Latest topics
» வணக்கம் என் பெயர் நாகராசன்.இராby rajan_1972 Fri Apr 10, 2020 7:20 pm
» சிறந்த பொழுதுபோக்கு இணையதளம்!
by pba Sat Jul 02, 2016 8:11 pm
» ஏற்றுமதி உரிமம் பெறும் விண்ணப்பம்
by tamilnews Tue Mar 24, 2015 8:00 pm
» மொபைல், டிடிஎச் ரீசார்ஜ் செய்யப் போறீங்களா? இந்த சலுகைகளைப் பாருங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:41 am
» மொபைல் ரீசார்ஜ் செய்து ஷாப்பிங் கூப்பன் இலவசமாக பெறுங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:38 am
» மெமரி கார்டு வாங்கப் போறீங்களா? 74% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:36 am
» அமேசானில் பெண்களுக்கான ஆடைகள் 70% வரை தள்ளுபடி !
by dsytamil Wed Jan 14, 2015 1:34 am
» அமேசானில் ஆண்களுக்கான ஆடைகள் 60% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:31 am
» லெனோவா டேப்ளட் 43% சலுகை விலையில் ரூ. 5949 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:28 am
» ப்ளிப்கார்ட் தளத்தில் சிறுவர்களுக்கான ஆடைகள் 70% வரை + 30% கூடுதல் தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:14 am
» அமேசான் தளத்தில் 50% தள்ளுபடி விலையில் மொபைல்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:13 am
» ரூ. 7499 மதிப்புள்ள மைக்ரோமேக்ஸ் ஏ1 ஆன்ட்ராய்டு மொபைல் இப்போது ரூ. 5499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:11 am
» ரூ. 19999 மதிப்புள்ள நோக்கியா லூமியா 625 மொபைல் ரூ. 7499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:10 am
» ப்ராண்டட் காலணிகளுக்கு 70% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:08 am
» ஆன்லைன் ஷாப்பிங்கில் ப்ரிண்டர்களுக்கு 33% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:06 am
» ஆன்லைனில் பொருள் வாங்கப் போறீங்களா? 70% வரை பணத்தை சேமியுங்கள்!
by dsytamil Tue Jan 13, 2015 12:30 am
» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...!
by sathikdm Sun Oct 19, 2014 4:45 pm
» சிறுதொழில் செய்பவர்கள் இணையதளம் தொடங்க வேண்டியதின் அவசியம்!
by pba Sat Sep 27, 2014 12:58 am
» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:47 pm
» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:42 pm
» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
by santhoshpart Wed Aug 27, 2014 4:22 pm
» “சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா!”
by santhoshpart Wed Aug 13, 2014 3:54 pm
» Daily Rs.500/- and Above
by K.MARIAPPAN Wed Jul 30, 2014 12:01 pm
» http://www.neobux.com/?r=narasimmant
by Navaneethakrishnan Wed Jul 02, 2014 3:41 pm
» வணக்கம் என் பெயர் வேணு
by A.Venu Fri Jun 27, 2014 10:10 am
» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?
by sathikdm Wed Jun 18, 2014 3:24 pm
» தமிழ் மொழி மூல கல்வி இணையதளம்
by afdhaal Wed May 28, 2014 9:22 pm
» வருக. வருக. வணக்கம்.
by மகி Mon May 12, 2014 3:55 pm
» அறிமுகம் -விநாயகா செந்தில்.
by மகி Mon May 12, 2014 3:53 pm
» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....!
by vinayagasenthil Sat May 10, 2014 9:04 pm
திருக்குறள் பொது நூலா?
3 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
திருக்குறள் பொது நூலா?
உ
திருச்சிற்றம்பலம்
ஸ்ரீ மெய்கண்ட தேசிகன் திருவடி வாழ்க
திருக்குறள் பொது நூலா?
சித்தாந்த பண்டித பூஷணம் ஆ.ஈசுரமூர்த்திப் பிள்ளை
திருநெல்வேலி பேட்டை
[You must be registered and logged in to see this image.]
திருச்சிற்றம்பலம்
ஸ்ரீ மெய்கண்ட தேசிகன் திருவடி வாழ்க
திருக்குறள் பொது நூலா?
சித்தாந்த பண்டித பூஷணம் ஆ.ஈசுரமூர்த்திப் பிள்ளை
திருநெல்வேலி பேட்டை
[You must be registered and logged in to see this image.]
--------------------------------------------------------------------------------
தோற்றுவாய்
விஞ்ஞானிகள் அதிகரிக்கின்றனர். விஞ்ஞானம் வளர்கிறது. அதனால் அற்புதங்கள் பல ஆக்கம் பெறுகின்றன. ஆயினும் அவற்றுள் தீங்கு பயப்பன பல. அவையும் நலத்துக்குப் பயன்படுத்தப்படுமா? அத்தீங்கு அகற்றப்படுமா? அவ்வாசையோடு செய்யப்படும் முயற்சிகளுமுள. நலம் பயக்கும் அற்புதங்களும் பலவே. ஆனால் எதிர்பாராத விதத்தில் ஆபத்துக்கள் அவற்றாலும் விளைவதுண்டு. எப்படியும் அவ்வற்புதங்கள் அற்புதங்களே. அவற்றால் உலகம் செழிக்கிறது. நாகரிகம் மேற்போகிறது. மக்கள் சுகிக்கின்றனர். அதனை நாமுஞ் சம்மதிக்கலாம்.
விஞ்ஞானிகளுக்குப் புகழுண்டு. காணாதவற்றையெல்லாம் அவரறிவு கண்டு வருகிறது. ஆயினும் அவர் நூற்றுக்கணக்கானவரே. ஆனால் அவர் கண்ட அற்புதங்களை அனுபவிப்பவரோ கோடானு கோடியர். எனினும், ஆக்கும் அறிவு போல்வதாமா அனுபவிக்கும் அறிவு? மோட்டார் வண்டியைக் கண்டுபிடித்தவனது அறிவு சிறந்தது. அதில் ஏறிச் செல்பவனுக்கு அவ்வண்டி பற்றிய அறிவு எவ்வளவிருக்கும்? அப்படியிருந்தும் அதில் ஏறிச் செல்கிறவரும் தம்மறிவை மெச்சிக் கொள்கின்றனர். இன்றையவுலகில் அவர் பிறந்தார், இருக்கிறார். அதனால் அவரும் தம்மைப் புத்திசாலிகளென எண்ணிக் கொள்கின்றனர். முன்னோரை இகழ்ந்து பேசுமளவுக்கு அவரிடம் அச்செருக்கு மிகலாயிற்று
நந்தி- பண்பாளர்
- பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்
Re: திருக்குறள் பொது நூலா?
மனிதனுக்கு ஆசையுண்டு. அதற்கு அளவோ? அதையளக்க முயன்றர் பூர்விகர். உலகெல்லாம் ஒரு குடைகீழ் வைத்து ஆள்கிறான் ஓர் அரசன். ஆயினும் அவனாசை அடங்கவில்லை. கடல்மீதிலும் தன் ஆணையைச் செலுத்தலாமா எனவும் அவன் நினைக்கிறான். ஆசைக்கோரளவில்லை. அதைக் காட்ட அக்கடலோடு நின்றனரவர். ஆனால் இன்றைய நிலையென்ன? ர்ஷிய ராக்கெட் வானிற் பறந்தது. எத்தனையோ இலக்கம் மைல்கள் மேற்சென்றது. சந்திரனைத் தாண்டியது. சூரியனையும் எட்டிவிட்டதாம். வானத்திற் கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. சில வருஷங்களே கழிக. அதற்குள் இவ்வுலக மக்கள் அக்கிரகங்களிற் போய் உலவுவர். அங்கும் மக்கள் உளரானால் அவரோடுந் தொடர்பு கொள்வர். போக்குவரத்துக்கான சாதனங்கள் விருத்தியாகும். போக்குவரத்தும் தொடர்ந்து நிகழலாம். அங்கு மக்கள் இல்லையானால் அக்கிரகங்கள் ஆக்கிரமிக்கப்படும். இவ்வுலக மக்களுக்கு அந்நம்பிக்கையுண்டு. இவருக்கு ஆசை மென்மேலும் வளர்கிறது. ஆனால் ஒன்று. அந்தக் கிரகங்களிலிருந்து எவரும் இவ்வுலகத்துக்கு இதுவரை வந்ததில்லை. அங்கு மக்களில்லையா? அவருக்கு ஆசையில்லையா? விஞ்ஞானம் வளரவில்லையா? என்னவோ? இங்குள்ளவரின் அறிவும் ஆசையும் முயற்சியும் நிதர்சனம். அவர் அங்குச் செல்ல முந்திக் கொண்டனர். இவராலாவது எல்லாக் கிரகங்களிலுமுள்ள மக்கள் விரைந்து சந்திக்க. அளவளாவுக, கொண்டுங் கொடுத்துங்குலாவுக. கடவுளென ஒருவரிருந்தால் அவரும் அதற்குத் துணை புரிக.
மற்றைக் கிரகங்களில் விஞ்ஞான வளர்ச்சி இருந்தாலுஞ் சரி இல்லாவிட்டாலுஞ் சரி. இங்குள்ள விஞ்ஞானிகள் அங்கு செல்ல நேர்ந்தால் இவரால் அங்கும் விஞ்ஞானம் வளரக்கூடும். அது அங்குள்ளோர்க்குப் பெரும் பாக்கியம். அதனால் எல்லாக் கிரகங்களுக்கும் பொது நலப் பேருபகாரிகள் விஞ்ஞானிகளேயென்பது தெரிகிறது. அவரால் கிரகங்களின் வக்கிரச் செயல் கூட மறையக்கூடும்.
மற்றைக் கிரகங்களில் விஞ்ஞான வளர்ச்சி இருந்தாலுஞ் சரி இல்லாவிட்டாலுஞ் சரி. இங்குள்ள விஞ்ஞானிகள் அங்கு செல்ல நேர்ந்தால் இவரால் அங்கும் விஞ்ஞானம் வளரக்கூடும். அது அங்குள்ளோர்க்குப் பெரும் பாக்கியம். அதனால் எல்லாக் கிரகங்களுக்கும் பொது நலப் பேருபகாரிகள் விஞ்ஞானிகளேயென்பது தெரிகிறது. அவரால் கிரகங்களின் வக்கிரச் செயல் கூட மறையக்கூடும்.
நந்தி- பண்பாளர்
- பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்
Re: திருக்குறள் பொது நூலா?
ஆனால் பாரதி
'வள்ளுவன் றன்னை யுலகினுக்கே தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு'
என்றார். திருவள்ளுவரை அவ்வளவு புகழவேண்டுமா? அவரறிவு அதற்குத் தகுதியுடையதா? புகைவண்டி, வானொலி கருவி, வானவூர்தி முதலிவற்றுள் ஒன்றிரண்டையாவது அன்றே அவர் கண்டு பிடித்திருக்கலாம். அது செய்தாரா? எல்லாக் கிரகங்களையும் நேசப்படுத்த அவரால் முடிந்ததா? அவராற் கிடைத்தது ஒரு நூல். அன்று முதல் இன்று வரை அந்நூலாற் பயனெய்தியவர் எத்தனைபேர்? ஒருவரிருவர் பெயர்தானும் யார்கேனுந் தெரியுமா? அந்நூற்குப் பயன்றான் என்னை? அந்நூல் இவ்வுலகத்துள்ள மக்களைத்தானும் ஒன்றுபடுத்தியதா? அவ்வினாக்களுக்கு விடை இன்றுங் கிடைத்தபாடில்லை. எனவே பாரதி பாடிய அப்புகழ் பொருளுடையதாமா? சிந்திக்கவல்லார் சிந்திக்க.
இப்படி நான் கூறுகிறேன். அது திருவள்ளுவரை இகழ்வதாகும் என்பார் சிலர். அதற்காக அவர் என்மேற் சீறவுஞ் செய்யலாம். எல்லாம் அறிந்தவருமில்லை. ஏதும் அறியாதவருமில்லை. எல்லார்க்கும் ஒவ்வொன்றெளிது என்பது ஒரு நியாயம். விஞ்ஞானிகளும் அறிஞர். திருவள்ளுவரும் அறிஞர். முன்னவரறிவு ஒருவகை. பின்னவரறிவு இன்னொரு வகை. அவரறிவு இவருக்கில்லை. இவரறிவு அவருக்கில்லை. இங்ஙனம் திருவள்ளுவருக்கும் ஒரு வகை வகுத்து அவரறிவை அவ்வளவில் தடுத்து வைப்பார் சிலர். அதனால் திருவள்ளுவரும் அறியாதன பல, அது பற்றி அவருக்கும் அறியாமையுண்டு என்பது அவருக்குங் கருத்தாகும். அவர் தான் என்மேற் சீறுபவர். அச்சீற்றத்தில் அர்த்தமில்லை.

உண்மையில், உலகிற்கே திருவள்ளுவர் ஓர் ஒப்பற்ற மேதைதான். அவரை நன்கு அறிந்தவரே அவரறிவுடைமையைப் புகழ்தற்குரியார். அவரை நன்கு அறிதலாவது யாது? சூரிய மண்டலத்தை எட்டிவிட்டதாகச் சொல்லப்படும் ராக்கெட்டை ஆக்கியவரது அறிவு சாமானியமானதன்று. திருவள்ளுவரறிவும் அன்னதே. ஆனால் யாருடைய அறிவையும் மதிப்பது இரண்டு வழியாலாம். ஒன்று அவரிடமிருக்கும் அறிவின் விளக்கம் பற்றியது. இன்னொன்று அவரை விட்டு நீங்கியிருக்கும் அறியாமை பற்றியது. அறிவு விளங்கப் பெற்றவன் அறிஞனா? அறியாமை நீங்கப் பெற்றவன் அறிஞனா? இப்படி வினவிச் சிந்திக்க வேண்டும். அறிவு விளங்கப் பெற்றவரெல்லாம் அறியாமையில்லாதவரென்று சொல்ல முடியாது. அறியாமை நீங்கப் பெற்றவரை அறிஞரெனத் துணிந்து சொல்லலாம். அவரே தெள்ளறிஞர். ராக்கெட்டையனுப்பிய விஞ்ஞானிக்கும் அறியாமையுண்டு. பிற விஞ்ஞானிகளுக்கும் அ·துண்டு. அது கலவாத அறிவு பிராகிருதராயுள்ள எவரிடமுமில்லை. ஆனால் திருவள்ளுவரிடம் அவ்வறியாமை இம்மியுங் கிடையாது. அ·தறவே நீங்கப் பெற்றவர் அவர். அவர் போன்றோர் ஒரு சிலரேயுளர். அவரெல்லாம் பிராகிருதத் தொடர்பைக் கடந்தவர். திருவள்ளுவரை அறிவுடையாரென்பதை விட அறியாமை அறவே நீங்கப் பெற்றாரெனக் கொண்டு போற்றுபவன் நான்.
நந்தி- பண்பாளர்
- பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்
Re: திருக்குறள் பொது நூலா?
பகிர்வுக்கு மிக்க நன்றி.
மகி- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009
Re: திருக்குறள் பொது நூலா?
நன்றி நண்பரே!
நந்தி- பண்பாளர்
- பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்
Re: திருக்குறள் பொது நூலா?
மக்களிடம் அறியாமையும் உண்டு. அ·து எதனால் வந்தது? எப்போது வந்தது? யாராலாவது தரப்பட்டதா? அவரேதேடிக் கொண்டனரா? அதற்கு மூலம் யாது? அ·து அறவே தீரக் கூடியதா? அல்லது குட்டம், குன்மம் முதலிய நோய்கள் போல் அவ்வப்போது செய்யப்படும் சாந்தியளவில் அடங்கிப் பிறகு துன்புறுத்திக் கொண்டிருப்பதா? அறவே தீர்தற்கு வாயிலென்ன? அவற்றையெல்லாம் விசாரித்து ஆவன செய்ய வேண்டும். அவ்வகையில் பிராகிருத நூல்கள் சிறிதும் பயன்படா. சமய நூல்களே உதவக் கூடியன. சமயங்கள் பல. ஒவ்வொரு சமயத்தைச் சார்ந்த நூல்களும் அநேகம். ஆயினுமென்? அறியாமையைப் பற்றிய விளக்கமான செய்தி எந்தச் சமயத்திலுண்டு. அந்தச் சமய நூல்களின் சகாயம் வேண்டும். அந்த நூல்களே கற்பவை. திருவள்ளுவர் அவற்றைக் கசடறக் கற்றிருப்பர், கற்றபின் அதற்குத் தக நின்றிருப்பர். அதனால் அவரறியாமை அறவே நீங்கியிருக்கும். அவர் தெள்ளறிஞரானார். அச்சமயம் எது? பார்க்கலாம்.
நந்தி- பண்பாளர்
- பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்
Re: திருக்குறள் பொது நூலா?
உரைகள்
திருவள்ளுவர் தந்த நூல் திருக்குறள். அதற்கு உரைகள் பல. அவை பத்து என்றொரு கணக்குண்டு. பத்தாவதாகவுள்ளது பரிமேலமுகரியற்றியது. இந்நூலில் அவர் பெயர் வருமிடங்களில் அழகரென்று சொல்லப்படுவார். அவர் போய்ச் சில நூறு வருடங்களாயின. அக்காலை இத்தமிழகம் எத்தனையோ தமிழ்ப் புலவர்களைப் பெற்றது. இலக்கணிகள், தார்க்கீசர், கவிகள், உரையாசிரியர், நீதிநூல் வல்லார், அரசியல் வல்லார், இன்பநூல் வல்லார், வீட்டு நூலார் எனப் பல துறைகளில் வல்லவர் வந்து போயினர். புலமைப் பஞ்சம் இங்கில்லை. அவரால் ஆக்கப்பட்டு இப்போது கிடைத்தது வரும் நூல்களே அதற்குச் சான்று. ஆனால் அவருள் திருக்குறளுக்குப் பதினோராவது உரையாசிரியராக எவரும் வந்திலர். காரணமென்ன? கெளரவ புத்தி கொண்டு சிந்திக்க. விடை கிடைக்கவே செய்யும். அவ்விடைக்காலத் தமிழ்ப் பெரும் புலவரனைவராலும் அவ்வழகருரை அங்கீகரிக்கப்பட்டது என்பதே விடை. அவ்வுரை இலக்கண தருக்க வரம்புடையது. நடுநிலையிலிருந்து நூலாசிரியர் கருத்தை வாங்கி விளக்குவது. பல ஞான நூல்களிற் பயின்று எழுதப்பட்டது. மக்களையுயர்த்த வேண்டுமென்ற கருணையாலியன்றது. ஆனால் சென்ற சில ஆண்டுகளாகப் பல புத்துரைகள் வெளிவரலாயின. அவற்றுள் நான் சிலவுரைகளைப் படித்தேன். அவை திருக்குறள் கூறும் உண்மைகளைப் புலப்படுத்தவில்லை. தான்றோன்றித்தனமாக எழுதப்பட்டன. உரைக்காரனின் அபத்தக் கொள்கைகள் புகுத்தப்பட்டன, காசு கொடுப்பவரைக் களிப்பிக்கப் போந்தன. நூலைக் கருதாமல் காலத்தைக் கருதின. மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்கினாலும் இறங்கலாம். அப்போலியுரைகளைக் கொண்டு சபையேற முடியாது. ஏறினால் அச்சபை பரிகசிக்கும். அவ்வுரைகளுங் கணக்கிற் சேர்ந்தன. இப்போது அவ்வுரைகளின் தொகை பத்தைத் தாண்டி விட்டது. நான் அவற்றையெல்லாம் விட்டுவிடுகிறேன். பிராமண ஸ்தானத்தை வகித்து வருகிற அழகருரையைத் தழுவித் திருக்குறளுக்குப் பொருள் காணு முகத்தால், திருவள்ளுவர் ஆசரித்த சமயம் எதுவாயிருக்குமென ஆராய்வதே இந்நூலின் நோக்கம்.
நந்தி- பண்பாளர்
- பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்
Re: திருக்குறள் பொது நூலா?
பகிர்வுக்கு மிக்க நன்றி.
மகி- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009
Re: திருக்குறள் பொது நூலா?
[You must be registered and logged in to see this image.]
aarul- தள ஆலோசகர்
- பதிவுகள் : 421
புள்ளிகள் : 793
Reputation : 12
சேர்ந்தது : 20/12/2009
வசிப்பிடம் : mani electronics,erode, tamilnadu,india
Re: திருக்குறள் பொது நூலா?
நன்றி நண்பர்களே!
நந்தி- பண்பாளர்
- பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்
Re: திருக்குறள் பொது நூலா?
நூற்பெயர்
திருக்குறளுக்கு ஒன்பது பெயர்கள் காணப்படுகின்றன. ஆசிரியர் வைத்தனவா அத்தனையும்? ஒன்றிரண்டு அவரிட்டனவாயிருக்கலாம். அவ்வப்போது தோன்றிய புலவர் பெருமக்கள் பலர். அவர் அந்நூலை ஊன்றிப் படித்திருப்பர். அதன் நயம் அவருள்ளத்தைக் கொள்ளை கொண்டிருக்கும். அதனால் மதிப்புரை பல வழங்கியிருப்பாரவர். அம்மதிப்புரைகளே அப்பெயர்கள். அவ்வொன்பதுக்கு மேலும் அன்ன பெயர்கள் இருந்திருக்கலாம். அவை நூலருமையைச் சரியாக விளக்கியிரா. அதனால் கால வெள்ளத்தில் மறைந்து போயிருக்கும். இன்றுவரை நிலைத்திருப்பன அவ் வொன்பது. அவை தள்ளப்படுவன அல்ல. போற்றபடுவனயென்பது அதனாற் புலனாம். அவற்றுட் சிலவற்றை இயைபுபற்றி இங்கு ஆராய வேண்டும்.
நந்தி- பண்பாளர்
- பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்
Re: திருக்குறள் பொது நூலா?
பொதுமறை
'பொதுமறை' யென்பது ஒரு பெயர். பொதுவுடைமையென்ற சொல்லையெடுத்துக்கொள்க. ரஷியப் பொதுவுடைமை, சீனப் பொதுவுடைமையெனப் பலவுள. ரஷியர் சீனப் பொதுவுடைமையில் உரிமை கொள்ளமுடியாது. சீனர் ரஷியப் பொதுவுடைமையில் அப்படியே. அவ்வத்தேச வரம்பு அப்போது வென்னுஞ் சொல்லைக் கட்டுப்படுத்தி அவ்வுடைமையை அவ்வத்தேசத்தார்க்கே உரிமையாக்குகிறது. பொதுவென்னுஞ் சொல்லைப் பற்றிக் கொண்டு எவனும் எல்லாத் தேசங்களின் பொதுவுடைமைகளிலுங் கைவைக்கமாட்டான். வைத்தால் கை தறிபட்டுப்போம். அதுபோல் திருக்குறள் பொது மறையாயினும் அப்பொதுவுக்கும் வரம்புண்டு. அவ்வரம்பைக் கண்டு அதற்கு வெளியில் நிற்பவர் அந்நூலைத் தம்மதெனக் கொள்ளாதிருப்பதே நல்லது.
ஒரு தேசத்திற் பிறந்தவர் அத்தேசத்துக்கு மாத்திரம் பொதுமக்கள். யாமெல்லாம் பொதுவெனச் சொல்லிக்கொண்டு ஒரு தேசத்து மக்கள் மற்றத் தேசங்களுக்கும் பொதுவெனச் சொல்லிக் கொள்ளமாட்டார். அது போலப் பொதுமறையென்பதிலுள்ள பொதுவெனுஞ் சொல் தனக்கெனவொரு பொருளையுடையது. அதைவிட்டு அச்சொல்லே கொண்டு அம்மறை தனக்குப் புறம்பான மறைகளுக்குந் தன்னையுரியதெனச் சொல்லிக் கொள்ளமாட்டாது.
நந்தி- பண்பாளர்
- பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்
Re: திருக்குறள் பொது நூலா?
பகிர்வுக்கு மிக்க நன்றி.
மகி- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009
Re: திருக்குறள் பொது நூலா?
நன்றி நண்பரே!
நந்தி- பண்பாளர்
- பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்
Re: திருக்குறள் பொது நூலா?
பொதுமக்கள் என்பதொரு பிரயோகம். அப்பொதுவை எவரும் தம்பாற் சார்த்திக்கொள்ள விரும்பார். பொதுமறையென்பதிலுள்ள பொதுவும் அங்ஙனமே.
சித்தாந்த சாத்திரங்களிற் சொரூப லட்சணம், தடத்த லட்சாம் என்ற பிரயோகங்களுள. அவை முறையே சிறப்பியல்பு, பொதுவியல்பு எனத் தமிழிற் பெயர்க்கப்படும். த்ருக்கத்தில் சாமானியம் விசேடம் என இரண்டிலக்கணங்களுள. அவற்றுக்கும் முறையே பொது, சிறப்பு என்பன தமிழ். அப்பொதுக்களின் பொருளும், பொது மறையென்பதிலுள்ள பொதுவின் பொருளும் ஒன்றாகுமா?
சிதம்பர ஆலயம் பொதுவெனப்படும். அப்பொதுப் போன்றதா பொதுமறை யென்பதிலுள்ள பொது?
'வேதமொ டாகம மெய்யா மிறைவனூ
லோதும் பொதுவுஞ் சிறப்புமென் றுன்னுக'
என்றது திருமந்திரம். சிவாகமமென்னுஞ் சிறப்புநூலொன்றுண்டு. அது பற்றி அவ்வேதம் பொதுநூலெனப்பட்டது. அப்பொதுவும், பொதுமறைப்பொதுவும் சமந்தானா?
தெய்வநூல் எதுவும் வயிநயிகருக்குத்தான் வேண்டப்படும் திருக்குறளுந் 'தெய்வநூல்'. அது பிராகிருதருள்பட அனைவருக்கும் பொதுவாதல் யங்ஙனம்?
சூரியன் சந்திரன் முதலியவை எல்லார்க்கும் நலஞ் செய்வன வாய்ப் பொதுவாகும் என்பர் சிலர்.
'அல்லவை புரியா ரேனு மறிவினற் பெரிய ரேனு
மெல்லவர் தமக்கு நண்பா யினியவே புதிதற் பாற்றோ
பல்லுயிர்த் தொகைக்கு மின்பம் பயந்திடு மதிகண் டன்றோ
புல்லிய கமல மெல்லாம் பொலிவழிந் திட்ட வன்றே'
என்ற கந்தபுராணச் செய்யுளால் அவையும் வெறுப்புக் கிலக்காதல் அறியப்படும். அவற்றின் பொதுமைப்போல் பொதுமறைப் பொதுமையும் இருக்குமா? அறிஞர் சிந்தனையில் இன்னும் பல பொதுமைகள் தோன்றலாம். அவற்றையுஞ் சேர்த்துக் கொள்க. பொதுமறையென்பதிலுள்ள பொதுமையென்னுஞ் சொல் தெளிவான விளக்கத்தை வேண்டி நிற்றல் காண்க.

ஆனால் ஒன்று சொல்லப்படும் எல்லா மதங்களுஞ் சம்மதிக்கக் கூடிய அறங்களின் தொகுப்பே திருக்குறள், அதுபற்றி அந்நூலைப் பொதுமறையென்னலாம் என்பது அது. அதுவுஞ் சரியன்று. ஏன்? அப்பொதுவறங்கள் அவ்வச் சமயத்திலேயே கூறப்பட்டுள்ளன. எச் சமயத்தாரும் தம் சமய நூல்களிலேயே அவற்றைக் கற்றுக் கொள்வர். அவர்க்குத் திருக்குறள் அநாவசியம். மேலும் அதிற் காணப்படும் பொதுவறங்களத்தனையும் சர்வ மத சம்மதமுமல்ல. பொதுவறங்கள் Natural Religion என்றும், சிறப்பறங்கள் Revealed Religion என்றும் ஆங்கிலத்திற் சொல்லப்படும். சமயந்தோறும் சிறப்பறங்களுமுள. ஒவ்வொரு சமயமும் மோக்ஷமென ஒரு லக்ஷ¢யத்தை வைத்துக் கொண்டிருக்கிறது. பொதுவறங்களைத் தழுவினாலே போதும், மோக்ஷம் சித்திக்கும் என எச்சமயமுஞ் சொல்லாது. பொதுவறங்களோடு சிறப்பறங்களையும் அனுட்டிக்கவேண்டும். அவ்வனுட்டான பரருக்குத்தான் அச்சமயத்தின் மோக்ஷமுண்டு. அங்ஙனமே ஒவ்வொரு சமயமும் தன் சமயத்தவர்க்கு உபதேசிக்கிறது. திருக்குறள் அச்சிறப்புத் தருமங்களையுஞ் சொல்லாமல் விட்டிருக்குமானால் அந்நூலால் மக்களுக்கு முடிவான லக்ஷ¢யங் கிடைக்கப் போவதில்லையென்பது உறுதி. ஏதாவது ஒரு சமயமும், அதற்கேயுரிய சிறப்பறங்களும் மக்களுக்கு உறுதி பயப்பன என்பது அவருள்ளத்திற்பட்டிருந்தால், அவற்றையும் ஆசிரியர் அந்நூலிற் சொல்லத்தான் வேண்டும், சொல்லியேயிருப்பர். இன்றேல் அந்நூல் முற்றுப் பெற்றதாகாது. அவரும் மக்களுக்காக அதனைச் செய்தவராகார். ஆனால் இவ்வுலக வாழ்க்கையை விரும்புவார் மிகப்பலர். அவர்பாற் பரிபாகம் குறைவு. அவரையும் வழிப்படுத்த வேண்டும். அதற்கான ஒழுகலாறுகளுமுள. அவற்றை ஆசிரியர் அந்நூலில் அதிகமாகச் சொல்லிவைத்தார். மறுவுலக வாழ்க்கையை விரும்புவார் வெகு சிலரே. உள்ளம் பக்குவப்பட்டவர் அவர். அவருக்கு வேண்டும் ஒழுகலாறுகள் வேறு. அவற்றைச் சுருக்கமாகச் சூசகமாகச் சொன்னாற் போதும். அப்படித் தான் அவை சொல்லப்பட்டிருக்கின்றன. சத்திநிபாதர்க்கு வேண்டும் சிவாகமவுண்மைகளைச் சுருக்கமாகவும் சூசகமாகவும், உலகர்க்கு வேண்டுவனவற்றை விரிவாகவும் வெளிப்படையாகவுந் தன்பாற் கொண்ட வேதம் அவ்வியல்புபற்றிப் பொதுநூலெனப்படும். அம் முறையிற் செல்வது திருக்குறள். அது பொதுநூல் எனப்படாது பொதுமறை எனப்படாது பொதுமறை யெனப்பட்டது அவ்வுண்மையைக் காட்டவேயாம். அங்ஙனம் பொதுநூல் என்பதிலுள்ள பொதுவிற்குரிய பொருளைப் பொதுமறையென்பதிலிருந்து பொதுவுக்குப் பொருத்துவதுதான் பொருத்தமென எனக்குத் தோன்றுகிறது.
நந்தி- பண்பாளர்
- பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்
Re: திருக்குறள் பொது நூலா?
திருவள்ளுவர்
திருக்குறளுக்குத் திருவள்ளுவரென்பது இன்னொரு பெயர். தொல்காப்பியர் செய்த இலக்கணம் தொல்காப்பியம். சேனாவரையர் செய்தவுரை சேனாவரையம். பாணினீ செய்த வியாகரணம் பாணினீயம். அவற்றிற்கு அவ்வாசிரியன்மாரின் பெயர் அப்படியே வரவில்லை. ஈறு திரிந்தே வந்திருக்கிறது. ஆனால் திருக்குறளுக்குத் திருவள்ளுவம் என்ற பெயரில்லை. ஆசிரியர் பெயர் திரியாமல் நூலுக்கு வந்துள்ளது. திருவள்ளுவம் வள்ளுவம் என்பன நேற்றுத் தோன்றின. திருவள்ளுவர் என்ற பெயரின் பொருட் சிறப்பையறியாதார் இட்டன அவை. கடல் மீனுக்கு நுளையனிட்டது பெயர் என்பது பழமொழி. பெருநூல்களின் பெயர்களெல்லாம் அப்படித்தான் வந்தனவென அவர் எண்ணிக் கொண்டனர் போலும். இல்லாவிட்டால் திருவள்ளுவரெனப் பெயரிக்கும்போது அப்பெயர்கள் இடவும் துணிந்திருப்பாரா அவர்? அவர் கிடக்க, திருவள்ளுவரென்ற பெயரிட்ட பெரும் புலவருக்குக் கருத்து யாதாயிருக்கலாம். வேதத்துக்குச் சுயம்பு என்பது இன்னொரு பெயர். அப்பெயர் வரக் காரணத்தை ஆராய்ந்தனர் வேத பண்டிதர் பலர். சுயம்பு என்றால் தானே உண்டானது என்று அர்த்தம். வேதம் ஒருவராலும் ஆக்கப்படாமல் தானே யுண்டானது. அதனால் சுயம்பு எனப்பட்டது என்றனர் ஒரு சாரார். சுயம்பு எனபது சிவபெருமானுக்குப் பெயர், வேதம் அவரால் ஆக்கப்பட்டதால் ஆசிரியர் பெயர் நூலுக்காய் வேதமும் சுயம்பு எனப்பட்டது என்றனர் பிறிதொரு சாரார். அப்புலவருக்கு முற்கருத்துச் சம்மதமன்று, பிற்கருத்தே உடன்பாடு, அதை உலகிற்குத் தெரியப்படுத்த வேண்டும். சுயம்புவென்னும் சிவபெருமானாற் செய்யப்பட்ட வேதம் சுயம்பு எனப்படும் என்ற கொள்கையை அங்கீகரிக்கும் பிற்கால சந்ததியார்க்குத் திருட்டாந்தமொன்றுந் தேவை. திருவள்ளுவர் என்ற ஆசிரியர் பெயரைத் திரிவு செய்யாமல் திருக்குறளுக்கும் இட்டுவைத்து அவ்விரண்டையும் பூர்த்தி செய்தார் அப்புலவர். வேதத்துக்குச் செய்யாமொழி யெனவும் பெயருண்டு. செய்யாமொழியென்பது மனிதராற் செய்யப்படாத நூல் என்ற பொருளுடையது. வேதம் அபெளருஷேயம் என்றதன் பொருளும் அதுவே.
நந்தி- பண்பாளர்
- பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்
Re: திருக்குறள் பொது நூலா?
பகிர்வுக்கு மிக்க நன்றி.
மகி- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009
Re: திருக்குறள் பொது நூலா?
நன்றி நண்பரே!
நந்தி- பண்பாளர்
- பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்
Re: திருக்குறள் பொது நூலா?
வேதம் கடவுளாற் செய்யப்பட்டதென்பது திருக்குறளிலுங் கண்டவுண்மை.
'பொறிவாயி லைந்தவித்தான் பொய்தீ ரொழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்' (6)
என்றது நூல். 'அவித்தான் பொய்தீர் ஒழுக்கநெறி - அறுத்தானது மெய்யான ஒழுக்க நெறியின்கண்' என்பது உரை. ஒழுக்க நெறி ஐந்துவித்தானாற் சொல்லப்பட்டமையின் ஆண்டை ஆறனுருவு செய்யுட் கிழமைக்கண் வந்தது. 'கபிலரது பாட்டு என்பது போல' என்பது குறிப்பு.
'நல்லாற்றா னாடி---' (242)
என்றது நூல். 'நல்லாற்றான் - அளவைகளானும் பொருந்துமாற்றானும் நன்றான நெறியி§லே நின்று' என்பது உரை. அளவைகளாவன ----காட்சியும், ----அனுமானமும் கருத்தா மொழியாககிய ஆகமுமென மூன்று என்பது குறிப்பு.
'யாமெய்யா -----' (300)
என்றது நூல். 'யாம் மெய்யாக் கண்டவற்றுள் - யாம் மெய்ந்நூல்களாகக் கண்ட நூல்களுள்' என்பது உரை. 'மெய்யுணர்த்துவனவற்றை மெய்யென்றார். அவையாவன தங்கண் மயக்கமின்மையின் பொருள்களை யுள்ளவாறுணரவல்லராய்க் காமவெகுளிகளின்மையின் அவற்றை யுணர்ந்தவாறே உரைக்கவும் வல்லராய இறைவர். அருளான் உலகத்தார் உறுதி யெய்துதற் பொருட்டுக் கூறிய வாகமங்கள்' என்பது குறிப்பு.

'பற்றுக பற்றற்றான் பற்றினை---' (350)
என்றது நூல். 'பற்று அற்றான் பற்றினைப் பற்றுக - எல்லாப் பொருளையும் பற்றி நின்றே பற்றற்ற இறைவன் ஓதிய வீட்டு நெறியை இதுவே நன்னெறியென்பது மனத்துக் கொள்க' என்பது உரை. 'பற்றற்றான் பற்றென்புழி ஆறாவது செய்யுட் கிழமைக்கண் வந்தது' என்பது குறிப்பு. இப்பிரமாணங்கள் அவ்வுண்மையைப் புலப்படுத்தும்.
உத்திர வேதம் என்பதும் திருக்குறளுக்குப் பெயர். வேதம் என்ற சொல் சம்ஸ்கிருதம். அச்சொல் யோகப் பெயர். யோகப் பெயரெனினும் காரணப் பெயரெனினும் ஒன்றே. வேதம் என்பது அறிதற் கருவி, அறிவு நூல் என்னும் பொருளுடையது. ஆயினும் இருக்கு, எசுர், சாமம், அதர்வணம் என்னும் நான்கிற்கும் அ·து ரூடியுமாம். ரூடிப் பெயர் - இடுகுறிப் பெயர். எவ்வித அடையுமின்றி வேதம் என்று சொன்ன மாத்திரத்தில் அதற்கு இருக்காதி நான்குமே பொருள். ஆகையால் வேதம் என்ற சொல் இருக்காதியவற்றுக்குக் காரண இடுகுறி அல்லது யோகரூடிப் பெயராயிற்று. ஆயுள் வேதம், தனுர்வேதம், காந்தர்வவேதம் முதலியவை அடையடுத்து வெவ்வேறு நூல்களைக் குறிக்கும்.

உத்தர வேதம்
உத்திர வேதம் என்பதும் திருக்குறளுக்குப் பெயர். வேதம் என்ற சொல் சம்ஸ்கிருதம். அச்சொல் யோகப் பெயர். யோகப் பெயரெனினும் காரணப் பெயரெனினும் ஒன்றே. வேதம் என்பது அறிதற் கருவி, அறிவு நூல் என்னும் பொருளுடையது. ஆயினும் இருக்கு, எசுர், சாமம், அதர்வணம் என்னும் நான்கிற்கும் அ·து ரூடியுமாம். ரூடிப் பெயர் - இடுகுறிப் பெயர். எவ்வித அடையுமின்றி வேதம் என்று சொன்ன மாத்திரத்தில் அதற்கு இருக்காதி நான்குமே பொருள். ஆகையால் வேதம் என்ற சொல் இருக்காதியவற்றுக்குக் காரண இடுகுறி அல்லது யோகரூடிப் பெயராயிற்று. ஆயுள் வேதம், தனுர்வேதம், காந்தர்வவேதம் முதலியவை அடையடுத்து வெவ்வேறு நூல்களைக் குறிக்கும்.
நந்தி- பண்பாளர்
- பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்
Re: திருக்குறள் பொது நூலா?
இக்காலத்தில் அவ்வேதத்தை நிந்திக்கச் சிலர் தலைப்பட்டனர். வேதம் என்பது காரணப் பெயர், அறிவு நூலென்பது அதற்கருத்தம். ஆகலின் அறிவு நூல்களெல்லாம் வேதமே என்பரவர். அவர் காரண இடுகுறிப் பெயரென்னும் இலக்கணப்பகுதிக்கு உலைவைக்கும் இலக்கணக் கொலைஞராவர். அவருள் சாத்தனென்பானொருவன். ஒரு நாள் அவன் அமர்வதற்கு நாற்காலியொன்று வேண்டியிருந்தது. அதனை யெடுத்துவரச்சொல்லி தன் பிரதம மாணாக்கனை ஏவினானவன். அவனிடம் வேதமென்னுஞ் சொற்பொருளைக் கேட்டிருந்த அறிவோடு அம்மாணாக்கன் நாற்காலியைக் கொண்டுவரச் சென்றான். கழுதையொன்று எதிர்ப்பட்டது. அதுவும் நாற்காலிதானேயென்பது அவனுடைய எண்ணம். அவன் அதைக் கொண்டுபோய்த் தனக்கு இலக்கணஞ் சொல்லிக் கொடுத்த குருவாகிய அச்சாத்தன் முன் நிறுத்தி அக்குருவை அதன்மேல் அமரும்படி வேண்டினான். அக்குரு கோபிக்கலாமா? காரண இடுகுறிப் பெயரைக் காரணப் பெயரளவில் வைத்துப் பொருள் கூறித் திரிவதற்கு அப்பதவியே தகும். வேதம் இருக்காதிகளுக்குக் காரண இடுகுறிப் பெயராயிருந்துவருவது சித்தம். திருக்குறள் உத்தரவேதமாயின், இருக்கு முதலிய நான்கும் பூர்வவேதமாகும். உத்தரம் - பின்னர் வந்தது. பூர்வம் - முன்னருள்ளது. பூர்வவேதமில்லையாயின் திருக்குறளுக்கு உத்தரவேதமெனப் பெயர் கொடுக்கப்பட்டிராது. பூர்வத்தை உத்திரம் எதிர்த்துச் சொல்வதில்லை. அநுசரித்தே செல்லும். எதிர்த்துச் செல்வது உத்தரமெனப்படாது. அப்பெயரிட்ட புலவர் இருமொழியிலும் வல்லவராய் அவ்வேத பண்டிதராயுமிருந்திருப்பரென்பதும் உறுதி. ஆகவே திருக்குறள் வேதத்தையனுசரித்த நூலென்பது உத்தரவேதமென்ற பெயராற் பெறப்படும்.
நந்தி- பண்பாளர்
- பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்
Page 1 of 2 • 1, 2
Similar topics
» திருக்குறள்.
» கீதை கொலைகார நூலா...?
» பொது அறிவு
» பொது அறிவு
» பொது கம்ப்யூட்டரை பயன்படுத்துகிறீர்களா
» கீதை கொலைகார நூலா...?
» பொது அறிவு
» பொது அறிவு
» பொது கம்ப்யூட்டரை பயன்படுத்துகிறீர்களா
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum