Latest topics
» வணக்கம் என் பெயர் நாகராசன்.இராby rajan_1972 Fri Apr 10, 2020 7:20 pm
» சிறந்த பொழுதுபோக்கு இணையதளம்!
by pba Sat Jul 02, 2016 8:11 pm
» ஏற்றுமதி உரிமம் பெறும் விண்ணப்பம்
by tamilnews Tue Mar 24, 2015 8:00 pm
» மொபைல், டிடிஎச் ரீசார்ஜ் செய்யப் போறீங்களா? இந்த சலுகைகளைப் பாருங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:41 am
» மொபைல் ரீசார்ஜ் செய்து ஷாப்பிங் கூப்பன் இலவசமாக பெறுங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:38 am
» மெமரி கார்டு வாங்கப் போறீங்களா? 74% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:36 am
» அமேசானில் பெண்களுக்கான ஆடைகள் 70% வரை தள்ளுபடி !
by dsytamil Wed Jan 14, 2015 1:34 am
» அமேசானில் ஆண்களுக்கான ஆடைகள் 60% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:31 am
» லெனோவா டேப்ளட் 43% சலுகை விலையில் ரூ. 5949 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:28 am
» ப்ளிப்கார்ட் தளத்தில் சிறுவர்களுக்கான ஆடைகள் 70% வரை + 30% கூடுதல் தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:14 am
» அமேசான் தளத்தில் 50% தள்ளுபடி விலையில் மொபைல்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:13 am
» ரூ. 7499 மதிப்புள்ள மைக்ரோமேக்ஸ் ஏ1 ஆன்ட்ராய்டு மொபைல் இப்போது ரூ. 5499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:11 am
» ரூ. 19999 மதிப்புள்ள நோக்கியா லூமியா 625 மொபைல் ரூ. 7499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:10 am
» ப்ராண்டட் காலணிகளுக்கு 70% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:08 am
» ஆன்லைன் ஷாப்பிங்கில் ப்ரிண்டர்களுக்கு 33% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:06 am
» ஆன்லைனில் பொருள் வாங்கப் போறீங்களா? 70% வரை பணத்தை சேமியுங்கள்!
by dsytamil Tue Jan 13, 2015 12:30 am
» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...!
by sathikdm Sun Oct 19, 2014 4:45 pm
» சிறுதொழில் செய்பவர்கள் இணையதளம் தொடங்க வேண்டியதின் அவசியம்!
by pba Sat Sep 27, 2014 12:58 am
» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:47 pm
» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:42 pm
» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
by santhoshpart Wed Aug 27, 2014 4:22 pm
» “சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா!”
by santhoshpart Wed Aug 13, 2014 3:54 pm
» Daily Rs.500/- and Above
by K.MARIAPPAN Wed Jul 30, 2014 12:01 pm
» http://www.neobux.com/?r=narasimmant
by Navaneethakrishnan Wed Jul 02, 2014 3:41 pm
» வணக்கம் என் பெயர் வேணு
by A.Venu Fri Jun 27, 2014 10:10 am
» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?
by sathikdm Wed Jun 18, 2014 3:24 pm
» தமிழ் மொழி மூல கல்வி இணையதளம்
by afdhaal Wed May 28, 2014 9:22 pm
» வருக. வருக. வணக்கம்.
by மகி Mon May 12, 2014 3:55 pm
» அறிமுகம் -விநாயகா செந்தில்.
by மகி Mon May 12, 2014 3:53 pm
» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....!
by vinayagasenthil Sat May 10, 2014 9:04 pm
சூப் வகைகள்
2 posters
Page 1 of 1
சூப் வகைகள்
ஆட்டு எலும்பு சூப்
தேவையான பொருட்கள் :
ஆட்டு எலும்பு - கால் கிலோ
வெங்காயம் - 2
மஞ்சள்பொடி - ஒரு தேக்கரண்டி
மிளகு - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
கிராம்பு - 6
பட்டை - 2 துண்டுகள்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
ஆட்டு எலும்பினை நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். பிறகு அதனை ஒரு பாத்திரத்தில் இட்டு அரை லிட்டர் அளவிற்கு தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.
நறுக்கிய வெங்காயம், உடைத்த மிளகு, மஞ்சள்பொடி ஆகியவற்றையும் அந்த தண்ணீரில் போட்டு கொதிக்கவிடவும்.
தண்ணீர் நன்கு கொதித்தவுடன், எலும்பில் உள்ள சாறு நீரில் இறங்கி எண்ணெய் போல் மிதக்கும். இந்த நேரத்தில் பாத்திரத்தை இறக்கிவிட்டு, ஒரு வாணலியை வைத்து அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காயவிடவும்.
எண்ணெய் காய்ந்ததும் பட்டை, கிராம்பு ஆகியவற்றை தட்டிப் போடவும். அவை சிவந்து வந்தவுடன் கறிவேப்பிலையை அதில் போட்டுத் தாளிக்கவும்.
பிறகு எலும்பு நீரை அதில் ஊற்றி, தேவையான அளவு உப்பையும் சேர்த்து கிளறி சிறிது நேரம் மூடி வைத்துவிட வேண்டும்.
சற்று கொதித்தவுடன் இறக்கி சூடாய் அருந்தவும்.

தென்றல்- உறுப்பினர்
- பதிவுகள் : 38
புள்ளிகள் : 57
Reputation : 3
சேர்ந்தது : 19/04/2010
வசிப்பிடம் : world
Re: சூப் வகைகள்
கோழி தக்காளி சூப்
தேவையான பொருட்கள் :
தக்காளி - 4
கோழிக்கறி - ஒரு மார்பு துண்டு
வெங்காயம் - அரை(நடுத்தரமானது)
பூண்டு - 3 பல்
இஞ்சி - சிறுதுண்டு
கொத்தமல்லித்தழை - சிறிது
முட்டை - 2
கார்ன்ஸ்டார்ச் - 2 மேசைக்கரண்டி
சிக்கன் ஸ்டாக் - 4 கப்
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
தக்காளி சாஸ் - 4 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
சீனி - ஒரு தேக்கரண்டி
மிளகுத்தூள் - அரைத்தேக்கரண்டி
அஜினோமோட்டோ - ஒரு சிட்டிகை
வினிகர் - 2 மேசைக்கரண்டி
செய்முறை :
தக்காளி, பூண்டு, வெங்காயம், இஞ்சி, கொத்தமல்லித்தழை ஆகியவற்றை கழுவி சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
கோழிக்கறியினை துண்டங்களாக்கி நான்கரை கோப்பை தண்ணீர் விட்டு 5 நிமிடங்கள் வேகவிட்டு எடுத்துக் கொள்ளவும். இந்த வேக வைத்த நீர்தான் சிக்கன் ஸ்டாக்.
முட்டைகளை ஒரு பாத்திரத்தில் உடைத்து ஊற்றி, நன்கு அடித்து கலந்து கொள்ளவும். அரை கப் சிக்கன் ஸ்டாக் உடன் கார்ன்ஸ்டார்சினை கலந்து கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடேறியதும் நறுக்கி வைத்துள்ள இஞ்சி பூண்டினை போட்டு லேசாக வதக்கவும். அத்துடன் நறுக்கின வெங்காயம் சேர்த்து மேலும் ஒரு நிமிடத்திற்கு வேகவிடவும்.
பிறகு தக்காளி சாஸ், நறுக்கின தக்காளி சேர்த்து, தீயை சற்று அதிகம் வைத்து மூன்று நிமிடங்களுக்கு வேகவிடவும்.
இப்போது சிக்கன் ஸ்டாக், சிக்கன் துண்டுகள், தேவையான உப்பு, அஜினோமோட்டோ, மிளகுத்தூள் ஆகியவற்றை சேர்த்து கொதிக்கவிடவும்.
பிறகு கார்ன்ஸ்டார்ச்சினை சிறிது சிறிதாக சேர்த்து நன்கு கலக்கவும். சூப்பானது சற்று கெட்டியாகும் வரை சேர்த்து விடாது கலக்கவும்.
அதன் பின் வினிகரை ஊற்றவும். அடித்து வைத்துள்ள முட்டையினை சிறிது சிறிதாக ஊற்றி நன்கு கலக்கவும். முட்டையானது நன்கு வெந்து மிதக்கத் தொடங்கும்போது நறுக்கின கொத்தமல்லித் தழையினைத் தூவி இறக்கவும்.

நண்டு சூப்
தேவையான பொருட்கள் :
நண்டு - அரை கிலோ
வெங்காயத் தாள் - 3
பச்சை மிளகாய் - 2
பூண்டு - 4 பல்
இஞ்சி - ஒரு துண்டு
மிளகுத்தூள் - கால் தேக்கரண்டி
கான்ஃப்ளார் - ஒன்றரை தேக்கரண்டி
அஜினோ மோட்டோ - கால் தேக்கரண்டி
பால் - கால் கப்
வெண்ணெய் - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
உப்பு - ஒரு தேக்கரண்டி
செய்முறை :
நண்டை சுத்தம் செய்து கழுவி பாத்திரத்தில் வேக வைக்கவும். பிறகு ஆற விட்டு ஓட்டில் உள்ள சதைப் பகுதியை மட்டும் எடுத்து வைக்கவும். (இல்லையென்றால் அப்படியேகூட போடலாம்).
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு பொடியாக வெட்டிய வெங்காயத்தாள், பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி போட்டு நன்றாக வதக்கிக் கொள்ளவும். வெங்காயத்தாளில் உள்ள மேல் தாளை பொடியாக வெட்டி தனியாக வைக்கவும். (பாலில் கான்ஃப்ளாரை கரைத்து வைக்கவும்).
வதக்கியதில் ஒன்றரை டம்ளர் தண்ணீர் விட்டு உப்பு போட்டு நன்றாகக் கொதிக்க வைக்கவும். கொதிக்கும் பொழுது நண்டு சதையை போட்டு, அஜினோ மோட்டோ, கான்ஃப்ளார் கலந்து பாலை ஊற்றி ஒரு கொதி வந்த பிறகு ஒரு கப்பில் ஊற்றி மிளகுத் தூள் தூவி, நறுக்கிய வெங்காயத் தாள் தூவி பரிமாறவும்.

சைனீஸ் மட்டன் சூப்
தேவையான பொருட்கள் :
மட்டன் - அரை கிலோ
கேரட் - 2
உருளைக்கிழங்கு - 2
பெரிய வெங்காயம் - 1
மைதா - 2 மேசைக்கரண்டி
பச்சைபட்டாணி - அரை கப்
கிராம்பு - 5
ஏலக்காய் - 3
பட்டை - சிறுதுண்டு
மிளகு - 5
பால் - அரை கப்
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
உருளைக்கிழங்கு, கேரட்டினை தோல் நீக்கி துண்டுகளாக அரிந்துகொள்ளவும். மட்டனை சுத்தம் செய்து துண்டுகளாக்கிக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் கிராம்பு, ஏலம், மிளகு, பட்டை, நறுக்கிய வெங்காயம் போட்டு நன்கு வதக்கவும்.
அதில் நறுக்கி வைத்துள்ள காய்களையும், கறியையும் சேர்த்து நன்கு வதக்கவும்.
பிறகு பாலையும், மைதாமாவினையும் சேர்த்து கலந்து வேகவிடவும்.
அதன்பின் தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து, பச்சைபட்டாணியுடன் குக்கரில் போட்டு வேகவிடவும்.
வெந்ததும் இறக்கி சூடாக பரிமாறவும்

காய்கறி சூப்
தேவையான பொருட்கள் :
தக்காளி-5
சுரைக்காய்த்துண்டுகள்-அரை கப்
பீர்க்கங்காய்த்துண்டுகள்- அரை கப்
பீட்ரூட் துண்டுகள்- அரை கப்
கரட் துண்டுகள்- அரை கப்
சீரகம்- 1 ஸ்பூன்
கடுகு- 1 ஸ்பூன்
பெருங்காயத்தூள்- 1 ஸ்பூன்
நல்லெண்ணெய்- 2 ஸ்பூன்
மிளகுப்பொடி- அரை ஸ்பூன்
எலுமிச்சை சாறு- 2 ஸ்பூன்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி- கால் கப்
தேவையான உப்பு
மஞ்சள் தூள்- அரை ஸ்பூன்
செய்முறை :
காய்கறிகளை 6 கப் நீரில் வேக வைத்து, ஆற வைத்து அரைத்து வடிகட்டவும்.
பின் போதுமான நீர், உப்பு, மஞ்சள் தூள், மிளகுத் தூள் சேர்க்கவும்.
கடுகு, சீரகம், காயம் இவற்றை நல்லெண்ணெயில் தாளித்துக் கொட்டவும்.
பிறகு இந்த சூப்பை கொதிக்க விடவும்.
சூப் பொங்கியதும் இறக்கி எலுமிச்சை சாறு, கொத்தமல்லி இலை சேர்க்கவும்.

காய்கறி-ராஜ்மா சூப்
தேவையான பொருட்கள் :
தக்காளி - 2 கப் (பொடியாக நறுக்கியது)
வெங்காயம் - 1 கப் (பொடியாக நறுக்கியது)
உருளைகிழங்கு - 1 கப் (சதுரங்கள்)
முட்டை கோஸ் - 1/2 கப் (பொடியாக நறுக்கியது)
ராஜ்மா - 2 டேபிள்ஸ்பூன் (வேகவைத்தது)
பார்லி - 1 டேபிள்ஸ்பூன் (வேகவைத்தது)
ஆலிவ் எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
பொடி உப்பு - 1/4 டீஸ்பூன்
பொடித்த மிளகு - 1/4 டீஸ்பூன்
செய்முறை :
ஒரு கப் தக்காளி, 1/2 கப் வெங்காயம், உருளைகிழங்கை 3 கப் தண்ணீரில் உப்பு சேர்த்து ப்ரெஷர் குக்கரில் வேகவைக்கவும்.
வேகவைத்தபின், அதை நன்றாக ஆறவைத்து, அரைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி, மீதமுள்ள வெங்காயத்தை நன்றாக வதக்கவும்.
நறுக்கிய முட்டை கோஸை அதில் சேர்த்து நன்றாக வதக்கவும்.
மீதமுள்ள தக்காளி, ராஜ்மா, பார்லி சேர்த்து 1/2 கப் தண்ணீர் மற்றும் உப்பு-மிளகு சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து, அரைத்த விழுதையும் சேர்த்து கொதிக்க வைத்து அடுப்பிலிருந்து இறக்கி சூடாக பரிமாறவும்.

சிக்கன் காய்கறி ஸ்பைசி சூப்
தேவையான பொருட்கள் :
சிக்கன் - 250 கிராம்,
கேரட் - 2,
பீன்ஸ் - 5,
காளி ப்ளவர் - சிறிது,
கோஸ் - சிறிது,
உருளைகிழங்கு - 2 (சிறியது),
வெங்காயம் - 1,
சீரக பொடி - 1/2 தேக்கரண்டி,
மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி,
பால் - 1 கப்,
கார்ன் ஃப்ளார் - 3 தேக்கரண்டி,
பட்டை - சிறிது,
கிராம்பு - 2,
ப்ரிஞ்சி இலை - சிறிது,
எண்ணெய் - 1 தேக்கரண்டி,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை :
சிக்கனையும் எல்லா காய்கறிகளையும் சிறியதாக நறுக்கவும்.
குக்கரில் எண்ணெய் விட்டு, பட்டை-கிராம்பு-ப்ரிஞ்சி தாளித்து, சிக்கன் சேர்த்து வதக்கவும்.
எல்லா காய்கறிகளையும் சேர்த்து வதக்கி, 1 லிட்டர் தண்ணீர் சேர்க்கவும்.
குக்கரை மூடி 5,6 விசில் விடவும்.
சூடு அடங்கியதும் திறந்து, பாலில் கார்ன் ஃப்ளாரை கரைத்து ஊற்றி, ஒரு கொதி விட்டு இறக்கி, உப்பு-மிளகு தூள் தூவி பரிமாறவும்.

ஆட்டுக்கால் சூப்
தேவையான பொருட்கள் :
ஆட்டுக்கால் -- 4 என்னம் (நன்றாக சுத்தம் செய்தது)
மஞ்சள் பொடி -- 1/2 டீஸ்பூன்
சீரகம் -- 1 டீஸ்பூன்
சின்ன வெங்காயம் -- 20 என்னம்
பூண்டு -- 3 என்னம்
பச்சைமிளகாய் -- 2 என்னம்
விளக்கெண்ணைய் -- 1/2 டீஸ்பூன்
மிளகுத்தூள் -- தேவையான அளவு
உப்பு -- தே.அ
செய்முறை :
சீரகம்,வெங்காயம்,பூண்டு,பச்சை மிளகாயை தட்டிக்கொள்ள வேண்டும்.
ஆட்டுக்காலை வேக வைக்கும் போது தட்டியதை எல்லாம் போட்டு விளக்கெண்ணையை ஊற்றி கலக்கி உப்பு போடவும்.
பின் ஆட்டுக்கால் மூழ்கும் வரை தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி ஸ்ட்ரீம் வந்ததும் வெயிட்டை போட்டு ஒரு விசில் வந்ததும் சிம்மில் வைக்கவும்.

வெஜிடபுள் பேபி சூப்
தேவையான பொருட்கள் :
உருளை - 1/2
கேரட் - 1/2
பீன்ஸ் - 6
பீட்ரூட் - 1/2
பீஸ் - 1/4 கப்
வெங்காயம் - 1
ஜீரகம் - 1/2 ஸ்பூன்
வென்னை - 1/2 ஸ்பூன்
பிரியாணி இலை - 1
உப்பு - 1/4 ஸ்பூன்
குருமிளகுத் தூள் - 1/2 ஸ்பூன்
செய்முறை :
எல்லா காய்கறிகளையும் பொடியாக நறுக்கி அதனுடன் ஜீரகம்,உப்பு சேர்த்து 2 கப் தண்ணீர் ஊற்றி குக்கரில் 2 விசில் விடவும்.
ஆவி அடங்கியதும் திறக்கவும்.
பின் வென்னையை சூடாக்கி அதில் பிரியானி இலை இட்டு வெந்த சூப்பை கொட்டி குருமிளகுத் தூள் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.
உருளை இருப்பதால் நல்ல கூழ் போல் ஆகிவிடும், ஸ்பூனால் ஊட்டலாம்.

பச்சை பட்டாணி சூப்
தேவையான பொருட்கள் :
பச்சை பட்டாணி - 1/4 கிலோ,
பெரிய வெங்காயம் - 1,
மிளகு தூள் - 1 தேக்கரண்டி,
இஞ்சி - 1 துண்டு,
பூண்டு - 3 பல்,
கார்ன் ஃப்ளார் மாவு - 1/2 மேசைக்கரண்டி,
செலரி - 1, (விருப்பப்பட்டால்)
கொத்தமல்லி தழை - சிறிது,
உப்பு - தேவையான அளவு,
வெண்ணெய் - 1 மேசைக்கரண்டி.
செய்முறை :
பட்டாணியை வேக வைத்து, மிக்ஸியில் அரைத்து வைத்துக் கொள்ளவும்.
வெங்காயம், இஞ்சி, பூண்டு எல்லவற்றையும் பொடியாக நறுக்கவும்.
வாணலியில் வெண்ணெய் விட்டு உருகிய பின், வெங்காயம், இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும். (செலரி சேர்ப்பதாக இருந்தால் அதையும் பொடியாக நறுக்கி சேர்க்கவும்).
கார்ன் ஃப்ளார் மாவை அதனுடன் சேர்த்து வதக்கவும்.
அரைத்த பட்டாணியை சூப் வடிகட்டியில் வடித்து, வதக்கியதுடன் சேர்த்து கொதிக்க விடவும்.
உப்பு, மிளகு தூள் சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கவும்.
பரிமாறும் போது, மேலாக க்ரீம் விட்டு பரிமாறவும்.

காலி பிளவர் சூப்
தேவையான பொருட்கள் :
காலி பிளவர் - பாதி பூ
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 1
எலுமிச்சம்பழம் - 1 மூடி
காய்ச்சிய பால் - 1/2 கப்
நெய் - 1 டீஸ்பூன்
சூப் பவுடர் - 1 டீஸ்பூன்
தாளிக்க -
சோம்பு - 1/4 டீஸ்பூன்
மிளகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/2 டீஸ்பூன்
பட்டை - 1
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிது
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
காலி பிளவரை உதிர்த்து எடுத்து உப்பு கலந்த நீரில் போட்டு வைக்கவும்.
வாணலியை அடுப்பில் வைத்து நெய் விட்டு சோம்பு, மிளகு, உளுத்தம் பருப்பு, பட்டை, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
அத்துடன் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
காலி பிளவரையும் சேர்த்து வதக்கவும்.
இத்துடன் சூப் பவுடர் சேர்த்துக் கிளறி, தண்ணீர் சேர்த்து குக்கரில் வைத்து ஒரு விசில் விட்டு இறக்கவும்.
இறக்கி உப்பு சேர்த்து, எலுமிச்சம்பழம் பிழியவும்.
கடைசியாக பால் சேர்த்து கொத்துமல்லி தூவி பரிமாறவும்

சைனீஸ் வெஜிடபுள் சூப்
தேவையான பொருட்கள் :
பொடியக நறுக்கிய;
வெங்காயம் - 1
தக்காளி - 1
பூண்டு 3 பல்
முட்டை கோஸ் - 1/2 கப்
கேரட் - 1/4 கப்
பீன்ஸ் - 1/4 கப்
தக்காளி கெட்ச் அப் - 2 டீஸ்பூன்
சோயா சாஸ் - 2 டீஸ்பூன்
கார்ன் ப்ளோர் - 1 டீஸ்பூன்
உப்பு
எண்ணெய் - 5 டீஸ்பூன்
செய்முறை :
முதலில் எண்ணெய் ஊற்றி வெங்காயம்,தக்காளி,பூண்டு,முட்டை கோஸ்,பீன்ஸ் அகியவற்றை ஒன்றின் பின் ஒன்றாக,சேர்க்கவும்.
நன்றாக வதங்கிய பின்னர்,தக்காளி சாஸ்,சோயா சாஸ் சேர்த்துவதக்கவும்.
பின்னர் 4 கப் தண்ணீர் சேர்த்து 10 நிமிடங்கள் கொதிக்க விடவும்
பின்னர் தண்ணீரில் கரைத்த கார்ன் ப்ளோரை சேர்க்கவும்.
2 நிமிடம் கொதித்த பின்னர் இறக்கவும்.
உப்பு,மிளகு தூளுடன் பரிமாறவும்.

தக்காளி சூப்
தேவையான பொருட்கள் :
பெங்களூர் தக்காளி - 3,
பெரிய வெங்காயம் - 1,
கோதுமை மாவு - 1 தேக்கரண்டி,
மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை :
தக்காளியையும், வெங்காயத்தையும் சுமாரான துண்டுகளாக நறுக்கி ஒரு தம்ளர் தண்ணீரில் வேக வைக்கவும்.
வெந்ததும் மிக்ஸியில் இட்டு அரைத்து, பெரும் துளையுள்ள வடிகட்டியில் வடிகட்டவும்.
கோதுமை மாவை வெறும் வாணலியில் வறுத்து சேர்த்து 1 கப் தண்ணீர், மிளகு தூள், உப்பு சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும்.

காரட் சூப்
தேவையான பொருட்கள் :
காரட் - 2,
பாசிப்பருப்பு - 1 மேசைக்கரண்டி,
பூண்டு - 2பல்,
கொழுப்பு இல்லாத பால் - 1/2 கப்,
சில்லி சாஸ் - 1/2 தேக்கரண்டி,
சோயா சாஸ் - 1/2 தேக்கரண்டி
மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை :
காரட், பாசிப்பருப்பு, பூண்டு வேக வைத்து அரைத்து வடிகட்டி, அதனுடன் பால், சில்லிசாஸ், சோயா சாஸ் மிளகு தூள், உப்பு சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும்

நூடுல்ஸ் சூப்
தேவையான பொருட்கள் :
ரைஸ் நூடுல்ஸ்-1பாக்கெட்
சிக்கன்(எலும்பு நீக்கியது) -200கிராம்
இறால்-5
டோஃபு-1(துண்டுகளாக்கி எண்ணெயிலில் பொரித்து கொள்ளவும்)
சின்ன வெங்காயம்-5
பூண்டு-4 பல்
இஞ்சி-1cm துண்டு
கேரட்-1/4 கப்(நீளவாக்கில் வெட்டியது)
கோஸ்-1/4 கப் (நீளவாக்கில் வெட்டியது)
பட்டாணி-1/4 கப்
வெங்காய தாள்-4
கடுகு கீரை அல்லது ஏதேனும் பெரிய இலை உள்ள கீரை-1/2கப்
தக்காளி-1(நான்காக வெட்டவும்)
சிக்கன் ஸ்டாக் -1 லிட்டர் அல்லது சிக்கன் ஸ்டாக் க்யூப்-1(1லிட்டெர் நீரில் கரைக்கவும்)
சர்க்கரை-1/2தேக்கரண்டி
உப்பு
எண்ணெய் அல்லது வெண்ணெய்-1மேசைக்கரண்டி
செய்முறை :
சிக்கன் ஸ்டாக் தயாரிக்கும் முறை எனது சிக்கன்போரிட்ஜ் குறிப்பில் உள்ளது.அதன் படி ஸ்டாக் தயாரித்து கொள்ளவும்.
ஸ்டாக் க்யூப் பயன் படுத்தினால் கோழியை மெல்லிய துண்டுகளாக்கி கொள்ளவும்.
சூப் செய்யும் பானில் எண்ணெய் அல்லது வெண்ணெய் போட்டு பொடியாக நறுக்கிய வெங்காயம்,பூண்டு,இஞ்சி 1 நிமிடம் போட்டு வதக்கவும்.
மெலிதாக வெட்டிய கோழியை போட்டு வதக்கவும்(சொந்தமாக ஸ்டாக் தயாரித்தால் வேக வைத்த கோழியை மெலிதாக வெட்டி தனியே வைத்து கொள்ளவும்)
கோழி ஓரளவு வெந்தததும் காய்களையும்,இறாலையும்,டோஃபுவையும் போட்டு 1 நிமிடம் வதக்கி ஸ்டாக் சேர்க்கவும்.
மேலும் 1/2 லிட்டர் தண்ணீர் சேர்க்கவும்.
நன்றாக கொதித்த உடன் நூடுல்சை போடவும்.(வேக வைத்த கோழியை இப்போது சேர்க்கவும்)
தேவைப்பட்டால் உப்பு சேர்க்கவும்.
2 நிமிடம் வெந்ததும் இறக்கவும்.
பரிமாறும் கிண்ணங்களில் ஊற்றி வெங்காய தாள் தூவவும்.
மிளகு தூள் அவரவர் ருசிக்கேற்ப அருந்தும் போது சேர்த்து கொள்ளலாம்.
சூடாக பரிமாறவும்.

செட்டிநாடு சூப்
தேவையான பொருட்கள் :
லவங்கம் -- 1
தக்காளி -- 1 (பொடியாக நறுக்கியது)
பச்சைமிளகாய் -- 1 (பொடியாக நறுக்கியது)
வெங்காயம் -- 1 (பொடியாக நறுக்கியது)
துவரம் பருப்பு நீர்-- 2 கப் (பருப்பு வேகவைத்த நீர் மட்டும் போதும் பருப்பு வேண்டாம்)
பூண்டு -- 2 பல் (நசுக்கியது)
பால் -- 1 கரண்டி
உப்பு -- தே.அ
செய்முறை :
வாணலியில் 2 ஸ்பூன் எண்ணைய் விட்டு லவங்கம் போட்டு பச்சைமிளகாய், வெங்காயம், தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.
அதனுடன் துவரம் பருப்பு நீர் ஊற்றி உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
இறக்கும் சமயத்தில் பூண்டு போட்டபின் காய்ச்சி நன்கு ஆறிய பாலை ஊற்றி இறக்கவும்.
செட்டி நாடு சூப் தயார்.
குறிப்பு:
வேண்டும் எனில் வேகவைத்த துவரம்பருப்பை ஒரு கரண்டி எடுத்து நன்றாக பேஸ்ட் போல செய்து சூப்புடன் சேர்க்கலாம்.

வியட்நாம் சூப்
தேவையான பொருட்கள் :
எலும்பில்லாத மட்டன்
அல்லது பீஃப்- 1/4 கிலோ
பெரிய வெங்காயம் - 1
இஞ்சி - 2 இன்ச் அளவு துண்டு
கேரட் - 100 கிராம்
எலுமிச்சை பழம் - 1
மல்லி கீரை - 3 கொத்து
காய்ந்த மிளகாய் சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்
சோயா சாஸ் - 1 சிறிய ஸ்பூன்
வெள்ளரிப்பிஞ்சு - 1
நூடுல்ஸ் - 100 கிராம்
முளைக்கட்டிய பச்சை பயறு - 1 பிடி
சிக்கன் க்யூப் - 1/2 க்யூப்
உப்பு - 1/2 ஸ்பூன்
செய்முறை :
முதலில் கறியை சுத்தம் செய்து, கேரட்டை தோல் சுரண்டி சற்று பெரிய துண்டுகளாக வெட்டி சூப் போடவேண்டிய பாத்திரத்தில் போட்டுக்கொள்ளவும்.
இஞ்சி துண்டை அடுப்பில் நேரடி தணலில், மெதுவான தீயில் சுட்டு, பிறகு தோலை சுரண்டி நன்றாக நசுக்கி கறியுடன் போடவும்.
வெங்காயத்தையும் அதுபோல் தணலில் வேகும் அளவு தோலோடு சுட்டு, கருகிய தோலை நீக்கிவிட்டு 4 துண்டுகளாக வெட்டி கறியுடன் போடவும்.
அத்துடன் உப்பு சேர்த்து, சுமார் 3/4 லிட்டர் தண்ணீர், சிக்கன் க்யூப் சேர்த்து கறி வேகும்வரை மூடிபோட்டு கொதிக்கவிடவும்.
இன்னொரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து நூடுல்ஸை பதமாக வேகவைத்து வடித்துக்கொள்ளவும்.
வெள்ளரிப்பிஞ்சை விரல் அளவு சற்று மெல்லியதாக 2 இன்ச் நீளத்தில் வெட்டிக்கொள்ளவும்.
மல்லிக்கீரையையும் நைஸாக அரிந்துக்கொள்ளவும்.
கறி வெந்தவுடன் அதை சற்று மெல்லிய துண்டுகளாக வெட்டி 3 சூப் கோப்பையில் 3 பங்காக பிரித்து போடவும்.
அதேபோல், நறுக்கிவைத்துள்ள வெள்ளரிப்பிஞ்சு, மல்லிக்கீரை, வேகவைத்த நூடுல்ஸ், முளைக்கட்டிய பச்சை பயறு அனைத்தையும் பிரித்து போட்டுக்கொள்ளவும்.
அதன் மேல் ரெடியான சூப்பை ஒவ்வொரு கோப்பையிலும் ஊற்றவும்.
அத்துடன் மிளகாய் சாஸ், சோயா சாஸ் சேர்த்து, எலுமிச்சை பழத்தையும் அதன் மேல் பிழிந்து சூடாக பரிமாறவும்.

ப்ரெஞ்ச் ஆனியன் சூப்
தேவையான பொருட்கள் :
பெரிய வெங்காயம் - 4
வெண்ணெய் - 2 தேக்கரண்டி
உப்பு - அரை தேக்கரண்டி
மிளகுத் தூள் - அரை தேக்கரண்டி
சீஸ் - துருவியது ஒரு மேசைக்கரண்டி
ரொட்டித் தூள் - 4
எலும்பு வேகவைத்த தண்ணீர் - 4 கப்
செய்முறை :
200 கிராம் எலும்பில் தண்ணீர் ஊற்றி வேகவைத்து 4 கோப்பை வடிகட்டிக் கொள்ளவும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கி வெண்ணெய்யுடன் சேர்த்து நன்றாகக் கிளறவும்.
வெங்காயத்தோடு எலும்பு வேகவைத்த தண்ணீரைச் சேர்த்து வெங்காயம் மிருதுவாக வேகும் வரை கொதிக்க விடவும்.
ரொட்டித் துண்டுகளின் மேல் துருவிய சீஸை தூவி ஓவனில் வைத்து பொன்னிறமாக வரும்வரை பேக் செய்து கொள்ளவும்.
கொதிக்கும் சூப்புடன் உப்பு, மிளகு தூளைத் தூவி, ரொட்டித் துண்டுகளைச் சிறியதாக நறுக்கிப் போட்டுப் பரிமாறவும்

ஹாட் அண்ட் ஸோர் சிக்கன் சூப்
தேவையான பொருட்கள் :
கோழி இறைச்சி - 200 கிராம் (எலும்பில்லாதது)
சிக்கன் ஸ்டாக் - 5 கப்
வெங்காயம் - ஒன்று(சிறியது)
முட்டைகோஸ் - 100 கிராம்
குடைமிளகாய் - அரை
ஃப்ரெஞ்ச் பீன்ஸ் - 4
பட்டன் காளான் - 2
பூண்டு - 2 பல்
இஞ்சி - சிறுதுண்டு
வெங்காயத்தாள் - ஒன்று
கார்ன்ஸ்டார்ச் - 3 மேசைக்கரண்டி
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
வெள்ளை மிளகுத்தூள் - அரை தேக்கரண்டி
சீனி - அரைத் தேக்கரண்டி
அஜினோமோட்டோ - ஒரு சிட்டிகை
சோயா சாஸ் - 2 மேசைக்கரண்டி
சில்லி சாஸ் - 2 மேசைக்கரண்டி
வினிகர் - 2 மேசைக்கரண்டி
மிளகாய் எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
கோழி இறைச்சியினை சுத்தம் செய்து, 6 கப் நீர் ஊற்றி சுமார் 10 நிமிடங்கள் வேகவைத்து நீரை தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும்.
குடை மிளகாய், ஃப்ரெஞ்ச் பீன்ஸ், வெங்காயம், பூண்டினை சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
முட்டைக்கோஸினை கழுவி நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.
காளானை சுத்தம் செய்து சற்று பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயத்தாளினையும் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி, அதில் நறுக்கின வெங்காயம், பூண்டு, துருவிய இஞ்சி ஆகியவற்றைப் போட்டு வதக்கவும்.
பிறகு நறுக்கின காளான், குடைமிளகாய், ப்ரெஞ்ச் பீன்ஸ் சேர்த்து மேலும் இரண்டு மூன்று நிமிடங்களுக்கு வதக்கவும்.
காய்கள் நன்கு வெந்தவுடன் மிளகுத்தூள், சீனி, தேவையான உப்பு, அஜினோமோட்டோ, சோயா சாஸ், சில்லி சாஸ் சேர்த்து நன்கு கலக்கவும்.
வேகவைத்து எடுத்துள்ள கோழி இறைச்சியினை சிறு துண்டங்களாக நறுக்கி இத்துடன் சேர்க்கவும். அதன் பின் எடுத்து வைத்துள்ள சிக்கன் ஸ்டாக்கினை ஊற்றி, நன்கு கலக்கி கொதிக்க விடவும். கொதிக்க ஆரம்பித்ததும் காட்ன்ஸ்டார்ச்சினை சேர்த்து கலக்கி மேலும் ஒரு நிமிடத்திற்கு வேகவிடவும்.
அதன் பிறகு வினிகர், மிளகாய் எண்ணெய் சேர்த்து கலக்கி இறக்கவும். நறுக்கின வெங்காயத்தாள் தூவிப் பரிமாறவும்

பகிர்வுக்கு நன்றி தென்றல்.
மகி- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum