தமிழ் | Tamil | Forum
தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

கூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.

புகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.

Join the forum, it's quick and easy

தமிழ் | Tamil | Forum
தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

கூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.

புகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.
தமிழ் | Tamil | Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வணக்கம் என் பெயர் நாகராசன்.இரா
by rajan_1972 Fri Apr 10, 2020 7:20 pm

» சிறந்த பொழுதுபோக்கு இணையதளம்!
by pba Sat Jul 02, 2016 8:11 pm

» ஏற்றுமதி உரிமம் பெறும் விண்ணப்பம்
by tamilnews Tue Mar 24, 2015 8:00 pm

» மொபைல், டிடிஎச் ரீசார்ஜ் செய்யப் போறீங்களா? இந்த சலுகைகளைப் பாருங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:41 am

» மொபைல் ரீசார்ஜ் செய்து ஷாப்பிங் கூப்பன் இலவசமாக பெறுங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:38 am

» மெமரி கார்டு வாங்கப் போறீங்களா? 74% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:36 am

» அமேசானில் பெண்களுக்கான ஆடைகள் 70% வரை தள்ளுபடி !
by dsytamil Wed Jan 14, 2015 1:34 am

» அமேசானில் ஆண்களுக்கான ஆடைகள் 60% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:31 am

» லெனோவா டேப்ளட் 43% சலுகை விலையில் ரூ. 5949 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:28 am

» ப்ளிப்கார்ட் தளத்தில் சிறுவர்களுக்கான ஆடைகள் 70% வரை + 30% கூடுதல் தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:14 am

» அமேசான் தளத்தில் 50% தள்ளுபடி விலையில் மொபைல்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:13 am

» ரூ. 7499 மதிப்புள்ள மைக்ரோமேக்ஸ் ஏ1 ஆன்ட்ராய்டு மொபைல் இப்போது ரூ. 5499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:11 am

» ரூ. 19999 மதிப்புள்ள நோக்கியா லூமியா 625 மொபைல் ரூ. 7499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:10 am

» ப்ராண்டட் காலணிகளுக்கு 70% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:08 am

» ஆன்லைன் ஷாப்பிங்கில் ப்ரிண்டர்களுக்கு 33% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:06 am

» ஆன்லைனில் பொருள் வாங்கப் போறீங்களா? 70% வரை பணத்தை சேமியுங்கள்!
by dsytamil Tue Jan 13, 2015 12:30 am

» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...!
by sathikdm Sun Oct 19, 2014 4:45 pm

» சிறுதொழில் செய்பவர்கள் இணையதளம் தொடங்க வேண்டியதின் அவசியம்!
by pba Sat Sep 27, 2014 12:58 am

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:47 pm

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:42 pm

» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
by santhoshpart Wed Aug 27, 2014 4:22 pm

» “சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா!”
by santhoshpart Wed Aug 13, 2014 3:54 pm

» Daily Rs.500/- and Above
by K.MARIAPPAN Wed Jul 30, 2014 12:01 pm

» http://www.neobux.com/?r=narasimmant
by Navaneethakrishnan Wed Jul 02, 2014 3:41 pm

» வணக்கம் என் பெயர் வேணு
by A.Venu Fri Jun 27, 2014 10:10 am

» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?
by sathikdm Wed Jun 18, 2014 3:24 pm

» தமிழ் மொழி மூல கல்வி இணையதளம்
by afdhaal Wed May 28, 2014 9:22 pm

» வருக. வருக. வணக்கம்.
by மகி Mon May 12, 2014 3:55 pm

» அறிமுகம் -விநாயகா செந்தில்.
by மகி Mon May 12, 2014 3:53 pm

» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....!
by vinayagasenthil Sat May 10, 2014 9:04 pm

பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

சத்தீஸ்கரில் நக்ஸல்கள் தாக்குதல்: 76 போலீஸார் பலி

Go down

சத்தீஸ்கரில் நக்ஸல்கள் தாக்குதல்: 76 போலீஸார் பலி Empty சத்தீஸ்கரில் நக்ஸல்கள் தாக்குதல்: 76 போலீஸார் பலி

Post by aarul Wed Apr 07, 2010 7:27 am


[You must be registered and logged in to see this image.]






சத்தீஸ்கரில்
உள்ள தாந்தேவாடா காட்டுப்பகுதியில் நக்ஸல்கள் நடத்திய திடீர் தாக்குதலில்
காயம் அடைந்த மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்,​​ ஜகதல்பூரில் உள்ள
மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக ​ அழைத்துச் செல்லப்படுகிறார்.
ராய்ப்பூர்,
​​ ஏப்.6: சத்தீஸ்கர் மாநிலம் தாந்தேவாடா மாவட்ட வனப்பகுதியில்
செவ்வாய்க்கிழமை நக்ஸல்கள் நடத்திய கொடூர தாக்குதலில் 75 மத்திய ரிசர்வ்
படை ​(சிஆர்பிஎப்)​ போலீஸாரும் மாநில காவலர் ஒருவரும் பலியாகினர்.​ இந்த சம்பவம் பற்றி அறிந்த பிரதமர் மன்மோகன் சிங்கும் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரமும் அதிர்ச்சியும் வேதனையும் தெரிவித்துள்ளனர்.​
சிதம்பரத்துடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசிய பிரதமர் மன்மோகன்
சிங்,​​ தற்போதைய நிலவரம் பற்றி அறிக்கை அனுப்பும்படி உத்தரவிட்டுள்ளார்.​ சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்ஸல்கள் நடமாட்டம் அதிகமிக்க பகுதிகளில் தாந்தேவாடா மாவட்ட வனப்பகுதியும் ஒன்று.​
இந்த பகுதியில் நக்ஸல் ஒழிப்பு வேட்டை ​(பசுமைவேட்டை)​ மேற்கொள்ள கடந்த 3
நாள்களாக சிஆர்பிஎப் ​(மத்திய ரிசர்வ் போலீஸ்படை)​ வீரர்களும் மாநில
போலீஸாரும் இணைந்து தர்மேத்லா வனப்பகுதியில் முகாமிட்டு வந்தனர்.​ ​​
தாந்தேவாடா மாவட்டத்தில் உள்ள முக்ரானா வனப்பகுதியில் மூலை முடுக்கெல்லாம்
சென்று பாதை,​​ வன,​​ நில அமைப்பை அறிந்துகொள்ள முயன்றனர்.​ நக்ஸல்களுக்கு
எதிராக தாக்குதல் நடத்த வசதியாக சாலை ஒன்றை அமைத்துவிட்டு முகாம்களுக்கு
செவ்வாய்க்கிழமை காலை திரும்பிக்கொண்டிருந்தனர்.​ சிஆர்பிஎப்
வீரர்கள்,​​ மாநில போலீஸார் என 100 பேர் வந்தபோது வனப்பகுதியில்
பதுங்கியிருந்த சுமார் 1000 நக்ஸல்கள் அவர்களை சுற்றிவளைத்து தாக்குதல்
நடத்தினர்.​ ​ ​​ இதில் இறந்தவர்களில் 75 பேர் சிஆர்பிஎப் வீரர்கள்.​ இவர்களில் ஒருவர் சிஆர்பிஎப் துணை கமான்டன்ட் மற்றொருவர் உதவி கமான்டன்ட் ஆவர்.​
காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் இந்த தாக்குதல் நடந்தது.​ ​ சிஆர்பிஎப்
வீரர்களை ஏற்றிவந்த வாகனம் மீது முதலில் தாக்குதல் நடத்தி அதைத்
தகர்த்தனர் நக்ஸல்கள்.​ இந்த சம்பவம் நடந்தது தாந்தேவாடாவில் உள்ள
சிந்தால்நர்-தர்மேத்லா கிராமம் அருகே என்று தாந்தேவாடா காவல் துறை
கண்காணிப்பாளர் அமரேஷ் மிஸ்ரா கூறினார்.​ இந்த தாக்குதலுக்குப்
பிறகு பாதுகாத்துக்கொள்ள படை வீரர்கள் முயன்றபோது குன்றின் உச்சியில்
நின்றபடி துப்பாக்கிகளால் நக்ஸல்கள் சுட்டனர்.​ நக்ஸல்கள் புதைத்து வைத்திருந்த குண்டுவெடித்ததில் கண்ணிவெடிகள் அகற்றும் வாகனமும் சிதறி அதன் டிரைவரும் உயிரிழந்தார்.​
அதைத் தொடர்ந்து படைவீரர்களுக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே பலத்த
துப்பாக்கிச்சண்டை மூண்டது என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.​ சம்பவம் நடந்த வனப்பகுதியில் அடிபட்டு காயம் அடைந்த 8 சிஆர்பிஎப் வீரர்கள் சிகிச்சைக்காக ஹெலிகாப்டரில் கொண்டுசெல்லப்பட்டனர்.​ எல்லா உடல்களும் மீட்கப்பட்டுவிட்டன என மாநில காவல்துறை தலைவர் விஸ்வ ரஞ்சன் தெரிவித்தார்.​ ​​ தில்லியிலிருந்து சிஆர்பிஎப் தலைமை இயக்குநர் விக்ரம் ஸ்ரீவத்ஸவா,​​ வனப்பகுதிக்கு விரைந்து சம்பவ இடத்தை பார்வையிட்டார்.​
நக்ஸல் ஒழிப்புப்படைக்கு கமாண்டராக பொறுப்பு வகிக்கும் சிஆர்பிஎப் சிறப்பு
தலைமை இயக்குநர் விஜய ராமனும் சம்பவ இடத்துக்கு விரைந்தார்.​ கூடுதல் படை
அனுப்பி தேடுதல் வேட்டை முடுக்கிவிடப்பட்டுள்ளது என்றும் அவர் சொன்னார்.​
சில பொய்த்தகவல்களை வேண்டும் என்றே பரப்பி படை வீரர்களை ​ மரணக்குழியில்
விழ ​ வைத்திருக்கிறார்கள் என்று உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டம்:​ நக்ஸல்கள்
நடத்திய இந்த கொடூர தாக்குதலை அடுத்து பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில்
தேசிய பாதுகாப்பு கவுன்சில் தில்லியில் கூடியது.​ இதில் நக்ஸல் தாக்குதல்
பற்றி விவாதிக்கப்பட்டது.​ இந்த கூட்டத்தில் உள்துறை அமைச்சர்
ப.சிதம்பரம்,​​ இதர சில அமைச்சர்கள்,​​ முப்படைத் தலைவர்கள் பங்கேற்றனர்.​
​அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை​ :மத்திய படையினர் மீது
நக்ஸல்கள் தாக்குதல் நடத்தியதை அடுத்து மாநில முதல்வர் ரமண் சிங் உயர்
அதிகாரிகளை அழைத்து அவசர ஆலோசனை நடத்தினார்.​ நக்ஸல்களின் கொடூர முகத்தை இந்த தாக்குதல் வெளிப்படுத்துகிறது என்று ரமண் சிங் குறிப்பிட்டார்.​ ​​
இருநாள்களுக்கு முன்னர்தான் ஒரிசாவில் உள்ள கோராபுட் மாவட்டத்தில்
நக்ஸல்கள் நடத்திய தாக்குதலில் 11 படைவீரர்கள் பலியாகினர்.​ இப்போது
சத்தீஸ்கரில் இந்த தாக்குதல் நடந்துள்ளது.​ ​ ​​ தாக்குதல் மேல் தாக்குதல்
நடப்பது அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.​ இது போல் பல
தாக்குதல்களை நக்ஸல்கள் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.​ பிப்ரவரி
15-ம் தேதி மேற்கு வங்கத்தில் மிதுனபுரி மாவட்டத்தில் பாதுகாப்புப் படை
முகாம் மீது நக்ஸல்கள் நடத்திய தாக்குதலில் 24 பேர் கொல்லப்பட்டனர்.
aarul
aarul
தள ஆலோசகர்
தள ஆலோசகர்

பதிவுகள் : 421
புள்ளிகள் : 793
Reputation : 12
சேர்ந்தது : 20/12/2009
வசிப்பிடம் : mani electronics,erode, tamilnadu,india

Back to top Go down

Back to top

- Similar topics
» மேற்கு வங்கத்தில் துணை ராணுவப் படை முகாம் மீது நக்ஸல்கள் தாக்குதல்: 24 வீரர்கள் பலி
» தாக்குதல் நடத்திவிட்டானாம்!"
» மக்கள் தொலை‌க்கா‌ட்‌‌சி அலுவலக‌‌ம் ‌மீது மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட் க‌ட்‌சி‌யின‌ர் தாக்குதல்!
» வான்வழி தற்கொலைத் தாக்குதல் நடத்த லஷ்கர் திட்டம்: உளவுத்துறை!
» இனி தீவிரவாத தாக்குதல் நடந்தால் பாக்.குக்கு பதிலடி கிடைக்கும் - ப.சிதம்பரம்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum