தமிழ் | Tamil | Forum
தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

கூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.

புகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.

Join the forum, it's quick and easy

தமிழ் | Tamil | Forum
தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

கூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.

புகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.
தமிழ் | Tamil | Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வணக்கம் என் பெயர் நாகராசன்.இரா
by rajan_1972 Fri Apr 10, 2020 7:20 pm

» சிறந்த பொழுதுபோக்கு இணையதளம்!
by pba Sat Jul 02, 2016 8:11 pm

» ஏற்றுமதி உரிமம் பெறும் விண்ணப்பம்
by tamilnews Tue Mar 24, 2015 8:00 pm

» மொபைல், டிடிஎச் ரீசார்ஜ் செய்யப் போறீங்களா? இந்த சலுகைகளைப் பாருங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:41 am

» மொபைல் ரீசார்ஜ் செய்து ஷாப்பிங் கூப்பன் இலவசமாக பெறுங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:38 am

» மெமரி கார்டு வாங்கப் போறீங்களா? 74% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:36 am

» அமேசானில் பெண்களுக்கான ஆடைகள் 70% வரை தள்ளுபடி !
by dsytamil Wed Jan 14, 2015 1:34 am

» அமேசானில் ஆண்களுக்கான ஆடைகள் 60% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:31 am

» லெனோவா டேப்ளட் 43% சலுகை விலையில் ரூ. 5949 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:28 am

» ப்ளிப்கார்ட் தளத்தில் சிறுவர்களுக்கான ஆடைகள் 70% வரை + 30% கூடுதல் தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:14 am

» அமேசான் தளத்தில் 50% தள்ளுபடி விலையில் மொபைல்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:13 am

» ரூ. 7499 மதிப்புள்ள மைக்ரோமேக்ஸ் ஏ1 ஆன்ட்ராய்டு மொபைல் இப்போது ரூ. 5499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:11 am

» ரூ. 19999 மதிப்புள்ள நோக்கியா லூமியா 625 மொபைல் ரூ. 7499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:10 am

» ப்ராண்டட் காலணிகளுக்கு 70% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:08 am

» ஆன்லைன் ஷாப்பிங்கில் ப்ரிண்டர்களுக்கு 33% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:06 am

» ஆன்லைனில் பொருள் வாங்கப் போறீங்களா? 70% வரை பணத்தை சேமியுங்கள்!
by dsytamil Tue Jan 13, 2015 12:30 am

» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...!
by sathikdm Sun Oct 19, 2014 4:45 pm

» சிறுதொழில் செய்பவர்கள் இணையதளம் தொடங்க வேண்டியதின் அவசியம்!
by pba Sat Sep 27, 2014 12:58 am

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:47 pm

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:42 pm

» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
by santhoshpart Wed Aug 27, 2014 4:22 pm

» “சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா!”
by santhoshpart Wed Aug 13, 2014 3:54 pm

» Daily Rs.500/- and Above
by K.MARIAPPAN Wed Jul 30, 2014 12:01 pm

» http://www.neobux.com/?r=narasimmant
by Navaneethakrishnan Wed Jul 02, 2014 3:41 pm

» வணக்கம் என் பெயர் வேணு
by A.Venu Fri Jun 27, 2014 10:10 am

» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?
by sathikdm Wed Jun 18, 2014 3:24 pm

» தமிழ் மொழி மூல கல்வி இணையதளம்
by afdhaal Wed May 28, 2014 9:22 pm

» வருக. வருக. வணக்கம்.
by மகி Mon May 12, 2014 3:55 pm

» அறிமுகம் -விநாயகா செந்தில்.
by மகி Mon May 12, 2014 3:53 pm

» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....!
by vinayagasenthil Sat May 10, 2014 9:04 pm

பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

திருக்குறள் பொது நூலா?

3 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

திருக்குறள் பொது நூலா? - Page 2 Empty Re: திருக்குறள் பொது நூலா?

Post by மகி Sun Jul 11, 2010 1:47 am

பகிர்வுக்கு மிக்க நன்றி.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

திருக்குறள் பொது நூலா? - Page 2 Empty Re: திருக்குறள் பொது நூலா?

Post by நந்தி Mon Jul 12, 2010 11:57 pm

நன்றி நண்பரே!
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

திருக்குறள் பொது நூலா? - Page 2 Empty Re: திருக்குறள் பொது நூலா?

Post by நந்தி Tue Jul 13, 2010 12:10 am

இனி அவ்வேத வழிச் செல்வதே திருக்குறளென்பதற்கு அகச்சான்றுண்டா? ஆம். மக்கள் தரமான நூல்களைப் படிக்க வேண்டும். ஆசிரியர் திருவுள்ளம் அது.

'மெய்' (300), 'கற்பவை' (391), 'இலங்கு நூல்' (410), 'அரிய' (503)

என அந்நூல்கள் குறிக்கப்படுகின்றன. அவையென்ன? விவரந் தெரியவில்லை. பொதுப்படக் கூறிச் செல்வது படிப்பவரை மயங்க வைக்கும். ஏதாவது ஒன்றிரண்டு நூலையெடுத்து உதாகரித்து அந்த நூலையும் அதைச் சார்ந்த நூல்களையும் கற்க என அவர் ஆணைதர வேண்டும். அப்போது தான் மெய், கற்பவை முதலிய பொதுப் பிரயோகங்களுக்குத் தெளிவு உண்டாகும். இல்லாவிட்டால் தனக்கென ஒரு கொள்கையு மில்லாத இந்து மதமென்ற ஒரு பொந்து மதத்தை வைத்துக் கொண்டு அப் பொந்தில் வாய் படைத்த பிரசாரகர் தத்தங் கொள்கையைப் புகுத்திச் செய்து வருகிற வியவஸ்தையற்ற பிரசாரங்கள் போலவே எவரும் தாந்தாம் மதிக்கும் நூல்களே அம் 'மெய்' , 'கற்பவை' யெனக் கொண்டு குதிப்பர். ஆனால் ஆசிரியர் அதற்கு இடம் வைக்க மாட்டார். மெய், கற்பவை, இலங்குநூல் என்பவற்றிற்குத் திருக்குறளில் உதாரணமுண்டு.

'மறப்பினு மோத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்' (134)

'அந்தணர் நூற்கு மறத்திற்கு மாதியாய்
நின்றது மன்னவன் கோல்' (543)

'ஆபயன் குன்று மறுதொழிலோர் நூன்மறப்பர்
காவலன் காவா னெனின்' (560)


என்றது நூல். அதற்கு 'ஓத்து ---- வேதம்; பார்ப்பான் பிறப்பு - அந்தணனது உயர்ந்தத வருணம்; அந்தணர் நூற்கும் - அந்தணர்க்குரித்தாய வேதத்திற்கும்; அறு தொழிலோர் நூல் மறப்பர் - அந்தணரும் நூல்களை மறந்து விடுவர்' என்பது உரை. 'வேதமும் அறனும் அநாதி; பசுக்கள் பால் குன்றிய வழி அவியின்மையானும், அது கொடுத்தற்குரியார் மந்திரங் கற்பமென்பன ஓதாமையானும், வேள்வி நடவாதாம்; ஆகவே, வானம் பெயலொல்லா தென்பதாயிற்று' என்பது குறிப்பு.
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

திருக்குறள் பொது நூலா? - Page 2 Empty Re: திருக்குறள் பொது நூலா?

Post by மகி Tue Jul 13, 2010 7:21 am

பகிர்வுக்கு மிக்க நன்றி.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

திருக்குறள் பொது நூலா? - Page 2 Empty Re: திருக்குறள் பொது நூலா?

Post by நந்தி Thu Jul 22, 2010 1:59 am

நன்றி நண்பரே!
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

திருக்குறள் பொது நூலா? - Page 2 Empty Re: திருக்குறள் பொது நூலா?

Post by நந்தி Thu Jul 22, 2010 2:02 am

இங்ஙனம் பார்ப்பனச் சாதியோடு தொடர்புபடுத்திக் கூறப்பட்ட வேதமே ஆசிரியரால் உதாகரிக்கப்பட்ட நூலாகும். 300 ஆவது குறட்குறிப்பு முன் காட்டப்பட்டது. அதில் ஆகமங்கள் சொல்லப்பட்டன. 9 ஆவது குறட் குறிப்புத் தன் கூற்றாக. "இவ்வாறு சைவாகமத்துக் கூறப்பட்டது'' என்றது.

ஆகவே ஆசிரியர் மெய், கற்பவை, இலங்குநூல், அரிய எனக் குறித்துள்ள நூல்கள் வேத சிவாகமங்களும் அவற்றைச் சார்ந்த நூல்களுமேயாம். அங்ஙனமாக, அவ்வேததையும் ஆகமத்தையும் ஒரு சேர நிந்தப்பவரும், வேதத்தைப் போற்றி ஆகமத்தை நிந்திப்பவரும், ஆகமத்தைப் போற்றி வேதத்தை நிந்திப்பவரும் திருக்குறளுக்குப் புறம்பானவரே யென்பது திண்ணம்.
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

திருக்குறள் பொது நூலா? - Page 2 Empty Re: திருக்குறள் பொது நூலா?

Post by நந்தி Thu Jul 22, 2010 2:03 am

பல கடவுளர்

'இந்திரன்' (25), 'செய்யபவள்' (167), 'தவ்வை' (167), 'அடியளந்தான்' (610), 'கூற்று' (765)

முதலிய பல கடவுளரின் பிரஸ்தாபம் திருக்குறளிலுண்டு. அவரும் இருபாலாராயிருக்கின்றனர்.

'வானோர்க்கும்' (18), 'அகல் விசும்புளார்' (25), 'தேவரனையர்' (1073)

என்ற பிரயோகங்களால் எண்ணிறந்த கடவுளருண்மை அதிற் சம்மதிக்கப் பட்டது புலனாம். 'மூவரு முப்பத்து மூவரு மற்றொழிந்த தேவரும்' என்ற திருவாசகத்தோடு அவற்றையியைத்துக் காண்க. ஆனால் ஒரே கடவுள் தானுண்டு என்கிற சமயங்களும் பலவே. தோட்டியின் குடில்போல்வன அவை. அக்குடிலில் தோட்டி தலைவன் தான். ஆனால் அடிமைகள் கிடையா. திருவள்ளுவர் கொண்ட சமயமோ அரசமாளிகை போல்வது. அங்குத் தோட்டி முதல் மந்திரி வரை ஆயிரக் கணக்கான ஊழியர் இருப்பர். அரசன் அத்தனை பேருக்கும் ஆண்டவன், அதிகாரி, தலைவன், அச்சமயத்திலும் மாணிக்கவாசகர் அருளியது போல் கணக்கிலடங்காக் கடவுளரிருப்பர். அவரெல்லாந் தொண்டர்கள். அச்சமயத்து இறைவன் ஒருவனே. அவனே தலைவன், அக்கடவுளரடங்கலும் அவனுக்கு உடைமையே. அங்ஙனமாகத், தோட்டிக் குடில்கள் போன்ற மதங்கள் திருக்குறளைத் தமக்கும் உரியதாக எப்படிச் சொல்லலாம்? மேலும் அந்நூலில் வருகிற கடவுளர் அம்மதங்களுக்கு உடன்பாடுமல்ல.
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

திருக்குறள் பொது நூலா? - Page 2 Empty Re: திருக்குறள் பொது நூலா?

Post by நந்தி Thu Jul 22, 2010 2:11 am

பொய்ச் சமயங்களும் மெய்ச் சமயமும்

பொய்வந்துழலுஞ் சமயங்கள் பலவாயிருக்கலாம். ஆனால் மெய்ச் சமயம் ஒன்றே தான் இருக்க முடியும் என்பது ஆசிரியரின் அழுத்தமான கொள்கை.

'இருள்சே ரிருவினையுஞ் சேரா விறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு' (5)


என்றது நூல். இறைவன் பொருள்சேர் புகழ் புரிந்தார் மாட்டு - இறைவனது மெய்ம்மை சேர்ந்த புகழை விரும்பினாரிடத்து' என்பது உரை.

'இறைமைக் குணங்களிலராயினாரை உடையரெனக் கருதி அறிவிலார் கூறுகின்ற புகழ்கள் பொருள் சேரா வாகலின், அவை முற்றவுமுடைய இறைவன் புகழே பொருள்சேர் புகழெனப்பட்டது' என்பது குறிப்பு.
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

திருக்குறள் பொது நூலா? - Page 2 Empty Re: திருக்குறள் பொது நூலா?

Post by நந்தி Thu Jul 22, 2010 2:12 am

வேதசிவாகமங்களிற் பிரஸ்தாபிக்கப்படும் இறைவன் ஒருவனுளன், அவனே முழுமுதற் பொருள், அவ்விறைவன்பாலுள்ள குணங்கள் அவனுக்கேயுரியன. அவையே இறைமைக் குணங்கள். அவனைக் கண்டு அக்குணங்களைச் சொல்லிச் சொல்லிப் புகழ வேண்டும். அவனைக் காண்டலாலது வேதாகமங்கள் கூறும் அவனுண்மையை அளவைகளால் துணிதல். அங்ஙனம் கண்டு அக்குணங்களாற் புகழ்வது அவன் விஷயத்தில் பொருள்சேர் புகழாகும். அதற்கு ஒரே சமயந்தான் இருக்க முடியும். இரண்டு மூன்று இருக்கலாமென்பது அறியாமை. மற்றைச் சமயங்கள் எத்தகையன? அவ்விறைவனல்லாத பிற சேதனங்கனைத்தும் உயிர்கள். அவற்றுள் தத்தமக்கு இஷ்டமான ஒவ்வொருயிரை அச்சமயங்கள் எடுத்துக் கொண்டு அதன்மேல் அவ்விறைமைக் குணங்களையேற்றி அந்தந்தவுயிரையே தந்தம் இறைவனெனப் புகழும். அப்புகழ்களெல்லாம் பொருள் சேராப் புகழ்கள். அங்ஙனம் புகழ்பவர் அறிவிலார். ஒருவனைப் புகழ் விரும்பினால் முதலில் அவனையும் அவனிடமுள்ள குணங்களையும் ஆராய்ந்து கண்டுகொள்ளவேண்டும். பிறகு அக்குணங்களே கொண்டு அவனை புகழ வேண்டும். அவனைத் தெரியாமல் பிறனுக்குரிய குணங்களை அவனிடம் ஆரோபித்துப் புகழ்வது மடமை. இவ்வுண்மை கடைப்பிடிக்கற்பாலது. மெய்யான இறைவனை வணங்குஞ்சமயம் ஒன்றேயுண்டு. மற்றவையெல்லாம் போலியிறைவரை வணங்குஞ் சமயங்களே யென்ற வுண்மையைப் 'பொருள்சேர் புகழ்' என்ற தொடரால் ஆசிரியர் சூசிப்பித்தனர். அழகர் அதைப் பலருமறியப் பகிரங்கப்படுத்தினர். பொய்ச் சமயங்களில்லையானால் அத்தொடர் தோற்றற் கவசியமேயில்லை. அச்சமயங்கள் திருக்குறளிற் பாத்தியதை கொண்டாடலாமா?
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

திருக்குறள் பொது நூலா? - Page 2 Empty Re: திருக்குறள் பொது நூலா?

Post by நந்தி Thu Jul 22, 2010 2:14 am

இறைமைக் குணங்களும் இறைவனும்

'ஆதிபகவன்' (1) 'வாலறிவன்' (2) 'மலர்மிசையேகினான்' (3) 'வேண்டுதல் வேண்டாமையிலான்' (4) 'இறைவன்' (5) 'பொறிவாயிலைந்தவித்தான்' (6) 'தனக்குவமையில்லாதான்' (7) 'அறவாழியந்தணன்' (8)

எனத் திருக்குறளில் எட்டுப் பிரயோகங்கள் வருகின்றன.

அவை இறைமைக் குணங்களை விளங்குவனவாகும். அக்குணங்கள் அந்த வரிசைப்படி தன்வயம், இயற்கையறிவு, முற்றுணர்வு, இயல்பாகவே பாசங்களினீங்குதல், பேராற்றல், தூயவுடம்பு, வரம்பிலின்பம், பேரருள் என்பன. 'எண்குணத்தான்' (9) என்பது அந்த எட்டு வகைப்பட்ட குணங்களையுடையான் என்னும் பொருளுடையதாய் அக்குணங்களின் தொகுப்புணர்த்தியவாறு. இறைமைக் குணங்களெனப் படுவனவெல்லாம் அவ்வெட்டினுள் அடங்கும். ஒன்பதாவதாக எண்ணத் தகுந்த, கருதத் தகுந்த குணம் வேறில்லை. எச்சமயத்திலுஞ் சொல்லப்பட்டிலது. ஆகலின் எண் குணத்தான் என்பதற்குத் கருதத் தகுந்த குணமுடையான் எனப் பொருள் கூறுவது பயனற்றது. அப்பொருள் கூறுவார் தம் கருத்தை அத்தொடருக்குட் புகுத்துகிறாரென்க. மனிதனது கருத்தைக் கடந்தது இறைமைக்குணம். அந்த எட்டுக் குணங்களுஞ் சைவாகமத்திற் கூறப்பட்டன என்பதை நூலோடியைந்து அழகர் தங்கருத்தாகக் கொண்டார். அவை வைணவாகமத்திற் கூறப்படாமை அவருக்குத் தெரியும். ஆகலின் அவ்வாகமந் தள்ளப்பட்டது. அணிமா முதலியன சித்திகளே. குணங்களல்ல. கடையிலா வறிவு முதலியன ஆருகத நூற் கொள்கை. ஆருகதமோ நாத்திகம். ஆகலின் குறிப்பில் அவையெல்லாம் எடுத்துக் காட்டித் தள்ளப்பட்டன.
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

திருக்குறள் பொது நூலா? - Page 2 Empty Re: திருக்குறள் பொது நூலா?

Post by நந்தி Thu Jul 22, 2010 2:15 am

உலகில் உயிர்கள் பிறக்கின்றன. பிறப்புச் சுகமுடையதா? துன்பமுடையதா?

'பிறவிப் பெருங்கடல் ----' (10),
'மாணாப் பிறப்பு' (351),
'பிறப்பென்னும் பேதைமை ----' (358),
'வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை ---' (362)


என்றது நூல். 'காரண காரியத் தொடர்ச்சியாய்க் கரையின்றி வருதலின், பிறவிப் பெருங்கடலென்றார்'.

'நரகர், விலங்கு, மக்கள், தேவர் என்னும் நால்வகைப் பிறப்பினுமுள்ளது துன்பமேயாகலின், மாணாப் பிறப்பென்றார். இதனாற் பிறப்புத் துன்பமென்பதூஉம், அதற்கு முதற்காரணம் அவிச்சையென்பதூஉங் கூறப்பட்டன'.

'ஐவகைக் குற்றங்களுள் அவிச்சை ஏனைய நான்கிற்குங் காரண மாதலுடைமையின், அச்சிறப்புப் பற்றி அதனையே பிறப்பிற்குக் காரணமாக்கிக் கூறினார்' என்பது குறிப்பு.

'வேண்டுங்கால் பிறவாமை வேண்டும் - பிறப்புத் துன்ப மாதலறிந்தவன் ஒன்றை வேண்டிற் பிறவாமையை வேண்டும்' என்பது உரை.

இதனால் எவ்வகைப்பட்ட பிறப்புக்கும் அவிச்சையே காரணம், பிறப்புக்களெல்லாந் துன்பமே தருவன என்பது ஆசிரியர் கொள்கை. வினைகளில் தீவினை மாத்திரந்தான் பிறப்பைத் தருமென்பதில்லை. நல்வினையும் பிறப்புத் தருவதே.
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

திருக்குறள் பொது நூலா? - Page 2 Empty Re: திருக்குறள் பொது நூலா?

Post by நந்தி Thu Jul 22, 2010 2:24 am

'இருள்சே ரிருவினையுஞ் சேரா ----'

என்றது நூல். 'இருள்சேர் இருவினையும் சேரா - மயக்கத்தைப் பற்றி வரும் நல்வினை தீவினையென்னுமிரண்டு வினையும் உளவாகா' என்பது உரை.

'நல்வினையும் பிறத்தற்கேது ---' என்பது குறிப்பு. ஆகவே இறைவனாயுள்ளவனுக்கு அவிச்சையும் இருவினையுங் காரணமாக வரும் பிறப்பு இருக்கமுடியாதென்பது திண்ணம். ஆனால் கடவுள் பிறக்கலாம், அவர் பிறப்பதற்கு அவிச்சையும், இருவினையுங் காரணமாகா, அவர் சுவேச்சையாற் பிறக்கிறார் என்று கூறி மகிழுஞ் சமயங்களுமுள. அவிச்சையும், இருவினையுங் காரணமாகாத பிறப்பும் உண்டெனத் திருவள்ளுவர் யாண்டுஞ் சொன்னதில்லை. தம் கடவுள் பிறப்பதற்கு அவரது சுவேச்சையே காரணம் எனக் கூறுகிற சமயங்கள் பிறப்பின் காரணத்தில் முரண்பாட்டையேற்றி மக்களுக்குப் பிறப்புப் பற்றிய கவலையும், அதிலிருந்து விடுபடுவதற்கான முயற்சியும் உளவாகாதபடி தடுத்துவிடும்.

மேலும் ஆஸ்திகராயிருக்க விரும்புவாருக்கு ஒரு பொறுப்பான வேலையுண்டு. மெய்யான இறைவனாவான் எவன்? போலியிறைவராவார் எவர்? என்பதைக் கண்டு கொள்வதே அவ்வேலை. காண்டலாவது இதுவென்பதும், போலியிறைவராவார் இவரென்பதும் முன் சொல்லப்பட்டன. அவ்விருவகையாரையும் பிரித்தறிவதற்கு வாயில் ஒன்றேயுண்டு. மெய்யான இறைவன் பிறக்கமாட்டான். போலியிறைவரெல்லாம் பிறப்பர். பிறப்பின்மையும், பிறப்புண்மையுமே அவ்வாயில், சித்தியார் சூத்திரம் 2 செய்யுள் 25ல்
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

திருக்குறள் பொது நூலா? - Page 2 Empty Re: திருக்குறள் பொது நூலா?

Post by மகி Wed Jul 28, 2010 5:19 am

பகிர்வுக்கு மிக்க நன்றி.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

திருக்குறள் பொது நூலா? - Page 2 Empty Re: திருக்குறள் பொது நூலா?

Post by நந்தி Mon Nov 15, 2010 1:48 am

'நால்வகை யோனியுள் ஒரு யோனிவாய்ப்பட்டுப் பிறப்பனயாவை அவையெல்லாஞ் சீவவர்க்கம். அவ்வாறு பிறத்தலில்லது யாது அது பதிப்பொரு ளென்னு மிது வொன்றே ஏனைச் செயல்களான் வேற்றுமையறிய வாராத வவ்விரண்டற்குந் தம்முள் வேற்றுமையறிய நிற்பதாகலின், ஏனைத் தேவரெல்லாம் அங்ஙனம் பிறந்திறத்தல் கேட்கப்படுதலானும்,'... என்றருளிய சிவஞான முனிவரின் உரையைக் காண்க. 'வேதனைப்படு மிறக்கும் பிறக்கு மேல் வினையுஞ் செய்யும்' என்ற குறைபாடுடைய உயிர்களுள் ஒன்றை இறைவனெனக் கொண்ட மதம் அக்குறைகள் தன் கடவுளுக்கில்லாதது போற் காட்டிப் பிரசார வேலைகள் பல செய்யும். அவையெல்லாம் வெற்றிரைச்சல். மாதாவுதரத்துட் கருவாய்த் தங்கி யோனிசனாக வெளிப்படுதல் என்னும் பிறப்பு உயிர்களுக்கேயுண்டு. இறைவனுக்கும் அ�திருந்தால் அவன் உயிர்களின் பிறவித் துன்பத்தை யொழிப்பதெப்படி? ஓட்டை மரக்கலம் பிறிதோரோட்டை மரக்கலத்தைக் கரையேற்றுமா?

இனிப், பிறவாமையைக் குணமாகவுடைய அம்மெய்யான இறைவன் யார்? திருவள்ளுவர் வேத சிவாகமங்களை இறைவன் வாக்கெனக் கொண்டு விசுவசித்தவர். அவர் கூறும் விடையைக் காணாலாம். வேதம்,

'அஜாதோஜாத இத்யேவம் கச்சித் பீரு: ப்ரபத்யதே! ருத்யத்தே
தக்ஷ�ணம் முகம் தேந மாம் பாஹிநித்யாச: !!' (சுவேதா)

நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

திருக்குறள் பொது நூலா? - Page 2 Empty Re: திருக்குறள் பொது நூலா?

Post by நந்தி Mon Nov 15, 2010 1:51 am

என்றது அதற்குத் தமிழ்

'பெரும்பிணி யிதனைத் தீர்க்கு மருத்துவன் பிறவியில்லாப்
பரம்பொரு ளான முக்கட்பரமனே யென்று தேறி
முரண்பயில் விடையோன் றென்பான் முகத்தினைச் சரண்மெய்தி
விரும்பிவீ டுறுதற் பாலார் பிறப்பினை வெருவப் பெற்றார்'


என்ற காஞ்சிப்புராணம். அதனால் பிறப்பில்லாத இறைவர் சிவபிரானெ யென்பதும், அவரே உயிர்களைப் பிறவிப் பெருங்கடலிலிருந்து கரையேற்றுபவரென்பதும் பெறப்பட்டன. வேதம்

'தமீச்வராணாம் பரமம் மஹேச்வரம் தம் தைவதாநாம்
பரமஞ்ச தைவதம்! பதிம் பதீநாம் பரமம் பரஸ்தாத் விதாம
தேவம் புவநேச மீட்யம்!! நதஸ்ய காரியம் கரணஞ்ச
வித்யதே நதித் ஸமாச்சாப் யதிகச்சத்ருச்யதே' (சுவேதா)

'பராத் பரதரம் ப்ரஹ்ம யத் பராத் பரதோ ஹரி: ! தத்
பராத் பரதோ ஹீசஸ் தஸ்மாத் துல்யோ திகோநஹி! '
(சரபம்)

என்றது. அதற்குத் தமிழ்

'மற்றாருந் தன்னொபா ரில்லான்' (தேவாரம்)
'..........கச்சிமயானத்தான்...................ஒப்புடையனல்லன்...........
ஒருவம னில்லி' (தேவாரம்)

என்பது.
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

திருக்குறள் பொது நூலா? - Page 2 Empty Re: திருக்குறள் பொது நூலா?

Post by நந்தி Mon Nov 15, 2010 1:52 am

திருவள்ளுவர்,

'தனக்குவமை யில்லான்'

எனப் புகழ்ந்த இறைவன் சிவபிரானேயென்பது அதனாற் புலப்படும்

வேதம்,

'யதாசர்ம வதாகாசம் வேஷ்ட யிஷ்யந்தி மாநவா: !
ததாசிவ மவிஜ்ஞாய துக்கச்யாந்தோ பவிஷ்யதி' (சுவேதா)


என்றது. அதற்குத் தமிழ்,

'பரசிவ னுணர்ச்சி யின்றிப் பல்லுயிர்த்தொகையுமென்றும்
விரவிய துயர்க்கீறெய்தி வீடுவேறடைது மென்ற
லுருவமில் விசும்பிற்றோலை யுரித்துடுப்பதற்கொப் பென்றே
பெருமறை யியம்பிற் றென்னிற் பின்னுமோர் சான்றுமுண்டோ?'


என்ற கந்தபுராணம். உயிர்களுக்கு மனக்கவலையை மாற்றுபவர் அச்சிவபிரானேயென்பதை அதனாலறிக.
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

திருக்குறள் பொது நூலா? - Page 2 Empty Re: திருக்குறள் பொது நூலா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum