தமிழ் | Tamil | News | Entertainment
தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

கூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.

புகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.
விளம்பரம்!
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
Latest topics
» ரசிக்கிறேன்(ushamuthu)
by pushpalakshmi91 Fri May 18, 2012 4:52 pm

» தோழன் (MUTHU)
by pushpalakshmi91 Fri May 18, 2012 4:47 pm

» குழந்தை (MUTHU)
by pushpalakshmi91 Fri May 18, 2012 4:36 pm

» தனிமை (ushamuthu)
by ushamuthu Thu May 17, 2012 10:08 pm

» விருப்பம்(ushamuthu)
by ushamuthu Thu May 17, 2012 9:05 pm

» காதல்(ushamuthu)
by ushamuthu Thu May 17, 2012 9:05 pm

» ''கோமா' (ushamuthu)
by ushamuthu Thu May 17, 2012 9:04 pm

» பார்வை( ushamuthu)
by ushamuthu Mon May 14, 2012 8:13 pm

» ஜாதி வெறி(ushamuthu)
by ushamuthu Mon May 14, 2012 8:12 pm

» ஐம்புலங்கள் (ushamuthu)
by ushamuthu Mon May 14, 2012 8:12 pm

» கருவிழி(ushamuthu)
by ushamuthu Sat May 12, 2012 8:28 pm

» பிரிவு(ushamuthu)
by ushamuthu Sat May 12, 2012 8:27 pm

» what kind of business i can start
by karan Sat May 12, 2012 7:11 am

» வானவில்(ushamuthu)
by pushpalakshmi91 Fri May 11, 2012 3:57 pm

» கோபம் (ushamuthu)
by ushamuthu Thu May 10, 2012 9:28 pm

» இமை(ushamuthu)
by ushamuthu Tue May 08, 2012 3:06 pm

» உறக்கம்(ushamuthu)
by ushamuthu Tue May 08, 2012 3:05 pm

» லீப் வருடம்
by sundar1990 Tue May 08, 2012 10:28 am

» ஸ்ரீருத்ரம் சிவவழிபாடு அல்ல! (பகுதி-2)
by சாமி Sun May 06, 2012 6:41 pm

» ஆகமம் – தமிழ் முனிவர்கள் மூலம் இறைவனால் வெளிப்படுத்தப்பட்டது
by சாமி Sun May 06, 2012 6:37 pm

» ஸ்ரீருத்ரம் சிவவழிபாடு அல்ல! (பகுதி-1)
by சாமி Sun May 06, 2012 6:35 pm

Tamil 10 top sites [www.tamil10 .com ] My Topsites List

வேலைக்கு போகும் நெருப்பு நிமிடங்களில் அன்னை ஒருத்தி பாடும் அவசர தாலாட்டு இது.

View previous topic View next topic Go down

வேலைக்கு போகும் நெருப்பு நிமிடங்களில் அன்னை ஒருத்தி பாடும் அவசர தாலாட்டு இது.

Post by thanagopal on Mon Dec 12, 2011 1:17 pm

வேலைக்கு போகும் நெருப்பு நிமிடங்களில் அன்னை ஒருத்தி பாடும் அவசர தாலாட்டு இது.

சோலைக்கு பிறந்தவளே!
சுத்தமுள்ள தாமரையே!
வேலைக்கு போகின்றேன் - வெண்ணிலவே கண்ணுறங்கு!

அலுவலகம் விட்டு -
அம்மா வரும் வரைக்கும் -
கேசட்டில் தாலாட்டு - கேட்டபடி கண்ணுறங்கு!

ஒரு மணிக்கு ஒரு பாடல்
ஒளிபரப்பும் வானொலியில்
விளம்பரங்கள் மத்தியில் - விழி சாத்தி நீயுறங்கு!

9 மணி ஆனால் உன் அப்பா சொந்தமில்லை -
9:30 மணி ஆனால் உன் அம்மா சொந்தமில்லை -
ஆயவும் தொலைக்காட்சியும் அசதியில் தூங்கிவிட்டால் -
தூக்கத்தை தவிர துணைக்கு வர யாருமில்லை!

20-ம் நூற்றாண்டில் என் கருவில் வந்தவளே!
இது தான் கதியென்று - இன்னமுதே கண்ணுறங்கு!

தூரத்தில் இருந்தாலும் தூயவளே -
உன் தொட்டில் ஓரத்தில் -
என் நினைவு - ஓடிவரும் கண்ணுறங்கு!

பேருந்தில் நசுங்கி, பிதுங்கி போகிற வேளையிலும்
எடை கொஞ்சம் இழந்து இறங்குகின்ற வேளையிலும்
பூப்பூவாய் உனது புகம் புறப்பட்டு வரும் கண்ணே!

தந்தை வந்து கொஞ்சுவதாய் -
தங்க மடியில் தூங்குவதாய் -
கண்ணனே கண்மணியே - கனவு கண்டு - நீயுறங்கு!

புட்டிபால் குறையவில்லை -
பொம்மைக்கும் பஞ்சமில்லை -
தாய்ப்பாலும் தாயும் இன்றி -
தங்க மகனுக்கு என்ன குறை?

மாலையிலே ஓடி வந்து
மல்லிகையே உன்னை அணைத்தால்
சுரக்காத மார்பும் சுரக்குமடி- கண்ணுறங்கு!

தாலாட்டு பாட்டில் தளிரே - நீ
தூங்கிவிட்டால கோலாட்டம் ஆட
கொண்டவனுக்கும் ஆசை வரும்!

உறவுக்கு தடையாக
'ஒ' என்று அலறாமல் -
இரவ்க்கும் மிச்சம் வைத்து
இப்போது - நீ உறங்கு!

தாயென்று காட்டுவதற்கும்
தாவி எடுப்பதற்கும்
ஞாயிற்றுகிழமை வரும் - நல்லவளே கண்ணுறங்கு!


அலுவலகம் செல்லும் ஒரு பெண்ணின் அவசர தாலாட்டு தான் கவியரசு வைரமுத்து சொல்லும் இந்த கவிதை.

thanagopal
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 701
புள்ளிகள்: 1390
Reputation: 1
சேர்ந்தது: 22/04/2011

Back to top Go down

Re: வேலைக்கு போகும் நெருப்பு நிமிடங்களில் அன்னை ஒருத்தி பாடும் அவசர தாலாட்டு இது.

Post by pushpalakshmi91 on Tue Dec 13, 2011 12:47 pm

thanks for you sharing anna

pushpalakshmi91
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 680
புள்ளிகள்: 695
Reputation: 10
சேர்ந்தது: 13/08/2011
வசிப்பிடம்: thoothukudi

Back to top Go down

Re: வேலைக்கு போகும் நெருப்பு நிமிடங்களில் அன்னை ஒருத்தி பாடும் அவசர தாலாட்டு இது.

Post by thanagopal on Tue Dec 13, 2011 1:12 pm

உயிர் கொடுத்த
ஜீவன் ஒன்று
உயிர் துறந்து
போனதனால்
உயிருள்ள ஜீவன்
ஒன்று
உயிரற்று துடிக்கிறது....

கருவறையில் சுமந்தவளோ
கல்லறைக்கு போனதனால்
கண்ணீரில் குளித்து குடித்து
கரித்த உப்பாய்
கிடக்குறேனே...

ஈ எறும்பு அண்டாமல்
பொத்தி பொத்தி
வளர்த்தவளோ
போன இடம் தெரியலையே
பொழுதிரங்கி போயிடுச்சே...

மாராப்பு
சேலைக்குள்ளே
மறைச்சு வச்சி
பால் கொடுத்த
மகமாயி எங்கிருக்க?
மகனோட நெனப்பிருக்கா?...

தாலாட்டி
தூங்க வச்ச
தாயே நீ
எங்க இருக்க? என்
ஒப்பாரி சத்தம் கேட்டு
ஓடோடி வந்திடம்மா...

பொல்லாத
காலம் வந்து
சொல்லாமல் போனவளே
நீ
இல்லாத வாழ்வெனக்கு
நரகம்தான்
எதற்கெனக்கு?....

எப்பொழுதும்
எனக்குத்துணை
நீ என்று சொன்னவளே!
துணை என்னை விட்டுவிட்டு
தனியாக போகலாமா?...


பாலூட்டி
சோறூட்டி
பக்குவமாய் வளர்த்துவிட்டு
பாவி என்னை விட்டுவிட்டு
பாவிமக போனதெங்கே?...

சேலையிலே
தொட்டில் கட்டி
சீனிகட்டி கட்டி முத்தமிட்டு
சாலையிலே விட்டுவிட்டு
சண்டாளி போனதெங்கே?....

மார்போடு
உறங்க வைத்து
மடியினிலே
தவழ விட்டு
மட்டட்ற மகிழ்சியிலே
மல்லிகையாய் வாழ்ந்தவளே!
மகன் என்னை விட்டுவிட்டு
மரணத்தோடு
போனது ஏன்?...

இளம் சிறகு
முற்றும் முன்பே
ஓடிந்ததம்மா சிறகிரண்டும்
எப்படி நான் பறந்து செல்ல?
யார் மரத்தில் கூடு கட்ட?...

உயிர் கொடுத்த
ஜீவன் ஒன்று
உயிர் துறந்து
போனதனால்
உயிருள்ள ஜீவன்
ஒன்று
உயிரற்று துடிக்கிறது...!!!



(2009 ல் ஈழத் தமிழர் பகுதியான மட்டகளப்பில் தாய் தந்தையை இழந்து தனிமரமாய் நின்ற சிறுவன் தவராசா-விற்க்காக எழுதியது)


இப்போ எனக்கு சாதகமா எழுதியது போல இருக்கு.. நன்றி !


ஏன்ம்மா என்ன விட்டுட்டு போய்ட்ட

இன்று எங்க அம்மாவின் நினைவு நாள்

thanagopal
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 701
புள்ளிகள்: 1390
Reputation: 1
சேர்ந்தது: 22/04/2011

Back to top Go down

Re: வேலைக்கு போகும் நெருப்பு நிமிடங்களில் அன்னை ஒருத்தி பாடும் அவசர தாலாட்டு இது.

Post by pushpalakshmi91 on Wed Feb 08, 2012 3:53 pm

அம்மா எப்போதும் உங்க கூடவை இருப்பாங்க அண்ணா






pushpalakshmi91
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 680
புள்ளிகள்: 695
Reputation: 10
சேர்ந்தது: 13/08/2011
வசிப்பிடம்: thoothukudi

Back to top Go down

Re: வேலைக்கு போகும் நெருப்பு நிமிடங்களில் அன்னை ஒருத்தி பாடும் அவசர தாலாட்டு இது.

Post by thanagopal on Fri Feb 10, 2012 9:10 am

நன்றி சிஸ்டர் !

thanagopal
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 701
புள்ளிகள்: 1390
Reputation: 1
சேர்ந்தது: 22/04/2011

Back to top Go down

Re: வேலைக்கு போகும் நெருப்பு நிமிடங்களில் அன்னை ஒருத்தி பாடும் அவசர தாலாட்டு இது.

Post by pushpalakshmi91 on Mon Feb 13, 2012 2:51 pm

[You must be registered and logged in to see this image.]

pushpalakshmi91
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 680
புள்ளிகள்: 695
Reputation: 10
சேர்ந்தது: 13/08/2011
வசிப்பிடம்: thoothukudi

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum