Latest topics
» வணக்கம் என் பெயர் நாகராசன்.இராby rajan_1972 Fri Apr 10, 2020 7:20 pm
» சிறந்த பொழுதுபோக்கு இணையதளம்!
by pba Sat Jul 02, 2016 8:11 pm
» ஏற்றுமதி உரிமம் பெறும் விண்ணப்பம்
by tamilnews Tue Mar 24, 2015 8:00 pm
» மொபைல், டிடிஎச் ரீசார்ஜ் செய்யப் போறீங்களா? இந்த சலுகைகளைப் பாருங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:41 am
» மொபைல் ரீசார்ஜ் செய்து ஷாப்பிங் கூப்பன் இலவசமாக பெறுங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:38 am
» மெமரி கார்டு வாங்கப் போறீங்களா? 74% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:36 am
» அமேசானில் பெண்களுக்கான ஆடைகள் 70% வரை தள்ளுபடி !
by dsytamil Wed Jan 14, 2015 1:34 am
» அமேசானில் ஆண்களுக்கான ஆடைகள் 60% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:31 am
» லெனோவா டேப்ளட் 43% சலுகை விலையில் ரூ. 5949 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:28 am
» ப்ளிப்கார்ட் தளத்தில் சிறுவர்களுக்கான ஆடைகள் 70% வரை + 30% கூடுதல் தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:14 am
» அமேசான் தளத்தில் 50% தள்ளுபடி விலையில் மொபைல்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:13 am
» ரூ. 7499 மதிப்புள்ள மைக்ரோமேக்ஸ் ஏ1 ஆன்ட்ராய்டு மொபைல் இப்போது ரூ. 5499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:11 am
» ரூ. 19999 மதிப்புள்ள நோக்கியா லூமியா 625 மொபைல் ரூ. 7499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:10 am
» ப்ராண்டட் காலணிகளுக்கு 70% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:08 am
» ஆன்லைன் ஷாப்பிங்கில் ப்ரிண்டர்களுக்கு 33% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:06 am
» ஆன்லைனில் பொருள் வாங்கப் போறீங்களா? 70% வரை பணத்தை சேமியுங்கள்!
by dsytamil Tue Jan 13, 2015 12:30 am
» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...!
by sathikdm Sun Oct 19, 2014 4:45 pm
» சிறுதொழில் செய்பவர்கள் இணையதளம் தொடங்க வேண்டியதின் அவசியம்!
by pba Sat Sep 27, 2014 12:58 am
» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:47 pm
» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:42 pm
» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
by santhoshpart Wed Aug 27, 2014 4:22 pm
» “சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா!”
by santhoshpart Wed Aug 13, 2014 3:54 pm
» Daily Rs.500/- and Above
by K.MARIAPPAN Wed Jul 30, 2014 12:01 pm
» http://www.neobux.com/?r=narasimmant
by Navaneethakrishnan Wed Jul 02, 2014 3:41 pm
» வணக்கம் என் பெயர் வேணு
by A.Venu Fri Jun 27, 2014 10:10 am
» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?
by sathikdm Wed Jun 18, 2014 3:24 pm
» தமிழ் மொழி மூல கல்வி இணையதளம்
by afdhaal Wed May 28, 2014 9:22 pm
» வருக. வருக. வணக்கம்.
by மகி Mon May 12, 2014 3:55 pm
» அறிமுகம் -விநாயகா செந்தில்.
by மகி Mon May 12, 2014 3:53 pm
» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....!
by vinayagasenthil Sat May 10, 2014 9:04 pm
விவசாயி அரசனுக்கு புகட்டிய பாடம்!
Page 1 of 1
விவசாயி அரசனுக்கு புகட்டிய பாடம்!
ரத்தினபுரியின் அரசன் மகா கோபக்காரன். யோசிக்காமல் தண்டனை கொடுப்பான். அவனது மந்திரியும் முட்டாளாக இருந்தான். மன்னனுக்குப் புத்திமதி சொல்பவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட்டனர்.
மன்னன் நாட்டு மக்களிடம் கடுமையாக வரி வசூல் செய்தான். தர இயலாதவர்களை மோசமாக தண்டித்தான். மக்கள் கொடுங்கோல் அரசனை எதிர்க்க முடியாமல் வேதனைப்பட்டனர்.
அரசனின் ஆட்சிக்கு உட்பட்ட கிராமத்தில் மாடசாமி என்ற விவசாயி இருந்தான். அவ்வருடம் மழை சரியாகப் பெய்யாததால் அவனால் நிலவரி கட்டமுடியவில்லை. மாடசாமியின் மனைவி ராக்கம்மா அவனிடம் வரி கட்டாவிட்டால் அரசன் தண்டிப்பானே என கவலைப்பட்டாள்.
மாடசாமி ஒரு முடிவு செய்தான். அரசனைச் சந்தித்து வரிகட்ட ஒரு வருடம் அவகாசம் கேட்பது, அதன் பின்பு பாடுபட்டு வரி செலுத்துவது என்று முடிவு செய்தான்.
நேராக அரசனைச் சந்தித்த மாடசாமி தனது நிலையை எடுத்துச் சொன்னான். வரி கட்டாதது தனது தவறுதான் என்றும், வானம் பொய்த்துவிட்டால் விளைச்சல் இல்லை என்றும் நடந்தவற்றைச் சொன்னான்.
அரசனுக்கு மாடசாமியின் பேச்சு எரிச்சலைத் தந்தது. அரசன் கோபமாக வரி கட்டாதது உன் தவறு. அடுத்த வருடம் கட்டுவதாக யாரை ஏமாற்றப் பார்க்கிறாய்? நீ ஒரு மோசடிக்காரன். உனக்கு மட்டும் மழை பெய்யவில்லையா? மன்னிக்க வேண்டும் அரசே! மற்றவர்கள் தங்களிடம் பேசப் பயப்படுகிறார்கள் அதனால்தான்...
அப்படியென்றால் உனக்கு மட்டும் என்னைக் கண்டு பயம் இல்லையா? முட்டாளே உனக்கு என்ன துணிச்சல்? ஏய்... இவனை இழுத்துச் செல்லுங்கள். நாளை இவனது தலையை வெட்டி எறியுங்கள்.
அரசே! இது சிறிய தவறுதானே. நான் வேண்டுமென்றே வரி கட்டாமல் இருக்கவில்லையே. மாடசாமியின் பேச்சு எடுபடவில்லை. வீரர்கள் அவனை இழுத்துச் சென்றனர்.
சிறையில் அடக்கப்பட்ட மாடசாமி அரசனுக்கு புத்தி புகட்ட விரும்பினான். அதன் படி ஒரு காவலனை அழைத்து வீரனே, நாளை நான் செத்து விடுவேன். எனக்குத் தங்கம் விளைவிக்கும் ரகசியம் தெரியும். அரசனிடம் போய் இதைச் சொல்.
வீரனுக்கு மாடசாமியை நம்ப முடியவில்லை என்றாலும் அரசனிடம் போய் விஷயத்தை சொன்னான். உடனே அரசன் அவனை அழைத்து வா. சாவதற்கு முன்பு ரகசியத்தை சொல்லிவிட்டு சாகட்டும்.
மாடசாமி அரசர் முன் நிறுத்தப்பட்டான். அரசே! ஒரு தங்கக் கட்டியை என்னிடம் கொடுங்கள் மந்திரம் செய்து தருகிறேன். பின்பு அக்கட்டியை புதைத்து வைத்தால் பல மடங்கு தங்கம் விளையும் என்று கூறினான்.
உடனே அரசன் தங்கத்தை மாடசாமியிடம் கொடுத்தான். மாடசாமி ஏதோ முணுமுணுத்துவிட்டு அரசனிடன் கொடுத்தான். அரசே! மந்திரித்த இந்த தங்கத்தை இதுவரை தவறே செய்யாதவர்கள் புதைத்தால் தான் பலன் கிடைக்கும். அதனால் இதை மந்திரியாரிடம் கொடுத்து புதைக்கச் சொல்லுங்கள் என்று கூறினான்.
மந்திரி மன்னிக்க வேண்டும் அரசே! நான் வாழ்க்கையில் நிறைய தவரு செய்திருக்கிறேன். வேறு யாரிடமாவது கொடுங்கள் என்று கூறினான்.
யாரும் தங்கத்தைப் புதைக்க முன் வரவில்லை. எல்லோரும் ஏதோ ஒரு விதத்தில் தவறு செய்தவர்களாகத்தான் இருந்தார்கள்.
அரசே! இங்குள்ள எல்லோருமே ஏதோ ஒரு வகையில் தவறு செய்தவர்கள்தான். வறட்சியால் வரிகட்டாத தவறைச் செய்த என்னை மட்டும் தண்டிப்பது நியாயமா? என்று முறையிட்டான்.
அரசன் யோசித்து தெளிவுடன் மாடசாமி உன்னை விடுதலை செய்கிறேன். இனி முட்டாள்தனமான தண்டனைகள் என் ஆட்சியில் இருக்காது என்று தெரிவித்தார்.
அன்று முதல் கொடுங்கோல் ஆட்சி ஒழிந்து நல்லாட்சி பிறந்தது.
நன்றி: தினமணி.

மகி- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum