Latest topics
» வணக்கம் என் பெயர் நாகராசன்.இராby rajan_1972 Fri Apr 10, 2020 7:20 pm
» சிறந்த பொழுதுபோக்கு இணையதளம்!
by pba Sat Jul 02, 2016 8:11 pm
» ஏற்றுமதி உரிமம் பெறும் விண்ணப்பம்
by tamilnews Tue Mar 24, 2015 8:00 pm
» மொபைல், டிடிஎச் ரீசார்ஜ் செய்யப் போறீங்களா? இந்த சலுகைகளைப் பாருங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:41 am
» மொபைல் ரீசார்ஜ் செய்து ஷாப்பிங் கூப்பன் இலவசமாக பெறுங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:38 am
» மெமரி கார்டு வாங்கப் போறீங்களா? 74% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:36 am
» அமேசானில் பெண்களுக்கான ஆடைகள் 70% வரை தள்ளுபடி !
by dsytamil Wed Jan 14, 2015 1:34 am
» அமேசானில் ஆண்களுக்கான ஆடைகள் 60% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:31 am
» லெனோவா டேப்ளட் 43% சலுகை விலையில் ரூ. 5949 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:28 am
» ப்ளிப்கார்ட் தளத்தில் சிறுவர்களுக்கான ஆடைகள் 70% வரை + 30% கூடுதல் தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:14 am
» அமேசான் தளத்தில் 50% தள்ளுபடி விலையில் மொபைல்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:13 am
» ரூ. 7499 மதிப்புள்ள மைக்ரோமேக்ஸ் ஏ1 ஆன்ட்ராய்டு மொபைல் இப்போது ரூ. 5499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:11 am
» ரூ. 19999 மதிப்புள்ள நோக்கியா லூமியா 625 மொபைல் ரூ. 7499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:10 am
» ப்ராண்டட் காலணிகளுக்கு 70% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:08 am
» ஆன்லைன் ஷாப்பிங்கில் ப்ரிண்டர்களுக்கு 33% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:06 am
» ஆன்லைனில் பொருள் வாங்கப் போறீங்களா? 70% வரை பணத்தை சேமியுங்கள்!
by dsytamil Tue Jan 13, 2015 12:30 am
» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...!
by sathikdm Sun Oct 19, 2014 4:45 pm
» சிறுதொழில் செய்பவர்கள் இணையதளம் தொடங்க வேண்டியதின் அவசியம்!
by pba Sat Sep 27, 2014 12:58 am
» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:47 pm
» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:42 pm
» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
by santhoshpart Wed Aug 27, 2014 4:22 pm
» “சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா!”
by santhoshpart Wed Aug 13, 2014 3:54 pm
» Daily Rs.500/- and Above
by K.MARIAPPAN Wed Jul 30, 2014 12:01 pm
» http://www.neobux.com/?r=narasimmant
by Navaneethakrishnan Wed Jul 02, 2014 3:41 pm
» வணக்கம் என் பெயர் வேணு
by A.Venu Fri Jun 27, 2014 10:10 am
» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?
by sathikdm Wed Jun 18, 2014 3:24 pm
» தமிழ் மொழி மூல கல்வி இணையதளம்
by afdhaal Wed May 28, 2014 9:22 pm
» வருக. வருக. வணக்கம்.
by மகி Mon May 12, 2014 3:55 pm
» அறிமுகம் -விநாயகா செந்தில்.
by மகி Mon May 12, 2014 3:53 pm
» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....!
by vinayagasenthil Sat May 10, 2014 9:04 pm
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கும் ரூ.100 உதவித்தொகை!
Page 1 of 1

சட்டசபையில் நேற்று தொழிலாளர் நலத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து அமைச்சர் தா.மோ. அன்பரசன் பேசியதாவது:-
கடந்த அ.தி.மு.க. ஆட்சி, அரசுத்துறையில் உருவான காலிப்பணியிடங்களை நிரப்பாமல், பணி நியமன தடைச்சட்டத்தை கொண்டு வந்து இளைஞர்களின் வாழ்வை சீரழித்தது. அந்த இருண்ட சட்டத்தை நீக்கி, இளைஞர்களின் வாழ்வில் ஒளி ஏற்றி வைத்தவர் முதல்- அமைச்சர் கலைஞர்தான்.
கடந்த 4 ஆண்டு கால கலைஞர் ஆட்சியில், வேலை வாய்ப்பு அலுவலகங்கள் மூலம் 1,14,338 நபர்களுக்கும், அரசு பணியாளர் தேர்வு வாரியம் மற்றும் சீருடைப் பணியாளர் வாரியம் மூலம் 38,480 நபர்களுக்கும், தொகுப்பூதியத்தில் பணி யாற்றியவர்களை காலமுறை ஊதியத்தில் அமர்த்திய வகையில் 3,02,517 நபர்களுக் கும், கருணை அடிப்படையில் 10,413 நபர்களுக்கும், ஆக மொத்தம் 4,65,748 பேர்களுக்கும், அரசு பணிகளில் வேலை அளித்தவர் முதல்-அமைச்சர் கலைஞர்தான்.
வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து, வேலைக்காக காத்திருக்கும் வேலை வாய்ப்பற்ற இளைஞர்களின் துயரினை துடைக்கும் வகையில், கடந்த 4 ஆண்டு களில் 261 கோடி ரூபாய் உதவித்தொகையை முதல்-அமைச்சர் கலைஞர் வழங்கி உள்ளார்.
மேலும் 60 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளார். வேலைவாய்ப்பு அளிக்கும் பணிகள் வேகமாக நடைபெற தமிழகத்தில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு அலுவலகங்களும், கணினி வழியே ஒருங்கிணைக்க, 2 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பில், எல்காட் நிறுவனம் மூலம் பணிகள் நடைபெற்று வருகிறது.
அண்ணா பிறந்தநாளான வரும் செப்டம்பர் 15-ஆம் தேதி வேலைவாய்ப்பு அலுவலகங் கள், கணினி வழியே ஒருங்கிணைக்கப்படும்.
வே¬வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளவர்கள் தங்கள் பதிவை புதுப்பிக்காமல் விட்டு விட்டதால், பணி வாய்ப்பினை இழந்துவிட்டனர்.
அத்தகைய இளைஞர்களுக்கு பணி வாய்ப்பினை நழுவ விடாமல் மீண்டும் வழங்குவதற்காக, கடந்த 4 ஆண்டுகளில் கலைஞர் அரசு வழங்கிய புதுப்பித்தல் சலுகையினால், இதுவரை 4,57,259 இளைஞர்கள் பயன் பெற்றுள்ளனர்.
தற்போது மீண்டும் 2006 முதல் டிசம்பர் 2009 வரை வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவினை புதுப்பிக்க தவறியவர்களுக்கு, புதுப்பித்துக் கொள்ள சிறப்பு சலுகை வழங்கப்படும். இதனால் சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் பதிவு தாரர்கள் பயன் அடைவார்கள்.
வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டத்தை, 10-ஆம் வகுப்பு தேர்வில் தவறியவர்களுக்கும் உதவிடும் வகையில் மாதம் 100 ரூபாய் வீதம் உதவித்தொகை வழங்கப்படும்.
தொழிற்சாலைகள் பெருகி வரும் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் புதிய அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் துவங்கப்படும்.
தொழிலாளர் நல வாரியங்களில், உறுப்பினர்களாக உள்ள குடும்பத்திற்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த திருமண நிதிஉதவி ரூ.2 ஆயிரத்தை இனி, ஆண்களுக்கு ரூ.3 ஆயிரம் என்றும், பெண்ணுக்கு ரூ.5 ஆயிரம் என்றும் உயர்த்தி வழங்கப்படும்.
வாரியங்களில் பதிவு பெற்ற தொழிலாளர்கள் ஓய்வூதியம் பெறுவதற்கு குறைந்தபட்சம் 60 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 5 ஆண்டுகள் தொடர்ந்து உறுப்பி னராகவும் இருக்க வேண்டும் என்பதை தளர்த்தி 3 ஆண்டுகள் உறுப்பினராக இருந்தால் ஓய்வூதியம் வழங்கப்படும்.
காஞ்சீபுரம் மாவட்டம் செங்கல்பட்டில், தமிழ்நாடு கட்டுமான பயிற்சிக்கழகம் இந்த ஆண்டு தொடங்கப்பட உள்ளது. தமிழகத்தில் உள்ள இளைஞர்களுக்கு ஐ.டி.ஐ. மூலம் குறுகிய கால தொழிற்பயிற்சி அளித்து இந்த ஆண்டு முதல் லட்சக்கணக்கில் பயிற்சி பெற்ற இளைஞர்களை உருவாக்க இந்த அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்கள் சீரழிக்கப்பட்டு தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். மேலும், இந்த வாரியங்கள் சிறப்பாக செயல்பட கடந்த 4 ஆண்டு களில் மட்டும் முதல்-அமைச் சர் கலைஞர் 128 கோடி ரூபாய் நிதி அளித்ததோடு இந்த நிதி ஆண்டில் ரூ.50 கோடி ஒதுக்கி தந்துள்ளார்.
ஆனால் முந்தைய 5 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் இந்த வாரியங்கள் செயல்பட எந்த நிதியையும் மானியமாக ஒதுக்கவில்லை.
இவ்வாறு தா.மோ. அன்பரசன் கூறினார்.
நன்றி: மாலை மலர்.

மகி- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009
Similar topics
» டி.என்.பி.எஸ்.சி., தேர்வில் மாற்றம்!
» குரூப்-2 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு விரைவில் பணி!
» குரூப்-1 தேர்வில் 1,330 பேர் தேர்வு :டி.என்.பி.எஸ்.சி. தகவல்!
» குரூப் 2, 4 தேர்விலும் மாற்றம் விஏஒ தேர்வில் பொதுத் தமிழ் நீக்கம்!
» டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளில் இனி தமிழுக்கு இடமில்லை: குரூப் 2, விஏஓ தேர்வில் தமிழ் பாடம் நீக்கம்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum