Latest topics
» வணக்கம் என் பெயர் நாகராசன்.இராby rajan_1972 Fri Apr 10, 2020 7:20 pm
» சிறந்த பொழுதுபோக்கு இணையதளம்!
by pba Sat Jul 02, 2016 8:11 pm
» ஏற்றுமதி உரிமம் பெறும் விண்ணப்பம்
by tamilnews Tue Mar 24, 2015 8:00 pm
» மொபைல், டிடிஎச் ரீசார்ஜ் செய்யப் போறீங்களா? இந்த சலுகைகளைப் பாருங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:41 am
» மொபைல் ரீசார்ஜ் செய்து ஷாப்பிங் கூப்பன் இலவசமாக பெறுங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:38 am
» மெமரி கார்டு வாங்கப் போறீங்களா? 74% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:36 am
» அமேசானில் பெண்களுக்கான ஆடைகள் 70% வரை தள்ளுபடி !
by dsytamil Wed Jan 14, 2015 1:34 am
» அமேசானில் ஆண்களுக்கான ஆடைகள் 60% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:31 am
» லெனோவா டேப்ளட் 43% சலுகை விலையில் ரூ. 5949 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:28 am
» ப்ளிப்கார்ட் தளத்தில் சிறுவர்களுக்கான ஆடைகள் 70% வரை + 30% கூடுதல் தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:14 am
» அமேசான் தளத்தில் 50% தள்ளுபடி விலையில் மொபைல்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:13 am
» ரூ. 7499 மதிப்புள்ள மைக்ரோமேக்ஸ் ஏ1 ஆன்ட்ராய்டு மொபைல் இப்போது ரூ. 5499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:11 am
» ரூ. 19999 மதிப்புள்ள நோக்கியா லூமியா 625 மொபைல் ரூ. 7499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:10 am
» ப்ராண்டட் காலணிகளுக்கு 70% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:08 am
» ஆன்லைன் ஷாப்பிங்கில் ப்ரிண்டர்களுக்கு 33% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:06 am
» ஆன்லைனில் பொருள் வாங்கப் போறீங்களா? 70% வரை பணத்தை சேமியுங்கள்!
by dsytamil Tue Jan 13, 2015 12:30 am
» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...!
by sathikdm Sun Oct 19, 2014 4:45 pm
» சிறுதொழில் செய்பவர்கள் இணையதளம் தொடங்க வேண்டியதின் அவசியம்!
by pba Sat Sep 27, 2014 12:58 am
» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:47 pm
» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:42 pm
» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
by santhoshpart Wed Aug 27, 2014 4:22 pm
» “சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா!”
by santhoshpart Wed Aug 13, 2014 3:54 pm
» Daily Rs.500/- and Above
by K.MARIAPPAN Wed Jul 30, 2014 12:01 pm
» http://www.neobux.com/?r=narasimmant
by Navaneethakrishnan Wed Jul 02, 2014 3:41 pm
» வணக்கம் என் பெயர் வேணு
by A.Venu Fri Jun 27, 2014 10:10 am
» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?
by sathikdm Wed Jun 18, 2014 3:24 pm
» தமிழ் மொழி மூல கல்வி இணையதளம்
by afdhaal Wed May 28, 2014 9:22 pm
» வருக. வருக. வணக்கம்.
by மகி Mon May 12, 2014 3:55 pm
» அறிமுகம் -விநாயகா செந்தில்.
by மகி Mon May 12, 2014 3:53 pm
» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....!
by vinayagasenthil Sat May 10, 2014 9:04 pm
மரணங்களை மூடி மறைப்பது ஏன்?
Page 1 of 1
மரணங்களை மூடி மறைப்பது ஏன்?
மரணங்களை மூடி மறைப்பது ஏன்? | | |
சில மருத்துவமனைகளில் சாதனைகள் என்று சொல்லி செய்யப்படும் சில அறுவை சிகிச்சை முடிந்ததும் ஆர்ப்பாட்டமாக விளம்பரப்படுத்தும் மருத்துவமனை நிர்வாகம், சிகிச்சை பெற்ற அந்த நபர் ஓரிரு நாட்களில் மரணமடைந்துவிட்டால் அந்த மரணத்தை மூடி மறைப்பது ஏன் என்பது புரியவில்லை. இந்தியாவிலே முதல் முறையாக சென்னை அரசு மருத்துவமனையில் இதய வால்வு அடைப்பு நீக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்ட இளம் பெண் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இளம் வயதிலேயே இதய வால்வுப் பகுதியில் 90 விழுக்காடு அடைப்பு ஏற்பட்டு, சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண்ணுக்கு கடந்த 20ஆம் தேதி இதய அறுவை சிகிச்சை நடைபெற்றது. அறுவை சிகிச்சை நடந்து முடிந்த 2 நாட்கள் நலமாக இருந்த அந்த பெண், 25ஆம் தேதி மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். இது குறித்து சென்னை அரசு மருத்துவமனை எந்த அறிவிப்பையும், எந்த தகவலையும் வெளியிடாமல் உடனடியாக பெண்ணின் உடலை உறவினர்களிடம் கொடுத்து அனுப்பியுள்ளது. சென்னை பெருங்குடியை சேர்ந்த ஆனந்தராஜ் - பத்மினி தம்பதிகளின் இளைய மகள் லாவண்யாவிற்கு கடந்த ஜூன் மாதம் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. திருமணத்திற்கு தயாராகி வரும் நேரத்தில் அவருக்கு திடீரென்று மூச்சு திணறல், மயக்கம் போன்ற பிரச்சினை ஏற்பட தொடங்கியது. இதை தொடர்ந்து அவரை அவரது பெற்றோர் சென்னை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு இருதயத்திற்கு ரத்தத்தை கொண்டு செல்லும் வால்வில் 90 விழுக்காடு அடைப்பு ஏற்பட்டு இருப்பதாகவும், உடனடியாக அறுவை சிகிச்சை செய்து குணப்படுத்த வேண்டும் என்றும் மருத்துவர்கள் கூறினர். இதை தொடர்ந்து அவருக்கு சென்னை அரசு மருத்துவமனை இருதய பிரிவு துறை தலைவர் மருத்துவர் விஸ்வகுமார் தலைமையிலான மருத்துவர் குழுவினர் கடந்த 20-ந் தேதி இதய அறுவை சிகிச்சை செய்தனர். இதய அறுவை சிகிச்சையில் மிகவும் கடினமாக கருதப்படும் ரத்த வால்வு அடைப்பை நீக்கியது இந்தியாவிலே முதல் முறை என்றும், இந்த அறுவை சிகிச்சைக்கு பிறகு அந்த பெண் நலமாக இருப்பதாகவும், இனி அவருக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்றும் மருத்துவர்கள் அறிவித்தனர். ஆனால் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட 4வது நாட்களிலேயே லாவண்யாவின் உடல்நிலை மீண்டும் மோசமாகியது. சிகிச்சை பலனின்றி அவர், 25-ந் தேதி உயிர் இழந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த மருத்துவர்கள், அவரது உடலை உறவினர்களிடம் கொடுத்து உடனடியாக எடுத்துச் செல்லும்படி கூறியுள்ளனர். இது குறித்த எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை. இது மருத்துவ உலகிற்கே ஒரு இழிவாகத்தான் அமையும். அறுவை சிகிச்சையின் போது உயிரிழப்புகள் என்பது தவிர்க்க முடியாததுதான். ஆனால், அதனை மருத்துவமனை நிர்வாகம் எப்படி எடுத்துக் கொண்டிருக்க வேண்டும், அந்த பெண்ணின் உயிரிழப்புக்குக் காரணம் என்ன? அறுவை சிகிச்சையில் குறைபாடா? அல்லது அறுவை சிகிச்சையைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டிய சிகிச்சை முறைகளில் ஏதேனும் குறைபாடா என்பதை கண்டறிந்து அதனை நிவர்த்தி செய்ய முனைப்புக் காட்டியிருக்க வேண்டும். அதனை விடுத்து, இறப்பை மறைக்கும் முயற்சியில் இரங்கியுள்ளது அவர்கள் மீதான சந்தேகத்தைக் கிளப்புகிறது. இதுபோன்ற விஷயங்கள் அரசு மருத்துவமனைகளில் மட்டும் அல்ல தனியார் மருத்துவமனைகளிலும்தான் நடக்கின்றன. அறுவை சிகிச்சை முடிந்தவுடன், சாதனை படைத்துவிட்டோம் என்று படத்திற்கு போஸ் கொடுக்கும் மருத்துவர்கள், அந்த நபர் இரண்டொரு நாளில் உயிரிழந்துவிட்டால் அது பறறி நியூஸ் கொடுக்க மறந்தவிடுகிறார்கள். தனியார் மருத்துவமனை ஒன்றில், உடல் பருமனான ஒருவருக்கு, அவரது இரைப்பையை வெட்டி சிறியதாக்கி அறுவை சிகிச்சை நடைபெற்றது.. இதுவும் இந்தியாவிலேயே முதல் முறை என்று மருத்துவக் குழு சாதனைப் பட்டியல் வெளியிட்டது. ஆனால் அறுவை சிகிச்சை செய்து கொண்ட அந்த நபர், ஒரு வாரத்திலேயே மரணமடைந்துவிட்டார். அந்த செய்தியை ஏதோ ஒரு நாளிதழில் ஒரு மூலையில் கட்டம் கட்டி போட்டிருந்தார்கள். இது தவறான வழிகாட்டலாகும். மருத்துவர்கள் இதுபோன்ற அறுவை சிகிச்சைகளில் ஈடுபடுவதும், அதில் தோல்வி காண்பதும் இயற்கையே. ஆனால் அதனை செயற்கைத் தனமாக மூடி மறைப்பதுதான் பல பின்விளைவுகளை ஏற்படுத்துகிறது. அவர்களை பொதுமக்கள் பார்வையில் குற்றவாளிகளாக்குகிறது. எனவே மருத்துவ சாதனைகள் தொடரட்டும், அதில் ஏற்படும் சில சறுக்கல்களை மூடி மறப்பதால் எந்த பயனும் இல்லை. |
aarul- தள ஆலோசகர்
- பதிவுகள் : 421
புள்ளிகள் : 793
Reputation : 12
சேர்ந்தது : 20/12/2009
வசிப்பிடம் : mani electronics,erode, tamilnadu,india
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum