தமிழ் | Tamil | Forum
தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

கூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.

புகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.

Join the forum, it's quick and easy

தமிழ் | Tamil | Forum
தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

கூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.

புகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.
தமிழ் | Tamil | Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வணக்கம் என் பெயர் நாகராசன்.இரா
by rajan_1972 Fri Apr 10, 2020 7:20 pm

» சிறந்த பொழுதுபோக்கு இணையதளம்!
by pba Sat Jul 02, 2016 8:11 pm

» ஏற்றுமதி உரிமம் பெறும் விண்ணப்பம்
by tamilnews Tue Mar 24, 2015 8:00 pm

» மொபைல், டிடிஎச் ரீசார்ஜ் செய்யப் போறீங்களா? இந்த சலுகைகளைப் பாருங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:41 am

» மொபைல் ரீசார்ஜ் செய்து ஷாப்பிங் கூப்பன் இலவசமாக பெறுங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:38 am

» மெமரி கார்டு வாங்கப் போறீங்களா? 74% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:36 am

» அமேசானில் பெண்களுக்கான ஆடைகள் 70% வரை தள்ளுபடி !
by dsytamil Wed Jan 14, 2015 1:34 am

» அமேசானில் ஆண்களுக்கான ஆடைகள் 60% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:31 am

» லெனோவா டேப்ளட் 43% சலுகை விலையில் ரூ. 5949 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:28 am

» ப்ளிப்கார்ட் தளத்தில் சிறுவர்களுக்கான ஆடைகள் 70% வரை + 30% கூடுதல் தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:14 am

» அமேசான் தளத்தில் 50% தள்ளுபடி விலையில் மொபைல்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:13 am

» ரூ. 7499 மதிப்புள்ள மைக்ரோமேக்ஸ் ஏ1 ஆன்ட்ராய்டு மொபைல் இப்போது ரூ. 5499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:11 am

» ரூ. 19999 மதிப்புள்ள நோக்கியா லூமியா 625 மொபைல் ரூ. 7499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:10 am

» ப்ராண்டட் காலணிகளுக்கு 70% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:08 am

» ஆன்லைன் ஷாப்பிங்கில் ப்ரிண்டர்களுக்கு 33% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:06 am

» ஆன்லைனில் பொருள் வாங்கப் போறீங்களா? 70% வரை பணத்தை சேமியுங்கள்!
by dsytamil Tue Jan 13, 2015 12:30 am

» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...!
by sathikdm Sun Oct 19, 2014 4:45 pm

» சிறுதொழில் செய்பவர்கள் இணையதளம் தொடங்க வேண்டியதின் அவசியம்!
by pba Sat Sep 27, 2014 12:58 am

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:47 pm

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:42 pm

» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
by santhoshpart Wed Aug 27, 2014 4:22 pm

» “சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா!”
by santhoshpart Wed Aug 13, 2014 3:54 pm

» Daily Rs.500/- and Above
by K.MARIAPPAN Wed Jul 30, 2014 12:01 pm

» http://www.neobux.com/?r=narasimmant
by Navaneethakrishnan Wed Jul 02, 2014 3:41 pm

» வணக்கம் என் பெயர் வேணு
by A.Venu Fri Jun 27, 2014 10:10 am

» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?
by sathikdm Wed Jun 18, 2014 3:24 pm

» தமிழ் மொழி மூல கல்வி இணையதளம்
by afdhaal Wed May 28, 2014 9:22 pm

» வருக. வருக. வணக்கம்.
by மகி Mon May 12, 2014 3:55 pm

» அறிமுகம் -விநாயகா செந்தில்.
by மகி Mon May 12, 2014 3:53 pm

» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....!
by vinayagasenthil Sat May 10, 2014 9:04 pm

பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

வணக்கம் இந்திய திராவிட தமிழர்களே

Go down

வணக்கம் இந்திய திராவிட தமிழர்களே Empty வணக்கம் இந்திய திராவிட தமிழர்களே

Post by aarul Mon Dec 28, 2009 10:15 am


வணக்கம் இந்திய திராவிட தமிழர்களே,





[You must be registered and logged in to see this image.]
வணக்கம் இந்திய திராவிட தமிழர்களே,

இந்த
கட்டுரையின் நோக்கம் நாம் எவ்வாறாக இந்திய தேசியத்தால் ஏமாற்றப்பட்டு
கொண்டு இருக்கிறோம் என்பதே.என்னிடம் வாதிடும் பல தோழர்கள் இந்திய
தேசியத்தை முன்னிறுத்தியே வாதிடுகிறார்கள்.உங்கள் தேசிய பற்று நல்லாத்தான்
இருக்கு .உங்கள் இந்திய பற்றுக்கு நான் கடைசி வரியில் பதில் அளித்து
உள்ளேன்.யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கம் அல்ல.சிந்திக்க
வேண்டுகிறேன்.

நாம் பல வகையில் இந்திய தேசியத்தால் ஏமாற்ற பட்டாலும் முல்லை பெரியாறு விசயத்தில் எவ்வாறாக ஏமாற்றபடுகிறோம் என்பதை இங்கே காணலாம்,


யார் இந்த முல்லை பெரியாறு ?

மஹாராஷ்ட்ரா
மற்றும் குஜராத்திற்கு இடையே தொடங்கி இந்தியாவின் தென் எல்லையான
கன்னியாகுமரி வரை நீண்டுள்ளது மேற்கு தொடர்ச்சி மலை.மேற்கிலிருந்து வரும்
அரபிக்கடலின் குளிர் காற்றை தடுத்து, அரபிக்கடலை ஒட்டிய மாநிலங்களில் மழை
பொழியச்செய்து பல ஆறுகளை ரிப்பன் வெட்டாமல் தொடங்கி வைக்கும் பெருமை
மேற்கு தொடர்ச்சி மலையையே சாரும். தனக்கு மேற்கே இருக்கும் பகுதிகளை
தண்ணீர் பற்றாக்குறை இன்றி செழிப்பாக்கியும், கிழக்கே இருக்கும் பகுதிகளை
தக்காண பீட பூமியாக்கி வறட்சியில் வைத்திருப்பதும் இம்மலைத்தொடரே என்றும்
சொல்லலாம். மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி அரபிக்கடலில் கலக்கும்
பெரியாறு,அதாவது தமிழக எல்லையில் உருவாகி கேரளாவுக்குள் நுழைந்து
மறுபடியும் தமிழகத்தின் வழியாக அரபிக்கடலில் கலக்கும் ஆறு தான் இந்த
பெரியாறு.

கேரளாவின் ஜிவ நதி,

* கேரளாவில் 244 கீ.மீ நீளமுள்ள மிகப்பெரிய வற்றாத ஆறாகவும்,

* கேரள மின் தேவையை அதிக பட்சம் பூர்த்தி செய்வதாகவும்,

* கேரளத்தின் பெரிய நகரங்களுக்கான பாசன மற்றும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதாகவும்,

* கேரளத்தின் மிகப்பெரிய இடுக்கி அணை கட்டப்பட்டுள்ளதும் பெரியாற்றின் குறுக்கேயே.

* இதனாலேயே பெரியாறு கேரளத்தின் ஜீவநதி என்று சொல்லப்படுகிறது.


பெரியாற்று உற்பத்தியாகும் இடத்திற்கும் இடுக்கி அணைக்கும் இடையே தேக்கடியில் முல்லைப் பெரியாறு அணை கட்டப்பட்டுள்ளது.

தென் தமிழகத்தின் உயிர் நாடி,

* வைகை அணையின் ஒரே நீர் ஆதாரம்

* மதுரை, இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் பல லட்சம் ஏக்கர் விவாசய நிலம் இதை நம்பி

* 140 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட பெரியாறு மின் உற்பத்தி நிலையம் இதை நம்பியே. .

* தென் தமிழகத்தின் குடிநீர் தேவையும் இதை நம்பியே குறிப்பாக தேனி,மதுரை,இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்கள்.



வற்றாத
உயிர் ஆறான பெரியாற்றின் தண்ணீர் வீணாக அரபிக்கடலில் கலப்பதை தடுக்க
இடையில் ஒரு அணை கட்டவேண்டும் என்று திருவாங்கூர் மன்னரிடம் 1862 ல்
பிரிட்டிஷ் பிரதிநிதியான மதராஸ் ஆளுனர் கோரிக்கையை முன்வைக்கிறார்.
ஆங்கிலேயரின் கோரிக்கையை மறுக்க முடியாமல் காலந்தாழ்த்தி வந்த
திருவாங்கூர் மன்னருக்கு ஆங்கிலேயரால் நெருக்கடி தரப்படவே 1886 அக்டோபர்
21 ல் அணை கட்டும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறார். ஒப்பந்தத்தின் சாரம்,


ஒப்பந்த
தேதியில் இருந்து 999 ஆண்டுகள் வரை ஒப்பந்தம் செல்லுபடியாகும். அணையில்
தேக்கப்படும் நீரில் 104 அடிக்கு மேலுள்ள நீர் சுரங்க வழியின் மூலம்
மதராஸ் கொண்டு வர வேண்டும். அணை கட்டப்படுவதால் மூழ்கடிக்கப்படும் 8000
ஏக்கர் நிலத்திற்கு ஒரு ஏக்கருக்கு 5 வீதம் 40,000 ரூபாய் வருட வாடகையாக
சென்னை அரசாங்கம், திருவாங்கூர் மன்னருக்கு கொடுக்கவேண்டும். அதாவது அணை
அமைந்திருப்பது கேரளாவில் என்றாலும் (999 வருட வாடகை ஒப்பந்த
அடிப்படையில்) தமிழக அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது.

60
ஆண்டுகள் இதே ஒப்பந்தம் நடந்து கொண்டிருக்கையில் தமிழகத்தின் மின்
பற்றாக்குறையை சரி செய்ய, பெரியாறு தமிழகத்தில் நுழையும் இடத்தில் ஒரு மின
உற்பத்தி நிலையம் கட்டுவதற்காக 1970 ல் பழைய ஒப்பந்தத்தில் மாற்றம்
செய்யப்படுகிறது. அணை கட்டப்பட்டதால் அந்தப்பகுதியில் மூழ்கடிக்கப்பட்ட
நிலத்திற்கு ஏக்கருக்கு ரூபாய் 30 வீதம் 8000 ஏக்கருக்கு 2,40,000 ரூபாய்
வருட வாடகையாக தமிழக அரசு, கேரள அரசிற்கு கொடுக்க வேண்டும். மட்டுமின்றி
அந்தப்பகுதி மீன் படி உரிமையும் கேரள அரசிடம் செல்கிறது.

இந்நிலையில்
1979 ல் மலையாள மனோரமா என்ற கேரள இதழ், 'முல்லைப் பெரியாறு அணை உடையும்
அபாயத்தில்' இருப்பதாக பரபரப்பு செய்தியை வெளியிடுகிறது. அதைத்தொடர்ந்து
கேரள அரசு மற்றும் மத்திய நீர் வளத்துறையின் பரிந்துரையின் பேரில் தமிழக
அரசு அணையை மேலும் வலுப்படுத்த முன்வருகிறது. அதுவரை
தேக்கப்பட்டுக்கொண்டிருந்த நீர் 154 அடியிலிருந்து 136 அடியாக
குறைக்கப்படுகிறது. அணையில் மராமத்து வேலைகள் செய்யப்பட்டு
வலுப்படுத்தப்பட்ட பிறகு நீர் மட்டத்தை உயர்த்த கேரள அரசு மறுத்துவிட்டது,
இன்று வரை மறுத்து வருகிறது.

என்ன தான் பிரச்சனை?

அணையில்
இருந்து வரும் நீர் முல்லை ஆறு வழியாக தேனி மாவட்டத்தின் முக்கிய
நகரங்களுக்கு பாசன மற்றும் குடிநீர் தேவைகளை நிறைவு செய்து வைகை ஆற்றில்
கலக்கிறது. அதுவே வைகை அணையின் நீர் ஆதாரமாகவும் இருக்கிறது. அதனாலேயே
மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்களின் பாசன மற்றும்
மதுரை மாநகராட்சியின் குடிநீர் தேவையும் நிறைவடைகிறது. இவற்றிக்கு
தமிழ்நாட்டிற்கு குறைந்தபட்ச தேவை 84 மில்லியன் கனமீட்டர் தண்ணீர். இந்த
குறைந்தபட்ச தண்ணீர் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டுமாயின், முல்லைப்
பெரியாறு அணையில் 142 அடிவரை தண்ணீர் தேக்கப்பட வேண்டும். தற்போது
இருக்கும் 136 அடியில் போதுமான தண்ணீர் கிடைக்காமல் மதுரை, இராமநாதபுரம்
மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் பல ஏக்கர் நிலம் தரிசாகிக் கிடக்கிறது. பல
விவசாயக் குடும்பங்களின் தற்கொலைக்கும் பட்டினிச் சாவுக்கும் தண்ணீர்
பற்றாக்குறையே காரணம்.

அணையின் நீர் மட்டம் 152 அடியிலிருந்து 136
அடியாக குறைக்கப்பட்டதால், நீரின் கொள்ளளவு 10.4 ல் இருந்து 6.4 டி.எம்.சி
யாக குறைந்துள்ளது. அதனால் 140 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட பெரியாறு
மின் உற்பத்தி நிலையத்தில் கணிசமான அளவு மின் உற்பத்தி குறைந்துள்ளதும்
தமிழக அரசிற்கு நஷ்டமே. அது மட்டுமின்றி, அணையிலிருந்து வழிந்தோடும்
தண்ணீர் மூலம் அடுத்த அணையான இடுக்கியில் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு
தமிழகத்திற்கே விற்கப்படுவது கொடுமை. நமக்கு தரவேண்டிய தண்ணீரைக் கொண்டு
மின்சாரம் தயாரித்து அதை நமக்கே மீண்டும் விற்பனை செய்கிறார்கள்.

152
அடியாக இருந்த போது மூழ்கியதாக சொல்லப்பட்ட 8000 ஏக்கர் நிலம், தற்போது
136 அடியாக நீர் மட்டம் குறைக்கப்பட்டதால் மூழ்கிய நிலத்தில் பகுதி
மீட்கப்பட்டுவிட்டது. மீதி நிலத்தை கேரள அரசும் கேரள மக்களும்
பயன்படுத்திவருகின்றனர். ஆனாலும் தமிழக அரசு 8000 ஏக்கர் நலத்திற்கான
வாடகையை செலுத்திவருகிறது. அணையின் நீர் மட்டம் உயர்த்தப்பட்டால் அந்த
ஆக்கிரமிப்பு நிலங்களை காலிசெய்ய வேண்டிவரும் என்ற அச்சமும் உள் அரசியலும்
இப்பிரச்சனையில் ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது.இந்த செய்திகளை நான்
நக்கீரன் இணையதில் இருந்து சேகரித்தது .

உச்சநீதி மன்ற தீர்ப்பையே மதிக்காத கேரள அரசு,

152
அடிக்கு நீர் தேக்கப்பட வேண்டும் என்று தமிழக அரசு சென்னை உயர்நீதி
மன்றத்திலும், 136 மேல் உயர்த்தக்கூடாது என்று கேரள அரசு கேரள உயர் நீதி
மன்றத்திலும் வழக்குத்தொடங்கியது. அவ்வழக்கு உச்சநீதி மன்றத்தில்
விசாரிக்கப்பட்டு 2006 பிப்ரவரியில் இருமாநிலத்திற்கும் பொதுவாக 142
அடியாக நீர்மட்டத்தை வைத்துக்கொள்ள ஆணை பிறப்பிக்கப்படுகிறது. உச்சநீதி
மன்றத்தின் ஆணையை சற்றும் மதிக்காத கேரள அரசு 136 அடியிலிருந்து நீர்
மட்டத்தை உயர்த்தாததோடு மட்டுமின்றி, அணை அபாயகட்டத்தில்
இருப்பதாகச்சொல்லி புதிய அணை கட்டும் முயற்சியில் இறங்கியுள்ளது.
பெரியாற்றில் புதிய அணை கட்டப்பட்டுவிட்டால் மேலே குறிப்பிட்டுள்ள தமிழக
மாவட்டங்கள் குடிக்கவும் தண்ணீர் இன்றி பஞ்சத்தால் பாலைவனமாகிவிடும்.

கேரளாவின் நாடகமும் மத்திய அரசின் சூழ்ச்சியும்,

கடந்தவாரம்
கேரள அரசு வெளியிட்ட ஒரு அறிக்கை, ‘முல்லைப் பெரியாறு அணை உடைந்தால் 40
லட்சம் பிணங்களை அரபிக் கடலில் தேடவேண்டியிருக்கும்’ என்று சொல்கிறது.
முல்லை பெரியாறு அணையின் தண்ணீர் முழுவதையும் இடுக்கி அணையாலும் தாங்க
முடியாது என்கிறது கேரள அரசு. இதற்கிடையே புதிய அணை கட்டுவதற்கான ஆய்வுகளை
மேற்கொள்ள மத்தியஅரசின் ஒப்புதலும் கேரள அரசிற்கு கிடைத்துள்ளது
குறிப்பிடத்தக்கது.

மலையாளிக்கு நம்மளால ஆப்பு வைக்க முடியாத என்ன?

* பெரியாறு அணையின் கடைசி தண்ணீர் குடிக்கப்படும் இராமநாதபுரம் கடலோர
பகுதிகளில் பிடிக்கப்படும் மீன்கள் டன் கணக்கில் கேளராவுக்கு சென்று
ஏற்றுமதியாகிறது.

* ஒட்டஞ்சத்திரத்தில் இருந்து காய்கனிகள்
கேரளாவிற்கு செல்கிறது. (இவ்வளவு நீர் வளம் இருந்தும் கேரளாவில் விவசாயம்
சொல்லிக்கொள்ளும் படியாக இல்லை என்பதை நினைவில் கொள்க)

* வீடு கட்ட மணலும் கூலித்தொழிலாளர்களும் தமிழ்நாட்டிலிருந்தே செல்வதும் கவனத்தில் ஏற்கவேண்டும்.

* தமிழகத்தில் இருந்துதான் கேரளாவிற்கு சுற்றுலா பயணிகள் அதிகம் செல்கின்றனர்.

* கேரளாவுக்கு தேவையான அனைத்து அத்தியாவசிய பொருட்கள் தமிழகத்தில்
இருந்துதான் செல்கிறது. (பால்,அரிசி,பழங்கள்,மீன்கள்,காய்கறிகள் முதலியன்)

* அட இவ்வளவு ஏன்.. நல்ல கல்விக்கு கேரளமக்கள் தமிழ்நாட்டையே நம்பி இருக்கிறார்கள்.


நாம் நக்கி பிழைக்கும் நாய்களே அன்றி மனிதர்கள் அல்ல,

20
மந்திரிகளை வைத்து கேரளவால் சாதிக்க முடியும் பொழுது 39 மந்திரிகளை வைத்து
இதுவரை நாம் தமிழகத்துக்கு ஒன்றையும் புடுங்க முடியவில்லையே ஏன்?
காவிரியையும், பாலரையும் இழந்ததால் தான் 55 % விவசாயத்தை இழந்து
நிற்கிறோம்.நமது
பாதி விவசாயம் வானம பார்த்த பூமியாக மாறி போய் உள்ளது, முல்லை பெரியாறும்
கையை விட்டு போனால் நாம் நாளைய சந்ததிக்கு எதை கொடுக்க போகிறோம்,
அரசியல்வா(வி)யாதிகளின் சித்து விளையாட்டில் இதுவும் ஒரு அங்கம்.
தமிழர்கள் நம்மிடம் ஒற்றுமை இல்லை. அண்டை மாநிலங்களில், பொதுப்
பிரச்சனைக்கு ஒன்று சேருவது மாதிரி, தமிழ் நாட்டில் சேருவதில்லை. அப்புறம்
எங்க இருந்து உருப்புடுவது.சுயநல திராவிட கட்சிகள் மட்டுமின்றி பொதுவுடைமை
பேசும் கம்யூனிஸ்டுகளும் இந்த விஷயத்தில் நமக்கு ஆதரவாக இல்லை. பொலீட்
பீரோவில் கேரளாவிற்கு ஆதரவாகத்தான் பேசியிருக்கிறார்கள்.இன்னும் எத்தனை
காலத்துக்கு இந்திய தேசியத்தையே நாம பேசி ஏமாற போகிறோம்,

இப்பொழுது சொல் நீ இந்தியனா,திராவிடனா,தமிழனா !

நான் இந்தியன் என்றால் அந்த இந்தியனே என் இனத்தையே அழிக்கிறான் இந்தியன் ,

நான் திராவிடன் என்றால் அண்டை மாநில திராவிடனே எனக்கு தண்ணிர் தர மறுக்கிறான்? (நம் ஈழ தமிழர் அழிய திராவிட மலையாளிகள் தூது போனது).

அப்படி
என்றால் நான் யார்? தமிழா ! திராவிட அரசியலையும் ஆரிய பார்ப்பானையும்
நம்பி இன்னும் எத்தனை காலம் நாயினும் கீழாக சாக போகிறோம்,தமிழனாக
ஒன்றுபட்டால் எல்லாமே கிடைக்கும்,புரிந்து கொள்ளாத வரை நாம் நக்கி
பிழைக்கும் நாய்களே அன்றி மனிதர்கள் அல்ல.
....பகலவன்....
aarul
aarul
தள ஆலோசகர்
தள ஆலோசகர்

பதிவுகள் : 421
புள்ளிகள் : 793
Reputation : 12
சேர்ந்தது : 20/12/2009
வசிப்பிடம் : mani electronics,erode, tamilnadu,india

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum