தமிழ் | Tamil | Forum
தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

கூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.

புகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.
Latest topics
» சிறந்த பொழுதுபோக்கு இணையதளம்!
by pba Sat Jul 02, 2016 8:11 pm

» ஏற்றுமதி உரிமம் பெறும் விண்ணப்பம்
by tamilnews Tue Mar 24, 2015 8:00 pm

» மொபைல், டிடிஎச் ரீசார்ஜ் செய்யப் போறீங்களா? இந்த சலுகைகளைப் பாருங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:41 am

» மொபைல் ரீசார்ஜ் செய்து ஷாப்பிங் கூப்பன் இலவசமாக பெறுங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:38 am

» மெமரி கார்டு வாங்கப் போறீங்களா? 74% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:36 am

» அமேசானில் பெண்களுக்கான ஆடைகள் 70% வரை தள்ளுபடி !
by dsytamil Wed Jan 14, 2015 1:34 am

» அமேசானில் ஆண்களுக்கான ஆடைகள் 60% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:31 am

» லெனோவா டேப்ளட் 43% சலுகை விலையில் ரூ. 5949 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:28 am

» ப்ளிப்கார்ட் தளத்தில் சிறுவர்களுக்கான ஆடைகள் 70% வரை + 30% கூடுதல் தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:14 am

» அமேசான் தளத்தில் 50% தள்ளுபடி விலையில் மொபைல்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:13 am

» ரூ. 7499 மதிப்புள்ள மைக்ரோமேக்ஸ் ஏ1 ஆன்ட்ராய்டு மொபைல் இப்போது ரூ. 5499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:11 am

» ரூ. 19999 மதிப்புள்ள நோக்கியா லூமியா 625 மொபைல் ரூ. 7499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:10 am

» ப்ராண்டட் காலணிகளுக்கு 70% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:08 am

» ஆன்லைன் ஷாப்பிங்கில் ப்ரிண்டர்களுக்கு 33% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:06 am

» ஆன்லைனில் பொருள் வாங்கப் போறீங்களா? 70% வரை பணத்தை சேமியுங்கள்!
by dsytamil Tue Jan 13, 2015 12:30 am

» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...!
by sathikdm Sun Oct 19, 2014 4:45 pm

» சிறுதொழில் செய்பவர்கள் இணையதளம் தொடங்க வேண்டியதின் அவசியம்!
by pba Sat Sep 27, 2014 12:58 am

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:47 pm

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:42 pm

» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
by santhoshpart Wed Aug 27, 2014 4:22 pm

» “சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா!”
by santhoshpart Wed Aug 13, 2014 3:54 pm

» Daily Rs.500/- and Above
by K.MARIAPPAN Wed Jul 30, 2014 12:01 pm

» http://www.neobux.com/?r=narasimmant
by Navaneethakrishnan Wed Jul 02, 2014 3:41 pm

» வணக்கம் என் பெயர் வேணு
by A.Venu Fri Jun 27, 2014 10:10 am

» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?
by sathikdm Wed Jun 18, 2014 3:24 pm

» தமிழ் மொழி மூல கல்வி இணையதளம்
by afdhaal Wed May 28, 2014 9:22 pm

» வருக. வருக. வணக்கம்.
by மகி Mon May 12, 2014 3:55 pm

» அறிமுகம் -விநாயகா செந்தில்.
by மகி Mon May 12, 2014 3:53 pm

» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....!
by vinayagasenthil Sat May 10, 2014 9:04 pm

» +2result இங்கே காணலாம்!
by மகி Fri May 09, 2014 12:41 am

பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

சென்னையில் 87 வயது பெண் ரசிகரை சந்தித்த தெண்டுல்கர்; காலில் விழுந்து ஆசி பெற்றார்!

Go down

சென்னையில் 87 வயது பெண் ரசிகரை சந்தித்த தெண்டுல்கர்; காலில் விழுந்து ஆசி பெற்றார்! Empty சென்னையில் 87 வயது பெண் ரசிகரை சந்தித்த தெண்டுல்கர்; காலில் விழுந்து ஆசி பெற்றார்!

Post by மகி on Wed Apr 07, 2010 5:42 am

சென்னையில் தெண்டுல்கர், 87 வயது பெண் ரசிகரை சந்தித்து ஆசி பெற்றார். இன்று சென்னையில் நடக்கும் ஐ.பி.எல். போட்டியில் மும்பை அணியில் ஆடுவதற்காக தெண்டுல்கர் சென்னை வந்துள்ளார்.

நேற்று அவர் சென்னையை சேர்ந்த சரஸ்வதி என்ற 87 வயது பெண் ரசிகரை சந்தித்து ஆசி பெற்றார். தெண்டுல்கர் கிரிக்கெட் ஆட வந்ததில் இருந்தே அவருடைய தீவிர ரசிகராக மாறிவிட்டவர் சரஸ்வதி.

தெண்டுல்கர் விளையாடும் அனைத்து போட்டிகளையும் தவறாமல் பார்த்து விடுவார். தெண்டுல்கர் என்னென்ன சாதனைகள் செய்து இருக்கிறார். அவர் அடித்த சதங்கள் எத்தனை? போன்ற அத்தனை புள்ளி விவரங்களும் சரஸ்வதியின் விரல் நுனியில் உள்ளன.

இப்போது 87 வயது ஆகிவிட்ட நிலையிலும் தெண்டுல்கர் போட்டி என்றால் பார்க்காமல் விடுவது இல்லை. இந்த வயதிலும் அவர் தெண்டுல்கரின் தீவிர ரசிகையாக இருப்பது பற்றி பத்திரிகைகளிலும் செய்திகள் வந்துள்ளன.

தெண்டுல்கர் சென்னை வந்து இருப்பதை அறிந்த சரஸ்வதி அவரை சந்திக்க விரும்பினார். இதை தெண்டுல்கர் ஏற்றுக் கொண்டார்.

நேற்று மாலை பார்க் ஷெரட்டன் ஓட்டலில் தங்கியிருந்த தெண்டுல்கரை சந்திக்க சரஸ்வதி வந்தார். தனது அணி வீரர்களை சந்தித்து பேசிக் கொண்டிருந்த தெண்டுல்கர் இந்த கூட்டம் முடிந்ததும் சரஸ்வதியை சந்திக்க வந்தார்.

சரஸ்வதியை பார்த்ததும் அவரது முன்பு கைகளை கட்டி மரியாதையுடன் நின்ற தெண்டுல்கர் என்னை ஆசீர்வதியுங்கள் என்று சரஸ்வதியிடம் கேட்டார். சரஸ்வதி தெண்டுல்கரின் நெற்றியை தொட்டு ஆசி வழங்கினார். உடனே தெண்டுல்கர் அவருடைய காலில் விழுந்து வணங்கினார்.

நீங்கள் எனது தீவிர ரசிகையாய் இருப்பதுடன் என்னை பற்றிய அனைத்து புள்ளி விவரங்களையும் தெரிந்து வைத்து இருப்பதை பத்திரிகை செய்தி மூலமாக அறிந்து கொண்டேன். உங்களுடைய ஆசீர்வாதம் எப்போதும் எனக்கு தேவை என்று சரஸ்வதியிடம் தெண்டுல்கர் கூறினார்.

அதற்கு சரஸ்வதி உங்களை சந்தித்ததன் மூலம் நான் அதிர்ஷ்டம் அடைந்துள்ளேன் என்று கூறினார். உடனே தெண்டுல்கர் இல்லை இல்லை உங்களை சந்தித்ததன் மூலம் நான்தான் அதிர்ஷ்டகாரனாகி இருக்கிறேன் என்றார்.

நீங்கள் சர்வதேச போட்டிகளில் 100 சதங்களை கடக்க வேண்டும் என்று சரஸ்வதி கூறினார். அதற்கு தெண்டுல்கர் நிச்சயம் சாதிப்பேன் என்றார்.

தெண்டுல்கரின் மனைவி அஞ்சலி மற்றும் குழந்தைகள் நலம் பற்றியும் சரஸ்வதி விசாரித்தார். அவர்கள் எல்லோரும் நன்றாக இருப்பதாக தெண்டுல்கர் கூறினார்.

பின்னர் சரஸ்வதி விநாயகர் சிலை ஒன்றை தெண்டுல்கருக்கு பரிசாக வழங்கினார். தெண்டுல்கரும், சக அணி வீரர்களும் கையொப்பமிட்ட பேட் ஒன்றை தெண்டுல்கர் சரஸ்வதியிடம் வழங்கினார்.

அப்போது சரஸ்வதி, தெண்டுல்கரை மிகவும் பாசத்துடன் நீங்கள் எனது 4-வது பேரன் என்று அழைத்தார். சரஸ்வதிக்கு 3 பேரன்கள் உள்ளனர். எனவே தெண்டுல்கரை 4-வது பேரன் என்றார்.

நீங்கள் உயரத்தில் குறைவாக இருந்தாலும் சாதிப்பதில் பெரிய ஆளாக இருக்கிறீர்கள் என்று சரஸ்வதி புகழ்ந்து கூறினார்.

சரஸ்வதியின் மகன் வெங்கடகிருஷ்ணன் கூறும் போது, எனது தாயாருக்கு உடல்நலம் குறைவாக இருந்த நேரங்களில் தெண்டுல்கர் ஆட்டத்தை பார்த்தால் உடனே உற்சாகமாகி விடுவார். அவரது உடலில் இருக்கும் வேதனை எல்லாம் குறைந்துவிடும். அவருக்கு தெண்டுல்கர் ஒரு டானிக் போல இருக்கிறார். கண்பார்வை மங்கிய போதிலும் தெண்டுல்கர் ஆட்டத்தை காண தவறுவது இல்லை என்றார்.

நன்றி: மாலை மலர்.

_________________
[You must be registered and logged in to see this link.]
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum