தமிழ் | Tamil | News | Entertainment
தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

கூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.

புகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.
விளம்பரம்!
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
Latest topics
» 10 மணி நேரம் கரண்ட் இல்லையேன்னு பீல் பண்றதை விட்டுட்டு..
by thanagopal Today at 2:31 pm

» This s specialy dedicate 2my sistr!
by thanagopal Today at 2:29 pm

» கோடி கோடியா ஊழல் ....
by thanagopal Today at 2:26 pm

» 9 மணியும் 11 மணியும் பத்தி நாளைக்கு சொல்றேன்...
by thanagopal Today at 2:14 pm

» பாபு: ??!!**???
by thanagopal Today at 2:13 pm

» ஐ!ஜாலி .....
by thanagopal Yesterday at 9:40 am

» by சனியன் சகட...
by thanagopal Yesterday at 9:37 am

» எல்லாருக்கும் சம உரிமை கிடைக்கும்.
by thanagopal Yesterday at 9:32 am

» உன்னை யாரும் காதலிக்கவில்லையே என்று வருத்தப்படாதே..
by thanagopal Yesterday at 9:29 am

» மகா சதாசிவன் படம்
by நந்தி Yesterday at 12:42 am

» காயலான் கடை பஸ்ஸை கூட,
by thanagopal Tue Feb 21, 2012 6:23 pm

» ஆபிஸ் போகவேண்டாமென நினைத்தால் யாராவது 1-ந்தேதியை ஞாபகப்படுத்தி விடுகிறார்கள்!
by thanagopal Tue Feb 21, 2012 6:21 pm

» அடிப்பாவி வாழ்க்கையையே மிஸ் பண்ணிட்டியேடி. ...
by thanagopal Tue Feb 21, 2012 6:06 pm

» அது கெட்டவார்த்தைஇல்ல....
by thanagopal Tue Feb 21, 2012 6:05 pm

» "கழட்டி விடும் தினம்"
by thanagopal Tue Feb 21, 2012 6:04 pm

» முடியல............
by thanagopal Tue Feb 21, 2012 6:04 pm

» முதல் "மரணம்"
by pushpalakshmi91 Tue Feb 21, 2012 5:09 pm

» பரிசு ...பரிசு ...பரிசு ...
by pushpalakshmi91 Tue Feb 21, 2012 4:45 pm

» எப்படித்தான் வலிக்குதோ தெரியலை.....
by pushpalakshmi91 Tue Feb 21, 2012 2:53 pm

» மகனும் பள்ளிக்கு செல்லவில்லை!
by pushpalakshmi91 Tue Feb 21, 2012 2:52 pm

» உங்களைப் பார்க்கும் வாய்ப்புதான் என் கண்களுக்கு இல்லை!“
by pushpalakshmi91 Tue Feb 21, 2012 2:51 pm

Tamil 10 top sites [www.tamil10 .com ] My Topsites List

சூ மந்திரத் தக்காளி!

View previous topic View next topic Go down

சூ மந்திரத் தக்காளி!

Post by thanagopal on Sat Jan 28, 2012 1:39 pm

சூ மந்திரத் தக்காளி!


பெண்களை கவர்வதற்கு ஜாய் அலுக்காஸ் போய் கண்ணைப் பறிக்கும் வைரநெக்லஸ் வாங்கிக் கொடுத்து, மாதாமாதம் கிரெடிட் கார்டு பில்லைப் பார்த்து முழிபிதுங்க வேண்டுமா?

போத்தீஸுக்கும், சென்னை சில்க்ஸுக்கும் போய் எந்திரன் படத்துக்கு முதல்நாள் மார்னிங் ஷோ போனவன் போல இடிபட்டு கசங்கி கந்தர்கோளமாக வேண்டுமா?

அநியாய வட்டிக்குக் கடன்வாங்கி, அடையாறு கேட் ஹோட்டலுக்குக் கூட்டிக்கொண்டு போய் ஆட்டுக்கால் சூப் வாங்கிக் கொடுக்க வேண்டுமா?

தேவையேயில்லை! இதையெல்லாம் விடவும் மிகவும் சுலபமான, சிக்கனமான ரகசிய வழியொன்று இருக்கிறது. அந்த வழியைக் கடைபிடித்தால், உங்களது மின்னஞ்சல் பெட்டியும் எனது மின்னஞ்சல் பெட்டியைப் போலவே காதல் மடல்களால் நிரம்பி வழிந்து குறுவை சாகுபடிக்கு ஒத்தாசை செய்யும் என்பது உறுதி.

நம்பிக்கையில்லையா? இதோ எனது மின்னஞ்சல் பெட்டியின் ஸ்க்ரீன்-ஷாட்!


இப்படி எனக்கு ஒரே நாளில் இந்தியாவின் கனவுக்கன்னிகளெல்லாம் மடல் மீது மடலாகப் போடுவதற்கு என்ன காரணம்? அவர்களது உள்ளங்களை என்னால் எப்படி கொள்ளை கொள்ள முடிந்தது? இது என்ன தங்கமலை ரகசியமா என்று யோசிக்கிறீர்களா?

தங்கமலை ரகசியம் இல்லை; தக்காளி ரகசியம்!

சிரிக்காதீங்க! தக்காளி என்றால் லேசுப்பட்டதா?

அதற்கு எப்போது கிராக்கி வரும் என்று தெரியாது. திடீரென்று கிலோ நான்கு ரூபாய்க்கெல்லாம் விற்கும்போது, பல வீடுகளில் பாயசம் தவிர எல்லாவற்றிலும் தக்காளி போடுவார்கள். அதை வைத்து ரசமும் வைக்கலாம்; கொத்சு பண்ணலாம்; தொக்கு அரைக்கலாம். கொஞ்சம் அழுகிப்போனால், பொதுக்கூட்டங்களில் பேச்சாளர்களின் முகத்தைக் குறிபார்த்து எறியலாம். இவ்வளவு அருமை பெருமை வாய்ந்த தக்காளியைப் பற்றி ரஜினி ஒருத்தர் தான் ’ஆசைக்கிளியே அரைக்கிலோ புளியே! அழுகின தக்காளியே!’ என்று பாடியிருக்கிறார். இருந்தாலும் தலைவர் என்பதால் விட்டு விடுகிறேன்.

திருமணமாகாதவர்களே! உங்கள் காதலியை தக்கவைத்துக் கொள்ள இனிமேல், ஒரே இளநீரில் இரண்டு ஸ்ட்ரா போட்டு உங்களது கஞ்சத்தனத்தை வெளிப்படுத்தாதீர்கள். அதற்கு பதிலாக, தினமும் தக்காளி ஜூஸ் வாங்கிக் கொடுங்கள்!

’ஆப்பிள் பெண்ணே நீ யாரோ?’ என்றெல்லாம் இனிமேல் பாடாதீர்கள். ’தக்காளிப்பெண்ணே..!" என்று மாற்றிப் பாடுங்கள். கவிதை எழுதுபவர்களும் இனிமேல் காதலியைத் தக்காளியோடு ஒப்பிட்டு எழுதுங்கள். உதாரணத்துக்கு.....

"அன்பே!
உன் சருமத்தைப் பார்த்தால்
சரக்குமாஸ்டருக்கும் ஆசை வருமே!
தக்காளியென்று
தப்பாக நினைத்து விட்டாரோ?"

காதலியே இல்லாதவர்கள் காதலிக்கு கூடை கூடையாக தக்காளியை அனுப்புங்கள். காதல் கைகூடுவது நிச்சயம்.

திருமணமானவர்களே! உங்கள் மனைவியின் அன்பு மியூச்சுவல் ஃபண்டு போல பல்கிப்பெருக, தினமும் மல்லிகைப்பூ வாங்குகிறீர்களோ இல்லையோ, தவறாமல் தக்காளி வாங்கிக் கொடுங்கள்! திருமணதினத்துக்கும், பிறந்தநாளுக்கும் தக்காளிக்கலரில் உடை வாங்கிக்கொடுத்தால், உங்களது இல்லறம் தக்காளி ரசம் போல கமகமவென்று மணம்வீசும்!

தக்காளி சீனிவாசன் தயாரிக்கும் படங்களைத் தவறாமல் காதலி/மனைவியோடு பாருங்கள்!

தப்பித்தவறி, காதலியோடோ மனைவியோடோ ஊடல் ஏற்பட்டால் தக்காளி கெட்ச்-அப் வாங்கிக்கொடுத்து பேட்ச்-அப் செய்து கொள்ளலாம்.

அப்படியென்ன இருக்கிறது இந்தத் தக்காளியில் என்று கேட்கிறீர்களா? உங்களுக்கு விஷயமே தெரியாதா?

தக்காளி பெண்களின் இதயநோயைக் கட்டுப்படுத்தும் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். ஆகவே, காதலியாக இருந்தாலும் சரி, மனைவியாக இருந்தாலும் சரி அல்லது ஒருவருக்கு காதலி, மனைவி இருவருமே இருந்தாலும் சரி, நிறைய தக்காளி வாங்கிக் கொடுங்கள்!

என்ன இருந்தாலும், அவர்களது இதயத்தில் குடியிருக்கிறவர்கள் அல்லவா நீங்கள்? தினசரி தக்காளி வாங்கிக் கொடுத்தால் குடியிருக்கிற வீட்டில் விரிசல் ஏற்படாமல் இருக்கும்.

இத்தோடு நிறுத்திவிடாமல், இனிமேல் ’காதலர் தினம்’ வரும்போது பூக்களை அனுப்புவதற்கு பதிலாக, கோயம்பேட்டுக்குப் போய் நிறைய தக்காளி வாங்கி அனுப்புங்கள்!

வாழ்க தக்காளி! வளர்க காதல்!http://4.bp.blogspot.com/_SirCE0MgPGg/TLqQq20kQGI/AAAAAAAAAmw/fJYKkjqmZfo/s1600/tomato-umbria-red.jpg[You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this link.]

thanagopal
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 453
புள்ளிகள்: 872
Reputation: 1
சேர்ந்தது: 22/04/2011
வசிப்பிடம்: puducherry

Back to top Go down

Re: சூ மந்திரத் தக்காளி!

Post by pushpalakshmi91 on Sat Jan 28, 2012 3:15 pm

[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

pushpalakshmi91
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 339
புள்ளிகள்: 349
Reputation: 7
சேர்ந்தது: 13/08/2011
வசிப்பிடம்: thoothukudi

Back to top Go down

Re: சூ மந்திரத் தக்காளி!

Post by thanagopal on Sat Jan 28, 2012 6:43 pm

நன்றி

thanagopal
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 453
புள்ளிகள்: 872
Reputation: 1
சேர்ந்தது: 22/04/2011
வசிப்பிடம்: puducherry

Back to top Go down

Re: சூ மந்திரத் தக்காளி!

Post by pushpalakshmi91 on Mon Jan 30, 2012 11:03 am

[You must be registered and logged in to see this image.]

pushpalakshmi91
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 339
புள்ளிகள்: 349
Reputation: 7
சேர்ந்தது: 13/08/2011
வசிப்பிடம்: thoothukudi

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum