தமிழ் | Tamil | Forum
தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

கூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.

புகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.

Join the forum, it's quick and easy

தமிழ் | Tamil | Forum
தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

கூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.

புகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.
தமிழ் | Tamil | Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வணக்கம் என் பெயர் நாகராசன்.இரா
by rajan_1972 Fri Apr 10, 2020 7:20 pm

» சிறந்த பொழுதுபோக்கு இணையதளம்!
by pba Sat Jul 02, 2016 8:11 pm

» ஏற்றுமதி உரிமம் பெறும் விண்ணப்பம்
by tamilnews Tue Mar 24, 2015 8:00 pm

» மொபைல், டிடிஎச் ரீசார்ஜ் செய்யப் போறீங்களா? இந்த சலுகைகளைப் பாருங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:41 am

» மொபைல் ரீசார்ஜ் செய்து ஷாப்பிங் கூப்பன் இலவசமாக பெறுங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:38 am

» மெமரி கார்டு வாங்கப் போறீங்களா? 74% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:36 am

» அமேசானில் பெண்களுக்கான ஆடைகள் 70% வரை தள்ளுபடி !
by dsytamil Wed Jan 14, 2015 1:34 am

» அமேசானில் ஆண்களுக்கான ஆடைகள் 60% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:31 am

» லெனோவா டேப்ளட் 43% சலுகை விலையில் ரூ. 5949 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:28 am

» ப்ளிப்கார்ட் தளத்தில் சிறுவர்களுக்கான ஆடைகள் 70% வரை + 30% கூடுதல் தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:14 am

» அமேசான் தளத்தில் 50% தள்ளுபடி விலையில் மொபைல்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:13 am

» ரூ. 7499 மதிப்புள்ள மைக்ரோமேக்ஸ் ஏ1 ஆன்ட்ராய்டு மொபைல் இப்போது ரூ. 5499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:11 am

» ரூ. 19999 மதிப்புள்ள நோக்கியா லூமியா 625 மொபைல் ரூ. 7499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:10 am

» ப்ராண்டட் காலணிகளுக்கு 70% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:08 am

» ஆன்லைன் ஷாப்பிங்கில் ப்ரிண்டர்களுக்கு 33% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:06 am

» ஆன்லைனில் பொருள் வாங்கப் போறீங்களா? 70% வரை பணத்தை சேமியுங்கள்!
by dsytamil Tue Jan 13, 2015 12:30 am

» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...!
by sathikdm Sun Oct 19, 2014 4:45 pm

» சிறுதொழில் செய்பவர்கள் இணையதளம் தொடங்க வேண்டியதின் அவசியம்!
by pba Sat Sep 27, 2014 12:58 am

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:47 pm

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:42 pm

» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
by santhoshpart Wed Aug 27, 2014 4:22 pm

» “சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா!”
by santhoshpart Wed Aug 13, 2014 3:54 pm

» Daily Rs.500/- and Above
by K.MARIAPPAN Wed Jul 30, 2014 12:01 pm

» http://www.neobux.com/?r=narasimmant
by Navaneethakrishnan Wed Jul 02, 2014 3:41 pm

» வணக்கம் என் பெயர் வேணு
by A.Venu Fri Jun 27, 2014 10:10 am

» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?
by sathikdm Wed Jun 18, 2014 3:24 pm

» தமிழ் மொழி மூல கல்வி இணையதளம்
by afdhaal Wed May 28, 2014 9:22 pm

» வருக. வருக. வணக்கம்.
by மகி Mon May 12, 2014 3:55 pm

» அறிமுகம் -விநாயகா செந்தில்.
by மகி Mon May 12, 2014 3:53 pm

» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....!
by vinayagasenthil Sat May 10, 2014 9:04 pm

பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

பென்னாகரத்தில் இன்று ஸ்டாலின், ஜெ., பிரசாரம்:அளவுக்கதிகமான கட்சிக் கொடிகள் அகற்றப்பட்டன

Go down

பென்னாகரத்தில் இன்று ஸ்டாலின், ஜெ., பிரசாரம்:அளவுக்கதிகமான கட்சிக் கொடிகள் அகற்றப்பட்டன Empty பென்னாகரத்தில் இன்று ஸ்டாலின், ஜெ., பிரசாரம்:அளவுக்கதிகமான கட்சிக் கொடிகள் அகற்றப்பட்டன

Post by aarul Mon Mar 22, 2010 8:34 am

[You must be registered and logged in to see this image.]



பென்னாகரம்
தொகுதியில் இன்று, துணை முதல்வர் ஸ்டாலின், அ.தி.மு.க., பொதுச் செயலர்
ஜெயலலிதா, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், ஆகியோர் பிரசாரம்
செய்கின்றனர். தேர்தல் நாள் நெருங்கியதாலும், பிரசாரம் தீவிரமானதாலும்
எங்கு பார்த்தாலும் வாகனங்களாக உள்ளன.



தேர்தல் கமிஷன் உத்தரவுப்படி அதிக அளவில்
கட்டியிருந்த கட்சிக் கொடிகள் பல இடங்களில் அகற்றப்பட்டன.பென்னாகரம்
தொகுதிக்கான இடைத்தேர்தலில் அரசியல் கட்சிகளின் முக்கியத் தலைவர்கள்
பிரசாரத்தால், தேர்தல் களத்தில் விறுவிறுப்பும், பரபரப்பும்
ஏற்பட்டுள்ளது. துணை முதல்வர் ஸ்டாலின் இன்று சென்னையில் இருந்து காரில்,
கிருஷ்ணகிரி தமிழ்நாடு ஓட்டலுக்கு வருகிறார். அங்கு மதிய உணவுக்கு பின்
ஓய்வு எடுத்துக் கொண்டு, கார் மூலம் புறப்பட்டு மாலை 4 மணிக்கு தர்மபுரி
வந்து குரும்பட்டியில் பிரசாரத்தை துவங்கி, 9.30 மணிக்கு இண்டூரில்
முடிக்கிறார்.அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா சென்னையில் இருந்து
மதியம் விமானம் மூலம் சேலம் வருகிறார். அங்கு சிறிது நேரம் ஓய்வுக்கு
பின், அங்கிருந்து கார் மூலம் புறப்பட்டு மாலை 5.30 மணிக்கு குரும்பட்டி
கூட்டு ரோட்டில் பிரசாரத்தை துவங்கி இரவு 8.45 மணிக்கு பாப்பாரப்பட்டியில்
பிரசாரத்தை முடிக்கிறார்.



இத் தொகுதியில் மொத்தம் 17 இடங்களில் அவர்
பிரசாரம் செய்வார் என்றும், அதற்கான இடங்கள் குறித்தும்
அ.தி.மு.க.,வினருக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது.விஜயகாந்த் நேற்று முதல்
பிரசாரத்தை துவக்கினாலும் இன்று இரவு சாமிசெட்டிப்பட்டியில் பிரசாரத்தை
முடிக்கிறார். தே.மு.தி.க., வேட்பாளரை ஆதரித்து பிரேமலதாவும் தொகுதியில்
பிரசாரம் செய்கிறார்.



கொடிகள் அகற்றம்: தலைவர்கள்
பிரசாரத்தால் தொகுதி முழுவதும் எங்கு திரும்பினாலும் அரசியல் கட்சிக்
கொடிகள், தோரணங்கள் என பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் கமிஷன்
விதிமுறைப்படி ஒரு பாயின்டில் 20 கொடிகள் மட்டுமே கட்ட அனுமதி என்பதால்,
நேற்று பல இடங்களில் தேர்தல் கமிஷனால் நியமிக்கப்பட்ட வீடியோ கிராபர்கள்,
வீடியோ எடுத்தனர். உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ராமதுரை முருகன் மூலம்
குரும்பட்டி, சாமிசெட்டிப் பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் அளவுக்கு
அதிகமாக இருந்த கொடிகள், தோரணங்களை அகற்றிட கட்சியினருக்கு நேற்று
அறிவுறுத்தினார்.ஒரே நாளில் அனைத்து கட்சியிலும் முக்கியத் தலைவர்கள் பல
கிராமங்களில் அடுத்தடுத்து பிரசாரத்தில் ஈடுபடுவதால், பென்னாகரம் தொகுதி
முழுவதும் மிகுந்த பரபரப்புடனும், எங்கு திரும்பினாலும் பிரசாரம்
அமர்க்களமாக நடந்தது.



தொகுதியில் அரசியல் கட்சியினர் வாகனங்கள்
அங்கும், இங்கும் படையெடுத்ததால் போக்குவரத்து நெரிசல்
ஏற்பட்டது.தலைவர்கள் பிரசாரம் செய்யும் இடங்களில் சிறப்பு அதிரடிப்படை
போலீசார் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்புப் பிரிவு போலீசார் ஆகியோர்
பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். சில இடங்களில் ஸ்டாலின்,
ஜெயலலிதா, விஜயகாந்த் ஆகியோர் முன்னும், பின்னும் பிரசாரம் செய்யும்
வகையில் இருப்பதால், அந்த பகுதியில் கூடுதல் பாதுகாப்புக்கு ஏற்பாடுகள்
செய்யப்பட்டுள்ளன.



அனுமதி தேவைதேர்தல் பணிக்கு வசதியாக அனைத்து
கட்சிகள் சார்பில் தேர்தல் அலுவலகங்கள் சின்ன கிராமத்தில் கூட திறக்கப்
பட்டுள்ளன. எதிரும், புதிருமாகவும், அடுத்தடுத்து இவை
திறக்கப்பட்டுள்ளன.தேர்தல் அலுவலகம் திறக்க தேர்தல் கமிஷனில் முன்அனுமதி
பெற வேண்டும் எனவும், அரசு கட்டடங்கள், புறம் போக்கு நிலங்களில் தேர்தல்
அலுவலகங்கள் வைக்க முன்அனுமதி பெற வேண்டும் என அனைத்து கட்சியினருக்கும்
தேர்தல் கமிஷன் வேண்டுகோள் விடுத்தது. அனுமதி பெற நேற்று கடைசி நாள்.



இது குறித்து தேர்தல் அலுவலர் மகேஸ்வரி வெளியிட்ட அறிக்கை:பென்னாகரம்
தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் அமைக்கப் பட்டுள்ள கட்சி அலுவலகங்கள்
முறையாக அனுமதி பெற்று அமைக்கப்பட்டுள்ளதா? என் பது குறித்து வருவாய்த்
துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.முன்அனுமதி பெறாமல் உள்ள கட்சி
அலுவலகங்கள் அமைக்கப்பட்டிருந்தால், சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக கட்சி
அலுவலங்களை அப்புறப்படுத்த வேண்டும்.அப்புறப்படுத்த தவறும் பட்சத்தில்
மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அகற்றப்பட்டு, அதற்கான செலவுத்தொகை
வேட்பாளர்களின் கணக்கில் சேர்க்கப்படும்.இவ்வாறு அறிக்கையில்
கூறப்பட்டுள்ளது.



கனிமொழி எம்.பி., பிரசாரம் ரத்து :
பென்னாகரம் தொகுதியில் நேற்றும் (21ம் தேதி), இன்றும் கனிமொழி
எம்.பி.,யின் பிரசாரத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவரது தாயின்
உடல்நலக் குறைவு காரணமாக, அவரது பிரசாரப் பயணம் ரத்து செய்யப்
பட்டுள்ளது.முதல்வர் கருணாநிதி நாளை மறுதினம் பங்கேற்கும் பொதுக்
கூட்டத்தில் கனிமொழி எம்.பி., பங்கேற்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.



பயங்கர போட்டி : துணை
முதல்வர் ஸ்டாலின், தினம் 21 கிராமங்களில் பிரசாரம் அமையும் வகையில்
மூன்று நாட்களில் 63 கிராமங்களில் பிரசாரத்துக்கு ஏற்பாடு செய்யப்
பட்டுள்ளது. அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா பிரசாரம் செய்யும் 17
ஊர்களிலும், ஸ்டாலின் பிரசாரத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.ஒவ்வொரு
ஊரிலும் ஐந்து முதல் எட்டு நிமிடம் வரையில் பிரசார பேச்சுக் கள் இருக்கும்
வகையில் ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன.
aarul
aarul
தள ஆலோசகர்
தள ஆலோசகர்

பதிவுகள் : 421
புள்ளிகள் : 793
Reputation : 12
சேர்ந்தது : 20/12/2009
வசிப்பிடம் : mani electronics,erode, tamilnadu,india

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum