தமிழ் | Tamil | Forum
தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

கூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.

புகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.
Latest topics
» சிறந்த பொழுதுபோக்கு இணையதளம்!
by pba Sat Jul 02, 2016 8:11 pm

» ஏற்றுமதி உரிமம் பெறும் விண்ணப்பம்
by tamilnews Tue Mar 24, 2015 8:00 pm

» மொபைல், டிடிஎச் ரீசார்ஜ் செய்யப் போறீங்களா? இந்த சலுகைகளைப் பாருங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:41 am

» மொபைல் ரீசார்ஜ் செய்து ஷாப்பிங் கூப்பன் இலவசமாக பெறுங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:38 am

» மெமரி கார்டு வாங்கப் போறீங்களா? 74% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:36 am

» அமேசானில் பெண்களுக்கான ஆடைகள் 70% வரை தள்ளுபடி !
by dsytamil Wed Jan 14, 2015 1:34 am

» அமேசானில் ஆண்களுக்கான ஆடைகள் 60% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:31 am

» லெனோவா டேப்ளட் 43% சலுகை விலையில் ரூ. 5949 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:28 am

» ப்ளிப்கார்ட் தளத்தில் சிறுவர்களுக்கான ஆடைகள் 70% வரை + 30% கூடுதல் தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:14 am

» அமேசான் தளத்தில் 50% தள்ளுபடி விலையில் மொபைல்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:13 am

» ரூ. 7499 மதிப்புள்ள மைக்ரோமேக்ஸ் ஏ1 ஆன்ட்ராய்டு மொபைல் இப்போது ரூ. 5499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:11 am

» ரூ. 19999 மதிப்புள்ள நோக்கியா லூமியா 625 மொபைல் ரூ. 7499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:10 am

» ப்ராண்டட் காலணிகளுக்கு 70% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:08 am

» ஆன்லைன் ஷாப்பிங்கில் ப்ரிண்டர்களுக்கு 33% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:06 am

» ஆன்லைனில் பொருள் வாங்கப் போறீங்களா? 70% வரை பணத்தை சேமியுங்கள்!
by dsytamil Tue Jan 13, 2015 12:30 am

» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...!
by sathikdm Sun Oct 19, 2014 4:45 pm

» சிறுதொழில் செய்பவர்கள் இணையதளம் தொடங்க வேண்டியதின் அவசியம்!
by pba Sat Sep 27, 2014 12:58 am

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:47 pm

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:42 pm

» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
by santhoshpart Wed Aug 27, 2014 4:22 pm

» “சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா!”
by santhoshpart Wed Aug 13, 2014 3:54 pm

» Daily Rs.500/- and Above
by K.MARIAPPAN Wed Jul 30, 2014 12:01 pm

» http://www.neobux.com/?r=narasimmant
by Navaneethakrishnan Wed Jul 02, 2014 3:41 pm

» வணக்கம் என் பெயர் வேணு
by A.Venu Fri Jun 27, 2014 10:10 am

» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?
by sathikdm Wed Jun 18, 2014 3:24 pm

» தமிழ் மொழி மூல கல்வி இணையதளம்
by afdhaal Wed May 28, 2014 9:22 pm

» வருக. வருக. வணக்கம்.
by மகி Mon May 12, 2014 3:55 pm

» அறிமுகம் -விநாயகா செந்தில்.
by மகி Mon May 12, 2014 3:53 pm

» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....!
by vinayagasenthil Sat May 10, 2014 9:04 pm

» +2result இங்கே காணலாம்!
by மகி Fri May 09, 2014 12:41 am

பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

சங்கரநயினார் கோவில்

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

சங்கரநயினார் கோவில் - Page 2 Empty Re: சங்கரநயினார் கோவில்

Post by நந்தி on Fri Jun 25, 2010 10:55 pm

'பிரமா விட்டுணு சரீரம் பிராகிருத மாகலானும் முன் பரமசிவன் அனுக்கிரகம் இல்லாமையானும் பிரம விட்டுணுக்கள் சரீரம்போலப் பரமசிவனைத் தியானிக்கலாகாது. பிரம விட்டுணுக்கள் பதம் பசுத்தானம். உருத்திரர்பதம் ஈசுரர்பதம் இரண்டும் பதித்தானம்'

என்றது சித்தாந்த பிரகாசிகை. பிராகிருத சரீரமுடையவனாய்ப் பசுத்தானத் திருப்பவ னெனப்பட்ட விட்டுணுவும் அவன். அந்நாராயணனைத்தான் வைணவ சமயம் கடவுளெனக் கொண்டு வணங்கிவரும். அவன் அந்த 25 தத்துவங்களளவே வியாபித்திருப்பான். ஆனால் அவற்றின் மேலுந் தத்துவங்களுள. அவற்றை அச்சமயம் அங்கீகரியாது. ஆகலின் அவற்றில் அவனுக்கு வியாபகமில்லை. சைவசமயம் அவற்றையுஞ் சேர்த்துத் தத்துவங்கள் 36 கொள்ளும். அவற்றின் மேல் தத்துவமில்லை. 36-ஆம் தத்துவம் நாதம் என்பது. அதன் முடிவிலுள்ளவன் சங்கரன். அவனே சைவ சமயக் கடவுள், அவ்வெல்லாத் தத்துவங்களிலும் அந்தர்யாமி யாகி மேலிருப்பவன், சர்வவியாபி. அவனையும் அந்தப்பிரகிருதி தத்துவ நாராயணனையும் சமமென இயைத்துச் சங்கரநாராயணனெனப் பேசுவது சைவ நூற்களைப் பயிலாத தோஷமே யாம்.

80 - 56 ஆம் பாடல் சங்கரன் சக்தன், மூன்றாவதாகச் சொல்லப்பட்ட நாராயணன் சக்தி என்றது. சக்தன் கர்த்தா. சக்தி அவனுடைமை. உடைமை உடையவனின் வழிப்பட்டதே. அத்தேவிநாராயணன்றான் நாதாதீதமாயுள்ள சிவசக்தியின் அமிசம்.

'அரியலால் தேவியில்லை ஐயன்ஐ யாற னார்க்கே'

என்ற அப்பர் வாக்கிலுள்ள அரி அத்தேவிநாராயணன். அவன் சுத்தவித்தை நாராயணன் மூலம் பிரகிருதி நாராயணனைத் தொழிற்படுத்தி வருகிறான். அச் சம்பந்தம் பற்றி அந்தப் பிரகிருதி நாராயணனையும் சங்கரனுக்குத் தேவியெனச் சில நூற்கள் கூறும். அவ்வளவே. பிரமன் முதலிய மற்றைத் தேவர்களை அமிசமென்பதும் அச் சம்பந்தம்பற்றித்தான். அவர்களெல்லாம் உயிர்களென்பதே உண்மை.
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சங்கரநயினார் கோவில் - Page 2 Empty Re: சங்கரநயினார் கோவில்

Post by நந்தி on Fri Jun 25, 2010 10:57 pm

சங்கரனே சங்கரநாராயணன்

'மாநிலத்தோர் சிவன் வேறு, விஷ்ணு வேறு என்று பிளவு படுத்துவது தவறு என்பதை உணர்த்தும் பொருட்டு' ஆனது ஆடித் தவசுக் காட்டியென அக்கோவில் தவசு விளம்பரப் பத்திரிக்கை கூறிவருகிறது, நரசிங்கவுருப் போன்றது சங்கரநாராயணன வுரு. முன்னையதில் நரனும் சிங்கமும் அல்லாத நாராயணன் மறைந்து நின்றான்.. பின்னையதில் அப்படிச் சங்கரனும் நாராயணனும் அல்லாத எவன் மறைந்து நின்றான்? எவனுமிலன். நரசிங்கவுரு நரன் வேறு, சிங்கம் வேறு எனப் பிளவு படுத்தவது தவறு என்பதை உணர்த்தவா வந்தது? இல்லை. அதுபோல் சங்கரநாராயண வுரு சங்கரன் வேறு. நாராயணன் வேறு எனப் பிளவுபடுத்துவது தவறு என்பதை உணர்த்தவா வந்தது? இல்லை. அதுபோல் சங்கரநாராயண வுரு சங்கரன் வேறு. நாராயணன் வேறு எனப் பிளவுபடுத்துவது தவறு என்பதை உணர்த்த வரவில்லை. மேலும் சிவன் வேறு, விஷ்ணு வேறு எனப்பிளவு படுத்துவோர் எதனை அப்படிப் பிளவு படுத்துகிறார் என்பதற்கும் அப்பத்திரிக்கையால் விடை காண முடியாது. நரசிங்க வுருவில் நாராயணன் மறைந்து நின்றது போல் அல்லாமல் சங்கரன் தன் உருவிலேயே தன்னை ஒரு பாதியிலும், நாராயண வுருவை இன்னொரு பாதியிலுமாகக் காட்டி நின்றான். அந்நாராயண வுரு வைணவக் கடவுளானால் நரசிங்க வுருவிலுள்ள நரன் வேறு, சிங்கம் வேறு பிராணிகள் ஆதலும் வேண்டும். அப்படியில்லை. நரசிங்க வுருவிலுள்ள நரவுருவும் சிங்கவுருவும் நாராயணனுடையனவேயாதல் போல் சங்கரநாராயண வுருவிலுள்ள நாராயண வுருவும் சங்கரனுடையதே யாகும். கோவில் சங்கரநாராயண சந்நிதியில் இடபவுருவமே யிருப்பதை இன்றுங் காணலாம். தவசுப் பிற்பகற் காட்சியில் சங்கரநாராயணன் காட்சி கொடுக்க எழுந்தருளுவதும் இடப வாகனத்திலேயா மென்பதும் முன் சொல்லப்பட்டது. ஆகவே சைவசமய வுண்மையைக் கண்டு அவ்விளம்பரப் பத்திரிகை வெளிவருவதாகச் சொல்ல முடியாது.
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சங்கரநயினார் கோவில் - Page 2 Empty Re: சங்கரநயினார் கோவில்

Post by aarul on Fri Jun 25, 2010 11:59 pm

சங்கரநயினார் கோவில் - Page 2 7620
aarul
aarul
தள ஆலோசகர்
தள ஆலோசகர்

பதிவுகள் : 421
புள்ளிகள் : 793
Reputation : 12
சேர்ந்தது : 20/12/2009
வசிப்பிடம் : mani electronics,erode, tamilnadu,india

Back to top Go down

சங்கரநயினார் கோவில் - Page 2 Empty Re: சங்கரநயினார் கோவில்

Post by மகி on Sat Jun 26, 2010 12:21 am

பகிர்வுக்கு மிக்க நன்றி.

_________________
[You must be registered and logged in to see this link.]
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

சங்கரநயினார் கோவில் - Page 2 Empty Re: சங்கரநயினார் கோவில்

Post by நந்தி on Sat Jun 26, 2010 12:06 pm

நன்றி நண்பர்களே!
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சங்கரநயினார் கோவில் - Page 2 Empty Re: சங்கரநயினார் கோவில்

Post by நந்தி on Sat Jun 26, 2010 12:26 pm

சங்கரனே சங்கரநாராயணனாக உருக்காட்டினான் என்பது,

'சங்க பத்மர்செய் தவத்தினுக் கரனரி தானு - மெங்கு
மொன்றெனத் திருவுருக் கொண்டரு ளிமைய - மங்கையாவுடை மணாளர்' (6 . 1)

'அரியர வடிவா மரனுரு' (43 . 66)

'பனிவரு சடையான் மாலும்ஈ சனுமாய்ப் பகருருத்
தாங்கிய பண்பும்' (48 . 5)


என்றதால் விளங்கும். ஒருவனே தன்னை யிருவராக் காட்டினான். ஒருவன் சங்கரன். இருவர் அவனும் அவனது புருஷசக்தி யெனப்பட்ட தேவி நாராயணனும். ஆகலின்,
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சங்கரநயினார் கோவில் - Page 2 Empty Re: சங்கரநயினார் கோவில்

Post by நந்தி on Sat Jun 26, 2010 12:27 pm

'சங்கரநா ராயணரே யநாதி மூர்த்தி' (47 . 81)

என்றதால் அவ்வுரு சங்கரனுடையதே என்பதாயிற்று.

'புன்னைமா வனத்தின் நீழற் புவியினில் அநாதி யாகி
அன்னைகோ மதியி னோடும் அமர்ந்தருள் அமல வித்தாய்
மன்னிய தொண்டர்க் கெல்லா மங்கல நல்க லாலே
தன்னைநே ரிவ்வி லிங்கஞ் சங்கர லிங்க மாகும்' (64 . 1),

'சீர்த்திகொள் தேவ மூர்த்தி யசுரராற் செய்யு மூர்த்தி
யேர்த்திகழ் நாக மூர்த்தி யிவ்வுல கத்தி லுள்ள
பார்த்திப ரியற்று மூர்த்தி யாதிய படிவங் கொண்ட
மூர்த்திகட் கெல்லாம் அந்தச் சங்கர மூர்த்தி முன்னாம்' (64 . 4)


என்றதால் அக்கோவிலிற் சங்கரலிங்கமே அதாவது சங்கரமூர்த்தியே மூலவராகிய அநாதிமூர்த்தி. அவனுக்கு 8 நாமங்கள் உள. (68 . 30)ஆம் பாடல் காண்க. அவற்றுள் வரராசைநாதன், சீராசைநாதன், புன்னைவனநாதன், கூழையாண்டி என்பன இடம்பற்றி வந்தன. சங்கரநாராயணன் என்பது கொண்ட கோலம் பற்றி வந்தது. வைத்தியநாதன் என்பது புற்று மண் மருந்துபற்றி வந்தது. சங்கரமூர்த்தி, சங்கரலிங்கம் என்பன பெயராகவே யுள்ளன. இன்றும் அக்கோவில் மூலவர் பெயர் சங்கரலிங்கமே. அதனைச் சங்கரநாராயணரென யாருஞ் சொல்லார்.
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சங்கரநயினார் கோவில் - Page 2 Empty Re: சங்கரநயினார் கோவில்

Post by மகி on Sat Jun 26, 2010 12:28 pm

பகிர்வுக்கு மிக்க நன்றி.

_________________
[You must be registered and logged in to see this link.]
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

சங்கரநயினார் கோவில் - Page 2 Empty Re: சங்கரநயினார் கோவில்

Post by நந்தி on Sun Jun 27, 2010 9:54 pm

மஹாலக்ஷ்மி நாராயணனை நோக்கிச் "சுவாமி! உமது ஒரு பாதியில் உம்மையும், இன்னொரு பாதியில் சங்கர னுருவையும் எனக்குக் காட்டுக" எனப் பிராத்தித்தாள்; நாராயணனும் அவளுக்கு அவ்வாறே காட்டினான் என்ற கதை வைணவ சமயத்திலுண்டா? அவ்விரட்டையுரு எந்த வைணவக் கோவிலிலாவ துண்டா? அவ்வுருவைக் காட்டும் சக்தி அவனுக்கில்லை. அவ்விரட்டை யுருவிற்குப் பிராணனாவான் சங்கரனொருவனே, நாராயணனல்லன். ஆனால் 'தாழ்சடையும்' எனத் தொடங்குமொரு பாடலை ஆழ்வார் பாடியிருக்கின்றனரே யென்னலாம். அதற்கொரு சரித்தரமுங் கோயிலும் அம்மதத்தினருக்கில்லையாகலின் அப்பாடலும் அது போன்ற வைணவப் பிற பாடல்களும் 'இடமால் வலந்தான்' எனத தொடங்கும் பாடல் போன்ற திருமுறைப் பாடல்களிலுள்ள சங்கரனுக்குரிய பொருள்சேர் புகழை நாராயணனுக்கேற்றிக் கூறிய பொருள் சேராப் புகழேயாகும்.

அக்கோவிலிலிருந்து 1372 ஆம் பசலிச் (1963) சித்திரைப் பெருந் திருவிழா விளம்பரப் பத்திரிகை வெளியானது. அதனில் 'ஸ்ரீகோமதியம்பாள் சமேத ஸ்ரீசங்கரலிங்கப் பெருமான்' என்றுள்ளது ஒரு வரி. அதன்படி சங்கரலிங்கம் கணவனும், கோமதி மனைவியும் ஆவர். அப்பத்திரிகையில் அவ்விருவர் படங்களையும் போடுவதே முறை. லக்ஷ்மி படத்தையும் நாராயணன் படத்தையும் வைணவப் பத்திரிகையிற் போடுவது போலும் அது. சங்கரலிங்கத்துக்குத் தலை, உடம்பு, கை, கால் முதலிய உறுப்புக்க ளில்லையேயெனக் கவலை வேண்டாம். சங்கரலிங்கத்தின் உற்சவமூர்த்தித் திருவுரு விருக்கிறது. அதன் படத்தையும் கோமதியின் படத்தையும் போட்டால் என்ன? அவ்விழாப் பத்திரிகையில் 'சங்கரநாராயணன் படமும் கோமதி படமும் போடப்பட்டிருக்கின்றன. சங்கரநாராயணன் கணவனும், கோமதி மனைவியும் ஆவர் என்பது அதனால் தெரிகிறது. சங்கரநாராயணமூர்த்திக் காட்சி வைணவப் பெருமக்களுக்கு மாமென்பது நாட்குறிப்பிலுள்ளது. அங்ஙனமாயின் அம்மூர்த்தியிலுள்ள நாராயணன் வைணவக் கடவுள் என்றாகிறது. அக்கடவுளுமா கோமதிக்குக் கணவன்? அவன் அவளுக்குச் சகோதரனே. 'மாயோன் மருகனே' என்ற முருகன் துதி நூலால் அதனை யறிக. அச்சகோதரனையும் தனக்கு அகமுடையானென அவள் கொண்டனளா? அவளது பதீவிரதா தருமத்துக்கு அதுதான் இலக்கணமா? கோமதி சங்கரரை வழிபடுமுறை இதுதானா? அந்நிய சமயத்தாரைத் திருப்தி செய்யும் பொருட்டுத் தன்சமய தெய்வத்தைத் தரங்கெடப் பேசுவதும் எழுதுவதும் படம்போட்டுக்காட்டுவதும் சைவ சமய சமூகத்துக்குத் தன்மான மாகுமா? நாராயணன் தன் தங்கையை மனைவியாக் கொண்டானென அவனையும் அது நிந்தித்த தாகும். ஆகலின்,

'கொவ்வையா யிமையச் செல்வி கோமதி வலப்பா
கத்தில் - திவ்விய சொரூப மாகத் திருவருள் புரிந்தி ருக்கும்
இவ்விலிங் கத்தைப் போற்று மியல்புளோர் பிறப்பென்
றேதும் - பெளவமேழ் கடந்து நித்த பரிசுத்த ராகுவாரே' (66 . 18)


என்றபடி சிவலிங்கமுங் கோமதியுமாகப் படம் போட்டுவதே ஒழுங்காகு மென்க.
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சங்கரநயினார் கோவில் - Page 2 Empty Re: சங்கரநயினார் கோவில்

Post by நந்தி on Sun Jun 27, 2010 9:54 pm

விழா

உக்கிரபாண்டியன் என்றோ ரரசன் இருந்தான். அவன் அப்புன்னை வனத்தை ஊராக்கிச் சங்கரலிங்கப் பெருமானுக்கும் கோமதித் தாய்க்கும் கற்கோவில் எழுப்பிச் சிவாகம வழிப் பூசையாதிய நடைபெறச் செய்தான். அவனால் தொடங்கி நடத்தப்பட்ட விழாச் சித்திரைத் திருவிழா வாகும். அதுவே அக்கோவிலின் பிரமோத்ஸவம். வேறு அத்தலத்திற்குரிய விழா எதுவும் புராணத்தி லில்லை.

சங்கரன் அவ்விரட்டையுருக் காட்டிய நாள் அடிமாதப் பெளர்ணமி. அந்நாளில் சங்கரனை வணங்குவோர் பெரும் பேறடைவர். (65 . 13)ஆம் பாடல் காண்க. அதற்கு முந்தின பிந்தின பாடல்களில் சோமவாரம், சுக்கிரவாரம், சித்திரா பெளர்ணமி, மஹாசிவராத்திரி, பிரதோஷம், அட்டமி என்பனவும் அவனை வணங்குதற்குரிய நன்னாட்களெனச் சொல்லப்பட்டன. அவ்வளவே.

'சங்கபத்மருக்கன்றி மற்றொருவருக்குத் தெரியாமல் மறைந்து புன்னைமர நீழலில் சங்கரநாராயணராகிய பெருமான் எழுந்தருளியிருந்தனர்' (88 இறுதி வசனம்)

என்றதால் அங்ஙனம் மறைந்துபோன சங்கரநாராயண மூர்த்திக்கு உக்கிரபாண்டியனும் விழா நடத்தினதில்லை. அப்படியிருந்தும் அவ்விழாக் கோவிலில் சிறந்த இடம் பெற்றது. அவ்வளவுதானா? அக்கோவில் மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசி விழாவிற்கும் இடனாயிற்று. எந்த வைணவக் கோவிலிலாவது மார்கழித் திருவாதிரை விழா நடக்கிறதா? சைவசமயிக ளெல்லாம் அடியோடு அத்தமித்துப்போன காலத்திற்போலச் சைவாலயங்களில் பூஜை, உத்ஸவம் முதலியன நடக்க லாயின.


Last edited by நந்தி on Sun Jun 27, 2010 11:22 pm; edited 1 time in total
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சங்கரநயினார் கோவில் - Page 2 Empty Re: சங்கரநயினார் கோவில்

Post by aarul on Sun Jun 27, 2010 10:05 pm

சங்கரநயினார் கோவில் - Page 2 7620
aarul
aarul
தள ஆலோசகர்
தள ஆலோசகர்

பதிவுகள் : 421
புள்ளிகள் : 793
Reputation : 12
சேர்ந்தது : 20/12/2009
வசிப்பிடம் : mani electronics,erode, tamilnadu,india

Back to top Go down

சங்கரநயினார் கோவில் - Page 2 Empty Re: சங்கரநயினார் கோவில்

Post by மகி on Sun Jun 27, 2010 11:07 pm

பகிர்வுக்கு மிக்க நன்றி.

_________________
[You must be registered and logged in to see this link.]
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

சங்கரநயினார் கோவில் - Page 2 Empty Re: சங்கரநயினார் கோவில்

Post by நந்தி on Tue Jun 29, 2010 1:23 am

நன்றி நண்பர்களே!
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சங்கரநயினார் கோவில் - Page 2 Empty Re: சங்கரநயினார் கோவில்

Post by நந்தி on Tue Jun 29, 2010 1:24 am

சங்கரநயினார் கோவில் - Page 2 Pic1

சங்கரலிங்க சுவாமி சமேத கோமதி அம்பாள்
சங்கரன் கோவில்
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சங்கரநயினார் கோவில் - Page 2 Empty Re: சங்கரநயினார் கோவில்

Post by நந்தி on Tue Jun 29, 2010 1:30 am

பெயர் மாற்றம்

அக்கோவில் சம்பந்தமான பழைய அச்சுப்பாரம் ஒன்றில் 'சங்கரநயினார்கோவில் தேவஸ்தானம் ஆபிஸ், 190 ம்வருஸத்து நிர், பேப்பர் சுருக்கம் அடக்கம் விபரம் பேப்பர்தெய்தி, வரவுதெய்தி, ஆர்டர்தெய்தி, ரவணாதெய்தி, முடிவுதெய்தி' என்பன அதற்கதற்குரிய இடத்தில் அச்சிடப் பட்டுள்ளன். 190 என்றதன் பக்கத்தில் 8 என்ற கையெழுத்திருக்கிறது. பேப்பர் தெய்தி 8-1-08 ஆகும். அக்கோவிலுக்கு 1908இல் சங்கரநயினார் கோவில் தேவஸ்தானம் என்ற பெயர் இருந்திருக்கிறதென அதனால் தெரியலாம்.

பின்னர் அக்கோவிலிலிருந்து 51 பக்கங்கள் கொண்ட கோஷ்பாராப் புத்தகமொன்று அச்சாகி வெளிவந்தது. 'உ ஸ்ரீ கோமதி ஸஹாயம், சங்கரநயினார் கோவில் கஸ்பா, ஸ்ரீ சங்கரலிங்க சுவாமி கோவில் தேவஸ்தானம், 1325-ம் பசலி வரவு செலவு கோஷ்பாரா, திருநெல்வேலி நூருல் இஸ்லாம் பிரஸில், பதிப்பிக்கப்பட்டது, 1917' என்பது அதனட்டையிற் கண்ட முகப்பு. 1917இல் அக்கோவில் ஸ்ரீசங்கரலிங்கசுவாமி கோவில் தேவஸ்தானம் என்ற பெயருடையதா யிருந்திருக்கிறதெனத் தெரியலாம்.

அக்கோவிலின் மற்றோ ரச்சுப்பாரத்தில் 'டூப்பிளிக்கேட், சங்கரநயினார் கோவிலித் தாலூகா, சங்கரநயினார் கோவில்க் கிராமம், ஸ்ரீசங்கரலிங்கசுவாமி கோவில்.....வரவு செலவுகளுக்குரிய வவுச்சர். வரவு ரூ.சிலவு.ரூ.பாபு பசலி ரூ.அ.பை செலுத்துகிற அல்லது பெற்றுக் கொள்பவர் கையொப்பம்.....19 ஷராப். பேஷ்கார். தர்மகர்த்தர்கள்' என வுள்ளது. அதனில் ஸ்ரீ சங்கரலிங்கசுவாமி கோவில் என்ற அச்செழுத்துக்குப் பக்கத்தில் தேவஸ்தானம் எனவும், தர்மகர்த்தர்கள் என்றதன் கீழ் 21-3-1921 எனவும் கையால் எழுதப்பட்டுள்ளன. 1921 இலும் அக்கோவிலின் பெயர் ஸ்ரீ சங்கரலிங்கசுவாமி கோவில் தேவஸ்தானம் எனத் தெரியலாம்.
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சங்கரநயினார் கோவில் - Page 2 Empty Re: சங்கரநயினார் கோவில்

Post by மகி on Tue Jun 29, 2010 3:27 pm

பகிர்வுக்கு மிக்க நன்றி.

_________________
[You must be registered and logged in to see this link.]
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

சங்கரநயினார் கோவில் - Page 2 Empty Re: சங்கரநயினார் கோவில்

Post by நந்தி on Wed Jun 30, 2010 12:57 am

நன்றி நண்பரே!
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சங்கரநயினார் கோவில் - Page 2 Empty Re: சங்கரநயினார் கோவில்

Post by நந்தி on Wed Jun 30, 2010 12:58 am

அக்கோவில் நூல் நிலயத்திலுள்ள புத்தகங்களின் அட்டையில் ஒட்டப்பட்டுள்ள துண்டு விளம்பரத்தில் 'ஸ்ரீ சங்கரலிங்கசுவாமி கோவில் தேவஸ்தானம் புஸ்தகசாலை, புஸ்தகம் லக்கம் N.A.V. Somasundaram Pillai & V.Thiruvengadam Pillai, Trustees' என அச்சிடப்பட்டிருப்பதை இன்றுங் காணலாம். N.A.V. சோமசுந்தரம் பிள்ளை, V.திருவேங்கடம் பிள்ளை என்பார் அக்கோவிலில் தருமகர்த்தர்களா யிருந்தபோதும் அதற்கு ஸ்ரீசங்கரலிங்கசுவாமி கோவில் தேவஸ்தானம் என்பதே பெயர் எனத் தெரிகிறது.
ஆனால் இப்போது அக்கோவில் ஸ்ரீசங்கரநாராயணசுவாமி தேவஸ்தானம் எனப் பெயர்மாற்றி வழங்கப்பட்டு வருகிறது. அம்மாற்றம் என்றிலிருந்து ஆரம்பம்? அதனைக் காணும் பொறுப்பு சைவசமயத்தாருக்கன்றி யாருக்குண்டு? சங்கரன்கோவில் சைவசமயப் பெருமக்களே அதனை விசேடமாகக் காண்டற் குரியார்.
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சங்கரநயினார் கோவில் - Page 2 Empty Re: சங்கரநயினார் கோவில்

Post by நந்தி on Wed Jun 30, 2010 1:01 am

1917இல் சென்னை, கவர்ண்மெண்டு பிரஸில் அச்சான Madras District Gazetteers - Tinnevelly by H.R.Pate, I.C.S. Volume I.413,414 ஆம் பக்கங்களில் அக்காலை நெல்லை ஜில்லாக் கலெக்டராயிருந்த அந்தப் 'பேட்' என்பவர் 'The temple, conspicuous by its gopuram for many miles around, boasts of great antiquity. According to the stalapurana in the possession of the trustees, King Ugra Pandia "Lord of Korkai, the vanquisher of the tiger-flag of the Cholas and bow-flag of the Cheras," used to go daily to Madura to worship. One day, on reaching the village of Perungottur (two miles from Sankaranainarkoil) the elephant on which the king was riding plunged into a pit and refused to move. Whilst the king was marvelling at the portent, the god Ayyanar appeared and told him he need not go every day to Madura. At that moment a Paraiyan came and told the king he had found a cobra beside an ant-hill and on the king's request took him to the spot. There a lingam was found and a shrine was built. There a lingam was found and a shrine was built. Such was the origin of the Sankaranainarkoil temple. Here it was, the story goes on to say, that God Siva showed to his consort, Gomathi Amman, and to the two serpents, Sanka and Padman, who were quarrellling as to the relative importance of Siva and Vishnu, the unity of the two gods.' The story, which up to this point had referred only to Siva, thus suddenly introduces in allegorical form a theological discussion of the type which originated with the great Ramanujachariyar in the twelfth century. It is scarcely possible to doubt that this element of the story is a later interpolation, designed to associate the god Vishnu with the foundation of the temple and to lend support to the subsequent innovation by which the diety of the temple came to be called "SankaraNarayana" (i.e. Siva and Vishnu) instead of Sanakaranainar, "The Lord Shiva". The plan of the building makes it evident that orginally Vishnu had not a shrine in it. The temple consists of two main parts, the larger occupied by the lingam, the emblem of siva, and the smaller by the goddess Gomathi Amman. Between the two a third small shrine has been inserted for Narayana. but the building did not lend itself to this addition; for , while the lingam and the amman may, as it usual, be viewed from the main entrance through a continuous vista of doorways, so that the humblest worshipper may do homage from the street, it was found impossible to give the god Narayana similar accomodation. He has therefor been walled in and has no gateway. Instances of temples which, according to tradition at least, have been converted from the worship of Siva to that of Vishnu are not uncommon; the great temple of Tirupati (North Arcot) and the Perumal temple of Srivilliputtur (Ramnad) may be quoted. In Sankaranainarkoil the attempt which we may perhaps ascribe to the era of those aredent Vaishnavites, the kings of Vijayanagar, was met, it would appear, by the ingenious answer that already the temple contained both gods. Though the trustees of the present day make much of the co-existance in their temple of the two gods and are particular in having the pattas for the temple lands made out distinctly in the name of Sankaranarayana, the newer god who plays quite a minor role in the important rituals of the temple'
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சங்கரநயினார் கோவில் - Page 2 Empty Re: சங்கரநயினார் கோவில்

Post by நந்தி on Wed Jun 30, 2010 1:05 am

இதன் தமிழாக்கத்தின் சாரம்சம் என்னவென்றால் திருப்பதி மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ள சைவக் கோவில்கள் பின்னாளில் வைணவர்களால் வைணவக் கோயில்களாக மாற்றப்பட்டது. அதன் ஆதாரம் தான் பேட் என்பவர் கொடுத்துள்ளார்.

என அச் சங்கரநயினார் கோவிலைப் பற்றிய வரலாரொன்று தீட்டியிருக்கிறார். அக்கோவிலின் வெளியீடாக 1957-இல் 'சங்கரன்கோவில் வரலாறு' என்றொரு புத்தகம் வந்திருக்கிறது. அதில் அவ்வாங்க்கிலத்தின் தமிழ்ப்பெயர்ப்புச் சுருக்கத்தைக் காணலாம். 'இக்காலத்திய தருமகருத்தர்கள் இந்தக் கோவிலில் இரண்டு தெய்வங்களும் இருப்பதைப்பற்றிப் பிரமாதப்படுத்தி வருவதோடு, நிலங்களுக்குப் பட்டாவைச் சங்கரநாராயணர் என்ற பெயருக்கே ஆக்கி வருகிறார்கள்' என அதிலிருக்கிறது. அதனால் அக் கோவிற் பட்டாவை மூலவராகிய சங்கரலிங்கப் பெருமான் பேரால்லாமல் 'புதுத் தெய்வம்' ஆகிய சங்கரநாராயணர் பேரால் தருமகர்த்தர்களே ஆக்கி வருகிறார்களெனத் தெரிகிறது. உரிமைப்பட்ட ஒருவர் பேருக்கு ஆக்கவேண்டிய பட்டாவை உரிமையில்லாத வேறொருவர் பேருக்கு ஆக்கி வைப்பது நியாயமா? முன் வந்து போன தருமகருத்தர்கள் போல் தாமும் செய்து வருவதாகப் புகல் சொல்லிப் பின் வந்துள்ள தருமகருத்தர்கல் தப்பப்பார்ப்பதும் நியாய மன்று. தருமகருத்தர்ப் பதவியை ஏற்றுக்கொண்ட ஒருவர் தம் கோவிலில் முந்திய தருமகர்த்தர் காலத்தில் தவறு ஏதேனும் நடந்துள்ளதா என முதலில் ஆராய வேண்டும். அது காணப்படின் அதனைக் களைதல் அவசியம். அப்போதுதான் தருமத்தைக் காத்து வளர்க்க முடியும். ஆகவே உரிமையற்ற சங்கரநாராயணர் பேருக்குள்ள எல்லாப் பட்டாக்களையும் உரிமையுள்ள சங்கரலிங்கப் பெருமான் பேருக்கு மாற்றி வைக்க இப்போதுள்ள கோவிலதிகாரிகள் முற்படுவார்களாக. பரிவார தெய்வங்கள் எந்தத் தெய்வத்தின் கைங்கரியத்துக்கென விடப்பட்ட சொத்தானாலும் அதன் பட்டா மூலவர் பெயருக்குத்தானே எழுதி வாங்கப்பட வேண்டும்?
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சங்கரநயினார் கோவில் - Page 2 Empty Re: சங்கரநயினார் கோவில்

Post by மகி on Wed Jun 30, 2010 4:27 am

பகிர்வுக்கு மிக்க நன்றி.

_________________
[You must be registered and logged in to see this link.]
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

சங்கரநயினார் கோவில் - Page 2 Empty Re: சங்கரநயினார் கோவில்

Post by நந்தி on Thu Jul 01, 2010 12:01 am

நன்றி நண்பரே!
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சங்கரநயினார் கோவில் - Page 2 Empty Re: சங்கரநயினார் கோவில்

Post by நந்தி on Thu Jul 01, 2010 12:02 am

கலவடப் பிரசங்கம்


கலவடம் என்பது கலப்படம் என வழங்கப்படுகிறது. 'அரனின் கூறுதான் அரி' எனத் 'தான்' சேர்த்துச் சொன்னது அக் கோவிலின் 1963-64 நாட்குறிப்பு. அரன் அமிசி, அவனது அமிசமே அரி என்ற கொள்கை வைணவ சாத்திர வல்லுநருக்குச் சிறிதும் அங்கீகாரமன்று. அதனால் சங்கரநாராயண மூர்த்தியை அவர் கண்ணெடுத்தும் பாரார். ஆகலின் ' வைணவப் பெருமக்களுக்கு ஆடித் தவசு உற்சவத்தில் ஸ்ரீ சங்கரநாராயண மூர்த்தியாகக் காட்சி தந்தருளுகிறார்' என அந்நாட்குறிப்புச் சொன்னதில் அர்த்தமில்லை.

சிவன் வேறு. விஷ்ணு வேறு என்று பிரிவு படுத்துவது தவறு எனச் சைவசமயமுஞ் சொல்லாது, வைணவ சமயமும் சொல்லாது. அவ்விரு சமயங்களுக்கும் வேறான மாயாவாத சமயமே சொல்லும். சிவாகமங்களுக்கும், சைவாலயங்களும் உள்ளதொன்றுதொட்ட தொடர்பை அறுத்தெரிந்து சைவாலயங்களை அம்மாயாவாத சமய வாழ்வுக்கே இடமாக்கிக் கொண்டு சிவாகமங்காத் தடந் தெரியாமல் செய்துவிடுவதே அச் சொல்லால் விளையக்கூடிய பயன். சைவ சமூகத்துக்கே அது பிராணஹானி யென்பது அச்சமூகத்தின் உள்ளத்தை உறுத்தவில்லை. சிவவிஷ்ணுக்கள் அபேத மென்பதை ஆதரித்து விளம்பரஞ் செய்துவரும் பிரசாரகருள் முதலிடம் சிருங்கேரிமடத்து அதிபராகிய சங்கர முனிவரும், காஞ்சிகாமகோடி பீடத்து அதிபராகிய சங்கரமுனிவருமாவர். அதைக் காண வேண்டும். முதலில் சிருங்கேரி முனிவர் பேச்சை எடுத்துக்கொள்ளலாம்.
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சங்கரநயினார் கோவில் - Page 2 Empty Re: சங்கரநயினார் கோவில்

Post by நந்தி on Thu Jul 01, 2010 12:03 am

அவர் பிரசங்கமொன்று 29-7-1960 தினமணியில் வந்திருக்கிறது`:-

"சிவபுராணத்தில் பத்மாசூரன் கதை குறிப்பிடப்பட்டிருக்கிறது......பத்மாசூரன்...சிவனைக் குறித்து கடும் தபசு செய்தான். ஈஸ்வரனும்......'யாது வரம் வேண்டு' மென்று கேட்டான். 'நான் யார் தலைமேல் கை வைக்கிறேனோ அவன் பஸ்மமாய் போய்விட வேண்டும்' என்று வேண்டினான். 'கொடுத்தேன்' என்றான் ஈஸ்வரன், பத்மாசூரன் உடனே இதை 'டெஸ்ட்' பண்ண வேண்டுமே என்றார் 'யார் தலைமேல்' என்று கேட்டதுமே 'உங்கள் தலைமேல்' தான் என்று சொல்லி சிவபெருமானை அணுகிறான். ஈஸ்வரனும் அங்கிருந்து ஓட ஆரம்பித்தார்.....பகவான் உடனே மோஹினி ரூபமெடுத்து பத்மாசூரன் முன்.....ஆட ஆரம்பித்து விட்டார். (அவ்வசுரனும்) மோஹினியைப் போலவே அபிநயங்கள் செய்யலானான். பகவான் (மோஹினி) தன் தலையில் கையை வைத்ததும், பத்மாசூரன் அதேபோல் தன் தலைமேல் தன் கையை வைத்தான். உடன் தானே பஸ்பமாய் விட்டான். விஷ்ணு இவ்வாறாக சிவனே இக்கட்டான நிலைமையிலிருந்து விடுவித்து 'இனிமேல் வரம் கொடுப்பதில் ஜாக்கிரதையா யிரு' என்று கூறிச் சென்றாராம்"

என்றது அம் முனிவர் பிரசங்கம். இக்கதை இப்படி யிருக்குமானால் இது சிவனது பெருமை கூற வந்த சிவபுராணத்தில் இடம் பெற்றிருக்குமா? அறிஞர் சிந்திக்க. விநாயக புராணம் உடுண்டி விநாயகர் திருவவதாரப் படலத்திலும் இக்கதை உண்டு. 1 முதல் 13 முடியவுள்ள பாடல்கள் காண்க:-

'அப்பொழுதே சோதிப்ப வமலர்திரு முடிமீதே
துப்புடைய பிரமசுரன் தொடிக்கரம்வைப் பானடுத்தா
னொப்பரிய வரங்கொடுத்த வொருதாமே யழித்துவிடல்
செப்பமல வெனவிறைவர் செறிந்தவியா பகரானார்'


என்றது 4 ஆம் பாடல். வரங்கொடுத்த பிறகு தன் ஸ்வரூபமாகிய வியாபக நிலையைச் சிவன் எய்தினான். அதனை 'அங்கிருந்து ஓட ஆரம்பித்தார்' என்றார் அம்முனிவர். அவ்வசுரன் பெற்ற வரம் விஷ்ணுவால் திதித்தொழிலுக்கே ஆபத்தாயிற்று. அவன் உயிருடன் இருந்தால் முச்சகமும் சாம்பலாக்குவன். அவன் இறந்தாலன்றி அவ்விஷ்ணுவுக்குத் தன் காத்தற்றொழில் நடைபெறாது. அதற்கஞ்சினான் அக்கடவுள். அதனாற்றான் அவன் அவ்வசுரனை வஞ்சனையாற் கொன்றான். அது அவனது காத்தற்றொழிலைக் காத்துக் கொள்வதற்காகவன்றிச் சிவனைக் காப்பதற்காக வன்று.
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சங்கரநயினார் கோவில் - Page 2 Empty Re: சங்கரநயினார் கோவில்

Post by நந்தி on Thu Jul 01, 2010 12:04 am

'விச்சுவரு பனையிந்த வெய்யவன்காண் பானல்ல
னச்சிவனா லழியாத வழிதக்க வரம்பெற்றான்
முச்சகமு மினிநீறாய் முடிப்பனொரு வஞ்சனையா
னச்சியுயிர் குடித்துமென நலத்தருமோ கினியானான்'


என்றது 6-ஆம் பாடல்.

இன்னொன்று. அவ்வசுரன்முன் விஷ்ணு தன் உண்மை வடிவிற் சென்றிலன். சென்றிருந்தானாயின் அவன் தலையில் கைவைத்து அவனைச் சாம்பாலாக்கியிருப்பான் அவ்வசுரன். ஆகலின் அச்சிவ வரத்துக் கஞ்சியே விஷ்ணு மோஹினி யென்ற பெண் வடிவந்தாங்கி அவ்வசுரன்முன் வந்து ஆடினான். ஆக விநாயக புராணஞ் சொன்னதே இக்கதையின் எதார்த்த வடிவம். சிருங்கேரி முனிவர் சொன்னது அங்ஙனமன்று.
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சங்கரநயினார் கோவில் - Page 2 Empty Re: சங்கரநயினார் கோவில்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum