தமிழ் | Tamil | Forum
தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

கூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.

புகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.

Join the forum, it's quick and easy

தமிழ் | Tamil | Forum
தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

கூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.

புகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.
தமிழ் | Tamil | Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வணக்கம் என் பெயர் நாகராசன்.இரா
by rajan_1972 Fri Apr 10, 2020 7:20 pm

» சிறந்த பொழுதுபோக்கு இணையதளம்!
by pba Sat Jul 02, 2016 8:11 pm

» ஏற்றுமதி உரிமம் பெறும் விண்ணப்பம்
by tamilnews Tue Mar 24, 2015 8:00 pm

» மொபைல், டிடிஎச் ரீசார்ஜ் செய்யப் போறீங்களா? இந்த சலுகைகளைப் பாருங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:41 am

» மொபைல் ரீசார்ஜ் செய்து ஷாப்பிங் கூப்பன் இலவசமாக பெறுங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:38 am

» மெமரி கார்டு வாங்கப் போறீங்களா? 74% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:36 am

» அமேசானில் பெண்களுக்கான ஆடைகள் 70% வரை தள்ளுபடி !
by dsytamil Wed Jan 14, 2015 1:34 am

» அமேசானில் ஆண்களுக்கான ஆடைகள் 60% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:31 am

» லெனோவா டேப்ளட் 43% சலுகை விலையில் ரூ. 5949 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:28 am

» ப்ளிப்கார்ட் தளத்தில் சிறுவர்களுக்கான ஆடைகள் 70% வரை + 30% கூடுதல் தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:14 am

» அமேசான் தளத்தில் 50% தள்ளுபடி விலையில் மொபைல்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:13 am

» ரூ. 7499 மதிப்புள்ள மைக்ரோமேக்ஸ் ஏ1 ஆன்ட்ராய்டு மொபைல் இப்போது ரூ. 5499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:11 am

» ரூ. 19999 மதிப்புள்ள நோக்கியா லூமியா 625 மொபைல் ரூ. 7499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:10 am

» ப்ராண்டட் காலணிகளுக்கு 70% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:08 am

» ஆன்லைன் ஷாப்பிங்கில் ப்ரிண்டர்களுக்கு 33% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:06 am

» ஆன்லைனில் பொருள் வாங்கப் போறீங்களா? 70% வரை பணத்தை சேமியுங்கள்!
by dsytamil Tue Jan 13, 2015 12:30 am

» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...!
by sathikdm Sun Oct 19, 2014 4:45 pm

» சிறுதொழில் செய்பவர்கள் இணையதளம் தொடங்க வேண்டியதின் அவசியம்!
by pba Sat Sep 27, 2014 12:58 am

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:47 pm

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:42 pm

» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
by santhoshpart Wed Aug 27, 2014 4:22 pm

» “சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா!”
by santhoshpart Wed Aug 13, 2014 3:54 pm

» Daily Rs.500/- and Above
by K.MARIAPPAN Wed Jul 30, 2014 12:01 pm

» http://www.neobux.com/?r=narasimmant
by Navaneethakrishnan Wed Jul 02, 2014 3:41 pm

» வணக்கம் என் பெயர் வேணு
by A.Venu Fri Jun 27, 2014 10:10 am

» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?
by sathikdm Wed Jun 18, 2014 3:24 pm

» தமிழ் மொழி மூல கல்வி இணையதளம்
by afdhaal Wed May 28, 2014 9:22 pm

» வருக. வருக. வணக்கம்.
by மகி Mon May 12, 2014 3:55 pm

» அறிமுகம் -விநாயகா செந்தில்.
by மகி Mon May 12, 2014 3:53 pm

» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....!
by vinayagasenthil Sat May 10, 2014 9:04 pm

பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

ஸ்ரீ கச்சியப்ப முனிவர் வரலாறு

3 posters

Go down

ஸ்ரீ கச்சியப்ப முனிவர் வரலாறு Empty ஸ்ரீ கச்சியப்ப முனிவர் வரலாறு

Post by நந்தி Tue Jun 15, 2010 8:09 am

ஸ்ரீ கச்சியப்ப முனிவர் வரலாறு


ஸ்ரீ கச்சியப்ப முனிவர் தொண்டை நாட்டுத் தணிகைத் திருப்பதியில் சைவ வேளாளர் குலத்தில் அபிஷிக்தர்மரபில் அவதாரம் செய்தருளினார். தக்க பிராயத்தில் கற்பவை கசடறக்கற்று, சிவஸ்தல யாத்திரை செய்யத் தொடங்கினார். சிதம்பரம் முதலிய திருப்பதிகளைத் தரிசித்து, ஸ்ரீ ஞானக்கோமுத்தியாகிய திருவாவடுதுறையைச் சார்ந்தார். திருமடாலயத்தில் திருக்கைலாச பரம்பரைச் சித்தாந்த சைவ ஞான பாநுவாகிய ஸ்ரீ நமச்சிவாய மூர்த்தி யைத் தரிசித்து, திருவருள் நோக்கஞ் சிந்திக்கப் பெற்றார்.

சிவாகமத்தில் இரண்டு லக்ஷ சுலோகமும், மெய்கண்ட சாத்திரம் பதினான்கும், பண்டாரசாத்திரம் பதினான்கும் ஆகிய ஞானநூல்களை நன்குணர்ந்த ஸ்ரீலஸ்ரீ திருச்சிற்றம்பல தேசிகராம் 12 ஆம் குருமஹாசந்நிதானம் அவர்களின் திவ்ய தரிசனத்தை முனிவர் பெற்றுய்ந்தார். ஞான தேசிகர் அவர்பால் திருவுளமிரங்கித் தமது துவிதீய ஆசிரியராகிய ஸ்ரீ அம்பலவாண தேசிகருக்கு ஆஞ்ஞை செய்தருள, அத்தேசிக சுவாமிகள் கச்சியப்ப முனிவர் பெருமானுக்கு சமய தீக்ஷையும், விசேட தீக்ஷையும், மந்திர காஷாயமும் கொடுத்தருளினர்.


Last edited by நந்தி on Tue Jun 15, 2010 8:11 am; edited 1 time in total
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

ஸ்ரீ கச்சியப்ப முனிவர் வரலாறு Empty Re: ஸ்ரீ கச்சியப்ப முனிவர் வரலாறு

Post by நந்தி Tue Jun 15, 2010 8:09 am

அவ்வண்ணம் தீக்ஷை பெற்ற கச்சியப்ப முனிவரர், அகத்திய மகாமுனிவர் வரத்தினால், எளிதிலே வடமொழிக்கடலும் தென்மொழிக்கடலும் கரைகண்டுணர்ந்து, பேரூர் ஸ்ரீ வேலப்ப தேசிகராகிய ஞானாசாரியரிடத்தே அநுக்கிரகம் பெற்று, மெய்யுணர்வின் முற்றுப்பேறுடையராய்ச் சித்தாந்தசைவ சிவஞானபோத திராவிட மகாபாஷ்ய கர்த்தராய் எழுந்தருளியிருந்த ஸ்ரீ மாதவச் சிவஞான யோகிகளை வித்தியா குருவாகக் கொண்டு, அம்மெய்ஞ்ஞான முனிவரிடத்தே இலக்கணம், இலக்கியம், தர்க்கம், சாத்திரம் ஆகியவற்றை ஐயந்திரிபற ஓதியுணர்ந்து, அச்சிவஞான யோகிகள் மாணாக்கர் பல்லோருள்ளுஞ் சிறந்தவராய் வீற்றிருந்தார்.


இவர்களது வாக்கு வல்லபத்தையும், பிரசங்க சாதுரியத்தையும் புகழாதாரில்லை. இவர்கள் செய்யுளியற்றும் விரைவு, நெட்டுருப் பண்ணிய பழம்பாடல் ஒப்பித்தல்போல இருந்தது என்று சொல்லுவர்.


கச்சியப்ப முனிவரர் அப்புக்ஷேத்திரமாகிய திருவானைக்காவில் எழுந்தருளியபோது, திருவானைக்காப் புராணமும், பூவாளூர்ப் புராணமும் மொழிபெயர்த்தருளினார். மேலைச் சிதம்பரமாம் திருப்பேரூருக்கு எழுந்தருளி, பேரூரர் பெருமானைக் காலந்தோறும் தரிசித்து வீற்றிருந்தருளினார். ஆண்டு மழையின்றி வெப்ப மிகுதியால் மக்கள் நலிவுறுவது கண்டிரங்கி, அரசம்பல வாணர் மீது அரிய பிரபந்தம் பாடி, மழை வருஷிக்கச் செய்து மக்களை மகிழ்வித்தருளினார். பட்டீசர் மீது அவர்கள் பாடிய பல பதிகங்கள் பலரது குட்டநோய் முதலியன போக்கின. அந்த ஸ்தலத்தின் மகிமையை உலகவர் அறிந்துய்யும் பொருட்டு அற்புத இலக்கியமாகிய பேரூர்ப் புராணத்தை மொழிபெயர்தருளினார்.
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

ஸ்ரீ கச்சியப்ப முனிவர் வரலாறு Empty Re: ஸ்ரீ கச்சியப்ப முனிவர் வரலாறு

Post by நந்தி Tue Jun 15, 2010 8:10 am

அதன்பின்பு திருத்தணிகையை அடைந்து, ஆங்கே இயற்றமிழ்ப் போதகாசிரியர் விசாகப் பெருமாளையர், வித்துவான் சரவணப் பெருமாளையர் இருவருக்கும் பிதாவாகிய கந்தப்பையர் முதலாயினோருக்குக் கல்வி கற்பித்தருளினார். அப்போது, பல வித்துவான்களும் தமிழிலே புறச்சமயியாற் செய்யப்பட்ட சீவகசிந்தாமணியைப் பேரிலக்கியமாகக் கொண்டாடுதலைச் சித்தத்திலே கொண்டு, அதினினும் மாட்சிமை பெறத் திருத்தணிகைப் புராணத்தை மொழி பெயர்த்தருளினார். சொல்வளம், பொருட்சுவை, செய்யுணடை, சந்தம் ஆகிய இவற்றிலே வேறெந்த இலக்கியமும் இதற்கு மேம்பட்டிலதென்பதைப் புராணத்தை ஒதியுணர்ந்தோர் அறிவர் என்க.

முனிவரர் சிவத்தியான உறைப்பில் சிறந்தவராகத் திகழ்ந்தமையால், ஒரு சமயம் கந்தப்பையருக்குக் குன்ம நோயுண்காயபொழுது, தணிகையாற்றுப் படையைப் பாடி அதனைக் குணப்படுத்தினார். திருத்தணிகை பதிற்றுப் பத்தந்தாதி முதலிய பல பிரபந்தங்கள் அப்பெருமான் திருவாக்கில் மலர்ந்தன.

பின்பு சென்னை மாநகர்க்குச் சென்றபோது அவ்விடத்துள்ள சைவச் சான்றோர்கள் வேண்டிய வண்ணம் விநாயகபுராணம் என்ற இந்த அற்புத இலக்கியத்தையும், சென்னை விநாயகர் பிள்ளைத் தமிழையும் முனிவரர் சைவ உலகிற்கு வழங்கியருளினார். விநாயகபுராணம் அரங்கேற்றுஞ் சபைக்கு ஐயாப்பிள்ளை என்ற பெரும் செல்வர் "நாம் வர இதென்ன இராமாயணமா" என்று இகழ்ந்து பேசினர். முனிவரர் திருச்செவிக்கு இது எட்டியது. உடனே முனிவரர் தமது நூலை அரங்கேற்று முன்னர், இராமாயணத்தை எடுத்துக் கொண்டு யாவரும் வியக்கும் வண்ணம் முதல் ஆறு செய்யுளில் நூறுகுற்றம் ஏற்றினார். அதனைக் கேட்ட அச் செல்வந்தர் சுவாமிகளின் பொருமையையுணர்ந்து, நூறுவராகனும், பீதாம்பரம் முதலியவைகளும் பாதகாணிக்கையாக வைத்து சுவாமிகளின் பாதமலர்களில் வீழ்ந்து நமஸ்காரம் செய்து மன்னிப்பு வேண்டினார். விநாயக புராண அரங்கேற்று விழாவில் அடியுறையாகக் கிடைத்த இரண்டாயிரம் வராகனைக் கொண்டு, திருவாவடுதுறை ஆதீனபரமாசாரியராகிய ஸ்ரீ நமச்சிவாய மூர்த்திகள் சந்நிதி மண்டபப் பணியினை அணிபெறச் செய்தருளினார்.
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

ஸ்ரீ கச்சியப்ப முனிவர் வரலாறு Empty Re: ஸ்ரீ கச்சியப்ப முனிவர் வரலாறு

Post by நந்தி Tue Jun 15, 2010 8:10 am

திரிசிரபுரம் மகாவித்துவான் ஸ்ரீ மீனாட்சி சுந்தரம்பிள்ளைவர்கள் தமது 21-ஆவது பிராயத்தில் திருவானைக்காக்கோயில் தர்மகர்த்தாவின் வீட்டில் முனிபுங்கவரின் திருவானைக்காப் புராணத்தைக் கண்டார். அந்நூலின் அற்புதச் சுவையில் மூழ்கிய பிள்ளையவர்கள் முனிவரர் அருளிச் செய்த விநாயக புராணத்தில் சில பகுதிகளையும், பூவாளூர்ப் புராணம், காஞ்சிப் பிராணம் ஆகியவற்றையும் தேடிக் கண்டுபிடித்து அவற்றின் இன்ப நலன்களை நுகர்ந்தார். இடையிடையே ஏற்பட்ட இயங்களை நீக்குவதற்குத் திருவாவடுதுறை ஆதினத் தொடர்பினைப் பெற்றாக வேண்டும் என்ற வேரவாவினைப் பிள்ளையவர்கள்பால் உருவாக்கியவை முனிவரது இந்த அருள் நூல்களே என்பதை உணர்க. துறைசை 16-ஆவது குருமஹாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சுப்பிரமணிய தேசிய பரமாசாரிய சுவாமிகள் திருக்கண்ணோக்கிற்கு ஆட்பட்ட பிள்ளையவர்கள் முனிவரரின் நூல்களில் தமக்கு உள்ள ஈடுபாட்டினைத் தேசிகர் அவர்களிடம் புலப்படுத்தினார்.

விநாயக புராணத்தின் பாயிரத்தில் உள்ள

"மரந்துளைத்த கணையானுஞ் சோவெறிந்த திறலானு
மதிக்குந் தோறும்
சிரந்துளக்க அலைகடலுஞ் சேணிகந்த பெருவரையுந்
திறத்திற் குன்றக்
கரந்துளக்குங் குறுமுனிக்குங் கருத்தின்மயல் பூட்டியகை
தவஞ்சால் வெற்பின்
உரந்துளைத்த சேயிலைவேல் வலனுயர்த்த இளையவனை
யுளத்துள் வைப்பாம்"


என்னுஞ் செய்யுளில் வரும் "கரந்துளக்குங் குறுமுனிக்கு" என்னும் பகுதிக்குப் பிள்ளையவர்களுக்கு நெடுநாளாகப் பொருள் விளங்கவில்லை. பல ஆன்றோர்கள் கொடுத்த விளக்கத்தால் திருப்தியடையாத பிள்ளையவர்கள் தேசிகர்பால் இதனை விண்ணப்பம் செய்தனர். உடனே அவர் உள்ளங்கையையேந்தி மறித்துக் காட்டிக் கடலை உண்டது கையை ஏந்தினமையாலென்றும், விந்தமலையை அழுத்தியது கையைக் கவித்தமையாலென்றும் பொருள் கூறியருளிப் பிள்ளையவர்களை மகிழ்வித்தருளினார்.
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

ஸ்ரீ கச்சியப்ப முனிவர் வரலாறு Empty Re: ஸ்ரீ கச்சியப்ப முனிவர் வரலாறு

Post by நந்தி Tue Jun 15, 2010 8:10 am

திரிசிரபுரத்தில் ஒருநாள் பிள்ளையவர்கள் இரவு பதினைந்து நாழிகைக்கு மேல் விழித்துக் கொண்டு முனிபுங்கவர் அருளிச் செய்த காஞ்சிப் புராணத்தின் இரண்டாங் காண்டத்தின் ஒரு பகுதியைப் படித்து அதன்பாலுள்ள சொற்சுவை, பொருட்சுவைகளை நுகர்ந்து இன்புற்றுக் கவிராக்ஷஸ கச்சியப்ப முனிவரது அருமை பெருமைகளை நினைந்து மனமுருகிக் கண்ணீர் வீழ்த்தியும், ஆடையால் கண்களைத் துடைத்தும் படித்துக் கொண்டேயிருந்தனர். இதனைக் கண்ணுற்ற ஒரு வேளாளப் பிரபு "புத்தகத்தத வாசித்தால் அழுகை வருமோ"? என்று இவரிடம் கேட்டு அதிசயமுற்ற செய்தியை மகாவித்துவான் சரித்திரத்தில் டாக்டர் உ.வே.சாமிநாதையர் அவர்கள் சுவைபடக் கூறுகிறார். பிள்ளையவர்கள் சென்னைக்குச் சென்றபோது விநாயக புராணம் அரங்கேற்றப்பட்ட ஆலயத்தில் (ஐயாப்பிள்ளை தெருவில் உள்ள) ஸ்ரீ பிரசந்த விநாயகரையும், விநாயக புராணம் செய்வித்த சிதம்பர முதலியாரென்பவரின் பரம்பரையில் வந்த ஒரு பெரியவரின் அழைப்பால் குளத்தூர் ஸ்ரீ அமுதாம்பிகை சமேத ஸ்ரீ சோமேசரையும் தரிசனம் செய்தார்.

பல்லாயிரக்கணக்கான தமிழ்ப் பாடல்களைத் தங்கு தடையின்றி இயற்றிவரும் ஆற்றல் கைவரப் பெற்ற பிள்ளையவர்கள் "செய்யுள் செய்து வரும்பொழுது தடைப்பட்டால் கச்சியப்ப முனிவரைத் தியானிப்பேன். உடனே விரைவாகக் கருத்துக்களும், சொற்களும் தடையின்றி எழும்" என்று முனிபுங்கவரின் அருள் வண்ணத்தை அநுபவ வாயிலாக எடுத்துரைப்பதைக் காண்க.
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

ஸ்ரீ கச்சியப்ப முனிவர் வரலாறு Empty Re: ஸ்ரீ கச்சியப்ப முனிவர் வரலாறு

Post by நந்தி Tue Jun 15, 2010 8:11 am

ஸ்ரீ சிவஞான சுவாமிகள் காஞ்சிப்புராணம் பாடி அரங்கேற்றும் போது சுவாமிகளின் மீது அழுக்காறு பூண்ட சிலர் கோயில் ஓதுவார் ஒருவரை ஏவி ஆட்சேபனை எழுப்பக் கூறினர். அரங்கேற்றம் தொடங்கியது. விநாயக வணக்கங்களாகிய முதல் இரண்டு செய்யுட்களைப் படித்துப் பொருள் கூறியபின் சுவாமிகள் மூன்றாவது செய்யுளாகிய ஸ்ரீ நடராஜப் பெருமான் துதியாகிய "சங்கேந்து மலர்க்குடங்கை" என்று தொடங்கும் செய்யுளுக்குப் பொருள் கூறியருளினார். அப்போது அந்த் ஓதுவார் "முத்தி நகரங்கள் எழிலொன்றும், பிரசித்த ஸ்தலுமுமாகிய இந்தக் காஞ்சீபுரத்திற்குப் புராணம் பாட வந்த நீங்கள் எப்படிச் சிதம்பரம் நடராஜருக்கு முதலில் துதி கூறலாம்? எங்கள் ஸ்ரீ ஏகாம்பர நாதர் துதியல்லவா முதலில் வரவேண்டும்?" என்று ஆட்சேபித்தார். சுவாமிகள் ஸ்ரீ சபாபதியின் பெருமை முதலியவற்றைத் தக்க காரணங்களால் எடுத்துரைத்தும் ஓதுவார் விதண்டாவாதம் செய்தார்.

இவற்றையெல்லாம் கவனித்துக் கொண்டே அருகில் இருந்த ஸ்ரீகச்சியப்ப முனிவர், சுவாமிகளிடம் "இவரை அடியேன்பால் விட்டு விடுக; நான் பார்த்துக் கொள்ளுகிறேன்" என்று கூறி ஓதுவாரைட் தம்பால் அழைத்தார். இந்த ஸ்தலத்து தேவாரப் பதிகங்களில் ஒன்றினைப் பாடுமாறு ஓதுவாரை நோக்கிக் கூறினார். அவர் "திருச்சிற்றம்பலம்" என்று தொடங்கினார். அப்பொழுது முனிவர் பெருமான் ஆட்சேபித்த வித்துவான்களைப் பார்த்து "இவர் 'திருச்சிற்றம்பலம்' என்று தொடங்குகின்றாரே; இது உங்கட்குப் பொருத்தந்தானா? இவரை நீங்கள் இந்தச் சந்நிதியில் இந்த ஸ்தலத்துத் தேவாரப் பதிகங்களைப் பிருதிவியம்பலம் என்று சொல்லி ஆரம்பிக்கும்படி செய்யக்கூடாதா? என்ற அற்புதக் கேள்விக்கணை விடுத்தருளினார். ஓதுவார் உள்ளிட்ட அனைவரும் வாயெடாது ஊமர்கள் போல இரு முனி சிரேஷ்டர்களையும் தலைவணங்கி மன்னிப்பு வேண்டிப் பெற்றனர்.
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

ஸ்ரீ கச்சியப்ப முனிவர் வரலாறு Empty Re: ஸ்ரீ கச்சியப்ப முனிவர் வரலாறு

Post by நந்தி Tue Jun 15, 2010 8:12 am

இத்தகைய அருள் ஞான பாநுவாகிய முனிவரர் தமது ஆசிரியர் திருவாக்கைச் சிரமேற் கொண்டு காஞ்சிப் புராணத்து இரண்டாங் காண்ட மொழிபெயர்ப்புச் செய்தருளி, கச்சியானந்தருத்திரேசர் வண்டுவிடுதூது, கச்சியானந்த ருத்திரேசர் பதிற்றுப் பத்தந்தாதி, பஞ்சாக்கர தேசிகரந்தாதி முதலிய பல நூல்களை இயற்றியருளினார். சைவ உலகிற்கு விநாயக புராணம் போன்ற ஒப்புயர்வற்ற சிவஞானக் கருவூலங்களை வழங்கியருளிய ஸ்ரீ கச்சியப்ப முனிவரர் திருவாவடுதுறை ஆதீன சிவஞான சூடாமணியாகத் திகழ்ந்து, காஞ்சி மாநகரில் சாலிவாகன சகாப்தம் 1712-ஆம் ஆண்டு சாதாரண வருஷம் சித்திரை மாதம் 11- ஆம் நாள் மங்கள வாரத்தில் புனர்பூச நக்ஷத்திரமும், பூர்வபக்ஷத்துச் சப்தமியுங் கூடிய கும்ப லக்னத்தில் சிவபரிபூரணமுற்றனர். (கி.பி.1790)

ஏர்தரு சாலி வாகன சகாத்தம்
ஆயிரத் தெழுசதத் தொருபத்
திரண்டின்மேற் சாதா ரணவரு டத்தில்
இயைதரு சித்திரைத் திங்கள்
சார்தரு தேதி பத்தினோ டொன்று
தகுசெவ்வாய் வாரம்பூ ருவத்திற்
சத்தமி புனர்பூ சத்திரு நாளில்
தவலறு கும்பலக் கினத்திற்
சீர்திரு துறைசை வாழ்சிவ ஞான
தேவன் மா ணாக்கருண் முதன்மை
திகழ்ந்துள கச்சி யப்பமா முனிவன்
திருப்பெருங் காஞ்சியி லெய்திச்
சேர்தரு மடியார் தமதக விருளைத்
தினகரன் முன்னிரு ளென்னத்
திருந்துதன் னருளா லகற்றிவீ டுறுத்திச்
சிறந்தபூ ரணமடைந் தனனே.
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

ஸ்ரீ கச்சியப்ப முனிவர் வரலாறு Empty Re: ஸ்ரீ கச்சியப்ப முனிவர் வரலாறு

Post by மகி Tue Jun 15, 2010 10:28 am

பகிர்வுக்கு மிக்க நன்றி.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

ஸ்ரீ கச்சியப்ப முனிவர் வரலாறு Empty Re: ஸ்ரீ கச்சியப்ப முனிவர் வரலாறு

Post by நந்தி Sun Jun 20, 2010 12:41 pm

நன்றி நண்பரே!
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

ஸ்ரீ கச்சியப்ப முனிவர் வரலாறு Empty Re: ஸ்ரீ கச்சியப்ப முனிவர் வரலாறு

Post by நந்தி Sun Jun 20, 2010 12:44 pm


சிவமயம்
திருச்சிற்றம்பலம்



துறைசை ஆதீன ஞானப் பண்ணையில் ஒரு மெய்ஞ்ஞான சிந்தாமணி

நூல் ஆசிரியர்

சிவத்திரு மா.பட்டமுத்து எம்.எஸ்ஸி., பி.டி.,
சங்கரன்கோவில்.


--------------------------------------------------------------------------------

முன்னுரை


பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல்போற்றி!
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்தபிரான் அடிபோற்றி!
வாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம்போற்றி!
ஊழிமலி திருவாத வூரர்திருத் தாள்போற்றி!


விண்ணுலகில் உள்ள சங்கநிதி, பதுமநிதி, கற்பக விருட்சம் போன்ற அரிய பொருட்களில் சிந்தாமணி சிறப்பு மிக்கது. வேண்டுவார் வேண்டுவதைத் தருவது, தேவர்களின் இன்பத்தைப் பெருக்கும் இயல்புடைத்து. உலக போகங்களை வழங்கும் தன்மை மட்டுமே அதற்குண்டு.

ஆனால் துறைசை ஆதின ஞானப் பண்ணையிலே ஓர் அற்புதச் சிந்தாமணி உளது. அது கேவலம் உலக சுகங்களை மட்டுமே அன்றி, சிவபோகச் செல்வத்தையும் வழங்கும் பேராற்றல் உடையது. சிவமணம் கமழும் வாழ்வு வேண்டுமா, சிவனடிமைத் திறத்தில் உறைப்பு வேண்டுமா, குருபக்திச் செல்வம் வேண்டுமா, சிவனடியார் திருவடித் தொண்டில் ஈடுபாடு வேண்டுமா. ஆம், இவையனைத்தையும் வேண்டுவார்க்கு நல்கும் கருணைத்திறம் உடையது அச் சிந்தாமணி, பார்க்கும் இடம் எல்லாம் பரசிவப் பிரபுவின் அருட் கடலைக் காணும் மெய்ஞ ஞானத்தைத் தரவல்ல சிந்தாமணி அது. சரியை, கிரியை, யோக நிலையில் நின்று சாக்கிரத்தே அதீதத்தைப் புரியும் பக்குவப் பெருந்தமையோர்க்கு ஒப்பரிய மெய்ஞ்ஞான சிந்தாமணி அது. அச்சிந்தாமணி யாது? ஆம், திருவாவடுதுறை ஆதீனத்தில் ஸ்ரீபஞ்சாக்கர தேசிக மூர்த்திகளின் அருள் நீழலில் விளைந்த, திராவிட மாபாடியகர்த்தாஸ்ரீமத் சிவஞான சுவாமிகளின் திருக்கண்ணோக்கில் பரிணமித்த கவிராட்சச ஸ்ரீகச்சியப்ப முனிவர் பிரான் தாம் அச்சிந்தாமணி!
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

ஸ்ரீ கச்சியப்ப முனிவர் வரலாறு Empty Re: ஸ்ரீ கச்சியப்ப முனிவர் வரலாறு

Post by நந்தி Sun Jun 20, 2010 12:48 pm

அந்த மெய்ஞ்ஞான் சிந்தாமணியை அணுகினால் தீராத குன்ம நோய் தீரும், வறட்சியைப் போக்கி மழை பெய்விக்க வல்லது அந்த நன்மணி, அந்த அருமணியை நினைத்தாலே தடைபட்ட கவிதைகள் மடையுடைக்கும் வெள்ளம் என மலர்ந்து மகிழ்விக்கும். பொருத்தமற்ற ஆட்சேபனைகளை அழலிடைப்பட்ட வைத்தூறு போலப் பொசுக்கி விடும் பேராற்றல் உடையது அப்பொன்மணி. கச்சியப்ப முனிவேந்தராம் அந்த ஞானக் கருவூலம் தன்னை அடைந்தாரின் அற்யாமையை அகற்றிச் சிவானந்த ஞானச் சுடரை ஏற்றுவிக்கும்.

இத்தகைய பெருமைமிக்க முனிபுங்கவரின் அருள் வாழ்க்கை வரலாறு இப்போது விரிவாக அமையப் பெற்று எல்லோரும் அறிகின்ற வாய்ப்பு குருவருளாலும், திருவருளாலும் கிடைத்துள்ளது. ஸ்ரீமத் சிவஞான சுவாமிகளின் தவசிப் பிள்ளையைப் பெங்களூரில் சந்தித்த போது மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் சுவாமிகளைப் பற்றியும், முனிவர் பிரானைப் பற்றியும் பல அரிய தகவல்களைப் பெற்றுக் கொண்டதாக டாக்டர் உ.வே.சாமிநாத ஐயரவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

ஸ்ரீ கச்சியப்ப முனிவர் வரலாறு Empty Re: ஸ்ரீ கச்சியப்ப முனிவர் வரலாறு

Post by நந்தி Sun Jun 20, 2010 12:50 pm

முனிவர் பெருமானின் வாழ்க்கையைப் பற்றியும், அருள் வாக்கினைப் பற்றியும் சைவ உலகு அறிந்துய்ய வேண்டும் என்பது, துறைசை ஆதீனத்தில் இன்று சிவஞானச் செங்கோலாட்சி அருளும் 23-ஆவது குரு மகாசன்னிதானம் சீர்வளர்சீர் சிவப்பிரகாச தேசிக பரமாச்சாரிய சுவாமிகளின் திருவுள்ளக் கிடக்கையாகும். அக் குருவருளின் பிரதிபலிப்பே "துறைசை ஆதீன ஞானப் பண்ணையில் ஒரு மெய்ஞ்ஞான சிந்தாமணி" என்ற இந்நூலாகும். மகாவித்துவான் பிள்ளையவர்களின் அபிமானத்திற்குப் பாத்திரராகிய தியாகராஜ செட்டியார் அவர்கள் முனிவர் பிரானை மெய்ஞ்ஞான சிந்தாமணி எனப் புகழ்ந்து பாடுவார். அப்புகழ் மாலையின் ஓர் அங்கமே இந்த நூலாகும்.

திருப்பணிகள்

இவ்வாதீனம் பல ஆண்டுகளாக ஸ்ரீகச்சியப்ப முனிவர் பிரானின் நூல்களை அச்சிடுவைத்து ஆதீன வெளியீடாக வழங்கி வருதலை சைவ நல்லுலகம் நன்கறியும். இவ்வாதீனத்தின் கிளைமடமாக இருந்து வரும் காஞ்சிபுரம் - பிள்ளையார்பாளையத்தில் உள்ள ஆதீனம் கிளைமடமாகிய ஸ்ரீ மெய்கண்டார் மடத்தின் திருப்பணிகள் பல நிறைவேற்றப்பட்டு - சுற்றுச் சுவர் முற்கம்பி வேலி, தோட்டம் பராமரிப்பு, மேல்நிலை நீர்த்தொட்டி, புதியதாக அமைந்த சுவாமிகள் ஆத்மார்த்த பூசை செய்யும் இடத்தோடு கூடிய தங்கும் இடம், தம்பிரான் சுவாமிகள் சகல வசதிகளுடன் தங்குமிடம், மின்வசதி, பூசை மடத்தின் பழைய கருங்கல் கட்டிடமாக இருந்த (கருப்பகிருகம்) பகுதி செப்பனிடப்பட்டு, புதுவனவாக முகமண்டபம் நிர்மாணித்தும், முகப்பில் கதையில் ஸ்ரீமெய்கண்டார் திருவுருவத்தை வைத்தும். இரும்பு கேட்டுகள் போடப்பட்டும், திருப்பணிகள் பூர்த்திசெய்யப்பட்டுள்ளன.

மேலும் சிவஞான சுவாமிகள் பற்றிய சிறப்புச் செய்திகள், கிளைமடத்தின் செய்திகள், திருப்பணி பற்றிய செய்திகள் அடங்கிய கல்வெட்டுகள் அமைக்கப் பெற்று புத்தம் புதுப் பொலிவோடு 10.6.1992 அன்று சீர்வளர்சீர் குரு மகாசன்னிதானம் அவர்களால் திறந்தருளப்பெற்றன.
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

ஸ்ரீ கச்சியப்ப முனிவர் வரலாறு Empty Re: ஸ்ரீ கச்சியப்ப முனிவர் வரலாறு

Post by நந்தி Sun Jun 20, 2010 12:54 pm

ஷ (மேற்படி) கிளைமடத்தில் மாதம்தோறும் வரும் புனர்பூசம் நட்சாத்திரம் மற்றும் ஆயில்ய நட்சத்திரம் நாட்களில் புலமை மிக்க தமிழ்ப் புலவர்களைக் கொண்டு ஸ்ரீசிவஞான சுவாமிகள் அருளிய நூல்களைப் பற்றியும், சொற்பொழிவுகள் நிகழ்த்தப் பெறுகின்றன. அக்காலங்களில் சிறப்பு வழிபாடு செய்யப் பெற்று எல்லோருக்கும் பிரசாதம் வழங்கப்படுகிறது. இவ்விருமுனிவர்களும் சிவானந்தப் பேறு எய்திய நாட்களில் சிறப்பு வழிபாடும், நூல் வெளியிடும், கருத்தரங்கமும் சிறப்பாக நடை பெறுகின்றன.

திருவாவடுதுறை ஆதீனம் 23ஆவது குரு மகாசன்னிதானம் சீர்வளர்சீர் சிவப்பிரகாச தேசிக பரமாச்சாரிய சுவாமிகளிடம் கல்லிடைக் குறிச்சித் திருமடத்தில் 14.7.1985 அன்று அருளாசி பெற் றுப் பொதிகை யடி அருள்மிகு விநாயகப் பெருமான் திருச்சிந்நிதியில் மாதம் ஒரு ஞாயிறன்று நான்கு ஆண்டு காலம் விநாயக புராணம் உரையாற்றும் பேறு பெற்றேன். சீர்வளர்சீர் குரு மகாசன்னிதானம் அவர்களின் அந்த அருளாசியே 22.1.2000ல் விநாயக புராணத்தினை அச்சிட்டு வெளியிடும் பெரும் புண்ணியத்தினை அடியேனுக்கு வழங்கிற்று.

விக்கிரமசிங்கபுரம் அருள்திரு மாதவச் சிவஞான சுவாமிகளின் திருச்சன்னிதியில் பெரியபுராண விரிவுரை வாரந்தோறும் தொடர்ந்து நான்கரை ஆண்டு காலம் செய்து உய்யும் பாக்கியம் அடுத்துக் கிட்டியது. சங்கரன்கோவில் ஸ்ரீகோமதி அம்பிகை மாதர் சங்கத்தில் சோமவாரம் தோறும் 22.11.93ல் தொடங்கி 6.11.2000 ஈறாக விநாயக புராணத்தினைப் பாசுரம் பாசுரமாக விளக்க உரையாற்றும் வாய்ப்பினைக் குருவருள் நல்கிற்று. தற்போது விக்கிரமசிங்கபுரம் ஸ்ரீதிருநாவுக்கரசு சுவாமிகள் உழவாரக்குழு சார்பாக ஆதீனத் தேவாரப் பாடசாலையில் 4.5.99ல் தொடங்கி வியாழன் தோறும் 111 வாரங்கள் விநாயக புராண விரிவுரை முதல் காண்டம் "உபாசனா காண்டம்" நிறை வுற்று. இப்போது "லீலா காண்டம்" பற்றிய தொடர் சிந்தனை செய்ய சீர்வளர்சீர் குரு மகாசன்னிதானம் தன்னருள் துணை நின்றருள்கிறது.
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

ஸ்ரீ கச்சியப்ப முனிவர் வரலாறு Empty Re: ஸ்ரீ கச்சியப்ப முனிவர் வரலாறு

Post by நந்தி Sun Jun 20, 2010 12:58 pm

சிறப்பு வழிபாட்டு மலர்

இத்தகுசிறப்புடைய ஸ்ரீகச்சியப்ப முனிவர் பிரானுடைய, விரிவான வரலாறாகிய "துறைசை ஆதீன ஞானப் பண்ணையில் ஒரு மெய்ஞ்ஞான சிந்தாமணி" எனும் நூல் முனிவர் பிரானின் 212-ஆவது சிறப்பு வழிபாட்டு விழா மலராக மலர்கின்றது. சிவஷேத்திர குருஷேத்திர பரிபாலனங்களோடு செந்தமிழ்ப் பரிபாலனம் செய்தருளும் திருக்கயிலாய பரம்பரைத் திருவாவடுதுறை ஆதீனத்தின் ஞான பீடத்தில் எழுந்தருளி விளங்கும் 23ஆவது குரு மகாசன்னிதானம் சீர்வளர்சீர் சிவப்பிரகாச தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் அவர்களின் அருளாணையின் வண்ணம் முனிவர் பிரானின் சிறப்பு வழிபாட்டு நாளில் (19.4.2002) இம்மலர் மலர்கிறது.

திருவடிகளைப் போற்றுதல்

திருவருளும் குருவருளும் இயக்கிட கருவியாய் நிற்கும் அடியேனால் எழுதப் பெற்ற இந்நூல் அனைவருக்கும் மெய்மைப் பூசனை விளைவிக்க, 23-ஆவது டுரு மகாச்ன்னிதானம் சீர்வளர்சீர் சிவப்பிரகாச தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் திருவடிகளையும், ஷ ஆதீனம் இளைய சன்னிதானமாக (துவிதீய ஆச்சாரியார்) விளங்கி யருளும் சீர்மிகு காசி விசுவநாத தேசிக சுவாமிகள் அவர்களின் திருவடி களையும் மீண்டும் மனம், மொழி, மெய்யினால் சிந்தித்து வந்தித்து போற்றுகின்றேன். குருமூர்த்திகளின் அருளாணையின் வண்ணம் அடியேனால் எழுத்தாக்கம் பெற்ற இந்நூல் மேலும் செம்மையுறவும், இப்பணி தொடரவும் உரிய கருத்துக்களை அடியேனை மேம்படுத்திட வேண்டுகின்றேன்.

"வாழ்க குருமூர்த்திகளின் திருவடிகள்"

சங்கரன்கோவில்...................................................................இங்ஙனம்,
7.4.2002.........................................என்றும் சிவப்பணியில் அடியவன்,
........................................... மா. பட்டமுத்து, எம்.எஸ்ஸி., பி.டி.,
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

ஸ்ரீ கச்சியப்ப முனிவர் வரலாறு Empty Re: ஸ்ரீ கச்சியப்ப முனிவர் வரலாறு

Post by நந்தி Sun Jun 20, 2010 1:10 pm



சிவமயம்

திருச்சிற்றம்பலம்



மடந்தைபா கத்தர் போலும் மான்மறிக் கையர் போலும்

குடந்தையிற் குழகர் போலும் கொல்புலித் தோலர் போலும்

கடைந்தநஞ் சுண்பர் போசும் காலனைக் காய்வர் போலும்

அடைந்தவர்க் கன்பர் போலும் ஆவடு துறைய னாரே.


-ஸ்ரீதிருநாவுக்கரசு சுவாமிகள்



திங்களை யணிந்த ஐங்கை செம்மல் பொற்சரணம் போற்றி

பங்கில் வீற்றிருந்த சித்திபுத்தி தம்பதங்கள் போற்றி

அங்கவர்க்கன்பு செய்யும் அடியவரடிகள் போற்றி

நங்குரு நமச்சிவாயன் நளின பாதங்கள் போற்றி.


-ஸ்ரீகச்சியப்ப முனிவர்
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

ஸ்ரீ கச்சியப்ப முனிவர் வரலாறு Empty Re: ஸ்ரீ கச்சியப்ப முனிவர் வரலாறு

Post by aarul Sun Jun 20, 2010 8:14 pm

[You must be registered and logged in to see this image.]
aarul
aarul
தள ஆலோசகர்
தள ஆலோசகர்

பதிவுகள் : 421
புள்ளிகள் : 793
Reputation : 12
சேர்ந்தது : 20/12/2009
வசிப்பிடம் : mani electronics,erode, tamilnadu,india

Back to top Go down

ஸ்ரீ கச்சியப்ப முனிவர் வரலாறு Empty Re: ஸ்ரீ கச்சியப்ப முனிவர் வரலாறு

Post by மகி Mon Jun 21, 2010 1:41 pm

பகிர்வுக்கு மிக்க நன்றி.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

ஸ்ரீ கச்சியப்ப முனிவர் வரலாறு Empty Re: ஸ்ரீ கச்சியப்ப முனிவர் வரலாறு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum