தமிழ் | Tamil | Forum
தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

கூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.

புகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.

Join the forum, it's quick and easy

தமிழ் | Tamil | Forum
தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

கூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.

புகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.
தமிழ் | Tamil | Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வணக்கம் என் பெயர் நாகராசன்.இரா
by rajan_1972 Fri Apr 10, 2020 7:20 pm

» சிறந்த பொழுதுபோக்கு இணையதளம்!
by pba Sat Jul 02, 2016 8:11 pm

» ஏற்றுமதி உரிமம் பெறும் விண்ணப்பம்
by tamilnews Tue Mar 24, 2015 8:00 pm

» மொபைல், டிடிஎச் ரீசார்ஜ் செய்யப் போறீங்களா? இந்த சலுகைகளைப் பாருங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:41 am

» மொபைல் ரீசார்ஜ் செய்து ஷாப்பிங் கூப்பன் இலவசமாக பெறுங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:38 am

» மெமரி கார்டு வாங்கப் போறீங்களா? 74% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:36 am

» அமேசானில் பெண்களுக்கான ஆடைகள் 70% வரை தள்ளுபடி !
by dsytamil Wed Jan 14, 2015 1:34 am

» அமேசானில் ஆண்களுக்கான ஆடைகள் 60% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:31 am

» லெனோவா டேப்ளட் 43% சலுகை விலையில் ரூ. 5949 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:28 am

» ப்ளிப்கார்ட் தளத்தில் சிறுவர்களுக்கான ஆடைகள் 70% வரை + 30% கூடுதல் தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:14 am

» அமேசான் தளத்தில் 50% தள்ளுபடி விலையில் மொபைல்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:13 am

» ரூ. 7499 மதிப்புள்ள மைக்ரோமேக்ஸ் ஏ1 ஆன்ட்ராய்டு மொபைல் இப்போது ரூ. 5499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:11 am

» ரூ. 19999 மதிப்புள்ள நோக்கியா லூமியா 625 மொபைல் ரூ. 7499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:10 am

» ப்ராண்டட் காலணிகளுக்கு 70% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:08 am

» ஆன்லைன் ஷாப்பிங்கில் ப்ரிண்டர்களுக்கு 33% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:06 am

» ஆன்லைனில் பொருள் வாங்கப் போறீங்களா? 70% வரை பணத்தை சேமியுங்கள்!
by dsytamil Tue Jan 13, 2015 12:30 am

» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...!
by sathikdm Sun Oct 19, 2014 4:45 pm

» சிறுதொழில் செய்பவர்கள் இணையதளம் தொடங்க வேண்டியதின் அவசியம்!
by pba Sat Sep 27, 2014 12:58 am

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:47 pm

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:42 pm

» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
by santhoshpart Wed Aug 27, 2014 4:22 pm

» “சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா!”
by santhoshpart Wed Aug 13, 2014 3:54 pm

» Daily Rs.500/- and Above
by K.MARIAPPAN Wed Jul 30, 2014 12:01 pm

» http://www.neobux.com/?r=narasimmant
by Navaneethakrishnan Wed Jul 02, 2014 3:41 pm

» வணக்கம் என் பெயர் வேணு
by A.Venu Fri Jun 27, 2014 10:10 am

» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?
by sathikdm Wed Jun 18, 2014 3:24 pm

» தமிழ் மொழி மூல கல்வி இணையதளம்
by afdhaal Wed May 28, 2014 9:22 pm

» வருக. வருக. வணக்கம்.
by மகி Mon May 12, 2014 3:55 pm

» அறிமுகம் -விநாயகா செந்தில்.
by மகி Mon May 12, 2014 3:53 pm

» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....!
by vinayagasenthil Sat May 10, 2014 9:04 pm

பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

மெய்கண்டாச்சிரமம்

3 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

மெய்கண்டாச்சிரமம் - Page 2 Empty Re: மெய்கண்டாச்சிரமம்

Post by மகி Wed May 26, 2010 9:29 pm

பகிர்வுக்கு மிக்க நன்றி.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

மெய்கண்டாச்சிரமம் - Page 2 Empty Re: மெய்கண்டாச்சிரமம்

Post by நந்தி Fri May 28, 2010 7:07 pm

நன்றி நண்பரே!
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

மெய்கண்டாச்சிரமம் - Page 2 Empty Re: மெய்கண்டாச்சிரமம்

Post by நந்தி Fri May 28, 2010 10:41 pm

"வேதம்பசு அதன்பால் மெய்யாகமம் நால்வர்
ஓது தமிழ் அதனின் உள்ளுறும் நெய் - போதமிகு
நெய்யின் உறுசுவையாம் நீள் வெண்ணை மெய்கண்டான்
செய்த தமிழ் நூலின் திறம்"
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

மெய்கண்டாச்சிரமம் - Page 2 Empty Re: மெய்கண்டாச்சிரமம்

Post by நந்தி Fri May 28, 2010 10:49 pm

ஆத்மநாததேசிகர்:ஆகவே வடமொழிப் பயிற்சியும் வேதாகமப்பயிற்சியும் குறைந்து வரும் இக்காலத்தில் தோத்திர நூல்களாகிய தேவார திருவாசகங்களையும், அவற்றோடு வைத்து எண்ணப்படும் திருமுறைகளையும், சிவஞான போத முதலிய பதினான்கு சித்தாந்த சாத்திர நூல்களையும் பயில வேண்டியது மிக மிக அவசியம் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். ஆனால் இவைகளே போதாவோ. வேதசிவாகமங்கள் எதற்கு என்று கேட்பாரும் உளர். நெய்யும் அதன் சுவையும் போதாதோ பசுவும் அதன் பாலும் எக்கேடு கெட்டுப் போனாலென்ன என்று கேட்பதைப் போலத்தான் இருக்கிறது இந்தக் கேள்வி. சமயசாரியர்களும் சந்தானாச்சாரியர்களும் வேத சிவாகமங்களைப் போற்றியிருப்பதை திருமுறைகளிலிருந்தும் சிவஞான சித்தியார் முதலிய நூல்களிலிருந்தும் பல வாக்கியங்கள் எடுத்துக் காட்டப்பட்டதின் மூலம் அறியலாம். இவற்றின் விரிவை ஸ்ரீ பாஷ்யத்தில் காணலாம். இதுகாறும் கூறியவாற்றால் வடமொழியிலுள்ள இருக்கு, யசுர், சாம, அதர்வணம் என்றும் நான்கு வேதங்களும்; காமிகம் முதலிய இருபத்தெட்டு ஆகமங்களும், இறைவனால் உயிர்கள் பொருட்டு அருளிச் செய்யப்பட்ட முதல் நூல்கள் என்றும். அவற்றின் கருத்துக்களை தோத்திர ரூபமாக சமயாச்சாரியர்கள் திருமுறைகளாகவும் சந்தானாச்சாரியர்கள் சாத்திர ரூபமாக சிவஞான போதம் முதலிய அருள் நூல்களாகவும் அருளிச் செய்தார்கள். இனி இச் சாத்திரங்களிற் சொல்லப்படும் சமய உண்மைகள் என்ன என்பதைக் கவனிப்போம்
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

மெய்கண்டாச்சிரமம் - Page 2 Empty Re: மெய்கண்டாச்சிரமம்

Post by நந்தி Fri May 28, 2010 10:53 pm

ஆத்மநாததேசிகர்: இறைவனால் அருளிச் செய்யப்பட்ட முதல் நூல் வேத சிவாகமங்கள் என்றும் அவற்றின் முடிந்த கருத்துக்களை சந்தானாச்சாரியார்கள் பதினான்கு சித்தாந்த சாத்திரங்களாக தமிழ் நாடு செய்த தவப்பயனாக நமக்கு அருளிச் செய்திருக்கிறார்கள் என்றும் சொன்னோமல்லவா. இனி அச்சாத்திரங்களில் சொல்லப்பட்ட சமயக் கருத்துக்களைத் தெரிந்து கொள்வதற்கு முன்பு, அவற்றிற்கு மாறுபட்ட சமயக்கருத்துக்களும் நம் தேசத்தில் உலவி வருகிறபடியால் அவை யாவை என்பதையும் ஒரு சிறிது தெரிந்து கொள்ளுதல் இன்றியமையாதது. நீங்கள் கடைக்குப்போய் ஒரு பொருளை வாங்கும் போது நல்ல பொருள் எப்படியிருக்கும் மட்டமானது எப்படியிருக்கும் என்று தெரிந்துகொள்ள வேண்டாமா. இரண்டுக்கும் வித்தியாசம் தெரியாவிட்டால் எல்லாம் ஒரே மாதிரியாகத் தானே தோற்றமளிக்கும். கடைக்காரன் எதைக் கொடுத்தாலும் வாங்கிக் கொண்டுதான் வருவீர்கள். அதுபோல உண்மைச் சமயக் கருத்துக்களுக்கும் மாறுபட்ட அல்லது அறிவுக்குப் பொருந்தாத சமயக் கருத்துக்களுக்கும் வேற்றுமை தெரிய வேண்டியது அவசியமாகையால் பல்வேறு சமயங்களையும் அவற்றின் கோட்பாடுகளையும் சுருக்கமாகக் கூறுவோம்.

சமயங்களைப் புறப்புறச் சமயங்கள், புறச் சமயங்கள், அகப்புறச்சமயங்கள், அகச் சமயங்கள் என நான்கு பெரும் பிரிவுகளாக நமது ஆச்சாரியர்கள் பிரித்திருக்கின்றார்கள். புறப்புறச் சமயங்கள் ஆறு. அவை உலகாயுதம், மாத்தியமிகம், யோகாசாரம், செளத்திராந்திகம் வைபாடிகம் என்று நான்கு வகைப்பட்ட பெளத்தம் (புத்த சமயம்), ஆருகதம் (ஜைனம்). இந்த ஆறு சமயத்தவர்களும் வேதாகமங்களைப் பிரமாண நூல்களாக ஒப்புக் கொள்ளமாட்டார்கள். அவைகளை நிந்தையும் செய்வர்.
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

மெய்கண்டாச்சிரமம் - Page 2 Empty Re: மெய்கண்டாச்சிரமம்

Post by மகி Fri May 28, 2010 11:13 pm

பகிர்வுக்கு மிக்க நன்றி.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

மெய்கண்டாச்சிரமம் - Page 2 Empty Re: மெய்கண்டாச்சிரமம்

Post by நந்தி Wed Jun 02, 2010 8:56 pm

நன்றி நண்பரே!
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

மெய்கண்டாச்சிரமம் - Page 2 Empty Re: மெய்கண்டாச்சிரமம்

Post by நந்தி Wed Jun 02, 2010 8:57 pm

உலகாயுதம்: இச்சமயத்தார் காட்சிப் பிரமாணம் ஒன்றையே ஒப்புக் கொள்வர். மண், நீர், தீ, காற்று என தத்துவங்கள் நான்கு மட்டும் உண்டு. இவை ஒன்று சேர்ந்து உடம்பு உண்டாகிறது. உலகமும் இந்தத் தத்துவங்களின் கூட்டம்தான். உடம்புக்கு வேறாய் உயிர் என்று ஒன்று இல்லை. முற்பிறப்பு மறுபிறப்பு என்பதெல்லாம் பொய். உலகம் இயற்கை. கடவுள் கிடையாது. உலகத்தில் நாம் அனுபவிக்கும் இன்பமே மோக்ஷம். துன்பமே நரகம். உலகாயதாரைக் காட்சிவாதி என்றும் சொல்வதுண்டு.
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

மெய்கண்டாச்சிரமம் - Page 2 Empty Re: மெய்கண்டாச்சிரமம்

Post by நந்தி Wed Jun 02, 2010 8:58 pm

பெளத்தம்: "பிடகம்" என்பது புத்தர்களின் சமய நூல். அதைச்செய்தவர் ஆதிபுத்தர். புத்தரைத் தவிற வேறு கடவுள் என்பவர் இச்சமயத்தாருக்குக் கிடையாது. ஞானமே ஆன்மா எனப்படும். அந்த ஞானம் கணந்தோறும் அழிந்து கொண்டும் திரும்பத் தோன்றிக் கொண்டுமிருக்கும். எல்லாப் பொருள்களுமே இப்படித் தோன்றி மறைந்து கொண்டிருக்கும். கணந்தோறும் தோன்றியழிவதனாலே ஞானமும் அதினின்றும் வாசனையும் ஏற்படும். வாசனை அழிவதே முத்தி. பெளத்தரைக் கணபங்கவாதி என்றும் சொல்வதுண்டு.

மாத்திய மிகர், யோகாசாரர், செளத்திராந்திகர், வைபாடிகர் என்ற நான்கு வகைப் பெளத்தர்கள் பொருள்களின் இலக்கணத்தைக் கூறுமிடத்து ஒவ்வொருவரும் தம்முள் வேறுபடுவர். அவ்வேறுபாடுகளைப் பின்னர்ச் சந்தர்ப்பம் வரும்போது தெரிந்துகொள்ளலாம்.
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

மெய்கண்டாச்சிரமம் - Page 2 Empty Re: மெய்கண்டாச்சிரமம்

Post by நந்தி Wed Jun 02, 2010 8:58 pm

ஆருகதம்: இதைச் சைன மதம் என்றும் சொல்வதுண்டு. அருகனே இச்சமயத்தாரின் கடவுள். இச்சமயத்தில் பேசப்படும் பொருள்கள் ஏழு. அவை சீவன், அசீவன், ஆச்சிரமம், சமுவரம், நிச்சரம், பந்தம், வீடு என்பவை. சீவன் மூவகைப்படும். அனாதிசித்தனாகிய அருகக் கடவுள், பந்தங்களிலிருந்து நீங்கிய முத்தன், பந்தங்களிற் கட்டுண்டு கிடக்கும் பெத்தன். அசீவன் என்பது தாவரங்களும், விலங்குகளும், பறவைகளுமாம். பொறிகளினிடத்தே செல்லுதல் ஆச்சிரவம். அங்ஙனம் செல்லாமல் தடுத்து முத்திக்கு வழிதேடுவது சமுவரம். தவம் செய்தல் நிச்சரம். பிறவியிற் செலுத்தும் மோகம் முதலிய எண்குணங்களும் பந்தம், அக்குணங்களினின்றும் நீங்கி உலகத்தைக்கடந்து ஆகாயத்தை நோக்கிச் செல்லுதல் வீடு. மேலும் இவ்வுடம்பை எடுத்தற்கு முன் சீவன் உண்டோ இல்லையோ எனக் கேட்டால் அதற்குக் கூறும் பதில் வினோதமாக இருக்கும். உண்டாம், இல்லையாம், உண்டும் இல்லையுமாம், சொல்லொணாததாம், உண்டுமாம் சொல்லொணாததாம், இல்லையாம் சொல்லொணாததாம், உண்டுமில்லையாம் சொல்லொணாத்தாம் என ஏழுவகையாகப் பதில் சொல்லுவார்கள். இதைச்சப்தபங்கி நியாயமென்று கூறுவர். அருகரை அனேகாந்தவாதி யென்றும் கூறுவர்.
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

மெய்கண்டாச்சிரமம் - Page 2 Empty Re: மெய்கண்டாச்சிரமம்

Post by aarul Wed Jun 02, 2010 9:10 pm

மெய்கண்டாச்சிரமம் - Page 2 227966
aarul
aarul
தள ஆலோசகர்
தள ஆலோசகர்

பதிவுகள் : 421
புள்ளிகள் : 793
Reputation : 12
சேர்ந்தது : 20/12/2009
வசிப்பிடம் : mani electronics,erode, tamilnadu,india

Back to top Go down

மெய்கண்டாச்சிரமம் - Page 2 Empty Re: மெய்கண்டாச்சிரமம்

Post by நந்தி Wed Jun 02, 2010 11:01 pm

நன்றி நண்பரே!

இனி புறச்சமயங்கள் ஆறாவன: தருக்கம், மீமாஞ்சை, ஏகான்மவாதம், சாங்கியம், யோகம், பாஞ்சராத்திரம் என்பவை. இச்சமயத்தார் வேதங்களைப் பிரமாணமாகக் கொள்வர். ஆகமங்களைக் கொள்ளார். ஆனால் வேதத்திலும் ஒவ்வொரு சமயத்தார் ஒவ்வொரு பாகத்தை மட்டும் பிரமாணம் என்பர்.

தருக்க நூலார்: திரவியம் குணம், தொழில், சாதி, விசேடம், சமவாயம், இன்மை, எனப்பதார்த்தம் ஏழு என்பர். அவற்றின் பொதுவியல்பு சிறப்பியல்புகளை உணரவே ஆன்மவியல்பு விளங்கும். அது விளங்கவே நான் என்ற பொய்யுணர்வு அழியும். அது அழியவே, அறம் பாவங்கள் ஒழியும். அவை ஒழியவே பிறப்பு ஒழியும், பிறப்பு ஒழியவே அறிவின்றி பாடாணம் (கல்) போன்ற உயிர் கிடக்கும். அதுவே முத்தி. தருக்கம் என்னும் சமயம் வைசேடிகம், நையாயிகம் என இரண்டு வகைப்படும். அவற்றிற்குள்ள வேறுபாடுகள் சிறிதே யாகலின் அவற்றை விவரிக்க வேண்டாம். வைசேடிகம் நையாயிகம் என்னும் சமயங்களைச் செய்தவர் முறையே கணாத முனிவரும் அக்கபாத முனிவரும் ஆவர்.
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

மெய்கண்டாச்சிரமம் - Page 2 Empty Re: மெய்கண்டாச்சிரமம்

Post by மகி Wed Jun 02, 2010 11:02 pm

பகிர்வுக்கு மிக்க நன்றி.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

மெய்கண்டாச்சிரமம் - Page 2 Empty Re: மெய்கண்டாச்சிரமம்

Post by நந்தி Tue Jun 08, 2010 4:13 pm

மீமாஞ்சை: இச்சமயம் சைமினி முனிவரால் செய்யப்பட்டது. வேதம் ஒருவராற் செய்யப்பட்டதல்ல. சுயம்பு என்பது இவர் கருத்து. வேதத்தில் 'இதைச் செய்க' 'அதைச் செய்க' 'இன்னதைச் செய்யாதொழிக' எனக் கட்டளையிடுகிறவாக்கியங்கள் மட்டும் பிரமாணம் என்றும் ஏனைய பிரமாணம் என்று உபசரித்துக் கூறப்படும் என்றும் கூறுவர். உலக இன்பங்களையோ மோக்ஷத்தையோ விரும்புகிறவர்கள் வேள்வி செய்தல் வேண்டும். செய்தால் அவ்வேள்வியே நினைத்த பயனைத் தரும். இவற்றைத்தருவதற்குக் கடவுள் என்று ஒருவர் இல்லை. உலகம் என்றும் அழியாமல் நிலை பெற்றிருக்கும். இச்சமயத்தாரின் கொள்கை இது.
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

மெய்கண்டாச்சிரமம் - Page 2 Empty Re: மெய்கண்டாச்சிரமம்

Post by நந்தி Tue Jun 08, 2010 4:14 pm

சாங்கியம்: மூலப்பகுதி நித்தமாய் வியாபகமாய், சடமாய் எல்லாப் பொருட்களுக்கும் காரணமாய் உள்ளது. இது இருபத்தி நாலாவது தத்துவம். ஏனைய இருபத்து மூன்று தத்துவங்களும் இதனிடத்திலிருந்து தோன்றியவை ஆன்மா இருபத்தைந்தாவது தத்துவம். அதுவே புருடன் எனப்படும். அதற்கு முத்தியிலும் பெத்தத்திலும் ஒரே தன்மை. மூலப் பகுதியையும் புருடனையும் பகுத்துணர வேண்டும். அப்போது அஞ்ஞானம் நீங்கும். அதுவே முத்தி. ஆன்மாவுக்கு வேறாக கடவுள் ஒருவன் இல்லை. இச்சமயம் செய்தவர் கபில முனிவர்.

யோகம்: இம்மதத்தின் கொள்கைகள் சாங்கியம் போலவேயாம். ஆனால் இருபத்தாறாம் தத்துவமாகிய இறைவன் ஒருவன் உண்டு. அவன் சாத்திரங்களை அருளிச் செய்து புருடனுக்கு ஞானத்தை அளிப்பன் என்பர். இம்மதம் செய்தவர் பதஞ்சலி முனிவர்.

பாஞ்சராத்திரம்: (வைணவம்) தத்துவங்கள் இருபத்தினாலு. இருபத்தைந்தாவது தத்துவம் வாசுதேவன் உலகம் முதலிய யாவும் வாசுதேவனுடைய பரிணாமமே (ஒன்று மற்றொன்றாக மாறுதல்) வாசு தேவனுடைய உருவத்தில் இலயமாதலே முத்தி, இம்மதம் வாசுதேவனால் செய்யப்பட்டது.
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

மெய்கண்டாச்சிரமம் - Page 2 Empty Re: மெய்கண்டாச்சிரமம்

Post by மகி Tue Jun 08, 2010 4:57 pm

பகிர்வுக்கு மிக்க நன்றி.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

மெய்கண்டாச்சிரமம் - Page 2 Empty Re: மெய்கண்டாச்சிரமம்

Post by நந்தி Sat Jun 12, 2010 1:25 am

நன்றி நண்பரே!
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

மெய்கண்டாச்சிரமம் - Page 2 Empty Re: மெய்கண்டாச்சிரமம்

Post by நந்தி Sat Jun 12, 2010 1:26 am

ஆத்மநாததேசிகர்: இனி அகப்புறச் சமயங்கள் ஆறு. அவை பாசுபதம், மாவிரதம், காபாலம், வாமம், வைரவம், ஐக்கியவாத சைவம் என்பன. அச்சமயக் கொள்கைகளாவன.


பாசுபதம்: ஆன்மாக்கள் பலவாய் நித்தமாய் (என்றும் உள்ளது) வியாபகமாய் (எங்கும் நிறைந்தது) உள்ளன. காரிய காரணக் கூட்டரவால் (சேர்தல்) தோன்றும் ஞானத்தால் தனித்தனி வெவ்வேறாயுள்ளன. ஆன்மாக்களுக்கு ஆணவமலம் என்பது ஒன்று இல்லை. கன்மம் மாயை மாத்திரம் உண்டு; அவற்றால் கட்டுப்பாடு இன்பத்துன்பங்களை அனுபவிக்கும்; சாத்திர முறைப்படி தீக்கை பெற்றவனிடத்தில் இறைவனுடைய ஞானம் போய்ப்பற்றும்; பற்றியவுடனே இறைவன் தன்னுடைய அதிகாரத்திலிருந்து ஒழிவு பெற்று இருப்பான் என்பதாம்
.

மாவிரதம்:
ஆன்மாக்களின் இலக்கணம் மேலே கூறியப்படியே, ஆன்மா சாத்திர முறைப்படி தீக்கை பெற்று எலும்பு மாலை அணிதல் முதலிய செயல்களைத் தவறாமல் கடைப்பிடித்து வந்தால் முத்தியை அடைவான். அப்போது சிவனுக்குச் சமமாக எல்லாக் குணங்களும் அவனிடம் உண்டாகும் என்பதாம்.

காபாலம்: ஆன்மாவின் இயல்பு மேலே கூறிய படியே. திக்கை பெற்ற ஆன்மா, பச்சைக் கொடி ஒன்றைக் கையில் வைத்துக்கொண்டு மனிதர் தலை யோட்டில் நாள்தோறும் பிச்சை எடுத்து உண்டு வந்தால் முத்தி அடைவான். அடைந்தவுடன் சிவனால் ஆவேசிக்கப்பட்டு சிவனுடைய குணங்கள் எல்லாம் பெற்று சிவனுக்குச் சமானமாவான் என்பதாம்
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

மெய்கண்டாச்சிரமம் - Page 2 Empty Re: மெய்கண்டாச்சிரமம்

Post by நந்தி Sat Jun 12, 2010 1:27 am

வாமம்: சடமும் (அறிவில் பொருள்கள்) சித்தும் (அறிவுப் பொருள்கள்) எல்லாம் சத்தியின் பரிணாமமே. (ஒன்று மற்றொன்றாக மாறுதல்) வாம நூலில் விதித்த முறைப்படி நடந்து சத்தியில் இலயித்தலே (சேர்தல்) முத்தி என்பதாம்.

வைரவம்:
வாம மதத்தைப் போன்ற கொள்கைகளை யுடையது. சிலசில ஆசாரங்கள் மட்டும் வேறுபடும். இச்சமயத்தார்க்கு வைரவனேபரம் பொருள்.

ஐக்கியவாத சைவம்:
ஆணவ மலம் என்பது இல்லை. கன்மம மாயை இரண்டும் உண்டு. ஆன்மாக்கள் முன் செய்த நல்வினை தீவினைக்கு ஏற்ப அவைகளுக்கு தனு (உடம்பு) கரணம் (அந்தக்கரணம் முதலிய உட்கருவிகள்) புவனம் (உலகங்கள்) இவற்றை இறைவன் கொடுப்பான். அவற்றை அடைந்த உயிர்கள் வினைப்பயன்களை அனுபவித்து வினையொப்பு (வினைகள் சமமாதல்) மலபரிபாகம் (பக்குவம்) உண்டாக, இறைவனருளால் மாயை கன்மங்களைக் கழித்து, மேலும் வினை ஏறாமல், முன்னே தனக்கு இருந்த பேரொளியில் திரும்பச் சேர்ந்துவிடும் என்பது இச்சமயத்தார் கருத்து
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

மெய்கண்டாச்சிரமம் - Page 2 Empty Re: மெய்கண்டாச்சிரமம்

Post by நந்தி Sat Jun 12, 2010 1:27 am

இனி அகச்சமயங்கள் ஆறு. அவை பாடாணவாதம், பேதவாதம், சிவசமவாதம், சங்கராந்தவாதம், ஈசுவரவவிவகாரவாதம், நிமித்தகாரணபரிணாமவாதம் என்பனவாம். இறைவன் ஒருவன் உண்டு, உயிர்கள் உண்டு, உயிர்கள் அனாதியே ஆணவ மலம் மறைத்துநிற்கும், கன்மமும் மாயையும் உண்டு. கன்மத்துக்கு ஈடாக இறைவன் உயிர்களுக்கு தனு, கரண, புவன போகங்களைக் கொடுப்பான், உயிர்கள் இன்பத்துன்பங்களை அனுபவிக்கும் என்பவை, இச்சமயங்கள் எல்லாம் ஒப்புக்கொள்ளும், பொதுவான கொள்கைகள். உயிர்கள் எய்தும் முத்தியைப் பற்றிக் கூறும் வகையில் அவை ஒன்றற் கொன்று மாறுபடுகின்றன. அதாவது உயிர்கள் தனு, கரணங்கள் நீங்கியவுடன் எல்லா அவத்தை (கஷ்டம்) களின்றும் நீங்கி காண்பதற்கு ஒன்றும் இல்லாமலும், அனுபவிப்பதற்கு ஒன்றுமில்லாமலும் செயலற்றுப் பாடாணம் (கல்) போல் கிடக்கும். அதுவே உயிர் எய்தும் முத்திநிலை என்று பாடாணவாதம் சொல்லும்.
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

மெய்கண்டாச்சிரமம் - Page 2 Empty Re: மெய்கண்டாச்சிரமம்

Post by நந்தி Sat Jun 12, 2010 1:28 am

இரசவாதத்தால் செம்பு பொன்னா னால்போல, ஆணவம், கன்மம், மாயை என்னும் மலங்கள் இறைவனருளால் கெட்டு உயிர்கள்நித்த, சுத்த, முத்தராக ஆவர் என பேதவாதம் சொல்லும்.

ஒரு புழுவை குளவி எடுத்துக் கொண்டு போய் வளர்க்கும் போது அக்குளவியையே நினைத்துக் கொண்டிருக்கும் புழு, குளவியாக மாறி விடுவது போல், இறைவனால் ஆட்கொள்ளப்பட்ட உயிரும் இறைவனையே தியானம் பண்ணிக் கொண்டிருந்து இறைவனது உருவம்பெற்று இறைவனது உருவம் பெற்று அவனைப்போல், ஐந்தொழில் செய்து கொண்டும் அவனைப் போன்ற ஆற்றலுடையதாகவும் இருக்கும் என்று சிவசமவாதம் சொல்லும்.

இறைவன் திருவருளைப் பெற்ற உயிர். விறகிலே தீயைப் பற்றவைத்த வுடனே விறகு தியாக மாறுவது போல தன்னுடைய தன்மை கெட்டு இறைவனது சொரூபம்பெற்று அவனாகவே மாறி விடும் என்று சங்கராந்தவாதம் கூறும்.

இறைவனால் ஆட்கொள்ளப்பட்ட உயிர்; நண்பகலில் சூடு பொறுக்கமாட்டாதவன் ஒரு மரத்து நிழலிலே ஒதுங்கிச் சுகம் அனுபவிப்பதைப் போன்ற உணர்ச்சியுடன் இறைவன் திருவடி நிழலில் இன்பம் அனுபவிக்கும் என்று ஈசுவரவவிகாரவாதம் பேசும்.

இவ்வுலகம் யாவும் சிவசொரூபம். அசேதனம் (அறிவில்லாப் பொருள்) என்பது கிடையாது. சிவனே உலமாகப்பரிணமிக்கிறான். (மாறுதலடைதல்) உயிர்களாகவும் பரிணமிக்கிறான். உயிரும் உடம்பும் சிவத்திற்குள்ளே அடையச் செலுத்த வேண்டும். கருவிகரணங்கள் நீங்கியவுடன் இந்த நிலை ஏற்பட்டு ஒன்றும் அறியாமல் கிடக்கும். இதுவேதுரியாதீதம் என்னும் நிலை. முத்தி என்பதும் அதுவே என்று கூறும் நிமித்தகாரணபரிணாமவாதம்
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

மெய்கண்டாச்சிரமம் - Page 2 Empty Re: மெய்கண்டாச்சிரமம்

Post by நந்தி Sat Jun 12, 2010 1:28 am

ஆத்மநாததேசிகர்: பிள்ளைகளே இதுகாறும் கூறியவற்றில் சந்தேகங்கள் ஏதாவது இருந்தால் கேளுங்கள். விளக்குவோம்.

மந்தன்: சுவாமி உலகாயத சமயத்தைப்பற்றிச் சொல்லும்போது அச்சமயத்தார் காட்சிப்பிரமாணம் ஒன்றையே ஒப்புக்கொள்வர் என்று சொன்னீர்கள். காட்சிப்பிரமாணம் என்றால் என்ன? வேறு என்ன பிரமாணங்கள் உண்டு? அவைகளைக் கொஞ்சம் விவரமாகச் சொல்லும்படி வேண்டுகிறேன்.

மந்ததரன்: சுவாமி இதுகாறும் கூறியவை எல்லாம் வேற்றுச் சமயங்கள் அல்லது உண்மைக்கு மாறுபட்ட சமயங்களின் கருத்துக்கள் என்று சொன்னீர்கள் அப்படியானால் உண்மைச் சமயம் எது?

தீவிரன்: சுவாமி உண்மைக்கு மாறுபட்ட சமயங்கள் என்றால் அவைகளை அந்தந்தச் சமய கர்த்தாக்கள் ஏன் செய்யவேண்டும்? அந்தந்தச் சமயவாதிகளிடையே விரோத மனப்பான்மை வளர்வதற்கு ஏதுவாகுமல்லவா.

தீவிரதரன்: சுவாமி எல்லோரும் ஒப்புக் கொள்ளக் கூடியதும், எல்லோருடைய அறிவுக்கும் பொருத்தமானதுமான ஒரே சமயத்தை ஆச்சாரியர்கள் ஏற்படுத்தி எல்லோரும் ஒரே மாதிரியாக அனுசரிக்கும்படி செய்தல் சிறந்த பணியாகுமல்லவா?
_________________
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

மெய்கண்டாச்சிரமம் - Page 2 Empty Re: மெய்கண்டாச்சிரமம்

Post by நந்தி Sat Jun 12, 2010 1:29 am

ஆத்மநாததேசிகர்: மிகவும் புத்திசாலித்தனமான கேள்விகள் தான் கேட்டீர்கள். கடைசி இரண்டு கேள்விகளை முதலில் விளக்குவோம் கேளுங்கள். முதனூலாகிய வேதாகமங்களைப் பற்றி முன் சொல்லும்போது ஆன்மாக்கள் அவரவர்களுடைய அறிவுக்கு ஏற்ப வேதத்தை உணர்ந்து அவரவர்களுக்குத் தோன்றிய உண்மைகளை அவர்கள் வெளியிட்டார்கள் என்று சொன்னோம். வேதத்தைப் பிரமாணமாக ஒப்புக் கொள்ளாதவர்களும் தங்களுக்குத் தோன்றிய உண்மைகளைத் தொகுத்துச் சமயமாக வகுத்தார்கள். எனவே பல சமயங்கள் ஏற்பட்டதற்குக்காரணம் அந்தந்தச்சமய கருத்தாக்கள் தாங்கள் கண்ட முடிவே உண்மையானது, உயர்ந்தது, மிகச் சிறந்தது என்று கருதியதேயாகும். அந்த முடிவுக்கு ஏன் அவர்கள் வந்தார்கள் என்று யாரும் குறைகூற முடியாது. எல்லோர் அறிவையும் விளக்கும் இறைவனது திருவருள் அவர்களுக்கு எம்மட்டு உபகரிக்கிறதோ அம்மட்டேயாகும் அவர்கண்ட முடிவுகளும். பல்வேறு சமயங்கள் இருப்பதினால் விரோதமனப்பான்மை வளரும் என்பது பொருந்தாது. ஆன்மாக்களின் அறிவு பலதிறப்பட்டது ஆகையால் அவர்களின் சிந்தனைக் கருத்துக்களும் முடிவுகளும் பலதிறப்பட்டு இருப்பதில் வியப்பில்லை. ஒன்றற்கொன்று மாறுபட்ட கருத்துக்களினால் விரோதமனப்பான்மை வளர வேண்டிய அவசியமே இல்லை.

உதாரணமாக ஒரு குடும்பத்தில் உள்ள நாலு பிள்ளைகள் ஒவ்வொரு முயற்சியைச் சிறந்ததெனக் கருதுகிறார்கள். ஒருவர் வாணிபத்தை நாடுகிறார். ஒருவர் உத்தியோகத்தை தேடுகிறார். இன்னொருவர் சமூகத்துக்கு உழைக்கச் செல்கிறார். நாலாமவர் அரசியலில் ஈடுபடுகிறார். ஒரே தொழிலையே எடுத்துக் கொள்வோம். ஒரு நோயாளியைப் பரிசோதித்துப் பார்த்துவிட்டு நாலு மருத்துவர்கள் தங்களுக்குள் உடன்பாடு இல்லாமல் நாலுவிதமான அபிப்ராயத்தைத் தெரிவிக்கின்றனர். இவர்கள் எல்லோரும் தங்களுக்குள் விரோதமனப்பான்மையுடன் சண்டையிட வேண்டிய அவசியமில்லை. சமயங்களுக்குள்ளும் அப்படியேதான். ஒரு சமயத்தவர் மற்றொரு சமயத்தவரைக் குறைவாகவும் இழிவாகவும் பேசுவதினாலும், கட்டாயப்படுத்தியும் பல ஆசைகளைக் காட்டியும் தங்கள் சமயத்துக்கு மாற்றுவதினாலுமே விரோத மனப்பான்மை ஏற்படுகிறது. ஒவ்வொரு சமயத்திலுமுள்ள சிறந்த அறிவாளிகளும் தலைவர்களும் அங்ஙனம் செய்ய மாட்டார்கள்.

எல்லாச் சமயங்களும் இறைவனை அடைவதற்கு சோபான (படிகள்) கிரமம் ஆகும். உலகம் ஒன்றே உண்டு கடவுள் இல்லை என்றுச் சொல்லுபவனை விட கடவுளும் உண்டு என்று சொல்லுபவன் உயர்ந்தபடியில் உள்ளவன். உயிர்களும் உண்டு என்று அறிபவன் அதனினும் மேல்படி. உயிர்களுக்கு ஒரு காலத்தில் உலகத்துன்பத்தினின்றும் விடுதலை உண்டு என்று அறிகிறவன் அதனினும் மேல்படி. அவ்விடுதலை அல்லது மோக்ஷம் இப்படிப்பட்டதென்று அறிகிறவன் இன்னும் மேல்படி. இப்படியே மற்றவைகளையும் ஊகித்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு சமயவாதியும் தன்னுடையசமயத்தில் சொல்லப்பட்ட உண்மைகளையும் நெறிகளையும் கடைப்பிடித்துத் தவறாது ஒழுகி வந்தால்மேல்படிகளை யடைந்து உய்தி பெறுவது திண்ணம். இறைவன் ஒருவனே அவரவர்கள் வணங்கி வழிபடும் தெய்வமாக நின்று அவரவர்களுக்கு அருள் புரிகிறான்.
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

மெய்கண்டாச்சிரமம் - Page 2 Empty Re: மெய்கண்டாச்சிரமம்

Post by மகி Sat Jun 12, 2010 10:01 pm

பகிர்வுக்கு மிக்க நன்றி.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

மெய்கண்டாச்சிரமம் - Page 2 Empty Re: மெய்கண்டாச்சிரமம்

Post by நந்தி Wed Jun 16, 2010 2:34 pm

இனி உலகம் புராவும் ஏன் ஒரே சமயமாக இருக்கக் கூடாது என்பதைச் சற்றுச் சிந்தனை செய்வாம். பலவேறு வகைப்பட்ட சமயங்களின் ஆச்சாரியர்களும் ஒரே காலத்திலோ, தேசத்திலோ, இடத்திலோ வாழ்ந்தவர்கள் அல்ல. ஆகவே உலகத்திலுள்ளோர் யாவருக்கும் பொதுவான சமயம் ஒன்றை ஏற்படுத்துவதில் ஈடுபடவில்லை அப்படி யாராவது இப்போது ஈடுபட்டாலும் அது சற்றும் இயலாத காரியம் என்பதை உணர்வர். கடவுள் ஒருவர் உண்டு என்று மட்டும் ஒப்புக் கொண்டால் போதும் அதுவே உலகப்பொது சமயம் என்று கொள்வோமானால் கடவுளே இல்லை என்று சொல்லுகிற சமயம் இருக்கிறதே அச்சமயத்தை உலகப் பொதுச் சமயத்தில் சேர்க்க முடியுமா? இன்னும் சமயம் என்பதே மனிதனுடைய வளர்ச்சிக்கு அவசியமில்லை என்று சொல்லும் கூட்டமும் இருக்கிறது. அக்கூட்டத்தை உலகப்பொதுச் சமயத்தில் எப்படிச் சேர்க்க முடியும். ஆகவே உலக மக்கள் யாவரும் ஒப்புக் கொள்ளக்கூடிய ஒரு பொதுச் சமயத்தை ஏற்படுத்தலாம் என்பது குதிரைக்குக் கொம்பு ஏற்படுத்த முயல்வது போலவேயாம். பலதிறப்பட்ட அறிவயுடைய உயிர்கள் வாழும் இவ்வுலகத்தில் பலதிறப்பட்ட சமயங்கள் இருத்தல் இயல்பே. ஒரு பள்ளிக்கூடத்திலுள்ள பலதிறப்பட்ட மாணாக்கர்களுக்காக ஒன்று முதல் பதினொரு வகுப்புக்கள் அமைத்து ஒவ்வொரு வகுப்பிலும் தேறி மேல் மேலுள்ள வகுப்பை அடைவதுதான் உலக இயல்பு. எல்லா மாணவர்களுக்கும் ஒரே வகுப்பு அமைப்பது அறிவுடைமையாகாது. ஒருவகுப்பிலுள்ள மாணவர்கள் அனைவரும் ஆசிரியர் விளக்கும் பொருளை ஒரே மாதிரியாக அறிய மாட்டார்கள். அவரவர்கள் அறிவுக்கேற்பத்தான் வாங்கிக் கொள்வார்கள். ஆகவே உலகப் பொதுச் சமயம் அமைக்கவோ எல்லாச் சமயங்களையும் ஒன்று சேர்த்து விடவோ சிலர் முயன்று வருவது தங்கள் விளம்பரத்துக்காகவே.
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

மெய்கண்டாச்சிரமம் - Page 2 Empty Re: மெய்கண்டாச்சிரமம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum