தமிழ் | Tamil | Forum
தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

கூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.

புகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.
Latest topics
» சிறந்த பொழுதுபோக்கு இணையதளம்!
by pba Sat Jul 02, 2016 8:11 pm

» ஏற்றுமதி உரிமம் பெறும் விண்ணப்பம்
by tamilnews Tue Mar 24, 2015 8:00 pm

» மொபைல், டிடிஎச் ரீசார்ஜ் செய்யப் போறீங்களா? இந்த சலுகைகளைப் பாருங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:41 am

» மொபைல் ரீசார்ஜ் செய்து ஷாப்பிங் கூப்பன் இலவசமாக பெறுங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:38 am

» மெமரி கார்டு வாங்கப் போறீங்களா? 74% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:36 am

» அமேசானில் பெண்களுக்கான ஆடைகள் 70% வரை தள்ளுபடி !
by dsytamil Wed Jan 14, 2015 1:34 am

» அமேசானில் ஆண்களுக்கான ஆடைகள் 60% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:31 am

» லெனோவா டேப்ளட் 43% சலுகை விலையில் ரூ. 5949 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:28 am

» ப்ளிப்கார்ட் தளத்தில் சிறுவர்களுக்கான ஆடைகள் 70% வரை + 30% கூடுதல் தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:14 am

» அமேசான் தளத்தில் 50% தள்ளுபடி விலையில் மொபைல்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:13 am

» ரூ. 7499 மதிப்புள்ள மைக்ரோமேக்ஸ் ஏ1 ஆன்ட்ராய்டு மொபைல் இப்போது ரூ. 5499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:11 am

» ரூ. 19999 மதிப்புள்ள நோக்கியா லூமியா 625 மொபைல் ரூ. 7499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:10 am

» ப்ராண்டட் காலணிகளுக்கு 70% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:08 am

» ஆன்லைன் ஷாப்பிங்கில் ப்ரிண்டர்களுக்கு 33% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:06 am

» ஆன்லைனில் பொருள் வாங்கப் போறீங்களா? 70% வரை பணத்தை சேமியுங்கள்!
by dsytamil Tue Jan 13, 2015 12:30 am

» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...!
by sathikdm Sun Oct 19, 2014 4:45 pm

» சிறுதொழில் செய்பவர்கள் இணையதளம் தொடங்க வேண்டியதின் அவசியம்!
by pba Sat Sep 27, 2014 12:58 am

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:47 pm

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:42 pm

» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
by santhoshpart Wed Aug 27, 2014 4:22 pm

» “சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா!”
by santhoshpart Wed Aug 13, 2014 3:54 pm

» Daily Rs.500/- and Above
by K.MARIAPPAN Wed Jul 30, 2014 12:01 pm

» http://www.neobux.com/?r=narasimmant
by Navaneethakrishnan Wed Jul 02, 2014 3:41 pm

» வணக்கம் என் பெயர் வேணு
by A.Venu Fri Jun 27, 2014 10:10 am

» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?
by sathikdm Wed Jun 18, 2014 3:24 pm

» தமிழ் மொழி மூல கல்வி இணையதளம்
by afdhaal Wed May 28, 2014 9:22 pm

» வருக. வருக. வணக்கம்.
by மகி Mon May 12, 2014 3:55 pm

» அறிமுகம் -விநாயகா செந்தில்.
by மகி Mon May 12, 2014 3:53 pm

» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....!
by vinayagasenthil Sat May 10, 2014 9:04 pm

» +2result இங்கே காணலாம்!
by மகி Fri May 09, 2014 12:41 am

பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

மனோரமாவும் வடிவேலுவும்!

Go down

மனோரமாவும் வடிவேலுவும்! Empty மனோரமாவும் வடிவேலுவும்!

Post by B.G.துர்கா தேவி on Fri May 13, 2011 10:41 pm

மனோரமாவும் வடிவேலுவும்!

1996-ம் ஆண்டு தேர்தல்… ஜெயலலிதாவின் அதிமுகவுக்கு வாக்களித்தால் தமிழ்நாட்டை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது என்ற தனது வரலாற்றுச் சிறப்புமிக்க வாசகங்களை சூப்பர் ஸ்டார் ரஜினி உச்சரித்த தேர்தல் அது.

இந்த ஒரேயொரு பஞ்ச் டயலாக் தமிழக அரசியலையே புரட்டிப் போட்டு, திமுகவை ஆட்சியதிகாரத்தில் அமரவைத்தது.

இந்தத் தேர்தலில் ரஜினி மீது எத்தனையோ பேர் வெவ்வேறு விதமான விமர்சனங்களை வாய்க்கு வந்தபடி பேசினர். ஆனால் அவற்றைப் பற்றியெல்லாம் ரஜினி கண்டுகொண்டதாகக் கூட காட்டிக் கொள்ளவில்லை.

இந்தத் தேர்தலில் ரஜினி மிகக் கீழ்த்தரமாக விமர்சித்தவர்களில் முதலிடம் மனோரமாவுக்குதான். ஜெயலலிதாவின் புதுப் பாசத்தில் கிறங்கிப் போன இந்த மூத்த நடிகை, ரஜினியை தாக்கிப் பேசியதன் மூலம் தனது திரைப்பட வாழ்க்கையையே கிட்டத்தட்ட இழந்துவிட்டார். தேர்தல் முடிந்து, திமுக பதவியில் அமர்ந்து ஓராண்டுகள் வரை வீட்டில் சும்மா இருந்தார் மனோரமா. அதிமுகவைச் சேர்ந்த திரையுலகப் புள்ளிகள் கூட மனோரமாவுக்கு வாய்ப்பு தர மறுத்தனர்.

பத்திரிகைகள், திரையுலகப் பிரமுகர்கள் அனைவரும் மனோரமாவுக்கு வெளிப்படையாகவே கண்டனம் தெரிவித்த நேரம் அது.

முத்து படம் முடிந்தது. தலைவர் அருணாசலத்துக்கு பூஜை போட்டார். அப்போது யாரும் எதிர்ப்பாராத செயலையும் செய்தார். இன்னா செய்த மனோரமாவுக்கு நல்லது செய்து நாணச் செய்தார்.

“என்னை அவர் விமர்சித்ததால், ஏதோ எனக்கு விரோதி மாதிரி ஒரு நினைப்பு பலருக்கு இருக்கிறது. இது தவறு. அரசியல் வேறு. சினிமா வேறு. அவர் ஒரு மூத்த நடிகை. அவருக்கான வாய்ப்புகளை மறுக்காதீர்கள். இதை உணர்த்த எனது படத்தில் அவர் செய்யக்கூடிய வகையிலான வேடம் ஒன்றை அவருக்குக் கொடுத்துள்ளேன்”, என்றார். அத்துடன் தனது வாழ்நாளிலேயே அதிக சம்பளத்தையும் அந்தப் படத்துக்குப் பெற்றார் மனோரமா.

வடிவேலு நாக்கில் சனி…

தன்னை விமர்சித்துப் பேசியவருக்கே வாய்ப்புக் கொடுத்து மற்றவர்களையும் கொடுக்க வைத்தவர் ரஜினி. அவரா வடிவேலுவை நீக்கினார்? என ஆச்சர்யக் கேள்விகள் கிளம்பியுள்ளன.

சந்திரமுகி படம் துவங்கியபோது, ‘முதலில் வடிவேலுவின் கால்ஷீட் இருக்கா பாருங்க’ என்றவர் ரஜினி. அதன்பின் குசேலன் படத்திலும் வடிவேலு இருக்கும்படி பார்த்துக் கொண்டார்.

வடிவேலு நீ்க்கம் குறித்து அதிகாரப்பூர்வமாக ராணா தரப்பில் எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. ஆனால் கஞ்சா கருப்பு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது.

அப்படியெனில் வடிவேலு ராணாவிலிருந்து நீக்கப்பட்டதாக வந்த செய்தியின் பின்னணி?

இந்த தேர்தல் பிரச்சாரத்தில் வடிவேலு மேற்கொண்ட அளவுக்கு மிஞ்சிய தனி மனிதத் தாக்குதல் காரணமாகவே ராணாவில் அவர் நீக்கப்பட்டிருக்கலாம் என்கின்றன பத்திரிகைகள். இதே காரணங்களுக்காகத்தான் தனக்கு மிகவும் விருப்பமான காமெடியன்களில் ஒருவரான செந்திலையே தவிர்க்க ஆரம்பித்தார் ரஜினி. 2006 தேர்தலில் ‘கருணாநிதி ஒண்டிக்கு ஒண்டி வரியா’ என்று செந்தில் பேசியதை வெளிப்படையாகவே கண்டித்தவர் ரஜினி.

விஜயகாந்த் என்பவர் வெறும் அரசியல்வாதி மட்டுமல்ல, வடிவேலுவுக்கு ஆரம்ப நாட்களில் வாய்ப்புகளை தாராளமாக வழங்கியவரும் கூட. இப்போது தனிப்பட்ட காரணங்களுக்காக இருவரும் எதிரெதிரே நிற்கின்றனர். ஆனால் இந்த விரோதத்தை ஒரு மாநிலத் தேர்தலுக்கான பிரச்சினையாக வடிவேலு மாற்றிவிட்டார் என இயக்குநர்கள் அமீர், சமுத்திரக்கனி போன்றோர் வெளிப்படையாகவே கண்டித்துள்ளனர். நடிகர் சங்கமும் இதுகுறித்து விரைவில் ஒரு கட்டுப்பாட்டை கொண்டு வர உள்ளதாம்.

‘தாராளமாக வடிவேலு பிரச்சாரம் செய்யட்டும். ஆனால் குஷ்பு சொன்னார் பாருங்கள், ‘எக்காரணம் கொண்டும் விஜயகாந்த், சரத்குமார், ராதாரவி, கார்த்திக் என சினிமாவிலிருந்து அரசியலுக்குப் போனவர்களை தாக்கிப் பேச மாட்டேன். நாளை மீண்டும் இதே சினிமாவுக்குள் நாங்கள் சந்தித்துக் கொள்ள வேண்டிவரும்’ என்று சொல்லிவிட்டே பிரச்சாரம் செய்தார். அவ்வளவு ஏன்? பாக்யராஜும்தான் விமர்சனம் செய்தார்…. ஆனால் எவ்வளவு நாகரீகமாக அந்த விமர்சனத்தை அவர் மேற்கொண்டார்! ஆனால் வடிவேலு நாக்கில் நரம்பின்றி இஷ்டத்துக்கும் பேசிவிட்டார் அவருக்கு இது வேண்டும்!”, என்கிறார்கள் நடிகர் சங்க நிர்வாகிகள்.

ஆனால் வடிவேலுவை விட அந்தப் பாத்திரத்தில் கஞ்சா கருப்பு சரியாக இருப்பார் என்பதால் எடுக்கப்பட்ட முடிவு அது என்கிறது ராணா தரப்பு.

தான் எதனால் நீக்கப்பட்டோம் என்ற உண்மை வடிவேலுவுக்கும் புரிந்தே இருக்கிறது. ஆனால் அதைக் காட்டிக் கொள்ளாமல் ஆத்திரத்தில் அவர் இப்போதும் வாய்க்கு வந்தபடி பேச ஆரம்பித்துள்ளார்.

ராணா படத்தில் நடிக்க திடீரென வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதே? என இன்று அவரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அவர், “ராணா படமாக இருக்கட்டும், காணா படமாக இருக்கட்டும், இல்ல வேற எந்தப் படமாக இருந்தாலும் என்னை தூக்குவதைப் பத்தி நான் கவலைப்படவே இல்லை. மக்களைச் சென்றடைந்த திட்டங்களை பற்றித்தான் நான் பிரச்சாரத்தில் ஈடுபட்டேன். இது ஒரு தவறா… இதுக்காக என்னை சினிமாவைவிட்டே தூக்கினாலும் கவலைப்படமாட்டேன். வரும் 13ஆம் தேதிக்குப் பிறகு காட்சிகள் மாறும். அப்போ பேசிக்கிறேன்,” என்றார்.

ராணா காணாவா… வடிவேலுவோட ஆரம்பம் நல்லாதான் இருந்தது.. ஃபினிஷிங் சரியில்லையேப்பா. ஆயிரம் புயல்கள் வரலாம். ஓரிரு நாளில் வலுவிழந்து கரையொதுங்கி காணாமல் போகலாம். ஆனால் ‘துருவ நட்சத்திரம்’ எதையும் கண்டுகொள்வதில்லை. அதற்கு வழிகாட்டித்தான் பழக்கம்.

நாவடக்கம் தேவை வடிவேலு… யார் கண்டது? மனோரமாவை ரட்சித்த இதே ‘ராணா’வால்தான் உங்களுக்கு மறுபிரவேசம் என்றிருந்தால் அதை மாற்றி எழுதவா முடியும்!
B.G.துர்கா தேவி
B.G.துர்கா தேவி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 436
புள்ளிகள் : 940
Reputation : 23
சேர்ந்தது : 22/04/2011

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum