தமிழ் | Tamil | Forum
தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

கூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.

புகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.

Join the forum, it's quick and easy

தமிழ் | Tamil | Forum
தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

கூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.

புகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.
தமிழ் | Tamil | Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வணக்கம் என் பெயர் நாகராசன்.இரா
by rajan_1972 Fri Apr 10, 2020 7:20 pm

» சிறந்த பொழுதுபோக்கு இணையதளம்!
by pba Sat Jul 02, 2016 8:11 pm

» ஏற்றுமதி உரிமம் பெறும் விண்ணப்பம்
by tamilnews Tue Mar 24, 2015 8:00 pm

» மொபைல், டிடிஎச் ரீசார்ஜ் செய்யப் போறீங்களா? இந்த சலுகைகளைப் பாருங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:41 am

» மொபைல் ரீசார்ஜ் செய்து ஷாப்பிங் கூப்பன் இலவசமாக பெறுங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:38 am

» மெமரி கார்டு வாங்கப் போறீங்களா? 74% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:36 am

» அமேசானில் பெண்களுக்கான ஆடைகள் 70% வரை தள்ளுபடி !
by dsytamil Wed Jan 14, 2015 1:34 am

» அமேசானில் ஆண்களுக்கான ஆடைகள் 60% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:31 am

» லெனோவா டேப்ளட் 43% சலுகை விலையில் ரூ. 5949 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:28 am

» ப்ளிப்கார்ட் தளத்தில் சிறுவர்களுக்கான ஆடைகள் 70% வரை + 30% கூடுதல் தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:14 am

» அமேசான் தளத்தில் 50% தள்ளுபடி விலையில் மொபைல்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:13 am

» ரூ. 7499 மதிப்புள்ள மைக்ரோமேக்ஸ் ஏ1 ஆன்ட்ராய்டு மொபைல் இப்போது ரூ. 5499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:11 am

» ரூ. 19999 மதிப்புள்ள நோக்கியா லூமியா 625 மொபைல் ரூ. 7499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:10 am

» ப்ராண்டட் காலணிகளுக்கு 70% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:08 am

» ஆன்லைன் ஷாப்பிங்கில் ப்ரிண்டர்களுக்கு 33% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:06 am

» ஆன்லைனில் பொருள் வாங்கப் போறீங்களா? 70% வரை பணத்தை சேமியுங்கள்!
by dsytamil Tue Jan 13, 2015 12:30 am

» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...!
by sathikdm Sun Oct 19, 2014 4:45 pm

» சிறுதொழில் செய்பவர்கள் இணையதளம் தொடங்க வேண்டியதின் அவசியம்!
by pba Sat Sep 27, 2014 12:58 am

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:47 pm

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:42 pm

» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
by santhoshpart Wed Aug 27, 2014 4:22 pm

» “சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா!”
by santhoshpart Wed Aug 13, 2014 3:54 pm

» Daily Rs.500/- and Above
by K.MARIAPPAN Wed Jul 30, 2014 12:01 pm

» http://www.neobux.com/?r=narasimmant
by Navaneethakrishnan Wed Jul 02, 2014 3:41 pm

» வணக்கம் என் பெயர் வேணு
by A.Venu Fri Jun 27, 2014 10:10 am

» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?
by sathikdm Wed Jun 18, 2014 3:24 pm

» தமிழ் மொழி மூல கல்வி இணையதளம்
by afdhaal Wed May 28, 2014 9:22 pm

» வருக. வருக. வணக்கம்.
by மகி Mon May 12, 2014 3:55 pm

» அறிமுகம் -விநாயகா செந்தில்.
by மகி Mon May 12, 2014 3:53 pm

» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....!
by vinayagasenthil Sat May 10, 2014 9:04 pm

பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

ஆசிய கோப்பை கிரிக்கெட்: பாக்.கை வீழ்த்தி இறுதியில் நுழைந்தது இந்தியா!

2 posters

Go down

ஆசிய கோப்பை கிரிக்கெட்: பாக்.கை வீழ்த்தி இறுதியில் நுழைந்தது இந்தியா! Empty ஆசிய கோப்பை கிரிக்கெட்: பாக்.கை வீழ்த்தி இறுதியில் நுழைந்தது இந்தியா!

Post by மகி Sun Jun 20, 2010 10:25 pm

இலங்கை தம்புல்லாவில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் நேற்றைய பரபரப்பான ஆட்டத்தில் இந்திய அணி, 3 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

10 ஆவது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கையின் தம்புல்லாவில் நடந்து வருகிறது. 4 நாடுகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு நுழையும்.

தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி,நடப்பு சாம்பியன் இலங்கையிடம் தோல்வி கண்டது. இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் எளிதில் வங்கதேசத்தை தோற்கடித்தது.

எனவே நேற்று நடந்த ஆட்டம் பாகிஸ்தான் அணிக்கு வாழ்வா-சாவா? ஆட்டம் என்பதால், இப்போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

அதன்படி டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட் செய்தது.தொடக்க ஆட்டக்காரர்கள் சல்மான் பட்டும், இம்ரான் பர்ஹத்தும் நிதானமாக விளையாடி நல்ல தொடக்கத்தை தந்தனர். முதல் விக்கெட்டுக்கு 71 ரன்கள் சேர்த்த நிலையில் இந்த ஜோடி பிரிந்தது. பர்ஹத் 25 ரன்களில் அவுட் ஆனார்.

அடுத்து வந்த சோயிப் மாலிக்கும், சல்மான்பட்டுக்கு நன்கு ஒத்துழைப்பு கொடுத்ததால் பாகிஸ்தான் வலுவான ஸ்கோரை நோக்கி பயணித்தது.ஆனால் அடுத்த 4 ஓவர்களில் மாலிக் (39 ரன்), சல்மான் பட் (74 ரன், 85 பந்து, 9 பவுண்டரி), உமர் அமின் (5 ரன்) ஆகியோர் வெளியேறியதால் பாகிஸ்தான் ரன் வேகம் குறைந்தது.

இதன் பிறகு குறிப்பிட்ட இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்த நிலையில், இறுதிக்கட்டத்தில் கம்ரன் அக்மல் (51 ரன், 41 பந்து, 2 பவுண்டரி, 3 சிக்சர்) அதிரடி காட்டியதால் பாகிஸ்தான் சவாலான ஸ்கோரை பெற்றது.

இறுதியாக 49.3 ஓவர்களில் 267 ரன்களுடன் ஆட்டம் இழந்தது பாகிஸ்தான் அணி.

இதனைத் தொடர்ந்து 268 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் கம்பீரும், ஷேவாக்கும், பாகிஸ்தான் வேக கூட்டணி அக்தர்-ஆமிர் பந்து வீச்சில் தொடக்கத்தில் திணறினார்கள்.

பாகிஸ்தான் பவுலர்கள் அடிக்கடி ஷார்ட்பிட்ச் பந்து போட்டு நெருக்கடி கொடுத்தனர். வழக்கத்துக்கு மாறாக தடுமாறிய அதிரடி மன்னன் ஷேவாக், தசைப்பிடிப்பாலும் அவதிப்பட்டதால் அவரது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை.

இதனால் அவரால் வெறும் 10 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது(32 பந்து, ஒரு பவுண்டரி). அடுத்து வந்த விராட் கோக்லியும் 18 ரன்களுடன் ஆட்டம் இழந்தார்.

இதை தொடர்ந்து கம்பீருடன், கேப்டன் டோனி ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை நல்ல நிலைக்கு உயர்த்தினர்.அபாரமாக ஆடிய கம்பீர் அரைசதத்தை கடந்தார்.

அணியின் ஸ்கோர் 180 ரன்களை எட்டிய போது, கம்பீர் 83 ரன்களில் (97 பந்து, 6 பவுண்டரி, ஒரு சிக்சர்) கேட்ச் கொடுத்து ஆட்டமிழ்ந்தார்.

இதன் பின்னர் வந்த ரோகித் ஷர்மா (22 ரன்) மற்றும் கேப்டன் டோனி (56 ரன்) ஆகியோர் அடுத்தடுத்து பெவிலியன் திரும்பியதால், போட்டியில் பரபரப்பு தொற்றிக் கொண்டது.

இறுதியி வெற்றி யாருக்கு? என்பது மதில் மேல் பூனையானது.ரவீந்திர ஜடேஜா 6 ரன்களில் ஆட்டம் இழந்த நிலையில், சுரேஷ் ரெய்னா நம்பிக்கைïட்டினார். இறுதிகட்டத்தில் கிடைத்த பவர்-பிளே (45-49-வது ஓவர் வரை )நெருக்கடியை குறைக்க உதவியது.

கடைசி ஓவரில் இந்தியாவின் வெற்றிக்கு 7 ரன்கள் தேவைப்பட்டது.ரெய்னாவும், ஹர்பஜன்சிங்கும் களத்தில் நின்றனர். 50-வது ஓவரை பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஆமிர் வீசினார்.

முதல் பந்தில் ரெய்னா ஒரு ரன் எடுத்தார். அடுத்த பந்தை ஹர்பஜன்சிங் சந்தித்த போது, ஒரு ரன்னுக்கு ஆசைப்பட்டு தேவையில்லாமல் ரெய்னா 34 ரன்களுடன் ரன்-அவுட் ஆனார்.இதனால் மீண்டும் சிக்சல் ஏற்பட்டது.

இதையடுத்து 8 ஆவது விக்கெட்டுக்கு இறங்கிய பிரவீன்குமார் 3 ஆவது பந்தில் 2 ரன்னும், 4 ஆவது பந்தில் ஒரு ரன்னும் எடுத்தார். இதனால் வெற்றிக்கு கடைசி 2 பந்தில் 3 ரன்கள் தேவைப்பட்டது. 5 ஆவது பந்தை எதிர்கொண்ட ஹர்பஜன்சிங் அட்டகாசமாக சிக்சர் அடிக்க, திரிலிங்கான ஆட்டம் இந்தியாவுக்கு வெற்றியை தேடித்தந்தது.

இந்திய அணி 49.5 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 271 ரன்கள் குவித்து, 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, பாகிஸ்தானை போட்டியிலிருந்து வெளியேற்றியது.கம்பீர் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

2 ஆவது வெற்றியை பெற்றதன் மூலம் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.இரண்டு ஆட்டத்திலும் தோல்வியடைந்த பாகிஸ்தான் போட்டியை விட்டு வெளியேற்றப்பட்டது. முன்னதாக 2 ஆட்டத்தில் வெற்றி பெற்றிருந்த இலங்கையும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்து விட்டது. பாகிஸ்தானைப் போல் 2 ஆட்டத்தில் தோல்வி கண்ட வங்காளதேசமும் இறுதி வாய்ப்பை இழந்தது.

இந்த தொடரில் இன்னும் 2 லீக் ஆட்டங்கள் (பாகிஸ்தான்-வங்காளதேசம் (21 ஆம் தேதி), இந்தியா-இலங்கை (22 ஆம் தேதி) மீதம் இருக்கின்றன.

இவற்றின் முடிவு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.வருகிற 24 ஆம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா-இலங்கை அணிகள் மோத உள்ளன.

நன்றி: வெப்துனியா.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

ஆசிய கோப்பை கிரிக்கெட்: பாக்.கை வீழ்த்தி இறுதியில் நுழைந்தது இந்தியா! Empty Re: ஆசிய கோப்பை கிரிக்கெட்: பாக்.கை வீழ்த்தி இறுதியில் நுழைந்தது இந்தியா!

Post by tamilparks Mon Jun 21, 2010 4:05 pm

ஆசிய கோப்பை கிரிக்கெட்: பாக்.கை வீழ்த்தி இறுதியில் நுழைந்தது இந்தியா! 7620
tamilparks
tamilparks
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 152
புள்ளிகள் : 167
Reputation : 4
சேர்ந்தது : 20/05/2010
வசிப்பிடம் : கன்னியாகுமரி

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum