தமிழ் | Tamil | Forum
தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

கூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.

புகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.

Join the forum, it's quick and easy

தமிழ் | Tamil | Forum
தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

கூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.

புகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.
தமிழ் | Tamil | Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வணக்கம் என் பெயர் நாகராசன்.இரா
by rajan_1972 Fri Apr 10, 2020 7:20 pm

» சிறந்த பொழுதுபோக்கு இணையதளம்!
by pba Sat Jul 02, 2016 8:11 pm

» ஏற்றுமதி உரிமம் பெறும் விண்ணப்பம்
by tamilnews Tue Mar 24, 2015 8:00 pm

» மொபைல், டிடிஎச் ரீசார்ஜ் செய்யப் போறீங்களா? இந்த சலுகைகளைப் பாருங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:41 am

» மொபைல் ரீசார்ஜ் செய்து ஷாப்பிங் கூப்பன் இலவசமாக பெறுங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:38 am

» மெமரி கார்டு வாங்கப் போறீங்களா? 74% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:36 am

» அமேசானில் பெண்களுக்கான ஆடைகள் 70% வரை தள்ளுபடி !
by dsytamil Wed Jan 14, 2015 1:34 am

» அமேசானில் ஆண்களுக்கான ஆடைகள் 60% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:31 am

» லெனோவா டேப்ளட் 43% சலுகை விலையில் ரூ. 5949 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:28 am

» ப்ளிப்கார்ட் தளத்தில் சிறுவர்களுக்கான ஆடைகள் 70% வரை + 30% கூடுதல் தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:14 am

» அமேசான் தளத்தில் 50% தள்ளுபடி விலையில் மொபைல்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:13 am

» ரூ. 7499 மதிப்புள்ள மைக்ரோமேக்ஸ் ஏ1 ஆன்ட்ராய்டு மொபைல் இப்போது ரூ. 5499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:11 am

» ரூ. 19999 மதிப்புள்ள நோக்கியா லூமியா 625 மொபைல் ரூ. 7499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:10 am

» ப்ராண்டட் காலணிகளுக்கு 70% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:08 am

» ஆன்லைன் ஷாப்பிங்கில் ப்ரிண்டர்களுக்கு 33% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:06 am

» ஆன்லைனில் பொருள் வாங்கப் போறீங்களா? 70% வரை பணத்தை சேமியுங்கள்!
by dsytamil Tue Jan 13, 2015 12:30 am

» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...!
by sathikdm Sun Oct 19, 2014 4:45 pm

» சிறுதொழில் செய்பவர்கள் இணையதளம் தொடங்க வேண்டியதின் அவசியம்!
by pba Sat Sep 27, 2014 12:58 am

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:47 pm

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:42 pm

» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
by santhoshpart Wed Aug 27, 2014 4:22 pm

» “சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா!”
by santhoshpart Wed Aug 13, 2014 3:54 pm

» Daily Rs.500/- and Above
by K.MARIAPPAN Wed Jul 30, 2014 12:01 pm

» http://www.neobux.com/?r=narasimmant
by Navaneethakrishnan Wed Jul 02, 2014 3:41 pm

» வணக்கம் என் பெயர் வேணு
by A.Venu Fri Jun 27, 2014 10:10 am

» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?
by sathikdm Wed Jun 18, 2014 3:24 pm

» தமிழ் மொழி மூல கல்வி இணையதளம்
by afdhaal Wed May 28, 2014 9:22 pm

» வருக. வருக. வணக்கம்.
by மகி Mon May 12, 2014 3:55 pm

» அறிமுகம் -விநாயகா செந்தில்.
by மகி Mon May 12, 2014 3:53 pm

» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....!
by vinayagasenthil Sat May 10, 2014 9:04 pm

பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

தென் ஆப்பிரிக்கா 248 ரன்கள் ஆல் அவுட்; தொடரை வென்றது இந்தியா!

2 posters

Go down

தென் ஆப்பிரிக்கா 248 ரன்கள் ஆல் அவுட்; தொடரை வென்றது இந்தியா! Empty தென் ஆப்பிரிக்கா 248 ரன்கள் ஆல் அவுட்; தொடரை வென்றது இந்தியா!

Post by மகி Thu Feb 25, 2010 2:59 am

குவாலியர் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் சச்சின் அதிரடி உலகசாதனை இரட்டை சதம் எடுக்க இந்தியா 401 ரன்கள் எடுத்தது. இலக்கைத் துரத்திய தென் ஆப்பிரிக்கா டீவிலியர்ஸ் சதத்துடன் 248 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 153 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி தழுவியது.

இதன் மூலம் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட இந்த தொடரை இந்தியா 2-0 என்று கைப்பற்றியுள்ளது.

மிகப்பெரிய இலக்கைத் துரத்துவதற்கான எந்த வித ஒழுங்கையும் கடைபிடிக்காத தென் ஆப்பிரிக்கா 20 ஓவர் கிரிக்கெட் போல் துவங்கி வரிசையாக விக்கெட்டுகளை இழந்து 23-வது ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்கள் என்று சரிந்தது.

ஆட்டத்தின் எந்த நிலையிலும் இந்தியாவிற்கு எந்த வித அச்சுறுத்தலையும் கொடுக்காமல் முழுதும் சரண் அடைந்தது தென் ஆப்பிரிக்கா.

கடைசியாக லாங்கிவெல்ட் விக்கெட்டை ரவீந்தர் ஜடேஜா வீழ்த்த தென் ஆப்பிரிக்கா 42.5 ஓவர்களில் 248 ரன்களுக்கு சுருண்டது.

ஏ.பி. டீவிலியர்ஸ் 101 பந்துகளில் 13 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் சகிதம் 114 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இவருக்கு அடுத்த படியாக ஆம்லா அதிகபட்சமாக 34 ரன்கள் எடுத்த்தார். மற்ற வீரர்கள் எவரும் 20 ரன்களைத் தாண்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

யூசுப் பத்தானும், ஜடேஜாவும் சிறப்பாக வீசி முறையே 41 மற்றும் 37 என்ற ரன்களை கொடுத்து தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

ஸ்ரீசாந்த் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். நெஹ்ரா 2 விக்கெட்டுகளையும், பிரவீண் குமார் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இன்றைய தினம் அதாவது பிப்ரவரி 24, 2010ஆம் ஆண்டு சச்சின் டெண்டுல்கரின் தினம். 40 ஆண்டுகள் ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் உலகின் தலை சிறந்த வீரரான சச்சின் டெண்டுல்கர் ஒரு நாள் கிரிக்கெட்டில் யாரும் சாதிக்க முடியாது என்று கருதிய இரட்டை சதத்தை இன்று எடுத்து வரலாறு படைத்தார். இதனால் இந்த தினம் இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் நினைவில் பசுமையாக பதியும் ஒரு நாள் என்பதில் ஐயமில்லை.

பரிசளிப்பு விழாவில் ஆட்ட நாயகன் விருதைப் பெற்ற சச்சின் டெண்டுல்கர் இந்த வரலாற்றுச் சாதனையை 20 ஆண்டுகாலமாக தனக்கு ஆதரவு அளித்து வரும் ரசிகர்களுக்கு அர்ப்ப்ணிக்கிறேன் என்றார்.

இன்றைய ஆட்டம் பற்றி குறிப்பிடுகையில், 175 ரன்கள் எடுத்திருந்தபோது 42 ஓவர்கள்தான் முடிந்திருந்தது. அதனால் வாய்ப்பு இருப்பதாகக் கருதினேன். ஆனால் உண்மையில் அந்த மைல்கல்லை நினைத்து விளையாடவில்லை. 200 ரன்களுக்கு இன்னும் நெருக்கமாகச் சென்ற போது இதனை சாதித்து விடலாம் என்ற நம்பிக்கை பிறந்தது என்றார்.

குவாலியர் கிரிக்கெட் சங்கம் இந்த மைதானத்தின் பெவ்லியனுக்கு சச்சின் டெண்டுல்கரின் பெயரை சூட்டவிருப்பதாக அறிவித்துள்ளது.

நன்றி: வெப்துனியா.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

தென் ஆப்பிரிக்கா 248 ரன்கள் ஆல் அவுட்; தொடரை வென்றது இந்தியா! Empty Re: தென் ஆப்பிரிக்கா 248 ரன்கள் ஆல் அவுட்; தொடரை வென்றது இந்தியா!

Post by aarul Sun Feb 28, 2010 9:10 am

[You must be registered and logged in to see this link.]


[You must be registered and logged in to see this image.] by [You must be registered and logged in to see this link.] Today at 2:03[You must be registered and logged in to see this image.]


ஆமதாபாத்:
மூன்றாவது ஒருநாள் போட்டியில் கேப்டன் காலிஸ், டிவிலியர்ஸ் அபார சதம்
அடிக்க, தென் ஆப்ரிக்க அணி, இந்தியாவை 90 ரன்கள் வித்தியாசத்தில்
வீழ்த்தி, ஆறுதல் தேடியது. ஏற்கனவே தொடரை வென்ற இந்திய அணி, கோப்பையை
கைப்பற்றியது.
இந்தியா வந்த தென் ஆப்ரிக்க அணி மூன்று போட்டிகள் கொண்ட
ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரில் பங்கேற்றது. முதலிரண்டு போட்டிகளில்
வென்ற இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றது. நேற்று முக்கியத்துவம்
இல்லாத மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி ஆமதாபாத்தில் நடந்தது.
"டாஸ்' வென்ற தென் ஆப்ரிக்க அணி கேப்டன் காலிஸ், "பேட்டிங்' தேர்வு
செய்தார்.
விஜய் அறிமுகம்:
இந்திய
அணியில் சச்சின், சேவக், ஆஷிஸ் நெஹ்ரா, பிரவீண் குமாருக்கு ஓய்வு
அளிக்கப்பட்டது. இவர்களுக்கு பதிலாக ரோகித் சர்மா, சுதீப் தியாகி மற்றும்
அறிமுக வீரராக தமிழகத்தின் முரளி விஜய், அபிமன்யு மிதுன் இடம் பெற்றனர்.
தென் ஆப்ரிக்க அணியில் பார்னல், டுமினி, ஆல்பி மார்கல், லாங்கிவெல்ட்
நீக்கப்பட்டு போஸ்மென், போத்தா, மார்னே மார்கல், டிசாட்சொபே வாய்ப்பு
பெற்றனர்.
போஸ்மென் அபாரம்:
தென்
ஆப்ரிக்க அணிக்கு போஸ்மென், ஆம்லா ஜோடி அபார துவக்கம் கொடுத்தது.
அதிரடியாக அரைசதம் கடந்த போஸ்மென் (68), யூசுப் பதானிடம் வீழ்ந்தார்.
அடுத்து ஆம்லாவுடன் இணைந்தார் காலிஸ். சர்வதேச கிரிக்கெட் அரங்கில், 7வது
அரைசதம் கடந்த ஆம்லா (87), ஜடேஜாவின் சுழலில் சிக்கினார்.
காலிஸ் கலக்கல்:
பின்
காலிஸ், டிவிலியர்ஸ் ஜோடி சேர்ந்தனர். இவர்கள் இந்திய வீரர்களின்
பவுலிங்கை ஒருகை பார்த்தனர். முக்கியமாக தியாகி, அபிமன்யு மற்றும்
ஸ்ரீசாந்தின் வேகப்பந்து வீச்சில் சிக்சர், பவுண்டரிகளாக விளாசினர்.
ஸ்ரீசாந்தின் பந்தில் அடுத்தடுத்து இரண்டு சிக்சர்கள் அடித்த காலிஸ்,
ஒருநாள் கிரிக்கெட்டில் 17 வது சதம் கடந்தார்.
அதிரடி டிவிலியர்ஸ்:
மறுமுனையில்
இவருக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார் டிவிலியர்ஸ். இவர் 58 பந்துகளில்,
தனது 7வது சர்வதேச சதத்தை எட்டினார். மூன்றாவது விக்கெட்டுக்கு இந்த ஜோடி
173 ரன்கள் சேர்த்தது. தென் ஆப்ரிக்க அணி 50 ஓவரில் 2 விக்கெட்
இழப்புக்கு, 365 ரன்கள் குவித்தது. காலிஸ் 104 (3 சிக்சர், 5 பவுண்டரி),
டிவிலியர்ஸ் 102 (3 சிக்சர், 11 பவுண்டரி) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
கார்த்திக் ஏமாற்றம்:
கடின
இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு தினேஷ் கார்த்திக்(11), முரளி விஜய்(25)
துவக்கத்தில் ஏமாற்றினர். பின் விராத் கோஹ்லி, ரோகித் சர்மா இணைந்து
அணியின் ஸ்கோரை <உயர்த்த போராடினர். இந்த ஜோடி 3வது விக்கெட்டுக்கு 95
ரன்கள் சேர்த்தது. இந்நிலையில் 48 ரன்கள் எடுத்திருந்த ரோகித் சர்மா,
அரைசத வாய்ப்பை கோட்டை விட்டார். மறுமுனையில் கோஹ்லி சர்வதேச கிரிக்கெட்
அரங்கில், 6வது அரைசதம் கடந்தார். தோனி (9), ஸ்டைனின் வேகத்தில்
வெளியேறினார். இதே ஓவரின் கடைசி பந்தில் கோஹ்லியும் (57) அவுட்டானார்.
இந்தியா தோல்வி:
இருமுறை
கண்டம் தப்பிய ரெய்னா, 49 ரன்னுடன் திரும்பினார். யூசுப் பதான் (5),
ஸ்ரீசாந்த் (1), அபிமன்யு (24), ரவிந்திர ஜடேஜா (36) ஆகியோர் ஏமாற்ற,
இந்திய அணி 44.3 ஓவரில் 275 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி, 90 ரன்கள்
வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
தென் ஆப்ரிக்காவின் ஸ்டைன், டிசாட்சொபே தலா 3 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.
இப்போட்டியில் தோற்றாலும், இந்திய அணி ஒரு நாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்று, கோப்பையை கைப்பற்றியது.
ஆட்டநாயகன்
விருதை தென் ஆப்ரிக்காவின் டிவிலியர்ஸ் பெற்றார். தொடர் நாயகன் விருது
இந்திய மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சினுக்கு வழங்கப்பட்டது.
அதிவேக சதம்:
இந்திய
பந்துவீச்சை சிதறடித்த தென் ஆப்ரிக்க வீரர் டிவிலியர்ஸ், 58 பந்துகளில்
சதம் கடந்தார். இது ஒருநாள் அரங்கில் ஏழாவது அதிவேக சதமாக அமைந்தது.
இப்பட்டியலில் பாகிஸ்தானின் அப்ரிதி 37 பந்துகளில் சதம் அடித்து
முதலிடத்தில் உள்ளார்.
அதிகபட்ச ஸ்கோர்:
நேற்று
அபாரமாக ஆடிய தென் ஆப்ரிக்க அணி, இந்தியாவுக்கு எதிராக அதிகபட்ச ஸ்கோரை
(365/2) பதிவு செய்தது. இதற்கு முன் கடந்த 2000ல் நாக்பூரில், 7 விக்கெட்
இழப்புக்கு 320 ரன்கள் எடுத்திருந்தது. தவிர, ஆமதாபாத் மைதானத்தில்
எடுக்கப்பட்ட அதிக ஸ்கோராகவும் அமைந்தது. முன்னதாக இங்கு, இந்திய அணி 5
விக்கெட்டுக்கு 325 ரன்கள் (எதிரணி-வெ.இண்டீஸ், 2002) எடுத்தது.
சாதனை ஜோடி:
காலிஸ்,
டிவிலியர்ஸ் ஜோடி, மூன்றாவது விக்கெட்டுக்கு 173 ரன்கள் சேர்த்து
ஆட்டமிழக்காமல் இருந்தது. இது இரு அணிகள் இடையே, மூன்றாவது விக்கெட்டுக்கு
எடுக்கப்பட்ட அதிகபட்ச ரன்னாக அமைந்தது.
ஸ்கோர் போர்டு
தென் ஆப்ரிக்கா
போஸ்மென் (கே)ஜடேஜா (ப)யூசுப் 68(46)
ஆம்லா (கே)முரளி விஜய் (ப)ஜடேஜா 87(103)
காலிஸ் -அவுட் இல்லை- 104(94)
டிவிலியர்ஸ் -அவுட் இல்லை- 102(59)
உதிரிகள் 4
மொத்தம் (50 ஓவரில் 2 விக்.,) 365
விக்கெட் வீழ்ச்சி: 1-113(போஸ்மென்), 2-192(ஆம்லா).
பந்துவீச்சு:
ஸ்ரீசாந்த் 9-0-83-0, சுதீப் தியாகி 8-0-59-0, மிதுன் 8-0-63-0, ஜடேஜா
10-0-53-1, யூசுப் 10-0-66-1, கோஹ்லி 2-0-11-0, ரோகித் 3-0-28-0.
இந்தியா
கார்த்திக் (கே)ஆம்லா (ப)ஸ்டைன் 11(11)
முரளி விஜய் (கே)பவுச்சர் (ப)டிசாட்சொபே 25(16)
கோஹ்லி (கே)பவுச்சர் (ப)ஸ்டைன் 57(71)
ரோகித் (கே)டிசாட்சொபே (ப)போத்தா 48(61)
தோனி (கே)பவுச்சர் (ப)ஸ்டைன் 9(7)
ரெய்னா (கே)சப்-பார்னல் (ப)போத்தா 49(30)
யூசுப் (கே)ஸ்டைன் (ப)டிசாட்சொபே 5(8)
ஜடேஜா (கே)பவுச்சர் (ப)டிசாட்சொபே 36(35)
ஸ்ரீசாந்த் எல்.பி.டபிள்யு., (ப)மெர்வி 1(3)
மிதுன் (ஸ்டம்டு)பவுச்சர் (ப)மெர்வி 24(23)
சுதீப் தியாகி -அவுட் இல்லை- 1(2)
உதிரிகள் 9
மொத்தம் (44.3 ஓவரில் "ஆல்-அவுட்') 275
விக்கெட் வீழ்ச்சி:
1-22(கார்த்திக்), 2-40(முரளி விஜய்), 3-135(ரோகித்), 4-156(தோனி),
5-157(கோஹ்லி), 6-179(யூசுப்), 7-233(ரெய்னா), 8-237(ஸ்ரீசாந்த்),
9-273(மிதுன்), 10-275(ஜடேஜா).
பந்துவீச்சு: ஸ்டைன் 8-1-37-3, டிசாட்சொபே 9.3-0-58-3, மார்கல் 7-0-48-0, மெர்வி 10-0-47-2, போத்தா 10-0-80-2.



[You must be registered and logged in to see this link.]
aarul
aarul
தள ஆலோசகர்
தள ஆலோசகர்

பதிவுகள் : 421
புள்ளிகள் : 793
Reputation : 12
சேர்ந்தது : 20/12/2009
வசிப்பிடம் : mani electronics,erode, tamilnadu,india

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum