தமிழ் | Tamil | Forum
தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

கூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.

புகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.
Latest topics
» சிறந்த பொழுதுபோக்கு இணையதளம்!
by pba Sat Jul 02, 2016 8:11 pm

» ஏற்றுமதி உரிமம் பெறும் விண்ணப்பம்
by tamilnews Tue Mar 24, 2015 8:00 pm

» மொபைல், டிடிஎச் ரீசார்ஜ் செய்யப் போறீங்களா? இந்த சலுகைகளைப் பாருங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:41 am

» மொபைல் ரீசார்ஜ் செய்து ஷாப்பிங் கூப்பன் இலவசமாக பெறுங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:38 am

» மெமரி கார்டு வாங்கப் போறீங்களா? 74% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:36 am

» அமேசானில் பெண்களுக்கான ஆடைகள் 70% வரை தள்ளுபடி !
by dsytamil Wed Jan 14, 2015 1:34 am

» அமேசானில் ஆண்களுக்கான ஆடைகள் 60% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:31 am

» லெனோவா டேப்ளட் 43% சலுகை விலையில் ரூ. 5949 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:28 am

» ப்ளிப்கார்ட் தளத்தில் சிறுவர்களுக்கான ஆடைகள் 70% வரை + 30% கூடுதல் தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:14 am

» அமேசான் தளத்தில் 50% தள்ளுபடி விலையில் மொபைல்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:13 am

» ரூ. 7499 மதிப்புள்ள மைக்ரோமேக்ஸ் ஏ1 ஆன்ட்ராய்டு மொபைல் இப்போது ரூ. 5499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:11 am

» ரூ. 19999 மதிப்புள்ள நோக்கியா லூமியா 625 மொபைல் ரூ. 7499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:10 am

» ப்ராண்டட் காலணிகளுக்கு 70% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:08 am

» ஆன்லைன் ஷாப்பிங்கில் ப்ரிண்டர்களுக்கு 33% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:06 am

» ஆன்லைனில் பொருள் வாங்கப் போறீங்களா? 70% வரை பணத்தை சேமியுங்கள்!
by dsytamil Tue Jan 13, 2015 12:30 am

» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...!
by sathikdm Sun Oct 19, 2014 4:45 pm

» சிறுதொழில் செய்பவர்கள் இணையதளம் தொடங்க வேண்டியதின் அவசியம்!
by pba Sat Sep 27, 2014 12:58 am

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:47 pm

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:42 pm

» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
by santhoshpart Wed Aug 27, 2014 4:22 pm

» “சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா!”
by santhoshpart Wed Aug 13, 2014 3:54 pm

» Daily Rs.500/- and Above
by K.MARIAPPAN Wed Jul 30, 2014 12:01 pm

» http://www.neobux.com/?r=narasimmant
by Navaneethakrishnan Wed Jul 02, 2014 3:41 pm

» வணக்கம் என் பெயர் வேணு
by A.Venu Fri Jun 27, 2014 10:10 am

» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?
by sathikdm Wed Jun 18, 2014 3:24 pm

» தமிழ் மொழி மூல கல்வி இணையதளம்
by afdhaal Wed May 28, 2014 9:22 pm

» வருக. வருக. வணக்கம்.
by மகி Mon May 12, 2014 3:55 pm

» அறிமுகம் -விநாயகா செந்தில்.
by மகி Mon May 12, 2014 3:53 pm

» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....!
by vinayagasenthil Sat May 10, 2014 9:04 pm

» +2result இங்கே காணலாம்!
by மகி Fri May 09, 2014 12:41 am

பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

துன்பங்கள் பிறக்கும் இடம்.

Go down

துன்பங்கள் பிறக்கும் இடம்.

Post by tdrajeswaran on Wed Aug 25, 2010 10:34 pm

துன்பங்கள் பிறக்கும் இடம்.

[நான் படித்தவைகளில் எனக்கு பிடித்தவைகளை, மனதை
தொட்டவைகளை உங்களுடன் பகிர்ந்துக் கொள்ளவிரும்புகிறேன்]

இப்போது உலகத்திலே பல ஏமாற்றங்கள், சோர்வு, சிக்கல்கள், ஏழ்மை,
இன்னும் எத்தனையோ துன்பங்கள்உள்ளன. பெரும்பான்மையான
துன்பங்கள் பிறக்கும் இடம் என்ன என்றால் "பிறரை எதிர் பார்த்தல்", தான் செய்ய வேண்டிய கடமையை உணராது இருத்தல், அல்லது உணர்ந்து
செய்யாது இருத்தல், பிறரை எதிர்பார்த்து, இவர் என்னுடைய நன்மைக்காக
இவ்வாறு நடந்துக் கொள்ள வேண்டும் என்று எதிர் பார்ப்பதில்தான்.
ஒவ்வொருவருக்கும் அவரவர்களுக்கு ஏதோ ஒன்று தேவை. அறிவிலே
ஒரு வேகம், ஒரு ஆசை அல்லதுஅனுபவத்திலே இன்னது வேண்டும் என்று
நினைக்கின்றார்கள். இது இன்னின்னார் இப்படி இப்படி செய்யவேண்டும் என்று இப்படி பிறரையே நினைத்து எண்ணி எண்ணிப் பழகி கொண்டு விட்டது மனம்.
இந்த எதிர்ப்பார்ப்பதிலே எப்பொழுதும் ஏமாற்றம்தான் இருக்குமே தவிர எதிர் பார்த்த அளவிலே கிட்டாது. ஏன் இந்த நிலைமை என்றால், அந்த எதிர்பார்த்தல், அடைதல் என்பதிலே நான்கு பரிமாணங்கள் உண்டு.

(1) Judgement of need - அந்த தேவை உணர்வு - நான் எந்த முறையிலே எனக்கு தேவை என்று உணர்கின்றனோ, அந்தஆழத்தை, அந்த மதிப்பினை எதிராளி உணரமாட்டார். இது முதலாவதான இடைவெலளி (gap).

(2) Judgement of quantity -நான் எந்த அளவுக்கு வேண்டும் என்று நினைக்கிறேனோ அந்த அளவு எதிராளிக்குபிடித்தமாக இருக்காது. அதை அவர் ஏற்றுக் கொள்ள மாட்டார், அவரால் விளங்கி கொள்ளவும் முடியாது.

(3) Judgement of quality - இனனின்ன முறையிலே எனக்கு வேண்டியது கிடைக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன் அவரிடம் இருந்து1000 ரூபாய் வரவேண்டும் என்று நினைக்கிறேன், அதையும் அவராக கொண்டு வந்து மதிப்போடுதரவேண்டும் என்று நினைக்கிறேன். அது நான் கேட்டு வாங்கிக் கொள்வதாக இருக்க கூடாது என்றும்எண்ணுகிறேன். - இங்கேயும் ஒரு இடைவெளி இருக்கிறது.

(4) Time - நேரம் - இன்ன நேரத்தில்தான் இது எனக்கு வேண்டும் என்பது. இதுவும் பெரும்பாலும் சாத்தியமில்லை.

இந்த நான்கும் சேர்ந்ததுதான் "எதிர் பார்த்தல்" என்பது. இந்த நான்கும் தன்னுடைய அறிவு தேவை, மனநிலைஇவற்றிற்கேற்ப
இவர் எதிர்பார்க்கிறார். அதே நேரத்தில் இவர் யாரிடமிருந்து எதிர்பார்க்கின்றாரோ அவருடைய அறிவு நிலை,சிந்தனை, நிர்ணயம் இவைகள் எல்லாம் வேறுபடுகின்றன.

ஆகையினாலே நாம் எதிர்பார்க்கும் அளவுக்கு அந்த நான்கு பரிமாணங்களோடு எதிர்பார்ததது கிட்டாது. எப்போதுமே எதிர்பார்ப்பதிலே ஏதாவது ஒரு வகையில்ஏமாற்றம். இப்படி எதிர்பார்த்து, எதிர்பார்த்து, ஏங்கி, ஏங்கி,
வாழ்க்கையே நைந்து போகிறது.

ஒரு குடும்பத்தையே எடுத்துக் கொள்ளுங்கள். கணவன் நினைப்பார், மனைவி இம்மாதிரிதான் நடந்துக்கொள்ள வேண்டும் என்று. அதேப்போல மனைவியும் தனது கணவன் இவ்வாறுதான் இருக்க வேண்டும் என்றுஎண்ணுவார். இவ்வாறு எல்லை கட்டிக் கொண்ட பிறகு உண்மையாக அதை விட நல்லதாக இருந்தால் கூட,நாம் எல்லை கட்டிய அளவிட்ட நிலையிலே இருந்து அது மாறி இருக்கும் போது அதை ஏற்றுக் கொள்ளமுடியாத நிலை ஏற்படுகிறது. விளைவு - எப்போதுமே பிணக்கு, தவிப்பு, துன்பம், ஏமாற்றம் இவைகள்தான்.
எதிர்பார்த்தலில் பெறவேண்டும் பெறவேண்டும் என்கிற ஆசை அதிகரித்து ஓங்கி நிற்கிறது. தான் செய்யவேண்டும், தான் கொடுக்க வேண்டும் என்ற நிலையை ஒரு மனிதனின் மனம் பெற்றுவிட்டால் அங்கேதான் மன நிறைவு கிடைக்கும். இந்த மன நிறைவு பெறுவதுதான் மனித தன்மை.

மனிதன் எடுத்த வடிவம், மனிதன் எடுத்த நற்பிறவியின் நோக்கமே நல்ல முறையிலே அறிவு வளர்ச்சிப்பெற்று, எல்லா வகையிலும் மகிழ்ச்சியோடு வாழ்ந்து முடிவு காண வேண்டும் என்பதுதான். அதற்குமன நிறைவு வேண்டும். எதிர்பார்க்கும் வரை மன நிறைவுஏற்படாது. நாம் எதனையும் எதிர்பார்க்கும்நிலையிலே இயற்கை நம்மை படைக்கவில்லை இயற்கையின் பரிணாமத்திலே ஒவ்வொரு ஜீவனும்உற்பத்தியாகும் போதே அதற்கு
தேவையானது அனைத்தும் சேர்ந்து இணைந்து வந்துள்ளது. அதுதான்இயற்கை நியதி.

ஒருவர் பிச்சையெடுத்து வாழ்கிறார் என்றால் பிச்சை எடுப்பதற்காக இயற்கை அவரை உண்டுபண்ணவில்லை. இயற்கையிலிருந்து அவர் பிச்சையெடுப்பவராக வந்தாரில்லை. எல்லா ஆற்றல்களையும்அடக்கமாக கொண்டுதான் நாம் ஒவ்வொருவரும் வந்திருக்கிறோம். அந்த ஆற்றலையெல்லாம் நல்லமுறையிலே பயன் படுத்த வேண்டும் என்று எண்ணும் போதுதான் நன்மை செய்ய முடியும், நலமாக மனநிறைவோடு வாழ முடியும்.


வேதாத்திரி மகரிஷி அவர்கள்.
avatar
tdrajeswaran
உறுப்பினர்
உறுப்பினர்

பதிவுகள் : 15
புள்ளிகள் : 24
Reputation : 3
சேர்ந்தது : 17/08/2010
வசிப்பிடம் : chennai, india

Back to top Go down

Re: துன்பங்கள் பிறக்கும் இடம்.

Post by மகி on Thu Aug 26, 2010 1:41 pm

பகிர்வுக்கு மிக்க நன்றி.

_________________
[You must be registered and logged in to see this link.]
avatar
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

Re: துன்பங்கள் பிறக்கும் இடம்.

Post by tamilparks on Fri Aug 27, 2010 12:05 pm

மிகவும் அருமையான பதிவு வாழ்த்துக்கள்
avatar
tamilparks
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 152
புள்ளிகள் : 167
Reputation : 4
சேர்ந்தது : 20/05/2010
வசிப்பிடம் : கன்னியாகுமரி

Back to top Go down

Re: துன்பங்கள் பிறக்கும் இடம்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum