Latest topics
» வணக்கம் என் பெயர் நாகராசன்.இராby rajan_1972 Fri Apr 10, 2020 7:20 pm
» சிறந்த பொழுதுபோக்கு இணையதளம்!
by pba Sat Jul 02, 2016 8:11 pm
» ஏற்றுமதி உரிமம் பெறும் விண்ணப்பம்
by tamilnews Tue Mar 24, 2015 8:00 pm
» மொபைல், டிடிஎச் ரீசார்ஜ் செய்யப் போறீங்களா? இந்த சலுகைகளைப் பாருங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:41 am
» மொபைல் ரீசார்ஜ் செய்து ஷாப்பிங் கூப்பன் இலவசமாக பெறுங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:38 am
» மெமரி கார்டு வாங்கப் போறீங்களா? 74% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:36 am
» அமேசானில் பெண்களுக்கான ஆடைகள் 70% வரை தள்ளுபடி !
by dsytamil Wed Jan 14, 2015 1:34 am
» அமேசானில் ஆண்களுக்கான ஆடைகள் 60% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:31 am
» லெனோவா டேப்ளட் 43% சலுகை விலையில் ரூ. 5949 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:28 am
» ப்ளிப்கார்ட் தளத்தில் சிறுவர்களுக்கான ஆடைகள் 70% வரை + 30% கூடுதல் தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:14 am
» அமேசான் தளத்தில் 50% தள்ளுபடி விலையில் மொபைல்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:13 am
» ரூ. 7499 மதிப்புள்ள மைக்ரோமேக்ஸ் ஏ1 ஆன்ட்ராய்டு மொபைல் இப்போது ரூ. 5499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:11 am
» ரூ. 19999 மதிப்புள்ள நோக்கியா லூமியா 625 மொபைல் ரூ. 7499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:10 am
» ப்ராண்டட் காலணிகளுக்கு 70% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:08 am
» ஆன்லைன் ஷாப்பிங்கில் ப்ரிண்டர்களுக்கு 33% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:06 am
» ஆன்லைனில் பொருள் வாங்கப் போறீங்களா? 70% வரை பணத்தை சேமியுங்கள்!
by dsytamil Tue Jan 13, 2015 12:30 am
» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...!
by sathikdm Sun Oct 19, 2014 4:45 pm
» சிறுதொழில் செய்பவர்கள் இணையதளம் தொடங்க வேண்டியதின் அவசியம்!
by pba Sat Sep 27, 2014 12:58 am
» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:47 pm
» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:42 pm
» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
by santhoshpart Wed Aug 27, 2014 4:22 pm
» “சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா!”
by santhoshpart Wed Aug 13, 2014 3:54 pm
» Daily Rs.500/- and Above
by K.MARIAPPAN Wed Jul 30, 2014 12:01 pm
» http://www.neobux.com/?r=narasimmant
by Navaneethakrishnan Wed Jul 02, 2014 3:41 pm
» வணக்கம் என் பெயர் வேணு
by A.Venu Fri Jun 27, 2014 10:10 am
» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?
by sathikdm Wed Jun 18, 2014 3:24 pm
» தமிழ் மொழி மூல கல்வி இணையதளம்
by afdhaal Wed May 28, 2014 9:22 pm
» வருக. வருக. வணக்கம்.
by மகி Mon May 12, 2014 3:55 pm
» அறிமுகம் -விநாயகா செந்தில்.
by மகி Mon May 12, 2014 3:53 pm
» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....!
by vinayagasenthil Sat May 10, 2014 9:04 pm
டில்லி, இந்தூர், கான்பூர் அடுத்த இலக்கு : புனே பயங்கரத்தில் பாக்., ஆதரவு சக்திகள்
Page 1 of 1
டில்லி, இந்தூர், கான்பூர் அடுத்த இலக்கு : புனே பயங்கரத்தில் பாக்., ஆதரவு சக்திகள்
டில்லி, இந்தூர், கான்பூர் அடுத்த இலக்கு : புனே பயங்கரத்தில் பாக்., ஆதரவு சக்திகள்
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.]
புதுடில்லி
:"புனேயை தொடர்ந்து டில்லி, இந்தூர் மற்றும் கான்பூர் நகரங்களில்
பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம்' என, உளவு நிறுவனங்கள்
எச்சரித்துள்ளதால், அந்நகரங்களில் உஷார் நிலை
அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும், நாடு முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள்
மேம்படுத்தப்பட்டுள்ளன. அதே நேரத்தில், புனே குண்டு வெடிப்பில்,
பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத அமைப்புகளுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற
திடுக்கிடும் தகவலும் வெளியாகியுள்ளது.
மகாராஷ்டிர
மாநிலம் புனே, கோரேகான் பார்க் அருகேயுள்ள ஜெர்மன் பேக்கரியில் நேற்று
முன்தினம் நிகழ்ந்த குண்டுவெடிப்பில், ஒன்பது பேர் பலியாயினர்; 57 பேர்
காயம் அடைந்தனர். குண்டு வெடிப்பு நடந்த இடத்தை, மத்திய உள்துறை அமைச்சர்
சிதம்பரம் பார்வையிட்டார். இதன்பின் டில்லி திரும்பி அவர், உயர்மட்டக்
கூட்டம் ஒன்றை நடத்தினார்.தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர மேனன்,
உள்துறை செயலர் ஜி.கே.பிள்ளை, ஐ.பி., மற்றும் "ரா' அமைப்பின் தலைவர்களான
ராஜிவ் மாத்தூர், வர்மா மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். இந்தக்
கூட்டத்தில், நாட்டின் பாதுகாப்பு நிலவரங்கள் பற்றி விவாதிக்கப்பட்டது.
பின், பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்த சிதம்பரம், அவரிடம் புனே குண்டு
வெடிப்பால் எழுந்துள்ள, பாதுகாப்பு நிலவரங்கள் பற்றி விவரித்தார்.
இதன் பின், மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் கூறியதாவது:
பயங்கரவாதிகள் இப்போது புனேயில் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதைத்
தொடர்ந்து, டில்லி, கான்பூர் மற்றும் இந்தூரில் உள்ள பொது இடங்களில்
பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என, உளவு நிறுவனங்களுக்கு தகவல்
கிடைத்துள்ளது. இந்த விவரத்தை சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்கு தெரிவித்து
தேவையான நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளோம்.இதுமட்டுமின்றி,
அனைத்து மாநிலங்களுக்கும் ஒரு பொதுவான எச்சரிக்கை குறிப்பு
அனுப்பப்பட்டுள்ளது. அதில், ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள் மற்றும் இதர
பொது இடங்களிலும், மக்கள் கூடும் இடங்களிலும் தேவையான பாதுகாப்பு
நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என, கேட்டுக் கொண்டுள்ளோம்.புனே குண்டு
வெடிப்பில் ஆர்.டி.எக்ஸ்., வெடிமருந்தை பயன்படுத்தியிருக்கலாம்.
இருந்தாலும்,
இதுபற்றி தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். புனே குண்டு
வெடிப்பு பற்றி மகாராஷ்டிர பயங்கரவாத எதிர்ப்புப் படையினர் விசாரணையை
துவக்கியுள்ளனர். அவர்கள் பல்வேறு கோணங்களில் விசாரிப்பர். பாக்., ஆதரவு
பயங்கரவாத அமைப்புகளுக்கு தொடர்பு இருக்கலாம் என்பதையும் மறுப்பதற்கு
இல்லை.சந்தேகத்திற்குரிய நபர்கள் மற்றும் அமைப்புகள் குறித்த அனைத்துவித
விசாரணைகளும் மேற்கொள்ளப்படும். புனேயில் குண்டு வெடிப்பு நிகழ்ந்த
இடத்திற்கு எதிரேயுள்ள ஐந்து நட்சத்திர ஓட்டலின் கண்காணிப்பு கேமராவில்
பதிவான காட்சிகளையும் பெற்று புலனாய்வு அதிகாரிகள் ஆய்வு செய்து
வருகின்றனர். ஜெர்மன் பேக்கரியில் கண்காணிப்பு கேமரா எதுவும் கிடையாது.
ஜமாயத்
- உல்-தாவா அமைப்பின் துணை தலைவர் அப்துல் ரகுமான் மாக்கி
சமீபத்தில்,பாக்., ஆதரவு காஷ்மீரில் உள்ள முரதாபாத்தில், அறிக்கை ஒன்றை
வெளியிட்டார். அதில், இந்தியாவில் மேலும் பல தாக்குதல்கள் நடத்தப்படும்
என, தெரிவித்திருந்தார். எனவே, அந்த அமைப்பிற்கு புனே குண்டு வெடிப்பில்
தொடர்பு உண்டா என்ற கோணத்திலும் விசாரிக்கப்படும். இந்திய முஜாகிதீன்
தொடர்பு இருக்கும் என்ற அடிப்படையிலும் விசாரணை நடக்கிறது.இவ்வாறு உள்துறை
அமைச்சக அதிகாரிகள் கூறினர்.
நேற்று மாலையில், புனேயின் போலீஸ் கமிஷனர் சத்யபால் கூறுகையில்,
" இந்த குண்டு வெடிப்பில் ஆர்.டி.எக்ஸ்., பயன்படுத்தப்பட்டதா என்பது
விரைவில் தெரியவரும். யாருடைய கைவரிசையில் இக்குண்டு வெடிப்பு நடந்தது
என்பதையும் ஓரிரு நாளில் விசாரித்து முடிவு செய்யப்படும்' என்றார்.மேலும்
அவர், இறந்தவர்களில் ஒருவர் ஈரான் நாட்டவர் என்றும் மற்றவர் இத்தாலி
நாட்டவர்' என்றும் குறிப்பிட்டார்.மத்திய அரசின் உஷார் நடவடிக்கையை
தொடர்ந்து, தலைநகர் டில்லியில் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில்
பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது
aarul- தள ஆலோசகர்
- பதிவுகள் : 421
புள்ளிகள் : 793
Reputation : 12
சேர்ந்தது : 20/12/2009
வசிப்பிடம் : mani electronics,erode, tamilnadu,india
Similar topics
» அதிபர் தேர்தலில் பொன்சேகாவுக்கு ஆதரவு : ரணில் விக்ரமசிங்கே அறிவிப்பு!
» கான்பூர் டெஸ்ட்: 417 ரன்கள் குவித்து இந்தியா சாதனை!
» சுவிஸ் வங்கிகளின் ரகசியம்: பேணிக்காக்க மக்கள் ஆதரவு
» இந்தியா - பாக். விவகாரத்தில் தலையிடவில்லை : சீனா!
» மத்திய அரசுக்கு ஆதரவு வாபஸ்: லாலு, முலாயம் அறிவிப்பு
» கான்பூர் டெஸ்ட்: 417 ரன்கள் குவித்து இந்தியா சாதனை!
» சுவிஸ் வங்கிகளின் ரகசியம்: பேணிக்காக்க மக்கள் ஆதரவு
» இந்தியா - பாக். விவகாரத்தில் தலையிடவில்லை : சீனா!
» மத்திய அரசுக்கு ஆதரவு வாபஸ்: லாலு, முலாயம் அறிவிப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum