தமிழ் | Tamil | Forum
தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

கூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.

புகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.

Join the forum, it's quick and easy

தமிழ் | Tamil | Forum
தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

கூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.

புகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.
தமிழ் | Tamil | Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வணக்கம் என் பெயர் நாகராசன்.இரா
by rajan_1972 Fri Apr 10, 2020 7:20 pm

» சிறந்த பொழுதுபோக்கு இணையதளம்!
by pba Sat Jul 02, 2016 8:11 pm

» ஏற்றுமதி உரிமம் பெறும் விண்ணப்பம்
by tamilnews Tue Mar 24, 2015 8:00 pm

» மொபைல், டிடிஎச் ரீசார்ஜ் செய்யப் போறீங்களா? இந்த சலுகைகளைப் பாருங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:41 am

» மொபைல் ரீசார்ஜ் செய்து ஷாப்பிங் கூப்பன் இலவசமாக பெறுங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:38 am

» மெமரி கார்டு வாங்கப் போறீங்களா? 74% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:36 am

» அமேசானில் பெண்களுக்கான ஆடைகள் 70% வரை தள்ளுபடி !
by dsytamil Wed Jan 14, 2015 1:34 am

» அமேசானில் ஆண்களுக்கான ஆடைகள் 60% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:31 am

» லெனோவா டேப்ளட் 43% சலுகை விலையில் ரூ. 5949 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:28 am

» ப்ளிப்கார்ட் தளத்தில் சிறுவர்களுக்கான ஆடைகள் 70% வரை + 30% கூடுதல் தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:14 am

» அமேசான் தளத்தில் 50% தள்ளுபடி விலையில் மொபைல்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:13 am

» ரூ. 7499 மதிப்புள்ள மைக்ரோமேக்ஸ் ஏ1 ஆன்ட்ராய்டு மொபைல் இப்போது ரூ. 5499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:11 am

» ரூ. 19999 மதிப்புள்ள நோக்கியா லூமியா 625 மொபைல் ரூ. 7499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:10 am

» ப்ராண்டட் காலணிகளுக்கு 70% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:08 am

» ஆன்லைன் ஷாப்பிங்கில் ப்ரிண்டர்களுக்கு 33% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:06 am

» ஆன்லைனில் பொருள் வாங்கப் போறீங்களா? 70% வரை பணத்தை சேமியுங்கள்!
by dsytamil Tue Jan 13, 2015 12:30 am

» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...!
by sathikdm Sun Oct 19, 2014 4:45 pm

» சிறுதொழில் செய்பவர்கள் இணையதளம் தொடங்க வேண்டியதின் அவசியம்!
by pba Sat Sep 27, 2014 12:58 am

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:47 pm

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:42 pm

» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
by santhoshpart Wed Aug 27, 2014 4:22 pm

» “சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா!”
by santhoshpart Wed Aug 13, 2014 3:54 pm

» Daily Rs.500/- and Above
by K.MARIAPPAN Wed Jul 30, 2014 12:01 pm

» http://www.neobux.com/?r=narasimmant
by Navaneethakrishnan Wed Jul 02, 2014 3:41 pm

» வணக்கம் என் பெயர் வேணு
by A.Venu Fri Jun 27, 2014 10:10 am

» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?
by sathikdm Wed Jun 18, 2014 3:24 pm

» தமிழ் மொழி மூல கல்வி இணையதளம்
by afdhaal Wed May 28, 2014 9:22 pm

» வருக. வருக. வணக்கம்.
by மகி Mon May 12, 2014 3:55 pm

» அறிமுகம் -விநாயகா செந்தில்.
by மகி Mon May 12, 2014 3:53 pm

» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....!
by vinayagasenthil Sat May 10, 2014 9:04 pm

பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

சிவபரத்துவ நிச்சயம்

4 posters

Page 5 of 13 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 11, 12, 13  Next

Go down

சிவபரத்துவ நிச்சயம் - Page 5 Empty Re: சிவபரத்துவ நிச்சயம்

Post by நந்தி Mon Aug 16, 2010 7:10 pm

உபக்கிரம உபசங்கார மத்யே பராமரிசைகளால் நூற்றெட்டு உபநிடதங்களிலுஞ் சிவபிரானே சொல்லப்படுகிறாரென்பது.

முன்னதி லீசச் சொல்லை முடிவதிற் சிவச்சொ றன்னைச்
சொன்னது மன்றி யந்தச் சொற்பொரு டன்னை மத்தி
தன்னினு மேத்திற் றுண்மை சாருப நிடநூற் றெட்டு
மென்னினொ ரையந் தானு மீசுரன் முதன்மைக் குண்டோ.


(அ-ரை) முன்னதில் - உபக்கிரமத்தில்; முடிவதில் - உபசங்காரத்தில்; உபக்கிரமோப ஸம்ஹார மத்யே பராமரிசையென்பது பொருள்கோள் முறைக்கு ஒரு நியாயம்; ஐயம் - சந்தேகம்; முதன்மைக்கு - பரத்துவத்துக்கு.

'ஓம் ஈசாவாஸ்ய மிதம் ஸர்வம்' என்ற ஈசாவாஸ்யோபநிஷத்தும், 'ஊர்த்வ பூர்ண மத: பூர்ணம் மத்யபூர்ணம் சிவாத்மகம்' என்ற முக்திகோபநிஷத்தும், 'ராமம் த்ரிணேத்ரம் ஸோமார்த தாரிணம் சூலிநம் பரம்' என்ற ராமாஹஸ்யோபநிஷத்தும், 'ப்ரபஞ்சோபசமம் சாந்தம் சிவமத்வைதம் சதுர்த்தம் மந்யந்தே' என்ற ராமோத்தரதாபநியுபநிஷத்தும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள். (அஉ)

******
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சிவபரத்துவ நிச்சயம் - Page 5 Empty Re: சிவபரத்துவ நிச்சயம்

Post by நந்தி Mon Aug 16, 2010 7:10 pm

[You must be registered and logged in to see this image.]
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சிவபரத்துவ நிச்சயம் - Page 5 Empty Re: சிவபரத்துவ நிச்சயம்

Post by நந்தி Mon Aug 16, 2010 7:13 pm

சிவபிரானைப் பொது நீக்கித் தியானிக்கவேண்டுமென்று வேதத்துச்சி சொல்லுகிறதென்பது.

அதருவ மிறுதி வேத மதருவ சிகைதா னந்த
வதருவ முடிவா யோங்கு மழிவிலா வின்பஞ் சீவர்க்
குதவிடு சிவனே தேய னொதுக்குக பிறரை யென்ற
திதமுற விளம்ப லாலே யேத்துவ தெவனை வேதம்.


(அ-ரை) உதவிடு - கொடுக்கிற; என்று அது இதம் கூற விளம்பலால் எனப்பிரிக்க. அது - அந்த அதருவசிகோபநிஷத்து; இதம் - நன்மை; விளம்பலால் - சொல்லுகிறபடியால்; ஏந்துவது -சிரமேற் கொள்ளுவது.

'சிவ ஏகோ த்யேய: சிவம் கர: ஸர்வமந்யத்பரித்யஜ்ய' என்ற அத்வசிகோபநிஷத்து இச்செய்யுட்குப் பிரமாணம். (அங)
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சிவபரத்துவ நிச்சயம் - Page 5 Empty Re: சிவபரத்துவ நிச்சயம்

Post by நந்தி Mon Aug 16, 2010 7:13 pm

யார் எத்தேவரை வணங்கினாலும் அத்தேவர் அவ்வணக்கத்தைச் சிவபிரானுக்கே அர்ப்பணஞ் செய்துவிடுவரென்பது.

அச்சுதன் பிரம னாதி யந்நிய தேவர் தம்மை
யிச்சகம் வாழ்வோர் பூசை யியற்றிடி னதனை யன்பு
மச்சமுங் கொண்டத் தேவ ரரனடிக் குய்ப்பா ரீது
பொச்சமில் சுருதி கைகள் பொருந்திடா னவன்றான் காணே.


(அ-ரை) இச்சகம் - இவ்வுலகத்தில் ; உய்ப்பார் - அருப்பிப்பார்; ஈது - இவ்வுண்மை; பெரச்சம் - குற்றம்; பொருந்திடான் - குவித்துப் பிறரைக் கும்பிடாதவன்; அவன் தான் - அந்த அரனே.

'ஸ்தோமம் வோ சத்ய ருத்ராய சிக்வஸே| க்ஷயத்வீராய நமஸாதிதிஷ்டந ஏபிச் சிவஸ்வவாம் ஏவயாவபிNeutral திவஸ்ஸிஷக்தி மருதோ நிகாமாபி:' என்ற ருக்வேதமும், 'ஆகாசாத் பதிதம் தோயம் யதாகச்சதிசாகரம் ஸர்வதேவ நமஸ்காரம் சங்கரம் ப்ரதிகச்சதி' என்ற ஸ்மிருதியும், 'சேர்ந்தறியாக் கையானை' என்ற திருவாசகமும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள். (அச)
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சிவபரத்துவ நிச்சயம் - Page 5 Empty Re: சிவபரத்துவ நிச்சயம்

Post by நந்தி Mon Aug 16, 2010 7:14 pm

[You must be registered and logged in to see this image.]
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சிவபரத்துவ நிச்சயம் - Page 5 Empty Re: சிவபரத்துவ நிச்சயம்

Post by நந்தி Mon Aug 16, 2010 7:14 pm

சிவபிரானை வணங்காதவரில்லை; சிவபிரான் யாரையும் வணங்கிலரென்பது.

விண்ணவ ரியோகர் சித்தர் விஞ்சையர் முனிவர் யாழோர்
மண்ணவ ருரகர் மாப்புள் மரமுத லனைவோ ருள்ளுங்
கண்ணிய னெற்றித் தேவைக் கைதொழார் யாரே யந்தப்
பண்ணவ னேனோர் தம்மைப் பணிந்தது யாண்டு மின்றே.


(அ-ரை) விண்ணவர் - தேவர்; விஞ்சையர் - வித்தியாதரர்; யாழோர் - கந்தர்வர்; மண்ணவர் - மனிதர்; உரகர் - நாகலோகவாசிகள்; மா - மிருகங்கள்; புள் - பறவைகள்; கண் இயல் நெற்றித்தேவை - சிவபிரானை; யாரே ஒருவருமில்லை யென்றபடி; அந்தப்பண்ணவன் - அந்தச் சிவபிரான்; ஏனோர் தம்மை - பிறரை; யாண்டும் - எக்காலத்திலும் எவ்விடத்திலும்; இன்று - இல்லை.

இச்செய்யுட்குப் பிராணம் விரியுமாகலின் எடுத்தெழுதப் படவில்லை.[b] பஸ்மஜாபாலோபநிஷத்து t;]]பாரதம் சிவரகசியம் முதலியவற்றுட் காண்க. (அரு).
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சிவபரத்துவ நிச்சயம் - Page 5 Empty Re: சிவபரத்துவ நிச்சயம்

Post by மகி Tue Aug 17, 2010 7:50 pm

பகிர்வுக்கு மிக்க நன்றி.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

சிவபரத்துவ நிச்சயம் - Page 5 Empty Re: சிவபரத்துவ நிச்சயம்

Post by நந்தி Sat Aug 21, 2010 5:25 pm

நன்றி நண்பரே!
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சிவபரத்துவ நிச்சயம் - Page 5 Empty Re: சிவபரத்துவ நிச்சயம்

Post by நந்தி Sat Aug 21, 2010 5:25 pm

முக்குண சம்பந்தமான மாயாசரீரம் சிவபிரானுக்கில்லை யென்பது.

அபனுட லிராச மாகு மரியுட றமச மாகு
முயரிய சத்து வத்தி லுருத்திரற் குடல முண்டா
லியலொரு தயவின் மூல மெனுஞ்சிவ பிரானம் மாயா
மயகுண தேகந் தாங்கான் மன்னுவன் றிரமா ரங்கம்.


(அ-ரை) ஒரு - ஒப்பந்த: மன்னுவன் - உடையவனா யிருப்பன்; சத்துவம் இராசதம் தாமதம் இம்மூன்று சரீரங்களும் மாயா காரியமாகலின் அழியும், சிவபிரான் கொள்ளும் அங்கம் ஸ்திரமானது. ஆகலின் அது அம்முக்குண மயமன்று.

'ஸத்வோத்ரிக்தவ்யக்தாக்யாவரண சக்தி ராஸ¤த்| தத் ப்ரதி பிம்பம் யத்தத்தீச்வர சைதந்ய மாஸ¤த் - - ஈசாதிஷ்டிதாவர சக்திதோ ரஜோத்ரிக்தா மஹதாக்யா வி§க்ஷப சக்தி ராஸ¤த்| தத் ப்ரதி பிம்பிதம்| யத்தத்திரண்ய கர்ப சைதந்ய மாஸித் - - ஹிரண்ய கர்பாதிஷ்டித வி§க்ஷபசக்தி தஸ்த மோத்ரிக்தா ஹங்காராபிதாஸ்தூல சக்திராஸ¤த்| தத் ப்ரதி பிம்பிதம் யத்தத் விராட்சைதந்ய மாஸ¤த் | தைதபிமாநீஸ்பஷ்டவபுஸ்ஸர்வஸ்தூல பாலகோ விஷ்ணு: ப்ரதாந புருஷோபவதி' என்ற பைங்களோபநிஷத்தும், 'ஸாத்வீகீ ருத்ரே பக்தே ப்ரஹ்மணீ ராஜஸ¤| தாமஸ¤ தைத்ய ப§க்ஷஷ¤ மாயாத்ரேதாஹ் யுதாஹ்ருதா', 'கோபரூபோஹரி:', 'ஸாக்ஷ¡ந் மாயாவிக்ரஹ தாரண' என்ற கிருஷ்ணோபநிஷத்தும், 'ஓம் தமஸே நம: ஓம் ரஜஸே நம: ஓம் ஸத்வாய நம:' என்ற அ§க்ஷ¡பநிஷத்தும், 'மாயோபாதிகோ நாராயண ஆஸ¤த்' என்ற திரிபாத்விபூதி மஹா நாராயணோபநிஷத்தும், 'அஸத்வ மாஜஸ்க மதமஸ்க மமாய மபயம்' என்ற நரஸிம்ஹோத் தரதாபநியுபநிஷத்தும், 'ஸ்திரை ரங்கை:' என்ற நரஸிம்ஹபூர்வதாபநியுபநிஷத்தும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள். (அசா)
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சிவபரத்துவ நிச்சயம் - Page 5 Empty Re: சிவபரத்துவ நிச்சயம்

Post by நந்தி Sat Aug 21, 2010 5:28 pm

சிவபிரான் திருமேனிக்கு நரைதிரை யாதிகளில்லை யென்பது.

கண்ணனாய் விண்டு மேனிக் கருமயிர் பிறந்த தன்னா
னண்ணனாய் வெள்ளை ரோம மவதரித் திட்ட தென்னிற்
றிண்ணமாஞ் சாவு மூப்புத் திரை நரை யம்மாற் கோர்முக்
கண்ணுளான் றனுவி லன்ன கரிசுகள் கேட்ட துண்டோ.


(அ-ரை) விண்டு - விட்டுணு: அன்னான் - அக்கண்ணனுடைய; அண்ணன் - தமையன்: அவன் பலராமன்; அம்மாற்குத் திரை நரை மூப்பு சாவு திண்ணம் ஆம் என்க; திண்ணம் - சத்தியமாய்: ஆம் - உண்டு; தனுவில் - சரீரத்தில்; அன்னகரிசுகள் - அந்த நரைமயிர் முதலிய குற்றங்கள்.

'திருமாலானவர் ஒன்று வெண்மையும் மற்றொன்று கருமையுமாகிய இரண்டு கேசங்களைத் தலையிலிருந்தெடுத்தார். அந்த இரண்டு கேசங்களும் தேவகி ரோகிணி யென்னும் இரண்டு யாதவகுலத்து ஸ்திரீகளின் கர்ப்பங்களில் பிரவேசித்தன. அந்தத்திருமாலினுடைய அவ்விரண்டு கேசங்களில் வெண்மையாயிருந்தவொன்று பலராமனாகப் பிறந்தது. இரண்டாவது கறுத்த நிறமாகச் சொல்லப்பட்ட கேசம் கேசவனாகப் பிறந்தது' என்ற பாரதம் ஆதி 214ஆவது அத்தியாயமும், 'ஸ்ரீ ஹரியானவர் தம்முடைய அங்கத்திலிருந்து வெளுத்தும் கறுத்ததுமான இரண்டு மயிர்களை எடுத்து எறிந்தார்' என்ற பாரதம் சாந்தி 206 ஆவது அத்தியாயமும், 'ஆரணங்கலைகட் கெட்டா தகன்றபூ ரணனா மாதி - நாரணன் சிரத்தி லார்ந்த நளிருரோமத்தி னொன்று - வாரணந் தன்னிற் போட மால்கலை யாகப் பார்மேற் - காரண வைத ரித்தான் கண்ணனாய்விண்ணோர் போற்ற' என்ற கூரேச விஜயமும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள். (அஎ)
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சிவபரத்துவ நிச்சயம் - Page 5 Empty Re: சிவபரத்துவ நிச்சயம்

Post by நந்தி Sat Aug 21, 2010 5:29 pm

சிவபிரான் உமாசகாயத்வாதி திருமேனிகளை மாயையிலன்றி அருளாகிய தமது சத்தியில் எடுப்பாரென்பது.

திரிகுண சொரூப மாயை சீவருக் குடல்க ளாகி
` மருவலு மவைகள் பின்னர் மறைதலு முண்டு தூய
திரிவித மான சத்தி சிவபிராற் கியல்பா மன்னோ
னுருபல வதனிற் கொள்வ னுமையொரு பாக மாதி.


(அ-ரை) திரிகுண சொரூப - சத்வ ரஜஸ் தமோகுண மயமாகிய; மருவலும் - பொருந்துதலும்; அவைகள் - அவ்வுடல்கள்; திரிவிதமான; இச்சா கிரியா ஞானமயமான; அன்னோன் - அச்சிவபிரன்; உருபல - பலதிருமேனிகளை; அதனில் - அச் சத்தியில்; கொள்வன் - எடுப்பான். அன்னோன் அதனில் உமையொருபாகமாதி பலவுருக்கொள்வன் என்க. ஆதியென்பதால் நீலகண்டம் சந்திரசேகரம் முதலியனவுங் கொள்ளப்படும்.

'உமார்த க்ருத சேகரம் - - நிர்குணம்' என்ற பஸ்மஜாபாலோபநிஷத்தும், 'உமாஸஹாயம் - - தமஸ: பரஸ்தாத்' என்ற கைவல்யோபநிஷத்தும், 'ஸ்வாபாவிகிஜ்ஞாந பலக்ரியா ச' என்ற சுவேதாசுவதரோபநிஷத்தும், 'நிர்குணம் ஸத்ய சித்கநம்' என்ற கடருத்ரோபநிஷத்தும், 'சைதன்ய ரூபிணீம்' என்ற திரிபுராதாபிநிஷத்தும், 'அகண்டாநந்தமயவிக்ரஹம்', 'நித்ய சிந்மாத்ர ரூபோஸ்மி' என்ற மைத்ரேயோபநிஷத்தும், 'கிம்சித்க்ஷ¤பிதரூபா ஸாசிச் சக்திச் சிந்மயார்ணவே' என்ற மஹோபநிஷத்தும், 'சிவா| சிச் சக்தி:' என்ற யோகசிகோபநிஷத்தும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள். (அஅ)
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சிவபரத்துவ நிச்சயம் - Page 5 Empty Re: சிவபரத்துவ நிச்சயம்

Post by நந்தி Sat Aug 21, 2010 5:29 pm

சிவமூர்த்தங்களைச் சகுணமென்பதற்கும் நிர்க்குணமென்பதற்குத் தாற்பரியம் இது வென்பது.

எங்களை யாள நாலா மிறைகொளு முருக்க ளெல்லா
மங்கல சத்தி தன்பால் வரலினாஞ் சகுணந் தானும்
பங்கம துறுத்து மாயைப் பட்டிடா வாத லாலே
மங்கலி லறிஞர் சொல்வர் மன்னுநிர்க் குணமே யென்று.


(அ-ரை) ஆள - ஆட்கொள்ள; நாலாம் இறை - சிவபிரான்; கொள்ளும் - எடுக்கிற; உருக்கள் - திருமேனிகள்; சத்திதன்பால் - அருளாகிய குணத்திலிருந்து; வரலின் - உண்டாகிறபடியால்; சகுணமும் ஆம் என்க; மாயைப்பட்டிடா - மாயையின் குணத்திலிருந்து உண்டாகா; உருக்களெல்லாம் என்பது அதற்கு எழுவாய்; மன்னு - விளங்குகிற.

'கேவலோ நிர்குணச்ச', ஸத்வஸ்யைஷ ப்ரவர்த்தக: ஸ¤நிர்மலாமிமாம் ப்ராப்திமீசாநோஜ்யோதிரவ்ய:' என்ற சுவேதாசுவதரோபநிஷத்தும், 'ஸகுண நிர்குண ஸ்வரூபம் ப்ரஹம' , 'ஸகுண நிர்குண ஸ்வரூபோபவதி' என்ற திரிபாத் விபூதி மஹா நாராயணோபநிஷத்தும், 'நிர்குண: கேவலோஸ்ம்யஹம்' என்ற மைத்ரேயோபநிஷத்தும், 'புருஷம் நிர்குணம்' என்ற மந்த்ரிகோபநிஷத்தும், 'நிர்குணம்' ஸத்ய சித்கநம்' என்ற வராகோபநிஷத்தும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள். (அகூ)
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சிவபரத்துவ நிச்சயம் - Page 5 Empty Re: சிவபரத்துவ நிச்சயம்

Post by நந்தி Sat Aug 21, 2010 5:32 pm

உருத்திரன் சத்துவகுணமூர்த்தி, விஷ்ணு தாமதகுணமூர்த்தியென்பது.

பின்னறு முடிவு காறும் பிஞ்ஞகன் றன்னை யேத்தித்
தன்னரு ளுயிர்க்கு வைப்பாற் சத்துவன் மூன்றா மூர்த்தி
பன்னக சயனத் தாலும் புத்தனாய்ப் பவித்த லாலு
மின்னனா ராசை யாலும் விட்டுணு தமசி யாவான்.


(அ-ரை) பின்உறு - கடைசியில் நடக்கும்; முடிவு காறும் - சங்காரம் வரை; வைப்பால் - வைத்தலால்; மூன்றாம் மூர்த்தி - உருத்திரன்; பிரமனும் விஷ்ணுவும் ஸ்ருஷ்டி ஸ்திதிகளைச் சதா செய்துகொண்டிருக்கிற பிரவர்த்தகர்களாகலின் சிவோபாசனையாதி நலன்களைச் செய்யப்போதிய அவகாசமில்லாதவர்கள்; உருத்திரன் சங்காரம் வரை ஒரு பிரவிருத்தியுமில்லாத்வன்; ஆகலின் அவனே அந்நலன்களைச் செய்யமுடியும்; பன்னகம் - பாம்பு; பலித்தல் - பிறத்தல்; மின்னனார் - பெண்கள்மேல் வைத்த; ஆசை - மோகம்.

'ஆஸ்திகத்வம் - - ஸாத்விகஸ்ய விசேஷத:' , 'நித்ரா - - மோஹ - - மைதுநம் - - தாமஸ்ய - - ப்ரஹ்ம வாதிபி:', 'ஸத்யஜ்ஞாநம் ஸாத்விகம் - - திமிராந்தம் தாமஸமிதி' என்ற சாரீரகோபநிஷத்தும், 'கலியுகத்தின் ஆதியில் - - புத்தனாகி - - ஜனங்களை மோகிக்கச் செய்வேன்' (இது விஷ்ணுவாக்கியம்) என்ற பாரதம் சாந்தி 348 ஆவது அத்தியாயமும், 'கள்ளவேடத்தைக் கொண்டுபோய்ப் புரம்புக்கவாறும் கலந் தசுரரை - உள்ளம் பேதஞ் செய்திட்டுயிருண்டவாறும்' என்ற பிரபந்தமும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள். (க0)

******
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சிவபரத்துவ நிச்சயம் - Page 5 Empty Re: சிவபரத்துவ நிச்சயம்

Post by நந்தி Sat Aug 21, 2010 5:33 pm

திதிக்குத் தாற்பரியம் இதுவென்பது.

இருவினை யின்பத் துன்பத் திடைவிழுந் திளைக்கு மாறு
பெருகிய வுயிர்க டம்மைப் பிணித்துல கதனில் வைக்குந்
திருமக னளிப்பிற் கேற்றஞ் செப்புவர் கொல்லோ வீச்
னருளொரு சங்கா ரத்தி னரும்பொரு ளறிந்த நல்லோர்.


(அ-ரை) பிணித்து - பந்தப்படுத்தி; திருமகன் - விஷ்ணுவின்; அளிப்பை - திதித்தொழிலை; பயப்பாடு பற்றித் திதி தாமதமென்பது கருத்து.

'நுகரச்செய்கை காப்பது' என்ற சித்தியார் இச்செய்யுட்குப் பிரமாணம். (கூக)
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சிவபரத்துவ நிச்சயம் - Page 5 Empty Re: சிவபரத்துவ நிச்சயம்

Post by நந்தி Sat Aug 21, 2010 5:33 pm

சங்காரத்துக்குத் தாற்பரியம் இதுவென்பது

காரண மதனில் மீளக் காரிய வுலகை வாங்கித்
தாரண மீசன் செய்வன் சங்கார மதுவே சீவர்
மாரண முற்று மீள வருமிளைப் பொழிக்க வந்தப்
பூரண னியற்று ம·தைப் புல்லரே கோற லென்பர்.


(அ-ரை) வாங்கி - ஒடுக்கி; தாரணம் செய்வன் - வைப்பான்; ஒடுக்கி வைப்பான் - ஒடுக்குவான்; ஆகவே வாங்கித்தாரணம் செய்வன் என்பது ஒரு சொல் நீர்மைத்து என்க; மாரணம் உற்று - இறந்து; மீளவரும் - திரும்பப்பிறக்கிற; இளைப்பு - சோர்வு; அ·தை - அச்சங்காரத்தை; புல்லர் - அற்பர்; கோறல் - கொலை; என்பர் - என்று பழிப்பார்; பயப்பாடுபற்றிச் சங்காரம் சாத்துவிக மென்பது கருத்து.

அழிப் பிளைப்பாற்றல்' என்ற சித்தியார் இச் செய்யுட்குப் பிரமாணம். (கஉ)
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சிவபரத்துவ நிச்சயம் - Page 5 Empty Re: சிவபரத்துவ நிச்சயம்

Post by நந்தி Sat Aug 21, 2010 5:35 pm

திதியும் சங்காரமும் இன்னின்ன பார்வையிற் சத்துவமா மென்பது.

உலகினை யளித்த லென்னு முலகுணி செயலைப் பாரின்
சலனவாழ் வுவந்த நொய்யர் சத்துவ குணத்த தென்ப
ருலகினை யழித்த லென்னு முருத்திரன் செயலைப் பாரின்
சலனவாழ் வுவர்த்த தீரர் சத்துவ குணத்த தென்பர்.


(அ-ரை) உலகுணி - விஷ்ணுவின்; பாரின் - உலகத்திலுள்ள; சலனவாழ்வு - துக்க வாழ்க்கையை; உவந்த - விரும்பிய; நொய்யர் - எளியவர்; உவர்த்த - வெறுத்த; தீரர் - வலியவர்; மதிப்பவன் யோக்கியதை பற்றித் திதி தாமசமும் சங்காரம் சாத்துவிகமுமாமென்பது தாற்பரியம்.

கருத்தா, பயப்பாடு, மதிப்பவன் என்னு மூன்றாலும் சங்காரம் சாத்துவிகமும் திதி தாமதமு மாகிச் சொரூபத்தில் மாத்திரம் மாறிக்கொள்ளும்; அது பற்றி ஆவ தொன்றுமில்லையென விடுக்க. (கூங)
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சிவபரத்துவ நிச்சயம் - Page 5 Empty Re: சிவபரத்துவ நிச்சயம்

Post by நந்தி Sat Aug 21, 2010 5:36 pm

உருத்திரன் தாமதவினை செய்யக் காரணம் இது வென்பது.

சத்துவ குணத்தன் செய்யிற் றாமச வினைநன் றாகஞ்
சத்துவ வினையி லேவத் தமகுண னல்ல னாவன்
சத்துவ குணத்துச் சம்பு தாமத குணத்து மாலைச்
சத்துவ வினையி லேவித் தமவினை செய்வான் றானே.



(அ-ரை) நன்று ஆகும் - கர்த்தாவின் சாத்வித ஞான சாமர்த்தியத்தால் நலன் தருவதாகும்; ஏவ - நியமித்தால்; தமகுணன் நல்லன் ஆவன் - தாமஸி தன்னை நியமித்தவனின் அதிகாரத்துக்கு அஞ்சி அத்தொழிலைச் செய்து தன் சொரூபம் மறையப்பெற்று உத்யோக சொரூபத்தால் நல்லவன்போலாதல் கூடும்; ஏவி - நியமித்து; தாமஸி தாமஸத் தொழிலைச் செய்ய நேர்ந்தால் அது பெருங்கொடுமையாய் முடியும்; உருத்திரன் பரமசாத்துவிகி; ஆகலின் அவன் சங்காரத்தைத் தன்பாலே வைத்துக் கொள்வன் என்க.

'ஸ்ருஷ்டி ஸ்திதி லயஸ்யச காரணத்வமே நசிச் சக்த்யா ரஜ: ஸத்வதமோருணை:' என்ற ராமபூர்வதாபிநியுபநிஷத்தும், 'தமோ மாயாத்மகோ ருத்ர: ஸாத்விக மாயாத்மகோ விஷ்ணூ ராஜஸ மாயாத்மகோ ப்ரஹ்மா' என்ற பாசுபதப்ரஹ்மோப நிஷத்தும், 'ராஜஸோ - - ப்ரஹ்மா - - ஸாத்விக: - - விஷ்ணு - - தாமஸ: - - ருத்ரச்சேதிததோச்யதே' என்ற யோகசூடாமணியுபநிஷத்தும், 'ஸத்வரஜஸ் தமாம்ஸி' என்ற தேவ்யுபநிஷத்தும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள். (கூச)
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சிவபரத்துவ நிச்சயம் - Page 5 Empty Re: சிவபரத்துவ நிச்சயம்

Post by நந்தி Sat Aug 21, 2010 5:38 pm

சர்வகிருத்தியங்களும் அநுக்கிரகார்த்தமே யென்பது.

திதியினு ளடங்கு மேனைச் சிருட்டியு மொடுக்கந் தானுந்
திதிபுரி விண்டு தானே தேவெனிற் செப்பக் கேணீ
திதியொடு பிறவு மெல்லாந் திகழனுக் கிரகத் தாமத்
திதிமுத லதனா லாவன் திகழ்சகா சிவனி லம்மா.


(அ-ரை) ஆம் - அடங்கும்; அத்திதிமுதல் - அவ்விஷ்ணு; அதனால் அப்படியடங்குவதால்; ஆவன் - அடங்குவன். (கூசா)

******
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சிவபரத்துவ நிச்சயம் - Page 5 Empty Re: சிவபரத்துவ நிச்சயம்

Post by நந்தி Sat Aug 21, 2010 5:40 pm

தெய்வகுணமாகாதன இவையென்பதும் அவை விஷ்ணுவிடமே காணப்படுமென்பதும்.

வஞ்சக முறுதல் சாமம் வணங்குத லழுகை மோகந்
துஞ்சறு படைகட் காசை சொன்னசொற் புரட்ட றோல்வி
யஞ்சிட லதர்மப் போரி லன்பரைச் செலுத்த லாதி
நஞ்சிவ தேவற் கில்லை நாரண வுயிருக் குண்டால்.


(அ-ரை) வஞ்சகம் உறுதல் - பிறர் செய்யும் மாயையிலகப்பட்டு வருந்துதல்; மோகம் - அறிவிழத்தல்; துஞ்சு அறு - கெடுதலில்லாத; படை கட்கு - ஆயுதங்களுக்கு; தோல்வி - தோற்றல்; அஞ்சிடல் - நடுங்கல்; ஆதி - முதலியவை; நாராயணனை உயிரென்னவே அவனிற்கீழிட்ட பிரமன் இந்திரன் முதலிய எல்லாத்தேவர்களையுமே உயிர்களென்று சொன்னதாயிற்று.

'மாயமான்றன்னைப் பொய்ம்மானெனவறியா தரக்கன் மாயையிலகப்பட்டு' என்ற சித்தியாரும், 'மாயனவ் வேடங் கொண்டே வன்சலந்தரன் கிழத்திதூய நலங்கவர்ந்தான்' என்ற சோமேசர்முதுமொழிவென்பாவும், 'ஜநார்த்தனர் - - எல்லா முனிவர்களையும் வணங்கிப் பூஜித்து' என்ற பாரதம் உத்யோகம் 83 ஆவது அத்தியாயமும், 'பலராமரும் ஜனார்த்தனரும் - - பாண்டு புத்ரர்களைப் பார்த்தும் - - திரெளபதியைப் பார்த்தும் மிக்கதுயரமுற்றவர்களாகத் துன்பக் குரல்களை வெளியிட்டுக்கொண்டு அழுதார்கள்' என்ற பாரதம் வனம் 119 ஆவது அத்தியாயமும் 'நானும் மோகத்தை அடைந்தவனாகித் தேர்த்தட்டில் உட்கார்ந்தேன்' (நானும் - கிருஷ்ணனும்) என்ற மேற்படி 21 ஆவது அத்தியாயமும், விஷ்ணு சக்கரம் பெற ஆசைப்பட்டதும், கிருஷ்ணன் பாரதயுத்தத்தில் படைக்கலங்களைத் தொடுவதில்லையென்று பிரதிக்கினை செய்திருந்தும் சில சமயங்களிற் குபிதராகி அவற்றை ஏந்தி யுத்தத்திற்குப் புறப்பட்டதும், அவன் வாணனிடம் பல முறை தோற்றதும், துருவாசருக்குப் பயந்து அவருடைய எச்சிற் பாயஸத்தைத் தன் உடம்பெங்கும் அக்கிருஷ்ணன் தடவிக்கொண்டதும், ராமன் மறைந்திருந்து வாலியைக்கொன்றதும், கிருஷ்ணன் தருமனைப் பொய்சொல்வித்துத் துரோணருயிரைத் வாங்குவித்ததும், 'ஸர்வேதேவா பசுதாமவாபு: ஸ்வயம் தஸ்மாத் பசு பதிர் பபூவ', 'ஹேயாந் விஷ்ணவாதி காந்ஸ¤ராந்' என்ற சரபோபநிஷத்தும், விஷ்ணவாதி ஸ¤ரை ரஜஸ்ரம்' என்ற தேஜோபிந்தூபநிஷத்தும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள். (கூஎ)
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சிவபரத்துவ நிச்சயம் - Page 5 Empty Re: சிவபரத்துவ நிச்சயம்

Post by நந்தி Sat Aug 21, 2010 5:45 pm

சிவபிரானே உயிர்களுக்குப் பிறப்பிறப்புத் துன்பத்தை நீக்குவாரென்பது.

மடநலார் வயிற்றில் வாரா மரித்திடா வியல்பு வாய்ந்த
கடவுளான் சிவனே யாவன் கருணையா லவனே சீவர்க்
கடவலான் பிறப்பைச் சாவை யச்சுதன் வல்ல னாயின்
முடமுளான் றன்னைத் தூக்கி முடவனு நடக்க வல்லான்.


(அ-ரை) மடநலார் வயிற்றில் வாரா - பிறவாத; மரித்திடா - இறவாத; அடவலான் - ஒழிக்கவல்லான்.

'அஜாத இத் யேவம் கச்சித் பீரு: ப்ரதி பத்யதே| ருத்ரயத்தே தக்ஷ¢ணம் முகம் தேநமாம் பாஹி நித்யம்' என்ற சுவேதாசுவதரோபநிஷத்தும், 'உடைந்த மரக்கலம் பிறிதொருமரக்கலத்தைக் கரையடைவிக்கமாட்டாது; அதுபோலப் பிறந்திறந்துழலுந்தேவர் அவ்வாறுழலு மெம்மனோர்க்குச் சரணாகமாட்டார்' என்ற சதுர்வேத தாற்பரிய சங்கிரகமும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள். (கூகூ)
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சிவபரத்துவ நிச்சயம் - Page 5 Empty Re: சிவபரத்துவ நிச்சயம்

Post by நந்தி Sat Aug 21, 2010 5:46 pm

விஷ்ணு வீழ்ந்த தேவகி கோசலை முதலியோரின் கருவினுள்ளேயே சகலவுயிர்களும் விழாமையால் கருப்பத்துள் விழுந்தவுயிர்களைக் கடவுளுங் கருப்பத்துள் விழுந்தே யெடுப்பரென்றல் பொருந்தா தென்பது.

கூவிலி லாழுஞ் சேயைக் குதித்தெடுத் தாளுந் தாய்போற்
பாவம துடையார் வீழ்சூற் படுகுழி தனின்மால் வீழ்ந்தப்
பரவரை யெடுப்ப னென்றாய் பண்டவன் வீழ்ந்து நொந்த
தேவகி கருவுட் டானோ செறிவன வுயிர்க ளெல்லாம்.


(அ-ரை) கூவலில் - கிணற்றில்; ஆழும் - விழுந்த; சேயை - குழந்தையை; பண்டு - முன்காலத்தில்; அவன் - அம்மாலோன்; தேவகி - கண்ணந்தாய்; இங்கு உபலக்கணம்; செறிவன - புகுந்து அழுந்துவன. (க00)
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சிவபரத்துவ நிச்சயம் - Page 5 Empty Re: சிவபரத்துவ நிச்சயம்

Post by நந்தி Sat Aug 21, 2010 5:46 pm

பிறப்பனவெல்லாம் உயிர்களே யென்பது.

எவனுரு நான்கு தோற்றத் தெழுவகைப் பிறப்பின் பாலா
மவலவெண் பத்து நானூ றாயிர யோனி புக்குப்
பவமுறு முயிரே யன்னோன் பகர்பரப் பிரம மல்லன்
சிவனல தாரே யாண்டுச் செறிந்துருச் சமைத லேயார்.


(அ-ரை) உரு சரீரம்; நான்கு தோற்றம் - கருப்பை முட்டை விதை வேர்வை; எழுவகைப் பிறப்பின் பாலாம் - ஊர்வன மனிதர் நீர்வாழ்வன விலங்கு பறவை தேவர் தாவரம் என்பவற்றைச் சேர்ந்த; அவலம் - துன்பம்; பவமுறும் - பிறக்கும்; எவனுருப் பவமுறும் அன்னோன் உயிரே, பரப்பிரமம் அல்லன் என்க. அன்னோன் - அந்தச் சரீரத்தையுடையவன்; பகர் - வேதத்திற் சொல்லப்பட்ட; ஆண்டு - அந்தயோனிகளில்; செறிந்து - புகுந்து; உருச் சமைதல் - சரீரம் உண்டாவதை; ஏயார் - பொருந்தார்.

'அண்டஜம் ஸ்வேதஜ முத்பிஜ்ஜம் ஜராயுஜம் யத் கிம் சைதத் ப்ராணி ஸ்தாவர ஜங்கமம் மனுஷ்ய மஜீஜநத்' என்ற பஹ்வ்ருசோபநிஷத்தும், 'உரை சேரும் எண்பத்து நான்கு நூறாயிரமாம் யோனிபேதம் நிரைசேரப்படைத்து' என்ற தேவாரமும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள். (க0க)
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சிவபரத்துவ நிச்சயம் - Page 5 Empty Re: சிவபரத்துவ நிச்சயம்

Post by நந்தி Sat Aug 21, 2010 5:47 pm

கடவுள் கருவுள் உருவங்கொள்ளாமையால் அவருடைய வியாபகத்துவங் கெடாதென்பது.

கருவினுளுருவங்கொள்ளான்கடவுளென்றுரைக்கினன்னான்
சருவவி யாபி யாதல் சரதமன் றென்றா யாருங்
கருவினு ளில்லை யென்னார் கடவுளை கருவுட் கொள்ளுஞ்
சருவவி யாபி தேகஞ் சமைவதெவ் வண்ண மாங்கே.


(அ-ரை) சரதம் அன்று - உண்மையாகாது; சமைவது - உண்டாவது; எவ்வண்ணம் - எப்படி; ஆங்கே - அக்கருவுள்.
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சிவபரத்துவ நிச்சயம் - Page 5 Empty Re: சிவபரத்துவ நிச்சயம்

Post by நந்தி Sat Aug 21, 2010 5:48 pm

கடவுள் பிறந்தாலவரோடு உயிரிடை வேற்றுமை காணமுடியாதென்பது.

கருவதி லுயிரே சேருங் காரணங் கரும மாகு
மொருசில ரதனிற் றேவு முறுமது சுயேச்சை யென்ப
ருருவொடு பிறந்த பின்ன ருயிரிது தேவி· தென்றவ்
விருவரி னியல்பை வெவ்வே றெப்படி யறிதல் கூடும்.


(அ-ரை) தேவும் - கடவுளும்; உறும் - பொருந்தும்; உருவொடு பிறந்த பின்னர் - கருவிலிருந்து சரீரத்தோடு வெளிப்பட்ட பிறகு; இருவரின் உயிர் கடவுள் என்னும் இருபொருள்கனினுடைய; எப்படி அறிதல் கூடும் - ஒருபடியாலும் அறியமுடியாதது என்றபடி.

'இருவினை யின்பத் துன்பத் திவ்வுயிர் பிறந்திறந்து வருவது போவதாகும்' என்ற சித்தியாரும், 'நால்வகையோனியுள் ஒருயோனி வாய்ப்பட்டுப் பிறப்பன யாவை அயையெல்லாஞ் சீவவர்க்கம். அவ்வாறு பிறத்தலில்லது யாது அது பதிப்பொரு ளென்னு மிது வொன்றே ஏனைச் செயல்களான் வேற்றுமையறிய வாராத அவ்விரண்டற்குந் தம்முள் வேற்றுமையறிய நிற்பதாகலின் - - ' என்ற சித்தியார்ப்பொழிப்பும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள். (க0ங)
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சிவபரத்துவ நிச்சயம் - Page 5 Empty Re: சிவபரத்துவ நிச்சயம்

Post by நந்தி Sat Aug 21, 2010 5:48 pm

அற்புதங்கள் செய்வதனாலேயே ஒருவர் கடவுளென்று சொல்லப் படமாட்டாரென்பது.

உற்பவ மெடுத்த தேவ னோங்குதன் பரத்து வத்தை
யற்புத வினைக ளாற்றி யனைவர்க்குந் தெரிப்பா னென்பாய்
பற்பல வினைக ளந்தப் படிபல முனிவர் செய்வார்
தற்பர னிவனென் றன்னோர் தமையெவண் பிரித்துக் காண்பாய்.


(அ-ரை) அன்னோர் தமை - அந்தத் தேவனையும் அந்த முனிவர்களையும், எவண் - எப்படி? (க0ச)
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சிவபரத்துவ நிச்சயம் - Page 5 Empty Re: சிவபரத்துவ நிச்சயம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 13 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 11, 12, 13  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum