தமிழ் | Tamil | Forum
தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

கூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.

புகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.

Join the forum, it's quick and easy

தமிழ் | Tamil | Forum
தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

கூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.

புகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.
தமிழ் | Tamil | Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வணக்கம் என் பெயர் நாகராசன்.இரா
by rajan_1972 Fri Apr 10, 2020 7:20 pm

» சிறந்த பொழுதுபோக்கு இணையதளம்!
by pba Sat Jul 02, 2016 8:11 pm

» ஏற்றுமதி உரிமம் பெறும் விண்ணப்பம்
by tamilnews Tue Mar 24, 2015 8:00 pm

» மொபைல், டிடிஎச் ரீசார்ஜ் செய்யப் போறீங்களா? இந்த சலுகைகளைப் பாருங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:41 am

» மொபைல் ரீசார்ஜ் செய்து ஷாப்பிங் கூப்பன் இலவசமாக பெறுங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:38 am

» மெமரி கார்டு வாங்கப் போறீங்களா? 74% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:36 am

» அமேசானில் பெண்களுக்கான ஆடைகள் 70% வரை தள்ளுபடி !
by dsytamil Wed Jan 14, 2015 1:34 am

» அமேசானில் ஆண்களுக்கான ஆடைகள் 60% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:31 am

» லெனோவா டேப்ளட் 43% சலுகை விலையில் ரூ. 5949 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:28 am

» ப்ளிப்கார்ட் தளத்தில் சிறுவர்களுக்கான ஆடைகள் 70% வரை + 30% கூடுதல் தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:14 am

» அமேசான் தளத்தில் 50% தள்ளுபடி விலையில் மொபைல்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:13 am

» ரூ. 7499 மதிப்புள்ள மைக்ரோமேக்ஸ் ஏ1 ஆன்ட்ராய்டு மொபைல் இப்போது ரூ. 5499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:11 am

» ரூ. 19999 மதிப்புள்ள நோக்கியா லூமியா 625 மொபைல் ரூ. 7499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:10 am

» ப்ராண்டட் காலணிகளுக்கு 70% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:08 am

» ஆன்லைன் ஷாப்பிங்கில் ப்ரிண்டர்களுக்கு 33% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:06 am

» ஆன்லைனில் பொருள் வாங்கப் போறீங்களா? 70% வரை பணத்தை சேமியுங்கள்!
by dsytamil Tue Jan 13, 2015 12:30 am

» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...!
by sathikdm Sun Oct 19, 2014 4:45 pm

» சிறுதொழில் செய்பவர்கள் இணையதளம் தொடங்க வேண்டியதின் அவசியம்!
by pba Sat Sep 27, 2014 12:58 am

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:47 pm

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:42 pm

» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
by santhoshpart Wed Aug 27, 2014 4:22 pm

» “சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா!”
by santhoshpart Wed Aug 13, 2014 3:54 pm

» Daily Rs.500/- and Above
by K.MARIAPPAN Wed Jul 30, 2014 12:01 pm

» http://www.neobux.com/?r=narasimmant
by Navaneethakrishnan Wed Jul 02, 2014 3:41 pm

» வணக்கம் என் பெயர் வேணு
by A.Venu Fri Jun 27, 2014 10:10 am

» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?
by sathikdm Wed Jun 18, 2014 3:24 pm

» தமிழ் மொழி மூல கல்வி இணையதளம்
by afdhaal Wed May 28, 2014 9:22 pm

» வருக. வருக. வணக்கம்.
by மகி Mon May 12, 2014 3:55 pm

» அறிமுகம் -விநாயகா செந்தில்.
by மகி Mon May 12, 2014 3:53 pm

» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....!
by vinayagasenthil Sat May 10, 2014 9:04 pm

பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

பயர்பாக்ஸ் பாதுகாப்பு!

Go down

பயர்பாக்ஸ் பாதுகாப்பு! Empty பயர்பாக்ஸ் பாதுகாப்பு!

Post by மகி Tue Oct 13, 2009 4:18 am

இன்டர்நெட் பயன்படுத்துபவர்கள், குறிப்பாக பிளாக்குகள் அமைப்பவர்களிடையே, பயர்பாக்ஸ் பிரவுசர் தொகுப்பு மிக வேகமாக பிரபலமாகி வருகிறது. நம் விருப்பங்களுக்கு ஏற்றபடி அமைத்துக் கொள்ளக் கூடிய வசதி, பயன்படுத்த எளிமையான இன்டர்பேஸ், நம்பிக்கை தரும் இயக்க தன்மை ஆகிய இதன் சிறப்புகளே, பலரை இன்டர்நெட் எக்ஸ்புளோரரை விட்டு இதனைப் பயன்படுத்தத் தூண்டுகின்றன. அனைத்து இன்டர்நெட் பிரவுசர்களும் கட்டாயம் பாதுகாக்கப்பட வேண்டிய சூழ்நிலையில் உள்ளன. ஏதேனும் ஒரு வகையில் வைரஸ் புரோகிராம்கள் மற்றும் கெடுதல் விளைவிப்பதற்காகவே எழுதப்படும் புரோகிராம்கள் பிரவுசர் வழியாக வந்துவிடுகின்றன. பொதுவாக ஏதேனும் ஒரு புரோகிராமினை டவுண்லோட் செய்கையில் அடிப்படை யில் ஒரு சில பாதுகாப்பு முறைகள் செயல்படுத்தப்படுகின்றன. ஆனால் இவை பழகிப் போனதால், கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்களை அனுப்புபவர்கள் இவற்றை மீறிச் செயல்படும் வகையில் அவற்றை வடிவமைத்து விடுகின்றனர். எனவே தொடர்ந்து பிரவுசரைப் பாதுகாக்கும் வகையில் நாம் அதனைப் பலப்படுத்த வேண்டியுள்ளது.

மொஸில்லாவின் பயர்பாக்ஸ் பிரவுசர், கம்ப்யூட்டரை, இது வைரஸ் போன்ற தீய செயல்களை மேற்கொள்ளும் தொகுப்புகளிலிருந்து பாதுகாக்கும் புரோகிராம்களை சப்போர்ட் செய்கிறது. அத்துடன் பயர்பாக்ஸ் பிரவுசருக்கென வடிவமைக் கப்பட்டுள்ள பல ஆட் ஆன் தொகுப்புகளும் கூடுதல் பாதுகாப்பு தரும் வகையில் உருவாக்கப்பட்டு கிடைக்கின்றன. இவற்றையும் பயர்பாக்ஸ் ஏற்றுக் கொள்கிறது. வங்கிக் கணக்குகள் கையாளுதல், ஆன்லைனில் பொருட்களுக்கு ஆர்டர் செய்து வாங்குதல், அவற்றிற்குப் பணம் செலுத்துதல், சோஷியல் நெட்வொர்க் கிங்கில் நண்பர்களுடன் தொடர்பு கொள்ளல், கல்வி கற்றல் போன்ற பணிகளில் நாம் இன்டர்நெட்டினைப் பயன்படுத்துவதால், ஒரு பாதுகாப்பான சூழ்நிலை நமக்கு அவசியமாகிறது.

மொஸில்லா பயர்பாக்ஸ் பிரவுசருக்குக் கூடுதல் பாதுகாப்பு தரும் வகையில் தரப்பட்டுள்ள ஆட்–ஆன் தொகுப்பு களிலிருந்து சிறப்பாகச் செயல்படும் சில தொகுப்புகளின் பட்டியல் இங்கு தரப்படுகிறது.

1. Adblock Plus: இந்த ஆட் –ஆன் தொகுப்பு வாரந்தோறும் ஏறத்தாழ 8 லட்சம் பேரால் டவுண்லோட் செய்யப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. பேனர்கள், விளம்பரங்களைத் தாங்கி வரும் பாப் அப் விண்டோக்களை முற்றிலுமாய்த் தடுக்கிறது. கிடைக்கும் இணையதள முகவரி: http://addons.mozilla.org/enUS/firefox/addon/1865 இந்த தொகுப்பைப் பதிந்த பின்னர், ஏதேனும் பேனர் விளம்பரம் வந்தால், அதன் மீது ரைட் கிளிக் செய்திடுங்கள். கிடைக்கும் கான்டெக்ஸ்ட் மெனுவில் Adblock Plus என்பதனைத் தேர்ந்தெடுங்கள். அந்த பேனர் மீண்டும் ஒரு முறை அந்த கம்ப்யூட்டரில் டவுண்லோட் செய்யப்படமாட்டாது. அல்லது தொகுப்பை முதலில் பயன்படுத்தத் தொடங்குகையில் பில்டர் பயன்பாட்டினை இயக்கிவிட்டால் இது போன்ற பேனர் விளம்பரங்களை அண்டவிடாது.

2. Better Privacy: பொதுவாக குக்கிகளால் நமக்கு சில நன்மைகள் இருந்தாலும், பல குக்கிகள் நம் கம்ப்யூட்டரை வேவு பார்க்கும் வேலைக்கே அனுப்பப்படுகின்றன. இவற்றை நம் பிரவுசிங் முடிந்த பின்னர் அழித்துவிடலாம். ஆனால் சில குக்கிகள் அழிக்கப்பட முடியாத வகையில் உருவாக்கப்பட்டு பதிக்கப்படுகின்றன. இவற்றை சூப்பர் குக்கிகள் என அழைக்கின்றனர். இவற்றிலிருந்தும் பாதுகாக்கும் வேலையை இந்த ஆட் ஆன் புரோகிராம் தருகிறது. இந்த ஆட் ஆன் புரோகிராமினை https://addons.mozilla.org/enUS/firefox/addon/6623 என்ற முகவரியிலிருந்து டவுண்லோட் செய்து கொள்ளலாம். இந்த பிளாஷ் குக்கிகளை எல்.எஸ்.ஓ. குக்கிகள் எனவும் அழைக்கின்றனர். இவை நம் கம்ப்யூட்டரில் எப்போதும் நிரந்தரமாக இருக்கும் வகையில் பதியப்படும். ஒரு குக்கியின் அளவு 100 கேபி. வழக்கமான சாதாரண குக்கியின் அளவு 4 கேபி மட்டுமே. இந்த குக்கிகளை பிரவுசர்கள் அறிவதில்லை. எல்.எஸ்.ஓ. குக்கிகளை பிரவுசர்களாலும் அழிக்க முடிவதில்லை. இந்த வகை குக்கிகள் சிஸ்டத்தில் பதிந்து வைக்கப்பட்டுள்ள தகவல்களை எளிதாகப் பெற்று, நாம் அறியாமலேயே மற்ற கம்ப்யூட்டருக்கு அனுப்பும் தன்மை கொன்டவை.

பிளாஷ் குக்கிகள் எப்போது சென்ட்ரல் சிஸ்டம் போல்டரில் தான் பதியப்படுகின்றன. எனவே இவை நீக்கப்படாது. நீக்குவதும் சிரமம். Better Privacy புரோகிராம் ஒவ்வொரு முறை நீங்கள் பிரவுசரை மூடும்போது, இவை அனைத்தையும் நீக்கிவிடுகிறது. அல்லது ஒவ்வொரு பிளாஷ் குக்கியாக இந்த புரோகிராம் மூலம் பெற்று அவற்றை நீக்குவதா, வைத்துக் கொள்வதா என நீங்கள் தீர்மானிக்கலாம்.

3. No Script: இணையத்தில் எந்த வகையில் நம்மை அழிக்கும் புரோகிராம்கள் வரும் என்று சொல்ல முடியாத வகையில் பல வகை புரோகிராம்கள் உள்ளன. இவற்றில் ஸ்கிரிப்ட் என்பதுவும் ஒன்று. இதிலிருந்து பாதுகாக்கும் வழிகளை இந்த ஆட் ஆன் தொகுப்பு தருகிறது. இந்த புரோகிராமினை https://addons.mozilla.org/enUS/firefox/addon/722 என்ற முகவரியிலிருந்து டவுண்லோட் செய்து கொள்ளலாம். 2006 ஆம் ஆண்டின் சிறந்த புரோகிராமாக இது விருது பெற்றது. பிரவுசருக்கான சரியான பாதுகாப்பினைத் தருகிறாது. இந்த புரோகிராம் ஜாவா, ஜாவா ஸ்கிரிப்ட் போன்றவற்றை நாம் அனுமதிக்கும் நேரத்தில், அனுமதிக்கும் தளங்களில் இருந்து வந்தால் மட்டுமே இயங்க வைக்கும். இந்த புரோகிரா மினைப் பயன்படுத்துவது குறித்த மேலதிகத் தகவல்களுக்கு http://noscript.net/faq என்ற முகவரியில் உள்ள தளத்தினை அணுகவும்.

4. WOT Web of Trust: இணையப் பயன்பாட்டின் போது, நம்முடைய கம்ப்யூட்டருக்குள் நம் அனுமதியின்றி சிலர் ஊடுருவி, பெர்சனல் தகவல்களைத் திருடும் புரோகிராம்களை இன்ஸ்டால் செய்திட முயற்சிப்பார்கள். இது போன்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படுகையில் இந்த புரோகிராம் நமக்கு எச்சரிக்கை கொடுக்கும். https://addons.mozilla.org/enUS/firefox/addon/3456 என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து இதனைப் பெற்றுக் கொள்ளலாம். ஆபத்து நிறைந்த இணைய தளங்களுக்கு நீங்கள் செல்கையில் இது பலத்த எச்சரிக்கையினைத் தரும். ஓர் இணைய தளம் ஸ்பேம் மற்றும் மால்வேர்களை அனுப்ப முயற்சிக்கையில் இந்த புரோகிராம் அந்த செயலை மோப்பம் பிடித்து அறிந்து உடனே எச்சரிக்கை கொடுத்து, நம்மை அந்த தளத்தின் இணைப்பைத் துண்டித்துக் கொள்ளச் சொல்லும். இந்த புரோகிராமில் பல லட்சம் தளங்களின் தன்மை குறித்த தகவல் பதியப்பட்டுள்ளது. இந்த புரோகிராம் பயன்படுத்துவது குறித்த கூடுதல் தகவல்களுக்கும் சப்போர்ட்டுக்கும் http://www.mywot.com/support என்ற முகவரியில் உள்ள தளத்தினை அணுகவும்.

5. Stealther: நாம் இணையத்தில் உலா வருகையில், தகவல்களைத் தேடுகையில், இமெயில் களைப் பெறுகையிலும் அனுப்பும்போது நம் இணையப் பயணம் குறித்த பல தடயங்கள் உருவாக்கப்படுகின்றன. பிரவுசர் ஹிஸ்டரி, குக்கீஸ், டிஸ்க் கேஷ், பைல் ஹிஸ்டரி, படிவங்களில் தரப்படும் தகவல்கள் என இவை பலவகைப்படுகின்றன. இது போன்ற எந்த தடயமும் இல்லாமல் இந்த புரோகிராம் பார்த்துக் கொள்கிறது. இதனை https://addons.mozilla.org/enUS/firefox/addon/1306 என்ற முகவரியில் பெறலாம். இந்த புரோகிராம் நாம் பிரவுசரை இயக்கியவுடன் தானும் இயங்கி தடயங்களை ஏற்படுத்தும் புரோகிராம் பகுதிகளைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்கிறது.


6. Roboform Toolbar: நாம் பயன்படுத்தும் பாஸ்வேர்ட் களைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள இந்த புரோகிராம் உதவுகிறது. https://addons.mozilla.org/enUS/firefox/addon/750 என்ற தளம் இந்த புரோகிராமைத் தருகிறது. பாஸ்வேர்ட்களை நினைவில் வைத்து நாம் அவற்றை முறையாகவும் தவறின்றிப் பயன்படுத்தவும் உதவுகிறது.

7. Key Scrambler Personal: நாம் பயன்படுத்தும் பாஸ்வேர்ட்கள் மற்றும் பிற முக்கிய தகவல்களை, நாம் அறியாமலேயே நம் கம்ப்யூட்டர் களுக்குள் அமர்ந்து அறியும் புரோகிராம் களில் ஒரு வகை கீ லாக்கர் என்பதாகும். இவை நாம் அழுத்தும் கீகளைப் பதிவு செய்து பின் இதனைப் பதித்தவருக்குத் தரும். இன்டர்நெட் மையங்கள் மற்றும் அலுவலகங்களில் உள்ள பொது கம்ப்யூட்டர்களில் சிலர் இவற்றைப் பதிந்து வைத்துப் பயன்படுத்துவார்கள். ஏன், நம் கம்ப்யூட்டர்களில் பிறரை அனுமதித்தால், நம் அனுமதியில்லா மலேயே அவர்கள் இந்த வேவு பார்க்கும் வேலையை மெற்கொள்ளலாம். இத்தகைய கீ லாக்கர்கள் புரோகிராம்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கிறது இந்த Key Scrambler Personal புரோகிராம். இதனை https://addons.mozilla.org/enUS/firefox/addon/3383 என்ற முகவரியிலிருந்து பெறலாம்.

பிரவுசர் பாதுகாப்பு என்பது நாம் கட்டாயம் மேற்கொள்ள வேண்டிய ஒரு தடுப்பு வழியாகும். அப்போதுதான் நாம் நிம்மதியாக இணையத்தைப் பயன்படுத்த முடியும்.

நன்றி: தினமலர்.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum