தமிழ் | Tamil | Forum
தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

கூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.

புகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.
Latest topics
» சிறந்த பொழுதுபோக்கு இணையதளம்!
by pba Sat Jul 02, 2016 8:11 pm

» ஏற்றுமதி உரிமம் பெறும் விண்ணப்பம்
by tamilnews Tue Mar 24, 2015 8:00 pm

» மொபைல், டிடிஎச் ரீசார்ஜ் செய்யப் போறீங்களா? இந்த சலுகைகளைப் பாருங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:41 am

» மொபைல் ரீசார்ஜ் செய்து ஷாப்பிங் கூப்பன் இலவசமாக பெறுங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:38 am

» மெமரி கார்டு வாங்கப் போறீங்களா? 74% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:36 am

» அமேசானில் பெண்களுக்கான ஆடைகள் 70% வரை தள்ளுபடி !
by dsytamil Wed Jan 14, 2015 1:34 am

» அமேசானில் ஆண்களுக்கான ஆடைகள் 60% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:31 am

» லெனோவா டேப்ளட் 43% சலுகை விலையில் ரூ. 5949 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:28 am

» ப்ளிப்கார்ட் தளத்தில் சிறுவர்களுக்கான ஆடைகள் 70% வரை + 30% கூடுதல் தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:14 am

» அமேசான் தளத்தில் 50% தள்ளுபடி விலையில் மொபைல்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:13 am

» ரூ. 7499 மதிப்புள்ள மைக்ரோமேக்ஸ் ஏ1 ஆன்ட்ராய்டு மொபைல் இப்போது ரூ. 5499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:11 am

» ரூ. 19999 மதிப்புள்ள நோக்கியா லூமியா 625 மொபைல் ரூ. 7499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:10 am

» ப்ராண்டட் காலணிகளுக்கு 70% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:08 am

» ஆன்லைன் ஷாப்பிங்கில் ப்ரிண்டர்களுக்கு 33% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:06 am

» ஆன்லைனில் பொருள் வாங்கப் போறீங்களா? 70% வரை பணத்தை சேமியுங்கள்!
by dsytamil Tue Jan 13, 2015 12:30 am

» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...!
by sathikdm Sun Oct 19, 2014 4:45 pm

» சிறுதொழில் செய்பவர்கள் இணையதளம் தொடங்க வேண்டியதின் அவசியம்!
by pba Sat Sep 27, 2014 12:58 am

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:47 pm

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:42 pm

» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
by santhoshpart Wed Aug 27, 2014 4:22 pm

» “சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா!”
by santhoshpart Wed Aug 13, 2014 3:54 pm

» Daily Rs.500/- and Above
by K.MARIAPPAN Wed Jul 30, 2014 12:01 pm

» http://www.neobux.com/?r=narasimmant
by Navaneethakrishnan Wed Jul 02, 2014 3:41 pm

» வணக்கம் என் பெயர் வேணு
by A.Venu Fri Jun 27, 2014 10:10 am

» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?
by sathikdm Wed Jun 18, 2014 3:24 pm

» தமிழ் மொழி மூல கல்வி இணையதளம்
by afdhaal Wed May 28, 2014 9:22 pm

» வருக. வருக. வணக்கம்.
by மகி Mon May 12, 2014 3:55 pm

» அறிமுகம் -விநாயகா செந்தில்.
by மகி Mon May 12, 2014 3:53 pm

» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....!
by vinayagasenthil Sat May 10, 2014 9:04 pm

» +2result இங்கே காணலாம்!
by மகி Fri May 09, 2014 12:41 am

பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

யுபிஎஸ்சி தேர்வு: புதிய அறிவிக்கை நிறுத்திவைப்பு!

Go down

யுபிஎஸ்சி தேர்வு: புதிய அறிவிக்கை நிறுத்திவைப்பு! Empty யுபிஎஸ்சி தேர்வு: புதிய அறிவிக்கை நிறுத்திவைப்பு!

Post by மகி on Sat Mar 16, 2013 11:02 am

சிவில் சர்வீஸ் தேர்வுக்கான புதிய கட்டுப்பாடுகள் தொடர்பாக மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) வெளியிட்டுள்ள அறிவிக்கை தாற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மக்களவையில் வெள்ளிக்கிழமை, அவசர முக்கியத்துவம் வாய்ந்த விவகாரம் குறித்த விவாதத்துக்கு பதிலளித்த பிரதமர் அலுவலக விவகாரத் துறை இணையமைச்சர் வே. நாராயணசாமி இதைத் தெரிவித்தார்.

"இந்த விவகாரத்தில், உறுப்பினர்களின் கருத்துகளை மத்திய அரசு கவனத்தில் கொள்கிறது.

இது தொடர்பாக, மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்துடன் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும். அதுவரை, யு.பி.எஸ்.சி. தேர்வு குறித்த புதிய அறிவிக்கை தாற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது'' என்று அவர் கூறினார்.

முன்னதாக, "ஆங்கிலத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்ற நோக்கில் யு.பி.எஸ்.சி. தேர்வு குறித்த புதிய அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது'' என்று கூறி, இது குறித்து பிரச்னை எழுப்பிய அனைத்துக் கட்சிகளின் உறுப்பினர்களும் அமளியில் ஈடுபட்டனர்.

அதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்த, அவையை வழிநடத்திய மூத்த உறுப்பினர் பி.சி. சாக்கோ அனுமதி வழங்கினார். அதைத் தொடர்ந்து, உறுப்பினர்கள் பலரும் தங்கள் கருத்துகளை முன்வைத்தனர்.

டி.கே.எஸ். இளங்கோவன் (திமுக): யு.பி.எஸ்.சி-யின் எதேச்சதிகார செயலை அனுமதிக்க முடியாது. அரசியலமைப்பின் தன்னிச்சை அதிகாரம் படைத்த அமைப்பாக யு.பி.எஸ்.சி. இருக்கலாம். ஆனால், புதிய விதிகளை புகுத்தியுள்ள அதன் நடவடிக்கை பல மாநில மொழிகளுடனும், மக்களுடனும் தொடர்புடையது.

ஆங்கிலம் அலுவல் மொழி இல்லை; தொடர்பு மொழி மட்டுமே. தமிழகத்தில் தமிழ்தான் அலுவல் மொழி. ஒவ்வொரு மாநிலத்திற்கும் அலுவல் மொழி உண்டு.

ஆகவே, புதிய நடைமுறையை பின்பற்றக்கூடாது என்று யு.பி.எஸ்.சி-க்கு அரசு அறிவுறுத்த வேண்டும்.

எம்.தம்பிதுரை (அதிமுக): கிராமங்களில் வாழும் பெரும்பான்மையான மக்கள் தங்களது பள்ளிக் கல்வியை தாய்மொழியிலும், உயர் கல்விக்குச் செல்லும்போது பிற மொழிகளிலும் படிக்கின்றனர்.

உயர் கல்வியில் பெரும்பாலான படிப்புகளை ஆங்கில வழியில் படிக்கின்றனர். அதற்காக யு.பி.எஸ்.சி. தேர்வுகளை ஆங்கில மொழியில்தான் எழுத வேண்டும் என்று அவர்களை கட்டாயப்படுத்த முடியாது.

தாய்மொழியில் தேர்வு எழுதுவதற்கான விருப்பத் தெரிவு முறை தொடர வேண்டும்.

உயர்கல்வியில் தமிழ் இலக்கியம் படித்தவர்கள் மட்டுமே, யு.பி.எஸ்.சி. தேர்வில் தமிழ் இலக்கியத்தை விருப்பப் பாடமாக தேர்ந்தெடுக்க முடியும் என்ற புதிய நடைமுறை முரண்பாடாக உள்ளது. ஆகவே, யு.பி.எஸ்.சி. அறிவிக்கையைத் திரும்பப் பெற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கணேச மூர்த்தி (மதிமுக): யு.பி.எஸ்.சி-யின் புதிய அறிவிக்கை செயல்படுத்தப்பட்டால் மீண்டும் இந்தியாவில் மொழிப் பிரச்னைகள் எழும்.

அரசியல் அமைப்பின் 8-வது அட்டவணையில் உள்ள அனைத்து மாநில மொழிகளையும் இந்திய ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும்.

சரத் யாதவ் (ஐக்கிய ஜனதா தளம்): அரசியல் சட்டத்திற்கு விரோதமாக இந்த அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்திய மொழிகளை ஒதுக்கிவிட்டு ஆங்கிலத்தை ஊக்குவிக்கும் வகையில் யு.பி.எஸ்.சி. தலைவர் மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கை ஏற்புடையதல்ல. அவர் மீது நாடாளுமன்றத்தில் கண்டனத் தீர்மானம் கொண்டு வரப்பட வேண்டும்.

லாலு பிரசாத் யாதவ் (ஆர்.ஜே.டி.): போதிய தகுதிகள் இருந்தாலும் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்கள் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றிபெறக் கூடாது என்கிற நோக்கில் யு.பி.எஸ்.சி-யின் நடவடிக்கை உள்ளது. இது நலிவடைந்த பிரிவினருக்கு எதிரான சதியாகும்.

கோபிநாத் முண்டே (பாஜக): யு.பி.எஸ்.சி-யின் அறிவிக்கை, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் உள்ளிட்டோருக்கும், இந்திய மொழிகளுக்கும் இழைக்கப்பட்ட அநீதியாகும். இதை உடனடியாக திரும்பப் பெற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அருண் குமார் (காங்கிரஸ்): ஆங்கிலம் படித்தவர்கள் மட்டும்தான் "எல்லாம் அறிந்தவர்கள்" என்று கருதுவது தவறு. சிவில் சர்வீஸ் தேர்வில் பழைய முறையே தொடர வேண்டும்.

வாசுதேவ் ஆச்சார்யா (மார்க்சிஸ்ட்): இந்திய மொழிகளின் பாதுகாப்புக்கு உறுதுணையாக இருக்கக்கூடிய அரசியல் சட்ட உரிமைகளைப் பறிக்கும் வகையில் யு.பி.எஸ்.சி-யின் அறிவிக்கை அமைந்துள்ளது. அதை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.

ஆங்கிலத்துக்கு முன்னுரிமை கொடுக்கும் வகையில் தேர்வு விதிகளில் மாற்றம் செய்து, கடந்த 5ஆம் தேதி யுபிஎஸ்சி அறிவிக்கை வெளியிட்டது. அதற்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

நன்றி: தினமணி.

_________________
[You must be registered and logged in to see this image.]
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum