தமிழ் | Tamil | Forum
தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

கூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.

புகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.

Join the forum, it's quick and easy

தமிழ் | Tamil | Forum
தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

கூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.

புகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.
தமிழ் | Tamil | Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வணக்கம் என் பெயர் நாகராசன்.இரா
by rajan_1972 Fri Apr 10, 2020 7:20 pm

» சிறந்த பொழுதுபோக்கு இணையதளம்!
by pba Sat Jul 02, 2016 8:11 pm

» ஏற்றுமதி உரிமம் பெறும் விண்ணப்பம்
by tamilnews Tue Mar 24, 2015 8:00 pm

» மொபைல், டிடிஎச் ரீசார்ஜ் செய்யப் போறீங்களா? இந்த சலுகைகளைப் பாருங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:41 am

» மொபைல் ரீசார்ஜ் செய்து ஷாப்பிங் கூப்பன் இலவசமாக பெறுங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:38 am

» மெமரி கார்டு வாங்கப் போறீங்களா? 74% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:36 am

» அமேசானில் பெண்களுக்கான ஆடைகள் 70% வரை தள்ளுபடி !
by dsytamil Wed Jan 14, 2015 1:34 am

» அமேசானில் ஆண்களுக்கான ஆடைகள் 60% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:31 am

» லெனோவா டேப்ளட் 43% சலுகை விலையில் ரூ. 5949 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:28 am

» ப்ளிப்கார்ட் தளத்தில் சிறுவர்களுக்கான ஆடைகள் 70% வரை + 30% கூடுதல் தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:14 am

» அமேசான் தளத்தில் 50% தள்ளுபடி விலையில் மொபைல்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:13 am

» ரூ. 7499 மதிப்புள்ள மைக்ரோமேக்ஸ் ஏ1 ஆன்ட்ராய்டு மொபைல் இப்போது ரூ. 5499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:11 am

» ரூ. 19999 மதிப்புள்ள நோக்கியா லூமியா 625 மொபைல் ரூ. 7499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:10 am

» ப்ராண்டட் காலணிகளுக்கு 70% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:08 am

» ஆன்லைன் ஷாப்பிங்கில் ப்ரிண்டர்களுக்கு 33% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:06 am

» ஆன்லைனில் பொருள் வாங்கப் போறீங்களா? 70% வரை பணத்தை சேமியுங்கள்!
by dsytamil Tue Jan 13, 2015 12:30 am

» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...!
by sathikdm Sun Oct 19, 2014 4:45 pm

» சிறுதொழில் செய்பவர்கள் இணையதளம் தொடங்க வேண்டியதின் அவசியம்!
by pba Sat Sep 27, 2014 12:58 am

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:47 pm

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:42 pm

» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
by santhoshpart Wed Aug 27, 2014 4:22 pm

» “சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா!”
by santhoshpart Wed Aug 13, 2014 3:54 pm

» Daily Rs.500/- and Above
by K.MARIAPPAN Wed Jul 30, 2014 12:01 pm

» http://www.neobux.com/?r=narasimmant
by Navaneethakrishnan Wed Jul 02, 2014 3:41 pm

» வணக்கம் என் பெயர் வேணு
by A.Venu Fri Jun 27, 2014 10:10 am

» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?
by sathikdm Wed Jun 18, 2014 3:24 pm

» தமிழ் மொழி மூல கல்வி இணையதளம்
by afdhaal Wed May 28, 2014 9:22 pm

» வருக. வருக. வணக்கம்.
by மகி Mon May 12, 2014 3:55 pm

» அறிமுகம் -விநாயகா செந்தில்.
by மகி Mon May 12, 2014 3:53 pm

» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....!
by vinayagasenthil Sat May 10, 2014 9:04 pm

பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

வார ராசி பலன் - 1 ஆகஸ்டு 2011 முதல் 8 ஆகஸ்டு 2011 வரை!

Go down

வார ராசி பலன் - 1 ஆகஸ்டு 2011 முதல் 8 ஆகஸ்டு 2011 வரை! Empty வார ராசி பலன் - 1 ஆகஸ்டு 2011 முதல் 8 ஆகஸ்டு 2011 வரை!

Post by மகி Tue Aug 02, 2011 5:19 pm

மேஷம்:

திறமையால் எந்த ஒரு காரியத்தையும் செய்து முடிக்கும் குணமுடைய நீங்கள், எப்பொழுதும் பரபரப்புடன், சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். சுக்ரன் சாதகமாக இருப்பதால் நினைத்ததை தருவார். இங்கிதமான பேச்சால் எல்லோரையும் கவர்வீர்கள். எதிர்பாராத பணவரவு உண்டு. குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வீட்டில் சுப காரியங்கள் ஏற்பாடாகும். வருமானத்தைப் பெருக்க அதிரடியான முயற்சியில் இறங்குவீர்கள். பிள்ளைகளின் பாசம் அதிகரிக்கும். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சியுண்டு. கன்னிப் பெண்களின் உடல் நிலை சீராகும். மனதிற்கு பிடித்தவர்களை சந்திப்பீர்கள். அரசியல்வாதிகளுக்கு தலைமையிடம் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். 7-ந் தேதி மதியம் 2 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் உணர்ச்சிவசப்படாமல் இருப்பது நல்லது. ராசிநாதன் செவ்வாய் சனியை பார்ப்பதால் வழக்குகளில் அலட்சியம் வேண்டாம். சகோதர பகை, வாகன விபத்துகள், வீண் செலவுகள் வந்துப் போகும். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்கள் அமைவார்கள். புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். பங்குதாரர்கள் உதவுவார்கள். உத்‌தியோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். கலைத்துறையினர்களின் நீண்ட நாள் கனவு நனவாகும். அச்சம் விலகி அதிகாரம் பெருகும் வாரமிது. அதி‌ர்ஷ்ட தேதிகள் : 2, 3, 4 அதி‌ர்ஷ்ட எண்கள் : 6, 9 அதி‌ர்ஷ்ட நிறங்கள் : பிங்க், வெள்ளை அதி‌ர்ஷ்ட திசை : தென்மேற்கு.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

வார ராசி பலன் - 1 ஆகஸ்டு 2011 முதல் 8 ஆகஸ்டு 2011 வரை! Empty Re: வார ராசி பலன் - 1 ஆகஸ்டு 2011 முதல் 8 ஆகஸ்டு 2011 வரை!

Post by மகி Tue Aug 02, 2011 5:21 pm

ரிஷபம்:

ரிஷபம் எடுத்த காரியங்களில் எவ்வளவு தடைகள் வந்தாலும் மனம் தளராமல் தன்னம்பிக்கையுடன் செய்து முடிப்பதில் வல்லவர்கள் நீங்கள் தான். உங்கள் ராசிநாதன் சுக்ரன் யோகாதிபதிகளுடன் சேர்ந்திருப்பதால் மறைந்துக் கிடந்த திறமைகள் வெளிப்படும். பதவிகள் தேடி வரும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். பிள்ளைகளின் எண்ணங்களை நிறைவேறும். பழைய சொந்த-பந்தங்கள் தேடி வருவார்கள். கன்னிப் பெண்களின் புதிய முயற்சிகளை பெற்றோர் ஆதரிப்பார். கல்யாண பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். 5-ல் சனி இருப்பதால் சலிப்பு, சோர்வு, காய்ச்சல், முன்கோபம் வந்து நீங்கும். வீடு, வாகனப் பராமரிப்பு செலவு அதிகரிக்கும். அரசியல்வாதிகள் தலையால் பாராட்டப்படுவீர்கள். 12-ல் குரு நிற்பதால் விரையச் செலவுகள் அதிகரிக்கும். சிறு சிறு அவமானங்கள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்‌தியோகத்தில் மேலதிகாரியின் கோபம் தணியும். சக ஊழியர்கள் மதிப்பார்கள். கலைஞர்களுக்கு நழுவிய வாய்ப்புகள் தேடி வரும். வெளிவட்டாரத்தில் மதிப்பு மரியாதை கூடும் வாரமிது. அதி‌ர்ஷ்ட தேதிகள் : 1, 3, 5 அதி‌ர்ஷ்ட எண்கள் : 6, 8 அதி‌ர்ஷ்ட நிறங்கள் : மெரூண், ஊதா அதி‌ர்ஷ்ட திசை : கிழக்கு.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

வார ராசி பலன் - 1 ஆகஸ்டு 2011 முதல் 8 ஆகஸ்டு 2011 வரை! Empty Re: வார ராசி பலன் - 1 ஆகஸ்டு 2011 முதல் 8 ஆகஸ்டு 2011 வரை!

Post by மகி Tue Aug 02, 2011 5:22 pm

மிதுனம்:

ஊராரின் சொத்துக்கு ஆசைப்படாமல் சொந்தமாக உழைத்து வாழ்க்கையில் உயர வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் நீங்கள் தான். குரு பகவான் லாப வீட்டில் வலுவாக இருப்பதால் இழுபறியாக இருந்த வேலைகள் உடனே முடியும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவது நல்லது. ஒரளவு பணம் வரும். குழந்தை பாக்யம் கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். அர்த்தாஷ்டமச் சனி இருப்பதால் வேலைச்சுமை அதிகரிக்கும். மற்றவர்களை நம்பி முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம். திடீர் பயணங்களால் திக்கு முக்காடுவீர்கள். வெளிவட்டாரத்தில் கொஞ்சம் அனுசரித்துப் போங்கள். அரசியல்வாதிகள் யாரையும் தாக்கிப் பேச வேண்டாம். கன்னிப் பெண்கள் பெற்றோரின் ஆலோசனையை ஏற்பது நல்லது. தியானம், யோகா செய்வது நல்லது. வெகு நாட்களாக போக வேண்டும் என நினைத்த குலதெய்வக் கோவிலுக்குச் சென்று வருவீர்கள். அக்கம் பக்கம் வீட்டாருடன் அளவாக பழகுங்கள். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். வேலையாட்களின் தொந்தரவுகளை விட்டுப் பிடிப்பது நல்லது. உத்‌தியோகத்தில் பொறுப்புகள் கூடும். கலைத்துறையினர்கள் புதிய திட்டங்கள் தீட்டுவார்கள். எடுத்த வேலையை முடித்துக் காட்டும் வாரமிது. அதி‌ர்ஷ்ட தேதிகள் : 4, 5, 7 அதி‌ர்ஷ்ட எண்கள் : 1, 5 அதி‌ர்ஷ்ட நிறங்கள் : ஆரஞ்சு, கிரே அதி‌ர்ஷ்ட திசை : தெற்கு.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

வார ராசி பலன் - 1 ஆகஸ்டு 2011 முதல் 8 ஆகஸ்டு 2011 வரை! Empty Re: வார ராசி பலன் - 1 ஆகஸ்டு 2011 முதல் 8 ஆகஸ்டு 2011 வரை!

Post by மகி Tue Aug 02, 2011 5:22 pm

கடகம்:

விடாப்பிடியாக செயல்பட்டு தடைபட்ட காரியங்களை தாமதமின்றி முடிக்கும் நீங்கள் எப்போதும் தனிமையையே விரும்புவீர்கள். சுக்ரன் வலுவாக இருப்பதால் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். குடும்பத்தில் சந்தோஷம் ஏற்படும். பிள்ளைகளின் உயர்கல்வி குறித்து ஆலோசனை செய்வீர்கள். உறவினர்கள், நண்பர்களின் ஒத்துழைப்புக் கிடைக்கும். சுக்ரன் சாதகமான வீடுகளில் செல்வதால் பணவரவு உண்டு. நீண்ட நாட்களாக மனதில் இருந்த ஆசை நிறைவேறும். பிரபலங்களுக்கு நெருக்கமாவீர்கள். 12-ல் செவ்வாய் இருப்பதால் அடிவயிற்றில் வலி, பெற்றோருடன் மனத்தாங்கல் வந்துபோகும். சகோதர வழியில் வீண் அலைச்சலும், செலவுகளும் உண்டாகும். கன்னிப் பெண்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுவார்கள். ஆன்மிக பெரியோர்களின் ஆசி கிட்டும். அரசு காரியங்கள் இழுபறியாகும். வேற்றுமதத்தினரின் நட்பு கிடைக்கும். அயல் நாடு செல்ல விசா கிடைக்கும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்‌தியோகத்தில் உங்களின் கடின உழைப்பை பார்த்து மேலதிகாரி கண்டு வியப்பார். கலைத்துறையினர்களுக்கு பழைய நிறுவனங்களிலிருந்து அழைப்பு வரும். தெய்வபலத்தால் முன்னேறும் வாரமிது. அதி‌ர்ஷ்ட தேதிகள் : 3, 2, 6 அதி‌ர்ஷ்ட எண்கள் : 4, 6 அதி‌ர்ஷ்ட நிறங்கள் : பிஸ்தா பச்சை, மஞ்சள் அதி‌ர்ஷ்ட திசை : வடகிழக்கு.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

வார ராசி பலன் - 1 ஆகஸ்டு 2011 முதல் 8 ஆகஸ்டு 2011 வரை! Empty Re: வார ராசி பலன் - 1 ஆகஸ்டு 2011 முதல் 8 ஆகஸ்டு 2011 வரை!

Post by மகி Tue Aug 02, 2011 5:23 pm

சிம்மம்:

அடுத்தவரின் மனம் புண்படும்படி நடந்துக் கொள்ளக் கூடாது என்பதில் கவனமாக இருக்கும் நீங்கள், கலகலப்பாக சிரித்துப் பேசி எதிரியையும் சிரிக்க வைப்பீர்கள். யோகாதிபதி செவ்வாய் லாப வீட்டில் நிற்பதால் உங்கள் செயலின் வேகம் கூடும். புதிதாக சொத்து வாங்குவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். சுக்ரன் சாதகமாக இருப்பதால் மனஉளைச்சல் நீங்கும். பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். மனைவி வழி உறவினர்கள் மதிப்பார்கள். வர வேண்டிய பணம் வந்து சேரும். பழுதான சமையலறை சாதனங்களை மாற்றுவீர்கள். விருந்தினர் வருகை அதிகரிக்கும். ராசிக்கு 12-ல் சுக்ரன் நிற்பதால் வி. ஐ. பிகள் அறிமுகமாவார்கள். வாகனத்தை மாற்றுவீர்கள். அரசியல்வாதிகள் சகாக்களைப் பற்றிக் குறைக் கூற வேண்டாம். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் உண்டு. பங்குதாரர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்பர். உத்‌தியோகத்தில் தலைமையின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். கலைத்துறையினர்களின் எண்ணங்கள் தடைபட்டு முடியும். தன்னடக்கத்துடன் செயல்படும் வாரமிது. அதி‌ர்ஷ்ட தேதிகள் : 2, 4, 6 அதி‌ர்ஷ்ட எண்கள் : 7, 9 அதி‌ர்ஷ்ட நிறங்கள் : சில்வர்கிரே, ப்ரவுன் அதி‌ர்ஷ்ட திசை : வடக்கு.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

வார ராசி பலன் - 1 ஆகஸ்டு 2011 முதல் 8 ஆகஸ்டு 2011 வரை! Empty Re: வார ராசி பலன் - 1 ஆகஸ்டு 2011 முதல் 8 ஆகஸ்டு 2011 வரை!

Post by மகி Tue Aug 02, 2011 5:24 pm

கன்னி:

ஆடம்பரமான வாழ்க்கையை வாழ ஒருபோதும் விரும்பாத நீங்கள், மிகவும் எளிமையாக வாழ ஆசைப்படக் கூடியவர்கள். பிரபலயோகாதிபதியான சுக்ரன் லாப வீட்டில் வலுவாக இருப்பதால் வராமலிருந்த பணம் கைக்கு வரும். எடுத்த காரியத்தில் வெற்றிக் கிட்டும். அரசாங்க விஷயங்களில் இருந்து வந்த தேக்க நிலை மாறும். கணவன்-மனைவிக்குள் இருந்த கசப்புணர்புகள் நீங்கும். பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள். ஆடம்பரச் செலவுகளை தவிர்க்கப்பாருங்கள். உறவினர்கள், நண்பர்களால் ஆதாயம் உண்டு. சொத்துப் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். ஜென்மச் சனி நடந்து கொண்டிருப்பதால் வீண் பழி, விரையச் செலவு, அலைச்சல் வந்து போகும். கன்னிப் பெண்கள் புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். சூரியன் சாதகமாக இருப்பதால் அரசாங்க வேலைகளில் வெற்றியுண்டு, அரசியல்வாதிகள் சகாக்களுக்கு மத்தியில் மதிக்கப்படுவீர்கள். வேற்றுமதத்தவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் புது முதலீடுகளைப் பற்றி யோசிப்பீர்கள். பழைய பங்குதாரர்களை மாற்றுவீர்கள். உத்‌தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். கலைஞர்களுக்கு சம்பள பாக்கி கைக்கு வரும். திடீர் திருப்பங்கள் நிறைந்த வாரமிது. அதி‌ர்ஷ்ட தேதிகள் : 1, 5, 7 அதி‌ர்ஷ்ட எண்கள் : 6, 3 அதி‌ர்ஷ்ட நிறங்கள் : இளஞ்சிவப்பு, ரோஸ் அதி‌ர்ஷ்ட திசை : தென்கிழக்கு.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

வார ராசி பலன் - 1 ஆகஸ்டு 2011 முதல் 8 ஆகஸ்டு 2011 வரை! Empty Re: வார ராசி பலன் - 1 ஆகஸ்டு 2011 முதல் 8 ஆகஸ்டு 2011 வரை!

Post by மகி Tue Aug 02, 2011 5:25 pm

துலாம்:

இன்ப, துன்பங்களை சரிசமமாக பாவித்து வாழும் குணமுடைய நீங்கள், நம்பி வந்தவர்களை ஒருபோதும் கைவிடாது உதவி செய்பவர்கள். சூரியன் 10-ல் நின்று புதனுடன் சேர்ந்திருப்பதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். இழுபறியாக இருந்த எந்த செயலையும் சாமர்த்தியத்துடன் பேசி முடிப்பீர்கள். ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். மனக்குழப்பம் நீங்கி தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். தாய்வழி உறவினர்கள் ஒத்துழைப்பார்கள். கன்னிப் பெண்களுக்கு பெற்றோரின் ஆதரவுக் கிட்டும். பூர்வீக சொத்து கைக்கு வரும். அம்மாவின் உடல் நலம் சீராகும். ஷேர் மூலம் லாபம் கிடைக்கும். சுக்ரன் சாதகமான நட்சத்திரத்தில் செல்வதால் கௌரவம், செல்வாக்கு உயரும். அரசு காரியங்களில் வெற்றியுண்டு. வெளியூர் பயணங்கள் திருப்திகரமாக அமையும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்‌தியோகத்தில் மேலதிகாரி உங்களை கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பார். கலைத்துறையினர்களின் திறமைகள் வெளிப்படும். திட சிந்தனையால் வெல்லும் வாரமிது. அதி‌ர்ஷ்ட தேதிகள் : 2, 3, 7 அதி‌ர்ஷ்ட எண்கள் : 2, 3 அதி‌ர்ஷ்ட நிறங்கள் : ஊதா, க்ரீம் வெள்ளை அதி‌ர்ஷ்ட திசை : வடமேற்கு.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

வார ராசி பலன் - 1 ஆகஸ்டு 2011 முதல் 8 ஆகஸ்டு 2011 வரை! Empty Re: வார ராசி பலன் - 1 ஆகஸ்டு 2011 முதல் 8 ஆகஸ்டு 2011 வரை!

Post by மகி Tue Aug 02, 2011 5:26 pm

விருச்சிகம்:

ஈரமான மனசும், இனிமையான பேச்சால் எதிரியையும் நண்பராக்கிக் கொள்ளும் குணமும் உடைய நீங்கள், கடலளவு அன்புக் கொண்டவர்கள். புதன் சாதகமாக இருப்பதால் சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். புது முயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். கணவன்-மனைவிக்குள் பாசம் அதிகரிக்கும். பிள்ளைகள் விரும்பியதை வாங்கிக் கொடுத்து மகிழ்வீர்கள். உறவினர்களின் வருகையால் வீட்டில் கலகலபாக காணப்படுவீர்கள். சூரியன் சரியில்லாததால் தந்தையாருக்கு உடல்நலம் பாதிக்கும். அரசு காரியங்களில் அலட்சியம் வேண்டாம். பழைய தவறுகளைத் திருத்திக் கொள்ளப்பாருங்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பீர்கள். கன்னிப் பெண்களுக்கு ஆன்மீக ஆர்வம் அதிகரிக்கும். அரசியல்வாதிகள் தலைமையிடம் நல்ல பெயரெடுப்பார்கள். சொத்துப் பிரச்னைக்கு சுமுக தீர்வு காண்பீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். வியாபாரத்தில் வேலையாட்களால் விரையம் வரும். உத்‌தியோகத்தில் உங்கள் கடின உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். கலைஞர்களின் கற்பனைத்திறனுக்கு பாராட்டுகள் குவியும். தோல்விகளை சமாளிக்கும் வாரமிது. அதி‌ர்ஷ்ட தேதிகள் : 2, 3, 4 அதி‌ர்ஷ்ட எண்கள் : 1, 6 அதி‌ர்ஷ்ட நிறங்கள் : அடர்நீலம், பிங்க் அதி‌ர்ஷ்ட திசை : மேற்கு.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

வார ராசி பலன் - 1 ஆகஸ்டு 2011 முதல் 8 ஆகஸ்டு 2011 வரை! Empty Re: வார ராசி பலன் - 1 ஆகஸ்டு 2011 முதல் 8 ஆகஸ்டு 2011 வரை!

Post by மகி Tue Aug 02, 2011 5:26 pm

தனுசு:

உற்றார், உறவினர்களுடன் நல்லுறவை வளர்த்துக் கொள்ளும் குணமுடைய நீங்கள், வெள்ளையுள்ளமும், வெளிப்படையான பேச்சும் உடையவர்கள். உங்கள் ராசிநாதன் குரு சாதகமாக இருப்பதால் பக்குவமாக பேசி பல காரியங்களை முடிப்பீர்கள். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். சொந்த பந்தங்களின் விசேஷங்களில் கலந்துக் கொண்டு மகிழ்ச்சியடைவீர்கள். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். வீட்டை அலங்கரிப்பீர்கள். நவீன ரக ஆடியோ, வீடியோ சாதனங்கள் வாங்குவீர்கள். உறவினர்கள் வலிய வந்து உறவாடுவார்கள். 8-ல் சூரியன் இருப்பதால் வீடு, மனை வாங்குவது, விற்பதில் வில்லங்கம் வந்து விலகும். வாகனச் செலவுகள் நீங்கும். உடன்பிறந்தவர்களுடன் விவாதம் வேண்டாம். அரசால் அனுகூலம் உண்டு. கன்னிப் பெண்கள் உற்சாகத்துடன் காணப்படுவார்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்‌தியோகத்தில் மற்றவர்களை நம்பாமல் தானே வேலையை முடிப்பது நல்லது. மேலதிகாரியிடம் இருந்து வந்து கசப்புணர்வுகள் நீங்கும். கலைஞர்கள் பரபரப்புடன் காணப்படுவீர்கள். மன உறுதியுடன் சாதிக்கும் வாரமிது. அதி‌ர்ஷ்ட தேதிகள் : 4, 5, 6 அதி‌ர்ஷ்ட எண்கள் : 2, 9 அதி‌ர்ஷ்ட நிறங்கள் : மயில்நீலம், கிரே அதி‌ர்ஷ்ட திசை : தெற்கு.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

வார ராசி பலன் - 1 ஆகஸ்டு 2011 முதல் 8 ஆகஸ்டு 2011 வரை! Empty Re: வார ராசி பலன் - 1 ஆகஸ்டு 2011 முதல் 8 ஆகஸ்டு 2011 வரை!

Post by மகி Tue Aug 02, 2011 5:27 pm

மகரம்:

ஏழை எளியோரிடமும் இனிமையாகப் பேசும் சுபாவமும், தேனீக்களைப் போல சுறுசுறுப்பும் கொண்ட நீங்கள், எல்லோருக்கும் நல்லதே நினைப்பவர்கள். சுக்ரன் சாதகமாக இருப்பதால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பணவரவு திருப்தி தரும். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். உறவினர்கள் மதிப்பார்கள். நட்பால் ஆதாயம் உண்டு. மகனுக்கு நல்ல வேலை அமையும். பழுதான டிவி, ப்ரிட்ஜை மாற்றுவீர்கள். செவ்வாய் 6-ல் நிற்பதால் பூர்வீகச் சொத்துப் பிரச்சனைகள் தீரும். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் இருந்த அதிருப்தி விலகும். தாயாருடனான கருத்து மோதல்கள் வந்து விலகும். கன்னிப் பெண்களின் அழகு, இளமைக் கூடும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் குறையும். 1, 2, 3-ந் தேதி காலை 9 மணி வரை சந்திராஷ்டமம் நடப்பதால் எச்சரிக்கையுடன் செயல்படப்பாருங்கள். அரசியல்வாதிகளுக்கு போட்டிகள் அதிகரிக்கும். வழக்கில் நிதானம் அவசியம். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்‌தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தொலை நோக்குச் சிந்தனையால் சாதிக்கும் வாரமிது. அதி‌ர்ஷ்ட தேதிகள் : 5, 6, 7 அதி‌ர்ஷ்ட எண்கள் : 4, 7 அதி‌ர்ஷ்ட நிறங்கள் : ஆலிவ்பச்சை, வெள்ளை அதி‌ர்ஷ்ட திசை : கிழக்கு.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

வார ராசி பலன் - 1 ஆகஸ்டு 2011 முதல் 8 ஆகஸ்டு 2011 வரை! Empty Re: வார ராசி பலன் - 1 ஆகஸ்டு 2011 முதல் 8 ஆகஸ்டு 2011 வரை!

Post by மகி Tue Aug 02, 2011 5:28 pm

கும்பம்:

ஒற்றுமையுணர்வும், ஒருமித்த மனப்பாங்கும் கொண்ட நீங்கள், உதவி கேட்டு வந்தவர்களுக்கு உதவி செய்ய ஒரு போதும் தயங்க மாட்டீர்கள். சூரியன் வலுவாக இருப்பதால் சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். வீடு, மனை வாங்குவீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். குடும்பத்தில் நிம்மதி உண்டு. பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். நல்ல நண்பர்களின் ஆலோசனைகள் கிடைக்கும். உறவினர்கள் வழியில் நன்மை உண்டாகும். சுபச் செலவுகள் வந்து போகும். கன்னிப் பெண்களுக்கு தூக்கமின்மை, கனவுத் தொல்லை வந்து மறையும். 3-ந் தேதி காலை 9 மணி முதல் 4, 5-ந் தேதி நண்பகல் வரை சந்திராஷ்டமம் நடப்பதால் யாரையும் நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். 5-ல் செவ்வாய் நிற்பதால் தாயாரின் உடல்நிலை சீராகும். ஆனால் பிள்ளைகளால் பிரச்சனைகள், அவமானங்கள் வரக்கூடும். கர்ப்பிணிப் பெண்கள் கவனமாக இருப்பது நல்லது. வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். வேலையாட்களை அனுசரித்துப் போங்கள். உத்‌தியோகத்தில் சக ஊழியர்களால் ஒதுக்கப்பட்டாலும் அதிகாரிகளால் மதிக்கப்படுவீர்கள். கலைத்துறையினர்களுக்கு மூத்த கலைஞர்களின் உதவி கிட்டும். பொறுப்புகள் அதிகரிக்கும் வாரமிது. அதி‌ர்ஷ்ட தேதிகள் : 1, 2, 7 அதி‌ர்ஷ்ட எண்கள் : 1, 3 அதி‌ர்ஷ்ட நிறங்கள் : ஊதா, ஆரஞ்சு அதி‌ர்ஷ்ட திசை : வடமேற்கு.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

வார ராசி பலன் - 1 ஆகஸ்டு 2011 முதல் 8 ஆகஸ்டு 2011 வரை! Empty Re: வார ராசி பலன் - 1 ஆகஸ்டு 2011 முதல் 8 ஆகஸ்டு 2011 வரை!

Post by மகி Tue Aug 02, 2011 5:28 pm

மீனம்:

கலங்காத மனதுடன் வருங்காலத்தை கருத்தில் கொண்டு புதிய திட்டங்கள் தீட்டும் தொலைநோக்குச் சிந்தனையாளர்கள் நீங்கள் தான். செவ்வாய் 4-ல் நிற்பதால் சாதுர்யமான பேச்சால் சாதிப்பீர்கள். வீடு கட்ட லோன் கிடைக்கும். தடைபட்ட காரியங்களை விரைந்து முடிப்பீர்கள். பிரபலங்கள் உதவுவார்கள். கணவன்-மனைவியிடையே சுமுகமான நிலை உருவாகும். பிள்ளைகளிடம் அதிக பாசம் செலுத்துவீர்கள். மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்தி முடிக்க வேண்டிமென எண்ணுவீர்கள். நண்பர்கள் பழைய பகையை மறந்து நட்பாவார்கள். சொத்து வழக்கை நிதானமாக கையாளப்பாருங்கள். 5-ல் சூரியன் இருப்பதால் சில நேரங்களில் மன அமைதியற்ற நிலை ஏற்படும். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். 5-ந் தேதி நண்பகல் முதல் 6, 7-ந் தேதி மதியம் 2 மணி வரை சந்திராஷ்டமம் நடப்பதால் புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். வீண் அலைச்சல் ஏற்படும். வியாபார ரீதியாக பெரிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்வீர்கள். பழைய பாக்கிகளை நிதானமாக பேசி வசூலிப்பது நல்லது. உத்‌தியோகத்தில் அதிகாரிகளின் அந்தரங்க விஷயங்களை வெளியில் சொல்ல வேண்டாம். கலைஞர்கள் சிந்தித்து செயல்படுவது நல்லது. சகிப்புத் தன்மை தேவைப்படும் வாரமிது. அதி‌ர்ஷ்ட தேதிகள் : 1, 2, 3 அதி‌ர்ஷ்ட எண்கள் : 3, 9 அதி‌ர்ஷ்ட நிறங்கள் : கிரே, ப்ரவுன் அதி‌ர்ஷ்ட திசை : தென்கிழக்கு.

நன்றி: வெப்துனியா.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

வார ராசி பலன் - 1 ஆகஸ்டு 2011 முதல் 8 ஆகஸ்டு 2011 வரை! Empty Re: வார ராசி பலன் - 1 ஆகஸ்டு 2011 முதல் 8 ஆகஸ்டு 2011 வரை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum