Latest topics
» வணக்கம் என் பெயர் நாகராசன்.இராby rajan_1972 Fri Apr 10, 2020 7:20 pm
» சிறந்த பொழுதுபோக்கு இணையதளம்!
by pba Sat Jul 02, 2016 8:11 pm
» ஏற்றுமதி உரிமம் பெறும் விண்ணப்பம்
by tamilnews Tue Mar 24, 2015 8:00 pm
» மொபைல், டிடிஎச் ரீசார்ஜ் செய்யப் போறீங்களா? இந்த சலுகைகளைப் பாருங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:41 am
» மொபைல் ரீசார்ஜ் செய்து ஷாப்பிங் கூப்பன் இலவசமாக பெறுங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:38 am
» மெமரி கார்டு வாங்கப் போறீங்களா? 74% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:36 am
» அமேசானில் பெண்களுக்கான ஆடைகள் 70% வரை தள்ளுபடி !
by dsytamil Wed Jan 14, 2015 1:34 am
» அமேசானில் ஆண்களுக்கான ஆடைகள் 60% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:31 am
» லெனோவா டேப்ளட் 43% சலுகை விலையில் ரூ. 5949 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:28 am
» ப்ளிப்கார்ட் தளத்தில் சிறுவர்களுக்கான ஆடைகள் 70% வரை + 30% கூடுதல் தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:14 am
» அமேசான் தளத்தில் 50% தள்ளுபடி விலையில் மொபைல்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:13 am
» ரூ. 7499 மதிப்புள்ள மைக்ரோமேக்ஸ் ஏ1 ஆன்ட்ராய்டு மொபைல் இப்போது ரூ. 5499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:11 am
» ரூ. 19999 மதிப்புள்ள நோக்கியா லூமியா 625 மொபைல் ரூ. 7499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:10 am
» ப்ராண்டட் காலணிகளுக்கு 70% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:08 am
» ஆன்லைன் ஷாப்பிங்கில் ப்ரிண்டர்களுக்கு 33% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:06 am
» ஆன்லைனில் பொருள் வாங்கப் போறீங்களா? 70% வரை பணத்தை சேமியுங்கள்!
by dsytamil Tue Jan 13, 2015 12:30 am
» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...!
by sathikdm Sun Oct 19, 2014 4:45 pm
» சிறுதொழில் செய்பவர்கள் இணையதளம் தொடங்க வேண்டியதின் அவசியம்!
by pba Sat Sep 27, 2014 12:58 am
» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:47 pm
» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:42 pm
» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
by santhoshpart Wed Aug 27, 2014 4:22 pm
» “சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா!”
by santhoshpart Wed Aug 13, 2014 3:54 pm
» Daily Rs.500/- and Above
by K.MARIAPPAN Wed Jul 30, 2014 12:01 pm
» http://www.neobux.com/?r=narasimmant
by Navaneethakrishnan Wed Jul 02, 2014 3:41 pm
» வணக்கம் என் பெயர் வேணு
by A.Venu Fri Jun 27, 2014 10:10 am
» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?
by sathikdm Wed Jun 18, 2014 3:24 pm
» தமிழ் மொழி மூல கல்வி இணையதளம்
by afdhaal Wed May 28, 2014 9:22 pm
» வருக. வருக. வணக்கம்.
by மகி Mon May 12, 2014 3:55 pm
» அறிமுகம் -விநாயகா செந்தில்.
by மகி Mon May 12, 2014 3:53 pm
» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....!
by vinayagasenthil Sat May 10, 2014 9:04 pm
வேதங்களுக்கு தமிழர்கள் விரோதியா?
Page 1 of 1
வேதங்களுக்கு தமிழர்கள் விரோதியா?
[You must be registered and logged in to see this image.]
அரசமரத்து நிழல் அரசனின் பெரும்படைக்கே நிழல் தரும் அளவிற்கு பெரியதாக இருந்தாலும் அம் மாபெரும் மரம் ஒரு சிறிய விதைக்குள் அடங்கி இருந்து வெளிவந்ததே ஆகும். அதே போன்றுதான் இன்று நான்கு திக்கிலும் பல்கி பெருகி தழைத்து நிற்கும் இந்து தர்மம் வேதத்திலிருந்து வெளிப்பட்டதாக கூறுகிறார்கள், அப்படியென்றால் இந்து தர்மத்தின் விதை வேதமாகும். அதனால் வேதத்தைப் பற்றிய அறிவு மனிதர்களுக்கு அத்யாவசியமாகிறது. அதைப்பற்றி முழுமையாக அறியமுடியவில்லை என்றாலும், ஓரளவாவது தெரிந்துகொள்ளவேண்டும் என்ற ஆசை தூண்டியதனால் யோகி ஸ்ரீ ராமானந்த குரு வை தரிசனம் செய்து என் அறிவுத்தாகத்திற்கு தண்ணீர் பருக முயற்சித்தேன்.
அவரிடம் சில நிமிடங்கள் எனது சொந்த விஷயங்களை பேசிவிட்டு வேதம் என்றால் என்ன? என்ற கேள்வியை சமர்ப்பித்தேன் அதற்கு அவர் விரிவான, தெளிவான, உறுதியான பதில்களை தந்தார். அதை உங்களோடு பகிர்ந்து கொள்வதை பெரும்பாக்கியமாக கருதுகிறேன்.
குருஜி: ஜீவன்கள் அனைத்தும் தனது பூர்வ காலத்தில் விதைக்குள் அடங்கி இருந்தே வெளிப்படுகிறது விதை என்பதை வித்து என்றும் அழைப்பது மரபு. வித் என்ற சமஸ்கிருத வேர்ச்சொல்லில் இருந்தே வேதம் என்ற வார்த்தை உருவாயிற்று. இந்த வார்த்தைக்கு அறிதல் என்ற பொருள் கொள்ளலாம். அதாவது வேத நூல்கள் அறிவின் திரட்டு என்பதாகக் கொள்ளவேண்டும்.
கேள்வி: வேதங்கள் அறிவு நூல் என்றால் அவைகள் எதைப் பற்றிய அறிவை பிரதானமாக கருதுகிறது?
குருஜி: அறிவு என்பது இரண்டு வகைப்படும். உலகப் பொருட்கள் அனைத்தையும் சரீர சுகத்திற்காக எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்பது ஒருவகை அறிவு. இந்த வாழ்க்கையும், இந்த உலகமும், எதற்காக என்பதை அறிய முயற்சிப்பது வேறு ஒருவகை அறிவாகும். உலகமும் வாழ்வும் எதற்காக என்பதை ஒவ்வொரு மனிதனும் ஆராயவேண்டும் என்பதே வேதங்கள் வலியுறுத்தும் அறிவு வகையாகும். அதனால்தான் வேதத்தை அறிவின் பெட்டகம் என்கிறோம். இப்படிக் கூறும் பொழுது ஒரு சிக்கல் எழுகிறது. அறியக்கூடிய அனைத்துமே வேதங்களுக்குள் அடங்கி விடுகிறதா? அல்லது வேதத்தை அறிவதனால் எல்லாவற்றையுமே அறிந்தது போல் ஆகிவிடுகிறதா? என்பதுதான் அந்த சிக்கல்.
ஐரோப்பிய நாட்டு தத்துவங்கள் அனைத்திற்கும், மதபோதனைகள் அனைத்திற்கும், அடிப்படை மூலமாக இருப்பது பேரறிஞன் சாக்ரடீசின் சிந்தனைகளே ஆகும். சாக்ரடீசின் கருத்துக்களின் ஒரு சிலவற்றை மூல ஆதாரமாகக் கொண்டுதான் அரேபியாவிலும். ஐரோப்பாவிலும் பல மதங்கள் இன்றும் ஜீவனுடன் இருக்கிறது. மேல்நாட்டு சிந்தனைக்கு எப்படி சாக்ரடீஸ் மூலமோ அதேபோன்றுதான் இந்தியச் சிந்தனைகள் அனைத்திற்கும் வேதங்கள் மூலப்பொருளாக அமைகின்றது. இன்றைய நவீன சிந்தனைகள் என்று சொல்லக்கூடியவைகள் அனைத்தும் வேதங்களில் இருந்து வெளிப்படும் சிறுதுளிகளே ஆகும். அதாவது மனித சிந்தனைகள் எல்லாமே வேதம் என்ற மகாசமுத்திரத்திற்குள் அடங்கிவிடுகிறது. ஒருவரின் வாழ்வும் வளமும் மங்காது அமைந்திருக்கிறது என்றால் அது வேத வழிச் சிந்தனையாலே ஏற்பட்டது எனலாம். உலகம் வளர்வது சிந்தனைகளால் அந்த சிந்தனைகளைத் தருவது வேதங்களாகும்.
கேள்வி: சிந்தனைகள் அனைத்துமே வேதங்களின் வெளிப்பாடு என்றால் பாரதியின் சிந்தனையும், கண்ணதாசன் சிந்தனையும் வேதங்களாகுமா?
குருஜி: நான் கூறுவதை நன்றாக புரிந்துகொள்ளுங்கள் மனிதன் என்பவன் ஆப்பிரிக்கர்களாகவோ, ஆசியனாகவோ, ஐரோப்பியனாகவோ, இனக்குழுக்களாக பிரிக்கப்படலாம் பல்வேறுபட்ட இனங்களாக மனிதன் பிரிந்தாலும், அவனது சிந்தனைகள் என்பது ஒருவரையறைக்குள், ஒரு வட்டத்திற்குள்தான் அடங்கும். அந்த வட்டத்தை மீறி எந்த மனிதனாலும், எந்த காலத்திலும் சிந்திக்க இயலாது. அந்த வட்டம் என்பதுதான் வேதங்களாகும். விஸ்வாமித்ரனின் சிந்தனையாக இருந்தாலும், விறகு வெட்டுபவனின் சிந்தனையாக இருந்தாலும், அனைத்தும் வேதங்களுக்குள் அடங்கிவிடுகிறது. எனவே வேதங்களை ரிக், யஜர், சாம, அதர்வண ஆகிய பகுதிகளாக மட்டும் கொள்ளக்கூடாது அதையும்தாண்டி வேதங்கள் உள்ளன. காரணம் என்னவென்றால் வேதங்கள் எழுதப்படாதவை, மனதில் உருவாகாதவை, கண்களில் கண்ட சிந்தனைகளால் அதாவது ஊனக் கண்னை முடி ஞானக்கண்ணை திறந்தால் வேதங்களை, வேத மந்திரங்களை நீயும் காணலாம். நாணூம் காணலாம். அந்தக் காலத்தில் அறியப்பட்டதுதான் வேதம், இந்தக்காலத்தில் உள்ளது எல்லாம் வேதங்கள் அல்ல என்பது பெரும் தவறாகும் வேதங்கள் காலத்தைக் கடந்தவை காலங்களுக்குள் கட்டுப்படாதவை யுகங்களை சிருஷ்டிப்பவை.
கேள்வி: காலம்தோறும் நிலைத்து வரும் வேதங்களை மறைநூல் என்கிறார்களே அது சரியானதுதானா? அது குறிப்பிட்ட ஒரு கூட்டத்தாருக்கு மட்டும் சொந்தம் என்பது நியாயமானதுதானா?
குருஜி: வேதங்கள் எந்த ஒரு தனிமனிதனாலும் உருவாக்கப்பட்டது அல்ல மந்திரதிருஷ்டா என்ற ஞானவிழிப்பு நிலையில் உள்ள ஞானிகளால் கண்டறியப்பட்டு பதிவு செய்யப்பட்டதே ஆகும். இதனால்தான் வேதங்களை எழுதா மறை என்று சொல்கிறார்கள். மறை என்று வேதங்களை குறிக்கும்பொழுது அவைகள் ஒரு குறிப்பிட்ட ஜாதிக்காரர்களால் ஓதப்படக்கூடாது அவர்களிடமிருந்து அதை மறைத்து வைக்கவேண்டும் என்பதாக பலர் கருதுகிறார்கள். ஆனால் உண்மை அது அல்ல. எங்கும் நிறைந்திருக்கும் இறைவன் சாதாரணமானவர்கள் உணர்ந்து கொள்ள முடியாத நிலையில் மறைபொருளாக இருக்கிறான் மறைபொருளான இறைவனை அறிந்து கொள்வதற்கு வழி கூறுவதானால்தான் வேதங்களை மறைநூல் என்று கூறுகிறார்களே தவிர வேறு ஒன்றும் இல்லை. மேலும் வேதங்களை இன்ன ஜாதியினர்தான் ஓத வேண்டும் மற்றவர்கள் ஓதக்கூடாது என்று வேதங்களில் எந்த கட்டுதிட்டமும் விதிக்கப்படவில்லை பிற்காலத்தில் உள்ள பொருளாதார சிந்தனை மட்டுமே மேலோங்கி சிலர் ஜாதிக் கட்டுப்பாட்டிற்குள் வேதங்களை கொண்டு வந்து விட்டனர். இது வேதங்களின் குற்றமல்ல. சில மனிதர்களின் குற்றமே ஆகும்.
கேள்வி: வேதங்கள் உலகம் முழுமைக்கும் பொதுவானது என்று நீங்கள் சொன்னாலும் நமது தமிழகத்தை பொறுத்தவரை வேதங்கள் தமிழ் மக்களுக்கு சொந்தமானது அல்ல. நமது பண்பாட்டிற்கும் பொருந்தி வரக்கூடியதும் அல்ல என்ற கருத்து பரவலாக உள்ளதே அந்த கருத்தில் உண்மை இருக்கிறதா?
குருஜி: பேசுகின்ற மொழியாலும், வாழும் நிலப்பகுதியாலும் பல்வேறு பிரிவுகளாக இந்திய மக்கள் நாடு முழுவதும் பிரிந்து இருந்தாலும் செழுமையான பண்பாட்டால் ஒன்று பட்டவர்களாகவே இருந்து வருவதை நடுநிலை சிந்தனையுள்ள எவரும் மறுக்கமாட்டார்கள். நாம் பேசுகின்ற மொழிகள் எதுவாக இருந்தாலும் பாரத நாடு முழுமைக்கும் வழிபாட்டு மொழியாக சமஸ்கிருதமே பொது மொழியாக இருந்து வருகிறது. எனவே வடமொழியில் வேதங்கள் எழுதப்பட்டுள்ளதால் அவைகளுக்கும் நமக்கும் சம்பந்தம் இல்லை என்று நினைப்பது தவறுதலாகும். இஸ்லாமிய மக்கள் பல நாடுகளிலும் பல இனங்களாக வாழ்ந்தாலும் அவர்களது வழிபாட்டு மொழி எப்படி அரபுவாக இருக்கிறதோ அதே போன்ற விஷயம்தான் இதுவாகும். வேதங்கள் சமஸ்கிருதத்தில் இருப்பதனால் அந்த மொழியை தேவ பாஷை என்று கூறி மற்ற மொழிகளெல்லாம் அதற்கு கீழானது என்று பலர் கருதி வருகிறார்கள். இது மிகப்பெரும் அறியாமையின் வெளிப்பாடாகும். தேவ பாஷை என்று சமஸ்கிருதத்தை சொல்வது மிக அதிகமாக கடவுளைப் பற்றி பேசும் மொழியாக அது இருப்பதனால்தான் அதற்கு அந்த பெயரே தவிர அந்த மொழியே கடவுள் அல்ல.
பொதுவாக மொழி என்பது என்ன? கருத்துக்களை கூறுவதற்கு பயன்படும் ஒரு கருவிதான் மொழியாகும். இதில் பாராட்டப்பட வேண்டியது கருத்துக்களே தவிர கருவிகளை அல்ல. குளிரிலிருந்து கம்பளி நம்மை காப்பாற்றுவதனால் கம்பளி போர்வைகளுக்கு பாராட்டு சொல்வது எத்தகைய மடமையான விஷயமோ அதே போன்றுதான் மொழியின் பெருமையை மட்டும் பேசுவது ஆகும். மொழியை வைத்தும் சமயத்தை வைத்தும் காழ்ப்புணர்ச்சியை தூண்டிவிடுவது சிலகாலமாக நாகரீகமாகவே போய்விட்டது.
இது இப்படி இருக்க வடமொழியில் உள்ள வேத நெறி தமிழ் மக்களுக்கு முற்றிலும் முரணான அந்நியமான நெறியாகும். பழந்தமிழர்களின் வாழ்வில் வேதங்களின் வீச்சு என்பதே கிடையாது. அவர்கள் தனி ஒரு நெறியில் சிறந்து விளங்கினார்களே ஒழிய வேதங்களை ஏற்றுக் கொண்டதே இல்லை என்று ஒரு சாரார் நவீன தொலை தொடர்பு சாதனங்கள் வழியாக பிரச்சாரம் செய்து வருகிறார்கள். இவர்கள் தங்களது புத்திசாலிதனத்தை பிரகடனப் படுத்துவதற்காக தேவாரம் மற்றும் திரு முறைகளில் வரும் வேதங்கள் என்ற பதம் வடமொழி வேதத்தை குறிப்பிடுவது அல்ல. அவைகள் மறக்கடிக்கப்பட்ட வேறு தமிழ் வேதங்களைதான் கூறுகின்றன என்றும் பேசி வருகிறார்கள்.
மிகப் பழமையானதும் முதன்மையானதுமான ரிக் வேதத்தில் இந்திரனைப் பற்றியும், வருணனைப் பற்றிய சிறப்பாகக் குறிப்பிடும் பல சுலோகங்கள் உள்ளன. தமிழில் உள்ள மிகப் பழமையான தொல்காப்பியத்திலும் வேந்தன் மேய தீம்புணல் உலகமும் வருணன் மேய பெருமணல் உலகமும் என்று இந்திரனையும், வருணனையும் சிறப்பித்துக் கூறும் பதங்கள் உள்ளதை உணர வேண்டும். அதாவது சுமார் இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு உருவான தொல்காப்பியத்தில் அதன் ஆசிரியர் உதாரணத்திற்கு குறிப்பிடும் அளவிற்கு வேதநெறி பரவி இருந்திருக்கிறது. அது மட்டும் அல்ல சிலப்பதிகாரத்தில் வரும் இந்திர விழா வேதக்கடவுளான இந்திரனை மக்கள் வழிபட்டதையும் நமக்கு காட்டுகிறது.
வேத நெறி தமிழ் நெறி அல்ல என்று வாதிடுபவர்கள் கூட சைவசமயம் தமிழர்களுக்கு புறம்பானது என்று கூறமாட்டார்கள். சைவ சமயத்தின் முழு முதற்கடவுளான சிவபெருமானைப் பற்றி நீலகண்டன் அதாவது நீல நிறமான கழுத்தை உடையவன் என்ற குறிப்பு வேதத்தில் உள்ளன. இதே கருத்து புறநானூற்றில் நீலமணிமிடற்று ஒருவன் என்ற சொற்றொடரில் விவரிக்கப்படுவதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.
அதாவது இன்றைய காலத்தில் எதற்கெடுத்தாலும் அனர்த்தன வியாக்யானம் செய்யப்படுவது போல் எப்போதுமே வேதம் தமிழர்களுக்கு அந்நியமாக இருந்தது இல்லை. அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகிய மூன்று நாயன்மார்கள் பாடிய தேவாரப்பதிகத்தில் முழுமையாக வேதக்கருத்துக்களே பரவிக் கிடப்பதை வேதத்தையும் தேவாரத்தையும் ஒருங்கே படித்தவர்கள் அறிவார்கள். அதே போன்று மாணிக்கவாசகர் அருளிய திருவாசகத்தில் உபநிஷதக் கருத்துக்கள் பல்கி பெருகி இருப்பதையும் அறியலாம் மேலும் சிவஞானபோதம் வேதம் என்ற பசுவினிடத்தில் கறந்து காய்ச்சிய நெய் என்று அதன் ஆசிரியரே குறிப்பிட்டு இருக்கிறார்.
இவை அனைத்தையும் ஒப்பிட்டு பார்க்கும்போது ஆரியர்கள் இந்தியாவிற்குள் வருவதற்கு முன்னரே நம் நாட்டில் நிலவிய கருத்துக்கள் அனைத்தும் வேதத்தில் இடம்பெற்று பின்னர் பலமொழி வழியாக பரவியது என்பது தெரிகிறது. அப்படித்தான் தமிழ் மொழிக்கும், தமிழ் மக்களுக்கும் வேதக் கொள்கைகள் வந்திருக்க வேண்டும். எனவே தமிழர்களாகிய நமக்கு வேதம் முரணானதும் அல்ல, அந்நியமானதும் அல்ல
.
கேள்வி: இப்படி அனைவருக்கும் பொருந்தக் கூடிய வேதங்களில் கூறப்பட்டிருக்கும் முக்கிய விஷயங்கள் என்னென்ன என்பதை தயவு செய்து கூற வேண்டும்?
குருஜி: ஆதி மனிதன் கடலின் சீற்றத்தையும், புயலின் வேகத்தையும், நில அதிர்ச்சியின் தாக்கத்தையும் கண்டு பயந்தான். இடி இடிப்பதை, மின்னல் வெட்டுவதை, பெருமழை பெய்வதை, காட்டுத்தீ அனைத்தையும் சுட்டு சாம்பலாக்குவது எதனால் என்று எண்ணி தனக்குள் நடுங்கினான். பதில் தெரியாத இந்த கேள்விகளுக்கெல்லாம் அன்று விடை காண அவன் முயற்சித்தபோது அவனுக்கு கிடைத்த பதில் இந்த காரியங்களுக்கெல்லாம் ஒரு காரணம் இருக்கிறது அந்த காரணம் எது என்று அவன் யோசித்தபோது இயற்கை நிகழ்வுகள் ஒவ்வொன்றுக்கும் பின்னால் ஒரு தேவதை இருக்கிறது என்ற முடிவிற்கு வந்தான். வருணன் நீரையும், அக்னி நெருப்பையும் கட்டுப்படுத்துவதாகவும், ஆட்டுவிப்பதாகவும் நம்பினான். குறிப்பிட்ட தேவதைகளை வழிபடுவதாலும் சாந்தி செய்வதாலும் இயற்கை பாதிப்புகளிலிருந்து தான் தப்பித்துக் கொள்ளலாம் எனக் கருதினான். எனவே அந்த தேவதைகளை நோக்கி ஸ்தோத்திரப் பாடல்களை பாடினான். இத்தகைய பாடல்களில் மொத்த தொகுப்புகள் தான் நான்கு வேதங்களும் ஆகும்.
கேள்வி: தயவு செய்து இத்தகைய கேள்வி கேட்பதற்காக மன்னிக்கவும். மனிதனின் சிந்தனைக்கு வேதங்கள்தான் அன்றும், இன்றும் அடிப்படையாக அமைந்திருப்பதாக தாங்கள் குறிப்பிட்டீர்கள் இப்போது வேதத்தில் கூறப்பட்டிருப்பதாக நீங்கள் சொல்லும் விஷயங்கள் முதிர்ச்சி அடையாத குழந்தை தனமான கருத்துக்கள் போல்தான் உள்ளது. இந்த கருத்துக்களை கூறும் வேதங்களை அறிவு நூல்கள் என்று எப்படி எடுத்துக்கொள்ள இயலும்?
குருஜி: மேலோட்டமாக பார்க்கும்போது இது குழந்தைத்தனமாகத்தான் தோன்றும் ஆனால் அறிஞர்கள் இதை அப்படிக் கொள்வது இல்லை. முதலாவதாக நமது சாதாரண புலன்களுக்கு தென்படும் நிலம், நீர், நெருப்பு இவற்றோடு இந்த உலகம் முடிந்து விடுவது இல்லை. இந்த உலகின் தொடக்கம் காட்சிக்குப் புலனாகாத ஒரு மூலத்திலிருந்தே உற்பத்தியாகி இருக்கிறது என்ற உண்மையை உணரும்போது உலகத்தின் காரணம் கடவுள் என்பது புலனாகும். மின்னலுக்கும், இடிமுழக்கத்திற்கும் இந்திரன் காரணம் என்கின்ற பொழுது; மழைக்கும். பெரும் வெள்ளத்திற்கும் வருணன் காரணம் என்கின்றபொழுது இந்த உலகத்தில் நடைபெறுகின்ற ஒவ்வொரு சம்பவத்திற்கும் ஒரு மூலக்காரணம் உண்டு என்ற ஆழ்ந்த அறிவின் வெளிப்பாடுதான் வேதக்கருத்தாகும். இதுதான் உலகில் உள்ள தத்துவ ஆராய்ச்சி அனைத்திற்கும் அஸ்திவாரமாக அமைந்திருக்கிறது.
இயற்கைச் செயல்கள் ஒவ்வொன்றிற்கும் ஒரு தேவதை காரணமாக அமைகிறது எனும்போது இயற்கை நிகழ்வுகள் அனைத்தும் ஒரு ஒழுங்கு முறையிலும் சமச்சீரான கட்டுப்பாட்டு வகையிலும் அமைவதைக் காணலாம். மாறுபாடற்ற சீரான செயல்பாடு என்பது இயற்கையில் உள்ளதற்கு தெய்வங்கள் காரணங்கள் எனும்போது பாரபட்சமற்ற சமநோக்குடைய குணாதிசயமே தேவதைகளின் இயல்பாகிறது. இயற்கை நீதியும், தெய்வ நீதியும் ஒழுக்கம் என்ற வட்டத்திற்குள் வரும்போது மனித நீதியும் அதே வட்டத்துக்குள் வரவேண்டும் என்று வேதங்கள் சூசகமாக அறிவிக்கின்றன. ஒழுக்க வரையறைக்குள் இந்த மூன்று நீதியும் வராதபொழுது பேரழிவுகள் ஏற்படும் என்பதையும் வேதங்கள் சுட்டிக்காட்டத் தவறவில்லை. இந்த ஒழுக்க நீதியே ரிதம் என்று வேதம் கூறுகிறது. ராகத்தில் ரிதம் தவறினால் எப்படி ராகம் நாகமாக சீறுமோ அதே போன்றுதான் உலகத்தில் ரிதம் தவறினால் பெருஞ்சீற்றம் ஏற்படும்.
கேள்வி: காரண காரிய தொடர்பு என்ற தத்துவமே உலக வாழ்வின் ஆதார சுருதியாகும் என்று வேதம் எந்த நோக்கில் கூறுகிறது என்பதை இப்போது உணர முடிகிறது. இதில் இயற்கையின் ஒவ்வொரு நியதியையும், ஒவ்வொரு தேவதை கட்டுப்படுத்துகிறது என்றால் உலகில் பல தெய்வங்கள் உண்டா? வேதம் பல தெய்வ வழிபாட்டை வலியுறுத்துகிறதா?
குருஜி: பலவிதமான தேவதைகளைப் பற்றி ஆரம்பக்கால வேத மந்திரங்களில் பல குறிப்புகள் உள்ளன. ஆயினும் காலப்போக்கில் பல தெய்வ குறிப்புகள் குறைந்து ஒரே தெய்வம் முழுமுதற் தெய்வம் அதுவே வழிபாட்டிற்குரிய தெய்வம் என்ற கொள்கை படிப்படியாக வேதங்களில் குறிப்பிடப்படுவதை காணலாம். ஒவ்வொரு செயலுக்கும் தனித்தனி தெய்வங்களை குறிப்பிட்டுவிட்டு அந்த தனித்தனி தெய்வங்கள் ஒரு முழு முதற் தெய்வத்தின் வெவ்வேறு அம்சங்கள் என்ற கருத்தை விஸ்வகர்மா என்ற வார்த்தையில் நாம் அறியலாம் இந்த விஸ்வகர்மா என்ற வார்த்தைக்கு எல்லாவற்றையும் செய்ய வல்லவன் என்பது பொருளாகும். அவன் ஆயிரம் கண்களோடும், கைகளோடும் இருப்பதாக வேதம் வர்ணனை செய்கிறது. அதாவது இந்திரன் என்ற கையில் இடியையும், வருணன் என்ற கையில் மழையையும், விஸ்வகர்மன் ஏற்படுத்துவதாக நாம் கொள்ள வேண்டும். இதே விஸ்வகர்மன் பிரஜாபதி என்ற பெயராலும் அழைக்கப்படுகிறான். இந்த வார்த்தையின் பொருள் உயிர்களின் தலைவன் என்பதாகும். விஸ்வகர்மன், பிரஜாபதி ஆகிய இரு பெயர்களும் ஒரே தெய்வத்தையே குறிக்கும் பெயர்கள் என்பதை உணரவேண்டும், எனவே வேதத்தில் பல தெய்வ வழிபாடு வலியுறுத்தப்படவில்லை. ஒரு தெய்வ வழிபாடே கூறப்பட்டிருக்கிறது. இதை ஒரு வேத மந்திரத்தால் நாம் மிகத் தெளிவாக அறியலாம். ரிக் வேதத்தில் வரும் அந்த ஸ்லோகத்தை சொல்லுகிறேன் கேள். ஒன்றுதான் உள்ளது அதனையே அறிஞர்கள் அக்னி என்றும், எமன் என்றும் வெவ்வேறு பெயர்களால் குறிப்பிடுகிறார்கள் என்று கூறுவதை பார்க்கும்போது ஒரு தெய்வ கொள்கையே வேதக் கொள்கை ஆகும் என்பது நன்கு புலனாகும்.
கேள்வி: வேதம் ஏக தெய்வ கொள்கையை வலியுறுத்தும்போது வேதத்தை ஆதாரமாகக் கொண்ட இந்து தர்மத்தின் பல தேவதை வழிபாடு இன்று உள்ளதே அது ஏன்?
குருஜி: எந்த மதத்திலும் இல்லாத வழிபாட்டு சுதந்திரம் இந்து மதத்தில் மட்டும்தான் உண்டு. ஒரு மரக்கட்டையை எடுத்து இதுதான் முழுமுதற் கடவுள் என்று நான் வழிபடுவேயானால் அதை யாரும் தடுக்க இயலாது. அப்படி வழிபடுவது எனது தனிப்பட்ட சுதந்திரமாகும். மரத்தை வழிபட்டாலும், கல்லை வழிபட்டாலும் வழிபடும் நான் கல்லை, மரத்தை வணங்குவதாக கருதுவது இல்லை. முழுமையான இறைவன் அந்த பொருட்களில் இருப்பதாக கருதிதான் வழிபடுகிறேன். முருகனை வணங்குபவன் முருகன்தான் உலகத்தின் மூலம் என்கிறான். கண்ணனை வழிபடுகிறவன் அவன்தான் உலகத்தின் காரணம் என்கிறான். கண்ணன், முருகன் என்று பெயர்கள் வேறுபட்டாலும் உள்கருத்து என்னவோ ஆதிமூலமான ஆண்டவன் ஒருவனையே வழிபடுவதுதான். ஒரு மனிதனை தகப்பன் என்றும், கணவன் என்றும், சகோதரன் என்றும் வெவ்வேறு உறவு முறைகளில் அழைத்தாலும் அந்த மனிதன் என்பவன் என்னவோ ஒருவன்தான். இதே கருத்துதான் வேதத்தின் கருத்தும் இந்து தர்மத்தின் கருத்தும் ஆகும்.
கேள்வி: எந்த மதத்திலும் இல்லாத சுதந்திரத்தை இந்து தர்மம் நமக்கு தந்திருப்பதையும் ஒரு கவிதா விலாசத்தோடு ஒரே கடவுள்தான் உண்டு என்பதை விவரித்து இருப்பதையும் பார்க்கும்போது வேதத்தின் மைந்தர்கள் நாம் என்பதில் பெருமையாக இருக்கிறது. கடவுள் கொள்கையை விளக்கிய நீங்கள் வேதம் கூறும் ஆத்மக் கொள்கையை விளக்கினால் நன்றாக இருக்கும்.
குருஜி: இறைவனின் படைப்பில் இயங்குகின்ற உடல்கள் அனைத்திற்குள்ளும் ஆத்மாவானது நிறைந்து இருக்கின்றது. ஆத்மாவை நாம் கண்களால் பார்க்க முடியாவிட்டாலும், மற்ற புலன்களாலும் உணர முடியாவிட்டாலும் அது இருப்பது சர்வ நிச்சயமானது. ஆத்மா நித்தியமானது உடல் அழிந்து போனாலும் ஆத்மா அழிந்து போவதில்லை. ஆத்மாவை தண்ணீர் நனைக்காது, தீ சுடாது, ஆயுதங்கள் பங்கப்படுத்தாது, ஒரு பெண் பிறந்தகத்திலிருந்து புக்ககம் போவதுபோல்தான் ஒரு உடலிலிருந்து இன்னொரு உடலுக்கு மாறுகிறது என்று இந்துக்களாகிய நாம் இன்று நம்புவதுபோல்தான் வேத காலத்திலும் நம்பிக்கை இருந்தது.
ஆனால் உடலைவிட்டு ஆத்மா வெளியேறியபின் அதற்கு என்ன நிகழ்கிறது என்பதில் வேதத்தின் கருத்துக்கும் இன்றைய நம்பிக்கைகளுக்கும் சற்று மாறுபாடு இருக்கின்றது ஒருவன் இறந்தபின் அவனுடைய ஆன்மாவானது நல்லதை செய்தவனாக இருந்தால் சொர்க்கத்திற்கும் தீயதை செய்தவனாய் இருந்தால் நரகத்திற்கும் செல்வதாக மட்டும்தான் வேதம் கூறுகிறதே தவிர மறுபடியும் ஆத்மா ஜனனம் எடுப்பதைப் பற்றி எதுவும் பேசவில்லை. இந்து மதத்தின் ஆதாரக்கருத்தே மறுபிறப்பு என்பதுதான் ஆனால் அந்த ஆதாரத்திற்கு வேதத்தில் ஆதாரம் இல்லை என்னும்போது வியப்பாகவும், விந்தையாகவும் இருக்கிறது. பிற்காலத்தில் வந்த ஸ்ரீ மத்வர் மறுபிறப்பு கொள்கையை இந்துக்களிடம் வேர்விடச்செய்தார் ஆனால் ஆதிசங்கரரின் பஜகோவிந்தத்தில் மறுபிறப்பு பற்றி விரிவாக கூறப்பட்டிருப்பதையும் பார்க்கும்போது மத்வாச்சாரியாருக்கு முன்பே மறுபிறப்புக் கொள்கை மக்களிடையே மிக நன்றாக வேர் ஊன்றி இருந்திருப்பதை நாம் அறிய முடிகிறது. ஆனாலும் வேத பிரமானங்கள் சிலவற்றில் பாவபுண்ணியங்கள் பற்றியும் சொர்க்க, நரகம் பற்றியும், மறுபிறப்புப் பற்றியும் சிற்சில குறிப்புகள் காணப்படுகின்றன அந்த குறிப்புகளே நாலாவட்டத்தில் அறிஞர்களின் அறிவாராய்ச்சிக்கு பின்னரும் அனுபவத்திற்குப் பின்னரும் புனர்ஜென்மம் பற்றிய கொள்கை விரிவாக்கத்திற்கு காரணமாக இருந்திருக்க வேண்டும். மறுபிறப்பை பற்றி வேதங்கள் உண்டு என்றோ இல்லை என்றோ கூறாததற்கு என்ன காரணம் என்பது நமக்கு புரியவில்லை இதற்காக இருக்கலாம், அதற்காக இருக்கலாம் என்று நமது சுய கருத்துக்களை வாதப் பிரதிவாதங்களாக பேசிக்கொள்வதில் எந்த பயனும் இல்லை.
கேள்வி: ஐயா! வேதம் மறுபிறப்பை பற்றி எதுவும் கூறாதபோது மறுபிறப்பு என்பது உண்மையானது தானா அல்லது மனிதனின் வெறும் கற்பனை தானா?
குருஜி: ஒரு விஷயத்தை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். இன்றைய வடமொழி பண்டிதர்களிடையே வழக்கத்தில் இருக்கும் சமஸ்கிருதம் வேறு; வேதத்தில் சொல்லப்பட்டிருக்கும் சமஸ்கிருதம் வேறு வேதத்தில் சில வார்த்தைகளுக்கு இன்றைய சூழலிலுள்ள அர்த்தத்தை பார்த்து புரிந்து கொள்ள நாம் முயற்சிக்கிறோம். அது தவறுதலான முயற்சியாக கூட இருக்கலாம். காரணம் அர்த்தமே தெரிந்து கொள்ள முடியாத பதங்கள் பல வேதங்களில் உள்ளது உதாரணமாக க்லீம், ட்ரீம் போன்ற வார்த்தைகளை எடுத்துக்கொள்வோம் இவைகளுக்கு என்ன அர்த்தம் என்று யாருக்கும் தெரியாது ஆனாலும் இவைகளை மூலமந்திரங்கள், பீஜமந்திரங்கள் என்று மந்திர சாஸ்திரம் கூறுகிறது. இதே போன்று பொருளில்லாத வார்த்தைகள் பல வேதங்களில் பரவிக்கிடகிறது. இத்தகைய பதங்களுக்கு உண்மையான அர்த்தத்தை கண்டுபிடிக்கும்போதுதான் வேதம் கூறும் உண்மை பொருளை விளங்கி கொள்ள முடியும் மேலும் இன்னொரு விஷயமும் இருக்கிறது. வேதங்கள் இறைவனைப் பற்றியோ உலக பொருட்கள் பற்றியோ கூற எழுந்த நூல்கள் என்று மட்டும் கருதினால் அது மாபெரும் தவறாகும். வேதங்கள் ஒரு சப்த கடல் அந்த ஒலி அலைகள் மனிதனையும், இயற்கையையும் இறைவனோடு இணைக்கும் மாயக்கயிறு ஆகும். வேதத்தின் ஒலி அமைப்புதான் அதன் ஜீவன் ஆகும். ஆகவே வேதத்தில் கூறப்பட்டிருக்கின்ற கருத்துக்களையும் தாண்டி பல விஷயங்கள் இருக்கின்றது. அதையும் நாம் அறியும் போதுதான் அல்லது அறிய முயற்சிக்கும்போதுதான் உண்மை நமக்கு தெரியும் மேலும் வேதத்தில் உள்ள பிரமானங்கள் மறுபிறப்பு பற்றி பேசுவதனால் என்னை பொறுத்தவரை புனர் ஜென்மம் என்பது கற்பனையல்ல, கதையும் அல்ல அனுபவப்பூர்வமான உண்மைதான் என்று கூறுவதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை.
கேள்வி: ஆதி சங்கரரைப் பற்றி குறிப்பிட்டீர்கள் அவர் இந்த உலகம் என்பதே ஒரு மாயை என்கிறார். அவர் மட்டும்தான் இப்படி கூறுகிறாரா? மற்றவர்கள் வேறு யாரும் அப்படி கூறி இருக்கிறார்களா? வேதங்கள் உலகத்தைப் பற்றி முடிந்த முடிவாக என்ன கூறுகிறது என்பதை விளக்கமாக கூறவும்.
குருஜி: இந்த உலகம் உண்மையானதா, பொய்யானதா என்பதை பற்றி தத்துவ ஞானிகளிடம் பலத்த கருத்து வேறுபாடுகள் நிலவுகிறது ஆதிசங்கரர் உலகத்தை கற்பனையானது என்கிறார். கௌதமபுத்தரோ உலகம் என்பதே இல்லை என்கிறார். இருவரின் கருத்துக்கும் இல்லை என்ற வார்த்தையும் கற்பனை என்ற வார்த்தையும் வேறுபடுகிறதே தவிர பொருள் என்னவோ ஒன்றுதான் ஆனால் சைவசித்தாந்திகள் உலகம் என்பது நிஜமானது என்கிறார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால் உலகம் பொய் என்பதற்கும். வேதங்களில் ஆதாரம் இருக்கிறது உண்மை என்பதற்கும் ஆதாரம் இருக்கிறது. இதில் மிக முக்கியமானது உலகம் கற்பனையானது என்பதற்கு சூசகமான ஆதாரங்கள் மட்டுமே வேதத்தில் உள்ளன வெளிப்படையாக வேதங்கள் உலகத்தை இல்லை என்று கூறவில்லை.
உலகம் எதிலிருந்து தோன்றியது என்பது பற்றி வேதங்களில் பல மாறுபட்ட கருத்துக்கள் இருக்கிறது அதில் சிலவற்றை இங்கு கூறினால் போதும் என்று கருதுகிறேன். தண்ணீர்தான் மூலப்பொருள் அதிலிருந்துதான் ஒன்றன்பின் ஒன்றாக பஞ்ச பூதங்கள் உற்பத்தியாயின என்றும் அப்பூதங்களிலிருந்தே உலகம் உருவானதாக வேதங்கள் கூறுகிறது. இன்னொரு கருத்து அறிவுடைய ஒருவனே இந்த உலகத்திற்கு காரணமாக இருக்கிறான் என்பதாகும். இந்த இரண்டாவது கருத்தில்தான் உலகம் உண்மையா, பொய்யா என்பதற்கான விடை மறைந்து கிடக்கிறது.
அறிவுடைய ஒருவன் உலகத்திற்கு காரணமாக இருந்தான் என்றால் அவன் தன்னிடமிருந்தே உலகத்தை படைத்தானா அல்லது வெளியில் உள்ள ஜடப்பொருளை வைத்து உலகத்தை உருவாக்கினானா என்ற கேள்விகளுக்கு விடையை வேதம் தருகின்றபோது அழகான பதில் ஒன்று நமக்கு கிடைக்கிறது. ஆம்! அவன் தன்னிடமிருந்தே உலகத்தை படைத்தான் அதே நேரம் வெளிப்பொருளாகிய ஜடத்திலிருந்தும் உலகத்தைப் படைத்தான் என்ற இரண்டு பதிலையும் வேதம் கூறுகிறபோது நமக்கு குழப்பம் வருகிறது ஆனால் இதில் குழப்பத்திற்கு ஒன்றுமில்லை. ஆழ்ந்துபார்த்தால் உண்மை வெளிச்சமாகத் தெரியும். இறைவன் இயற்கையை மட்டுமே எல்லையாகக் கொண்டு நிற்பவன் அல்ல. இயற்கையையும் தாண்டி இருப்பவன் இறைவன். இவ்வுலகில் உள்ள அனைத்துமே இறைவனுக்குள் அடங்கியதுதான் எனவே அவன் தானேயான தனக்குள் உள்ள பொருளைக் கொண்டு உலகை சிருஷ்டித்து உள்ளான் என்பது வேதத்தின் உண்மை பொருளாகும். பக்தி நிலையை செழுமைப்படுத்திக்கொள்ள உலகமே இறைவன் என்ற கொள்கையும் முக்தி நிலைக்கு வழி நடக்க இறைவனை உலகம் என்ற கொள்கையும் ஊன்றுகோல்களாக இருக்கும் என்பதே ஐயமில்லை. உலகம் கட்டுப்பாடான ஒழுங்கில் இயங்குவதை காணும்போது இறைவன் தனக்குள் இருந்தும் தானாகவும் உலகை உருவாக்கி உள்ளதை உணர முடியும்
கேள்வி: ஒழுங்கு என்ற வார்த்தையை நீங்கள் பயன்படுத்தினீர்கள் இந்த ஒழுங்கு அல்லது ஒழுக்கம் உலகிற்கு மட்டும்தானா? மனிதனுக்கும் அது உண்டா? அதை பற்றி வேதங்கள் என்ன கூறுகின்றன?
குருஜி: பொதுவாக வேதங்களைப் பற்றி விமர்சனம் செய்யும் நவீன சிந்தனைவாதிகள் வேதங்களில் பலியிடுதல்கள் பற்றியும் யாகங்களை பற்றியும் புரோகிதர்களின் பெருமைகளை பற்றியும் பேசப்படுகிறதே தவிர சாதாரண மனிதனுக்கு வேண்டியவைகள் எதை பற்றியும் கூறப்படவில்லையென்று சமீபகாலமாக மிக அதிகமாக பேசி வருகிறார்கள். அவர்களின் கருத்துக்கள் தவறுதலானது மட்டுமல்ல அபாயகரமானது என்பதையும் நாம் உணர வேண்டும். தனி மனித ஒழுக்கத்தை வேதம் கடவுளின் இருப்பை விட அதிக முக்கியத்துவம் கொடுத்து பேசுகிறது. ஒவ்வொரு மனிதனும் ஐந்து விதமான கடமைகளை செய்யவேண்டும் என்பதை வேதம் வலியுறுத்துகிறது. தனது குடும்பத்திற்கு செய்ய வேண்டிய கடமை, உறவின் முறையாகிய சமுதாயத்திற்கு செய்யக்கூடிய கடமை, நசுக்கப்பட்ட ஏழைகளுக்கு செய்யக்கூடிய கடமை, தனது குல முன்னோர்கள், ஞானிகள் ஆகியோருக்கு செய்யக்கூடிய கடமை, இறைவனுக்கு செலுத்தும் அஞ்சலி என்ற கடமை ஆகிய ஐந்து கடமைகளை மட்டுமல்லாது ஆறாவதாக மனித ஜீவன்கள் தவிர்த்த மிருக ஜாதியினருக்கும் அனைத்து மனிதனும் தன்னால் தீங்கு வராது நடந்துகொள்ளவேண்டும் என்று வேதங்கள் கூறுகின்றது. இந்த கடமைகளை தர்மம் என்ற வார்த்தையால் வேதம் அழைக்கிறது. எந்த நிலையிலும் தர்மநிலையிலிருந்து மனிதன் விலகக்கூடாது அப்படி விலகினால் அவன் மனித நிலையிலிருந்தே விலகியவன் ஆவான் என்று அது கூறுகிறது. மேலும் பொதுநலன், தியாகம், புலன் அடக்கம் இவைகளைக் கொண்ட சாதாரண மனிதன்கூட தெய்வ நிலைக்கு உயர்ந்து விடுவான் என்றும் வேதங்கள் அறுதியிட்டு கூறுகின்றன.
கேள்வி: வேதக் கொள்கைகளைப் பற்றி எளிமையாகவும், விளக்கமாகவும் கூறினீர்கள் இனி வேதங்களை பற்றி வேறு தகவல்கள் நான் அறிய தகுதி உடையவன் என்றால் தயவு செய்து கூறுங்கள்?
குருஜி: ரிக், யஜர், அதர்வண, சாம என்ற நான்கு வேத பெயர்களும் அனைவரும் அறிந்ததாகும். இதில் ரிக் வேதம் 21 பிரிவுகளாகவும், யஜ÷ர் வேதம் 109 பிரிவுகளாகவும், சாம வேதம் 1000 பிரிவுகளாகவும், அதர்வண வேதம் 50 பிரிவுகளாகவும் ஆக மொத்தம் நான்கு வேதங்களும் 1180 பிரிவுகளாக உள்ளது. இது மட்டுமல்லாது ஒவ்வொரு வேதமும் தனித்தனியே நான்கு பிரிவுகளாக அதாவது மந்திரசம்ஹிதைகள், பிரம்மானங்கள், ஆரண்யங்கள், உபநிஷதங்கள் என பிரிக்கப்பட்டுள்ளது.
சமூக வாழ்வில் செழிப்பும், மறு உலக வாழ்வில் விழிப்பும் பெறுவதற்கு மந்திரசம்ஹிதைகள் வழிகாட்டுகின்றன மேலும் தியானம் காரியசித்தி மந்திர உச்சாடனங்கள் ஆகியவைகளை பயன்படுத்தும் முறைகளை இவைகள் கூறுகின்றன. இவைகள் பிரம்மச்சாரிகள் மட்டுமே பயன்படுத்தவேண்டும் என்பதை வேதங்கள் அறுதியிட்டு கூறுகின்றன.
பிரம்மானப் பகுதி யாகங்கள், சடங்கு முறைகள் வேள்வியின் போது மந்திரங்களை உச்சரிக்கும் விதம் ஆகியவைகளை பற்றியும் வேத சூத்திரங்களுக்கு விளக்கங்களும் இதில் உள்ளன இல்லறவாசிகளுக்கு உரியவைகள் இவைகள் என்று வேதம் கூறுகின்றன.
ஆரண்யங்கள் எனப்படுபவை வேதங்களின் ரகசியார்த்தங்களை தமக்குள் கொண்டுள்ளது. அதாவது யாகங்கள் மற்றும் சடங்குகளில் உண்மையான அர்த்தங்கள் ஆரண்யங்களின் விளக்கமாக அறிவுபூர்வமாக கூறப்பட்டிருக்கிறது. இப்பகுதி உலக வாழ்வை துறந்து சந்நியாச வாழ்வை மேற்கொள்ள சித்தமாக இருப்பவர்களுக்கு மட்டுமே உரியதாகும்.
உபநிஷதங்கள் வேதங்களிலுள்ள மிக முக்கிய பிரிவு ஆகும். இதில் ஜீவாத்மாவானது இறைவனான பரமாத்மாவை அறிந்து கொள்ளும் வகைகளும் அப்பரமாத்மாவோடு ஜீவன்கள் இரண்டற கலக்கும் உபாயத்தையும் விளக்குகிறது. இது சந்நியாச வாழ்வின் உச்சநிலையில் இருப்பவர்களுக்கே உரியவைகள் ஆகும்.
ஒரு ஓடையின் அருகில் ஒதுங்கினால் தாகம் தீர நீர் கிடைக்கும். மரத்தின் நிழலில் தங்கினால் சோர்வு தீர சுகம் கிடைக்கும். அரசனின் அருகில் இருந்தால் அதிகார பலம் கிடைக்கும் வேந்தனையும் துரும்பெனக் கருதும் துறவிகளின் திருவடியில் ஒதுங்கினால் உலகத்தையே துச்சமெனக் கருதும் திடம் கிடைக்கும். ஞானம் கிடைக்கும். முக்தியும் கிடைக்கும் இப்படி அனைத்தையும் வாரி வழங்கும் ஞானிகளின் பரம்பரையில் வந்திருக்கும் யோகி ஸ்ரீ ராமானந்த

sriramanandaguruji- பண்பாளர்
- பதிவுகள் : 122
புள்ளிகள் : 345
Reputation : -1
சேர்ந்தது : 02/08/2010
வசிப்பிடம் : thirukkovillur
Similar topics
» தமிழர்கள் விதியை நம்பாதவர்களா ?
» முகாம்களில் உள்ளவர்கள் அகதிகளல்ல, தமிழர்கள்: கருணாநிதி!
» வன்னி முகாம்-10000 தமிழர்கள் விடுதலை!
» ஆஸி. கடலில் படகு மூழ்கி தமிழர்கள் உள்பட 27 அகதிகள் பலி!
» தமிழர்கள் மீது பாசம் பொத்துக் கொண்டு வரும்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum