தமிழ் | Tamil | Forum
தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

கூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.

புகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.

Join the forum, it's quick and easy

தமிழ் | Tamil | Forum
தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

கூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.

புகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.
தமிழ் | Tamil | Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வணக்கம் என் பெயர் நாகராசன்.இரா
by rajan_1972 Fri Apr 10, 2020 7:20 pm

» சிறந்த பொழுதுபோக்கு இணையதளம்!
by pba Sat Jul 02, 2016 8:11 pm

» ஏற்றுமதி உரிமம் பெறும் விண்ணப்பம்
by tamilnews Tue Mar 24, 2015 8:00 pm

» மொபைல், டிடிஎச் ரீசார்ஜ் செய்யப் போறீங்களா? இந்த சலுகைகளைப் பாருங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:41 am

» மொபைல் ரீசார்ஜ் செய்து ஷாப்பிங் கூப்பன் இலவசமாக பெறுங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:38 am

» மெமரி கார்டு வாங்கப் போறீங்களா? 74% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:36 am

» அமேசானில் பெண்களுக்கான ஆடைகள் 70% வரை தள்ளுபடி !
by dsytamil Wed Jan 14, 2015 1:34 am

» அமேசானில் ஆண்களுக்கான ஆடைகள் 60% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:31 am

» லெனோவா டேப்ளட் 43% சலுகை விலையில் ரூ. 5949 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:28 am

» ப்ளிப்கார்ட் தளத்தில் சிறுவர்களுக்கான ஆடைகள் 70% வரை + 30% கூடுதல் தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:14 am

» அமேசான் தளத்தில் 50% தள்ளுபடி விலையில் மொபைல்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:13 am

» ரூ. 7499 மதிப்புள்ள மைக்ரோமேக்ஸ் ஏ1 ஆன்ட்ராய்டு மொபைல் இப்போது ரூ. 5499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:11 am

» ரூ. 19999 மதிப்புள்ள நோக்கியா லூமியா 625 மொபைல் ரூ. 7499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:10 am

» ப்ராண்டட் காலணிகளுக்கு 70% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:08 am

» ஆன்லைன் ஷாப்பிங்கில் ப்ரிண்டர்களுக்கு 33% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:06 am

» ஆன்லைனில் பொருள் வாங்கப் போறீங்களா? 70% வரை பணத்தை சேமியுங்கள்!
by dsytamil Tue Jan 13, 2015 12:30 am

» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...!
by sathikdm Sun Oct 19, 2014 4:45 pm

» சிறுதொழில் செய்பவர்கள் இணையதளம் தொடங்க வேண்டியதின் அவசியம்!
by pba Sat Sep 27, 2014 12:58 am

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:47 pm

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:42 pm

» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
by santhoshpart Wed Aug 27, 2014 4:22 pm

» “சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா!”
by santhoshpart Wed Aug 13, 2014 3:54 pm

» Daily Rs.500/- and Above
by K.MARIAPPAN Wed Jul 30, 2014 12:01 pm

» http://www.neobux.com/?r=narasimmant
by Navaneethakrishnan Wed Jul 02, 2014 3:41 pm

» வணக்கம் என் பெயர் வேணு
by A.Venu Fri Jun 27, 2014 10:10 am

» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?
by sathikdm Wed Jun 18, 2014 3:24 pm

» தமிழ் மொழி மூல கல்வி இணையதளம்
by afdhaal Wed May 28, 2014 9:22 pm

» வருக. வருக. வணக்கம்.
by மகி Mon May 12, 2014 3:55 pm

» அறிமுகம் -விநாயகா செந்தில்.
by மகி Mon May 12, 2014 3:53 pm

» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....!
by vinayagasenthil Sat May 10, 2014 9:04 pm

பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

தமிழ் வளர்ச்சி பெற நாம் செய்ய வேண்டியவை...

Go down

தமிழ் வளர்ச்சி பெற நாம் செய்ய வேண்டியவை... Empty தமிழ் வளர்ச்சி பெற நாம் செய்ய வேண்டியவை...

Post by சாமி Sat Mar 23, 2013 4:34 pm

இன்று தமிழ்...தமிழ் என்று பலர் (நம்மையும் சேர்த்து) முழக்கமிடுவதைக் காண்கிறோம். தமிழ் மொழி என்பது தெய்வமொழி. மற்ற எந்த ஒரு மொழிக்கும் இந்த அடைமொழி கிடையாது. சாத்தூர் சேகரன் என்ற மொழியியல் அறிஞர் கூற்றுப்படி உலகில் இரண்டே மொழிகள்தான். ஒன்று தமிழ். மற்றொன்று திரிந்த தமிழ்.

தனி ஒரு மனிதன் மாறும் போது சமுதாயமும் மாறுகிறது. பெரும் பான்மையான தனி மனிதர்களின் எண்ணமே நம் எதிரே சமுதாயத்தில் பிரதிபலிக்கிறது. நாம் சமுதாயம் மோசமாகிவிட்டது என்று சொல்கிறோம். உண்மையில் நாம்தான் மோசமாகி விட்டோம்.

தமிழ் வாழ்க என்று சொல்லும் தலைவர்கள், கவிஞர்கள், ஆர்வலர்கள்... உண்மையில் தமிழை வாழ வைக்கிறார்களா? அல்லது தமிழால் அவர்கள் வாழ்கிறார்களா?....தேவையில்லை இந்த வாதம் நமக்கு.

மொழி என்ன செய்தது நமக்கு என்பதை விட நாம் என்ன செய்தோம் நம் மொழிக்கு என்று பார்க்கலாம். இதற்காக மாநாடு, போராட்டம், பந்தா... இவையெல்லாம் செய்ய வேண்டியதில்லை. சிறிய உத்திகளைக் கையாண்டாலே போதும். உறவுகளும் தங்களுக்குத் தெரிந்த உத்திகளைச் சொல்லுங்கள். தமிழை வளர்ப்போம். தலை நிமிர்ந்து நடப்போம்.

1) கையொப்பம் தமிழில் இடுங்கள். ஆங்கிலத்தில் இட்டு பழகி விட்டது என்று சொல்லாதீர்கள். மாற்றிக் கொள்ளுங்கள்! நமது மொழியை விட்டுவிட்டு ஆங்கிலத்தில் இடுவது அவமானம் என்று உணருங்கள். ஏற்கனவே ஆங்கிலத்தில் கையொப்பம் இடுவதால் சட்டப்பூர்வமாக செல்லாது என்பவர்களுக்கு:- நீங்கள் இன்றிலிருந்து கூட மாற்றலாம்.
உங்களது வங்கிக்கு ஒரு கடிதம் கொடுங்கள். பின்னர் எல்லா இடங்களிலும் உங்களது தன்மானமுள்ள தமிழ் கையொப்பத்தை இடுங்கள். சட்டப்பூர்வமாக செல்லும்.
உங்களது குழந்தைகளை இப்போதிலிருந்தே தமிழில் கையொப்பமிடுவதை கற்றுக்கொடுங்கள்.

2) உறவுகளை அழைக்கும்போது MUMMY, DADDY, UNCLE, AUNTY … என்பதை விடுத்து தமிழில் நமது முன்னோர்கள் சொல்லிய உறவுப்பெயர்களை வைத்து அழையுங்கள். நமது குழந்தைகளையும் அவ்வாறே பழக்கப்படுத்துங்கள்.

3) எதிராளி தமிழ் தெரிந்தவர் என்றால் தமிழில் மட்டுமே பேசுங்கள். அது நண்பராயிருந்தாலும்...உறவாயிருந்தாலும்...தொழில் ரீதியாக இருந்தாலும்.

4) உங்களது VISITING CARD களை தமிழில் அச்சிடுங்கள். தேவைப்படின் பின்பகுதியில் ஆங்கிலத்தில் அச்சிடுங்கள். VISITING CARD ஐ எதிராளியிடம் அளிக்கும் போது தமிழ் அச்சிட்டிருக்கும் பக்கம் பார்க்குமாறு கொடுங்கள்; அது தமிழே தெரியாதவராக இருந்தாலும். அவருக்கு தேவைப்படின் அவர் திருப்பிப் பார்த்துக் கொள்ளட்டும்.

5) உங்கள் LETTER HEAD போன்றவற்றில் நிறுவனம் மற்றும் முகவரிகளை தமிழிலும் அடுத்த மொழியிலும் அச்சிடுங்கள். தமிழை மேலேயும் அடுத்த மொழியை கீழேயும் அச்சிடுங்கள்.

6) நிறுவனத்தின் பெயர்பலகையை தமிழ் மற்றும் வேற்று மொழிகளில் எழுதுங்கள். முதலில் தமிழிலும் அடுத்த மொழியை தமிழ் FONT ல் பாதி அளவாகவும் எழுதுங்கள். இது தமிழ்நாட்டுச் சட்டமும் கூட (TAMILNADU SHOPS AND ESTABLISHMENTS ACT 1948 ). முகவரியையும் தமிழில் எழுதுங்கள்.

7) வங்கிச் சேவைகளில் தமிழ் மட்டுமே பயன்படுத்தவும். (எ.கா) ATM சேவையில் தமிழ் இருந்தால் தமிழைப் பயன்படுத்தவும். நீங்கள் பயன்படுத்தும் காசோலைகளில் தமிழில் மட்டுமே எழுதவும். படிவங்களில் தமிழில் எழுதவும்.

8) மற்ற அலுவலகங்களுக்குச் செல்லும்போது உள்ளே செல்லும்போது வருகையாளர் பதிவேடு (VISITOR’S LOGBOOK) வைத்திருப்பார்கள். அதில் தமிழில் எழுதுங்கள். எடுத்துக்காட்டு: பெயர், உங்களது நிறுவனம், பார்க்கவேண்டிய நபர், நோக்கம், கையெழுத்து.. இன்னும் பிற.

9) சொந்த வீட்டின் வெளியே உங்கள் பெயரை கல்லால் செதுக்கும்போது முகவரியையும் சேர்த்து தமிழில் எழுதுங்கள்.

10) வெளியூருக்குச் (தமிழ்நாட்டுக்குள்) சென்று விடுதிகளில் (LODGE) தங்கும்போது, பதிவேடு (GUEST REGISTER) வைத்திருப்பார்கள். அதில் தமிழில் எழுதுங்கள். எடுத்துக்காட்டு: பெயர், முகவரி, வந்த நோக்கம், கையெழுத்து.. இன்னும் பிற.

11) செல்பேசி (அ) தொலைபேசி எண்ணை மற்றவர்களுக்குத் தெரிவிக்கும் போது தமிழில் சொல்லுங்கள். அதாவது உங்கள் எண் 94440 94440 என்று இருந்தால் தொண்ணூற்று நான்கு...நானூற்று நாற்பது... தொண்ணூற்று நான்கு...நானூற்று நாற்பது...என்று தமிழில் சொல்லுங்கள். ஆரம்பத்தில் சிரமமாக இருக்கும். பிறகு பழகிவிடும்.

12) MARIO PUZO, SIDNEY SHELDON….போன்றவர்களின் புத்தகத்தை விடுத்து கையில் எப்போதும் நல்ல தமிழ்ப்புத்தகம் ஏதாவது ஒன்று வைத்திருங்கள். முக்கியமாக அட்டை போட்டு மறைத்துவிடாமல் மற்றவர்களுக்கு தெரிவது போல் எடுத்துச்செல்லுங்கள்.

13) கோயிலுக்குச் செல்லும்போது தேங்காய் பழத்தோடு அவரவர் சமய தமிழ்ப்புத்தகங்களை எடுத்துச் செல்லுங்கள். (எ.கா.) தேவாரம், திருவாசகம், திருப்புகழ், நாலாயிர திவ்யபிரபந்தம் போன்றவை.

14) வீடுகளில் மாட்டும் நாட்காட்டி மற்றும் சுயமுன்னேற்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை தமிழில் இருந்தால் மட்டும் மாட்டுங்கள். இல்லாவிட்டால் சுவர் சும்மாவாவது இருக்கட்டும்.

15) குழந்தைகள் பெரியவர்கள் போடும் பனியன்களில் தமிழ் வாசகங்கள் இருந்தால் மட்டும் அணிவியுங்கள்...அணியுங்கள்.(ஆங்கிலத்தில் எழுதியுள்ள வாசகங்களை அணிந்துள்ள வர்களிடம் அதை தமிழில் சொல்லுங்கள் என்று கேளுங்கள். அந்த வாசகங்கள் எவ்வளவு ஆபாசமானது.. அர்த்தமற்றது என்பதை அவர்கள் உணர்வார்கள். ஓர் இளம்பெண் அணிந்திருந்த T SHIRTல் எழுதியிருந்த வாசகம்: THIS MUCH I EAT ).

16) குழந்தைகளுக்கு பெயர் வைக்கும்போது சோதிடர்கள் சொல்வதை (எ.கா: மோ... மை... எழுத்தில் ஆரம்பிக்கவேண்டும்) நம்பாமல் தூய தமிழ்ப்பெயர்களை வையுங்கள். நீங்கள் வைப்பது தமிழ்ப்பெயர்தானா என்பதை நல்ல தமிழ் ஆர்வலர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். வடமொழி எழுத்துக்களான ஸ்,..ஷ், ஜ, போன்றவற்றைத் தவிருங்கள். (ஒரு நண்பர் தன்னுடைய மகனுக்கு தீட்ஷித் என்று பெயர் வைத்திருந்தார். அது வடநாட்டு சாதிப்பெயர் என்று தெரியாமல்!)

17) அரசாங்க தொடர்புடைய அலுவலகங்களுக்கு (எ.கா: மின்சார வாரியம்) அல்லது வங்கிக்கு கடிதம் எழுதும் போது தமிழில் மட்டுமே எழுதுங்கள்.

18) திருமணப்பரிசு அளிக்கும்போது நல்ல தமிழ்ப்புத்தகங்ககளை அளியுங்கள். எடுத்துக்காட்டு திருக்குறள் . திருக்குறளுக்கு உரையாசிரியர் மிகவும் முக்கியம். சார்பு உடையவர்கள் உரைகளை வாங்காமல் திரு.வி.க., கா.சு.பிள்ளை, நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம் பிள்ளை, தேவநேயப்பாவாணர், ஜி.வரதராஜன் உரைகளை வாங்கலாம். அதேபோல் திருக்குறளைப் போல் ஒன்றே முக்கால் அடி உரைகளை வாங்காதீர்கள்.. நல்ல விரிவான உரைகளை வாங்குங்கள்.

19) விழாக்களுக்கு அடிக்கும் அழைப்பிதழில் தமிழில் மட்டுமே அச்சிடுங்கள். ஆங்கிலம் தேவைப்படின் இதோடு கலக்காமல் தனியே அச்சிட்டு, தமிழே தெரியாதவர்களுக்கு மட்டும் கொடுங்கள்.

20) இரு சக்கர வாகனம், மகிழுந்து மற்றும் பிற வாகனங்களை வைத்திருப்பவர்கள் அதன் பதிவு எண்ணை தமிழில் எழுதுங்கள். எ.கா TN 20 A 1234 என்று இருந்தால் தமிழ்நாடு 20 ஏ 1234 என்று எழுதுங்கள்.


21) கடிதம் எழுதும்போது, ஆங்கில தேதி மாதம் வருடம் எழுதும்போது மறக்காமல் ஆங்கிலத்திற்கு மேல் தமிழில் திருவள்ளுவராண்டு தேதி மாதமும் எழுதுங்கள். எ.கா: திருவள்ளுவராண்டு 2044 / மீனம் (பங்குனி) / 09 (ஆங்கில தேதி 2013 / மார்ச் /22 ). திருவள்ளுவராண்டிலிருந்து 31 ஆண்டுகளைக் கழித்தால் கிடைப்பது ஆங்கில ஆண்டு.

22) தொலைபேசியில் பேசும்போது முதலில் ஹலோ என்பதை விட்டுவிட்டு வணக்கம்! என்று சொல்லி ஆரம்பியுங்கள். அதே போல் தாங்க்ஸ் என்பதை விட்டு விட்டு நன்றி என்று சொல்லி முடியுங்கள். (வணக்கம் ஐயா...வணக்கம் அம்மா, நன்றி ஐயா...நன்றி அம்மா..)

23) எதெற்கெடுத்தாலும் ‘எக்ஸ்க்யூஸ் மீ’ என்பதற்கு பதிலாக மன்னிக்கவும்’..’மன்னிக்கனும்’.. ’மன்னிச்சுங்குங்க’... என்று சொல்லுங்கள். அதே போல் ‘ப்ளீஸ்’ என்பதற்கு பதிலாக ‘தயவுசெய்து’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துங்கள்.

24) மகிழுந்துகளில் செல்லக்குழந்தைகளின் பெயரை எழுத விருப்பப்பட்டால் தமிழில் மட்டும் எழுதுங்கள்.

25) மகிழுந்துகளில், இரு சக்கர வாகனங்களில் தங்களின் தொழிலை எழுதும் போது தமிழில் எழுதுங்கள். எ.கா: ஊடகம் (PRESS), மருத்துவர் (DOCTOR), வழக்கறிஞர் (ADVOCATE) இன்னும்பிற.
(தொடரும்)
சாமி
சாமி
உறுப்பினர்
உறுப்பினர்

பதிவுகள் : 31
புள்ளிகள் : 90
Reputation : 1
சேர்ந்தது : 13/03/2012
வசிப்பிடம் : chennai

Back to top Go down

தமிழ் வளர்ச்சி பெற நாம் செய்ய வேண்டியவை... Empty Re: தமிழ் வளர்ச்சி பெற நாம் செய்ய வேண்டியவை...

Post by sriniyamasri Tue Apr 09, 2013 9:27 pm

தமிழ் வளர்ச்சி பெற நாம் செய்ய வேண்டியவை... 227966
sriniyamasri
sriniyamasri
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 405
புள்ளிகள் : 437
Reputation : 26
சேர்ந்தது : 16/04/2011
வசிப்பிடம் : searching

Back to top Go down

தமிழ் வளர்ச்சி பெற நாம் செய்ய வேண்டியவை... Empty Re: தமிழ் வளர்ச்சி பெற நாம் செய்ய வேண்டியவை...

Post by sriniyamasri Tue Apr 09, 2013 9:28 pm

Kadinam

aanal muyarchigal thiru vinayagum ena nambugiren

Smile
sriniyamasri
sriniyamasri
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 405
புள்ளிகள் : 437
Reputation : 26
சேர்ந்தது : 16/04/2011
வசிப்பிடம் : searching

Back to top Go down

தமிழ் வளர்ச்சி பெற நாம் செய்ய வேண்டியவை... Empty Re: தமிழ் வளர்ச்சி பெற நாம் செய்ய வேண்டியவை...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum