தமிழ் | Tamil | Forum
தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

கூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.

புகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.

Join the forum, it's quick and easy

தமிழ் | Tamil | Forum
தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

கூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.

புகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.
தமிழ் | Tamil | Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வணக்கம் என் பெயர் நாகராசன்.இரா
by rajan_1972 Fri Apr 10, 2020 7:20 pm

» சிறந்த பொழுதுபோக்கு இணையதளம்!
by pba Sat Jul 02, 2016 8:11 pm

» ஏற்றுமதி உரிமம் பெறும் விண்ணப்பம்
by tamilnews Tue Mar 24, 2015 8:00 pm

» மொபைல், டிடிஎச் ரீசார்ஜ் செய்யப் போறீங்களா? இந்த சலுகைகளைப் பாருங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:41 am

» மொபைல் ரீசார்ஜ் செய்து ஷாப்பிங் கூப்பன் இலவசமாக பெறுங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:38 am

» மெமரி கார்டு வாங்கப் போறீங்களா? 74% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:36 am

» அமேசானில் பெண்களுக்கான ஆடைகள் 70% வரை தள்ளுபடி !
by dsytamil Wed Jan 14, 2015 1:34 am

» அமேசானில் ஆண்களுக்கான ஆடைகள் 60% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:31 am

» லெனோவா டேப்ளட் 43% சலுகை விலையில் ரூ. 5949 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:28 am

» ப்ளிப்கார்ட் தளத்தில் சிறுவர்களுக்கான ஆடைகள் 70% வரை + 30% கூடுதல் தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:14 am

» அமேசான் தளத்தில் 50% தள்ளுபடி விலையில் மொபைல்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:13 am

» ரூ. 7499 மதிப்புள்ள மைக்ரோமேக்ஸ் ஏ1 ஆன்ட்ராய்டு மொபைல் இப்போது ரூ. 5499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:11 am

» ரூ. 19999 மதிப்புள்ள நோக்கியா லூமியா 625 மொபைல் ரூ. 7499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:10 am

» ப்ராண்டட் காலணிகளுக்கு 70% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:08 am

» ஆன்லைன் ஷாப்பிங்கில் ப்ரிண்டர்களுக்கு 33% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:06 am

» ஆன்லைனில் பொருள் வாங்கப் போறீங்களா? 70% வரை பணத்தை சேமியுங்கள்!
by dsytamil Tue Jan 13, 2015 12:30 am

» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...!
by sathikdm Sun Oct 19, 2014 4:45 pm

» சிறுதொழில் செய்பவர்கள் இணையதளம் தொடங்க வேண்டியதின் அவசியம்!
by pba Sat Sep 27, 2014 12:58 am

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:47 pm

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:42 pm

» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
by santhoshpart Wed Aug 27, 2014 4:22 pm

» “சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா!”
by santhoshpart Wed Aug 13, 2014 3:54 pm

» Daily Rs.500/- and Above
by K.MARIAPPAN Wed Jul 30, 2014 12:01 pm

» http://www.neobux.com/?r=narasimmant
by Navaneethakrishnan Wed Jul 02, 2014 3:41 pm

» வணக்கம் என் பெயர் வேணு
by A.Venu Fri Jun 27, 2014 10:10 am

» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?
by sathikdm Wed Jun 18, 2014 3:24 pm

» தமிழ் மொழி மூல கல்வி இணையதளம்
by afdhaal Wed May 28, 2014 9:22 pm

» வருக. வருக. வணக்கம்.
by மகி Mon May 12, 2014 3:55 pm

» அறிமுகம் -விநாயகா செந்தில்.
by மகி Mon May 12, 2014 3:53 pm

» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....!
by vinayagasenthil Sat May 10, 2014 9:04 pm

பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

வார ராசி பலன்!

Go down

வார ராசி பலன்! Empty வார ராசி பலன்!

Post by மகி Mon Apr 25, 2011 2:36 am

ஏப்ரல் 25 முதல் மே 2 வரைக்கான ராசி பலன்!

மேஷம்:

மனித நேயத்தின் மறுஉருவமாய் விளங்கும் நீங்கள், மனசாட்சிக்கு கட்டுப்பட்டவர்கள். சுக்ரன் 12-ல் உச்சம் பெற்றிருப்பதால் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். தள்ளிப் போன சுபகாரியங்களால் வீடு களை கட்டும். வி. ஐ. பிகள் நண்பர்களாவார்கள். கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். எதிர்பார்த்த பணம் வரும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். வெளியூர் பயணங்கள் திட்டமிட்டபடி அமையும். பழைய உறவினர்கள், நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். கன்னிப் பெண்களே! நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். சனிபகவான் வலுவாக இருப்பதால் நாடாளுபவர்கள், தொழிலதிபர்களின் அறிமுகம் கிடைக்கும். வெளிநாட்டிலிருப்பவர்களால் ஆதாயம் உண்டு. குரு பகவான் 12-ல் மறைந்திருப்பதால் வீண் விரையம், இனந்தெரியாத கவலைகள், செலவுகள் வந்துப் போகும். அரசியல்வாதிகளே! மேலிடத்தை பகைத்துக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். உத்‌தியோகத்தில் அதிகாரிகள் பாராட்டினாலும் சக ஊழியர்களால் டென்ஷன் அதிகரிக்கும். கலைத்துறையினர்களே! விமர்சனங்கள் வரக்கூடும். திடீர் முடிவுகளால் வெற்றி பெறும் வாரமிது. அதி‌ர்ஷ்ட தேதிகள் : 25, 27, 29 அதி‌ர்ஷ்ட எண்கள் : 1, 9 அதி‌ர்ஷ்ட நிறங்கள் : கிரே, மெரூண் அதி‌ர்ஷ்ட திசை : வடக்கு.

ரிஷபம்:

மூட நம்பிக்கைகளை உடைத்தெறியும் நீங்கள், எதிலும் புதுமையை விரும்புவீர்கள். செவ்வாய் வலுவாக இருப்பதால் நிர்வாகத் திறன் கூடும். எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள். நட்பு வட்டம் விரியும். குடும்பத்தினரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். மனைவிவழி உறவினர்களால் ஆதாயமுண்டு. உடன்பிறந்தோர் பாசமாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் தொடர்பு கிடைக்கும். பூர்வீக சொத்தை மாற்றி புது வீடு, மனை வாங்குவீர்கள். கல்யாணம், கோவில் நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். கன்னிப் பெண்களே! சலிப்பு, சோர்வு நீங்கும். உற்சாகத்துடன் வலம் வருவார்கள். தாயாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். விலகிச் சென்றவர்கள் வலிய வந்து பேசுவார்கள். ராகுவும், கேதுவும் சரியில்லாததால் குடும்பத்தில் சலசலப்பு, சிறுசிறு விபத்துகள் வந்து நீங்கும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். அரசியல்வாதிகளே! எதிர்கட்சியினரை ஆதாரமின்றி விமர்சித்து பேசாதீர்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். புது வேலையாட்கள் அமைவார்கள். உத்‌தியோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். கலைத்துறையினர்களே! பழைய நிறுவனங்கள் அழைத்து பேசும். விட்டுக் கொடுத்து விட்டதைப் பிடிக்கும் வாரமிது. அதி‌ர்ஷ்ட தேதிகள் : 27, 29, 30 அதி‌ர்ஷ்ட எண்கள் : 3, 4 அதி‌ர்ஷ்ட நிறங்கள் : ஆரஞ்சு, ப்ரவுன் அதி‌ர்ஷ்ட திசை : தெற்கு.

மிதுனம்:

எதையும் இலவசமாக பெற்றுக் கொள்ள விரும்பாத நீங்கள், உழைப்பை நம்பி வாழ்வீர்கள். சூரியன் தொடர்ந்து வலுவாக இருப்பதால் அரசாங்கத்தாலும், அதிகாரப் பதவியில் இருப்பவர்களாலும் உதவிகள் உண்டு. தினந்தோறும் எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். பேச்சில் கம்பீரம் பிறக்கும். பிள்ளைகளுடன் வெளியூர் பயணம் சென்று வருவீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். சொந்த-பந்தங்கள் மத்தியில் செல்வாக்குக் கூடும். 4-ல் சனி நிற்பதால் சில நேரங்கள் விரக்தி, அலட்சியம் வரும். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வந்துப் போகும். கன்னிப் பெண்களே! தடைப்பட்ட உயர்கல்வியை தொடர்வீர்கள். 25-, 26 ஆகிய தேதிகளில் சந்திராஷ்டமம் நடப்பதால் பதட்டப்படாமல் முன்யோசனையுடன் செயல்படப்பாருங்கள். ராகு, கேது சரியில்லாததால் மன உளைச்சல், வீண் செலவுகள் வந்துப் போகும். அரசியல்வாதிகளே! தலைமையால் பாராட்டப்படுவீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். உத்‌தியோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். கலைத்துறையினர்களே! எண்ணங்கள் பூர்த்தியாகும். தொட்டது துலங்கும் வாரமிது. அதி‌ர்ஷ்ட தேதிகள் : 28, 30, 1 அதி‌ர்ஷ்ட எண்கள் : 4, 6 அதி‌ர்ஷ்ட நிறங்கள் : க்ரீம் வெள்ளை, மஞ்சள் அதி‌ர்ஷ்ட திசை : தென்மேற்கு.

கடகம்:

தான் உண்டு தன் வேலை உண்டு என்றிருக்கும் நீங்கள் அடுத்தவர் விஷயத்தில் அநாவசியமாக தலையிட மாட்டீர்கள். சூரியன் பலமாக இருப்பதால் புகழ், கௌரவம் ஒருபடி உயரும். வேலைக் கிடைக்கும். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். மேல்மட்ட அரசியல்வாதிகளின் அறிமுகம் கிடைக்கும். சொத்து சிக்கல்கள் சுமுகமாக முடியும். வேற்றுமொழிப் பேசுபவர்கள் உதவுவார்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாயமும் உண்டு. அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். விலை உயர்ந்த ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. வாகனம் பழுதாகும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். கன்னிப் பெண்களே! எதிர்காலம் குறித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்தவர்களை சந்திப்பீர்கள். 27, 28 மற்றும் 29-ந் தேதி மதியம் 1 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் யாரிடமும் உணர்ச்சிவசப்பட்டு பேசாதீர்கள். அரசியல்வாதிகளே! மேலிடத்தில் உங்களின் கோரிக்கையை ஏற்பார். வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம் உண்டு. உத்‌தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். சக ஊழியர்கள் மதிப்பார்கள். கலைத்துறையினர்களே! புது வாய்ப்புகள் தேடி வரும். செல்வம், செல்வாக்கு கூடும் வாரமிது. அதி‌ர்ஷ்ட தேதிகள் : 25, 30, 1 அதி‌ர்ஷ்ட எண்கள் : 3, 5 அதி‌ர்ஷ்ட நிறங்கள் : நீலம், இளம்சிவப்பு அதி‌ர்ஷ்ட திசை : மேற்கு.

சிம்மம்:

மனதிற்கு தோன்றுவதை மறைக்காமல் பேசும் நீங்கள், உண்மைக்கு முக்கியத்துவம் தருவீர்கள். சுக்ரனும், புதனும் 8-ல் மறைந்திருப்பதால் உங்களின் அணுகுமுறையை மாற்றிக் கொள்வீர்கள். பழைய சிக்கலுக்கு வழி பிறக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். மனைவிவழி உறவினர்கள் மதிப்பார்கள். வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவீர்கள். உடன்பிறந்தவர்களை அனுசரித்துப் போங்கள். வீடு, மனை வாங்குவது, விற்பதில் அவசரம் வேண்டாம். வழக்கில் வழக்கறிஞரை மாற்றுவீர்கள். பாதச்சனி தொடர்வதால் கை, முழங்கால் வலி, எதிலும் ஒருவித சலிப்பு வரும். கன்னிப் பெண்களே! பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். தந்தையின் உடல் நலம் பாதிக்கும். கேது வலுவாக இருப்பதால் எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். ஷேர் லாபம் தரும். நட்பால் ஆதாயம் உண்டு. 29--ந் தேதி மதியம் 1 மணி முதல் 30 மற்றும் 1 ஆகிய தேதிகளில் சந்திராஷ்டமம் நடப்பதால் முக்கிய முடிவுகளை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் சந்தை நிலவரத்தை அறிந்து முதலீடு செய்யுங்கள். அவசரப் பட வேண்டாம். உத்‌தியோகத்தில் பணிகளை போராடி முடிக்க வேண்டி வரும். கலைத்துறையினர்களே! சம்பளப் பாக்கி கைக்கு வரும். அனுசரித்துப் போவதன் மூலம் அதிகாரம் பெறும் வாரமிது. அதி‌ர்ஷ்ட தேதிகள் : 25, 26, 28 அதி‌ர்ஷ்ட எண்கள் : 5, 7 அதி‌ர்ஷ்ட நிறங்கள் : பிஸ்தாபச்சை, சில்வர் கிரே அதி‌ர்ஷ்ட திசை : வடகிழக்கு.

கன்னி:

ஆரவாரம் இல்லாமல் அமைதியாக சாதிக்கும் நீங்கள், நகைச்சுவை உணர்வு அதிகம் உள்ளவர்கள். சுக்ரன் சாதகமாக இருப்பதால் வி. ஐ. பிகள் அறிமுகமாவார்கள். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை தந்து முடிப்பீர்கள். பெரியோரின் ஆசி கிட்டும். குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழி யோசிப்பீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டு. அவர்களின் உயர்கல்வி, திருமண முயற்சிகள் திருப்திகரமாக முடியும். நவீன சமையலறை சாதனங்கள் வாங்குவீர்கள். புது வீடு, மனை, வாகனம் வாங்குவீர்கள். உறவினர்கள் உங்கள் உதவியை நாடுவார்கள். ஜெனம்ச்சனி தொடர்வதால் ஒருவித பதட்டம், படபடப்பு வந்துச் செல்லும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். இளைய சகோதர வகையில் பயனடைவீர்கள். கன்னிப் பெண்களே! கெட்ட நண்பர்களிடமிருந்து விடுபடுவீர்கள். பழைய சொந்தங்கள் தேடி வரும். அரசு காரியங்கள் சாதகமாக முடியும். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். வியாபாரத்தில் புது கிளைகள் தொடங்குவீர்கள். வாடிக்கையாளர் எண்ணிக்கை உயரும். உத்‌தியோகத்தில் அதிகாரிகள் மனம் விட்டுப் பேசுவார்கள். புதிய முயற்சிகளில் வெற்றி பெறும் வாரமிது. அதி‌ர்ஷ்ட தேதிகள் : 25, 29, 1 அதி‌ர்ஷ்ட எண்கள் : 2, 5 அதி‌ர்ஷ்ட நிறங்கள் : மயில்நீலம், வெள்ளை அதி‌ர்ஷ்ட திசை : தென்கிழக்கு.

துலாம்:

பழைய கலைப் பொருட்களை பத்திரப்படுத்தி வைக்கும் பழக்கமுள்ள நீங்கள் நேர்மையை நேசிப்பவர்கள். ராகு வலுவாக இருப்பதால் தடைகளை கண்டு தளரமாட்டீர்கள். அரைக்குறையாக நின்ற வேலைகள் முடியும். குடும்பத்தினரை அனுசரித்துப் போங்கள். பிள்ளைகளிடம் உங்களின் எண்ணங்களை திணிக்க வேண்டாம். எவ்வளவு பணம் வந்தாலும் செலவுகள் துரத்தும். ஏழரைச்சனி நடைபெறுவதால் ஏமாற்றம், விரக்தி வரும். உறவினர்களில் சிலர் உங்களைத் தவறாகப் புரிந்துக் கொள்வார்கள். சூரியனால் வீண் அலைச்சல் அதிகரிக்கும். மனைவியின் உடல் நலம் பாதிக்கும். முன்கோபத்தை குறையுங்கள். கன்னிப் பெண்களே! காதல் விவகாரத்தில் தள்ளி இருங்கள். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். குரு 6-ல் மறைவதால் வீண் சந்தேகம், வாகன விபத்து, உறவினர் பகை வந்துப் போகும். வெளிநாட்டிலிருப்பவர்களால் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். வாடிக்கையாளர்களிடம் நயமாக பேசுங்கள். உத்‌தியோகத்தில் மற்றவர்களை நம்பி எந்த பொறுப்புகளையும் ஒப்படைக்க வேண்டாம். கலைத்துறையினர்களே! மூத்த கலைஞர்களிடம் விட்டுக் கொடுத்து போங்கள். சகிப்புத் தன்மையால் சங்கடங்கள் தீரும் வாரமிது. அதி‌ர்ஷ்ட தேதிகள் : 27, 28, 29 அதி‌ர்ஷ்ட எண்கள் : 6, 9 அதி‌ர்ஷ்ட நிறங்கள் : க்ரீம் வெள்ளை, பழுப்பு அதி‌ர்ஷ்ட திசை : கிழக்கு.

விருச்சிகம்:

மறப்போம் மன்னிப்போம் என்ற கொள்கை உடைய நீங்கள் மற்றவர்கள் செய்யும் தவறை இங்கிதமாக எடுத்துரைப்பீர்கள். புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பார். பணவரவு திருப்தி தரும். பழைய நண்பர்கள், உறவினர்களிடமிருந்து உதவிகள் கிடைக்கும். பிள்ளைகளை இசை, நடனம், ஓவியம் இவற்றில் ஈடுபடுத்துவீர்கள். நவீன ரக ஆடியோ, வீடியோ சாதனங்கள் வாங்குவீர்கள். கன்னிப் பெண்களே! உங்களின் திறமைகள் வெளிப்படும். தாயாரின் உடல் நலம் சீராகும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். கேதுவால் மனைவியுடன் கருத்து மோதல்கள், எதிலும் ஒரு தயக்கம், தடுமாற்றம் வந்து நீங்கும். அரசு காரியங்கள் விரைந்து முடியும். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள். பழைய கடன் பிரச்னைகள் தீரும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். பழைய வாடிக்கையாளர்களின் வருகையுண்டு. பங்குதாரர்களின் ஆதரவு கிடைக்கும். உத்‌தியோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். கலைத்துறையினர்களே! புகழ், கௌரவம் கூடும். வாக்குசாதுர்யத்தால் வெற்றி பெறும் வாரமிது. அதி‌ர்ஷ்ட தேதிகள் : 27, 29, 30 அதி‌ர்ஷ்ட எண்கள் : 5, 8 அதி‌ர்ஷ்ட நிறங்கள் : ஊதா, மெரூண் அதி‌ர்ஷ்ட திசை : வடமேற்கு.

தனுசு:

கறாராகப் பேசும் நீங்கள், ஆடம்பரத்தையும், விளம்பரத்தையும் விரும்ப மாட்டீர்கள். சனி பகவான் வலுவாக இருப்பதால் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். உறவினர்கள், நண்பர்களால் அனுகூலம் உண்டு. உல்லாசப் பயணம் சென்று வருவீர்கள். வீடு வாங்க, கட்ட வங்கிக் கடன் உதவி கிட்டும். ராசிக்குள் ராகு நிற்பதால் எடுத்த வேலையை முடிப்பதற்குள் அலைச்சலும், தடைகளும் வந்து போகும். கன்னிப்பெண்களே! புதியவர்கள் நண்பர்களாவார்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். புது சொத்து வாங்குவீர்கள். சகோதர வகையில் இருந்த பிணக்குகள் நீங்கும். அரசியல்வாதிகளே! வாக்குறுதிகளை நிறைவேற்றப் போராட வேண்டியிருக்கும். வழக்கில் அவசர முடிவுகளை தவிர்க்கவும். வியாபாரத்தில் லாபம் குறையாது. நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். புதுப் பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்‌தியோகத்தில் ஒரே நேரத்தில் பல வேலைகளை பார்க்க வேண்டி வரும். கலைத்துறையினர்களே! உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்ப்புகளை கடந்து சாதிக்கும் வாரமிது. அதி‌ர்ஷ்ட தேதிகள் : 26, 27, 30 அதி‌ர்ஷ்ட எண்கள் : 1, 9 அதி‌ர்ஷ்ட நிறங்கள் : ஆலிவ்பச்சை, பிங்க் அதி‌ர்ஷ்ட திசை : தெற்கு.

மகரம்:

எதையும் தாங்கும் இதயம் கொண்ட நீங்கள் உயர்வான எண்ணம் உடையவர்கள். செவ்வாய் வலுவாக இருப்பதால் அடிமனதிலிருந்த பயம், பதட்டம் நீங்கும். புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். நீண்ட நாளாக வராமல் இருந்த பணம் கைக்கு வந்து சேரும். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். கடன் பிரச்சனைகளுக்கு முற்றுப் புள்ளி வைப்பீர்கள். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை செலுத்துவார்கள். எதிர்பார்த்த விலைக்கு பழைய மனையை விற்பீர்கள். அரசு காரியங்கள் தடைப்பட்டு முடியும். கன்னிப் பெண்களே! கல்யாணப் பேச்சு வார்த்தை சுமுகமாக முடியும். அரசியல்வாதிகளே! எதிர்பார்த்த வேலைகள் தாமதமாக முடியும். வாகனத்தை மாற்றுவீர்கள். ஆன்மிகவாதிகளை சந்திப்பீர்கள். அண்டை வீட்டாரின் ஆதரவு பெருகும். வியாபாரத்தில் போட்டியாளர்களை சமாளிக்க போராடுவீர்கள். உத்‌தியோகத்தில் மேலதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். கலைத்துறையினர்களே! உற்சாகத்துடன் காணப்படுவார்கள். திறம்பட செயல்பட்டு தகுதி பெறும் வாரமிது. அதி‌ர்ஷ்ட தேதிகள் : 27, 28, 1 அதி‌ர்ஷ்ட எண்கள் : 6, 7 அதி‌ர்ஷ்ட நிறங்கள் : ஆரஞ்சு, வெளிர்நீலம் அதி‌ர்ஷ்ட திசை : தென்கிழக்கு.

கும்பம்:

பணம், காசு வந்தாலும் பண்பாடு, கலாச்சாரம் மாறாத நீங்கள் தன்னை நாடிவந்தவர்களை ஆதரிப்பவர்கள். குருபகவான் வலுவாக இருப்பதால் புது தெம்பு பிறக்கும். எதிர்பாராத பணவரவு உண்டு. பழுதான வாகனத்தை மாற்றுவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். சொத்து வாங்குவீர்கள். தொழிலதிபர்களின் நட்பு கிடைக்கும். உறவினர்களால் நன்மை உண்டு. தங்க ஆபரணம் வாங்குவீர்கள். கோவில் விழாக்களை முன்னின்று நடத்துவீர்கள். அஷ்டமத்துச்சனி தொடர்வதால் யாரையும் முழுமையாக நம்ப வேண்டாம். 3-ல் சூரியன் வலுவாக நிற்பதால் அரசால் அனுகூலம் உண்டு. தாய்வழி உறவினர்கள் ஒத்துழைப்பார்கள். வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். சகோதரி உதவுவார். அரசியல்வாதிகளே! தலைமையின் அன்புக்கு பாத்திரமாவீர்கள். கன்னிப் பெண்களே! பிரியமானவர்களை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்‌தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். சக ஊழியர்களுடன் இருந்த மோதல்கள் விலகும். கலைத்துறையினர்களே! வேலைச்சுமை அதிகரித்தாலும் புது அனுபவம் உண்டாகும். தொலை நோக்குச் சிந்தனையால் சாதிக்கும் வாரமிது. அதி‌ர்ஷ்ட தேதிகள் : 26, 28, 30 அதி‌ர்ஷ்ட எண்கள் : 4, 5 அதி‌ர்ஷ்ட நிறங்கள் : மெரூண், ரோஸ் அதி‌ர்ஷ்ட திசை : மேற்கு.

மீனம்:

நழுவுவதைப் போல சில விஷயங்களில் நீங்கள் பேசினால் அதற்கொரு காரணம் இருக்கும். ராசிக்குள் சுக்ரன் இருப்பதால் சோம்பல் நீங்கி, உற்சாகம் அடைவீர்கள். குடும்பத்தில் சுப காரியங்கள் ஏற்பாடாகும். உங்கள் ரசனைக் கேற்ற வீட்டிற்கு மாறுவீர்கள். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி கிட்டும். கன்னிப் பெண்களே! உங்களின் புது முயற்சிகளை பெற்றோர் ஆதரிப்பார். 4-ல் கேது இருப்பதால் தாயாருடன் மனஸ்தாபங்கள் வந்துபோகும். ராசிக்குள் நிற்கும் செவ்வாயால் மனஉளைச்சல், சகோதர வகையில் செலவுகள் வந்துப் போகும். 7-ல் சனி தொடர்வதால் மனைவியுடன் அவ்வப் போது வாக்குவாதங்கள் வந்து போகும். குடும்ப விஷயங்களில் மற்றவர்களை நுழையவிடாதீர்கள். குலதெய்வ கோவிலுக்குச் சென்று வருவது நல்லது. வியாபாரத்தில் பழைய வேலையாட்கள் மீண்டும் பணியில் வந்து சேர்வார்கள். பங்குதாரர்களுடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். உத்‌தியோகத்தில் அதிகாரிகளை கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக முடிவெடுக்க வேண்டாம். கலைத்துறையினர்களே! உங்களின் கலைத்திறன் வளரும். வெறுத்துப் போகாமல் பொறுத்து நின்றால் வெற்றி பெற வாய்ப்புள்ள வாரமிது. அதி‌ர்ஷ்ட தேதிகள் : 25, 26, 1 அதி‌ர்ஷ்ட எண்கள் : 2, 7 அதி‌ர்ஷ்ட நிறங்கள் : ஆலிவ்பச்சை, நீலம் அதி‌ர்ஷ்ட திசை : வடக்கு.

நன்றி: வெப்துனியா.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

வார ராசி பலன்! Empty Re: வார ராசி பலன்!

Post by மகி Mon May 02, 2011 8:01 am

மே 2 முதல் 9 வரைக்கான ராசி பலன்!

மேஷம்:

வணங்க ஆரம்பிக்கும் போதே வளர ஆரம்பிக்கலாம் என்ற கொள்கையை கடைப்பிடிப் பவர்கள் நீங்கள்தான். ராசிநாதன் செவ்வாய் ராசிக்குள் ஆட்சி பெற்று அமர்ந்ததால் புதுத் தெம்பு பிறக்கும். பணவரவு திருப்தி தரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். ராசிக்குள் சூரியன் நிற்பதால் கண் எரிச்சல், முன்கோபம் வந்துப் போகும். பிள்ளைகளின் உயர்கல்வி குறித்து யோசிப்பீர்கள். சகோதர பகை நீங்கும். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும். 12-ல் குரு நிற்பதால் சுபச்செலவுகள் அதிகரிக்கும். அரசியல்வாதிகளே! சகாக்களுடன் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. கன்னிப் பெண்களே! கல்யாணத் தடைகள் நீங்கி நல்ல இடத்தில் கல்யாணம் முடியும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் வருகை அதிகரிக்கும். உத்யோகத்தில் உங்களின் ஆலோசனைக்கு மேலதிகாரிகள் ஒத்துழைப்பார்கள். வேலையில் ஈடுபாடு அதிகரிக்கும். கலைத்துறையினர்களே! கிடைக்கின்ற வாய்ப்பைத் தவறவிடாமலிருப்பது நல்லது. நிதானத்தால் வெல்லும் வாரமிது. அதி‌ர்ஷ்ட தேதிகள் : 5, 6, 8 அதி‌ர்ஷ்ட எண்கள் : 5, 6 அதி‌ர்ஷ்ட நிறங்கள் : க்ரீம் வெள்ளை, நீலம் அதி‌ர்ஷ்ட திசை : கிழக்கு.

ரிஷபம்:

மற்றவர்களை குறை சொல்லாது தானுண்டு, தன் வேலையுண்டு என்றிருக்கும் நல்லவர்கள். புதன் வலுவான நட்சத்திரங்களில் செல்வதால் இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். புது வாகனம் வாங்குவீர்கள். கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். செவ்வாய் 12-ல் மறைந்ததால் சுபச் செலவுகள், திடீர் பயணங்கள் வரக்கூடும். வீடு, மனை வாங்குவது, விற்பதில் அவசரம் வேண்டாம். ராகுவும், கேதுவும் சரியில்லாததால் நிதானமாக பேசுங்கள். வீண் கோபம், பயம் வரக்கூடும். உறவினர்கள், நண்பர்களிடம் கடனாக வாங்கியிருந்த பணத்தைத் திருப்பிக் கொடுப்பீர்கள். கன்னிப்பெண்களே! எதிர்பார்ப்புகள் நிறைவேறும். அயல்நாட்டிலிருப்பவர்களால் உதவியுண்டு. குலதெய்வ கோயிலுக்குச் சென்று வேண்டுதலை நிறைவேற்றுவீர்கள். 12-ல் சூரியன் இருப்பதால் பெற்றோரின் உடல் நிலை பாதிக்கும். வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். உத்யோகத்தில் மேலதிகாரி பாரட்டும்படி நடந்து கொள்வீர்கள். கலைத் துறையினர்களே! தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். தட்டு தடுமாறி கரையேறும் வாரமிது. அதி‌ர்ஷ்ட தேதிகள் : 3, 7, 8 அதி‌ர்ஷ்ட எண்கள் : 6, 9 அதி‌ர்ஷ்ட நிறங்கள் : நீலம், ரோஸ் அதி‌ர்ஷ்ட திசை : மேற்கு.

மிதுனம்:

விட்டுக் கொடுப்பதால், எப்போதும் கெட்டுப்போவதில்லை என்ற கொள்கையைக் கடைப் பிடிப்பவர்கள் நீங்கள் தான். சூரியன் லாப வீட்டில் பலம் பெற்றிருப்பதால் திட்டவட்டமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். திடீர் பணவரவு, செல்வாக்கு, பதவியுயர்வு, புகழ் எல்லம் கிட்டும். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் உண்டாகும். பூர்வீகச் சொத்தை சீரமைப்பீர்கள். பழைய கடனை தீர்ப்பீர்கள். புது வீடு, மனை வாங்குவீர்கள். ராகு, கேது சரியில்லாததால் முன்கோபம், பயம், டென்ஷன் அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் மகிழ்ச்சி பெருகும். கன்னிப்பெண்களே! பெற்றோருடன் கலந்தாலோசித்து வருங்காலம் குறித்து சில முடிவுகள் எடுப்பீர்கள். விரும்பியப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். அரசியல்வாதிகளே! மேலிடத்தில் உங்கள் ஆலோசனையை ஏற்பார். வேற்றுமதத்தினரால் உதவியுண்டு. வியாபாரத்தில் புதுத் திட்டங்கள் தீட்டுவீர்கள். புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். கலைத்துறையினர்களே! உங்கள் புகழ், கௌரவம் உயரும். தொலை நோக்குச் சிந்தனையால் சாதிக்கும் வாரமிது. அதி‌ர்ஷ்ட தேதிகள் : 2, 3, 5 அதி‌ர்ஷ்ட எண்கள் : 1, 5 அதி‌ர்ஷ்ட நிறங்கள் : சிவப்பு, வெளிர் நீலம் அதி‌ர்ஷ்ட திசை : வடக்கு.

கடகம்:

சீர்திருத்த சிந்தனையும், தொலைநோக்கும் கொண்ட நீங்கள், மனித நேயமற்ற சடங்குகளை மறுப்பவர்கள். சுக்ரன் சாதகமான வீடுகளில் செல்வதால் வீட்டின் அடிப்படை வசதிகள் அதிகரிக்கும். தரவேண்டிய பணத்தை தந்து முடிப்பீர்கள். வீடு கட்ட லோன் கிடைக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். குழந்தை பாக்யம் உண்டாகும். பூர்வீகச் சொத்து கைக்கு வரும். மகளுக்கு நல்ல வரன் அமையும். ராசிக்கு 10-ம் வீட்டில் சூரியன் பலம் பெற்றிருப்பதால் பதவி, புகழ் தேடி வரும். சொந்த ஊரில் மதிப்பு, மரியாதை கூடும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். அரசு அதிகாரிகளின் நட்பு கிட்டும். கன்னிப்பெண்களே! பெற்றோரின் ஆதரவுக் கிட்டும். உறவினர்கள், நண்பர்கள் உங்களைப் பற்றி பெருமையாகப் பேசுவார்கள். வீட்டை அழகுப்படுத்தவீர்கள். அரசியல்வாதிகளே! சகாக்கள் மத்தியில் உங்கள் கருத்துக்கு ஆதரவுப் பெருகும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். புதுக் கிளைகள் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் உங்களைப் பற்றி குறை கூறியவர்களெல்லாம் இப்பொழுது வலிய வந்து புகழாரம் சூடுவார்கள். கலைத்துறையினர்களே! வேற்றுமொழி வாய்ப்புகளால் ஆதாயம் உண்டு. தன் பலம் பலவீனத்தை உணரும் வாரமிது. அதி‌ர்ஷ்ட தேதிகள் : 2, 4, 8 அதி‌ர்ஷ்ட எண்கள் : 1, 6 அதி‌ர்ஷ்ட நிறங்கள் : ஆரஞ்சு, கிரே அதி‌ர்ஷ்ட திசை : வடகிழக்கு.

சிம்மம்:

சிரிக்க பேசி சிந்திக்க வைக்கும் நீங்கள், நாலும் தெரிந்தவர்கள். சுக்ரன் சாதகமாக இருப்பதால் சோம்பல் நீங்கி சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்கள் ரசனைக்கேற்ப வீடு, வாகனம் அமையும். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். மனைவிவழியில் ஆதாயம் உண்டு. பிள்ளைகளின் பாசம் அதிகரிக்கும். செவ்வாய் 9-ல் பலம் பெற்று அமர்ந்ததால் எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். உடன்பிறந்தவர்களின் ஆதரவு உண்டு. சொத்துப் பிரச்சனைகளை பேசித்தீர்ப்பீர்கள். தந்தை வழியில் நிம்மதி பிறக்கும். உறவினர்கள், நண்பர்களால் அனுகூலம் உண்டு. கன்னிப் பெண்களே! புதியவர்கள் நண்பர்களாவார்கள். வெகுகாலமாக போக நினைத்தும் போக முடியாமல் போன குலதெய்வ கோயிலுக்கு இப்பொழுது சென்று வருவீர்கள். வழக்கு சாதகமாகும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். பாக்கிகள் வசூலாகும். வேலையாட்கள் இனி பொறுப்பாக நடந்துகொள்வார்கள். உத்யோகத்தில் மேலதிகாரிக்கு நெருக்கமாவீர்கள். கலைத்துறையினர்களே! புதிய வாய்ப்புகள் தேடி வரும். திடீர் திருப்பங்கள் நிறைந்த வாரமிது. அதி‌ர்ஷ்ட தேதிகள் : 3, 5, 7 அதி‌ர்ஷ்ட எண்கள் : 3, 6 அதி‌ர்ஷ்ட நிறங்கள் : வெள்ளை, பிங்க் அதி‌ர்ஷ்ட திசை : தென்கிழக்கு.

கன்னி:

சொன்ன சொல்லை நிறைவேற்றும் நீங்கள், தன்னை நம்பி வந்தவர்களை ஆதரிப்பீர்கள். குருபகவான் வலுவாக அமர்ந்திருப்பதால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வராது என்றிருந்த பணம் கைக்கு வந்து சேரும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். அநாவசியச் செலவுகளை குறைப்பது நல்லது. உறவினர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். ஜென்மச்சனி தொடர்வதால் மன உளைச்சல், டென்ஷன் அதிகரிக்கும். ஆடியோ, வீடியோ சாதனங்கள் வாங்குவீர்கள். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். உடன்பிறந்தவர்களுடன் மனக்கசப்புகள் வந்து நீங்கும். வழக்கில் நிதானம் அவசியம். சொத்துப் பிரச்னைக்கு சுமுக தீர்வு காண்பது நல்லது. நட்பு வட்டம் விரியும். 2, 3 மற்றும் 4-ந் தேதி காலை 11 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் வேலைச்சுமையால் பதட்டம் அதிகரிக்கும். கன்னிப்பெண்களே! உங்களின் புது முயற்சிகளை பெற்றோர் ஆதரிப்பார். அரசியல்வாதிகளே! உங்களைப் பற்றி தலைமையிடம் சிலர் தவறாக சொல்ல நேரிடும். வியாபாரத்தில் சுமாரான லாபம் கிட்டும். வேலையாட்களிடம் கனிவாகப் பேசப்பாருங்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். கலைத்துறையினர்களே! பெரிய நிறுவனங்களின் அழைப்பு வரும். கடின உழைப்பால் முன்னேறும் வாரமிது. அதி‌ர்ஷ்ட தேதிகள் : 5, 7, 8 அதி‌ர்ஷ்ட எண்கள் : 1, 3 அதி‌ர்ஷ்ட நிறங்கள் : அடர் சிவப்பு, இளம்மஞ்சள் அதி‌ர்ஷ்ட திசை : கிழக்கு.

துலாம்:

பிறர் நிழலில் வாழ விரும்பாத நீங்கள், தன் சம்பாத்தியத்தில் கூழ் கிடைத்தாலும் அமிர்தமாக நினைப்பீர்கள். செவ்வாய் 7-ல் ஆட்சி பெற்று அமர்ந்ததால் உங்களின் ஆளுமைத்திறன் அதிகரிக்கும். தடைப்பட்ட வேலைகள் முடியும். எதிர்பாராத பணவரவு உண்டு. குடும்பத்தில் ஓரளவு நிம்மதி கிட்டும். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். சொத்துப் பிரச்னையில் நல்ல தீர்வு கிடைக்கும். வேற்றுமொழி, மதத்தினரால் ஆதாயமுண்டு. ஆடை, ஆபரணம் சேரும். சுக்ரன் 6-ல் மறைந்திருப்பதால் தொண்டைப் புகைச்சல், வீடு, வாகன செலவுகள், சிறுசிறு விபத்து வரக்கூடும். மனையுடன் விவாதங்கள் வெடிக்கும். உறவினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். 4-ந் தேதி காலை 11 மணி முதல் 5 மற்றும் 6-ந் தேதி இரவு 8 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் முன்கோபத்தை தவிர்ப்பது நல்லது. கன்னிப்பெண்களே! யாரையும் எளிதில் நம்பி ஏமாறாதீர்கள். அரசு காரியங்கள் சாதகமாக முடியும். வியாபாரத்தில் சுமுகமான லாபம் உண்டு. வேலையாட்களை விட்டுப் பிடியுங்கள். பாக்கிகளை போராடி வசூப்பீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் பாராட்டினாலும் சக ஊழியர்களால் டென்ஷன் அதிகரிக்கும். தொடர் முயற்சியால் சாதிக்கும் வாரமிது. அதி‌ர்ஷ்ட தேதிகள் : 2, 3, 7 அதி‌ர்ஷ்ட எண்கள் : 4, 7 அதி‌ர்ஷ்ட நிறங்கள் : பச்சை, சில்வர்கிரே அதி‌ர்ஷ்ட திசை : வடமேற்கு.

விருச்சிகம்:

காதலை மதிக்கும் நீங்கள், கனிந்த மனசுக்கு சொந்தகாரர்கள். சுக்ரன் சாதகமாக இருப்பதால் உங்களின் நிர்வாகத்திறமை அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். மனைவியி வழியில் உதவியுண்டு. பழுதான வாகனத்தை மாற்றுவீர்கள். சூரியன் 6-ல் வலுவாக இருப்பதால் மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனின் கூடாநட்பு விலகும். அரசு வேலைகளில் வெற்றியுண்டு. உடன்பிறந்தவர்கள் உதவுவார்கள். இழுபறியாக இருந்த வழக்குகளில் நல்ல மாற்றம் ஏற்படும். ஆன்மிக காரியங்களை முன்னின்று நடத்துவீர்கள். சொந்தம் பந்தங்களின் அன்புத்தொல்லை குறையும். வீட்டில் சுபகாரியங்கள் ஏற்பாடாகும். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்களெல்லாம் அடங்குவார்கள். கன்னிப் பெண்களே! நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். பிரியமானவர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். அரசியல்வாதிகளே! மேலிடத்திற்கு நெருக்கமாவீர்கள். 6-ந் தேதி இரவு 8 மணி முதல் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் சந்திராஷ்டமம் இருப்பதால் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் பற்று வரவு உயரும். லாபத்தை அதிகப்படுத்த புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் அலுவலகச் சூழ்நிலை அமைதி தரும். சக ஊழியர்கள் அனுசரணையாக நடந்து கொள்வார்கள். கலைத்துறையினர்களே! சம்பளப் பாக்கி கைக்கு வரும். புதிய பாதையில் பயணத்தைத் தொடங்கும் வாரமிது. அதி‌ர்ஷ்ட தேதிகள் : 2, 3, 5 அதி‌ர்ஷ்ட எண்கள் : 6, 9 அதி‌ர்ஷ்ட நிறங்கள் : மயில் நீலம், ஆரஞ்சு அதி‌ர்ஷ்ட திசை : தெற்கு.

தனுசு:

அல்லது செய்தவர்க்கும் நல்லதே செய்யும் நீங்கள், நாலும் தெரிந்தவர்கள். உங்களின் பூர்வபுண்யாதிபதி செவ்வாய் 5-ல் ஆட்சிபெற்று அமர்ந்ததால் புதிய முயற்சிகள் பலிதமாகும். குடும்பத்தில் அமைதியுண்டு. குழந்தை பாக்யம் கிட்டும். எதிர்பார்த்த பணம் வரும். பூர்வீக சொத்து சிக்கல்கள் தீரும். சகோதரிக்கு திருமணம் முடியும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். ராசிக்கு 5-ம் வீட்டில் சூரியனும் நிற்பதால் முன் கோபம், அடிவயிற்றில் வலி, தலைச்சுற்றல், உறவினர்களுடன் பகைமை வரக்கூடும். கர்ப்பிணிப் பெண்கள் பயணங்களை தவிர்ப்பது நல்லது. கன்னிப் பெண்களே! கல்யாணப் பேச்சு வார்த்தை சுமுகமாக முடியும். ராகு, கேது சரியில்லாததால் அலைச்சல், உடல்நலக்குறைவு வந்துப் போகும். அரைகுறையாக நின்ற கட்டிட பணிகளை இனி விரைவாக முடிப்பீர்கள். வேற்று மதத்தினரால் நன்மை பிறக்கும். அரசியல்வாதிகளே! சகாக்களைப் பற்றிக் குறைக் கூற வேண்டாம். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். கடையை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் திறமைகள் வெளிப்படும். கலைஞர்களே! உங்களின் படைப்புகளுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும். புது பொறுப்பும், வாய்ப்புகளும் கதவைத் தட்டும் வாரமிது. அதி‌ர்ஷ்ட தேதிகள் : 4, 7, 8 அதி‌ர்ஷ்ட எண்கள் : 2, 8 அதி‌ர்ஷ்ட நிறங்கள் : மெரூண், ப்ரவுன் அதி‌ர்ஷ்ட திசை : தென்மேற்கு.

மகரம்:

சுய கௌரவத்தை விட்டுக் கொடுக்காத நீங்கள், கொள்கை பிடிப்புடன் வாழ்பவர்கள். யோகாதிபதி சுக்ரன் சாதகமான வீடுகளில் செல்வதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். கல்யாணம் கூடி வரும். வீடு கட்ட, மனை வாங்க சாதகமான சூழல் ஏற்படும். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். பிள்ளைகளின் நெடுநாள் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள். சகோதர வகையில் பயனடைவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். அரசாங்க வேலைகளில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். கன்னிப் பெண்களே! மனக்குழப்பம் நீங்கி தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். தியானம், யோகா இவற்றில் ஈடுபாடு அதிகரிக்கும். வீட்டை விரிவுபடுத்தி கட்டுவீர்கள். அரசியல்வாதிகளே! தலைமைக்கு ஆலோசனை கூறும் அளவிற்கு நெருக்கமாவீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் மேலதிகாரியின் ஆதரவை பெறுவீர்கள். கலைத்துறையினர்களே! மூத்த கலைஞர்களின் பாராட்டுகளை பெறுவீர்கள். விட்டுக் கொடுத்துப் போவதால் வெற்றி பெறும் வாரமிது. அதி‌ர்ஷ்ட தேதிகள் : 5, 6, 7 அதி‌ர்ஷ்ட எண்கள் : 1, 3 அதி‌ர்ஷ்ட நிறங்கள் : இளஞ்சிவப்பு, பிங்க் அதி‌ர்ஷ்ட திசை : மேற்கு.

கும்பம்:

தாராள மனசுக் கொண்ட நீங்கள், பேச்சால் சாதிப்பதில் வல்லவர்கள். சூரியன் வலுவாக அமர்ந்ததால் எதையும் சாதிக்கும் துணிச்சல் வரும். அரசால் ஆதாயமுண்டு. நாடாளுபவர்களின் நட்பு கிடைக்கும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். வேலைவாய்ப்புகள் அமையும். குடும்பத்தாரின் ஆதரவுப் பெருகும். எதிர்பாராத பயணங்களால் வாழ்வில் திடீர் திருப்பங்கள் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் உங்களின் பெருந்தன்மையை புரிந்துக் கொள்வார்கள். புதிதாக வீடு, மனை வாங்குவீர்கள். உறவினர்கள், நண்பர்கள் வீட்டு சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். கன்னிப்பெண்களே! காதல் அரும்பும். தாயாருடன் இருந்து வந்த மோதல் போக்கு மறையும். அரசியல்வாதிகளே! சகாக்களால் பாராட்டப்படுவீர்கள். அஷ்டமத்துச்சனி தொடர்வதால் கொஞ்சம் கவனமாக செயல்படப்பாருங்கள். வீண் அலைச்சல், டென்ஷன் அதிகரிக்கும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத்தொல்லைகள் நீங்கும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். வேலையாட்களுக்கு உதவுவீர்கள். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிக்க வேண்டி வரும். கலைத்துறையினர்களே! உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும் வாரமிது. அதி‌ர்ஷ்ட தேதிகள் : 2, 6, 7 அதி‌ர்ஷ்ட எண்கள் : 2, 8 அதி‌ர்ஷ்ட நிறங்கள் : ஆலிவ் பச்சை, மஞ்சள் அதி‌ர்ஷ்ட திசை : வடக்கு.

மீனம்:

வெகுளித்தனமாக பேசும் நீங்கள், வில்லங்கமானவர்களை வெளுத்து வாங்குவீர்கள். சுக்ரன் சாதகமாக இருப்பதால் அழகு, ஆரோக்யம் கூடும். கணவன்-மனைவிக்குள் அனுசரித்துப் போகப்பாருங்கள். தன பாக்யாதிபதியான செவ்வாய் 2-ல் ஆட்சிபெற்று அமர்வதால் பணவரவு அதிகரிக்கும். சகோதரர் பாசமழைப் பொழிவார். குடும்பத்தில் நல்லது நடக்கும். பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள். வருமானம் அதிகரித்தாலும் சேமிக்க முடியாது. தாழ்வு மனப்பான்மை விலகும். ஜென்மகுரு இருப்பதால் தூக்கமின்மை, அச்ச உணர்வு வரக்கூடும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். வீடு கட்ட வங்கிக் கடன் உதவி கிடைக்கும். கன்னிப் பெண்களே! பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். அரசு காரியங்களில் கொஞ்சம் அலைச்சல் இருந்தாலும் விடாப்பிடியாக செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். 7-ல் சனி தொடர்வதால் மனைவியுடன் விட்டுக் கொடுத்து போங்கள். பழைய கசப்பான சம்பவங்களை எண்ணி வருந்தாதீர்கள். புது முதலீடு செய்து வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். வேலையாட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உத்யோகத்தில் எதிர்ப்புகளை தாண்டி முன்னேறுவீர்கள். பழைய பிரச்சனைகளிலிருந்து விடுபடும் வாரமிது. அதி‌ர்ஷ்ட தேதிகள் : 2, 3, 5 அதி‌ர்ஷ்ட எண்கள் : 3, 9 அதி‌ர்ஷ்ட நிறங்கள் : கிளிப்பச்சை, ரோஸ் அதி‌ர்ஷ்ட திசை : தென்கிழக்கு.

நன்றி: வெப்துனியா.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

வார ராசி பலன்! Empty Re: வார ராசி பலன்!

Post by மகி Wed May 11, 2011 7:08 am

மே 9 முதல் 16 வரைக்கான ராசி பலன்!

மேஷம்:

மரக்கிளைகளைத் தெரிந்த பலருக்கு அதை தாங்கிப் பிடிக்கும் வேரின் அருமை புரியாது. அது போலத் தான் நீங்களும். சுக்ரன் சாதகமான வீடுகளில் செல்வதால் வர வேண்டிய பணம் கைக்கு வரும். பெரிய பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பழைய நண்பர்கள், உறவினர்களுடன் இருந்து வந்த உரசல் போக்கு நீங்கும். எதிர்பார்த்த வகையில் உதவி கிடைக்கும். இழுபறியான வேலைகளெல்லாம் முழுமைடையும். ஆன்மீகத்தில் மனம் லயிக்கும். பழைய பிரச்சனைகள் ஓயும். 9-ந் தேதி முதல் குரு ராசிக்குள் நுழைவதால் மன உளைச்சல், அசதி, வீண் செலவு என வந்து செல்லும். கன்னிப் பெண்களின் புது முயற்சிகளை பெற்றோர் ஆதரிப்பார். அரசியல்வாதிகள் மற்றவர்களை விமர்சித்து பேச வேண்டாம். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். மறைமுக எதிர்ப்புகளை வெல்வீர்கள். தைரியம் கூடும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். வேலையாட்கள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். உத்‌தியோகத்தில் மேலதிகாரியின் பாராட்டை பெறுவீர்கள். கலைஞர்களின் எண்ணங்கள் பூர்த்தியாகும். தன்னம்பிக்கையால் சாதிக்கும் வாரமிது. அதி‌ர்ஷ்ட தேதிகள் : 9, 10, 14 அதி‌ர்ஷ்ட எண்கள் : 4, 6 அதி‌ர்ஷ்ட நிறங்கள் : பிங்க், மஞ்சள் அதி‌ர்ஷ்ட திசை : தென்மேற்கு.

ரிஷபம்:

மரத்தைத் தேடி வரும் பறவைகளுக்கு கனி தருவதைப் போல, உங்களை நாடி வருபவர்களுக்கு இருப்பதைக் கொடுத்து உதவுவீர்கள். சுக்ரன் வலுவாக இருப்பதால் தடைப்பட்ட காரியங்கள் உடனே முடியும். பணவரவு திருப்தி தரும். உங்கள் வார்த்தைகளை குடும்பத்தினர் மதிப்பார்கள். நீண்ட நாள் வாங்க வேண்டும் என்று நினைத்திருந்த பொருட்களை வாங்குவீர்கள். தூரத்து உறவினர்களெல்லாம் வீடு தேடி வருவார்கள். பிள்ளைகள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். மகளுக்கு திருமணம் ஏற்படாகும். பேச்சில் கவனம் தேவை. கன்னிப் பெண்களின் நீண்ட நாள் கனவு நனவாகும். புது வேலை அமையும். 5-ல் நிற்கும் சனியால் விரக்தி, அலட்சியப் போக்கு, வீண் பகை ஏற்படக்கூடும். 9-ந் தேதி முதல் குரு 12-ல் நுழைவதால் விரையச் செலவுகள், சிறுசிறு விபத்துகள், இனந்தெரியாத கவலைகள் வரக்கூடும். வியாபாரத்தில் வந்தது வரட்டும் என அலட்சியமாக முதலீடு செய்ய வேண்டாம். இருப்பதை வைத்து லாபம் பார்ப்பது நல்லது. உத்‌தியோகத்தில் மற்றவர்களின் வேலையையும் சேர்த்து பார்க்க வேண்டி வரும். கலைத்துறையினருக்கு புது வாய்ப்புகள் தேடி வரும். எதிர்ப்புகளையும் தாண்டி வெற்றி பெறும் வாரமிது. அதி‌ர்ஷ்ட தேதிகள் : 11, 13, 15 அதி‌ர்ஷ்ட எண்கள் : 5, 7 அதி‌ர்ஷ்ட நிறங்கள் : ரோஸ், ப்ரவுன் அதி‌ர்ஷ்ட திசை : வடகிழக்கு.

மிதுனம்:

மரத்தடியில் புத்தருக்கு ஞானம் கிடைத்தது என்பதை அறிந்த நீங்கள், எப்போதும் மரத்தடி நிழலிலேயே ஓய்வெடுக்க ஆசைபடுபவர்கள். சூரியன் லாப வீட்டில் பலம்பெற்றிருப்பதால் தைரியமான முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வீடு வாங்க, கட்ட லோன் கிடைக்கும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். கை, கால் வலி நீங்கும். கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். வீட்டிற்குத் தேவையான மிக்ஸி, கிரைண்டர் மற்றும் புது வாகனம் வாங்குவீர்கள். பிள்ளைகளின் வருங்காலத் திட்டங்களை தீட்டுவீர்கள். 9-ந் தேதி முதல் குரு லாப வீட்டிற்குள் நுழைவதால் எதிலும் வெற்றியுண்டு. அரசியல்வாதிகள் சகாக்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். தந்தையின் உடல் நலம் சீராகும். செவ்வாயால் கண் எரிச்சல், ஒற்றை தலை வலி, சொத்து வாங்குவது, விற்பதில் சிக்கல்கள் வந்துப் போகும். 4-ல் சனி இருப்பதால் இழப்புகள், ஏமாற்றங்கள் ஏற்படக்கூடும். சில காரியங்களை போராடி முடிக்க வேண்டி வரும். கன்னிப் பெண்கள் பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவதால் மனநிம்மதி பிறக்கும். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்‌தியோகத்தில் மேலதிகாரி உங்கள் ஆலோசனையை ஏற்பர். முற்பகுதி திடீர் முன்னேற்றத்தையும் பிற்பகுதி வேலைச்சுமையையும் தரும் வாரமிது. அதி‌ர்ஷ்ட தேதிகள் : 9, 11, 13 அதி‌ர்ஷ்ட எண்கள் : 3, 8 அதி‌ர்ஷ்ட நிறங்கள் : பிங்க், வெளிர்நீலம் அதி‌ர்ஷ்ட திசை : கிழக்கு.

கடகம்:

மரத்தின் நிழல் பத்துபேர் ஓய்வெடுக்க உதவுவுவதைப் போல, நீங்களும் சுற்றியிருப்பவர்களை அரவணைத்து செல்வதில் வல்லவர்கள். சனி பகவான் வலுவாக நிற்பதால் பெரிய திட்டங்கள் தீட்டுவீர்கள். கௌரவப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பிள்ளைகளின் மற்ற திறமைகளை கண்டறிந்து அதை வளர்ப்பீர்கள். காரியத் தாமதம், தாயாருடன் கருத்து மோதல்கள், முன்கோபம் வந்து நீங்கும். உடன்பிறந்தவர்களை அனுசரித்துப் போங்கள். கன்னிப்பெண்களுக்கு தள்ளிப் போன கல்யாணம் கூடி வரும். கைமாற்றாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். அரசு காரியங்கள் சாதகமாக முடியும். வீட்டை விரிவுப்படுத்துவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். புது ஏஜென்சி எடுத்து நடத்துவீர்கள். உத்‌தியோகத்தில் உங்களை நம்பி மேலதிகாரிகள் சில முக்கியப் பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். கலைஞர்களைப் பற்றிய கிசுகிசுக்கள் ஓயும். தன்னிலை மாறாது சாதிக்கும் வாரமிது. அதி‌ர்ஷ்ட தேதிகள் : 11, 12, 13 அதி‌ர்ஷ்ட எண்கள் : 2, 8 அதி‌ர்ஷ்ட நிறங்கள் : கிரே, ரோஸ் அதி‌ர்ஷ்ட திசை : தென்மேற்கு.

சிம்மம்:

மரத்தின் பழுத்த கிளையும், மக்களின் வாழ்கையும் ஒன்று தான். என்பதை அறிவுப் பூர்வமாக உணர்ந்தவர்கள் நீங்கள். 9-ந் தேதி முதல் குரு 9-ம் வீட்டிற்குள் நுழைவதால் எதிலும் வெற்றி கிட்டும். செவ்வாய் வலுவாக இருப்பதால் தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பழைய கடன் பிரச்னைகள் தீரும். உடல் நலம் சீராகும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். குடும்பத்தில் உங்கள் கை ஒங்கும். அரசால் அனுகூலம் உண்டு. புது சொத்து வாங்குவீர்கள். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். பாதச் சனியால் மனக்கவலை, விரக்தி வரக்கூடும். 5-ல் நிற்கும் ராகுவால் சுற்று வட்டாரத்தால் பிள்ளைகள் கெடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். சின்ன சின்ன மனஸ்தாபங்கள் வரும். வீண் செலவுகள், அலைச்சல் வரும். ஆன்மீகத்தில் மனம் லயிக்கும். எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். அண்டை வீட்டாருடன் அளவாக இருங்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். கமிசன் வகைகளால் லாபம் அதிகமாகும். உத்‌தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். சக ஊழியர்கள் மதிப்பார்கள். கலைஞர்கள் சிந்தித்து செயல்படுவார்கள். தன் பலம் பலவீனத்தை உணரும் வாரமிது. அதி‌ர்ஷ்ட தேதிகள் : 9, 14, 15 அதி‌ர்ஷ்ட எண்கள் : 2, 9 அதி‌ர்ஷ்ட நிறங்கள் : மெரூண், வெள்ளை அதி‌ர்ஷ்ட திசை : தென்கிழக்கு.

கன்னி:

மரங்களில் பசுந்தன்மை என்றும் மாறாததை போல உங்கள் நெஞ்சில் கொண்ட குணமும் ஒருபோதும் மாறாது. சுக்ரன் பலமாக இருப்பதால் புது முயற்சிகள் யாவும் வெற்றியடையும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பணப்புழக்கம் அதிகரிக்கும். ஆடை, ஆபரணம் சேரும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். மகளுக்கு எதிர்பார்த்தபடி நல்ல வரன் அமையும். இங்கிதமாகப் பேசி கடினமான வேலைகளைக்கூட முடிப்பீர்கள். ஜென்மச்சனியால் மன உளைச்சல், காரியத்தடைகள் வரும். ராகு சரியில்லாததால் தாயாருக்கு மருத்துவச் செலவு அதிகரிக்கும். இரவு நேர பயணங்களை தவிர்ப்பது நல்லது. செவ்வாய் வலுவாக இருப்பதால் உடன்பிறந்தோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். வழக்கு சாதகமாக திரும்பும். மனைவிவழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. அரசியல்வாதிகளின் கோரிக்கையை அதிகாரிகள் ஏற்பார்கள். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். பங்குதாரர்கள் ஒத்து¬£ப்பார்கள். உத்‌தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். மேலதிகாரி ஆதரிப்பர். கலைத்துறையினர்கள் விமர்சனங்களையும் தாண்டி சாதிப்பார்கள். கடின உழைப்பால் கரையேறும் வாரமிது. அதி‌ர்ஷ்ட தேதிகள் : 9, 10, 12 அதி‌ர்ஷ்ட எண்கள் : 3, 9 அதி‌ர்ஷ்ட நிறங்கள் : இளம்சிவப்பு, பச்சை அதி‌ர்ஷ்ட திசை : தென்மேற்கு.

துலாம்:

மரத்திற்கு வந்து செல்லும் பறவைகள் போலில்லாமல் அதனுடன் இணைந்து வாழும் கிளைகளை போல் பாசமானவர்கள். புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் வராமல் இழுத்தடித்த பணமெல்லாம் வந்து சேரும். பழைய உறவினர்கள், நண்பர்கள் உதவுவார்கள். குடும்பத்தினரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். அரசு காரியங்கள் தாமதமாக முடியும். ராகு சாதகமாக இருப்பதால் தாழ்வுமனப்பான்மை நீங்கும். வருங்காலம் குறித்து யோசிப்பீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். தாய்வழி உறவினர்களுடன் இருந்த மனக்கசப்பு நீங்கும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். குழந்தை பாக்யம் உண்டாகும். குலதெய்வ பிராத்தனைகளை நிறைவேற்றுவீர்கள். கன்னிப்பெண்களுக்கு கல்யாணப்பேச்சு வார்த்தைகள் சுமுகமாக முடியும். கனவுத்தொல்லை, தூக்கமின்மை விலகும். யோகா, தியானம் இவற்றில் ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்‌தியோகத்தில் மேலதிகாரி உங்கள் திறமையைக் கண்டு வியப்பார். கலைத்துறையினர்களுக்கு சம்பள பாக்கி கைக்கு வரும். பாதை மாறாது பயணிக்கு வாரமிது. அதி‌ர்ஷ்ட தேதிகள் : 10, 11, 14 அதி‌ர்ஷ்ட எண்கள் : 3, 5 அதி‌ர்ஷ்ட நிறங்கள் : ஊதா, ஆலிவ்பச்சை அதி‌ர்ஷ்ட திசை : மேற்கு.

விருச்சிகம்:

மரங்கள் பலவகையானாலும் அதன் நிழல் ஒன்று தான், என்பதை அறிந்த நீங்கள் மனிதர்களின் நல்ல மனதை மட்டும் பார்ப்பவர்கள். சுக்ரன் சாதகமான வீடுகளில் செல்வதால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதைக் கூடும். குடும்பத்தில் அமைதி நிலவும். அடகு வைத்திருந்த ஆபரணங்களை மீட்பீர்கள். வேற்று மதத்தவரால் நன்மை பிறக்கும். உடன்பிறந்தவர்களை நம்பி முடிக்கிய முடிவுகளை எடுக்க வேண்டாம். கன்னிப் பெண்களுக்கு புதியவர்கள் நண்பர்களாவார்கள். 8-ல் கேது நிற்பதால் மனைவியின் உடல் நிலை பாதிக்கும். அரசியல்வாதிகள் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். வாகனப் பழுது நீங்கும். அண்டை வீட்டாரின் அன்புத் தொல்லை அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்வீர்கள். ஒப்பந்தங்கள் தேடி வரும். உத்‌தியோகத்தில் மேலதிகாரியின் பாராட்டை பெறுவீர்கள். வேலைசுமை அதிகரித்தாலும் மனநிறைவு கிட்டும். கலைஞர்கள் பழைய நிறுவனங்களிலிருந்து புதிய வாய்ப்புகள் பெறுவார்கள். போராட்டங்களை கடந்து சாதிக்கும் வாரமிது. அதி‌ர்ஷ்ட தேதிகள் : 9, 12, 14 அதி‌ர்ஷ்ட எண்கள் : 1, 6 அதி‌ர்ஷ்ட நிறங்கள் : பிஸ்தாபச்சை, நீலம் அதி‌ர்ஷ்ட திசை : வடக்கு.

தனுசு:

மரத்தின் இலைகள் பழுத்து உதிர்ந்தாலும் மீண்டும் துளிர்ப்பதை போல, நீங்கள் தோல்வியால் வீழ்ந்தாலும் மறுபடியும் எழுவீர்கள். 9-ந் தேதி முதல் குரு 5-ம் வீட்டிற்குள் நுழைவதால் எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். வீட்டில் கல்யாணம் ஏற்பாடாகும். குடும்பத்தாருடன் மனம் விட்டுப் பேசி சிரிப்பீர்கள். பிள்ளைகளின் பாசம் அதிகரிக்கும். 5-ல் சூரியன் நிற்பதால் சொந்தம்-பந்தங்களிடையே பகைமையும், மன உளைச்சலும் வந்து போகும். அரசியல்வாதிகள் முக்கிய முடிவுகளை தவிர்ப்பது நல்லது. 9, 10 ஆகிய தேதிகளில் சந்திராஷ்டமம் நடப்பதால் எதிலும் உணர்ச்சி வசப்படாமல் இருப்பது நல்லது. கன்னிப் பெண்கள் தடைப்பட்ட உயர்கல்வியை தொடர்வார்கள். சொத்து வாங்குவது, விற்பதில் இருந்து வந்த வில்லங்கம் விலகும். எதிர்பாராத பயணங்களால் அலைச்சல், செலவுகள் வந்துப் போகும். சனி சாதகமாக இருப்பதால் எதிர்பார்த்த காரியங்கள் தடையின்றி முடியும். வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம் உண்டு. உத்‌தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். கலைஞர்களைப் பற்றிய கிசுகிசுத் தொல்லைகள் மறையும். தைரியமான முடிவுகளை எடுக்கும் வாரமிது. அதி‌ர்ஷ்ட தேதிகள் : 11, 13, 15 அதி‌ர்ஷ்ட எண்கள் : 5, 8 அதி‌ர்ஷ்ட நிறங்கள் : ஆரஞ்சு, கிரே அதி‌ர்ஷ்ட திசை : தெற்கு.

மகரம்:

மரம் வைப்பவனுக்கு கனியையும், வெட்டுபவனுக்கு நிழலையும் தருவதைப் போல, நீங்கள் எதிரிக்கும் நல்லதையே நினைக்கும் பரந்த மனசுக்காரர்கள். சுக்ரன் சாதகமான வீடுகளில் செல்வதால் புத்துணர்ச்சி பெருகும். தடைபட்ட காரியங்களில் வெற்றியுண்டு. கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். 9-ந் தேதி முதல் குரு 4-ம் வீட்டிற்குள் நுழைவதால் சிறுசிறு விபத்து, தாயாருடன் மனஸ்தாபங்கள் வந்துபோகும். சிந்தித்து செயல்படப்பாருங்கள். பிள்ளைகளுடன் வெளியூர் பயணம் சென்று வருவீர்கள். 11, 12, 13-ந் தேதி காலை 8. 30 மணி வரை சந்திராஷ்டமம் நடப்பதால் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கப்பாருங்கள். புது வீடு, மனை வாங்குவீர்கள். அயல் நாடு செல்லும் வாய்ப்பு வரும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். கன்னிப் பெண்களுக்கு எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவீர்கள். குலதெய்வக் கோவிலுக்கு சென்று பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாண்டு லாபத்தை பெருக்குவீர்கள். வேலையாட்களை விட்டுப் பிடிப்பது நல்லது. உத்‌தியோகத்தில் பதவி உயரும். கலைஞர்களின் திறமைகள் வெளிப்படும். புதிய முயற்சிகளில் வெற்றி பெறும் வாரமிது. அதி‌ர்ஷ்ட தேதிகள் : 9, 10, 14 அதி‌ர்ஷ்ட எண்கள் : 1, 3 அதி‌ர்ஷ்ட நிறங்கள் : ப்ரவுன், வெள்ளை அதி‌ர்ஷ்ட திசை : தென்மேற்கு.

கும்பம்:

மரத்தடி நிழலில் படித்ததையும், மண் வாசணையையும் மறவாத நீங்கள் ஒருபோதும், சொகுசு வாழ்வில் சுகமடையாதவர்கள். சூரியன் சாதகமாக இருப்பதால் திட்ட மிட்ட காரியங்கள் கைக்கூடும். பணப்பற்றாக்குறையும் நீங்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டு. என்றாலும் ராசிக்குள் குரு இருப்பதால் தேவையற்ற எதிர்மறை சிந்தனைகள், முன் கோபம் வந்து செல்லும். பணத்தை சேமிக்க முடியாத அளவிற்கு செலவுகள் அடுக்கடுக்காக வரும். பிள்ளைகளின் வருங்காலம் குறித்த கவலைகள் வரும். வெளிவட்டாரத்தில் உங்களைப் பற்றிய விமர்சனங்கள் அதிகரிக்கும். வெளியூர் பயணங்களால் மனநிம்மதி கிட்டும். 9-ந் தேதி முதல் குரு 3-ம் வீட்டிற்குள் நுழைவதால் சில காரியங்களை தடைபட்டு முடிக்க வேண்டி வரும். 13-ந் தேதி காலை 8. 30 மணி முதல் 14-ந் தேதி வரை சந்திராஷ்டமம் நடப்பதால் ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று வேலைகளை இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். அஷ்டமத்துச் சனி நடப்பதால் உறவினர் பகை, ஏமாற்றங்கள் வந்து போகும். வியாபாரத்தில் புது முதலீடு செய்வது பற்றி யோசிப்பீர்கள். வாடிக்கையாளர்களுடன் சச்சரவு வரும். உத்‌தியோகத்தில் மேலதிகாரியின் ஆதரவு உண்டு. சக ஊழியர்களைப் பற்றி குறைக் கூற வேண்டாம். கலைஞர்களுக்கு வீண் விமர்சனங்கள் வரத்தான் செய்யும். தட்டித் தடுமாறி கரையேறும் வாரமிது. அதி‌ர்ஷ்ட தேதிகள் : 9, 12, 14 அதி‌ர்ஷ்ட எண்கள் : 2, 7 அதி‌ர்ஷ்ட நிறங்கள் : சிவப்பு, ஆலிவ்பச்சை அதி‌ர்ஷ்ட திசை : வடகிழக்கு.

மீனம்:

மரத்தடியில் இளைப்பாறுவதைவிட மரக்கன்றுகளை நட்டு பராமரிக்கும் தொலைநோக்குச் சிந்தனையாளர்கள் நீங்கள் தான். சூரியன் 2-ல் அமர்ந்ததால் மனஉளைச்சல் நீங்கும். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை விரைந்து முடிப்பீர்கள். குடும்பத்தில் நிம்மதி பிறக்கும். 9-ந் தேதி முதல் குரு 2-ம் வீட்டிற்குள் நுழைவதால் பேச்சால் சாதித்துக் காட்டுவீர்கள். பிரபலங்கள் நண்பர்களாவார்கள். பிள்ளைகளின் உயர்கல்வியில் கூடுதல் அக்கறை காட்டுவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வெளிநாட்டிலிருப்பவர்களால் ஆதாயம் உண்டு. உடன்பிறந்தவர்களுடன் மனவருத்தம் வந்து நீங்கும். வழக்கில் நிதானம் அவசியம். 7-ல் சனி தொடர்வதால் கணவன்- மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் நிலவும். விட்டுக் கொடுத்து போங்கள். வெளியூர் பயணங்கள் அதிகரிக்கும். கன்னிப் பெண்கள் புதிய திட்டங்களை தீட்டுவார்கள். ஷேர் பணம் தரும். அரசியல்வாதிகளின் கருத்துகளுக்கு சகாக்களின் மத்தியில் ஆதரவுப் பெருகும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். 15-ந் தேதி சந்திராஷ்டமம் நடப்பதால் எதிலும் எச்சரிக்கையுடன் செயல்படப்பாருங்கள். வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். பங்குதாரர்கள், வாடிக்கையாளர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள்-. உத்‌தியோகத்தில் வேலை இரட்டிப்பாகும். கலைஞர்களுக்கு சின்ன சின்ன வாய்ப்புகள் வரும். வளைந்துக் கொடுத்துப் போக வேண்டிய வாரமிது. அதி‌ர்ஷ்ட தேதிகள் : 10, 11, 13 அதி‌ர்ஷ்ட எண்கள் : 1, 6 அதி‌ர்ஷ்ட நிறங்கள் : மயில்நீலம், ரோஸ் அதி‌ர்ஷ்ட திசை : மேற்கு.

நன்றி: வெப்துனியா.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

வார ராசி பலன்! Empty Re: வார ராசி பலன்!

Post by மகி Tue May 17, 2011 10:24 pm

மே 16 முதல் 23 வரைக்கான ராசி பலன்!

மேஷம்:

அழுத்தமாகவும், ஆணித்தரமாகவும் வாதாடும் நீங்கள், நியாயத்திற்கு கட்டுப்பட்டவர்கள். உங்கள் ராசியை விட்டு சூரியன் விலகியதால் கண் எரிச்சல், வயிற்றுவலி, வேனல் கட்டி யாவும் நீங்கும். பணப்பற்றாக்கு நிலை மாறும். ஆனால் 2இல் வரும் சூரியனால் பல் வலி, சில நேரங்களில் வாக்குவாதங்கள் வரக்கூடும். கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பிள்ளைகளின் உயர்கல்வி குறித்து யோசிப்பீர்கள். இளைய சகோதரி உதவுவார். சொந்த பந்தங்களுக்கு மத்தியில் மதிக்கப்படுவீர்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். கன்னிப் பெண்களே! பெற்றோரின் பாசமழையில் நனைவீர்கள். அரசியல்வாதிகளே! சில காரியங்கள் தடைப்பட்டு முடியும். பால்ய நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். கேது 2இல் நுழைவதால் பேச்சில் நிதானம் அவசியம். 17ஆம் தேதி மதியம் 2 மணி முதல் 18 மற்றும் 19ஆம் தேதி மாலை 6 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் அவசரப்பட வேண்டாம். ராகு 8இல் மறைவதால் திடீர் பயணம், வீண் விரையம் வந்துப் போகும். வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளால் மறைமுகப் பிரச்சனைகள் வரக்கூடும். சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். கலைத்துறையினர்களே! திறமைகள் வெளிப்படும். சமயோசித புத்தி தேவைப்படும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 16, 20, 22 அதிஷ்ட எண்கள்: 3, 6 அதிஷ்ட நிறங்கள்: மிண்ட் கிரே, வைலெட் அதிஷ்ட திசை: மேற்கு.

ரிஷபம்:

புத்திசாலித்தனமும், பொறுமையும் அதிகமுள்ள நீங்கள், கடமை தவறாதவர்கள். ராசிநாதன் சுக்ரன் உள்ளிட்ட முக்கிய கிரகங்கள் 12இல் மறைந்திருப்பதால் வீண் செலவுகள், திடீர் பயணங்கள் வந்துப் போகும். எதிர்பாராத சந்திப்புகள் நிகழும். பணப் பற்றாக்குறையை சமாளிப்பீர்கள். ஆடம்பரச் செலவுகளை தவிர்க்கப் பாருங்கள். பழைய சொந்தங்கள் தேடி வரும். ராசிக்குள் சூரியன் நுழைந்திருப்பதால் முன்கோபம், உஷ்ணத்தால் அடிவயிற்றில் வலி வந்துப் போகும். குடும்பத்தினருடன் அனுசரித்து போங்கள். ராசிக்குள் கேதுவும், 7இல் ராகுவும் நுழைவதால் மனைவியுடன் விவாதம், பிரச்சனை, மன உளைச்சல், அசதி, சோர்வு வந்து போகும். சகோதர வகையில் நன்மை உண்டு. 5இல் சனி தொடர்வதால் பிள்ளைகளைப் பற்றிய கவலைகள் வந்துப் போகும். கன்னிப் பெண்களே! யாரையும் நம்பி எளிதில் ஏமாற வேண்டாம். வேற்று மதத்தினரின் அறிமுகம் கிடைக்கும். அரசியல்வாதிகளே! தலைமையப் பற்றி சகாக்கள் மத்தியில் குறைக் கூற வேண்டாம். 19ஆம் மாலை 6 மணி முதல் 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் சந்திராஷ்டமம் இருப்பதால் யாரையும் தூக்கி எறிந்து பேசாதீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்யோகத்தில் வேலைச் சுமை அதிகரிப்பதால் கொஞ்சம் சோர்வாக காணப்படுவீர்கள். கலைத்துறையினர்களே! அவ்வப்போது வதந்திகள் வரும். கோபத்தை குறைக்க வேண்டிய வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 16, 17, 18 அதிஷ்ட எண்கள்: 6, 8 அதிஷ்ட நிறங்கள்: கிரே, மெரூண் அதிஷ்ட திசை: கிழக்கு.

மிதுனம்:

புரட்சியை விரும்பும் நீங்கள், பழமையில் புதுமையைப் புகுத்துவதில் வல்லவர்கள். முக்கிய கிரகங்கள் லாப வீட்டில் அமர்ந்திருப்பதால் எதிலும் முன்னேற்றம் உண்டு. வி.ஐ.பி.களின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தினருடன் உல்லாசப் பயணம் சென்று வருவீர்கள். சூரியன் 12இல் நுழைந்திருப்பதால் இளைய சகோதர வகையில் செலவு, மனைவிக்கு இடுப்பு தலைவலி வரக்கூடும். கேது ராசியை விட்டு விலகுவதால் உடல் நலம் சீராகும். ராகு 7ஆம் வீட்டை விட்டு விலகுவதால் கணவன் மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். சொத்துப் பிரச்சனை முடிவுக்கு வரும். மகளுக்கு நல்ல வரன் அமையும். உறவினர்கள், நண்பர்களால் அனுகூலம் உண்டு. கன்னிப் பெண்களே! புதுத் திட்டங்களை பெற்றோர் ஆதரிப்பார். சுபகாரியங்கள் ஏற்பாடாகும். சகோதர சகோதரிகளின் ஆதரவு கிட்டும். அரசியல்வாதிகளே! மேலிடத்தை பகைத்துக் கொள்ளாதீர்கள். வெளிநாட்டிலிருப்பவர்களின் உதவி கிடைக்கும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். 22ஆம் தேதி சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் எச்சரிக்கையுடன் செயல்படப்பாருங்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரி உங்களை நம்பி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். கலைத்துறையினர்களே! பரிசு, பாராட்டு பெறுவீர்கள். அனுபவ அறிவால் வெற்றி பெறும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 17, 19, 21 அதிஷ்ட எண்கள்: 2, 7 அதிஷ்ட நிறங்கள்: அடர்நீலம், ஆரஞ்சு அதிஷ்ட திசை: தெற்கு.

கடகம்:

மனதில் பட்டதை பளிச்சென்று பேசும் நீங்கள், மற்றவர்களின் தவறுகளை முகத்துக்கு நேரே சுட்டிக்காட்டுவீர்கள். சூரியன் லாப வீட்டில் அமர்ந்திருப்பதால் சவால்களில் வெற்றி காண்பீர்கள். எதிர்த்தவர்கள் அடங்குவார்கள். மேல்மட்ட அரசியல்வாதிகள் உதவுவார்கள். எதிர்பார்த்த பணம் தக்க சமயத்தில் வரும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். 3ஆம் வீட்டில் சனி வலுவாக இருப்பதால் பிரச்சனைகளை சமாளிக்கும் மனப்பக்குவம் கிடைக்கும். கௌரவப் பதவிகள் தேடி வரும். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். 5இல் ராகு அமர்வதால் பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்துப் போகும். கேது 11இல் நுழைவதால் ஷேர் மூலம் பணம் வரும். ஹிந்தி, தெலுங்கு பேசுபவர்களால் ஆதாயமடைவீர்கள். சொத்துச் சேர்க்கையுண்டு. உடன்பிறந்தவர்கள் பாசமழைப் பொழிவார்கள். அரசியல்வாதிகளே! உங்களின் செல்வாக்கு உயரும். கன்னிப் பெண்களே! உங்கள் தகுதிக் கேற்ப நல்ல வேலைக் கிடைக்கும். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. வேலையாட்களின் ஆதரவு கிட்டும். உத்யோகத்தில் திறமைகள் வெளிப்படும். சக ஊழியர்களின் அன்புத் தொல்லைகள் விலகும். கலைத்துறையினர்களே! உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். புதிய வாய்ப்புகள் தேடி வரும். புதுப்பொலிவுடன் பிரகாசிக்கும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 16, 18, 20 அதிஷ்ட எண்கள்: 3, 9 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், பிங்க் அதிஷ்ட திசை: வடகிழக்கு.

சிம்மம்:

வாழ்க்கை வாழ்வதற்கே என்பதை அறிந்த நீங்கள், ஏமாற்றங்கள், அவமானங்களை கண்டு அஞ்சமாட்டீர்கள். சுக்ரனும், புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால் உங்கள் போக்கில் கொஞ்சம் மாற்றம் செய்வீர்கள். சோர்வு நீங்கி சுறுசுறுப்பாவீர்கள். குடும்பதத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். வீட்டை அழகுப்படுத்துவீர்கள். நண்பர்கள், உறவினர்கள் பாராட்டும் படி நடந்துக் கொள்வீர்கள். உங்கள் ராசிநாதன் சூரியன் 10இல் கேந்திரபலம் பெற்று அமர்ந்திருப்பதால் இழுபறியாக இருந்த வேலைகள் உடனே முடியும். புது வேலை கிடைக்கும். வற்றிய பணப்பை நிரம்பும். பாதச்சனி தொடர்வதால் யாரையும் விமர்சித்துப் பேசாதீர்கள். 4இல் ராகு அமர்வதால் தூக்கமின்மை, தாயாருடன் கருத்து மோதல்கள் வரக்கூடும். 10இல் கேது நுழைவதால் வேலைச்சுமை, சோர்வு வந்து நீங்கும். அரசியல்வாதிகளே! தலைமைக்கு நெருக்கமாவீர்கள். கன்னிப்பெண்களே! நல்ல வரன் அமையும். சிலர் தடைபட்ட படிப்பை தொடருவார்கள். வாகன வசதிப் பெருகும். வழக்குகளில் சாதகமான சூழல் ஏற்படும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். புது கிளைகள் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி பாராட்டுவார். கலைத்துறையினர்களே! தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். தொலை நோக்குச் சிந்தனையால் சாதிக்கும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 19, 20, 21 அதிஷ்ட எண்கள்: 1, 8 அதிஷ்ட நிறங்கள்: கிளிப்பச்சை, ஊதா அதிஷ்ட திசை: வடக்கு.

கன்னி:

காசு பணத்திற்காக விலை போகாத நீங்கள், கொள்கை, கோட்பாடுகளுடன் வாழ்பவர்கள். ராகு பகவான் 3இல் அமர்வதால் தாழ்வு மனப்பான்மை நீங்கி நேர்மறை எண்ணங்கள் தோன்றும். வேலை கிடைக்கும். பெரிய பதவியில் இருப்பவர்களின் தொடர்பு கிடைக்கும். கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். புண்ணிய ஸ்தலங்களுக்கு குடும்பத்துடன் சென்று வருவீர்கள். இளைய சகோதரருக்கு உதவுவீர்கள். ஜென்மச் சனி தொடர்வதால் அவ்வப்போது விரக்தி, ஏமாற்றம் வந்துப் போகும். சூரியன் 9இல் நுழைந்திருப்பதால் தந்தையாருக்கு மருத்துவச் செலவுகள் வரும். உடல் ஆரோக்யம் சீராகும். கன்னிப் பெண்களே! புதியவர்கள் நண்பர்களாவார்கள். பூர்வீக சொத்துப் பங்கை கேட்டு வாங்குவீர்கள். ஆடை, ஆபரணம் சேரும். அரசியல்வாதிகளே! பரபரப்புடன் காணப்படுவீர்கள். வியாபாரத்தில் தடைபட்ட ஒப்பந்தங்கள் மீண்டும் வரும். வேலையாட்களின் ஆதரவு கிட்டும். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்பட்டாலும் சக ஊழியர்களால் மதிக்கப்படுவீர்கள். கலைத்துறையினர்களே! மூத்த கலைஞர்கள் உதவுவார்கள். மனநிறைவு பெறும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 16, 17, 21 அதிஷ்ட எண்கள்: 4, 6 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், பச்சை அதிஷ்ட திசை: வடமேற்கு.

துலாம்:

புரட்சிகரமான சிந்தனையுடைய நீங்கள், தனக்கென துன்பம் வந்தாலும் கூட அடுத்தவர்களிடம் உதவி கேட்க தயங்குவீர்கள். முக்கிய கிரகங்கள் உங்கள் ராசியைப் பார்த்துக் கொண்டிரப்பதால் புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். தடைபட்ட காரியங்கள் முடியும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். வீட்டில் விசேடங்கள் ஏற்பாடாகும். ராகு 2இல் அமர்வதால் பேச்சில் காரம் வேண்டாமே. வெளியூர் பயணங்கள் அலைச்சல் தந்தாலும் ஆதாயம் உண்டு. கேது 8இல் நுழைவதால் அலைச்சல், டென்ஷன், வீண் விரையம் வந்துப் போகும். 12இல் சனி நிற்பதால் கடன் பிரச்சனைகள் தலை தூக்கும். உடன்பிறந்தவர்களால் இருந்த பிரச்னைகள் நீங்கும். அரசியல்வாதிகளே! ஆதாரமின்றி எதிர்கட்சிக்காரர்களை விமர்சிக்க வேண்டாம். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். கன்னிப் பெண்களே! தடைப்பட்ட உயர்கல்வியை தொடர்வீர்கள். வியாபாரத்தில் மறைமுக போட்டிகளை வெல்வீர்கள். வேலையாட்களிடம் அனுசரித்துப் போவது நல்லது. உத்யோகத்தில் தடைபட்ட பணிகளை விரைந்து முடிப்பீர்கள். சக ஊழியர்களின் ஆதரவு உண்டு. கலைத்துறையினர்களே! நீண்ட நாள் எண்ணங்கள் பூர்த்தியாகும். பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 16, 17, 18 அதிஷ்ட எண்கள்: 2, 6 அதிஷ்ட நிறங்கள்: கிரே, மஞ்சள் அதிஷ்ட திசை: தென்கிழக்கு.

விருச்சிகம்:

மன உறுதியும், விடாமுயற்சியும் கொண்ட நீங்கள், நினைத்ததை சாதித்துக் காட்டுவீர்கள். ராசிநாதன் செவ்வாய் சொந்த வீட்டில் அமர்ந்திருப்பதால் துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். மகனுக்கு எதிர்பார்த்த இடத்தில் உயர்கல்வி அமையும். மகளுக்கு கல்யாணம் முடியும். சித்தர்களின் ஆசி, கோவில் கும்பாவிஷேகத்தில் முன்னுரிமை கிடைக்கும். ராசிக்குள் ராகுவும், 7இல் கேதுவும் நுழைவதால் தலைச்சுற்றல், பசியின்மை, வீண் குழப்பம், மனைவிக்கு மருத்துவச் செலவுகள் வந்துப் போகும். மற்றவர்களை நம்பி முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம். சூரியன் 7இல் அமர்ந்திருப்பதால் மனைவியுடன் வாக்குவாதம் வரக்கூடும். சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை சுமுக தீர்வு காண்பது நல்லது. வெளியூர் பயணங்கள் அலைச்சல் தரும். பழைய நண்பர்கள், உறவினர்களுடன் கருத்து மோதல்கள் வரும். கன்னிப் பெண்களே! காதல் விவகாரங்களில் சிக்க வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களால் விரையம் வரும். பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். மேலதிகாரியின் ஆலோசனையின்றி புது முயற்சிகளில் ஈடுபடாதீர்கள். கலைத்துறையினர்களே! மறைமுகப் போட்டிகள் அதிகரிக்கும். நாவடக்கம் தேவைப்படும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 18, 20, 21 அதிஷ்ட எண்கள்: 3, 7 அதிஷ்ட நிறங்கள்: பிஸ்தா பச்சை, நீலம் அதிஷ்ட திசை: தென்மேற்கு.

தனுசு:

கடினமாக உழைக்கும் குணமும், நல்லதை நினைக்கும் மனசும் கொண்ட நீங்கள், எதிபார்ப்புகளின்றி மற்றவர்களுக்கு உதவுபவர்கள். உங்கள் ராசிநாதன் குருபகவான் 5இல் அமர்ந்திருப்பதால் எதிர்பாராத பணவரவு உண்டு. திருமணம், சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். கடன் பிரச்சனைக்கு மாற்றுவழி காண்பீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். கணவன் மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். குழந்தை பாக்யம் கிடைக்கும். தாய்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. புது சொத்து சேரும். கேது 6இல் அமர்வதால் மனைவியின் உடல் நலம் சீராகும். ராகு பகவான் ராசியை விட்டு விலகுவதால் தெளிவு, உற்சாகம் பிறக்கும். கன்னிப் பெண்களே! புதிய முயற்சிகள் பலிதமாகும். 10இல் சனி பலம் பெற்றிருப்பதால் வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். குலதெய்வப் பிராத்தனைகளை நிறைவேற்றுவீர்கள். அரசியல்வாதிகளே! சகாக்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். வெளிநாட்டிலிருக்கும் உறவினர்கள் நண்பர்களின் உதவி கிடைக்கும். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். பழைய வேலையாட்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் பதவி உயர்வுடன் இடமாற்றம் உண்டு. கலைத்துறையினர்களே! உங்களின் படைப்புகள் அனைவராலும் பாராட்டப்படும். சொன்ன சொல்லைக் காப்பாற்றும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 20, 21, 22 அதிஷ்ட எண்கள்: 6, 9 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், வைலெட் அதிஷ்ட திசை: மேற்கு.

மகரம்:

வணங்க ஆரம்பிக்கும்போதே வளர ஆரம்பிக்கலாம் என்ற கொள்கையை கடைப்பிடிப் பவர்கள் நீங்கள்தான். யோகாதிபதிகளான சுக்ரனும், புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால் வருங்காலத் திட்டங்களில் ஒன்று நிறைவேறும். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். சூரியன் ராசிக்கு 5ஆம் வீட்டில் அமர்ந்ததால் பிள்ளைகளால் வீண் அலைச்சல், செலவு வரக்கூடும். முன்கோபம் அதிகரிக்கும். பூர்வீக சொத்தை விற்று புது வீடு வாங்குவீர்கள். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். உறவினர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். கன்னிப் பெண்களே! பெற்றோரை அனுசரித்துப் போங்கள்-. 11இல் ராகு அமர்வதால் பிரச்சனைகளை எளிதாக சமாளிக்கும் மன தைரியம் கிடைக்கும். மகான்களின் ஆசி கிட்டும். அரசியல்வாதிகள! தங்களின் அருமை பெருமைகளை சகாக்களுக்கு மத்தியில் சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம். அக்கம் பக்கம் வீட்டாருடன் எல்லைக்குட்பட்டுப் பழகுவது நல்லது. வியாபாரத்தில் மற்றவர்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். பங்குதாரர்களிடையே மனஸ்தாபங்கள் வரக்கூடும். உத்யோகத்தில் வேலைச் சுமை அதிகரித்தாலும் விரைந்து முடிப்பீர்கள். கலைத்துறையினர்களே! சம்பள விஷயத்தில் கறாரகா இருங்கள். போராட்டங்களை கடந்து சாதிக்கும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 16, 18, 22 அதிஷ்ட எண்கள்: 5, 7 அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ் பச்சை, ஆரஞ்சு அதிஷ்ட திசை: வடகிழக்கு.

கும்பம்:

மற்றவர்களை குறை சொல்லாது தானுண்டு, தன் வேலையுண்டு என்றிருக்கும் நல்லவர்கள். செவ்வாய் சாதகமான வீடுகளில் செல்வதால் எதிலும் வெற்றி பெறுவீர்கள். பணப் பற்றாக்குறை விலகும். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறைக் காட்டுவார்கள். சூரியன் 4இல் அமர்ந்ததால் குழம்பித் தவித்துக் கொண்டிருந்த நீங்கள் இனி தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். கணவன் மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். புது நண்பர்கள் அறிமுகமாவார்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாயமும் உண்டு. வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். கன்னிப்பெண்களே! கல்யாணம் கூடி வரும். அஷ்டமத்துச் சனி தொடர்வதால் வாகனத்தில் கவனமாக செல்லுங்கள். தனி நபர் விமர்சனம் வேண்டாம். அரசியல்வாதிகளே! எதிர்பார்த்த காரியங்கள் சாதமாக முடியும். ராகு 10இல் அமர்வதால் வேலைச்சுமை, வீண் பதற்றம் வந்துப் போகும். கேது 4இல் அமர்வதால் தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. பழைய நல்ல சம்பவங்களை நினைவு கூர்ந்து மகிழ்வீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் அலுவலக ரகசியங்களை மூத்த அதிகாரி உங்களிடம் பகிர்ந்துக் கொள்வார். கலைத்துறையினர்களே! வேற்றுமொழிகளால் ஆதாயம் உண்டு. முகமலர்ச்சியுடன் செயல்படும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 16, 17, 20 அதிஷ்ட எண்கள்: 4, 5 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், வெள்ளை அதிஷ்ட திசை: தென்மேற்கு.

மீனம்:

விட்டுக் கொடுப்பதால், எப்போதும் கெட்டுப்போவதில்லை என்ற கொள்கையைக் கடைப் பிடிப்பவர்கள் நீங்கள்தான். சூரியன் 3இல் அமர்ந்திருப்பதால் பக்குவமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பிரபலங்களுக்கு நெருக்கமாவீர்கள். புது வேலை கிடைக்கும். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். கல்யாணப் பேச்சு வார்த்தைகள் சாதகமாக முடியும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலையறிந்து பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். அரசு அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். வரவேண்டிய பணம் கைக்கு வரும். சகோதர, சகோதரிகளின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பெற்றோரின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர்கள். 3இல் கேது அமர்வதால் திடீர் யோகம் உண்டாகும். ராகு 9இல் நுழைவதால் புது வேலைக் கிடைக்கும். தந்தையாருடன் கருத்து மோதல்கள் வரக்கூடும். கன்னிப்பெண்களே! எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி தங்கும். அயல்நாட்டிலிருப்பவர்களால் உதவியுண்டு. 7இல் சனி தொடர்வதால் குடும்பத்தினருடன் வீண் விவாதங்களை தவிர்க்கவும். மனைவிக்கு மருத்துவச் செலவு வந்துபோகும். 16 மற்றும் 17ஆம் தேதி மதியம் 2 மணி வரை சந்திராஷ்டமம் நடப்பதால் உணர்ச்சிவசப்படாமல் இருப்பது நல்லது. வியாபாரத்தில் போட்டிகளை தகர்த்தெறிவீர்கள். வேலையாட்களின் ஆதரவு கிட்டும். உத்யோகத்தில் அமைதி நிலவும். சக ஊழியர்களின் தேவையறிந்து உதவுவீர்கள். கலைத்துறையினர்களே! உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். தடைகளை தகர்த்தெறிந்து வெற்றி காணும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 18, 19, 20 அதிஷ்ட எண்கள்: 7, 9 அதிஷ்ட நிறங்கள்: பிஸ்தா பச்சை, மஞ்சள் அதிஷ்ட திசை: தெற்கு.

நன்றி: வெப்துனியா.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

வார ராசி பலன்! Empty Re: வார ராசி பலன்!

Post by மகி Wed May 25, 2011 7:19 am

மே 23 முதல் 30 வரைக்கான ராசி பலன்!

மேஷம்:

கொடுத்து சிவந்த கைகளை உடைய நீங்கள் இலவசமாக யாரிடமும் எதையும் பெற மாட்டீர்கள். உங்களின் தனாதிபதியான சுக்ரன் சாதகமாக இருப்பதால் எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். உங்கள் ரசனைக்கேற்ப சொத்து அமையும். குடும்பத்தாருடன் மனம் விட்டுப் பேசுவீர்கள். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். புது நகை, துணிமணிகளை வாங்கி மகிழ்வீர்கள். இளைய சகோதரிக்கு சிறப்பாக கல்யாணம் முடியும். எதிர்பார்த்த விலைக்கு பழைய மனையை விற்பீர்கள். மனைவிவழி உறவினர்கள் மதிப்பார்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். அவ்வப்போது தொந்தரவு கொடுத்த வாகனத்தை மாற்றுவீர்கள். குலதெய்வக் கோவிலுக்குச் சென்று வருவீர்கள். அரசு காரியங்கள் தடைப்பட்டு முடியும். கன்னிப்பெண்களே! புது முயற்சிகளை பெற்றோர் ஆதரிப்பார். ராசிக்குள் குரு நிற்பதால் வீண் செலவு, திடீர் பயணம், மறைமக எதிர்ப்புகள் வந்து செல்லும். அக்கம்- பக்கம் வீட்டாரிடம் இருந்து வந்த மனக்கசப்புகள் விலகும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். வேலையாட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உத்‌தியோகத்தில் எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். கலைத்துறையினர்களே! உங்களைப் பற்றிய வீண் வதந்திகள் விலகும். பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வாரமிது. அதி‌ர்ஷ்ட தேதிகள் : 24, 25, 26 அதி‌ர்ஷ்ட எண்கள் : 7, 9 அதி‌ர்ஷ்ட நிறங்கள் : நீலம், ரோஸ் அதி‌ர்ஷ்ட திசை : தெற்கு.

ரிஷபம்:

மனிதநேயம் அதிகமுள்ள நீங்கள், எதிரிக்கு உதவும் குணம் கொண்டவர்கள். உங்களி யோகாதிபதிகளான புதனும், சூரியனும் சாதகமாக இருப்பதால் அதிகாரப் பதவிகள் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். அரைகுறையாக நின்றுபோன கட்டிட வேலைகள் இனி விரைந்து முடிப்பீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் அனுகூலமும் உண்டு. ராகு, கேதுவின் சஞ்சாரம் சரியில்லாததால் கணவன்-மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. மனைவியின் உடல் நலம் பாதிக்கும். இளைய சகோதர வகையில் எதிர்பாத்த உதவி கிடைக்கும். செவ்வாய் 12-ல் மறைந்திருப்பதால் சொத்துப் பிரச்சனைக்கு சுமுக தீர்வு காண்பது நல்லது. உடன்பிறந்தவர்களால் கவலைகள் வரக்கூடும். கன்னிப் பெண்களே! பெற்றோரின் ஆலோசனையின்றி எந்த முடிவுகளும் எடுக்க வேண்டாம். 5-ல் சனி நிற்பதால் மன உளைச்சல், சின்ன சின்ன தடுமாற்றங்கள் வந்து போகும். ஆன்மிக பயணங்கள் சென்று வருவீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். உங்களைச் சுற்றியிருப்பவர்களால் அவ்வப்போது வீண் செலவுகள் வந்துபோகும். அரசியல்வாதிகளே! சகாக்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்‌தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். கலைத்தறையினர்களே! படைப்புகளை போராடி வெளியிட வேண்டி வரும். ரகசியங்களை காக்க வேண்டிய வாரமிது. அதி‌ர்ஷ்ட தேதிகள் : 25, 27, 28 அதி‌ர்ஷ்ட எண்கள் : 4, 5 அதி‌ர்ஷ்ட நிறங்கள் : மஞ்சள், பச்சை அதி‌ர்ஷ்ட திசை : தென்மேற்கு.

மிதுனம்:

கொடுத்த வாக்கைக் காப்பாற்றும் குணமுடைய நீங்கள், யாரையும் தூக்கி எறிந்து பேசமாட்டீர்கள். குருபகவான் வலுவாக அமர்ந்திருப்பதால் தொட்ட காரியம் துலங்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். நாடாளுபவர்களின் நட்பு கிடைக்கும். தடைப்பட்ட வேலைகள் முடியும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். குழந்தை பாக்யம் கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். வழக்கில் திருப்பம் ஏற்படும். உடன்பிறந்தவர்கள், உறவினர்கள் உங்களிடம் முக்கிய விஷயங்களை பகிர்ந்துக் கொள்வார்கள். வெளிவட்டாரத்தில் புகழ், கௌரவம் உயரும். 4-ல் சனி நிற்பதால் ஒருவித கவலை வந்து மனதை வாட்டும். தாயாருக்கு உடல்நிலை பாதிக்கும். ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். புதிய வாகனம் வாங்குவீர்கள். கன்னிப் பெண்களே! புது வேலைக் கிடைக்கும். அரசியல்வாதிகளே! சகாக்களைப் பற்றிக் குறைகூற வேண்டாம். 23 மற்றும் 24-ந் தேதி காலை 9. 30 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் பொறுமையுடன் செயல்படப்பாருங்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். வாடிக்கையாளர்களை திருப்திபடுத்த புது சலுகைகளை அறிமுகப்படுத்துவீர்கள். உத்‌தியோகத்தில் மேலதிகாரி உங்களை நம்பி சில முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார். கலைத்துறையினர்களே! திறமைகள் வெளிப்படும். இங்கிதமான பேச்சால் உயரும் வாரமிது. அதி‌ர்ஷ்ட தேதிகள் : 27, 28, 29 அதி‌ர்ஷ்ட எண்கள் : 3, 8 அதி‌ர்ஷ்ட நிறங்கள் : மெரூண், ப்ரவுன் அதி‌ர்ஷ்ட திசை : வடகிழக்கு.

கடகம்:

ஈரப் பார்வையால் எல்லோரையும் தன் வசம் ஈர்க்கும் நீங்கள் எப்போதும் இதயத்திலிருந்து பேசுவீர்கள். யோகாதிபதி செவ்வாய் வலுவாக இருப்பதால் புதிய திட்டங்கள் நிறைவேறும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். எதிர்பாராத பணவரவு உண்டு. அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் உதவுவார்கள். புது வேலை கிடைக்கும். பேச்சிலே கம்பீரம் பிறக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். பழைய கடனை பைசல் செய்வீர்கள். மகளுக்கு எதிர்பார்த்த இடத்தில் உயர்கல்வி அமையும். தாய்வழி உறவினர்களால் மகிழ்ச்சியுண்டு. பழைய சொந்தங்களின் சந்திப்பதால் மனநிறைவு கூடும். கன்னிப் பெண்களே! கசந்த காதல் இனிக்கும். கனவுத்தொல்லை, தூக்கமின்மை விலகும். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். 24-ந் தேதி காலை 9. 30 மணி முதல் 25 மற்றும் 26-ந் தேதி இரவு 8 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். அரசியல்வாதிகளே! மேலிடத்திற்கு சில ஆலோசனைகள் வழங்குவீர்கள். வியாபாரத்தில் புதிய திட்டங்கள் வகுத்து லாபத்தைப் பெருக்குவீர்கள். கடையை வேறு இடத்திற்கு மாற்றம் செய்வீர்கள். உத்‌தியோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். கலைத்துறையினர்களே! சம்பளபாக்கி கைக்கு வரும். மனஉறுதியால் வெல்லும் வாரமிது. அதி‌ர்ஷ்ட தேதிகள் : 23, 25, 27 அதி‌ர்ஷ்ட எண்கள் : 1, 8 அதி‌ர்ஷ்ட நிறங்கள் : வெள்ளை, நீலம் அதி‌ர்ஷ்ட திசை : மேற்கு.

சிம்மம்:

உடுத்தும் உடையையும், உள்ளிருக்கும் மனசையும் வெள்ளையாக வைத்துக் கொள்ளும் நீங்கள் சாதிக்கப் பிறந்தவர்கள். உங்கள் ராசிநாதன் சூரியன் இப்போது 10-ம் வீட்டில் கேந்திரபலம் பெற்றிருப்பதால் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு சில காரியங்களை முடிப்பீர்கள். அரசாங்க அதிகாரிகளின் தொடர்பு கிடைக்கும். அப்பாவின் உடல்நிலை சீராகும். அரசு காரியங்கள் உடனே முடியும். வீடு கட்ட ப்ளான் அப்ரூவல் ஆகும். வங்கிக் கடனுதவியும் கிடைக்கும். குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பார். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து சில முடிவுகள் எடுப்பீர்கள். வழக்கு வெற்றியடையும். சொந்த-பந்தங்கள் உங்களைப் பற்றி பெருமையாக பேசுவார்கள். பாதச்சனி தொடர்வதால் மன உளைச்சல், சோர்வு, களைப்பு வரக்கூடும். சகோதரிக்கு நல்ல விதத்தில் திருமணம் முடியும். கன்னிப்பெண்களே! தடைப்பட்ட உயர்கல்வியை தொடர்வீர்கள். அரசியல்வாதிகளே! புகழ், கௌரவம் உயரும். 26-ந் தேதி இரவு 8 மணி முதல் 27, 28 மற்றும் 29-ந் தேதி காலை 8 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் பற்று வரவு உயரும். அனுபவமிக்க புது வேலையாட்கள் தேடி வருவார்கள். உத்‌தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். கலைத்துறையினர்களே! உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். நல்லவர்களின் நட்பாலும், அனுபவ அறிவாலும் வெற்றி பெறும் வாரமிது. அதி‌ர்ஷ்ட தேதிகள் : 24, 25, 26 அதி‌ர்ஷ்ட எண்கள் : 3, 7 அதி‌ர்ஷ்ட நிறங்கள் : மயில் நீலம், ப்ரவுன் அதி‌ர்ஷ்ட திசை : தென்மேற்கு.

கன்னி:

மற்றவர்களின் மனம் நோகாதபடி பேசும் நீங்கள் தனக்கென்று எதையும் எடுத்து வைத்துக் கொள்ள மாட்டீர்கள். ராகு வலுவாக அமர்ந்திருப்பதால் பிரச்சனைகளை கண்டு அஞ்சாமல் பதிலடி கொடுப்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் நண்பர்களாவார்கள். குடும்பத்தாரின் ஆதரவுப் பெருகும். பிள்ளைகள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். மனைவியின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். மைத்துனர் பக்கபலமாக இருப்பார். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவி கிடைக்கும். ஜென்மச்சனியால் அவ்வப்போது சந்தேகம், முன்கோபம், சிறுசிறு வாக்குவாதங்கள் வந்துப் போகும். சுக்ரனும், புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால் ஓரளவு பணவரவு உண்டு. பழைய இடத்தை விற்ற புது வீடு வாங்குவீர்கள். விலை உயர்ந்த ஆடியோ, வீடியோ சாதனங்கள் வாங்குவீர்கள். கன்னிப்பெண்களே! பெற்றோருடன் கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அரசியல்வாதிகளே! மேலிடத்தை பகைத்துக் கொள்ளாதீர்கள். தந்தையின் உடல் நலம் பாதிக்கும். அயல்நாடு செல்ல வாய்ப்பு வரும். 29-ந் தேதி காலை 8 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் கவனமுடன் செயல்படப்பாருங்கள். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் உண்டு. வேலையாட்களிடம் தொழில் சம்பந்தமான ரகசியங்களை சொல்ல வேண்டாம். உத்‌தியோகத்தில் உங்கள் கடின உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். கலைத்துறையினர்களே! மூத்த கலைஞர்களின் அன்பைப் பெறுவீர்கள். அலைச்சல் இருந்தாலும் கடின உழைப்பால் கரை ஏறும் வாரமிது. அதி‌ர்ஷ்ட தேதிகள் : 25, 27, 28 அதி‌ர்ஷ்ட எண்கள் : 2, 5 அதி‌ர்ஷ்ட நிறங்கள் : அடர்நீலம், ஆரஞ்சு அதி‌ர்ஷ்ட திசை : தென்கிழக்கு.

துலாம்:

சமூக விழிப்புணர்வு கொண்ட நீங்கள், அடித்தட்டு மக்களை அரும்பாடுபட்டு முன்னேற்றுவீர்கள். குருபகவான் வலுவாக இருப்பதால் புது முயற்சிகள் யாவும் வெற்றியடையும். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். பிள்ளைகளால் நிம்மதி அடைவீர்கள். சேமிக்கத் தொடங்குவீர்கள். மூத்த சகோதர வகையில் மகிழ்ச்சியுண்டு. உறவினர்கள் சிலர் உங்களின் அதிரடியான வளர்ச்சியைக் கண்டு பொறாமைப்படுவார்கள். அவர்களிடம் அளவாகப் பழகுவது நல்லது. கல்யாணப் பேச்சு வார்த்தை சுமுகமாக முடியும். பூர்வீக சொத்தை சீர் செய்வீர்கள். கன்னிப் பெண்களே! புதியவர்கள் நண்பர்களாவார்கள். மறைமுகமாக செயல்பட்டவர்களை இனம் கண்டு ஒதுக்குவீர்கள். குலதெய்வக் கோவிலை புதுப்பிப்பது தொடர்பாக ஆலோசனை செய்வீர்கள். ஏழரைச் சனி தொடர்வதால் யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். ராகு, கேதுவின் சஞ்சாரம் சரியில்லாததால் மனஉளைச்சல், ஒருவித படபடப்பு, மறைமுகப் பிரச்னைகள் வந்து செல்லும். அரசியல்வாதிகளே! கட்சிக்குள் நடக்கும் கோஷ்டி பூசலில் தலையிடாமலிருப்பது நல்லது. வியாபாரத்தில் புதிய முதலீடுகளைப் பற்றி யோசிப்பீர்கள். வர வேண்டிய பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிப்பீர்கள். உத்‌தியோகத்தில் மேலதிகாரியின் பாராட்டை பெறுவீர்கள். கலைத்துறையினர்களே! பெரிய நிறுவனங்களிலிருந்தும் புதிய வாய்ப்புகள் தேடி வரும். போராடி வெற்றி பெறும் வாரமிது. அதி‌ர்ஷ்ட தேதிகள் : 23, 27, 28 அதி‌ர்ஷ்ட எண்கள் : 3, 9 அதி‌ர்ஷ்ட நிறங்கள் : கிளிப்பச்சை, ஊதா அதி‌ர்ஷ்ட திசை : மேற்கு.

விருச்சிகம்:

வாதம் விவாதத்தை விரும்பாத நீங்கள், எடுத்த வேலையை முடிப்பதில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். சனிபகவான் வலுவாக அமர்ந்திருப்பதால் தைரியம், மனத்தெளிவு பிறக்கும். சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். பெரிய பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். பிள்ளைகளிடம் உங்களின் எண்ணங்களைத் திணிக்க வேண்டாம். பூர்வீக சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். வழக்குகள் சாதகமாகும். சகோதர, சகோதரிகள் உறுதுணையாக இருப்பார்கள். சொத்துப் பிரச்சனைகளை சுமுகமாக தீர்ப்பீர்கள். தாய்வழி உறவினர்கள் ஒத்துழைப்பார்கள். ராகு, கேதுவின் சஞ்சாரம் சரியில்லாததால் குடும்பத்தினரை அனுசரித்துப் போங்கள். வாகனத்தில் செல்லும் போதும், சாலையை கடக்கும் போதும் கவனம் தேவை. கன்னிப் பெண்களே! காதல் விவகாரங்களில் சிக்கிக் கொள்ளாதீர்கள். அநாவசியச் செலவுகளை தவிர்க்கப்பாருங்கள். அரசியல்வாதிகளே! சிலர் மேலிடத்தில் உங்களைப் பற்றி தவறான வதந்திகளை பரப்பிவிடக்கூடும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் விரையம் வரும். வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்‌தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கவில்லையே என ஆதங்கப்படுவீர்கள். சில நேரங்களில் மௌனம் தேவைப்படும் வாரமிது. அதி‌ர்ஷ்ட தேதிகள் : 23, 26, 29 அதி‌ர்ஷ்ட எண்கள் : 6, 8 அதி‌ர்ஷ்ட நிறங்கள் : வைலெட், இளஞ்சிவப்பு அதி‌ர்ஷ்ட திசை : கிழக்கு.

தனுசு:

எல்லோரும் நல்லவர்களே என நினைக்கும் நீங்கள் தன்னைச் சுற்றியிருப்பவர்கள் சுகமாய் வாழ பாடுபடுவீர்கள். சூரியன் 6-வது வீட்டில் அமர்ந்திருப்பதால் எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். அரசு விஷயங்கள் உடனே முடியும். பழுதான வாகனம் சரியாகும். பாதியில் நிற்கும் வீடு கட்டும் பணி தொடரும். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். உடன்பிறந்தவர்களிடம் விட்டுக் கொடுத்துப் போவீர்கள். இளைய சகோதரிக்கு திருமணம் முடியும். வழக்குகள் சாதகமாகும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். கன்னிப் பெண்களே! நல்ல வரன் அமையும். பால்ய நண்பர்களை சந்திப்பீர்கள். நீங்கள் முன்பு செய்த உதவிகளுக்கு இப்பொழுது பாராட்டப்படுவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். கடையை விரிவுபடுத்துவீர்கள். உத்‌தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பர். சம்பளப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். கலைத்துறையினர்களே! உங்களின் படைப்புகளுக்கு பாராட்டுக் கிடைக்கும். வி. ஐ. பிகளால் இனம் காணப்படும் வாரமிது. அதி‌ர்ஷ்ட தேதிகள் : 24, 25, 27 அதி‌ர்ஷ்ட எண்கள் : 2, 7 அதி‌ர்ஷ்ட நிறங்கள் : ஊதா, இளஞ்சிவப்பு அதி‌ர்ஷ்ட திசை : தெற்கு.

மகரம்:

பொதுவாக சட்ட திட்டங்களை மதிக்கும் நீங்கள் நியாயவாதிகளைக் காப்பாற்ற குறுக்கு வழியில் சில நேரங்களில் யோசிப்பீர்கள். உங்கள் யோகாதிபதியான புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் மன இறுக்கம் விலகும். நண்பர்கள் மதிப்பார்கள். பழைய சொந்தம்பந்தங்களை சந்திப்பீர்கள். புது முயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். எதிர்பார்த்திருந்தபடி பணம் வரும். குடும்பத்திலுள்ளவர்களின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர்கள். ராசிக்கு 5-ம் வீட்டில் சூரியன் நிற்பதால் உடல் உஷ்ணம், அடிவயிற்றில் வலி, பிள்ளைகளால் டென்ஷன், அலைச்சல், செலவு வரக்கூடும். ராகு வலுவாக அமர்ந்திருப்பதால் தைரியமாக முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். கௌரவப் பதவிகள் தேடி வரும். வீட்டில் தடைப்பட்டு வந்த சுபகாரியப் பேச்சு வார்த்தைகள் முன்னேற்றம் தரும். பூர்வீகச் சொத்தில் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். கன்னிப்பெண்களே! எதிர்பார்ப்புகள் நிறைவேறும். ஆன்மீகத்தில் மனம் லயிக்கும். சமூக நலப்பணிகளில் நாட்டம் அதிகரிக்கும். பால்ய நண்பர்களிடம் உதவியை நாடுவீர்கள். வேற்று மதத்தினர், மொழியினராலும் ஆதாயமுண்டு. அரசியல்வாதிகளே! வீண் விமர்சனங்களை தவிர்க்கவும். வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகளை சமாளிப்பீர்கள். பங்குதாரர்களிடம் மனஸ்தாபங்கள் வந்து போகும். உத்‌தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். சக ஊழியர்களை அனுசரித்து போங்கள். கலைத்துறையினர்களே! எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். திட்டமிடுதல் மூலம் சாதிக்கும் வாரமிது. அதி‌ர்ஷ்ட தேதிகள் : 25, 26, 27 அதி‌ர்ஷ்ட எண்கள் : 3, 9 அதி‌ர்ஷ்ட நிறங்கள் : மஞ்சள், கரு நீலம் அதி‌ர்ஷ்ட திசை : வடமேற்கு.

கும்பம்:

பிறந்த மண்ணையும், பேசும் மொழியையும் வணங்கும் நீங்கள் தன்மானம் மிக்கவர்கள். ராசிக்கு 4-ம் வீட்டில் சூரியன் கேந்திரபலம் பெற்றிருப்பதால் தடுமாற்றங்கள் நீங்கும். வி. ஐ. பிகளின் தொடர்பு கிடைக்கும். அரசால் ஆதாயமடைவீர்கள். குடும்பத்தில் அனுசரித்து போவீர்கள். வீட்டில் நல்லது நடக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். பழைய கடனைத் தீர்கக உதவிகள் கிடைக்கும். நட்பு வட்டம் விரியும். நண்பர்கள், உறவினர்கள் மதிப்பார்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு நல்ல நிறுவனத்தில் மேற்படிப்பு தொடர இடம் கிடைக்கும். கன்னிப் பெண்களே! பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். மூத்த சகோதரர் உங்களின் நிலையறிந்து உதவுவார். அஷ்டமத்துச்சனி தொடர்வதால் மற்றவர்களின் பேச்சைக் கேட்டு அதிரடியான முடிவுகளை எடுத்துவிடாமல், நிதானித்து செயல்படப்பாருங்கள். பழைய கசப்பான சம்பவங்களை எண்ணி வருந்தாதீர்கள். சுக்ரன் சாதகமான வீடுகளில் செல்வதால் சமையலறையை நவீனமயமாக்குவீர்கள். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை கொடுத்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் கொடுக்கல், வாங்கலில் இருந்த சிக்கல்கள் விலகும். புதிய வாடிக்கையாளர்கள் வருகை தருவார்கள். உத்‌தியோகத்தில் வேலைச்சுமை இருந்தாலும் மேலதிகாரியின் அறிமுகம் கிடைக்கும். கலைத்துறையினர்களே! புது வாய்ப்புகள் தேடி வரும். வாக்கு சாதுர்யத்தால் நினைத்தை நிறைவேற்றிக் கொள்ளும் வாரமிது. அதி‌ர்ஷ்ட தேதிகள் : 27, 28, 29 அதி‌ர்ஷ்ட எண்கள் : 1, 8 அதி‌ர்ஷ்ட நிறங்கள் : சில்வர் கிரே, பச்சை அதி‌ர்ஷ்ட திசை : வடக்கு.

மீனம்:

எதையும் ஆழமாக யோசிப்பதுடன், பல விஷயங்களை அடிமனதிலேயே பதுக்கி வைப்பீர்கள். சுக்ரனும், புதனும் சாதகமாக இருப்பதால் மறைந்துக் கிடந்த திறமைகள் வெளிப்படும். பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகளின் போக்கில் அக்கறை செலுத்துவீர்கள். அவர்களின் உயர்கல்வி நல்ல விதத்தில் அமையும். உடன்பிறந்தவர்கள் உதவுவார்கள். இழுபறியாக இருந்த வழக்குகளில் நல்ல மாற்றம் ஏற்படும். வாழ்க்கைத்துணை வழியில் ஏற்பட்ட பிணக்குகள் தீரும். ஆன்மிக காரியங்களை முன்னின்று நடத்துவீர்கள். அடகு வைத்திருந்த ஆபரணங்களை மீட்பீர்கள். கன்னிப் பெண்களே! காதல் விவகாரங்களில் சுமுகமான நிலை காணப்படும். வேலை கிடைக்கும். வீடு, மனை வாங்குவீர்கள். லோன் கிடைக்கும். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள். விருந்தினர் வருகை அதிகரிக்கும். பழைய இனிய அனுபவங்கள் நினைவுக்கு வரும். அரசியல்வாதிகளே! மேலிடத்திற்கு நெருக்கமாவீர்கள். 7-ல் சனி நிற்பதால் எதிலும் தடைகள் வரும். மனைவிக்கு கால்-கழுத்து வலி வரும். புது முதலீடு செய்து வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். கொடுக்கல், வாங்கலில் நிம்மதி ஏற்படும். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்களின் ஆதரவு கிட்டும். போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்‌தியோகத்தில் மேலதிகாரிகள் உங்களை கலந்தாலோசித்து முக்கிய முடிவுகளை எடுப்பார்கள். கலைத்துறையினர்களே! மதிப்பு, மரியாதைக் கூடும். உழைப்பால் உயரும் வாரமிது. அதி‌ர்ஷ்ட தேதிகள் : 23, 26, 28 அதி‌ர்ஷ்ட எண்கள் : 4, 6 அதி‌ர்ஷ்ட நிறங்கள் : மயில் நீலம், மெரூண் அதி‌ர்ஷ்ட திசை : கிழக்கு.

நன்றி: வெப்துனியா.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

வார ராசி பலன்! Empty Re: வார ராசி பலன்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum