தமிழ் | Tamil | Forum
தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

கூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.

புகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.

Join the forum, it's quick and easy

தமிழ் | Tamil | Forum
தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

கூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.

புகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.
தமிழ் | Tamil | Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வணக்கம் என் பெயர் நாகராசன்.இரா
by rajan_1972 Fri Apr 10, 2020 7:20 pm

» சிறந்த பொழுதுபோக்கு இணையதளம்!
by pba Sat Jul 02, 2016 8:11 pm

» ஏற்றுமதி உரிமம் பெறும் விண்ணப்பம்
by tamilnews Tue Mar 24, 2015 8:00 pm

» மொபைல், டிடிஎச் ரீசார்ஜ் செய்யப் போறீங்களா? இந்த சலுகைகளைப் பாருங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:41 am

» மொபைல் ரீசார்ஜ் செய்து ஷாப்பிங் கூப்பன் இலவசமாக பெறுங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:38 am

» மெமரி கார்டு வாங்கப் போறீங்களா? 74% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:36 am

» அமேசானில் பெண்களுக்கான ஆடைகள் 70% வரை தள்ளுபடி !
by dsytamil Wed Jan 14, 2015 1:34 am

» அமேசானில் ஆண்களுக்கான ஆடைகள் 60% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:31 am

» லெனோவா டேப்ளட் 43% சலுகை விலையில் ரூ. 5949 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:28 am

» ப்ளிப்கார்ட் தளத்தில் சிறுவர்களுக்கான ஆடைகள் 70% வரை + 30% கூடுதல் தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:14 am

» அமேசான் தளத்தில் 50% தள்ளுபடி விலையில் மொபைல்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:13 am

» ரூ. 7499 மதிப்புள்ள மைக்ரோமேக்ஸ் ஏ1 ஆன்ட்ராய்டு மொபைல் இப்போது ரூ. 5499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:11 am

» ரூ. 19999 மதிப்புள்ள நோக்கியா லூமியா 625 மொபைல் ரூ. 7499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:10 am

» ப்ராண்டட் காலணிகளுக்கு 70% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:08 am

» ஆன்லைன் ஷாப்பிங்கில் ப்ரிண்டர்களுக்கு 33% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:06 am

» ஆன்லைனில் பொருள் வாங்கப் போறீங்களா? 70% வரை பணத்தை சேமியுங்கள்!
by dsytamil Tue Jan 13, 2015 12:30 am

» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...!
by sathikdm Sun Oct 19, 2014 4:45 pm

» சிறுதொழில் செய்பவர்கள் இணையதளம் தொடங்க வேண்டியதின் அவசியம்!
by pba Sat Sep 27, 2014 12:58 am

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:47 pm

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:42 pm

» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
by santhoshpart Wed Aug 27, 2014 4:22 pm

» “சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா!”
by santhoshpart Wed Aug 13, 2014 3:54 pm

» Daily Rs.500/- and Above
by K.MARIAPPAN Wed Jul 30, 2014 12:01 pm

» http://www.neobux.com/?r=narasimmant
by Navaneethakrishnan Wed Jul 02, 2014 3:41 pm

» வணக்கம் என் பெயர் வேணு
by A.Venu Fri Jun 27, 2014 10:10 am

» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?
by sathikdm Wed Jun 18, 2014 3:24 pm

» தமிழ் மொழி மூல கல்வி இணையதளம்
by afdhaal Wed May 28, 2014 9:22 pm

» வருக. வருக. வணக்கம்.
by மகி Mon May 12, 2014 3:55 pm

» அறிமுகம் -விநாயகா செந்தில்.
by மகி Mon May 12, 2014 3:53 pm

» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....!
by vinayagasenthil Sat May 10, 2014 9:04 pm

பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

கணினித் தகவல்கள்!

3 posters

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

Go down

கணினித் தகவல்கள்! - Page 5 Empty Re: கணினித் தகவல்கள்!

Post by மகி Mon May 17, 2010 11:05 am

USB Universal Serial Bus (யுனிவர்சல் சீரியல் பஸ்):

கம்ப்யூட்டருடன் இணைக்கப்படும் பிற சாதனங்களை எளிதாக இணைத்துப் பயன்படுத்த ஒரு வழி. ஸ்கேனர், மவுஸ், பிளாஷ் டிரைவ், பிரிண்டர் எனத் தற்போது அனைத்து சாதனங்களும் இதன் வழியே தான் கம்ப்யூட்டருடன் இணைக்கப் படுகின்றன. கம்ப்யூட்டர் இயங்கிக் கொண்டிருக்கும் போதே இதனைப் பயன்படுத்தி சாதனங்களை இணைக்கலாம், நீக்கலாம்.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

கணினித் தகவல்கள்! - Page 5 Empty Re: கணினித் தகவல்கள்!

Post by மகி Mon May 17, 2010 11:06 am

Taskbar (டாஸ்க் பார்):

விண்டோஸ் இயக்கத்தில் மானிட்டர் திரையில் கீழாக இயங்கும் நீள் கட்டம். இதில் ஸ்டார்ட் மெனு, விரைவாக அப்ளிகேஷன் புரோகிராம்களை இயக்க ஐகான்கள் அடங்கிய தொகுப்பு, இயங்கிக் கொண்டிருக்கும் அப்ளிகேஷன் புரோகிராம்களின் பைல்களுக்கான கட்டங்கள் மற்றும் கடிகாரம், பின்னணியில் இயங்கிக் கொண்டிருக்கும் புரோகிராம்களின் ஐகான்கள் ஆகியவை இருக்கும். இவற்றைத் தேவைப்படும்போது கிளிக் செய்து பெறலாம்.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

கணினித் தகவல்கள்! - Page 5 Empty Re: கணினித் தகவல்கள்!

Post by மகி Mon May 17, 2010 11:08 am

IRQ

IRQ என்பது Interrupt Request என்பதனைக் குறிக்கிறது. கம்ப்யூட்டரில் உள்ள ஹார்ட்வேர் சாதனம் ஒன்று, கம்ப்யூட்டரில் அனைத்தையும் செயல்படுத்தும் மைக்ரோ ப்ராசசருக்கு நேரடியாக அனுப்பும் வேண்டுகோள். நீ தற்சமயம் செயல்படுத்த முயற்சிப்பதை ஏற்றுக் கொள்ளும் நிலையில் நான் இல்லை. எனவே நான் மீண்டும் இன்ஸ்டரக்ஷன் அனுப்பும் வரை சற்று காத்திரு என்று கூறும் வேண்டுகோள் இது. ஒவ்வொரு பெர்சனல் கம்ப்யூட்டரிலும் 15 வகை வேண்டுகோள் இது போல செல்லலாம். அனுப்பும் சாதனத்தின் முக்கியத்துவத்தைப் பொறுத்து இவை பட்டியலிடப்பட்டு தரப்படுகின்றன.

நன்றி: தினமலர்.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

கணினித் தகவல்கள்! - Page 5 Empty Re: கணினித் தகவல்கள்!

Post by மகி Mon May 31, 2010 1:42 am

உங்கள் திரையில் பல விண்டோக்களைத் திறந்து வைத்து இயங்கிக் கொண்டிருக்கிறீர்களா? அனைத்தையும் மூடி திரையில் இருக்கும் ஒரு ஐகானைக் கிளிக் செய்திட விரும்புகிறீர்களா? விண்டோஸ் (Windows) கீயை (கண்ட்ரோல் மற்றும் ஆல்ட் கீகளுக்கு நடுவே விண்டோஸ் படத்துடன் உள்ள கீ) அழுத்திக் கொண்டு அதனுடன் D கீயை அழுத்தவும். அனைத்து விண்டோக்களும் மினிமைஸ் செய்யப்படும். அய்யோ ! மீண்டும் அவை வேண்டுமே என்று எண்ணுகிறீர்களா? மறுபடியும் அதே போல அந்த இரண்டு கீகளையும் அழுத்துங்கள். மீண்டும் அவை கிடைக்கும்.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

கணினித் தகவல்கள்! - Page 5 Empty Re: கணினித் தகவல்கள்!

Post by மகி Mon May 31, 2010 1:43 am

உங்களுடைய சி டிரைவில் என்ன என்ன உள்ளன என்று அறிய ஆவலா? விண்டோஸ் எக்ஸ்புளோரர் சென்று சி டிரைவ் மீது கிளிக் செய்து அறிவது ஒரு வழி. டாஸ் கமாண்ட் பிராம்ப்ட் வரவழைத்து அதில் C:\ என டைப் செய்து என்டர் அழுத்தி அறிவது ஒரு வழி. இன்னொரு வழியும் உள்ளது. எக்ஸ்பி தொகுப்பில் விண்டோஸ் கீ அல்லது ஸ்டார்ட் அழுத்தி அதில் வரும் மெனுவில் Run கிளிக் செய்து அதில் கிடைக்கும் விண்டோவில் C என மட்டும் டைப் செய்து என்டர் அழுத்துங்கள். உடனே விண்டோஸ் எக்ஸ்புளோரர் திறக்கப்பட்டு C டிரைவில் உள்ள போல்டர்கள் மற்றும் பைல்கள் காட்டப்படும். அல்லது \ என்ற பேக்ஸ்லாஷ் அமைத்து என்டர் தட்ட சி டிரைவ் பைல்கள் கிடைக்கும்.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

கணினித் தகவல்கள்! - Page 5 Empty Re: கணினித் தகவல்கள்!

Post by மகி Mon May 31, 2010 1:43 am

பைல்களை அழிக்கிறீர்கள். அவை எங்கே செல்கின்றன? ரீசைக்கிள் பின்னுக்குத்தான். இப்படியே அழித்துக் கொண்டு போகப் போக அவை அங்கு நிரம்பிக் கொண்டே இருக்கும். ஒரு நிலையில் என்ன பைல்களை எல்லாம் அழித்தோம் என்று தெரிய விரும்புகிறீர்களா? அல்லது நீக்கிய பைல்களை கம்ப்யூட்டரிலிருந்தே அழிக்க விரும்புகிறீர்களா? ரீசைக்கிள் பின் ஐகானில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் Open என்பதனைக் கிளிக் செய்திடவும். இப்போது நீங்கள் அழித்த பைல்கள் தெரிய வரும். ஆனால் இவற்றை அங்கேயே கிளிக் செய்வதன் மூலம் படிக்க முடியாது. நீங்கள் மீண்டும் படிக்க விரும்பும் பைல்களை அந்த பைல் இருந்த டிரைவ் மற்றும் போல்டருக்குக் கொண்டு சென்ற பின்னரே படிக்க முடியும். இதற்கு மீண்டும் காண விரும்பும் பைலை செலக்ட் செய்து ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் Restore என்ற பிரிவைக் கிளிக் செய்திட பைல் அதன் முந்தைய இடத்திற்குச் செல்லும். அங்கு சென்று அந்த பைலைத் திறந்து படித்துக் கொள்ளலாம்.

நன்றி: தினமலர்.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

கணினித் தகவல்கள்! - Page 5 Empty Re: கணினித் தகவல்கள்!

Post by மகி Tue Apr 26, 2011 12:18 am

ரெசல்யூசன் (Resolution):

மானிட்டர் திரை அல்லது அச்சில் படம் ஒன்றில் எந்த அளவிற்கு டீடெய்ல்ஸ் உள்ளன என்பதைக் குறிக்க இந்த அலகு சொல்லைப் பயன் படுத்துகிறோம். ஒரு மானிட்டரில் இது அதன் பிக்ஸெல்களைக் குறிக்கிறது. எடுத்துக் காட்டாக 17 அங்குல மானிட்டரில் இது 1024x768 பிக்ஸெல் ஆக இருக்கும். அச்சுப் படிவம் மற்றும் ஸ்கேனரில் ரெசல்யூசன் என்பது ஒரு சதுர அங்குலத்தில் எத்தனை புள்ளிகளில் (Dots per inch) டீடெய்ல்ஸ் தரப்பட்டுள்ளது என்பதை இது குறிக்கிறது. அல்லது ஒரு சதுர அங்குல இடத்தில் எத்தனை துளி இங்க் அல்லது டோனர் தெளிக்கப்படுகிறது என்பதையும் ரெசல்யூசன் என்பதின் மூலம் சொல்கிறோம்.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

கணினித் தகவல்கள்! - Page 5 Empty Re: கணினித் தகவல்கள்!

Post by மகி Wed May 04, 2011 4:03 pm

ஆஸ்பெக்ட் ரேஷியோ (Aspect Ratio):

ஒரு டிவியின் அல்லது மானிட்டரின் திரையின் அகல உயர விகிதத்தை ஆஸ்பெக்ட் ரேஷியோ என்கிறோம். வழக்கமான டிவிக்களின் திரை 4:3 என்ற விகிதத்தில் அமைந்திருக்கும். அதாவது 4 பங்கு அகலம் 3 பங்கு உயரம். தற்போது வருகின்ற புதிய ஸ்கிரீன்கள் 16:9 என்ற விகிதத்தில் அமைக்கப்படுகின்றன.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

கணினித் தகவல்கள்! - Page 5 Empty Re: கணினித் தகவல்கள்!

Post by மகி Wed May 04, 2011 4:04 pm

பூட் டிஸ்க் (Boot Disk):

கம்ப்யூட்டர் ஒன்றை இயக்கத் தேவையான சிஸ்டம் பைல்களைக் கொண்ட, கம்ப்யூட்டர் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்ட, சிடி அல்லது டிவிடி. பொதுவாக, கம்ப்யூட்டரின் ஹார்ட் டிஸ்க் தான், பூட் டிஸ்க்காக இருக்கும். இதில் பிரச்னை ஏற்படுகையில், சிஸ்டம் பைல்கள் கொண்ட பூட் டிஸ்க் மூலம் கம்ப்யூட்டரை இயக்குகிறோம்.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

கணினித் தகவல்கள்! - Page 5 Empty Re: கணினித் தகவல்கள்!

Post by மகி Wed May 04, 2011 4:05 pm

அனலாக் (Analogue):

எந்த ஒரு சிக்னல் தன் மதிப்பை அடிக்கடி மாற்றிக் கொள்கிறதோ, அது அனலாக் ஆகும். எடுத்துக் காட்டாக, ஒருவர் பேசுகையில் கிடைக்கும் சிக்னல்கள் அனலாக் சிக்னல்கள். அது தொடர்ந்து மாறுபட்டுக் கொண்டே உள்ளது. இவை டிஜிட்டல் சிக்னல்களிலிருந்து வேறுபடு கின்றன. டிஜிட்டல் சிக்னல்கள், நிலைத்த மதிப்புகளுக் கிடையே மாறுகின்றன. இதனை உணர, தொடர்ந்து வேகமாக நகரும் நொடி முள் கொண்ட கடிகாரத்தின் முகப் பக்கத்தினையும், டிக் டிக் என ஒவ்வொரு விநாடியாக நகரும் விநாடி முள் கொண்ட கடிகார த்தை யும் ஒப்பிட்டுப் பார்க்கலாம். முதலில் குறிப்பிட்டது அனலாக் சிக்னல் தருவதாகும். இரண்டாவது டிஜிட்டல் சிக்னல். இரண்டாவதாகச் சொன்னது, ஒவ்வொரு எண்ணாக, ஒரே மதிப்பில் மாறுகிறது.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

கணினித் தகவல்கள்! - Page 5 Empty Re: கணினித் தகவல்கள்!

Post by மகி Tue May 10, 2011 3:27 pm

கண்ட்ரோல் + இஸட்:

கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களில் தாங்கள் அவசரத்தில் செய்த தவறை உடனடியாக நிவர்த்தி செய்திட, அதாவது செய்த தவறை ஒரு விளைவும் இல்லாமல் ஆக்கிட கண்ட்ரோல் + இஸட் கீ சேர்க்கையைப் பயன்படுத்துகிறோம். ஆனால் இதனைப் பெரும்பாலும் வேர்ட் தொகுப்பில் பயன்படுத்துபவர்களே அதிகம். அதில் மட்டுமே இந்த கீகள் சேர்க்கை பயன்படும் எனப் பலரும் எண்ணிக் கொண்டிருக்கிறோம். இந்த கீ சேர்க்கை விண்டோஸின் அனைத்து பயன்பாட்டுத் தொகுப்புகளிலும் செயல்படும். எடுத்துக் காட்டாக, டெஸ்க் டாப் திரையில் ஐகான் ஒன்றைப் பதிக்கிறீர்கள். அதனை வைத்தது தவறு என்று அடுத்த கணம் எண்ணினால், உடனே கண்ட்ரோல் + இஸட் கீகளை அழுத்துங்கள். ஒட்டி வைத்த ஐகான் மறைந்து போகும். விண்டோஸ் எக்ஸ்ப்ளோரரிலும் இது செயல்படும். எடுத்துக்காட்டாக பைல் ஒன்றை அழிக்கிறீர்கள். பரவாயில்லை, அப்படியே இருக்கட்டும் என , அதனை மீட்க எண்ணினால் ரீசைக்கிள் பின் தேடிப் போக வேண்டாம். கண்ட்ரோல் + இஸட் கீகளை அழுத்தவும். பைல் உடனே கிடைக்கும். ஆனால் நீங்கள் பைலை அழிக்கும்போது, ரீசைக்கிள் பின் தொட்டிக்கு அது போகக் கூடாது என எண்ணி ஷிப்ட் கீயைச் சேர்த்து அழுத்தியிருந்தால் கண்ட்ரோல் +இஸட் கீயை அழுத்தினாலும் பைல் கிடைக்காது.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

கணினித் தகவல்கள்! - Page 5 Empty Re: கணினித் தகவல்கள்!

Post by மகி Tue May 10, 2011 3:28 pm

டூல் பார் பட்டன்கள்:

உங்கள் டூல் பாரில் உள்ள பட்டன்கள் சிறியதாக உள்ளதே என்று கவலையாக உள்ளதா? அவற்றைப் பெரியதாக வைத்து இயக்க விருப்பமா? கீழே குறிப்பிட்டுள்ளவாறு செயல்படுங்கள். டூல்ஸ் (Tools) மெனு செல்லவும். அங்கு (Customize) என்ற பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். அல்லது ஏதேனும் டூல்பாரில் வலதுபுறமாக மவுஸைக் கிளிக் செய்திடவும். அதன்பின் வரும் பிரிவுகளில் (Customize) ஐத் தேர்ந்தெடுக் கவும். பின் கிடைக்கும் விண்டோவில் (Options tab) பிரிவில் பார்த்தால் அங்கு (Large Icons) என்ற சொற்களுக்கு எதிரே ஒரு சிறிய கட்டம் கிடைக்கும். அதில் டிக் அடையாளம் ஏற்படுத்தவும். உடனே பட்டன்கள் அனைத்தும் பெரியதாக இருக்கும். டெக்ஸ்ட் அப்படியே தான் இருக்கும். இந்த பட்டன் அளவு உங்களுக்குப் பிடித்தால் குளோஸ் (Close) பட்டனைக் கிளிக் செய்திடவும். இனி பட்டன் புதிய அளவிலேயே இனி இருக்கும். இது உங்களுக்குப் பிடிக்க வில்லை என்றால் டிக் அடையாளத்தை எடுத்துவிடவும். மீண்டும் பழைய அளவிலேயே இருக்கும். இதில் ஒன்றை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். இந்த செயல்பாட்டினை எந்த விண்டோஸ் தொகுப்பில் மேற்கொண்டாலும், அது அனைத்து விண்டோஸ் தொகுப்பிலும் எதிரொலிக்கும். எடுத்துக்காட்டாக வேர்ட் தொகுப்பில் மேற்கொண்டாலும், பிற எக்ஸெல் போன்ற ஆபீஸ் தொகுப்புகளிலும் இந்த பெரிய பட்டன்கள் கிடைக்கும்.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

கணினித் தகவல்கள்! - Page 5 Empty Re: கணினித் தகவல்கள்!

Post by மகி Tue May 10, 2011 3:30 pm

கர்சரை பெரியதாக்க:

உங்கள் நண்பரின் கம்ப்யூட்டரில் கர்சர் பெரியதாகவும், உங்களுடைய கம்ப்யூட்டரில் சிறியதாகவும் இருக்கிறதே என்று உங்களுக்குக் கவலையாக உள்ளதா? சற்றுப் பெரியதாக கர்சர் இருந்தால் தேவலாம் என்று எண்ணுகிறீர்களா? இந்த ஆசையையும் நிறைவேற்றிக் கொள்ளலாம். ஸ்டார்ட் பட்டனை முதலில் அழுத்தி அதிலிருந்து மேலெழும் கட்டத்தில் செட்டிங்ஸ் மற்றும் கண்ட்ரோல் பேனல் (Settings, Control Panel.) செல்லவும். அதில் மவுஸ் ஐகான் (Mouse icon) என்றிருக்கும் இடத்தைத் தேர்ந்தெடுத்து அதில் உள்ள பாயிண்ட்டர்ஸ் (Pointers) என்ற டேப்பைத் தேர்ந்தெடுக்கவும். இதில் ஒரு ட்ராப் பாக்ஸ் கிடைக்கும். அதன் தலைப்பாக “Scheme.” என்ற சொல் இருக்கும். இந்த திட்டத்தில் நீங்கள் இயக்கும் விண்டோஸ் தொகுப்பிற்கேற்ற வகையில் Windows Standard (extra large) (system scheme) அல்லது Windows Standard (large) (system scheme) என ஒன்று இருக்கும். இதில் எந்த திட்டம் உங்கள் கணிப்பொறியில் இருந்தாலும், அது வழக்கமான கர்சரைக் காட்டிலும் சற்றுப் பெரிய கர்சரையே கொடுக்கும். மேலும் பல வகையான கர்சர்களை அங்கு பார்க்கலாம். தேவையானதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். பின்னர் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி கர்சர் நீங்கள் தேர்ந்தெடுத்த அளவில், வகையில், தோற்றத்தில் இருப்பதனைக் காணலாம்.

நன்றி: தினமலர்.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

கணினித் தகவல்கள்! - Page 5 Empty Re: கணினித் தகவல்கள்!

Post by மகி Mon Aug 01, 2011 2:40 pm

Download:

கம்ப்யூட்டர் ஒன்றிலிருந்து நேரடியாக இன்னொரு கம்ப்யூட்டருக்குப் பைலை மாற்றுவதனை டவுண்லோட் எனக் குறிப்பிடுகிறோம். இருப்பினும் இன்டர் நெட் நெட்வொர்க்கில் இணைந்துள்ள கம்ப்யூட்டரிலிருந்து ஒரு பைல் இறக்கிப் பதியப்படுவதனையே இது பெரும்பாலும் குறிக்கிறது.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

கணினித் தகவல்கள்! - Page 5 Empty Re: கணினித் தகவல்கள்!

Post by மகி Mon Aug 01, 2011 2:41 pm

Firewall:

நெட்வொர்க் (இன்டர்நெட் உட்பட)கில் இணைக்கப்பட்டிருக்கும் ஒரு கம்ப்யூட்டரில் உள்ளே அனுமதியின்றி வரும் அடுத்தவரின் முயற்சியைத் தடுக்கும் ஒரு சாப்ட்வேர் அல்லது சிறிய ஹார்ட்வேர் சாதனம்.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

கணினித் தகவல்கள்! - Page 5 Empty Re: கணினித் தகவல்கள்!

Post by மகி Mon Aug 01, 2011 2:41 pm

Bandwidth:

இணைக்கப்பட்ட இரு வேறு சாதனங்கள் இடையே நடைபெறும் டேட்டா பரிமாற்றத்தில் அதிக பட்ச டேட்டா பரிமாற்ற வேகத்தின் அளவை இது குறிக்கிறது. இது டேட்டா பயணிக்கும் வேகம் அல்ல.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

கணினித் தகவல்கள்! - Page 5 Empty Re: கணினித் தகவல்கள்!

Post by மகி Mon Aug 01, 2011 2:42 pm

Client:

கம்ப்யூட்டர் நெட்வொர்க்கில் இணைக்கப்பட்டு சர்வராக இயங்காமல் பயன்படுத்தப்படும் எந்த கம்ப்யூட்டரும் கிளையண்ட் என அழைக்கப்படும்.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

கணினித் தகவல்கள்! - Page 5 Empty Re: கணினித் தகவல்கள்!

Post by மகி Mon Aug 01, 2011 2:42 pm

Doc:

இது ஒரு பைலின் பெயரில் உள்ள துணைப் பெயர். இந்த பெயருடன் உள்ள பைல் மைக்ரோசாப்ட் வேர்ட் தொகுப்பில் உருவான பைல் என்பதனை இது குறிக்கிறது.

நன்றி: தினமலர்.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

கணினித் தகவல்கள்! - Page 5 Empty Re: கணினித் தகவல்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum