
» ப்ராண்டட் காலணிகளுக்கு 70% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:08 am
» ஆன்லைன் ஷாப்பிங்கில் ப்ரிண்டர்களுக்கு 33% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:06 am
» ஆன்லைனில் பொருள் வாங்கப் போறீங்களா? 70% வரை பணத்தை சேமியுங்கள்!
by dsytamil Tue Jan 13, 2015 12:30 am
» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...!
by sathikdm Sun Oct 19, 2014 4:45 pm
» சிறுதொழில் செய்பவர்கள் இணையதளம் தொடங்க வேண்டியதின் அவசியம்!
by pba Sat Sep 27, 2014 12:58 am
» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:47 pm
» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:42 pm
» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
by santhoshpart Wed Aug 27, 2014 4:22 pm
» “சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா!”
by santhoshpart Wed Aug 13, 2014 3:54 pm
» Daily Rs.500/- and Above
by K.MARIAPPAN Wed Jul 30, 2014 12:01 pm
» http://www.neobux.com/?r=narasimmant
by Navaneethakrishnan Wed Jul 02, 2014 3:41 pm
» வணக்கம் என் பெயர் வேணு
by A.Venu Fri Jun 27, 2014 10:10 am
» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?
by sathikdm Wed Jun 18, 2014 3:24 pm
» தமிழ் மொழி மூல கல்வி இணையதளம்
by afdhaal Wed May 28, 2014 9:22 pm
» வருக. வருக. வணக்கம்.
by மகி Mon May 12, 2014 3:55 pm
» அறிமுகம் -விநாயகா செந்தில்.
by மகி Mon May 12, 2014 3:53 pm
» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....!
by vinayagasenthil Sat May 10, 2014 9:04 pm
ஜட்ஜ் கருப்பண்ணசாமி : தவறு செய்தவருக்கு தண்டனை : குன்னிமரத்தான் கோவில் வினோதம்
Page 1 of 1
ஜட்ஜ் கருப்பண்ணசாமி : தவறு செய்தவருக்கு தண்டனை : குன்னிமரத்தான் கோவில் வினோதம்
[You must be registered and logged in to see this image.]
மோகனூர்:
குன்னிமரத்தான் கோவிலில், கோழியை ஈடுகொடுத்து, தலைகீழாக தொங்கவிட்டால்
தவறு செய்தவர்களை கருப்பண்ணசாமி தண்டிப்பார் என்ற வினோத பழக்கம், நீண்ட
காலமாக தொடர்ந்து வருகிறது.
நாமக்கல் மாவட்டம் மோகனூர் அடுத்த
வளையப்பட்டியில் பிரசித்தி பெற்ற குன்னிமரத்தான் கோவில் அமைந்துள்ளது.
இக்கோவிலில் வீற்றிருக்கும் கருப்பணசாமியை 'கோர்ட் ஜட்ஜ்', குன்னிமர
காவலாளி என இங்கு வரும் பக்தர்கள் அழைக்கின்றனர்.இப்பகுதியில் 200
ஆண்டுகளுக்கு முன் வசித்த விவசாயிகள், விளைந்த நெற்கதிர்களை அடிக்க
புறம்போக்கு இடத்தை தேர்வு செய்தனர். அந்த நிலத்தை சுத்தம் செய்து மரங்களை
வெட்டிய போது அங்கிருந்த குன்னிமரத்தில் திடீரென ரத்தம் வருவதை கண்ட
விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர்.அப்போது, 'கருப்பண்ணசாமி நேரில் தோன்றி,
தனக்கு கோவில் கட்டி வழிபட்டால் வேண்டியதை வழங்குவேன்' என, கூறியதாக
கோவில் உருவான வரலாறு பற்றி அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இக்கோவிலில் உள்ள குன்னிமரம் பலதரப்பட்ட
நோய்களை குணப்படுத்தும் தன்மையுடையுது என்றும், இங்குள்ள துரட்டிமரம்
அருகே இறந்தவர்களின் நினைவாக, 'நடுகல்' பதிக்கப்பட்டுள்ளதால், 'ஆவி'
தொந்தரவு இருக்காது என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கை. இங்கு ஆங்கிலேயர்
காலத்தில் அமைக்கப்பட்ட 20 அடி உயரம் உள்ள குதிரை ஒன்று கம்பீரமாக
நிற்கிறது. அந்த குதிரை சிலைக்கு முன் தொட்டில் கட்டினால் குழந்தை
பிறக்கும் என்பதும் ஐதீகம்.அதையெல்லாம் மிஞ்சும் வகையில் உள்ளது
இக்கோவிலின் சிறப்பு.
இக்கோவிலில் தற்போதும் ஈடுபோடும் பழக்கம்
நடைமுறையில் உள்ளது. குதிரை சிலைக்கு பின் உள்ள ஈடுபோடும் இடத்தில், நீண்ட
இரும்பு சங்கிலி உள்ளது. அச்சங்கிலியில் உயிருடன் இருக்கும் கோழியின்
கழுத்தை சிறிது அறுத்து, தலைகீழாக தொங்க விடுகின்றனர்.'தங்கள் வீட்டில்
பணம், நகை காணாமல் போனால், அதை எடுத்தவர்களுக்கு கருப்பண்ணசாமி தண்டனை
வழங்குவார்' என்பது, இங்கு வந்து ஈடுபோடுவோரின் அசைக்க முடியாத
நம்பிக்கை.இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள், 'தவறு செய்தவர்களுக்கு நிச்சயம்
தண்டனை கிடைக்கும்' என, கூறுகின்றனர்.
ஈடுபோட்டு சங்கிலியில் தொங்க விடப்பட்ட
கோழியை, பறவை மற்றும் விலங்கினங்கள் உணவுக்காக தொடுவதில்லை.சங்கிலியில்
தொங்கும் கோழிகள், எலும்பு கூடாக மாறி தானாக மக்கி விடும். யாராவது
பழிவாங்கும் நோக்கில் வேண்டும் என்றே ஈடுபோட்டால், அவர்களையே திருப்பி
தண்டிக்கும். ஈடுபோட்ட கோழி மக்கி மண்ணில் விழும் முன் தவறு செய்தவர்கள்
தண்டிக்கப்படுவர் எனவும் நம்புகின்றனர்.தமிழகம் முழுவதிலும் இருந்து
வாரந்தோறும் வெள்ளிக்கிழமை ஈடுபோட ஏராளமானோர் வருகின்றனர். நாமக்கல்,
சேலம், கரூர், திருச்சி மாவட்டத்தை சேர்ந்த பக்தர்கள் நாள்தோறும் வந்து
செல்கின்றனர்.ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் கோவில் திருவிழா நடக்கும். தவறு
செய்தவர்களுக்கு தண்டனை வாங்கித்தரவும், வீண்பழி சுமத்தியவரை தண்டிக்க
முடியும் என்ற நம்பிக்கையில் பல மாவட்டங்களில் இருந்து வருவோர் எண்ணிக்கை
நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கோவிலுக்கு ஈடுபோட வந்த பக்தர் ஒருவர் கூறுகையில்,
''இக்கோவில் பெருமை பற்றி ஏற்கனவே கேள்விப்பட்டுள்ளேன். தற்போது முதன்
முறையாக இக்கோவிலுக்கு வந்துள்ளேன். ஈடுபோட்டால் வேண்டியது நடக்கும்
என்பது உண்மை. நானும் ஒரு காரியமாக ஈடுபோட வந்துள்ளேன்,'' என்றார்.

aarul- தள ஆலோசகர்
- பதிவுகள் : 421
புள்ளிகள் : 793
Reputation : 12
சேர்ந்தது : 20/12/2009
வசிப்பிடம் : mani electronics,erode, tamilnadu,india
Similar topics
» உயிரினங்களில் சில வினோதம்!
» தூக்கு தண்டனை
» சங்கரநயினார் கோவில்
» திருத்தணி முருகன் கோவில் பிரம்மோற்சவம் துவக்கம்!
» மோசமான ஆட்டம் ; வீரர்கள் 7 பேருக்கு கடும் தண்டனை ; பாக்., வாரியம் போட்டது குண்டு
» தூக்கு தண்டனை
» சங்கரநயினார் கோவில்
» திருத்தணி முருகன் கோவில் பிரம்மோற்சவம் துவக்கம்!
» மோசமான ஆட்டம் ; வீரர்கள் 7 பேருக்கு கடும் தண்டனை ; பாக்., வாரியம் போட்டது குண்டு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum