தமிழ் | Tamil | Forum
தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

கூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.

புகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.
Latest topics
» சிறந்த பொழுதுபோக்கு இணையதளம்!
by pba Sat Jul 02, 2016 8:11 pm

» ஏற்றுமதி உரிமம் பெறும் விண்ணப்பம்
by tamilnews Tue Mar 24, 2015 8:00 pm

» மொபைல், டிடிஎச் ரீசார்ஜ் செய்யப் போறீங்களா? இந்த சலுகைகளைப் பாருங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:41 am

» மொபைல் ரீசார்ஜ் செய்து ஷாப்பிங் கூப்பன் இலவசமாக பெறுங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:38 am

» மெமரி கார்டு வாங்கப் போறீங்களா? 74% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:36 am

» அமேசானில் பெண்களுக்கான ஆடைகள் 70% வரை தள்ளுபடி !
by dsytamil Wed Jan 14, 2015 1:34 am

» அமேசானில் ஆண்களுக்கான ஆடைகள் 60% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:31 am

» லெனோவா டேப்ளட் 43% சலுகை விலையில் ரூ. 5949 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:28 am

» ப்ளிப்கார்ட் தளத்தில் சிறுவர்களுக்கான ஆடைகள் 70% வரை + 30% கூடுதல் தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:14 am

» அமேசான் தளத்தில் 50% தள்ளுபடி விலையில் மொபைல்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:13 am

» ரூ. 7499 மதிப்புள்ள மைக்ரோமேக்ஸ் ஏ1 ஆன்ட்ராய்டு மொபைல் இப்போது ரூ. 5499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:11 am

» ரூ. 19999 மதிப்புள்ள நோக்கியா லூமியா 625 மொபைல் ரூ. 7499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:10 am

» ப்ராண்டட் காலணிகளுக்கு 70% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:08 am

» ஆன்லைன் ஷாப்பிங்கில் ப்ரிண்டர்களுக்கு 33% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:06 am

» ஆன்லைனில் பொருள் வாங்கப் போறீங்களா? 70% வரை பணத்தை சேமியுங்கள்!
by dsytamil Tue Jan 13, 2015 12:30 am

» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...!
by sathikdm Sun Oct 19, 2014 4:45 pm

» சிறுதொழில் செய்பவர்கள் இணையதளம் தொடங்க வேண்டியதின் அவசியம்!
by pba Sat Sep 27, 2014 12:58 am

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:47 pm

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:42 pm

» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
by santhoshpart Wed Aug 27, 2014 4:22 pm

» “சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா!”
by santhoshpart Wed Aug 13, 2014 3:54 pm

» Daily Rs.500/- and Above
by K.MARIAPPAN Wed Jul 30, 2014 12:01 pm

» http://www.neobux.com/?r=narasimmant
by Navaneethakrishnan Wed Jul 02, 2014 3:41 pm

» வணக்கம் என் பெயர் வேணு
by A.Venu Fri Jun 27, 2014 10:10 am

» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?
by sathikdm Wed Jun 18, 2014 3:24 pm

» தமிழ் மொழி மூல கல்வி இணையதளம்
by afdhaal Wed May 28, 2014 9:22 pm

» வருக. வருக. வணக்கம்.
by மகி Mon May 12, 2014 3:55 pm

» அறிமுகம் -விநாயகா செந்தில்.
by மகி Mon May 12, 2014 3:53 pm

» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....!
by vinayagasenthil Sat May 10, 2014 9:04 pm

» +2result இங்கே காணலாம்!
by மகி Fri May 09, 2014 12:41 am

பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

ரெய்னாவின் அதிரடி சதத்தில் இந்தியா வெற்றி!

Go down

ரெய்னாவின் அதிரடி சதத்தில் இந்தியா வெற்றி! Empty ரெய்னாவின் அதிரடி சதத்தில் இந்தியா வெற்றி!

Post by மகி on Mon May 03, 2010 12:03 pm

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் தென்ஆப்ரிக்காவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் ரெய்னாவின் அதிரடியான சதத்‌தி‌ல் இந்திய அணி வெற்றி பெற்று, முதல் அணியாக சூப்பர்-8 சுற்றுக்குள் நுழைந்தது.

3வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி மே‌ற்‌‌‌கி‌ந்‌திய ‌தீ‌‌வி‌ல் நடந்து வருகிறது. இந்திய அணி தனது 2வது மற்றும் கடைசி லீக்கில் நேற்று தென்ஆப்ரிக்காவை செயின்ட் லூசியாவில் சந்தித்தது.

இந்திய அணியில் இரு மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. வயிற்று போக்கால் அவதிப்பட்டு வரு‌ம் கவுதம் கம்பீர் பதிலாக தினேஷ் கார்த்திக் சேர்க்கப்பட்டார். இதே போல் ஜாகீர்கானுக்கு பதிலாக சுழற்பந்து வீச்சாளர் பியுஷ் சாவ்லா இடம் பெற்றார்.

பூவா தலையா வெ‌ன்ற தென்ஆப்ரிக்க அ‌ணி‌த் தலைவ‌ர் சுமித் முதலில் இந்தியா பேட் செய்ய பணித்தார். இதை தொடர்ந்து தமிழகத்தை சேர்ந்த முரளி விஜயும், தினேஷ் கார்த்திக்கும் இந்தியாவின் இன்னிங்சை தொடங்கினர். முதல் ஓவரிலேயே விஜய் (0) விக்கெட் கீப்பர் பவுச்சரிடம் கேட்ச் ஆகி, ஏமாற்றத்திற்குள்ளானார். அடுத்து சுரேஷ் ரெய்னா களம் புகுந்தார். தினேஷ் கார்த்திக்கும் (16 ரன்) நீண்ட நேரம் நிற்கவில்லை.

'பவர்-பிளை'யான முதல் 6 ஓவர்களில் 5 வேகப்பந்து வீச்சாளர்களை பந்து வீச வைத்த தென்ஆப்ரிக்க அ‌ணி‌த் தலைவ‌ர் சுமித்தின் முயற்சிக்கு நல்ல பலன் கிடைத்தது. அது போல் அவர்களின் 'ஷாட்-பிட்ச்' யுக்திக்கும் பலன் தெரிந்தது. ஆனால் இந்த நிலைமை முதல் 8 ஓவர்கள் (43-2) வரை தான்.

3வது விக்கெட்டுக்கு சுரேஷ் ரெய்னாவுடன், யுவராஜ்சிங் ஜோடி சேர்ந்தார். இவர்கள் இருவரும் நிலைமையை படிப்படியாக மாற்றியதோடு, ஆட்டத்தையும் தங்கள் பக்கம் திருப்பினர். யுவராஜ்சிங்கை விட, ரெய்னாவின் தாக்குதல் மிரட்டலாக இருந்தது.

துவக்கத்தில் இருந்தே வெளுத்துக்கட்டிய ரெய்னாவுக்கு, அதிர்ஷ்டமும் பக்கபலமாக இருந்தது. 5 ரன்னில் இருந்த போது கேட்ச் ஆனார். அப்போது அது நோ பால் என்று அறிவிக்கப்பட்டதால் தப்பினார். இதே போல் 47 ரன்களில் இருந்த போது, எளிதான ரன்-அவுட் வாய்ப்பில் இருந்தும், வாழ்வு பெற்றார்.

மறுமுனையில் யுவராஜ்சிங் தன்னால் முடிந்த வரை வேகம் காட்டினார். அவர் 37 ரன்களில் ஆ‌ட்ட‌ம் இழ‌ந்தா‌ர். ரெய்னா-யுவராஜ்சிங் ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 88 ரன்கள் சேர்த்தது. அத‌ன் ‌பிறகு யூசுப் ப‌த்தான் கள‌ம் இற‌ங்‌கினா‌ர்.

15 ஓவர்களுக்கு பிறகு ரெய்னாவின் ஆக்ரோஷம், தீவிரமானது. தனது முதல் 3 ஓவர்களை கட்டுக்கோப்புடன் வீசி 2 விக்கெட்டுகள் வீழ்த்தி இருந்த வேகப்பந்து வீச்சாளர் கிளைன்வெல்த்தின் கடைசி ஓவரை ரெய்னா துவம்சம் செய்தார்.

ஆட்டத்தின் 18வது ஓவரான அதில் முதல் 2 பந்துகளில் பதான் தனது பங்குக்கு சிக்சர், ஒரு ரன் எடுக்க, அடுத்த 4 பந்துகளில் ரெய்னா தொடர்ந்து 3 பவுண்டரி, ஒரு சிக்சர் விரட்டி, ரசிகர்களை குஷிப்படுத்தினார். அந்த ஒரே ஓவரில் 25 ரன்கள் கிடைக்க, இந்தியாவின் ஸ்கோர் கிடுகிடுவென உயர்ந்தது. அவர் சதத்தை நெருங்கவும் உதவிகரமாக அமைந்தது.

இதன் பின்னர் ப‌த்தான் 11 ரன்களில் ஆட்டம் இழந்தார். இதையடுத்து 6வது விக்கெட்டுக்கு தோ‌னி இறங்கினார். கடைசி ஓவரின் 3-வது பந்தில் ரெய்னா ஒரு சிக்சர் அடித்து, தனது முதலாவது சதத்தை 59 பந்துகளில் நிறைவு செய்தார். 23 வயதான ரெய்னா 20 ஓவர் சர்வதேச கிரிக்கெட்டில் சதம் அடித்த முதல் இந்தியர் என்ற சாதனையை படைத்தார். ஒட்டுமொத்தத்தில் 20 ஓவர் கிரிக்கெட்டில் சதம் அடித்த 3-வது வீரர் என்ற சிறப்பும் அவருக்கு கிடைத்தது.

செஞ்சுரியை பூர்த்தி செய்த அடுத்த பந்திலேயே கேட்ச் ஆனார். ரெய்னா 60 ப‌ந்‌துக‌ளி‌ல் 101 ரன்க‌ள் கு‌‌வி‌த்து ஆ‌ட்ட‌ம் இழ‌ந்தா‌ர். இ‌தி‌ல் 9 பவுண்டரி, 5 சிக்சர்க‌ள் அட‌ங்கு‌ம். இதன் பின்னர் தோ‌னி சிக்சருடன் இன்னிங்சை முடித்து வைத்தார்.

இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் குவித்தது. இந்த உலக கோப்பையில் இதுவரையிலான ஆட்டங்களில் குவிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். தோ‌னி 16 ரன்களுடன் களத்தில் இருந்தார். முதல் 10 ஓவர்களில் 67 ரன்கள் எடுத்த இந்தியா, 2-வது பாதியில் 119 ரன்கள் விளாசியது. அதுவும் கடைசி 5 ஓவர்களில் மட்டும் 75 ரன்கள் எடு‌த்தது.

அடுத்து 187 ரன்கள் இலக்கை நோக்கி தென்ஆப்ரிக்க அணி ஆடியது. தொடக்க ஆட்டக்காரர் போஸ்மன் (8 ரன்) வேகமாக பெவிலியன் திரும்பினாலும், மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் காலிசும்,‌‌‌ ‌ஸ்‌மித்தும் நிலைத்து நின்றனர். ஆனால் முதல் 10 ஓவர்களில் (57-1) இவர்கள் ரன்கள் குவிக்க தவறியதால், சிக்கலான நிலை உருவானது.

இதன் பிறகு பிற்பாதியில் ஒவ்வொரு வீரர்களும் தங்களால் முடிந்த வரை துரிதமாக ஆடினார்கள். ‌ஸ்மித் 36 ரன்களும், காலிஸ் 73 ரன்களும் எடுத்து ஆ‌ட்ட‌‌ம் இழ‌ந்தன‌ர். இதன் காரணமாக இறுதி கட்டத்தில் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. கடைசி ஓவரில் தென்ஆப்ரிக்காவின் வெற்றிக்கு 24 ரன்கள் தேவைப்பட்டன. கைவசம் 6 விக்கெட்டுகள் இருந்தன. எதிர்பார்ப்பு நிறைந்த 20-வது ஓவரை கட்டுக்கோப்புடன் வீசிய வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஷ் நெஹ‌்ரா, 9 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தி இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தார்.

தென்ஆப்பிரிக்க அணியால் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 172 ரன்களே எடுக்க முடிந்தது. இதன் மூலம் இந்திய அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் 2வது வெற்றியை ருசித்தது. ரெய்னா ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.

இந்த வெற்றியின் மூலம் 'சி' பிரிவில் முதலிடத்தை பிடித்த இந்தியா, முதல் அணியாக சூப்பர்-8 சுற்றுக்கு முன்னேறியது. இப்பிரிவில் கடைசி லீக் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா-ஆப்கானிஸ்தான் அ‌ணிக‌ள் வரு‌ம் 5ஆ‌ம் தே‌தி மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி 2-வது அணியாக இப்பிரிவில் இருந்து சூப்பர்-8 சுற்றுக்கு வரும்.

நன்றி: வெப்துனியா.

_________________
[You must be registered and logged in to see this link.]
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

ரெய்னாவின் அதிரடி சதத்தில் இந்தியா வெற்றி! Empty Re: ரெய்னாவின் அதிரடி சதத்தில் இந்தியா வெற்றி!

Post by aarul on Mon May 03, 2010 6:59 pm

ரெய்னாவின் அதிரடி சதத்தில் இந்தியா வெற்றி! 7620
aarul
aarul
தள ஆலோசகர்
தள ஆலோசகர்

பதிவுகள் : 421
புள்ளிகள் : 793
Reputation : 12
சேர்ந்தது : 20/12/2009
வசிப்பிடம் : mani electronics,erode, tamilnadu,india

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum