தமிழ் | Tamil | Forum
தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

கூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.

புகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.
Latest topics
» சிறந்த பொழுதுபோக்கு இணையதளம்!
by pba Sat Jul 02, 2016 8:11 pm

» ஏற்றுமதி உரிமம் பெறும் விண்ணப்பம்
by tamilnews Tue Mar 24, 2015 8:00 pm

» மொபைல், டிடிஎச் ரீசார்ஜ் செய்யப் போறீங்களா? இந்த சலுகைகளைப் பாருங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:41 am

» மொபைல் ரீசார்ஜ் செய்து ஷாப்பிங் கூப்பன் இலவசமாக பெறுங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:38 am

» மெமரி கார்டு வாங்கப் போறீங்களா? 74% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:36 am

» அமேசானில் பெண்களுக்கான ஆடைகள் 70% வரை தள்ளுபடி !
by dsytamil Wed Jan 14, 2015 1:34 am

» அமேசானில் ஆண்களுக்கான ஆடைகள் 60% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:31 am

» லெனோவா டேப்ளட் 43% சலுகை விலையில் ரூ. 5949 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:28 am

» ப்ளிப்கார்ட் தளத்தில் சிறுவர்களுக்கான ஆடைகள் 70% வரை + 30% கூடுதல் தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:14 am

» அமேசான் தளத்தில் 50% தள்ளுபடி விலையில் மொபைல்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:13 am

» ரூ. 7499 மதிப்புள்ள மைக்ரோமேக்ஸ் ஏ1 ஆன்ட்ராய்டு மொபைல் இப்போது ரூ. 5499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:11 am

» ரூ. 19999 மதிப்புள்ள நோக்கியா லூமியா 625 மொபைல் ரூ. 7499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:10 am

» ப்ராண்டட் காலணிகளுக்கு 70% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:08 am

» ஆன்லைன் ஷாப்பிங்கில் ப்ரிண்டர்களுக்கு 33% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:06 am

» ஆன்லைனில் பொருள் வாங்கப் போறீங்களா? 70% வரை பணத்தை சேமியுங்கள்!
by dsytamil Tue Jan 13, 2015 12:30 am

» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...!
by sathikdm Sun Oct 19, 2014 4:45 pm

» சிறுதொழில் செய்பவர்கள் இணையதளம் தொடங்க வேண்டியதின் அவசியம்!
by pba Sat Sep 27, 2014 12:58 am

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:47 pm

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:42 pm

» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
by santhoshpart Wed Aug 27, 2014 4:22 pm

» “சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா!”
by santhoshpart Wed Aug 13, 2014 3:54 pm

» Daily Rs.500/- and Above
by K.MARIAPPAN Wed Jul 30, 2014 12:01 pm

» http://www.neobux.com/?r=narasimmant
by Navaneethakrishnan Wed Jul 02, 2014 3:41 pm

» வணக்கம் என் பெயர் வேணு
by A.Venu Fri Jun 27, 2014 10:10 am

» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?
by sathikdm Wed Jun 18, 2014 3:24 pm

» தமிழ் மொழி மூல கல்வி இணையதளம்
by afdhaal Wed May 28, 2014 9:22 pm

» வருக. வருக. வணக்கம்.
by மகி Mon May 12, 2014 3:55 pm

» அறிமுகம் -விநாயகா செந்தில்.
by மகி Mon May 12, 2014 3:53 pm

» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....!
by vinayagasenthil Sat May 10, 2014 9:04 pm

» +2result இங்கே காணலாம்!
by மகி Fri May 09, 2014 12:41 am

பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

ஸ்ரீருத்ரம் சிவவழிபாடு அல்ல! (பகுதி-1)

Go down

ஸ்ரீருத்ரம் சிவவழிபாடு அல்ல! (பகுதி-1) Empty ஸ்ரீருத்ரம் சிவவழிபாடு அல்ல! (பகுதி-1)

Post by சாமி on Sun May 06, 2012 8:05 pm

ஸ்ரீருத்ரம் கூறும் ருத்ரன் வேறு, ஆகமம் கூறும் சிவன் வேறு என்பது ஸ்ரீருத்ரத்தைப் பார்க்கும்போது வெள்ளெனப் புலப்படுகிறது. சில உதாரணங்களைப் பார்ப்போம்.

ஸ்ரீருத்ரம் என்பது இருபெரும் பிரிவுகளை உடையது. ஒன்று நமகம்; மற்றொன்று சமகம். நமகம் வணக்கம் செய்வது; சமகம் பலனை வேண்டுவது. இதனை ஓதும் முன் நியாசம் செய்து கொள்ள வேண்டும். இது ஸ்ரீ ருத்ரப்ரச்னத்தில் வருகிறது.

ருத்ரத்திற்கு தேவதை ஆதித்தனே – சிவனல்ல
இதில் ஸ்ரீ ருத்ரத்திற்குத் தேவதை ஆதித்தன். சிவன் அல்ல. அடுத்து தியானம் சொல்லப் படுகிறது. அதன்பின் ஸ்ரீருத்ர சூக்தத்தால் வணங்கப்பட்டு வெளிப்படுவது யார் என்று கூறப்படுகிறது. அது ஒரு ருத்ரன் அல்ல. பல ருத்ரர்கள். அவர்கள் பரமேசுவரின் ரூப பேதங்களாயும் ஸ்ரீருத்ர சூக்தத்தினால் வெளிப்படுத்தப்பட்ட மகிமையுடையவர்களாக விளங்கும் ருத்ரர்கள் எனக் கூறப்படுகின்றனர். சுலோகம் வருமாறு:
“த்ரியட்சா, ருத்ராட்ச மாலா; ப்ரணத பயஹரா;
சாம்பவா மூர்த்தி பேதா;
ருத்ரா; ஸ்ரீ ருத்ர-ஸீக்த ப்ரகடித விபவா
ந; ப்ரயச் சந்து ஸௌக்யம்”

என்பது வடமொழி சுலோகம்.

ருத்ரம் ஏகதெய்வ வழிபாடல்ல
எனவே ஸ்ரீருத்ரத்தால் வணங்கப்படுபவர் ஒரு ருத்ரர் அல்ல; ருத்ரர்களின் கூட்டம். இது நமகத்திலும் கூறப்படுகிறது.
“……………..இந்த பூமியை எல்லா திக்கிலும் வியாபித்திருக்கும் ருத்ர மூர்த்திகள் எவர்கள் ஆயிரக்கணக்காக இருக்கின்றார்களோ இவர்கள் எல்லோருடைய கோபமும் தணிந்து போகும்படி வழிபடுகின்றோம்.”
“யே சேமாம் ருத்ரா அபிதோ திட்சூ
ச்ரிதா: ஸஹஸ்ர சோ வைஷாம் ஹேட: ஈமஹே”


இது மேற்கண்ட தமிழ் வசனப்பொருளில் வரும் வடமொழி நமக வசனம்.

எனவே ஸ்ரீ ருத்ரம் குறிப்பது ஏக தெய்வமாம் பரமமுதற்காரணனான சிவனை அல்ல.
ருத்ரர்களின் கூட்டமே இதில் வழிபடப்படுகிறது. அதுவும் அவர்கள் பரமேசுவரரின் மூர்த்தி பேதங்கள்தாம். இவர்களைக் கூட ஸ்ரீருத்ரம் மிக மேன்மையானவர்கள் என்று கருதி வழிபடுவதில்லை. ருத்ரனைப் பற்றிக் கூறும் ஸ்ரீருத்ரசுலோகங்கள் அவனை மிகக் கொடியவனாகவே வர்ணிக்கிறது.
வழிபடுவது, மிகக் கொடிய வில்லனிடம் என்னை விட்டுவிடு என்று கெஞ்சும் பாணியில்தான் உள்ளதேயன்றி கடவுள் என்றெண்ணி பக்தி விசேஷத்தால் வழிபடுவது போல் இல்லை.

(தொடரும்)
(நன்றி: தமிழ் வேள்வி புத்தகம்)
சாமி
சாமி
உறுப்பினர்
உறுப்பினர்

பதிவுகள் : 31
புள்ளிகள் : 90
Reputation : 1
சேர்ந்தது : 13/03/2012
வசிப்பிடம் : chennai

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum