தமிழ் | Tamil | Forum
தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

கூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.

புகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.
Latest topics
» சிறந்த பொழுதுபோக்கு இணையதளம்!
by pba Sat Jul 02, 2016 8:11 pm

» ஏற்றுமதி உரிமம் பெறும் விண்ணப்பம்
by tamilnews Tue Mar 24, 2015 8:00 pm

» மொபைல், டிடிஎச் ரீசார்ஜ் செய்யப் போறீங்களா? இந்த சலுகைகளைப் பாருங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:41 am

» மொபைல் ரீசார்ஜ் செய்து ஷாப்பிங் கூப்பன் இலவசமாக பெறுங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:38 am

» மெமரி கார்டு வாங்கப் போறீங்களா? 74% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:36 am

» அமேசானில் பெண்களுக்கான ஆடைகள் 70% வரை தள்ளுபடி !
by dsytamil Wed Jan 14, 2015 1:34 am

» அமேசானில் ஆண்களுக்கான ஆடைகள் 60% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:31 am

» லெனோவா டேப்ளட் 43% சலுகை விலையில் ரூ. 5949 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:28 am

» ப்ளிப்கார்ட் தளத்தில் சிறுவர்களுக்கான ஆடைகள் 70% வரை + 30% கூடுதல் தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:14 am

» அமேசான் தளத்தில் 50% தள்ளுபடி விலையில் மொபைல்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:13 am

» ரூ. 7499 மதிப்புள்ள மைக்ரோமேக்ஸ் ஏ1 ஆன்ட்ராய்டு மொபைல் இப்போது ரூ. 5499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:11 am

» ரூ. 19999 மதிப்புள்ள நோக்கியா லூமியா 625 மொபைல் ரூ. 7499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:10 am

» ப்ராண்டட் காலணிகளுக்கு 70% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:08 am

» ஆன்லைன் ஷாப்பிங்கில் ப்ரிண்டர்களுக்கு 33% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:06 am

» ஆன்லைனில் பொருள் வாங்கப் போறீங்களா? 70% வரை பணத்தை சேமியுங்கள்!
by dsytamil Tue Jan 13, 2015 12:30 am

» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...!
by sathikdm Sun Oct 19, 2014 4:45 pm

» சிறுதொழில் செய்பவர்கள் இணையதளம் தொடங்க வேண்டியதின் அவசியம்!
by pba Sat Sep 27, 2014 12:58 am

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:47 pm

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:42 pm

» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
by santhoshpart Wed Aug 27, 2014 4:22 pm

» “சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா!”
by santhoshpart Wed Aug 13, 2014 3:54 pm

» Daily Rs.500/- and Above
by K.MARIAPPAN Wed Jul 30, 2014 12:01 pm

» http://www.neobux.com/?r=narasimmant
by Navaneethakrishnan Wed Jul 02, 2014 3:41 pm

» வணக்கம் என் பெயர் வேணு
by A.Venu Fri Jun 27, 2014 10:10 am

» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?
by sathikdm Wed Jun 18, 2014 3:24 pm

» தமிழ் மொழி மூல கல்வி இணையதளம்
by afdhaal Wed May 28, 2014 9:22 pm

» வருக. வருக. வணக்கம்.
by மகி Mon May 12, 2014 3:55 pm

» அறிமுகம் -விநாயகா செந்தில்.
by மகி Mon May 12, 2014 3:53 pm

» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....!
by vinayagasenthil Sat May 10, 2014 9:04 pm

» +2result இங்கே காணலாம்!
by மகி Fri May 09, 2014 12:41 am

பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

புத்தாண்டுப் பரிசு!

Go down

புத்தாண்டுப் பரிசு! Empty புத்தாண்டுப் பரிசு!

Post by மகி on Mon Feb 01, 2010 2:57 am

மாதா கோயிலின் முதல் மணியோசை அந்தப் பனிபொழிவை கிழித்துக் கொண்டு அந்தப்பகுதி முழுவதும் கணீர் என எதிரொலிக்க,​ புத்தாண்டு சிறப்பு திருப்பலியில் கலந்து கொள்ள மக்கள் குடும்பம் குடும்பமாக புறப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.

கேத்தரீன் இன்றைக்கு குளிர் ரொம்ப அதிகமாக இருக்கிறது. இந்த ஸ்வெட்டரை போட்டுக் கொள்'' என தன் மகளிடம் ஜென்சி கொடுக்க,​ ''வேண்டாம் மம்மி,​ ஸ்வெட்டரைப் போட்டுக்கிட்டா புத்தாண்டு புது டிரஸ்ûஸ மறைச்சிடும்'' என்றாள் கேத்தரீன்.

''சரி,​ உன் விருப்பம்'' என்ற ஜென்சி,​ தன் கணவரோடு, ​மகளை அழைத்துக் கொண்டு ஆலயத்திற்கு புறப்பட்டார்.

அடைக்கல மாதா கோயில் கோபுரம் சீரியல் பல்புகளால் மின்னிக் கொண்டிருந்தது. சிலுவையில் அழகான கிறிஸ்துமஸ் ஸ்டார் பொன்னிறத்தில் மின்னிக் கொண்டிருந்தது. பாடல் குழுவினர் கிறிஸ்தவப் பாடல்களை இசையோடு மைக்கில் பாடிக் கொண்டிருந்தனர். "ரொம்பக் குளிர் வாட்டுது. மம்மியின் அட்வைஸ்படி ஸ்வெட்டர் அணிந்து வந்திருக்கலாமோ' என கேத்தரீனுக்குத் தோன்றியது.

ஆலய வளாகத்தின் முன் சாலையின் இருபுறங்களிலும் கையேந்துபவர்களின் கூட்டம் நிரம்பி வழிந்தது. பண்டிகைக் காலங்களில் எங்கிங்கிருந்தெல்லாமோ வந்து இங்கே அமர்ந்து கையேந்துவார்கள்.

அந்தக் கூட்டத்திலிருந்து ஒரு பெரியவரின் அபயக் குரல் கேட்டது. ''அம்மா... தாயே,​ இந்தக் கண் தெரியாதவனை ஆலயத்தின் வளாகத்திற்குள் கொண்டு போய் விட்டிடுங்கம்மா... இங்கே இருக்கிற கூட்டத்துல என்னால பிச்சை எடுக்க முடியாதும்மா... குளிரும் ரொம்ப வாட்டுதும்மா... இரக்கம் காட்டுங்கம்மா...'' எனக் குரல் கொடுக்க,​ பக்கத்தில் அமர்ந்திருந்த ஒரு பிச்சைக்காரர்,​ ''யோவ் பெரிசு... கம்முனு கெட. ரெண்டு கண்ணும் அவுஞ்சி போயி கெடக்கு. கைகள் ரெண்டும் புழுத்து போயி கெடக்கு. உன்ன யாரு கூட்டிப் போய் விடுவாங்க..? பேசாம கெட...'' என அதட்டினார்.

கேத்தரீன் காதுகளில் பெரியவரின் அபயக் குரல் கேட்டது.

''டாடி,​ அந்தப் பெரியவரை பார்த்தால் பாவமா இருக்கு. ஹெல்ப் பண்ணுவோமா?'' என்றாள்.

உடனே கேத்தரீனின் அப்பா லாரன்ஸ்,​ ''கேத்தரீன் சும்மா வா. அவர் கைகளைப் பார்த்தாயா?​ ஒரே தொழு நோய். பார்த்தாலே அருவெறுப்பா இருக்கு'' என்றார்.

அம்மா ஜென்சியோ,​ ''கேத்தரீன் உனக்கு வேற வேலையே இல்லையா?'' என கடிந்துக் கொண்டார்.பாவம் அந்தப் பெரியவருக்கு உதவ முடியவில்லையே என்ற கவலையோடு,​ ஆலயத்துக்குள் நுழைந்தாள் கேத்தரீன். அவள் சிறுமிகள் அமரும் இடத்துக்குச் சென்று அமர்ந்துக் கொள்ள,​ பெற்றோர்கள் பெரியவர்களுக்கான இடத்தில் அமர்ந்óதுக் கொண்டனர்.

இரண்டாம் மணி அடித்து முடித்ததும் வருகைப் பாடலோடு,​ புத்தாண்டு திருப்பலி தொடங்கியது. ஆலயத்தின் பங்குத் தந்தை பிரான்சிஸ் சேவியர் அடிகளார் திருப்பலி வழிபாட்டை நடத்திக் கொண்டிருந்தார். கேத்தரீனுக்கு ஆலயத்திற்குள் இருக்கவே பிடிக்கவில்லை. அந்தப் பெரியவரின் குரல் திரும்ப திரும்ப அவள் செவியில் ஒலித்துக் கொண்டே இருந்தது.பெரியவருக்கு உதவ முடியாமல் போய் விட்டதே என மிகவும் வருந்திய அவள்,​ இப்பொழுதும் ஒன்றும் கெட்டுப் போய் விடவில்லை. நான் உதவி செய்திட பெற்றோர்கள் தற்போது தடுக்க முடியாது. நான் கண்டிப்பாக அந்தப் பெரியவர்க்கு உதவ வேண்டும் என்ற முடிவோடு,​ ஆலயத்திலிருந்து கிளம்பி வேக வேகமாக வெளியே ஓடினாள்.

''தாத்தா நான் உங்களுக்கு உதவி செய்யட்டுமா?​ வாருங்கள் உங்களை ஆலய வளாகத்திற்குள் அழைத்துச் செல்கிறேன்'' என்றாள். பெரியவர் தட்டுத் தடுமாறியபடி எழுந்தார். அவரின் கைகளைப் பிடித்துக் கொண்டு ஆலயத்திற்குள் அழைத்துச் சென்றாள்.''உன் பெயர் என்னம்மா?'' எனப் பெரியவர் கேட்க,​ அதற்கு ''என் பெயர் கேத்தரீன்'' என்றாள். ​''நல்ல பேரு. பெண் புனிதரோடு பேரு. நீ நல்லா இருப்பே'' என வாழ்த்தினார்.பெரியவரை வளாகத்திற்குள் விட்டு விட்டு ஆலயத்திற்குள் சென்றாள் கேத்தரீன். அவள் செய்தது அவளுக்கு மன நிறைவையும்,​ மகிழ்ச்சியையும் தந்தது.இரண்டாம் வாசகம் படித்து முடிந்ததும் பங்குத் தந்தை பிரான்சிஸ் சேவியர் அடிகளார் தன் பிரசங்கத்தைத் தொடங்கினார். அப்போது,​ கோயில் உபதேசியார் ஒரு துண்டுச் சீட்டை பங்குத் தந்தையிடம் தந்து விட்டுப் போக,​ அதைப் பிரித்து படித்தப் பின் தன் பிரசங்கத்தை ஆரம்பித்தார்.''அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!​ இறைவன் அனைவருக்கும் இதயத்தை படைத்துள்ளார். அதில் துடிப்பை மட்டுமல்ல,​ கருணையையும் வைத்துள்ளார். அந்தக் கருணையை உரியவர்க்கு உரிய நேரத்தில் நாம் காட்டுகிறோமா?​ அனைவரும் யோசிக்க வேண்டும்.

அப்படி செய்பவர்கள்தான் உண்மையான இதயம் படைத்தவர்கள். அன்னை தெரேசா சேரி பிள்ளைகள் மீதும்,​ பிணியாளிகள் மீதும்,​ குஷ்டரோகிகள் மீதும் கருணைக் காட்டினார். அதனால்தான் அவர் புகழ் உலகமெங்கும் பரவிக் கிடக்கிறது. கத்தோலிக்க இறைமக்களே... என்னுடன் திருப்பலியில் பங்கு பெறும் நம் பங்கின் உதவிப் பங்கு குரு ஃபெலிக்ஸ் எங்கே?​ என்ன சம்பந்தம் இல்லாமல் பிரசங்கிக்கிறேன் என நினைக்கின்றீர்களா?​ நிச்சயம் இல்லை. சம்பந்தம் இருக்கிறது. கிறிஸ்துமஸ் தினத்தன்று சபை மக்களுக்கு ஒரு போட்டி வைக்கப்படும். அந்தப் போட்டி மிகவும் சஸ்பென்ஸôக இருக்கும். அந்தப் போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு மாதா உருவம் பொறித்த தங்க நாணயம் பரிசாக வழங்கப்படும் என்று அறிவித்திருந்தோம்.உதவிப் பங்கு குரு ஃபெலிக்ஸ் துடிப்பான இளைஞர். முற்போக்கு எண்ணம் கொண்ட இளம் துறவி. எதையும் வித்தியாசமாக செய்து நற்செய்தியை பரப்ப வேண்டும் என நினைப்பார். தமாஷாக எதையாவது செய்து மக்கள் மனங்களில் இரக்கம்,​ கருணை,​ தயவு போன்ற எண்ணங்களை வளர்க்க முயற்சிப் பார்.

அது போல,​ இந்தப் புத்தாண்டு தினத்தில் ஒரு புதுமையான போட்டியை அவரே முன் நின்று நடத்தினார். நீங்கள் அனைவரும் ஆலயத்திற்கு வரும் வழியில்,​ ''அம்மா... தாயே... இரக்கம் காட்டுங்க. குளிர் ரொம்ப வாட்டுது. என்னை பிச்சை எடுக்க வசதியாக,​ ஆலய வளாகத்திற்குள் கொண்டு விடுங்கள்'' என ஒரு கண்பார்வையற்ற,​ குஷ்டம் பிடித்த பெரியவரை கண்டீர்கள் அல்லவா?​ அந்தப் பெரியவர் வேறு யாருமல்ல,​ அவர் ஃபெலிக்ஸ்தான். இப்போது பீடத்தில் உங்கள் முன் தோன்றுவார்'' என பெரிய பங்கு குரு அறிவிக்க,​ பீடத்தில் தோன்றி தன் ஒப்பனையை கலைத்தார் ஃபெலிக்ஸ். சபை மக்களின் கரகோஷம் ஆலயம் எங்கும் எதிரொலித்தது.''நம் மகள் இந்தப் பெரியவருக்குத்தானே உதவ வேண்டும் என்றாள். நாம் அவளை உதவ விடாமல் தடுத்து விட்டோமே. நம் மகளின் எண்ணப்படி உதவி செய்திருந்தால் போப் ஆண்டவரால் ஆசீர்வதிக்கப்பட்ட மாதா உருவம் பொறித்த தங்க நாணயம் கிடைத்திருக்குமே'' என கேத்தரீனின் பெற்றோர்கள் நினைத்துக் கொண்டிருக்க,​ ஆலயப் பங்குத் தந்தை பிரான்சிஸ் சேவியர் அடிகளார்,​ ''போட்டியில் ஒரு சிறுமி மட்டும் வெற்றி பெற்றிருக்கிறார்.

அந்தச் சிறுமி லாரன்ஸ்,​ ஜென்சி தம்பதியரின் ஒரே மகள் கேத்தரீன்'' என அறிவிக்க,​ சபை மக்களின் பலத்த கரகோஷத்தோடு பலிபீடம் ஏறினாள் கேத்தரீன்.அவளுக்கு மாதா உருவம் பொறித்த தங்க நாணயத்தை வழங்கி ஆசீர்வதித்தார்கள். கேத்தரீனுக்குக் கிடைத்த புத்தாண்டுப் பரிசு,​ நாமும் கருணை உள்ளத்தோடு வாழ வேண்டும் என்று உறுதியை எடுக்க அங்குள்ளவர்களுக்கு உதவியது.

நன்றி: தினமணி.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum